​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 22 October 2024

சித்தன் அருள் - 1707 - பாகம் 12 - கேள்வி-பதில்!

 

[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 

  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1699 -பாகம் 7 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1702 -பாகம் 8 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1703 -பாகம் 9 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1705 -பாகம் 10 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1706 -பாகம் 11 - கேள்வி-பதில்! ]

111. அன்பு தந்தையே ! தன்னை அறிதல் வேண்டும் என்று பலமுறை உபதேசங்களில் கூறி உள்ளீர்கள்.  அதன் செயல்முறை விளக்கத்தை கூறவும்

தந்தையே என்று சொல்லிவிட்டாய்! தந்தை தன் மகனுக்கு செய்யமாட்டானா என்ன?

112. தியானம் என்றால் என்னவென்று தெரியாவிட்டாலும் ஒருவர் எப்படி தியானத்தை தொடங்க வேண்டும்?

அறிந்தும் கூட! உறங்குவதே ஒரு த்யானம். அதைக் கூட சரியாக செய்வதில்லையே! பிறகு எப்பொழுது த்யானம் செய்வான்? யோசிக்க வேண்டும். அப்பாப்பா இதன் தன்மையை நிச்சயம் செப்புகின்றேன்.

113. தியானத்தின் போது ஒரு நபர் சுழல்வது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதற்கான அறிகுறியா? சுழலும் வேகமும் ஆழ்ந்த தியானத்தின் அளவுகோலா?

​ஆழ்ந்த த்யானம், இறந்து விடுவது போல். 

114. தியானத்தின் போது ஒருவர் சுழல்கிறார் ஆனால் அவர்களின் எண்ணங்கள் தற்போதைய நினைவுகளில் இருக்கும். ஏன் இது நடக்கிறது?

​அப்பப்பா! த்யானம் செய்து கொண்டிருப்பான்! ஆயினும், காமத்தை நோக்கி கனவு கண்டிருப்பான். நான் பார்த்திருக்கிறேன். 

115. கண்கள் திறந்திருக்கும் போது புருவத்தில் கவனம் செலுத்தும் போது நான் சுழல்கிறேன் என்றால், ஏன் இது நடக்கிறது?

​அறிந்தும் கூட, இது பற்றி, சில திருத்தலங்கள் இருக்கின்றது. அங்கே சென்றால் போதுமானது. கும்பகோணம் அருகில் உள்ள இரு திருத்தலங்களை சுற்றச்சொல். பின்பு உரைப்பேன்.

116. கணவன் மனைவி உறவில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது?

​நிச்சயம், இருவருமே பிரச்சினை தான். 

117. உயர் ரத்த அழுத்த நோய் 

அப்பனே, சில சில விஷயங்களை எல்லாம் யானே மாற்றுவேன். அதற்காகத்தான், சில ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன்.  

118. கண் வறட்சி நோய் மருந்து கூற வேண்டும் 

​அறிந்தும், அனைத்திற்கும் கரணம், பின்னர் சிரசாசனம் செய்தாலே எந்நோய்களும் வராது. 

119. கீழ்த்தரமான தரித்திர எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்னும்போது அதை மடைமாற்றம் செய்து நல்ல எண்ணங்களாக எண்ணிக்கொள்ள வழி சொல்ல வேண்டும்.

​நிச்சயமாக, ஆலயங்கள், ஆலயங்களாக பிச்சை எடுக்கச்சொல், பின்பு புரியும். என்னுடைய ஆசிகள்.

120.ஐயா நாம் செய்த கர்மவினைகள் ஏன் அதே பிறவியில் முடியாமல் எதனால் அடுத்த பிறவிக்கும் தொடர்கிறது .

​அப்பப்பா! இரவினில் உட்கொள்வது, பின் காலையில்........., அப்பப்பா! இப்படியும் ஒரு மனிதனா? 

​ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை அன்னை லோபமுத்திரை துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete