குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த புதுமையான ரகசிய வாக்கு பாகம் 3
குருநாதர் உரைத்த ரகசிய வாக்குகள்
சித்தன் அருள் 1710 முதல் பாகம்
சித்தன் அருள் 1713 ல் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது
அப்பனே நிச்சயம் அப்பனே பூமியானது அப்பனே நிச்சயம் சரியான வேகத்தில் அப்பனே இயங்குகின்ற பொழுதுதான் அப்பனே நிச்சயம் அப்பனே யாருக்கும் எத் தொந்தரவுகளும் வராதப்பா!!!
ஆனாலும் அதன் வேகமும் அப்பனே... யான் ஏற்கனவே பின் சொல்லிவிட்டேன் அப்பனே அதன் வேகம் குறைவாகின்ற பொழுது அப்பனே இக்கலியுகம் அதாவது அறிந்தும் கூட அப்பனே எப்பொழுதெல்லாம் குறைந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் அப்பனே பல கஷ்டங்களும் கூட அப்பனே பல அழிவுகளும் கூட ஏற்படும் அப்பா!!!
அப்பனே இவ் யுகங்கள்!!!!
அறிந்தும் கூட அதாவது அப்பனே ஒரு யுகத்தில் சரியான வேகத்தில் அப்பனே நிச்சயம் சுழன்றது என்பேன் அப்பனே.... உயர்தரமான நேர்மை அனைத்தும் இருந்தது என்பேன் அப்பனே
அதாவது சற்று குறைந்தது அப்பனே அடுத்த யுகம் வந்துவிட்டது அப்பனே
இதனால் சற்று குறைந்து விட்டது
ஆனாலும் அப்பனே அடுத்த ஒரு யுகம் வந்துவிட்டது அப்பனே இன்னும் குறைந்துவிட்டது!!!என்பேன் அப்பனே
ஆனால் அப்பனே இது இப்படியே குறைந்து குறைந்து அப்பனே எவை என்று கூட கலியுகத்தில் அப்பனே மீண்டும் குறைந்தால் அப்பனே நிச்சயம் மனிதன் என்ன செய்கின்றான்??? என்பதைக் கூட யோசிக்காமல் செய்வான் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இவை தன் விஞ்ஞானத்தால் கூட பின் சரி படுத்த முடியாது என்பேன். அப்பனே
யாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்!
மீண்டும் எவ்வாறு புவியின் வேகத்தை இவை தன் அதிகரிப்பது என்பதையெல்லாம் அப்பனே
அப்பனே அவை தன் சரியான வேகத்தில் இயங்கினால் தான் அப்பனே அனைவரும் சரியான அப்பனே அதாவது எது நல்லது ??எது தீயது?? என்றெல்லாம் ஆராய்வார்கள் என்பேன் அப்பனே...
வேகம் குறைந்தால் அனைவரும் தீயதாகவே யோசிப்பார்கள் என்பேன். அப்பனே.
இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எதை என்று கலியுகம் அழிவு நிலைக்கு வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே இதனால் எதற்கு அப்பனே பின் அவ் வேகம் குறைந்து கொண்டே வந்தால் அப்பனே அழிவுகள் அப்பனே வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே நலன்கள் ஆகவே இதனால் தான் அப்பனே யான் பல முறையும் கூட எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே பல பல கிரகங்களையும் கூட... இதனால் அப்பனே அவை தன் குறைகின்ற பொழுது அதாவது அப்பனே மனிதருடைய உடம்பில் கூட சில சில நுண்ணுயிரிகள்... அதேபோல் அப்பனே அனைத்து கிரகங்களின் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அங்கு இருந்து அப்பனே நல்விதமாக மனிதர்களுக்கு விழுகின்ற பொழுது யோகங்கள் அப்பனே நல்முறையாகவே... முன்பெல்லாம் வாழ்ந்து வந்தான் அப்பனே
ஆனாலும் அப்பனே இப்புவியானது அப்பனே வேகம் குறைத்துக் கொண்டால் அப்பனே கிரகங்களின் அதை எதை என்று கூட பின் எவை என்றும் அறிந்தும் கூட அவர் நுண்ணுயிர்கள் அப்பனே அப்படியே பின் அதாவது மனிதனை வந்தடையாமல் அப்பனே பின் மேலே சிறிது அப்பனே தொலைவிலே தேங்கி நிற்கும் அப்பா!!!
(நம் குருநாதர் நவகிரகங்களின் துகள்கள் மனிதர்களுடைய உடம்பிலும் இருக்கின்றது!!! என்று ஏற்கனவே வாக்கில் கூறியிருக்கின்றார்!!... பூமி சரியான வேகத்தில் சுற்றுகின்ற பொழுது பூமியின் காந்த புலம் மேலே இருக்கும் நவகிரகங்களின் நுண்ணுயிரிகளை சரியான முறையில் மேலிருந்து கீழே ஈர்த்து மனிதர்களுக்கு அவ் நுண்ணுயிரிகள் கிடைத்து நல்ல முறையில் யோகமாக வாழ்ந்து வந்தார்கள்.
பூமியின் சுற்றும் வேகம் குறையும் பொழுது காந்தப்புல ஈர்ப்பு சக்தியானது நவகிரகங்களின் நுண்ணுயிரிகளை ஈர்க்க முடியாமல் கிரகங்களிலிருந்து வீழும் நுண்ணுயிரிகள் பூமிக்கு மனிதர்களுக்கு வந்து அடைய முடியாமல் மேலேயே தேங்கி நின்று விடும்)
அப்பனே அதனால்தான் ஜாதகங்கள் கூட அப்பனே பொய்யாக போய்க் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பூமியானது சற்று அப்பனே வேகங்கள் குறைந்து கொண்டு வந்தாலே அப்பனே எப்பொழுது சரியாக மாறும் அதாவது... குருவானவன் எப்பொழுது மாறுவான் சனியானவன் எப்பொழுது மாறுவான்???? பின் ராகு கேது எப்போது மாறும்?? என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!
(ஜோதிடர்கள் ஜாதகத்தை அதில் இருக்கும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றது வைத்து பலன்கள் சொல்வார்கள் ஆனால் மேலே அண்டத்தில் கிரகங்கள் பூமியின் சுற்றும் வேகம் குறைந்ததால் கிரகங்கள் இடம் மாறி இருப்பதை தெரியாமல் உனக்கு குரு இந்த இடத்தில் இருக்கின்றார் அதனால் குரு யோகம் உனக்கு ஏற்படும் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள் ஆனால் உண்மையில் குரு மேலே அண்டத்தில் தன்னுடைய இடத்திலிருந்து மாறி இருப்பார் இது எல்லாம் பூமி சுற்றும் வேகம் குறைந்ததால் ஏற்படும் விளைவுகள் அதனால் ஜோதிட பலன்கள் பொய்யாக போய்விடும்)
ஆனால் ஜோதிடர்களோ உங்களுக்கு நல்ல நேரங்கள் நல்ல நேரங்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அப்பனே
ஆனால் தீயவை நடந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அவ் ஒளியானது அப்பனே அதாவது மேகத்திலே அப்பனே அங்கேயே அதிகம் தங்கி நிற்குமப்பா!!!
இதனால் அப்பனே நிச்சயம் அதிகாலையில் பிராணாயாமம் அப்பனே மூச்சுப் பயிற்சிகள் ஏன் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட பின் வயிற்றின் அடியில் அப்பனே நல்விதமாகவே அப்பனே அதாவது அனைவருக்குமே ஒரு சக்தி அதாவது அப்பனே பின் வேகம் என்ற சக்தி இருக்கின்றதப்பா
அப்பனே அவ் சக்தியை எப்படி இயக்க??
நிச்சயம் அதிகாலையிலே பிரம்ம முகூர்த்தத்தில் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது பலமாக காற்றை உள்ளிழுக்க வேண்டும் என்பேன் அப்பனே
(மூச்சுப் பயிற்சியில்)
அவ்வாறு உள்ளிழுத்தால் தான் அப்பனே...அவ் மேகங்களில் இருந்து தடைபடும் சிலசில நிச்சயம் அப்பனே எவை என்று கூட சக்திகள் பின் அதாவது வயிற்றில் அடி வயிற்றுக்கு செல்கின்ற பொழுது யோகங்கள் நிகழ்ந்திருக்கும் அப்பா... நோய்களும் வராதப்பா
ஆனாலும் அனைத்தும் மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே
அப்பனே அவை மட்டுமில்லாமல் பின் மேகங்கள் அப்பனே அதற்கு மேலே... பல வகைகளிலும் கூட அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் அப்பா
அதனால்தான் சில சில திருத்தலங்களுக்கு சென்று அப்பனே விமானத்தின் மேலே பறக்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அவ் கிரகங்களின் கூட அப்பனே நிச்சயம் அதாவது சக்திகள் பின் மனிதனுக்கு உடம்பில் நுழைகின்ற பொழுது யோகங்கள் பன்மடங்காகும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் அதற்கும் தகுதியானவர்களைத்தான் பின் இறைவன் மேலே பறக்க விடுவான் என்பேன் அப்பனே
(நவகிரகங்களின் ஆற்றல்களை ஈர்த்துக் கொடுக்கும் திருத்தலங்களுக்கு மேலே விமானத்தின் மூலம் பறந்து சென்று கிரகங்களின் யோக சக்தியை பெறுவதற்கும் மனிதர்களுக்கு தகுதிகள் வேண்டும் அதை இறைவன் தான் தேர்ந்தெடுப்பார்)
அப்பனே அவை மட்டுமில்லாமல் சுக்கிரன் அதிகமாக அப்பனே அதாவது அருகில் இருப்பதால் அப்பனே நிச்சயம் பின் மேலே பறக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே காசுகளை எவை என்று கூட அவன் அருள் பரிபூரணமாக அதாவது அப்பனே அக்கதிர்கள் மனிதர்களுக்குள்ளே நுழையும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே காசுகள் அதிகமாக கிடைக்குமப்பா!!!
(விடிவெள்ளி எனப்படும் வெள்ளி நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சுக்கிரனின் ஒளி கதிர்வீச்சுகள் மேலே பறக்கின்ற பொழுதும் மனிதர்களுக்கு அதிக அளவு கிடைக்கும்... இதனால் தன லாபம் மனிதர்களுக்கு ஏற்படும் சுக்கிரனுடைய ஒளியை பெறுவதால்!... விடிவெள்ளியை அதாவது சுக்கிரனை மாலை நேரத்திலும் அதிகாலை வேலையிலும் வானத்தில் தெளிவாக காண முடியும்)
சிலர் இங்கு யோசிக்கலாம் விமானத்தில் பறக்கின்றவர்களுக்கு மட்டும் தான் ஆற்றல்கள் கிடைக்குமா என்றால்..
புண்ணியமும் தகுதியும் இதற்கு வேண்டும்...
அதுமட்டுமில்லாமல்
காடுகளிலும் மலை உச்சிகளிலும் ஏறிச் சென்றால் இறைவனை தேடி அலைந்தும் மலைகளில் மேலே சென்றால் இந்த ஆற்றலை பெற முடியும் என்று ஹரித்வாரில் உள்ள சண்டி மாதேவி சக்தி பீட ஆலயத்தில் விரிவான வாக்குகளை தந்துள்ளார் அந்த வாக்குகள் அதிவிரைவில் வெளியே வரும். ஏற்கனவே இறைவனை தேடி மலைகளிலும் காடுகளிலும் ஏறிச் செல்ல வேண்டும் அப்பனே என்று குருநாதர் வாக்குகளில் கூறியிருந்தார் அதன் ரகசியத்தை வாக்குகளில் கூறியுள்ளார் மேலே அதாவது அண்டத்தில் இருந்து வரும் ஒளிக்கதிர் ஆற்றல் சக்திகளை மலை உச்சியிலும் காடுகளிலும் அதிகம் குவிந்து காணப்படும் அதனால் அங்கெல்லாம் இறைவன் அமர்ந்துள்ளார்.. காடுகளிலும் மலைகளிலும் தேடி அலைந்து திரிந்து சக்தியை பெற முடியும் என்று குருநாதர் கூறியுள்ளார் அந்த வாக்குகள் வரும்பொழுது விரிவான விளக்கம் கிடைக்கும்)
அப்பனே இதனால்தான் அப்பனே நிறைய விஷயங்கள் தெரியாது எவை என்று கூட மனிதர்களுக்கு என்பேன் அப்பனே
அதனால்தான் மனிதன் அப்பனே இப்படி இருக்கின்றான் இதனால் அப்பனே!!!
அப்பனே நீ அறிந்தும் கூட மிகப் பெரிய புண்ணியங்கள் எல்லாம் நீ செய்திருக்கின்றாய் காலங்கள் காலங்களாக... (அகத்தியர் பக்தருக்கு)
அதனால்தான் அப்படி சில ரகசியங்களை கூட உந்தனுக்கு சொல்லிவிட்டால் அப்பனே நன்மைகளாகவே எதை என்று அறிய அறிய.. உன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும் கூட அப்பனே.. யான் சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே.... இப்பொழுது தெரியாததை தெரிந்து கொள் மகனே !!!
ரத்தின கற்களை ராசி கற்களாக மோதிரமாக அணிந்து கொள்ளும் ரகசியம்!!
அப்பனே ஏன்? கற்களை கைகளில் அணிந்து கொள்ள அப்பனே பின் அதாவது ஜாதகர்களும் (ஜோதிடர்கள்) பல வழிகளில் கூட!!! சொல்வார்கள் அப்பனே இதன் உண்மையைக் கூட இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே
அதாவது அப்பனே அவர்களுக்கு தெரியாதப்பா ஆனால் இவை அணிந்து கொண்டால் நன்று என்று சொல்வார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே சரியானதாக அங்கிருந்து அப்பனே சொன்னேனே அவ் நவகிரகங்களிலிருந்து கதிர்வீச்சுக்கள் நல்விதமாக அப்பனே அதாவது மேகத்தில் எவை என்று கூட அங்கேயே தங்கிவிடுமப்பா
அதை தன் ஈர்ப்பதற்கே பின் கற்கள் இவ்வாறு அணிந்து கொண்டால் நிச்சயம் நன்று
ஆனாலும் எவை என்றும் அறிய அறியாமல் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... உண்மை எதுவென்றால் அப்பனே பின் இக் கற்கள் அதாவது சில கற்கள் சரியாக ஈர்க்குமப்பா யோகத்தை!!
இதனால்தான் அப்பனே பின் கைகளில் அணிந்து கொள்கின்றார்கள்!!!
அப்பனே நல்விதமாக இதனால் தான் அப்பனே ஆனாலும் அப்பனே சரியாக அணியவில்லை என்றால் அப்பனே... அதுவே கெடுதலாகிவிடும் என்பேன் அப்பனே !!!
(தவறான வழியில் தோஷமுள்ள நீலக்கல் ப்ளூ ஜாகர் வைரத்தை ஒருவர் வைத்திருந்ததால் ஒரு குடும்பமே எப்படி பாதிக்கப்பட்டது குருநாதர் அகத்தியர் பெருமான் அகத்தியர் மைந்தன் திருஹனுமதாசன் அவர்கள் காலகட்டத்தில் ஜீவநாடி மூலம் வாக்கு தந்து மீட்டெடுத்ததை சித்தன் அருள் 51 பதிவில் படித்து உணர்ந்து கொள்ளலாம்)
அப்பனே இதனால் அப்பனே பின் பூமி ஆனது அப்பனே சரியாக அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே சரியாகவே வேகம் குறைவு பின் அதாவது வேகக் குறைவு அப்பனே பூமி தன் வேகத்தில் இருந்து அப்பனே நிச்சயம் சிறிது தள்ளி போகும் அப்பா
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய கிரகங்கள் அப்பனே பின் அதாவது அப்பனே ஓரிடத்தில் இருந்து ஒரு இடம் மாறுகின்ற பொழுதும் கூட பின் சரியான வழியில் கணிக்க முடியாதப்பா மனிதர்களால் என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே ராகு கேதுக்களின் பெயர்ச்சிகளும் கூட குரு பெயர்ச்சியும் கூட அப்பனே சனியவன் பெயர்ச்சியும் கூட அப்பனே பின் சரியாக கணிக்க முடியாதப்பா
ஆனாலும் பின் இவ்வாறு மாறுகின்றது என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே ஆனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை வரும் வரும் கலியுகத்தில் அப்பனே
(நம் குருநாதர் அகத்திய பெருமான் மற்றும் இடைக்காடர் நவகிரகங்கள் பற்றி!!
நவகிரகங்கள் தம் தன் இடத்திலிருந்து இடம் மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருந்தார்கள்.
சித்தன் அருள் 1663
பூலோக முதல் சொர்க்கம் திருவண்ணாமலை வாக்கில் குருநாதர்
அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் அப்பனே ஜாதகங்கள் கூட அப்பனே சக்திகள் இழக்க நேரிடும் என்பேன் அப்பனே!!
ஏனென்றால் அப்பனே கிரகங்கள் அப்பனே சரியாக செயல்படாது என்பேன் அப்பனே
ஏன் எதற்கு என்றால் அப்பனே புவி அப்பனே நிச்சயம் தன் வேகத்தை குறைக்கும் பொழுது அப்பனே எல்லா கிரகங்களும் எவை என்று அறிய அறிய அப்பனே ஈசனை நோக்கியே அப்பனே தவங்கள் செய்யும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
அப்பொழுது தீர்வு அதாவது முடிவு ஈசனிடத்திலே என்பேன் அப்பனே!!!
சொல்லிவிட்டேன் அப்பனே பல வாக்குகளிலும் கூட அப்பனே இதன் முன்னே வாக்குகளிலும் கூட செப்பி விட்டேன்...
மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே)
என்று வாக்குகள் கூறி இருந்தார்...
நவகிரகங்கள் தன் தம் இடத்தை விட்டு இடம் மாறி நிற்கும் விஷயங்களை சித்தர்கள் மட்டுமே அறிவார்கள். அறிந்து நமக்கு கூறியுள்ளார்கள்.
ஆனால் ஒரு நபர் தன்னுடைய ஜாதகத்தையோ குடும்பத்தினருடைய ஜாதகத்தையோ ஒரு ஜோதிடரிடம் கொண்டு போய் கொடுத்துப் பார்க்கச் சொல்லும் பொழுது அவர் ஜாதகத்தில் நவகிரகங்களின் இருப்பை குறித்து கணக்குகள் இட்டு உனக்கு இப்பொழுது குரு இங்கே இருக்கின்றார் இதனால் இந்த யோகங்கள் ஏற்படும்.
சனி இந்த இடத்தில் நிற்கின்றார் அதனால் இந்த யோகங்கள் ஏற்படும் என சொல்வது எல்லாம் பலிக்காது.
ஏனென்றால் அண்டத்தில் கிரகங்கள் தடம் மாறி இடம் மாறி நிற்கின்றது பூமியின் சுற்றும் வேகம் குறைந்ததால்.
அதேபோல் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி இதெல்லாம் மனிதர்களால் ஜோதிடர்களால் கணித்து சொல்வதெல்லாம் பொய்யாக போய்விடும்.
பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ள இந்த நேரத்தில் நவகிரகங்களை பற்றி யாராலும் மனிதர்கள் யாராலும் கணித்து கூற முடியாது... ஜோதிடர்கள் சொல்லும் பலனும் அதாவது நவகிரகங்கள் இந்த இடத்தில் இருப்பதால் இந்தந்த பலன்கள் நடக்கும் என்பதெல்லாம் பொய்யாகிவிடும் ஏனென்றால் நவகிரகங்கள் மேலே இடம் மாறி இருப்பதை ஜாதகத்தில் கணித்து சொல்ல முடியாது)
அப்பனே அதனால்தான் அப்பனே சரியாகவே யாரும் கணிக்க முடியாது என்பேன். அப்பனே வரும் காலத்தில் கூட!!
அப்பனே அதே போல் அப்பனே நிச்சயம் அப்பனே சனியின் செல்கள் அதிகமாக இருக்கும் பொழுது அப்பனே பின் ஆனாலும் நல்விதமாக ஏழரை நேரங்களில் தான். (ஏழரை சனியின் காலங்களில்) தான் அதிர்ஷ்டங்கள் கூடி வரும் அப்பா
ஆனால் மனிதனோ (ஜோதிடர்) பின் ஏழரை ஆரம்பித்து விட்டது உங்களுக்கு கெடுதல் என்று சொல்வான் அப்பா!!
குருநாதர் உரைத்த புதுமையான ரகசிய வாக்குகள் பாகம் 4 ல் தொடரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி அகத்தியர் ஐயா 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete