29/9/2024 அன்று உலகையாளும் பார்வதி தேவியாரும் ஈசனும் குருநாதர் அகத்தியப் பெருமானும் கூடி நின்று இவ்வுலகம் நன்மை பெற உரையாடி உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: கங்கோத்ரி ஆலயம்.
உத்தர் காசி மாவட்டம்
உத்தர்கான்ட் மாநிலம்.
உலகை ஆளும் என் அன்பானவனை மனதில் எண்ணி!!!!
எண்ணி!! எண்ணி!! உருகி!! உருகி!! உருகியே!!! தேவியே!! பார்வதி தேவியே!! பரப்புகின்றேன் வாக்குகள்!!! மைந்தர்களுக்கு!!!
அப்பப்பா !!!!...... பின் தலைகீழாக ஓடுகின்றான்... மனிதன்!!!
மனிதன் அதாவது பாவம் செய்ய பயப்படுவதே இல்லை!!!
ஆனால் புண்ணியம் செய்யவே பயப்படுகின்றான்!!
இதனால் பின் என் அன்பானவன் நிச்சயம் பார்த்து பார்த்து... பின் சலித்து விட்டான்!!!... தன் பிள்ளைகளைக் கூட!!!
இதனால் எப்படி??...ஏது???.. உலகில் பின் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றெல்லாம்... அகத்தியனும் புசுண்டனும்... இன்னும் அதாவது மூலனும்...(திருமூலர்) பின் அதாவது என் மைந்தன் பின் குமரனவனும்... பின் பிள்ளையோனும்... இன்னும் இன்னும் பின் ஏனைய சித்தர்களும் கூட!!!
ஆனாலும் பின் மனிதன் பின் நாங்கள் அனைவருமே பாவம் தான் செய்வோம்... என்றெல்லாம் ஏங்கி! ஏங்கி! (நினைத்து நினைத்து) அதாவது நிச்சயம்... பின் பாவத்தை தொடர்ந்து செய்து வருகின்றான்!!
ஆனால் பயப்படுவதில்லை.
புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அகத்தியன் வந்தும் உரைக்கின்ற பொழுதும் பின் செவி கேட்பதில்லை மனிதன்.
அதாவது பின் ஆலயங்களுக்கு சென்று சென்று பின் அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம்!! அதாவது இன்னும் பல!! இன்னும் பல ஒரு படி மேலே சென்று நிச்சயமாய் தர்மம் இல்லாமல் நியாயம் இல்லாமல் அனைத்தும் செய்துவிட்டு... நிச்சயம் பின் எங்களுடைய திருத்தலத்திற்கு வந்து நிச்சயம் எதை என்று கேட்டால்...
யாங்கள் எதைத் தருவோம்???
இதனால் கோபமுற்று பின் என் மணாளன் கூட நிச்சயம்....நிச்சயம் பின் அன்பாலே நிச்சயம் அதையும் கூட நிச்சயம் பின் தவறு செய்தவர்கள் அதாவது பின் தன் பிள்ளை தவறு செய்து விட்டால் என்று... பின் தாயவள் ஒதுக்கி வைப்பதில்லை..
ஆனாலும் அதே போலத்தான் நிச்சயம் கோபத்தில் என் அன்பானவன் இருந்தாலும் நிச்சயம் பின் ஓர் முறை பிள்ளைகளுக்கு அவகாசம் கொடுங்கள் அவகாசம் கொடுங்கள் என்றெல்லாம் நிச்சயம் யான்... என் மணாளனிடம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.
ஈசன்
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் வந்தவை எல்லாம் எண்ணி எண்ணி!!!! பின் பார்வதி தேவியே!! கேளும்!!
பின் நீயும் அனைவரையும் கூட பிள்ளைகளாக எண்ணிக் கொண்டு!!!..........!?!?!?!?!
போதும் !!....
அதாவது நிச்சயம் பின் நீ என்னை அமைதி காத்திரு!!! அமைதி காத்திரு!!!.... என்றெல்லாம் நீ கூறிக் கொண்டே இருக்கின்றாய்!!!
ஆனால் மனிதனோ!?!?!?!?!...
எண்ணங்கள் வேறு ! வேறு!!
பார்வதி தேவியே!!! நிச்சயம் இவைதன் எப்படி? பின் சாத்தியமாகும்???? சாத்தியமாகும்???... நீயே!! கூறு!!
பார்வதி தேவியார்
மணவாளனே!!! நிச்சயம் பின் நீதான் படைக்கின்றாய்!!!
அதாவது படைக்கும் பொழுதே.. நீ உணர்ந்து தான் அதாவது.. பின் படைத்து அறிந்தும் கூட.... இவ்வாறு தான் இருக்க வேண்டும்... இவ்வாறு தான் நடத்தல் வேண்டும்... என்றெல்லாம் நீதான் அதாவது முதலிலே உனக்குத் தெரியுமல்லவா!!!
விதியில் என்ன உள்ளது என்பதை எல்லாம் அதை தன் நிச்சயம் சிறிதளவாவது பின் மாற்றியமைத்து...
அதாவது பாவம் புண்ணியம் இவை சரிபார்க்கப்பட்டதே பின் மனிதனுடைய பிறப்பு என்பவை எல்லாம்... மனிதனே அதாவது மனிதனுக்கு தெரியும்.
ஆனாலும் அதிக பாவம் இல்லாமல் பின் அதிக புண்ணியங்களோடு பிறக்க வைக்க வேண்டியதுதானே!???
ஈசன்
தேவியே!!! கேளும்!!!
நிச்சயம் அப்படி ஆராய்ந்து தான் அதாவது...எவ் எவ் ஜென்மத்தில் உள்ள புண்ணியங்கள் எல்லாம் சேர்த்துத்தான் நிச்சயம் பின் ஒருவனை.. பின் பூலோகத்திற்கு அனுப்புகின்றேன்...
ஆனாலும் அறிந்தும் பின் அதை சுற்றி இதைச் சுற்றி கடைசியில் பார்த்தால் பின் அதாவது... அவனவன் பின் எண்ணங்கள் பின் மாறுகின்றது...
பூலோகத்திற்கு சென்று விட்டாலே நிச்சயம் எண்ணங்கள் மாறி விடுகின்றது.
அதாவது எதை எதையோ செய்து விட்டு இன்னும் பாவத்தை கூட்டிக் கொள்கின்றான்.
அதாவது பின் புண்ணியம் பின் அதாவது யானே அறிந்த போதிலும் புண்ணியத்தை பெருக்கிக் கொடுக்கின்றேன்.
ஆனால் அதாவது அனைத்து திறமைகளையும் கொடுத்து அனுப்புகின்றேன்.
பின் தேவியே கேள்!! பின் நீயே அறிந்தவையே... அனைத்தும் தேவியே...
இவ்வாறு அணைத்து தான் அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றேன்..
ஆனாலும் அதை தவறாக பின் அவ் அறிவை தவறாக பயன்படுத்திக் கொண்டு பாவங்களை சேமித்து சேமித்து கடைசியில் பார்த்தால்... அவனே பின் அழுகின்றான்... அதாவது பின் ஏன்??? இறைவா!!! இப்படிப் படைத்தாய்???? ஏன்? எதற்கு?? இப்படி எனை படைத்தாய்?? என்னை நிச்சயம் கொன்றுவிடு!!! என்றெல்லாம் சிலர்!!
சிலர் தேவியே அறிந்தும் கூட ஆனாலும் இறைவனே.. இல்லை என்றெல்லாம்.
ஏனென்றால் பின் அவனவன் செய்த பாவங்கள்... அவனையே கொல்லும்... ஆனாலும் அதை நினைப்பதில்லை... யான் பாவம் செய்து விட்டேனே என்று..!!!
ஆனாலும் பின் இறைவன் இல்லை என்று... இன்னும் ஒரு படி மேல் சென்று இன்னும் சித்தர்களையும் கூட பல ஞானிகளையும் கூட இன்னும் ரிஷிமார்களையும் கூட பின் அனுப்பினேன் இவ்வுலகத்திற்கு...
அதாவது இன்னும் போதனைகள் செய்திட்டு வா மனிதர்களுக்கு என்றெல்லாம்.
ஆனாலும் அதைக் கூட ஒழுங்காக பயன்படுத்தத் தெரியாத மனிதனுக்கு.. பின் இன்னும் குடும்பம் இன்னும் பின் அதாவது பிள்ளைகள் இன்னும் அதை தன் அறிந்தும் கூட... பின் காக்கவா !?!?!?! போகின்றான்????
அறிந்தும் அதாவது அவனவனை அதாவது புண்ணியத்தோடே யான் அனுப்புகின்றேன்... தேவியே!!
ஆனாலும் அறிந்தும் கூட அவனவன் பாவத்தை பின் அதிகமாகவே அழகாகவே சம்பாதித்து அவனவன் வினையைக் கூட... அதாவது இன்னும் சொல்லப்போனால் தேவியே!!! பாரும்!!!!
அதாவது யானும் கருணை உள்ளவன் என்று நீயே அறிவாய்!!!
ஆனாலும் அவ்வாறு கருணை பின் கொண்டு கொண்டு இன்னும் செல்லட்டும் இன்னும் செல்லட்டும் இன்னும் செல்லட்டும் என்று இருந்தேன் யான்.
ஆனாலும் பின் மனிதன் எல்லையை மீறுவதாக!!!.... பின் அதாவது இன்னும் எல்லையை மீறுவனாகவே இருக்கின்றான்.
திருந்துவான்!!..... திருந்துவான்!!!......... என்று பார்த்தாலும் இன்னும் பின் சித்தர்கள் பின் மனதை மாற்றி மாற்றி இன்னும் ரிஷிகள் பின் மனிதர்கள் மனதை பின் தேவர்கள் தேவாதி தேவர்கள்.. என்றெல்லாம் நிச்சயம் பூலோகத்திற்கு சென்று சென்று மறைமுகமாக எடுத்துக் கூறியும்...
ஆனால் தரித்திரம் நிறைந்த மனிதன் அதாவது அறிந்தும் கூட... அறியாதது போல் நிச்சயம் பின் செய்கின்றான்.
தேவியே கேள்!!!
அன்பானவளே நிச்சயம் அறிந்தும் கூட... நிச்சயம் ஒரு தாய்க்கு எவ்வளவு நிச்சயம் பற்று (அன்பு) இருக்கின்றதோ மகன்கள் மீது!! மகள்கள் மீது!!! அப்படித்தான் பின் தந்தைக்கும் இருக்குமல்லவா!!!
கூறு!!!! நீ கூறு!!!
பார்வதி தேவியார்
அறிந்தும் பின் மணவாளனே!!! நிச்சயம் பின் சரி!!!! நீங்கள் சொல்வதெல்லாம் சரி!!!
ஆனாலும் ஏன்??? இவ்வுலகம் நிச்சயம் அழிவு நிலைக்கே செல்கின்றது??????????
ஆனால் சரி!!!!
பின் புண்ணியங்கள் பின் அதிகமாக பின் இட்டிட்டு பின் பிறப்பெடுத்து பின் மனிதனுக்கு அதாவது மனிதனுக்கு பிறப்பும் கொடுத்து விட்டாயல்லவா!!!!
ஆனாலும் பாவங்கள் பின் சேர்க்காதவாறு நிச்சயம் பூலோகத்தில் ஏதாவது செய்யும்!!!! மணவாளனே உன்னை வணங்கி யான் கேட்கின்றேன்!!!
பின் உண்மைதனை கூட கூறு பின் கூறும் மணவாளனே!!!!
ஈசன்
அறிந்தும் தேவியே செப்புகின்றேன்... நிச்சயம்தனை பின் இன்னும் பின் அகத்தியன்... இன்னும் இன்னும் ஏனைய சித்தர்கள் பின் இன்னும் இன்னும் புத்தகங்கள்..... இன்னும் நால்வர்...(சமயக் குரவர்கள் அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர்) இன்னும் எழுதிய நூல்கள் (தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்) அனைத்தும் கூட யார் ஒருவன்? அழகாக ஓதுகின்றானோ!!!!!!!!!! அவந்தனுக்கே அனைத்தும் புரியும்.
அதாவது புண்ணிய பாதையில் செல்வான்!!!!
பின் அப்படியே புண்ணிய பாதையில் சென்றாலும் நிச்சயம் சில வருத்தங்கள் வரும்!!!! வருத்தங்கள் பலமாகவும் வரும்!!!!
ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து நிச்சயம் சென்றால் அவனுக்கு நிச்சயம் யானே கையைப் பிடித்து இழுத்து நன்றாகவே ஆசிகள் கொடுத்து உயர வைப்பேன்.
அறிந்தும் ஆனால் நிச்சயம் கலியுகத்தில் சித்தர்கள் வலங்கள் வந்து வந்து மனிதனுக்கு பின் எடுத்துக் கூறி!! எடுத்துக் கூறி.......... ஆனாலும் மனிதர்கள் திருந்திய பாடு இல்லை!!
தேவியே!!! அதனால்தான் அழிவுகளை யான் ஏற்படுத்தியே தீருவேன்!!!
ஆனாலும் இன்னும் பார்த்தால் என்னையே நமச்சிவாயா!!! இன்னும் சங்கரா!!! இன்னும் இன்னும் பல பல பெயர்களும் இட்டு இட்டு.....
ஆனால் வாய் தான் அழைக்கின்றதே தவிர!!!........
அன்பாகவே (மனதில் இருந்து) பின் அழைக்கவில்லையே!!!!!
ஆனாலும் எது அன்பு???? பின் கூறு!!! தேவியே!!! பின் கூறு!!!
பார்வதி தேவியார்
நிச்சயம் என் மணவாளனே எடுத்துரைக்கின்றேன் !!
சரி!! நிச்சயம் நீ உலகத்தை படைத்து விட்டாய் அல்லவா.. நிச்சயம் அவ்வாறே படைத்தும் கூட அனைத்தும் உன்னால் மாற்ற இயலும்!!! மனிதர்களின் பின் பாவங்களையும் கூட அழிக்க முடியும்!!! அதனால் நிச்சயம் தன் பின் சித்தர்களுக்கும் நீ உத்தரவிட்டு உடனடியாக அவை பாவங்களை நிச்சயம் அழிக்க அதாவது வேரோடு அழிக்க செய்!!!
இனிமேலாவது மனிதர்கள் திருந்தட்டும்!!!
ஈசன்
தேவியே!! நில்லும்!!!
அப்படியெல்லாம் நிச்சயம் ஆகாது!!!!
ஏனென்றால் பாவத்தை யான் நிச்சயம்..... அப்படியே சரி!!! பின் தேவியே!!! நீ நீ சொல்கின்றது போலவே... பாவத்தை யான் அடியோடு அழித்து விடுகின்றேன்.
ஆனாலும் மீண்டும் பின் பழையபடியே பின் அவந்தன் புண்ணியங்கள் இருக்கின்ற பொழுது மீண்டும் அதைத்தான் செய்வான்.
அதாவது முதலில் அறிந்தும் கூட... அதாவது யானும் இதை யோசித்துப் பார்த்தேன்... ஒருவனுக்கு பின் கொடுத்தேன்... அதாவது பாவம்.. செய்துவிட்டான் என்று!!
ஆனாலும் அவர்கள் (குடும்பம் )அனைவருமே பின் என் பக்தர்கள் தான்... இருப்பினும் நிச்சயம் அழுதார்கள்.... அவனுக்கும் நோய் வந்துவிட்டது!!! ஆனாலும் அனைவருமே பின் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று பின் கூப்பிட்டு !கூப்பிட்டு!என்றெல்லாம் அறிந்தும் கூட!!!!
ஆனாலும் மீண்டும் இவன் திருந்துவான் என்றெல்லாம் நிச்சயம் பின் ஒரு வாய்ப்பை நிச்சயம் பின் அதாவது.... அவனும் கூட பின் அதாவது உன் அன்பான மகன் இருக்கின்றானே!!!!!!....... வேலவன் !!!!..... அவனுடைய பக்தன் தான்!!!
ஆனாலும் வேலவனும் வந்து நிச்சயம்... என்னிடம்!!
தந்தையாரே!!!!! நிச்சயம் இவந்தன் அதாவது... இவன் குடும்பமே... எந்தனுக்கு அனைத்தும் சேவித்தது... செய்வித்தது அதனால்... ஒருமுறை நிச்சயம்... அவகாசம் கொடு என்று!!!
சரி வேலவனே!! கொடுக்கின்றேன் என்று யானும்!!
ஆனாலும் யான் கொடுத்தும் விட்டேன்... அனைத்தையும் சரி செய்தும் விட்டேன்!!!
ஆனாலும் மீண்டும் பழைய நிலைக்கே வந்தான்... அதாவது திருடினான் பொய் சொல்லினான்... நடித்தான்.. இன்னும் குற்றங்கள் அதிகமாயின.!!!
ஆனாலும் யான் பொறுத்திருந்தேன்... நேராக..யானே பின் உன் மைந்தன் இருக்கின்றானல்லவா!!!!.......
உன் செல்லப்பிள்ளை!!!!......
கந்தன் இடத்திற்குச் சென்றேன்!!!!
கந்தா!!!!! அவன் உன் பக்தனல்லவா!!
அதாவது என்னுடைய பக்தன் பின்பு தான் அறிந்தும்....
ஆனாலும் நீயும் வந்து இவந்தனுக்கு நல்முறையாகவே செய் என்று நீயும் கூறினாய்..
ஆனால் இவந்தனை பார்த்தாயா!!! என்ன செய்கின்றான் என்று???
ஆனாலும் அறிந்தும் கூட... உன் மகன் பின் அமைதியாகி... அதாவது தலை குனிந்தான்!!!
இப்படித்தான் நிச்சயம்... யான் கொடுக்க தயாராக தான் இருக்கின்றேன்....
தேவியே!!!!.... தேவியே!!!... பின் யான் கொடுக்க தயாராக இருக்கின்றேன்!!!.....
ஆனாலும் மனிதன் குணங்கள் சரியில்லை!!!
பார்வதி தேவியார்!!
நில்லும்!!! நில்லும்!!! மணவாளனே!!!.... தேவாதி தேவனே!!!!....
மனிதர்களின் மனதை சரியாக ஆக்கிவிட்டு நீ கொடுக்கலாம் அல்லவா???
ஈசன்
நிச்சயம் தேவியே!! நிச்சயம் பின் கொடுக்கலாம்... ஆனாலும் மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடுகின்றான்... சென்று விடுகின்றான் மனிதன்!!
அதாவது யான் தான் படைத்தேன்.... ஆனாலும் பின் மீண்டும்.... தலைகுனிய வைக்கின்றான்.... என்னையே!!!
அதனால் இவை தனை எப்படி??? துரோகம் என்று சொல்வதா???? அல்லது பின் அதைவிட மேலான.... நம்பிக்கை துரோகம் என்று சொல்வதா?????...
நிச்சயம் தேவியே நீயும் கூறும்!!!!
அதனால் யானும் கூட நிச்சயம் பின் குணங்களை மாற்றி அனைத்தையும் பின் செய்ய தயாராக.... ஆனாலும் சித்தர்களையும் அனுப்பி அனுப்பி நிச்சயமாய் பின் மாற்ற!!!!
அவை மட்டும் இல்லாமல் பின் அவரவர் அதாவது ரிஷிகளையும் கூட இன்னும் குருமார்களையும் கூட அனுப்பி அனுப்பி மனதை மாற்றி பின்... அமைத்த போதிலும்!!!
ஆனாலும் மீண்டும் அதையே அதே தவறை செய்கின்ற பொழுதுதான்... எனக்கும் கோபம் வந்து...அவந்தனை அழிக்கின்றேன்!!!
அதாவது தேவியே!! நிச்சயம் யானும் கருணை படைத்தவன்!! இது நீ உணர்ந்ததே!!!!! உணர்ந்தவையே!!!!
ஆனால் மனிதன் தான் மிருகம் போல்... நடந்து!!!....
மிருகங்களுக்கும் யான் நல் புத்திகளை தந்திருக்கிறேன் சில சில!!!
ஆனாலும் மனிதனுக்கு கூடுதலாகவே கொடுத்திருக்கின்றேன்... ஆனாலும் பின் மிருகங்களை விட கீழாகவே நிச்சயம்.... எண்ணங்கள் சரியில்லாமல் போட்டி பொறாமைகள்...
என்னை வணங்கியும் கூட!!!
யான் எதிரிலே நிற்கின்றேன்.. நிச்சயம் பின் ஈசன் எங்கு இருக்கின்றான்??? என்று!!!
ஆனால் பின் அவந்தன் நமச்சிவாயா நமச்சிவாயா என்று அனைவரிடத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கின்றான்...
இதனால் மனசாட்சியே இல்லாமல் நிச்சயம் இக்கலி யுகத்தில் திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன்..
அதாவது யான் என்ன செய்யட்டும்???..... தேவியே???
பார்வதி தேவியார்
மணவாளனே நிச்சயம் அறிந்தும்... பின் ஏதாவது செய்யுங்கள் நிச்சயம்... அறிந்தும் பின்... எதை என்றும் அறிய அறிய
ஈசன்
அழைக்கின்றேன்!! தேவியே!!
அழைக்கின்றேன்!!!
நிச்சயமாய் பின் பார்!!!
முனிவரே!!!!!... மாமுனிவரே!!...
மைந்தனே!!!!!... பின் அதாவது அன்பு குழந்தையே!!!!!.....
அகத்தியனே வா!!!!!!!
கங்கோத்திரி ஈசன் பார்வதி தேவியார் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் இரண்டில் தொடரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete