இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல் மூலிகைகள் இட்டு, ஒரு சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு, நல் முறையாய் வேண்டிக்கொண்டு, "அகத்தியன்" என்று சொல்லிவிடுங்கள். அப்பனே, யான் இருக்கின்றேன். யான் இருக்கும்பொழுது, எதையும் நம்பாதீர்கள். அப்பனே, இதையும் யான் சொல்லுகின்றேன். யான்தான் அகத்தியன் என்றெல்லாம் வருவார்கள். அப்பனே நம்பிவிட்டால், நீங்கள்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்வேன். [தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக உரைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் (பச்சை கற்பூரம் ஆகலாம்) - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்].
அகத்தியன் என்று ஒருவன் இருக்கின்றான், இப்பொழுது தேடி வந்தீர்களே, எவ்வாறு தேடி வந்தீர்கள், நீங்களா வந்தீர்கள், இல்லை யானே அழைத்தேன். யானே அழைத்த பொழுது, நல்லது செய்யாமல் விட்டுவிடுவேனா நான். அதனால் பக்தன் என்று நிறைய பேர் வருவார்கள். இனியும் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லுவேன். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை எடுத்து வாருங்கள். உன்னிடத்தில் அருள் இருக்கின்றது. அதை விட்டுவிட்டு, நாடி சென்றால், நீயும் மனிதன், அவனும் மனிதன். இதை சிந்தித்துக்கொள் என் மக்களே! இப்பொழுது கூட சொல்லிவிடுங்கள் "அகத்தியன் இருக்கின்றான்" என. பின்பு, உங்கள் வேலையை பார்க்கத் தொடங்குங்கள்.
சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றது. இனிய அறிவை யான் கொடுத்துவிடுவேன். ஆயினும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான வினைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றீகள், என்பது எந்தனுக்குத் தெரியும். அவை, சிறிது சிறிதாக விலகும் என்பேன்.
அப்பனே, நல் முறையாக எதனை செய்தால், என்றெல்லாம் தோன்றும். எதுவும் வேண்டாம். அகத்தியனை நினைத்துக் கொள்ளுங்கள். அப்பனே, பின் மகன்களுக்கு எதை செய்யவேண்டும் என்று எமக்குத்தெரியும். அதை யான் செய்கின்றேன். அதை விட்டுவிட்டு, அது வேண்டும், இது வேண்டும் என கேட்டுக் கொள்ளாதீர்கள். அன்பு மட்டும்தான் இந்த மாய உலகில் சிறந்தது. ஆகவே அன்பை செலுத்துங்கள், போதுமானது.
வரும் வழியிலேயே ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டேன். அன்பு மகன்கள், இப்பொழுதும் யான் இங்கே இருக்கின்றேன். அனைவருக்கும், எனது ஆசிகள். மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன். அப்பனே எம்மை தேடி இங்கு வந்தீர்களே! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சுபிட்சம் நடக்கப்போகின்றது. இதுவரை ஈசன் நடத்தும் நாடகத்தில் கட்டங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றது. அதையும் யான் பார்த்துக் கொள்கின்றேன். அன்பு மகன்களே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் செல்லுங்கள்.
மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே. அனைவருக்கும் ஆசீர்வாதங்களை கொடுத்து அனுப்புகின்றேன், இப்பொழுது.
பொதிகை வாக்கு நிறைவு பெற்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............. தொடரும்!
எங்கள் குருவே குருநாதா அகத்தீசா உங்கள் தாமரை பாதங்கள் சரணம் சரணம் இமைப்பொழுதும் நீங்காது எங்களுக்கு தாயை போல பரிவு காட்டி தந்தையைப் போல அறிவுரைகள் சொல்லி வழிநடத்தும் எங்கள் குருவே யுகங்களைக் கடந்த குருநாதா இனி நாங்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குருவாய் நீங்களே அமைய வேண்டும் உங்கள் பாதமே சரணாகதி என்று நாங்கள் வாழ வேண்டும் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ குருவே சரணம் குரு பாதம் சரணம்🙏🙏🙏
ReplyDeleteஎன்றென்றும் என்னப்பன் அகத்தியன் இருக்கின்றார். யான் இங்கு வரவில்லை. அவரே சித்தன் அருளுக்கு வரவழைத்தார். எத்தனை பிறவிகள் புண்ணியம் செய்தேனோ என்னப்பன் வழி நடப்பதற்கு. இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்கள் கை பிடித்தே நான் நடக்க வேண்டும், மனதில் உங்கள் நினைவும், வாக்கில் சத்தியமும் நிலவ வேண்டும். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்.
ReplyDeleteகுருவடி சரணம். திருவடி சரணம்.
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி 🙏
ஓம் அகத்தீசாய போற்றி போற்றி
ReplyDeleteஐயா
((நல் மூலிகைகள் இட்டு)) என்றால் என்ன.....
(((சிறு கற்கண்டம், ஏலக்காயும் இட்டு)) என்பது கற்கண்டு மற்றும் ஏலக்காயை நீரில் கலந்து அர்ப்பணம் செய்ய வேண்டுமா
சுத்தமான நல்லெண்ணெயில் தீபம் போட்டு ஏதேனும் மூலிகை பொருள்கள் இட்டு ஏலக்காய் கல்கண்டு இட்டு வழிபாடு செய்து வாருங்கள் நன்றி
Deleteதீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக குறைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்
DeleteOm Lobamudra samethey agastheeswararay saranam. மூலிகை என்றால் எதை விளக்கில் இட வேண்டும், மற்றும் ஏலக்காய் மற்றும் கற்கண்டு பேட்டில் இடவேண்டுமா அல்லது நல்லெண்ணெய் யில் இட்டு ஏற்ற வேண்டுமா?. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்.Those who had dharshan at pothigai malai are blessed. Om Lobamudra samathey Agatheeswararay saranam.
ReplyDeleteதீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக குறைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்
Deleteநண்றி ஐயா, ஏதாவது வாசணதி பொருள் என்றால் சந்தனம், (அ) சாம்பிராணி (அ) மஞ்சள் சேர்த்துக் கொள்ளளாமா?. Once again thank u for ur reply sir in this situation. Om sri Lobamudra samethey Agastheeswararay saranam.வாழ்க வையகம் வாழ்க வளமுடன். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி, ஓம் ஸ்ரீ வள்ளளார் திருவடிகளே சரணம்.
Deleteஓம் அகத்தீசாய நமஹ....
ReplyDeleteஐயா சற்றே விளக்கம் வேண்டி கேட்கிறேன்...
"மீண்டும் ஒருமுறை உரைக்கின்றேன். அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் இருக்கின்றது. நீங்களே பக்திமான்களாகலாம். அதை விட்டுவிட்டு, எதை எதையோ சென்று அடைந்தால், மீண்டும் தோல்விகள்தான் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், என் மக்களே."
ஐயா, இதில் "எதை எதையோ சென்று அடைந்தால்" என்று சொல்லப்படுவது யாது?... கோவில்களுக்கோ சித்தர் சமாதிகளுக்கோ செல்வதும் இதில் அடக்கமா? அல்லது குறிப்பிட்டு விஷயங்களை கூறுங்களேன்....
நன்றி ஐயா.........
சாமியார் வேடம் போட்டு உட்கார்ந்து கொண்டால் எல்லாம் வரும் என்றுணர்ந்து, தானே சாமியார், என கூறுவான். அவன்தன் பலவித சுகங்களை அனுபவிப்பான். இவனைவிட கீழான மனிதர்கள் இவ்வுலகில் இல்லை. ஆனால் யாரையும் நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்றுதான் யான் சொல்வேன்
DeleteOm Agatheesaya Namaha,Ungal porpatha kamalangal potri potri
ReplyDeleteOm lobamuthra sametha agasthiyaha namaha.
ReplyDeleteOm Sri lopamudra samata Agastiyar thiruvadi saranam.Ayya engali eppoum ungal pathayil Vali katuingal Ayya.
ReplyDeleteஓம் அம் அகத்தீசாய நமக... தங்களின் கருணையே கருணை...என்ன புண்ணியம் செய்தோமோ தங்களின் அருள் கிடைக்க...
ReplyDeleteஐயா தங்களுக்கு நன்றி ஐயா
ayya
ReplyDeleteentha mooligaigalai vilakkil poda vendum,nalennai allathu nei vilakka endru koorungal ayya.
தீபம் ஏற்றுவதை பற்றி தெளிவாக குறைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நாடியில் கேட்ட பொழுது "கிராம்பு, ஏலக்காய், கற்கண்டும், ஏதேனும் ஒரு வாசனாதி பொருள் - இவை அனைத்தையும் பொடித்து சேர்த்து, தினமும் விளக்கேற்றி, நம் குருநாதருக்கு என வேண்டிக்கொண்டு, அதன் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்" என சொல்கிறார்
Deletenandri ayya appadiye neengal sonnathu polathan vilakketri varugeiren,meendum vilakkiyadharku nandri ayya.
Deletesubha
Aasan Agatheesar Padhangal Potri.. Potri..
ReplyDeleteAmma Lobamuthra Thayee Potri.. Potri..
ஓம் அம் அகத்தீசாய நமஹ||
ReplyDeleteஅரிதிலும் பேரரிதான ஆத்ம விடுதலை அளித்திட்ட அகத்தீசர் திருவடி சரணம் ||
ஞானாலய ஜ்யோதியில் வீற்றுஇருக்கும் ஸப்தரிஷிகளில் முதன்மையானவரே போற்றி ||
ஈசனுக்கு காவலரே ஆதிசக்தியின் செல்வ மைந்தனே ஆறுமுகனாரை ஆசானை கொண்ட எங்கள் அகத்து ஈசனே சரணம்||
வான்மீகி மஹரிஷிகள் அருளிய கலியுக காவியமான ஆத்மாவின் சுயசரிதத்தின் நாயகனே போற்றி போற்றி ||
ஈசனின் கோபத்தில் இருந்து என்னை போன்ற மூடர்களை இரட்சிக்கும் தாயுள்ளம் கொண்ட அகத்தினுள் ஈசனே சரணம்||
கலியுகத்தில் மறுபிறவி என்ற கொடிய சாபத்திலிருந்து எங்களை காப்பாற்றிய குருவனாவரே போற்றி போற்றி||
ஞானாலய குரு அன்னைக்கு குருவானவரே சரணம் ||
நவநாத சித்தர்களையும் நூற்றியொன்று சித்தர்கள் மற்றும் உயர் ஆற்றல்களையும் சப்தரிஷிகளையும் ஞானாலய ஜ்யோதியில் எழுந்தருள செய்திட்ட அகத்தீசா போற்றி போற்றி ||
பதினெண் ஆறுமுக ஆற்றல்களும் ரேணுகா தேவி என்னும் ஆதி சக்தியின் பதினெண் ஆற்றல்களும் குடிகொண்டுள்ள ஞானாலயத்தினை காத்து இரட்சிக்கும் கருணை உள்ளம் கொண்ட அகத்தீசர் சரணம்||
சத்யயுக வித்துக்களாக ஆன்மாக்களை கலசத்தில் சேர்க்கும் கும்ப முனிவரே போற்றி போற்றி||
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமனுக்கு ஆதித்ய இருதயம் அருளி ராவணனை வேரறுத்த அகத்தீசர் அடி சரணம் ||
கலியுகத்தில் கலியை விரட்டி சத்திய(யுக)த்தை அடி கோலிடும் சத்தியத்தின் திருவுருவான அகத்தியனே போற்றி போற்றி||
கலைவாணி பாலமுருகனுக்கு அருளிய ஆதிவாணி மூல மந்திரத்தை இந்த மூடனுக்கும் அருளாய் பொழிந்திட காரணமும் காரியமும் ஆன அகத்தீசர் திருவடி சரணம்||
ஓம் அம் அகத்தீசாய நமஹ||
🙏🙏🙏
Delete