​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 15 October 2024

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!



[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்!] 

31. அகத்தியர் அப்பா பாதமே போற்றி அப்பா இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகள் கண்ணாடி அணிகிறார்கள் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு மருத்துவம் கூறவும் அப்பா

அப்பனே! பொன்னாங்கண்ணி என்னும் மூலிகையை ஏற்கனவே கூறிவிட்டேன். இதனுடன் சிறு வயது முதலே சிரசாசனம் செய்து வர வேண்டும். இப்போதெல்லாம் கலப்படங்கள் பெருகிவிட்டது.  பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம். கீரை வகைகளை உண்ணச்சொல். எந்த வித நோயும் அண்டாதப்பா!

32. அப்பா லோப முத்திரை அன்னைபற்றி கூறுங்கள் அப்பா!

அப்பனே நிச்சயம் சொல்வேனப்பா. எந்த இடத்தில், எந்நேரத்தில் சொல்ல வேண்டுமோ அப்பொழுது நிச்சயமாக சொல்வேன். அவளது பரிபூரண ஆசீர்வாதங்களப்பா.

33. ஒரு மனிதன் எப்படி தன்னுடைய ஆசைகளில்/மாயையில் இருந்து விடுபட்டு மனதை தீய எண்ணங்களில் (காமம், கோபம், போட்டி, பொறாமை, ஆணவம்) இருந்து அகற்றி வைப்பது

அப்பனே, பற்றற்று வாழ வேண்டும். ஏதன் மீதும் நாட்டம் கொள்ளாமல், திருத்தலம், திருத்தலமாக ஏறச்சொல் அப்பனே. தானாக மாறும் என்பேன் அனைத்தும் கூட, அப்பனே. நாட்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் அப்பனே. அனைத்து இறைவனின் இடங்களை நாட , நாட அனைத்து நாட்டமும் சென்று விடும் அப்பனே. அதனால்தான் நாடு நாடு என்றார்கள். நாடு என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு, நாட, ஓட, நில், பின் நன் முறையாகவே  அதிகாலை 4 மணிக்கு சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்ய, உடல் முறுக்கிவிடும். உடல் சோம்பேறித்தனமாகிவிட்டால், அனைத்து எண்ணங்களும் வருமப்பா.

34. பொதுவாக நமக்கு கிடைக்கின்ற பெரும்பான்மையான உணவுகளில், காய்கறி மற்றும் பழங்களை பழுக்க வைக்க/ விளைச்சல் பெரும் அளவில் கிடைக்க தேவையற்ற ரசாயனங்களை சேர்க்கின்றனர் அதை நாம் எப்படி அகற்றுவது


​நல்ல மஞ்சளையும், உப்பையும் கலந்து சுத்தம் செய்தாலே, இவைகளின் தன்மை அடிபட்டுவிடும். 

35. புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றிலிருந்து எப்படி தற்காத்து கொள்வது


​அறிவியல் வழியாகவே இவைகளை உரைக்க வேண்டும். ஒரு கோல் வந்து கொண்டிருக்கின்றது. அதன் கதிர்கள் மனிதனை  தாக்கும் பொழுது, இவை எல்லாம் தானாகவே மனிதனுக்குள் வந்து விடுகின்றது. இதற்குத்தான் அறிவியல் பூர்வமாக, பூமியின் வேகத்தை அதிகரித்துவிட்டால் போதுமானது! இதற்கு இன்னும் வாக்கு உரைக்கின்றேன், பொறுத்திருந்தால் போதுமானது! உண்ணும் உணவானது, இயற்கையாகவே இருக்க வேண்டும் அப்பனே. செயற்க்கையாகவே இருந்துவிட்டால், நிச்சயம் யாராலும் காப்பாற்ற முடியாதப்பா. 

36.அய்யா, துருவ நட்சத்திரமாக, துருவ மகரிஷியாக இருக்கும் ஒளி மற்றும்
சப்தரிஷி மண்டலத்துக்கும் பிறவா நிலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அந்த பேரொளியை தியானிப்பதால், மனிதனின் ஆத்மா சப்தரிஷிகளின் மண்டலத்துக்கு செல்ல முடியுமா? 

​அப்பனே! அண்ணாமலைக்கு செல்லச்சொல் அப்பனே! அப்பனே நேர் அண்ணாமலையில் நிற்கச்சொல் அப்பனே. அப்பனே! பின் தியானங்கள் செய்து, பின் மேல் நோக்கி பார்க்கச்சொல் அப்பனே. இன்னும் யோகங்கள் கிட்டிவிடும் என்பேன் அப்பனே. ஆத்மா நிச்சயம் சப்த ரிஷி மண்டலத்துக்கு செல்ல முடியும் அப்பனே. இதன் ரகசியத்தை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே. நிச்சயம் சப்த ரிஷிகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள். ஓரிடத்தில் அனைவரும் கூட ஒன்றாய் நிற்பார்கள். அவ்விடத்தில் சென்று தரிசிக்கலாம். முதலில் அண்ணாமலையை சுற்றச்சொல், பின்பு உரைப்பேன்.

37. சென்ற கேள்வி பதில் வாக்கு அதில் """" நான் (குருநாதர்)தியானம் செய்கின்ற குகை பற்றி எடுத்துரைக்கின்றேன்"""" என்று கூறியிருந்தீர்கள் அதைப்பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா தந்தையே?

அப்பனே! நிச்சயம், ரமணன் (ரமணா மகரிஷி) செய்திருக்கின்றான் அப்பனே! அப்பனே! தேடிச்சென்றால் தான் புரியுமப்பா. அவனை தேட தேட, அவனே காண்பித்து விடுவான். 

38. அதிகாலை 4 மணி அளவில் ஞானியர்கள் கண் விழிக்கும்போது அவர்களின் கண்ணீர் துளிகள் ஓதிமலை மற்றும் சில ஆலயங்களில் கண்ணீர் துளிகள் விழுகின்றது என்று கூறியிருந்தீர்கள் அதனை எவ்வாறு சேகரித்து பிறர் நலனுக்காக கொடுப்பது என எடுத்து உரையுங்கள் தந்தையே?

இன்னும் ஒருபடி மேலே சொல்கின்றேன். அவர்கள் எல்லாம், புண்ணிய நதிகளில் நீராட வருவார்கள் அப்பா. ஐப்பசி திங்களில் யான் உருவாக்கிய அனைத்து நதிகளிலும் கூட அனைத்து தேவாதி தேவர்களும் கூட நிச்சயம் நீராட வருவார்கள் அப்பா. நிச்சயம் ஒரு 9 நாட்கள் மூழ்க்கச்சொல், சில கர்மாக்கள் போகும், பின்பு உரைப்பேன்.

39. மருதமலை கோவிலில் மாலை வேளையில் முருகன் வருகிறார் என்று கூறியிருந்தீர்கள்  சரியான கால அளவு எது என்று எடுத்துறயுங்கள் மற்றும் அவ்வேளையில் முருகனின்பரிபூரண அருள் ஆசியை பெற அனுகிரகம் புரியுங்கள் தந்தையே?

அப்பனே! முருகனும் பாம்பாட்டியும் நிச்சயம் பேசிக்கொண்டேதான் இருக்கின்றார்கள் அப்பனே. இவ்விடத்தில் பேசுவார்கள் என்பதும், சரியான நேரமும், கோடியில் ஒருத்தனுக்குத்தான் தெரியும். பார்த்துவிட்டால், பாபமே போய்விடும் என்பேன். நிச்சயம், அறுபடை வீட்டுக்கும் செல்லச்சொல், பிறகு உரைக்கின்றேன்.

40. வளிமண்டலத்தில் இருந்து வரும் மற்றும் ஒளி விழும் இடங்களை(ஆலயங்கள்) பற்றி கூறுகிறேன் என்று கூறினீர்கள். அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாமா தந்தையே?

அப்பனே! இவனை பஞ்ச பூத ஸ்தலங்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும் சென்று வரச் சொல். நிச்சயம் உரைக்கின்றேன். அதுவே போதுமானதப்பா. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

5 comments:

  1. நன்றி ஐயா, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete