​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 22 October 2023

சித்தன் அருள் - 1483 - அன்புடன் அகத்தியர் - சிவ சக்தி சித்தர்கள் விவாதம் புரிந்த வாக்கு!








15/10/2023 அன்று பார்வதி தேவியார் ஈசன் அகத்தியர் முருகன் விநாயகர் காகபுஜண்டர் போகர் விவாதம் புரிந்த வாக்கு. விவாத வாக்குரைத்த ஸ்தலம். கேதார்நாத் கோயில் இமயமலை உத்தர்கண்ட். 

பார்வதி தேவியார். 

ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய என் மனதில் நின்ற மணவாளனை பணிந்து பின் வாக்குகள் அதாவது உன்னிடத்திலே கேட்கின்றேன்!!!!

கேட்கின்றேன் இறைவா!!! மணவாளனே !!! அன்பானவனே!!!

ஏன்??? கலியுகத்தில் இவ்வளவு கஷ்டங்கள் மனிதனுக்கு கொடுத்துக் கொண்டே!!!..... கொடுத்துக் கொண்டே!!!!........

ஆனாலும் மனிதன் வாழ்வான் வாழ்வான் உன்னிடத்திலே வருகின்றார்கள் மனிதர்கள். 

ஆனாலும் அவர்களுக்கு பெரும் குறையே தான் நீயும் காட்டுகின்றாய் !!! எதனால்??? 

உனைதானே நம்பி இருக்கின்றார்கள்!!

நீ ஏதாவது பின் செய்வாய் செய்வாய் என்று உன் நாமத்தையும் கூட பணிந்து பணிந்து நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!!!

ஈசனே !! ஈசனே !! நமச்சிவாயனே !! சிற்றம்பல அரசனே!!!! ஈரேழு உலகமும் அறிந்தும் இதனையே செப்பிக்கொண்டு செப்பிக்கொண்டு இன்னும் தில்லை நடராஜனே நீதான் என்று இன்னும் சன்னியாசிகள் சாதுக்கள் அனைவருமே உன் நாமத்தை நிச்சயம் ஜெபித்து ஜெபித்து பின் ஏதாவது செய்வாய் என்றுதானே!!!!!

ஆனாலும் நீயோ??!!..... மனதில் அதாவது என்ன நினைக்கின்றாய் என்பதையும் யான் அறிவேன்!!!!

ஆனாலும் அதனையும் நிறுத்தி நிறுத்தி பல வகையிலும் கூட ஏதாவது கஷ்டத்தை அள்ளி தந்து கொண்டிருக்கின்றாயே!!!!

மணவாளனே இதற்கு பதில் சொல்லும்!!!!!

ஈசனார் :

தேவியே!!!!!!  நிச்சயம் கேள்!! 

நிச்சயம் என் அடியார்களை நிச்சயம் யான் கைவிடமாட்டேன்!!!!! இங்கிருந்தே சொல்கின்றேன்!!!!

அதாவது என்னுடைய அனைத்தையும் கூட நீயே அறிவாய்!!!!

பல வருடங்கள் அதாவது பூமியில் அவதரித்து அறிந்தும் எதை என்று அறிய இவ்வுலகத்தை பின் பேணும் போதுலிருந்தே பார்த்துக் கொண்டே இருக்கின்றாய் அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் என் பக்தர்களை நிச்சயம் யான் கைவிடப் போவதில்லை!!!

ஆனாலும் பக்தன் வேடம் அணிந்து  இன்னும் சித்தன்!!! இன்னும் நந்தீசன்!! இன்னும் எதை அறிந்தும் யான் சித்தன் இன்னும் அதாவது பட்ட பெயர்களை எல்லாம் வைத்து வைத்து ஏமாற்றி ஏமாற்றி நிச்சயம் பின் என்னுடைய அடியார்களையும் கூட ஏமாற்றுகின்றார்களே!!!!!

அவர்களைத் தான் யான் நிச்சயம் அடித்தளத்தில் விட்டு விட்டு பல நோய்களையும் கூட ஏற்படுத்தி ஏற்ப்படுத்தி கஷ்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்!!

இதனால் நிச்சயம் நீயே சொல்!!!! தேவியே!!! 

இன்னும் அதாவது யான் படைத்தேன் மனிதர்களை!!!

ஆனாலும் என் பேச்சைக் கூட கேட்காமல் நிச்சயம் திரிகின்றார்களே!!!! இவர்கள்.. நிச்சயம் தண்டிக்கப்படுபவர்கள்!

நிச்சயம் பின் அதனால் நிச்சயம் ஓர் தந்தை ஏற்கனவே செப்பிட்டேன் தேவியே!!!!!

ஒரு தந்தையானவனுக்கு தன் பிள்ளை நிச்சயம் நன்றாக நடந்து கொண்டால் தான் அனைத்தும் செய்வான்!!!

அதை மீறி நடந்து கொண்டால் தான் நிச்சயம் தண்டனைகள் என்னிடத்திலிருந்தே நிச்சயம் பல பலபல அடிகள்  இன்னும் இன்னும் அடித்து நொறுக்கத்தான்!!!......... 

இதனால் நிச்சயம் தேவியே!!!! நீயே!!!!  புரிந்து கொள்!!!!!! 

ஏனென்றால் நல்லோர்களை யான் நிச்சயம் கை விட்டதில்லை!!! 

தேவியே நிச்சயம் தீயவர்கள் தான்!!..... பக்தியில்  நுழைந்து ஏமாற்றுகின்றார்களே!!!!  அவர்களுக்கு தான்!!!!  அதாவது என் பெயரையும் சொல்லி சொல்லி!!.......

ஆனாலும் பல ஆலயங்களில் யான் இருக்கின்றேன் ஆனாலும் பின் நமச்சிவாயா!!!! என்று

எந்தனக்கு அபிஷேகங்கள் செய்கின்றார்களே!!!..... ஆனால் மனதில் அதாவது நிச்சயம் அன்பு இல்லை!!!

எங்கெங்கோ நினைத்துக் கொண்டு பொய்கள் பேசி இன்னும் நமச்சிவாயன் இருக்கின்றானா ????????? என்ன பிரயோஜனம்?????

நமச்சிவாயனுக்கு செய்து ஒன்றும் பிரயோஜனமில்லை!!! குடும்பத்தில் கஷ்டம் தான் நிகழ்கின்றது என்பதை எல்லாம்!!!

இதனால் எவை என்று அறிந்து அறிந்து இதனால் மனிதனாலே நிச்சயம் அழிவுகள் ஏற்படுவது உறுதியாகிவிட்டது.

அதனால்தான் அழித்து மனிதனை முன்னோக்கிச் செல்லாமல் யானே அழித்து அழித்து பின் புத்திகள் கொடுத்து கொடுத்து இருக்கின்றேன் தேவியே!!!

தவறா ??!!! தவறா ?? தேவியே !!!!

பார்வதி தேவியார் :

நில்லும் !!  நில்லும்!! மணவாளனே !!!

இவையெல்லாம் ஏற்றுக் கொள்வதல்ல!!! நிச்சயம் உனையே நம்பிக் கொண்டிருப்பவர்களை ஏதாவது!!!!

அதாவது நீதான் படைத்தாய் அல்லவா???

ஏன்?? இவ்வாறெல்லாம் படைக்கின்றாய்!!! படைக்கின்றாய்!!

படைப்பே வேண்டாம் என்று நிறுத்தி விடலாமே!!!.........

ஈசனார் :

நிச்சயம் தேவியே நிச்சயம் இனிமேல் அப்படித்தான் நடக்க போகின்றது!!!!

நல்லோர்களை தான் படைக்க நிச்சயம் யான் படைக்கவும் பின் இன்னும் உயர்ந்த ஸ்தானத்திலும்  கூட வைப்பேன்.

இதனால் தீயோர்களை எல்லாம் நிச்சயம் ஓரிடத்தில் ஒன்றாக சேர்த்து சேர்த்து அழித்து கொண்டுதான் இருக்கின்றேன்!!!

இதனால் ஒரு பிரயோஜனம் இல்லாமல் வாழ்கின்றான் மனிதன்.

ஆனால் எதற்கோ?!!!  அனுப்பினேன்!!!! மனிதனை!!!! 

ஆனால் எதைஎதையோ செய்து விட்டு மீண்டும் என்னிடத்தில் வந்து வந்து நிச்சயம் நியாயங்கள் கேட்கின்றான். 

இதனால் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது இன்னும் இன்னும்!! 

இன்னும் இன்னும் போலியான பக்தர்கள் தான் வருவார்கள் என்பதையெல்லாம் நிச்சயம் அகத்தியனும் கூட புஜண்டனும் கூட இன்னும் போகனும் கூட இன்னும் சிவ வாக்கியனும் கூட இன்னும் மூலனும் கூட இன்னும் எழுதி வைத்தனர் அழகாகவே!!!!! 

ஆனாலும் அவற்றை எல்லாம் மறைத்திட்டு நிச்சயம் இவ்வாறு இருந்தால் நம்தனை நிச்சயம் போலியான பக்திகளை கூட வாழ விட மாட்டார்கள் என்பதையெல்லாம் பக்தர்களே அழித்து அழித்து அதனையும் கூட மறைத்து விட்டனர். மறைத்தும் !!!

எங்கே !!தேவியே  !!தேவியே!!

பார்வதி தேவியார் :

மணவாளனே நில்லும்!!! நில்லும்!!! 

ஏன்??  எதற்காக???  ஆனாலும் உன் ஆலயங்கள் பல பல!!! 

ஆனாலும் அதில் கூட பல பல சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது. 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் நீ இருக்கும் இடத்திற்கெல்லாம் பின் வந்து வந்து மக்கள் ஏதாவது குறை தீர்க்க வேண்டும் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் வருகின்றார்களே!!!!! 

ஆனால் நீ தீர்க்க!!!!.....  அதாவது தீர்த்த பாடே இல்லையே!!!!! 

மணவாளனே!!!!  ஏன்?? எதற்கு?? 

தேவியே நில்லும்!!!! 

ஆனாலும் மனிதன் என்ன செய்கின்றான் என்பதையெல்லாம் நீயே அறிவாய்!!!

அறிவாய் அல்லவா!!! அறிந்து இப்படி பேசலாமா ? தேவியே !!

பார்வதி தேவியார் :

நில்லும் நில்லும் மணவாளனே !!!! மணவாளனே அனைத்தும் யாம் அறிவேன்!!!

ஆனாலும் பின் ஏதாவது அதாவது கலியுகத்தில் இன்னும் நிலநடுக்கம் இன்னும் அறிந்தும் கூட ரத்தங்கள் இன்னும் சிந்தும் இன்னும் திடீரென்று பின் நீர் நிலைகள் இன்னும் கடல் பின் அதாவது சமநிலையில் வந்து இன்னும் எதை அறிந்தும் அறிந்தும் பின் இன்னும் இன்னும் மக்கள் அழிந்து கொண்டே இருக்கின்றார்களே!!!!!

இதற்கு ஏதாவது தீர்வை நிச்சயம் சொல்லும்!!!! 

ஈசனார் :

தேவியே யான் நிச்சயம் சொல்கின்றேன் இதனை பல சித்தர்களும் கூட எடுத்துரைத்து ஆனாலும் ஆனாலும் மனிதனுக்கு அனைத்து திறமைகளும் கொடுத்தேன் தேவியே!!!!

நிச்சயம் யானும் கருணை உள்ளவன் தான் என்று உன் அதாவது என் அன்பு தேவியே உந்தனுக்கே தெரியும்.

ஆனாலும் அனைத்தும் கொடுத்தேன் பின் இஷ்டப்படி வாழட்டும் என்று!!!

ஆனால் மனிதன் தவறாக பயன்படுத்திக் கொண்டு தவறான வழிகளில் சென்று எதை எதையோ கண்டுபிடித்து கண்டுபிடித்து நிச்சயம் அதனால் மற்றவர்களுக்கும் அழிவினை நோக்கி அதாவது இயலாதவனையும் கூட!!

ஆனாலும் அறிந்தும் கூட அழித்தே வருகின்றானே தேவியே!!!

தேவியே ஏன்??? எதனால் என்பவைல்லாம்!!!

அதனால்தான் நிச்சயம் யான் முடிவுக்கு வந்து விட்டேன்...

இனிமேலும் கூட ஒவ்வொருவருக்கும் கூட நிச்சயம் பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் இன்னும் அதை இதை என்று செப்புபவர்கள் தன் சுயநலத்திற்காக வாழ்பவர்கள் என்றெல்லாம் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் அளிக்கத்தான் போகின்றேன்....
பார்வதி தேவியார் :

நில்லுங்கள் !! நில்லுங்கள் !!நிச்சயம் ஏன் இவ்வாறே!!!  கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள்!!!! 

தண்டனைகள் தண்டனைகள் என்று!!!! 

ஆனால் நல்லவை!!!  அதாவது இனிமேல் நல்லதை செய்வேன் என்று பின் உன் வாயிலிருந்து வரவில்லையே!!!!  வரவில்லையே!!!! அன்பு அன்பானவனே!!! 

ஈசனார் :

நிச்சயம் இவை நிச்சயம் தேவியே நில்லும்!!! 

எப்படி யான் சொல்வது??? 

நிச்சயம் என் அடியார்களுக்கும் நல்லதை தான் செய்ய செய்ய ஆனாலும் பணத்தின் மீது பற்று கொண்டு ஆனாலும் பணத்திற்காக எதையெதையோ செய்து செய்து!!!..... 

ஆனால் நியாயமில்லை நீதி இல்லை தர்மம் இல்லை!!! 

தேவியே கேள்!!!! 

இவ்வாறு இருந்தால் இன்னும் இன்னும் மனிதன் யான் தான் பெரியவன் யான் அனைத்திலும் சிறந்தவன் அனைத்தும்  அறிந்தவன் என்றெல்லாம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கடைசியில் ஒழுக்கங்கள் இல்லாமலே அனைத்தையும் கெடுத்து விடுவான்.

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தேவியே கேளும்!!

யான் எங்கு?  ஏது? அறிந்து அறிந்து எந்தனக்கு திருத்தலங்களை கட்டச் சொன்னேனா ????????????என்ன !!!????

நிச்சயம் இதிலிருந்து அதாவது அறிந்தும் கூட எந்தனுக்கே திருத்தலங்கள் கட்டுகின்றார்கள்!!! ஆனால் பொய் சொல்லி அதற்காக வேண்டும் இதற்காக வேண்டும் இன்னும் இன்னும் கூட!!!

ஆனாலும் இவ்வாறு யான் கட்ட சொல்லவே இல்லை!!!

முதலில் தர்மத்தை நீதி நிச்சயம் பின் தர்மத்தை தர்மத்தின் வழியிலே வந்தாலே யானே அவ்விடத்திற்கு சென்று யார் யார் மூலம் எதனை வாங்க வேண்டும்? என்று நிச்சயம் தீர்மானித்து தீர்மானித்து என் தலத்தை யானே அமைத்துக் கொள்வேன்.....

எந்தன் அதாவது உலகத்தை பின் காத்து அருளக்கூடிய எந்தனுக்கு தெரியாதா?????? தென் திருத்தலத்தை எப்படி கட்டிக் கொள்வது என்று?!!!!!

இதனால் மனிதன் பின் அதாவது தேவியே கேள்!!!!

சில ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் இவையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ஈசனை நிச்சயம் வணங்கினால் தண்டனை தான் அதாவது ஈசன் எதையும் தர மாட்டான்!!! ஈசனே இல்லை அமைதியாக பின் அறிந்தும் கூட ஏதோ வணங்குகின்றார்கள் என்பதை எல்லாம் ஈசன் இல்லை திருத்தலங்கள் இல்லை அனைத்தும் பொய்யே என்று கூறி விடுவான்!!!

அதனால்தான் நிச்சயம் தேவியே நிச்சயம் யாங்கள் இருப்பதை நிச்சயம் கலியுகத்தில் காட்டத்தான் அறிந்தும் அறிந்தும்!!!

பார்வதி தேவியார் :

பின் மணவாளனே நில்லும்!!!

யாங்கள் இருக்கின்றோம் என்று!!!!!

ஆனாலும் யான் யார் என்று!!! 

ஆனாலும் எந்தனுக்கு கூட பல சக்திகள்!!!! 

ஆனாலும் நீ தான் நிறுத்திக் கொண்டிருக்கின்றாய்.

அவ் சக்திகளை பயன்படுத்தி இவ்வுலகத்தை மாற்றட்டுமா????????

ஈசனார். 

நில்லும் நில்லும் நில்லும் தேவியே!!! 

ஏன் எதற்காக??  அறிந்தும் கூட அனைத்து சக்திகளும் உன்னிடத்தில் உள்ளது!!

ஆனாலும் அன்பு அன்புக்கு கட்டுப்பட்டு நீ என்னிடத்தில் இருக்கின்றாய் அல்லவா!!!!!!

அதனையும் மீறி யான் பதில்கள் கூறிக் கொண்டிருக்கின்றேன் அல்லவா!!!!!

இதே போலத்தான் நிச்சயம் மனிதன் அன்புக்கு கட்டுப்பட்டவன் அல்ல!!!

அதாவது அன்பு எதனை என்று அறிய அறிய ஏதோ குறைகளை வைத்துக் கொண்டே ஏதோ தன் சுயநலத்திற்காகவே என்னை வணங்குகின்ற பொழுது தேவியே   !!! எப்படி அவர்களுக்கு கொடுக்கவும் முடியும்?????

நிச்சயம் அறிந்தும் தேவியே!!!! 

பார்வதி தேவியார் :

மணவாளனே நில்லும் அனைத்தும் எந்தனுக்கே தெரியும்!!!! அறிந்தும் கூட.

இதனால் நீ என்ன அறிந்தும் எதைச் செய்ய வேண்டும் இக்கலி யுகத்தில் அதை நிச்சயம் மக்களுக்கு தெரிவி !!! தெரிவி!!!!! 

ஈசனார். 

தேவியே கேளும். அனைத்து உயிர்களும் எந்தனக்கு சொந்தம்!!!

நிச்சயம் என்னுடைய அதாவது யானே தான் பின் எடுக்கப்பட வேண்டும் என்னுடைய குழந்தைகளை கூட எப்பொழுது உயிர் போக வேண்டும் என்று நிச்சயம் அறிந்தும் கூட ஏற்கனவே எழுதப்பட்டது அவைதன் அப்படியே சென்றால்தான் நிச்சயம் புண்ணியங்கள்!!

இதை அதாவது மனிதன் அழித்துக் கொண்டே இருக்கின்றான் அனைத்தும் கூட அனைத்தும் கூட அழித்து அழித்து நிச்சயம் தான் பெருக்கிக் கொண்டு அதாவது ஊன் உடலை பெருக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இதையென்று அறிய அறிய அதனால் நிச்சயம் இவை விட வேண்டும்!!!

அவை மட்டுமில்லாமல் நிச்சயமாய் கோபத்தை விட வேண்டும் நிச்சயம் காமத்தை விட வேண்டும் அவை மட்டும் இல்லாமல் பொறாமையை விட வேண்டும் அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் என்னுடைய அடியார்களே!!!!!  நிச்சயம் யான் பெரியவன் யான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று நிச்சயம் போட்டிகளை விட வேண்டும்.

அவை மட்டுமில்லாமல் நிச்சயம் என்னுடைய பெயரைச் சொல்லி நிச்சயம் ஏமாற்றி திருத்தலத்தை கட்டுகின்றேன் என்று ஈசனுக்கு என்று கூட அவையெல்லாம் நிச்சயம் நிச்சயம் நிறுத்த வேண்டும்!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அதாவது கடலிலும் நிச்சயம் சில ஜீவராசிகள்( மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள்) நிச்சயம் அதனைக் கூட கொன்று மனிதன் உண்கின்றானே!!!!!

இவையெல்லாம் விட்டு விட வேண்டும்!!!

நிச்சயம் இவை விட்டுவிடவில்லை என்றால் நிச்சயம்!!!!!!!!................

பார்வதி தேவியார் 

ஈசனாரே!!!!! மணவாளனே அன்பானவனே அன்பானவனே நில்லும் இவையெல்லாம் நிச்சயம் விடவும் முடியாது மனிதனால்.

ஏனென்றால் கலியுகம் இது!!!

ஈசனார். 

தேவியே அப்படி என்றால் நிச்சயம் அழிவுகள் நிச்சயமாக நிச்சயமாக நிச்சயமாக !!!!......

காகபுஜண்டர் :

பின் நமச்சிவாயனே நமச்சிவாயனே புஜண்டன் புஜண்டனே பேசுகின்றேன் நமச்சிவாயனே!!!

அனைத்தும் நீ சொல்லுவது தான் உண்மை உண்மை.

ஆனாலும் அன்னை சொல்வது கூட ஆனாலும் மனிதர்களுக்காக இறங்கி வருகின்றாள்.

ஆனாலும் ஈசனாரே நிச்சயம் மனிதர்களை பல யுகங்களில் பார்த்து விட்டேன் ஆனால் இக்கலி யுகத்தில் பொய்கள் ஏமாற்றங்கள் திருடர்கள் என்றெல்லாம்!!!

நிச்சயம் அதனால் பின் நமச்சிவாயனே நிச்சயம் மனிதனுக்கு தண்டனை நிச்சயம் நோய்களும் நொடியையும் கொடுத்தே நீ தீர வேண்டும் நிச்சயம்.

இல்லையென்றால் சித்தர்களை எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் எங்கள் பெயர்களை சொல்லி சொல்லி ஏமாற்றி விட்டு விட்டு நிச்சயம் கலியுகத்தில் சித்தர்களும் இல்லை தெய்வங்களும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்!!!!

அதனால் நமச்சிவாயனே நமச்சிவாயனே நிச்சயம் உன் லீலையை நடத்தும்!!!

பார்வதி தேவியார் :

நிச்சயம் புசண்டனே நில்லும் தேவி யான் இருக்கின்றேன்!!!!  பின் என்னை அதாவது என்னை கண்டு கொள்ளவே இல்லை!!!!!!

காகபுஜண்டர். 

அய்யய்யோ !! அன்னையே!! நிச்சயம் உன்னை கண்டு கொண்டுள்ளேன்!!!

நிச்சயம் தேவியே எவ்வாறு ஈசன் எவ்வாறு கருணை உள்ளவன் என்பதை கூட உந்தனுக்கே தெரியும் அன்னையே!!!!

பராசக்தியே !! ஆதி தேவியே!!

ஆனாலும் மனிதன் எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றான் கலியுகத்தில் ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!

நிச்சயம் இவ்வாறு வாழ்வது சரியா????

அன்னையே நீயே நிச்சயம் நீயே உரை!!!!

பார்வதி தேவியார் :

புசண்டனே நிச்சயம் கேளும் !!!! ஒரு அன்னையவளுக்கு நிச்சயம் மனிதர்கள் அதாவது தவறுகள் செய்தாலும் நிச்சயம் பின் மன்னிப்பு வழங்கி நிச்சயம் நல்வழிப்படுத்துவது தான் பின் அதையும் விட்டு விட்டால் பின் பெண்ணிற்கு ஏது!!??  பின் நற்பண்பு?? என்று!!! 

காகபுஜண்டர் :

தேவியே அன்னையே நிச்சயம் நிச்சயம் அறிவேன் யானும் கூட ஆனால் நிச்சயம் மனிதர்கள் இப்படி செய்கின்றார்களே எப்படி ?? அறிந்தும் அறியாமலும் கூட

ஆனாலும் யாங்களும் கூட பொறுத்து இருக்கின்றோம் பொறுத்திருகின்றோம்!!!

ஆனாலும் அன்னையே தேவியே பராசக்தியே எங்களை வைத்து பிழைப்பையும் நடத்துகின்றார்கள் ஆனாலும் விட்டு விடுகின்றோம்!!!

ஆனாலும் பின் அவர்களே பின் மனிதரிடத்தில் கர்மா சேர்த்து அவர்களே அழிந்து அவர்களே அழித்து அழித்து அழித்தும் மீண்டும் நிச்சயம் அவர்கள் அழிவு பாதைக்கு சென்று நோய் நொடிகள் ஏற்பட்டு நோய்கள் நொடிகள் ஏற்படுத்திக் கொண்டு நிச்சயம் கடைசியில் எங்களை குறை கூறுகின்றார்கள்!!! சித்தர்களை வணங்கினோம் என்று!!! 

அதனால்தான் பின் அன்னையே பராசக்தியே நிச்சயம் ஈசனார் சொல்வது உண்மையே அனைத்தும்!!!

மாயையில் விழுந்திட்டு மனிதன் ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட!!!!

( காகபுஜண்டர் குருநாதர் அகத்தியர் பெருமானை பார்த்து)

இன்னும் அகத்திய மாமுனிவரே!!!!!!! நிச்சயம் நீங்கள் ஏதாவது சொல்லப் போகின்றீர்களா !!????

அகத்திய பெருமான் :

நிச்சயம் அன்னை ஆதி சக்தியே !!!  ஈசனே!!! காகபுஜண்டனே!!!!

நிச்சயம் சொல்லத்தான் போகின்றேன்!!!

நிச்சயம் என்னுடைய அருள் பெற்றவர்கள் பலர்!!! பலர் என்னையே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் வினையின் பாதை அதாவது பாவங்கள் சேர்த்துக்கொண்டே ஆனாலும் வருகின்றார்கள்.

அவர்களுக்கு கூட எப்படியாவது மனதை மாற்றி ஆனாலும் சில பேர் திருந்துகின்றார்கள். சில பேர் நன்றாக ஆகிவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு சென்று விடுகின்றார்கள்.

ஆனாலும் எப்படியாவது நிச்சயம் அன்பு கட்டளை ஈசனார் இட்டதை நிச்சயம் யான் காப்பாற்றியே தீருவேன் !!!!

( குருநாதர் அகத்தியப் பெருமான் ஈசனை பார்த்து)

முதலில் ஈசனே நீ !!! என்ன ?? எனக்குச் சொன்னாய் !! என்பதை எல்லாம் நிச்சயம் பின் நிச்சயம் கூறும்!!!!

ஈசனார் :

சரி சொல்கின்றேன்  முனிவரே !!!அதாவது மாமுனிவரே !!! நிச்சயம் பின் நல்லோர்களுக்கு உதவி செய்யுங்கள் இவ்வுலகத்தை மாற்றுங்கள்!!!! என்று கூட யானே சொன்னேன்!!! 

பின்  அறிந்தும் கூட இப்பொழுது அதைக் கூட (திரும்ப) பெற்றுக் கொள்கின்றேன் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட!!!  எதை என்று அறிய அறிய !!!!!!!

அகத்திய பெருமான் :

நிறுத்தும் !!  நிறுத்தும் !! நிறுத்தும் !! ஈசனாரே!!!!! 

நிச்சயம் நிச்சயம் வரங்களை கொடுத்து விட்டாய் ஒரு முயற்சி கொடு!!! நிச்சயம் இவ்வுலகத்தை மாற்றி யான் காண்பிக்கின்றேன்!!!

நிச்சயம் இதனால் சிறிதளவாவது நிச்சயம் மனிதன் திருந்தி கொண்டிருக்கின்றான் ஆனாலும் இனி மேலும் யான் திருத்தி வைக்கின்றேன்!!!!!

காகபுஜண்டர் :

புஜண்டன் பேசுகின்றேன்!!!! நிச்சயம் அகத்திய மாமுனிவரே நிச்சயம் பல வழிகளிலும் கூட உந்தனக்கு இன்னல்கள்!!!! இன்னும் ஏன் எதற்கு என்று கூட!!!

ஏன் !!!  அமைதியாக இருந்து விடு!!!

அகத்திய பெருமான் 

நிச்சயம் புசண்டரே நிச்சயம் அமைதியாக இருக்கப் போவதில்லை மனிதனுக்காக!!!!

ஏனென்றால் மனிதன் பாவப்பட்ட ஜென்மங்கள்!!!

ஆனால் எதை எதையோ செப்பி செப்பி திருத்தி திருத்தி நிச்சயம் நல்வழிப்படுத்துவோம்!!!

அப்படி இல்லை என்றால் நிச்சயம் சோதனைகள் கொடுத்தும் கூட சோதனைகள் கொடுத்து கூட!!!!!!

காகபுஜண்டர் 

புஜண்டன் பேசுகின்றேன் அகத்திய மாமுனிவரே இங்கு இருக்கின்றோம்... அனைவரும் கூட

ஆனாலும் மனிதனை காறியும் துப்பி விடுவேன் யான்.

பன்மடங்கு சித்தர்களை நம்பி இறைவனை  நம்பியும் கூட நல்வழிப்படுத்துபவர்களை எல்லாம் அவன் பொய் !! இவன் பொய் !!! நிச்சயம் அவந்தன் எதை அறிந்து அறிந்தும் கூட!!!

அதனால் பக்தர்களே மற்ற பக்தர்களை பொய்கள் என்று சொல்கின்றானே அவர்களுக்கு எல்லாம் நிச்சயம் யான் தண்டனை தரப் போகின்றேன்!!!

அகத்திய மாமுனிவரே உன்னை நம்பிக் கொண்டிருப்பவர்களே நிச்சயம் பின் யான் அகத்தியன் பக்தன் என்னிடத்தில் தான் சிறந்தவை உள்ளது அனைத்தும் எந்தனுக்கே தெரியும் அதனால் என்னிடத்தில் வாருங்கள் என்று!!!

மற்றொருவன் யான் நிச்சயம் ஆசிரமத்தை அமைக்க போகின்றேன் என்னிடத்தில் தான் அகத்தியன் உள்ளான் என்று!!!

மற்றொருவன் என்னிடத்தில் தான் அகத்தியன் உள்ளான் என்னிடத்தில் பேசுகின்றான் என்று!!!!!!

"""" அடேய்  !!!!!!!! மனிதா  !!!!!!!

காறியும் துப்பி விடுவேன் இங்கிருந்தே!!!!!!

உன் நிலைமைகள் பார்த்தாயா ?????? எங்கிருக்கின்றது  !!!??? என்பதை கூட!!!!!!!! 

"""" அழித்து விடுவேன்!!!!!!! 

இவ்...... பின்!!!!!....... அதாவது இங்கு ஈசனும் இருக்கின்றான்..... நிச்சயம் தேவியும் இருக்கின்றாள் நிச்சயம் அகத்தியனும் முருகனும் கணேசனும் இருக்கின்றார்கள்!!!

இதனால் மனிதா நிச்சயம் மற்றவர்களை கூட பின் குறை சொல்வதை நிறுத்து!!!

அப்படி நிறுத்தாவிட்டால் நிச்சயம் அழித்து விடுவோம் ஒரு நொடி போதும்.

விட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் நல்லோர்களை எல்லாம் குறை சொல்லி குறை சொல்லி நிச்சயம் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

இதனால்தான் நிச்சயம் ஏனடா. ??  மனிதா புத்தி கெட்ட மனிதா !!!!

அறிவு கெட்ட மனிதா !!!! நிச்சயம் சாகின்ற மனிதா !!!! அறிந்தும் அறிந்தும் கூட நீ தான் பொய் சொல்லி பிழைத்துக் கொண்டிருக்கின்றாய் அல்லவா!!!!

மற்றவர்களை ஏன் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றாய்??????

ஏனடா???? நிச்சயம் அறிந்தும் அறிந்தும் மறுமுறை நிச்சயம் பின் அறிந்தும் கூட உன்னை நிச்சயம் எப்படி பின் நம்தனை அதாவது எதை என்று கூட அறிந்தும் கூட எப்படி பிழைப்பது என்பதை கூட நீ உன்னை நிச்சயம் உன்னை அறி !!!! பின் உன்னை அறிந்து விட்டால்தான் நீ மற்றவர்களை பற்றி பேச வேண்டும்!!!

அப்படி இல்லை என்றால் நிச்சயம் யானே வருகின்றேன் பூலோகத்தில் வந்து!!!!!

பூலோகத்தில் தான் யான் இருக்கின்றேன் ஆனால் நிச்சயம் இனிமேலும் கூட அங்கங்கு வந்து நிச்சயம் எங்கு எவை பொய் சொல்கின்றான் எங்கு சொல்கின்றான் மனிதா புத்திகெட்ட மனிதா சுவடிகளை வைத்துக்கொண்டு காமத்தை  !!!பொறாமைகளை !!! போட்டிகளை!!!!

நியாயமாடா ??? 

அறிந்தும் கூட இவை என்று அறிய அறிய இங்கேயே சொல்கின்றேன்!!!

பின் மனதில் உரைக்கட்டும்

அறிந்தும் கூட இன்னும் பல பேர்கள்.......... சுவடிக்காக அலைந்து கொண்டிருக்கின்றார்கள்!!!

பணத்தை சேர்த்துக் கொள்ள.  இன்னும் பெண்கள் சுகத்திற்காகவே!!!!

காறித்துப்பி விடுவேன்!!!! 

இன்னும் கஷ்டங்களை தான் தரப் போகின்றேன்!!!

ஈசனே!!!! நிச்சயம் !!!

அன்னையே!!! நிச்சயம் 

நீங்கள் என்னை எதைச் சொன்னாலும் நிச்சயம் யான் கஷ்டங்களைத்தான் தரப் போகின்றேன்!!!

நல்லதை ஏனென்றால் மனிதன் தீய வழியில் நடந்து நடந்து நிச்சயம் அழிந்து அழித்து நல்லோர்களை அழித்துக் கொண்டிருக்கின்றான். நிச்சயம்.

நல்லோர்களை குறை கூறுவது இன்னும் பொறாமை எதை என்று அறிய அறிய அழித்து விடுவது இன்னும் கெட்ட புத்திகளிலே திரிந்து கொண்டிருக்கின்றான்!!!!!

தேவியே ! மன்னித்து விடும்!! ஈசனாரே! மன்னித்து விடும் !! அகத்திய மாமுனிவரே! மன்னித்து விடும்!!!!

நிச்சயம் ஏமாற்றுபவர்களை யான் தண்டிக்கத்தான் நிச்சயம் இனிமேலும் தண்டித்துக் கொண்டுதான் இருக்கின்றேன் தண்டிக்கப் போகின்றேன் விட்டு விடுங்கள்!!! அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் அறிந்தும் கூட அறிந்தும் கூட எதை என்று கூட!!!!!!

வேலவன் வருகை!!!!! 

வேலவன் பேசுகின்றேன் நிறுத்துங்கள் !! புஜண்டரே!!!!

ஏன் இவ்வளவு கோபங்கள் ?? நிச்சயம் அறிந்தும்!!! அறிந்தும்!!!!

காகபுஜண்டர் :

வேலவா !!  குமரா!!!! நிச்சயம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாயே!!!! 

உன்னிடத்தில் வருகின்றார்கள் ஆனால் அடுத்தவர் மனைவியை கூட அழைத்து வருகின்றார்களே!!!!! இது நியாயமா??????

வேலவா சொல்லும்!!!!!

வேலவன்:

நிச்சயம் புஜண்டன் யானே அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன்!!!!

அவர்களுக்கும் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன்!!!

ஏதாவது வழி நிச்சயம் யாம் தான் செய்ய வேண்டும்!!!!

புசண்டரே !!! நிச்சயம் கோபம் வேண்டாம் கோபம் வேண்டாம் !

காகபுஜண்டர் :

சரி வேலவா நிச்சயம் ஓர்முறை நிச்சயம் மனிதர்களுக்கு ஏதாவது சொல்!!!! 

வேலவன் :

நிச்சயம் தர்மத்தை வேலவன் சொல்கின்றேன் தர்மத்தை கடைபிடியுங்கள் கோபங்கள் வேண்டாம் குறை சொல்வது வேண்டாம் நிச்சயம் பின் அனைவரையுமே தம் இனத்தோர் தம் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும்!!!  பின் இவ்வாறு எண்ணிணாலே போதுமானது!!!!!! போதுமானது நிச்சயம். 

விநாயக பெருமான் :

நிச்சயம் விநாயக பெருமான் பேசுகின்றேன் அறிந்ததும் கூட அறியாததும் கூட இன்றும் கூட நிலைமைகளில் கூட மனிதர்கள் திருந்திய பாடே இல்லை!!!

என்னையே வணங்கி யான் ஏதாவது தருகின்றேனா என்று!!

முதல்வனை வணங்கினால் அனைத்தும் கிடைத்துவிடும் என்பதை கூட

ஆனால் கிடைக்காமல் அறிந்தும் கூட இதனால் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது மனிதன் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் இன்னும் இன்னும் என்னுடைய வாக்குகளும் கூட கிட்டும் மனிதனுக்கு!!! என்ன செய்ய வேண்டும் என்பதை கூட!!!!

இதனால் அனைவருமே சாந்தம் ஆகுங்கள்!!! சாந்தம் ஆகுங்கள்!!! அறிந்தும் அறிந்தும் கூட!!! எதை என்றும் அறிய அறிய!!! 

போகர் சித்த முனி :

போகன் உரைக்கின்றேன்!!!! 

நிச்சயம் ஈசனாரே என்னுடைய பெயர்களையும் சொல்லிச் சொல்லி நிச்சயம் அதை செய்கின்றேன், இதைச் செய்கின்றேன். என்று எதை எதையோ (மருந்துகள்) கலக்கி கலக்கி மனிதனுக்கு கொடுத்து காசுகள் ஆக்கிக் கொண்டு பின் அவன் செய்தானே மருந்துகள் அவனுக்கே நோய்களாக போகின்றது

( போலியாக சித்த மருத்துவம் என்று பொய் கூறி எதையெதையோ மக்களுக்கு மருந்துகளாக கொடுத்து செயல்படும் போலி மருத்துவர்களுக்கு)

ஆனால் கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதை எதையோ ஆனாலும் பின்!!!!!

வேலவன் :

வேலவன் பேசுகின்றேன் நிச்சயம் அறிந்தும் கூட போகனே கவலையை விடும்!!!!

உன்னுடைய அருள் இல்லாமல் நிச்சயம் அது பலிக்காது!!!

பின் அறிந்தும் கூட இன்னும் இன்னும் மூலிகைகளை கூட நிச்சயம் அறிந்தும் கூட என்னிடத்தில் இருக்கின்றது நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட!!!!

நிச்சயம் யார் ஒருவன் அதாவது எந்தன் இடத்திற்கு பழனி தனிற்கு வந்து போகனின் ஆசிர்வாதங்கள் பெற்று பெற்று நிச்சயம் வருகின்றானோ அங்குள்ள நீரை குடித்து நிச்சயம் அறிந்தும் அறியாமலும் கூட பின்பு அறிந்தும் எவ் எவ் நோய்க்கு என்னென்ன பலன்கள் என்பதை கூட நிச்சயம் தெரிவிப்பேன்!!!

என் மனதில் உள்ள போகனே!!!!

இன்னும் மக்களை திருத்தி திருத்தி இன்னும் இன்னும் அதாவது பின் போகனே பின் ஏன் ?? பலிப்பதில்லை??

போகர் சித்த முனி :

நிச்சயம் சொல்கின்றேன் வேலவா!!!

நிச்சயம்  பலிப்பதில்லை!!!

குரு குரு மந்திரம் என்று ஒன்று இருக்கின்றது அதை சொல்லித்தான் மருந்துகள் தர வேண்டும் அவை யாருக்குமே தெரிவதில்லை அவ்வாறு கொடுத்தாலும் கெடுதல்கள் நிகழ்ந்து விடும்!!

இவ் குரு மந்திரத்தை நிச்சயம் சொல்கின்றேன் நல்லோர்களுக்கு மட்டுமே நல்லோர்களுக்கு மட்டுமே

ஆசிகள் ஆசிகள் ஆசிகள்!!

அன்னையே நிச்சயம் யான் சென்று வருகின்றேன் அன்னையே ஆசிகள் தந்தையின் ஆசிகள் கூட!!!

ஈசனார் :

தேவியே கேட்டாயா எத்தனை பேர்கள் வந்து விட்டார்கள் பின் முதலில் நீ தான் என்னை இழுத்தாய்!!!

ஆனால் யான் அமைதியாக தான் பதில் சொன்னேன்!!!

ஆனால் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களும் வந்து விட்டார்கள்!!!

இனியும் யான் வாக்கினைச் செப்பினால் அனைத்து சித்தர்களும் இங்கு ஓடோடி வந்து விடுவார்கள்!!!!

அதனால் நிறுத்துகின்றேன் நிறுத்துகின்றேன்!!!!

இன்னும் சித்தர்கள் இவ்வுலகத்தை காப்பார்கள் நலம் ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete