​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 28 October 2024

சித்தன் அருள் - 1715 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-3!


அடியவர்: இறைவன் தான் இந்த உலகத்தில் அனைத்தையும் உருவாக்கி வந்திருக்கார். அவருக்கு எப்பத்தான் திருப்தி வரும்?

குருநாதர்: அப்பனே! நிச்சயம், இறைவனுக்கே, கலியுகத்தில் திருப்தி இல்லை அப்பா! அப்பனே! பல வகைகளிலும், ஞானிகளை படைத்து, ரிஷிகளை படைத்து, அப்பனே, இன்னும் பல வழிகளில் (சொல்லி), யாராவது ஒரு மனிதன் சொல்லியதை கேட்டானா, என்ன?

அடியவர்: எல்லா மனிதர்களையும் நீங்கள் ஒரே போல் பார்க்கக்கூடாது. 

குருநாதர்: நிச்சயம் இல்லை அப்பா! அப்பனே! ஆனாலும் அப்படித்தான், இக்கலியுகத்தில் பார்ப்பேன்.

அடியவர்: அதை நீங்கள் பாருங்கள். ஆனால், நல்லது செய்து, அமைதியாக ஒதுங்கி இருக்கிறவனுக்கு ஒரு நல்லதாவது, ஒரு ஆசீர்வாதமாவது கொடுத்தால், அவன் மகிழ்ச்சி அடைவான் இல்லையா?

குருநாதர்: அப்பனே! நன்மையே செய்தால், சிலகாலங்கள் நன்மையை செய்வான், பின்னர் அழித்து விடுவான். ஆகவே, சில கஷ்டங்கள் கொடுத்தால் தான் நன்மை செய்வான் என்பேன் அப்பனே. தெய்வம் அவனுக்கு அனைத்தும் கொடுத்துவிட்டால், போதுமடா என்று ஒதுங்கிவிடுவான், அப்பனே.

அடியவர்: நன்றாக படித்துக் கொண்டிருக்கிற குழந்தையை, மதிப்பெண் குறைவாக வாங்கிவிட்டான் என்று அடித்துக் கொண்டிருந்தால், இன்னும் எப்படியாயினும் அடிக்கத்தான் போகிறார்கள், எதுக்கு படிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடும்.

குருநாதர்: அறிவுள்ள குழந்தை அப்பா! என்ன செய்தாலும் வெற்றி பெற்று விடும் தேர்வில்.

அடியவர்: யார் வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று கவலை இன்றி இருந்தாலுக் கூட, கண் முன்னால் நடக்கிற எல்லாமே .....

குருநாதர்:   கண்ணால் நடப்பது நடக்கட்டும் என்றிரு. குழந்தைக்கு ஒரு அப்பன் இருக்கின்றான், யாங்கள் இருக்கின்றோம், பார்த்துக் கொண்டு இருக்கின்றோம், அது போதும்.

கேள் அப்பனே! உன் கேள்விகளை கேள்! ஆட்டத்தை துவக்கு! பார்ப்போம், நீயா, நானா என்று!

அடியவர்: நீங்கள் தான் ஜெயிப்பீர்கள், இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் என் கேள்விக்கான பதில் கிடைக்க வேண்டும்!

குருநாதர்: இது தான் தவறு என்பேன். என் மகனும் ஜெயிக்கட்டும் என்று!

அடியவர்: அது வேறு விஷயம்! நான் கேட்கிற கேள்வி ஒன்று தான். தர்மம், நீதி, நியாயம், அதர்மம் இவை எல்லாம், தனித்தனியாக பிரித்து பாகப்பிரிவினை போட்டு இவ்வுலகில் உள்ள எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறீர்கள். அதைப்பார்த்து தான் மற்ற குழந்தைகள் படிக்க வேண்டும். அப்படி கூறிய நீங்களே, கண் முன்னாடி, பார்ப்பது எல்லாமே அதர்மமாக இருக்கிறது. இதிலிருந்து, என்ன நல்லது படிக்க எதிர் பார்க்கிறீர்கள்?

குருநாதர்: அப்பனே, ஒன்றும் தேவை இல்லை! கீதையை படியுங்கள் அப்பனே, சரி, அதை படிக்க தேவை இல்லை. வாசகத்தை படிக்கச் சொன்னோம். தேவாரம், இன்னும் இன்னும் அப்பனே பலப்பல இதிகாசங்கள் இருக்கின்றது. யாராவது பின் நல்லதை கேட்டானா அப்பனே. நீயே சொல்லு, உன் கருத்து நியாயம்தான் என்பேன் அப்பனே! 

அடியவர்: இல்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் அத்தனையும் கூறியுள்ளீர்கள். இதே கீதையை நானும் படித்தேன். கடைசில, கிருஷ்ணனை மாதிரியே, நானும் மக்களை வார்த்தைகளால் ஏமாற்றவேண்டும் என்ற மன நிலைக்கு போய்விட்டேன்.

குருநாதர்: அப்பனே, கிருஷ்ணன், எவ்வளவு கஷ்டப்பட்டான் என்று உனக்கு தெரியுமா அப்பா! எவ்வளவு நியாயங்கள் பேசினான். தர்மத்தை நிலை நாட்டினான். ஆனாலும், அவனுடைய பிறப்பு எப்படி போய்விட்டது என்பதையும் கூட. அவன் இறப்பு எப்படி போய்விட்டது என்பதையும் கூட, தெரியுமாப்பா? பின் சொல்கின்றேன் ஒரு காலத்தில் கூட! அதை தெரிந்து கொண்டால், நீ அழிந்துவிடுவாய் அப்பனே! 

அடியவர்: அதை பற்றின யோசனை இல்லை. நான் சொல்வது ஒன்று தான். மனிதனாக இருக்கிற இவன், அவன் கடைசி வரை நல்லவனாக வாழ்வதற்கான வழியை காட்டி, அதை தொடர்ந்து போனால்......

குருநாதர்: அப்பனே! நிச்சயம் காட்டிக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, அவன் நிச்சயம் செய்வதில்லையே. அப்பனே, அதனால் தான் அப்பனே, அடி ஒன்றை யான் அங்கே வைக்கின்றேன். இருந்தாலும் அப்பனே, அவனை அப்படியே விட்டுவிடட்டுமா! அப்பனே! அப்பனே! அவனைப் பார்த்து , மீண்டும் நாலு பேர் தெரிந்து கொண்டு, இப்பொழுது சொன்னாயே, கெடுத்து விடுவார்கள் அப்பனே! அதனால் அப்பனே, கவலையை விடு.

அடியவர்: கவலை பற்றியல்ல, நான் கேட்ட கேள்விக்கான பதில். நீங்கள் சொன்னீர்களே, ஒரு முறை அடித்தால் பரவாய் இல்லை, தொடர்ந்து அடிச்சிண்டே இருக்கீங்க, எந்த ஒரு நல்லது நடக்கவும் வழி இல்லை......

குருநாதர்: அப்பனே! தங்கத்தை செதுக்கினால்தான் அப்பனே அதற்கு மதிப்பு. அதாவது, வைரத்தை ஏன் செதுக்கிக் கொண்டே இருக்கின்றார்கள், கூறு மகனே! கூறுங்கள், அனைவரும் சொல்லுங்கள், இது நியாயமா?

[குழுமி இருந்த அடியவர்கள் அனைவரும் அவர் பக்கம் போய்விட்டனர்!]

அடியவர்: நீங்கள் வந்து, தமிழுக்கே இலக்கணம் எழுதியவர்! உங்களை, பேச்சில், அதுவும், தமிழில் தோற்கடிக்கவே முடியாது. சரியான கேள்வி என்று ஒன்றை கேட்கவே முடியாது. பதில் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். இந்த மாதிரி ஒன்றிரண்டு மனிதர்கள் கூடவும், நான் பழகி இருக்கேன். இல்லை என்று யான் சொல்லவில்லை. 

குருநாதர்: இவ்வளவு பழகி இருக்கின்றாயே, மகனே, எங்களை ஜெயித்துவிடுவானா மனிதன்! கூறு மகனே!

அடியவர்: உங்களை ஜெயிக்க முடியாது. இந்த பக்கத்திலிருந்து பாடம் படிக்கிற மனிதனுக்கு கிடைக்கிற மொத்த அனுபவங்கள், ஒன்றும் சரியில்லையே!

குருநாதர்: அப்பனே! முதலில் சரி இல்லை என்றால் தான் அப்பனே, சரி படுத்த முடியும் அப்பனே! 

அடியவர்: சரி இல்லாத சூழ்நிலையை தான் படிக்கிற ஒரு குழந்தைக்கு கொடுப்பீர்களா?

குருநாதர்: ஒரு அன்னை. குழந்தையிடம் "உணவு அருந்து, அருந்து! என்று முதலில் கூறுவாள். நான் நிச்சயம் அருந்த மாட்டேன் என்று (அடம் பிடிக்க) பளார் என்று ஒரு அடி, பின்னர் நிச்சயமாக அருந்திவிடுவாள்.

அடியவர்: அது, ஒரு நல்ல உதாரணம், சாப்பாடு, குழந்தை என்பது. நான் இனி நேரடியான கேள்விக்கே வருகிறேன்! என் நண்பர்கள், நான் எப்பொழுது அழைத்தாலும் சரி! "அகத்தியர்" என்று கூறி விட்டால், எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவார்கள். நான் பண்ண சொன்னேனா என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது! நீங்க சொல்லி நாங்க பண்ணவில்லை. அகத்திய பெருமானை போய் பார்ப்பது, வியாழக்கிழமை ஆனால் அவரை போய் பார்த்து ஆசீர்வாதம் வாங்குவது, பூஜை, அபிஷேகங்கள், ஆராதனை, நல்லது செய்வது, அன்னதானம் பண்ணுவது என்று எல்லாம் ஒன்றாக இருந்தவர்கள். நான்கு பேர்கள்! ஒரே நேரத்தில் வண்டி விபத்தில் மாட்டிக்கொண்டு, நடு ரோட்டில் கீழே கிடந்தார்கள்........

குருநாதர்: அப்பனே! அவ்வளவுதான் போதும் என்று பிரம்மன் முடிவு கட்டி விட்டானப்பா! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. மனம் கலங்கியது கண்ணீர் சிந்த தான் முடிகிறது... தந்தையே உன்னையே கதி என்று இருப்பவர்களை நீங்கள் காக்க வேண்டும் அப்பா... மும்மூர்த்திக்கும் மேலான சக்தி கொண்டவர் நீங்கள்.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. கவலை பற்றியல்ல, நான் கேட்ட கேள்விக்கான பதில். நீங்கள் சொன்னீர்களே, ஒரு முறை அடித்தால் பரவாய் இல்லை, தொடர்ந்து அடிச்சிண்டே இருக்கீ. அன்ங்க, எந்த ஒரு நல்லது நடக்கவும் வழி இல்லை...... என் மனதில் உள்ளதை அப்படியே கேட்டு உள்ளீர்கள் ஐயா, பொறுக்க முடியாமல் உள்ளது சோதனைகள்... வாய் விட்டு யாரிடமும் கூட சொல்ல முடியவில்லை, புலம்பி அவர்களின் இறை நம்பிக்கையும் குறைந்து விடுவோமே என்று கவலையாக உள்ளது .. என்றாவது விடிவு கிடைக்காதா என்றுப காத்து கொண்டே இருக்கும் பலரில் நானும்.ஒருவன்

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  5. அகத்திய பெருமான் எல்லோருக்கும் உதவ வேண்டும்.ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து பலன் அடைய கூடாது .ஜீவ நாடி படிப்பவர்கள் தங்களை மட்டும் அகத்தியரின் பிள்ளைகளாக நினைக்க கூடாது .ஜீவ நாடியில் வாக்கை உரைப்பதும் மறுப்பதும் குருநாதரின் முடிவு .நீங்கள் எப்படி ஜீவ நாடி பார்க்கும் வாய்ப்பை மறுக்க முடியும். தேவையற்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலுரைக்கும் அகத்திய பெருமான் துன்பத்தில் நீண்டநாள் வாடுபவர்களை புறக்கணிப்பது ஏனோ..புண்ணிய பலத்தால் அகத்தியரோடு நெருக்கமாக உள்ளவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு காண ஜீவ நாடி பார்க்கும் வாய்ப்பை ரகசியமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.புண்ணியம் குறைந்தவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்.அகத்திய பெருமானே தங்கள் முன் யார் ஒருவர் விளக்கேற்றுகிறாரோ அவரின் வாழ்க்கையில் நீங்கள் விளக்கேற்றியே தீர வேண்டும் இந்த ஜென்மத்திலேயே.

    ReplyDelete
  6. வணக்கம் திரு ஜி எம் அவர்களே..... தங்களுடைய பெயரைக் கூட வெளிப்படுத்தாமல் ஒவ்வொரு கமெண்ட் முரன்பாடாக செய்து கொண்டே வருகின்றீர்கள்

    அகத்தியர் ஜீவநாடி சுவடியை மைந்தனை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் என்னுடைய வாக்குகள் கிடைக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டு அதன்படி தான் வீட்டில் கூட தங்குவதற்கு நேரம் கிடைக்காமல் குருநாதர் கூறும் ஆலயங்களுக்கெல்லாம் ஓலைச்சுவடியுடன் சென்று மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? எந்தெந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு திருத்தலம் திருத்தலமாக சுற்ற வைத்து பொதுவாக்குகளாகவும் தனிநபர் வாக்குகளாகவும் குருநாதர் கூறிக் கொண்டே வருகின்றார்.

    திருவண்ணாமலையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கூட ஓலைச்சுவடி படிக்கும் பொழுது அழைத்து வாக்குகள் கொடுத்திருக்கின்றார் நீங்கள் இதுவரை ஜீவநாடி வாக்குக்காக இதுவரை திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு இருக்கிறீர்களா???

    இந்த கேள்விக்கு பதில் உங்களிடம் உள்ளதா

    தேவையற்ற கேள்விகள் என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது குருநாதர் அனைவருக்கும் நல்லவர்களாகட்டும் தீயவர்களாகட்டும் அனைவருக்கும் வாக்குகள் தந்து மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு வருகின்றார்

    புண்ணிய பலன்கள் உங்களுக்கு குறைவாக இருக்கின்றது என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தால் புண்ணியத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் குருநாதர் உங்களை தேடி வருவார்

    சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் தான் மட்டும் தான் அகத்தியன் பிள்ளை என்று ஒருநாளும் எண்ணியதில்லை அனைவரையும் அப்பனே அப்பனே என்று வாக்குகள் கொடுப்பதை படித்தும் நீங்கள் அறியாமையால் இப்படி பேசுவது தவறு

    இங்கு அனைவரும் அகத்தியன் பிள்ளைகள் தான்.

    யாரும் இங்கு ரகசியமாக பயன்படுத்தவில்லை பணமோ தொடர்பு இங்கு குருநாதரை குருநாதர் வாக்குகளை வாங்குவதற்கு உதவுவதில்லை

    புண்ணியமும் உண்மையான பக்தியும் இருக்கின்றவர்களுக்கு குருநாதர் தேடிச் சென்று வாக்குகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் அதை சித்தன் வலைதளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரியும்

    முதலில் நமது துன்பத்திற்கு காரணம் என்ன அதில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை குருநாதர் உபதேசம் மூலம் கடைப்பிடித்து அதிலிருந்து மீண்டு வாருங்கள்.

    புண்ணிய பலத்தோடு குருநாதருடன் நெருக்கமாக உள்ளவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக ஒன்றுமே செய்ய முடியாது அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே குருநாதர் ஒதுக்கி வைத்துவிடுவார் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

    உங்கள் கேள்விகளை நீங்கள் எதிர்பார்க்கும் வாக்குகளை ஜானகிராமன் ஐயா அவர்களிடம் குருநாதரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு கேளுங்கள் அல்லது சித்தன் அருள் வலைத்தளத்தில் கேள்விகளாக அனுப்புங்கள்... குருநாதருடைய அன்பு வாக்குகள் அனைவருக்கும் பொதுவானது அனைவருக்கும் கிடைக்கும் அதை விட்டுவிட்டு பழி சொல்லுதல் முரண்பாடான வார்த்தைகளை கமெண்டில் எழுதுவது போன்ற செயல்களை செய்யாதீர்கள் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் குருநாதர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்.

    அடுத்து வரும் சித்தன் அருள் பதிவை விபத்தில் இருந்து காப்பாற்றிய பதிவை படித்துப் பாருங்கள் பல உண்மைகள் புரிய வரும்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஜீவ நாடி பார்க்க வேண்டும் என்று வாட்சப்பில் மூன்று ஜீவ நாடி வாசிப்பவர்களிடம் கேட்டேன்.ஜீவ நாடி படிக்காவிட்டாலும் பரவாயில்லை.பதிலை தரவேண்டுமல்லவா.. ஜானகி ராமன் ஐயா எண் சுவிட்ச் ஆஃப். தாங்கள் குருநாதர் அருளால் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன்.தங்களைப் போன்றோர் நீண்டநாள் துன்பத்தில் உள்ளோருக்காக குருநாதர் உதவிட வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.முரண்பாடான கருத்துகளை கூறியதற்கு எதற்கு நன்றி.தங்களுக்கு தான் என் நன்றிகள்.

      Delete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete