​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 13 April 2021

சித்தன் அருள் - 993 - இந்த வருட திருவோண நாட்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது.

"ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்  அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.

எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது."

சித்திரை - 04/05/2021
வைகாசி - 31/05/2021
ஆனி - 27/06/2021
ஆடி - 25/07/2021
ஆவணி - 21/08/2021
புரட்டாசி - 17/09/2021
புரட்டாசி - 15/10/2021
ஐப்பசி - 11/11/2021
கார்த்திகை - 08/12/2021
மார்கழி - 05/01/2022
தை - 01/02/2022
மாசி - 28/02/2022
பங்குனி -28/03/2022

அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

7 comments:

 1. கண்டிப்பாக செய்கிறோம். நன்றி

  ReplyDelete
 2. நன்றி. ஈசனின் அகத்தியர் பெருமானின் சித்தம்

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  நன்றி ஐயா

  ReplyDelete
 4. Ok sir.
  Om lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

  ReplyDelete
 5. Om Sri Lopamudra samata Agastiyar thiruvadi saranam.

  ReplyDelete
 6. நமஸ்காரம் ஸ்வாமி.

  மேல அகஸ்தியர் திருமண படத்தில் ஸ்ரீமந் நாராயணனும் அவரது மற்றொரு அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவரும் இருக்க காரணம் என்ன? ஏதேனும் சிறப்பான அல்லது குறிப்பிடத்தக்க காரணங்கள் உண்டா? தயை கூர்ந்து தெரிவிக்கவும்.

  அடியேன்.

  ReplyDelete
 7. அகத்தீசாய நம நன்றி அய்யா

  ReplyDelete