​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 21 October 2024

சித்தன் அருள் - 1706 - பாகம் 11 - கேள்வி-பதில்!


[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 
  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1699 -பாகம் 7 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1702 -பாகம் 8 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1703 -பாகம் 9 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1705 -பாகம் 10 - கேள்வி-பதில்!]
  
101. முக்தி பெறுவது எப்படி? எந்த வழிபாடு முக்திக்கு வழிவகுக்கும்?

​எவ் வழிபாடும், எவ் பரிகாரமும் (தராது). யாங்களே தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். பொறுமையாக இருக்கச்சொல், நிச்சயம், யாங்களே தேர்ந்தெடுத்து கொடுப்போம். எமது ஆசிகள். இப்பொழுது சொல்லிக்கொடுத்தால், முக்தி தருகிறேன் என்று காசு பண்ணிவிடுவான், மோக்ஷம் கிடைக்கும் என்று செல்வம் சேர்த்து விடுவான். அதை செய்தால், இதை செய்தால் நிச்சயம் மோக்ஷம் கிடைக்கும் என்பதெல்லாம் நிச்சயம் பொய்கள், எதுவும் நடக்காதப்பா. 
 
102. தனம் (செல்வம்)- தானம் - தவம் -முக்தி என நமது வாழ்க்கை முறையை எப்படி அமைப்பது.
எங்களுக்கு வாழ்க்கை முறை நடைமுறையை ஆசீர்வதிக்கவும்.

​அப்பனே! இறைவன் மீது அன்பு காட்டுங்கள், போதுமானது. யான் ஆசீர்வதிப்பேன்.
 
103. உடம்பை நோயின்றி பராமரிப்பது எப்படி?

​உடம்பு என்று ஒன்றிருந்தால், நோய் என்பது வரும், நிச்சயம்.  
 
104. சரியான வழியில் செல்வந்தராக மாறுவது எப்படி? செல்வந்தர்களுக்கான மந்திரம் மற்றும் வழிபாட்டு முறை யாது?

​இவனை/இவளை முதலில் பைத்தியமாக்கி, பின் அனைத்தும் செய்கின்றேன். 

105. கடவுளையும் அகஸ்தியரையும் நேரடியாக பார்க்க முடியுமா?

​முதலில் மின்சாரத்தை தொடச்சொல். பின் பார்ப்போம். 
 
106. எனது உடல்/ஆன்மா/எண்ணங்கள்/செயல் மூலம் எண்ணங்கள்/செயல்களால் எப்போதும் மற்றவர்களுக்கு உபயோகமான மனிதனாக மாற விரும்புகிறேன். எனக்கு வழி தாருங்கள்.

​அனைத்தும் நிச்சயம், வழி தர தயாராகத்தான் இருக்கின்றேன். ஆனால், ஞாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே உண்டு. பின் அங்கும், இங்கும் அலைந்து திரிந்து என்ன லாபம், ஒன்றுமில்லை. பின் அமைதியாகவே, மதுரைதனில் உறையும், மீனாக்ஷி தேவியை சென்று  பார்க்கச்சொல்,பின்பு உரைக்கின்றேன்.

107. பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் எதற்காக அணிகிறோம்? அதனை அணிவதினால் பெரும் பயன்கள் இருக்கும் எனில் பெரும்பாலான ஆண்கள் எதற்காக அணிவதில்லை? மேலும் இந்த நடைமுறை ஆசியாவில் மட்டும் பெரும்பாலும் வழக்கத்தில்உள்ளது . மற்ற நாட்டு மக்கள் (பெண்கள்) அதனை அணிவதில்லை. விளக்கம் விளக்கம் தேவை ஐயா ​!

உடைகளை கூட அணியச்சொல், யார் வேண்டாம் என்றது. 

108.வாஸ்து பற்றி கூறமுடியுமா ஐயா ...

வாஸ்து பார்த்து வீடு அமைக்கிறீர்கள். இறக்காமல் இருக்க முடியுமா? 

109 தமிழ்நாட்டில் எத்தனையோ பழமையான சிவாலயங்கள் பாழடைந்து இருக்கின்றன..புனரமைக்கும் பணிகளை செய்வதற்கு எங்களுக்கு கொடுப்பினை உண்டா ஐயா!

யாங்கள் சொல்லியதை கேட்டாலே, நிச்சயம் உண்டு. யாங்களே நிச்சயம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து, இக்கலியுகத்தில் வழி நடத்துகிறோம். 

110. எனது பணிவான வணக்கங்கள் அப்பனே🙏 ஆட்டோ இம்யூன் நோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. அதுவும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு அமைய வேண்டிய காலத்தில் தாக்குகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை திசை மாறி போய் விடுகிறது. இதற்கு ஆங்கில மருந்தாக ஸ்டீராய்ட் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை மட்டுப்படுத்தும் மருந்துகளையும் தருகின்றனர். இதற்கு பக்க விளைவுகள் அதிகம். இந்நோய் முழுவதும் நீங்க மருந்து அருள வேண்டும் ஐயனே 

அப்பப்பா! கீரை வகைகளை உட்கொள்ளச் சொன்னேன் அப்பா! போதுமானதப்பா. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை துணை

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete