​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 25 October 2024

சித்தன் அருள் - 1711 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-1!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமானை திரு.ஜானகிராமனின் நாடியில் சந்தித்த பொழுது நீங்கள் அனுப்பித்தந்த பல கேள்விகளை கேட்டு அவற்றிர்க்கு பதிலை பெற்று சித்தன் அருள் வலைப்பூ வழி வெளியிட்டோம். இவை எல்லாம் முன்னரே தருவிக்கப்பட்ட கேள்விகள்.

நாடி வாசித்த பொழுது பல கேள்விகள், சூழ்நிலையால் உருவாக, அவைகள் நம் குருநாதரிடம் கேட்கப்பட்டது.  கேள்விகள் ஒரு சிலரது தனிப்பட்ட வாழ்க்கையின் தேடல்கள் என்றாலும், ஏதேனும் ஒரு விதத்தில் பதில்கள் அனைவருக்கும் பிரயோசனப்படும் என்பதால், அவற்றை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து விஷயத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என்று ஒரு எண்ணம். புரிந்து கொள்க.

ஒரு அடியவர்: என்னை சோதிடம் படிக்க வேண்டும் என்கிறார்கள்! தாங்கள் உத்தரவு வேண்டும்!

குருநாதர்: அறிந்தும், சிலகாலங்களுக்கு இப்படியே போகட்டும். கிரக நிலைகள் நல்லபடியாக மாறும் பொழுது, யாமே தேர்ந்தெடுத்து சொல்கிறோம். ஜோதிடம் பார்ப்பவன், ஒரு ஜாதகத்தில் கேதுவானவன் ஐந்து, ஒன்பது பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகனுக்கு, பலன் சொல்லவே கூடாது. ஏன் என்றால், அவர்கள், வாழ்க்கையில் அனைத்தையும், பட்டு, அனுபவித்து இறைவனை வந்தடைய வேண்டும் என்பது விதி. இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதகம் பார்த்து சொல்லப்போக, ஜோதிடம் பார்ப்பவன் அவர்களது கர்மாவை வாங்கிக்கொள்வான், என்பது விதி. இது போல் இன்னும் பல நிலைகள் உண்டு. ஆகவே அமைதி அடைக!

அடியவர்: ஜோதிடத்தை பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கீங்க!  ஜோதிடம் பார்ப்பவனுக்கு, வந்தவனின் கர்மா, முதுகில் ஏறும் என்கிறீர்கள்?

குருநாதர்: அப்பனே! பக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு, நீ நல்லதை கூறு!

அடியவர்: இவருக்கா? சரி! நீங்கள் திங்கட்கிழமை தோறும், சிவன் கோவிலில் அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கி கொடுங்கள்!

குருநாதர்: அப்பனே! சொல்லிவிட்டாய் அப்பனே! நன்மைகளாயிற்று! அவனும் கொடுத்துவிட்டான் அப்பனே! நன்றாகவும், நன்மைகளாகிவிட்டது அப்பனே! மீண்டும் தவறு செய்து கர்மாவை சேர்த்துக் கொள்வான். மீண்டும் தவறு செய்வான், (வரும்போது இதுபோல் பார்த்துக் கொள்ளலாம் என்று), இங்கு யார் ஒருவன் தவறு செய்கின்றான்?

அப்பனே! நன் முறைகளாகவே, அவனுக்கு மதிப்பு கொடுத்து நன்மைகள் சொல்லியிருப்பாய். அடுத்து இனி என்ன நல்லது செய்ய வேண்டும் என அவன் கேட்க வேண்டுமே தவிர, தவறு செய்ய முன் செல்லக்கூடாது! ஆனால் மனிதர் அப்படி இல்லையப்பா. அதனால் தான், மனிதனுக்கு, மட்ட புத்தி என்பேன்.

அடியவர்: சரி! நீங்க அந்த பக்கத்திலிருந்து பார்க்கறீங்க! நான் இந்த பக்கத்திலிருந்து பார்க்கிறேன். நான் ஒரு குருநாதரிடம் ஜோசியம் படிக்க வேண்டும் என்று கேட்டேன். எதற்கு படிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். "என் கண் முன்னாடி எத்தனையோ மனிதர்கள் சிரமப்படுகிறார்கள். ஆதலால், என் நாவில்/வாக்கில் முருகப்பெருமான் நின்று வாக்குரைக்க  அவை பலித்து அனைவரும் நல்லபடியாக வாழ வேண்டும் என்றேன். 

குருநாதர்: அப்படியே சொல்லியிருந்தாலும், நன்மைதான் ஆகிவிட்டிருந்தது. பரிகாரம் செய்து அவன் வாழ்வு நன்றாகிவிட்டிருந்தது. பின்னர் மீண்டும், மீண்டும் அவன் தவறு செய்கிறான்! இதற்கு யார் பொறுப்பு? பரிகாரம் சொல்லி செய்யச்சொன்னவன் தான் பொறுப்பு! ஆகவே, அவனின் மொத்த பாபமும் உன்னிடம் வந்து சேர்ந்தது.

அடியவர்: தவறு செய்கிறவன் தான் அதற்கு பொறுப்பு. ஜாதகம் பார்த்து சொல்பவன் எப்படி பொறுப்பாக முடியும்?

குருநாதர்: வேறு ஏதேனும் ஒரு நல்லதை, பக்கத்தில் இருப்பவனுக்கு உரை!

அடியவர்: சனிக்கிழமை தோறும், வெங்கிடாசலபதி கோவிலில் ஒரு நெய் விளக்கு போடு!

குருநாதர்: அப்பனே! நன்று உரைத்தாய். ஒன்றை கூறுகின்றேன். மெழுகுவத்தி எரியும் பொழுது, வெளிச்சம் பரவுகிறது. மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும், ஆனால், மெழுகு வத்தி தன்னைத்தானே உருக்கிக் கொள்ளும்.

அடியவர்: மற்றவர்களுக்கு வெளிச்சத்தை கொடுத்து, தன்னைத்தான் உருக்கிக் கொள்ளும். சரிதான்! அப்படி உருக்கிக்கொள்ளும் மெழுகுவத்திக்கு புண்ணியங்கள் வந்து சேராதா?

குருநாதர்: வெளிச்சத்தை கொடுக்கிறதே, அதுதான் புண்ணியமப்பா!

அடியவர்: என் சந்தேகத்தை தான் கேட்கிறேன். தர்மம், நீதி, நியாயம் போன்றவை நீங்கள் கற்பித்து அறிந்ததால் வந்த சந்தேகம், இது.........

குருநாதர்: உடலுக்கு ஆத்மா சொந்தமா? ஆத்மாவுக்கு உடல் சொந்தமா? யோசித்துப் பார்த்தால், ஆத்மாவுக்கு உடலே தேவை இல்லை அப்பா! இன்னும் நிறைய ரகசியங்களை யான் செப்புவேன், சில காலங்கள் பொறுத்திருந்தால்.

அடியவர்: அப்படின்னா! இன்னும் சில காலங்கள் நான் உயிரோடு இருப்பேன் என்று கூறுகிறீர்களா?

குருநாதர்: நம்பிக்கை வை அப்பா!

அடியவர்: நம்பிக்கைதான், அதில் தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறேன். இப்பொழுது கூட பாருங்கள், உடம்பு முடியவில்லை, இருந்தும் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறேன்!

குருநாதர்: உங்களில் யாராவது ஒருவர் கூறுங்கள், இவனை பார்த்தால், உடல் நிலை சரியில்லாதவன் போலா பேசுகிறான்?

[கவிழ்க்க காத்திருந்த நண்பர்கள் "ஆமாம்" என்று தலையசைத்தனர்.]

அடியவர்: எனக்குத்தான் தெரியும், உங்களிடம் பேச எத்தனை சிரமப்படுகிறேன் என்று!

குருநாதர்: அப்பனே, அது எனக்கு தெரியாதா என்ன!?

அடியவர்: உங்களுக்கு தெரியும். 

குருநாதர்: தெரிகிறது என்று சொல்கின்றாய் மகனே! தெரிந்தும் விட்டுவிடுவேனா என்ன?

அடியவர்: தெரிந்தும் நீங்கள் விட்டு விடுவீர்கள் என்று நான் கூறவில்லை. கடைசி நூல் முனையாக இருந்து காப்பாற்றுவது நீங்கள்தான் என்று எனக்கு தெரியும்!

குருநாதர்: அப்பனே! அப்படி தெரிந்து கொண்டும் ஏன் இத்தனை கேள்விகள் கேட்க்கின்றாய் அன்பு மகனே!

அடியவர்: சடலத்தோடு பிறந்தது சந்தேகம். 

குருநாதர்: அப்பனே! சந்தேகத்தோடு பிறந்தது சடலம்.

அடியவர்: இரண்டும் ஒன்று தான்!

குருநாதர்: பின் மூன்றும் ஒன்றுதான்!

அடியவர்: சரி! அப்படிப்பட்ட நிலைமையில், சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியது யாருடைய கடமை?

குருநாதர்: அப்பனே, மூன்றுக்கு பதிலளி, பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்!

அடியவர்: மூன்றுக்கு என எதை கூறுகிறார்? புரியவில்லையே! பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்தது தானே சடலம்! 

குருநாதர்:  அறிந்தும் கூட, சிவன், பிரம்மா, விஷ்ணு ஒன்று சேர்ந்ததுதான் சடலம். இன்னும் ரகசியங்களை வரும் காலத்தில் தெரிவிக்கின்றேன்! கூறு!

அடியவர்: சின்ன வயசிலிருந்து எங்களை எல்லாம் வளர்த்து விட்டது எப்படி என்றால், நல்லது செய்தால் நீ நன்றாக இருப்பாய்! என்று.....

குருநாதர்: இப்பொழுதுதான் நீ கெட்டு விடவில்லையே அப்பனே! எத்தனையோ நன்மைகள் செய்து, அப்பனே! மெழுகுவத்தியின் நிலையை கூட எடுத்துரைத்துவிட்டேன் அப்பா. ஆனாலும் அது துன்பத்தை தான் கொடுக்கும். இப்படி இருந்தால் தான் யாங்கள் அருகிலிருப்போம். இன்பத்தை கொடுத்தால், யாங்கள் தூரத்தில் சென்று விடுவோம். இப்பொழுது சொல்! நாங்கள் தொலைவில் சென்று விடலாமா? அல்லது உன் பக்கத்தில் இருக்கட்டுமா?

அனைவருக்குமே தெரிந்திருக்க வேண்டும்................ "பொறுத்திருக்க வேண்டும்!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் இப்போது தான் ஜோதிடம் வகுப்பில் சேர்ந்தேன். என்ன சோதனை இறைவா

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete