​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 October 2024

சித்தன் அருள் - 1700 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 12

 

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1

சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2

சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3

சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4

சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5

சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6

சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7

சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8

சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9

சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10

சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11

( ஓர் அடியவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனுடனே பதில் அளித்தார்கள் கருணைக்கடல். இறையருள் நிரம்பிய இவ் அடியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவ் அடியவர் இது குறித்து கேட்காத போது கருணைக்கடல் அவர்களே அந்த கேள்வியை கேட்டு சில வாக்குகள் உரைத்தார்கள். இது தொடர்பாக சில பொது வாக்குகள்.) 

நம் குருநாதர்:- அப்பனே கேட்டிருக்கலாமே அப்பனே, இவ்வளவு (இறை) ஆசிகள் இருந்து   ஏன் திருமணம் ஆகவில்லை என்று? 

அடியவர் :- ஐயப்பன் எப்போது செய்ய நினைக்கின்றாரோ அப்போது…

நம் குருநாதர்:- அப்பனே இறைவன் இருக்கையில் அனைத்தும் தாமதமாகவே நடை பெறும் என்பேன் அப்பனே. ஏனென்றால் முப்பான் ஐந்து (35), பின் நாற்பது பின் இன்னும் நாற்பது, பின் இன்னும் நாற்பதுக்குள்ளே, பின் ஐம்பதுக்கு மேலே  , அறுபதுக்குள்ளே பின் ஏழுபதற்கு மேலே பல பல இன்னல்களும், சோகங்களும் இருக்கும் அப்பா. அவை எல்லாம் ஒரே முறையில் கொடுத்து விடுவான் இறைவன். அதனால்தான் இறைவன் அனைவருக்குமே பின் இறைவனை நெருங்க, நெருங்க அனைத்தும் தாமதமாகத்தான் செய்வான் அப்பா. அனைத்தும் ( துன்பங்களையும் ) ஒரே நேரத்தில் கழித்து விடுவானப்பா. 

அப்பனே நன்றாக உணர்ந்தாயா அப்பனே? அப்பனே உன் பக்கத்தில் உள்ளவனைக் கேள் அப்பனே. இது போலத்தான் அவந்தனக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. 

அடியவர் :- ( மௌனம் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள்)

நம் குருநாதர்:- கடும் முயற்சி செய்து வெற்றிகள் வெற்றிகள் பெற வேண்டும் என்பது உன்னுடைய விதியப்பா. விதிப்படியே நடந்தால் குற்றமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:- எது செய்தாலும் கடும் முயற்சி எடுக்க வேண்டும். 

நம் குருநாதர்:- அப்பனே இப்படி ஜெயித்தால்தான் அப்பனே, ஆனாலும் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. மனதை விட்டுவிடாதே. அப்பனே இதனால் நன்மைகள்தான் நடக்கும். அப்பனே பரிகாரங்கள் தேவை இல்லை. அப்பனே மன உளைச்சல்தான் உந்தனுக்கு பரிகாரம். 

அப்பனே அறிவை பலமாக்க் கொடுத்து விட்டேன் அப்பனே. அதைச் சரியாக முறைப்படுத்து. அதனால்தான் யானே பொறுமை படுத்துகின்றேன். யானே கொடுத்துவிட்டால் அப்பனே நீ ஆறிவிடுவாய் ( சோம்பல் ஆகி விடுவாய்) அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- உங்களுக்கு அறிவை பலமாக கொடுத்து விட்டார்கள். நீங்க எப்படிதான் முன்னுக்கு வருவீங்க என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார். அவங்க கொடுத்துருவாங்க. ஆனா, நீங்க வேற மாதிரி போய் விடுவீங்க. 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. குருநாதர் பாதம் போற்றி. இதை வழங்கிய உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete