குருநாதர் தொடர்ந்தார்......
குருநாதர்: அப்பனே! அவ்வளவுதான் போதும் என்று பிரம்மன் முடிவு கட்டிவிட்டான். ஆனாலும், யான் தான், அதிலும் கூட பலப்பல வினைகள், போட்டி பொறாமைகள். பிரம்மன் சக்தி மிகுந்தவன் தான், இருந்தாலும், யான் இல்லை என்றால், பின்னர் பிரம்மாவிடத்தில் சண்டை இட்டு உயிரை காப்பாற்றினேன். ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. என் பக்தனுக்கு இவ்வாறெல்லாம் வருமின்றது என்பதெல்லாம் தெரியுமப்பா! ஓடோடி போவேன் பிரம்மனிடத்தில், பிரம்மனே! என்று. பின் அகத்தியனே உன் தொந்தரவு, வந்துவிட்டாயா? அவனவன் கர்மத்துக்கு ஏற்ப பலனை அவனவன் அனுபவிக்கின்றான்! ஏனப்பா, நீ ஓடோடி வந்து கொண்டு இருக்கின்றாய் என்று. நிச்சயம், அறிந்தும் கூட, இவ்வாறு பிரம்மன் கேட்ப்பான். இருந்தாலும், கூட பிரம்மனே! உந்தனுக்கே கூட பல வழிகளில் கூட எழுதத் தெரியவில்லை! இலக்கணத்தை சொல்லிக்கொடுத்தேன் அல்லவா? அதே போலத்தான் என்னை நம்பிக்கொண்டு இருக்கிறானே, மாற்று என்றெல்லாம். ஆனாலும் அவன் சொல்வான், பின் முனிவரே! நீயே அறிவீர்! உன்னாலும் மாற்ற முடியும். ஏன் என்னிடத்தில் வருகிறீர்கள் என்றெல்லாம், ஆனால் என் மீது மதிப்பும், மரியாதையும் தான்.
மானிடம் என்றால், மூன்று கண்டங்கள் நிச்சயம் வருமப்பா! சொல்லிவிட்டேன் அப்பனே. அதில் தப்பிக்க முடிந்தவன்தான், அவன் பரம்பரையே வாழும் என்பேன், அப்பனே! அக்கண்டங்கள் வரவில்லை என்றால் மனிதன் திருந்த மாட்டானப்பா! தவறுகள் செய்து கொண்டே இருப்பானப்பா. அவ்வப் பொழுது கண்டத்தை ஏற்படுத்தினால், நிச்சயம் திருந்துவான். இறைவன் திருந்தும் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றான் அப்பனே! இவ்வாறு சொல்கிறாயே, யான் அருகிலேதான் இருந்தேன் அப்பனே! காத்துக்கொண்டேதான் இருந்தேன் அப்பனே. இவ்வாறு அடிபட்டவான் தான் உயர்ந்து நிற்பான்! அப்பனே! அவ்வளவுதான் என் பேச்சு!
அடியவர்: இந்த பேச்சு, உங்களையே நம்பி, உங்கள் கூட இருந்து கொண்டு உங்களுடைய வார்த்தைகளை கேட்டுக் கொண்டு.........
குருநாதர்: அப்பனே! காப்பாற்றிவிட்டேன், குழந்தை இறந்திருக்க வேண்டியது. ஆனால், நீ என்ன நினைத்திருக்கின்றாய், இறந்து விட்டாள் என்று. இறந்திருந்தால் என்ன? யான் கையை பிடித்து அணைத்துக் கொண்டேன். அப்பனே! இறைவன் செய்வது நல்லதே! ஆனால் மனிதன் தான் முட்டாள் தனமாக யோசிக்கிறான்.
அடியவர்: மனிதன் முட்டாள்தனமாக யோசிக்கிறான் என்று நீங்கள் சொல்லிவிடலா, நான் தவறு என்று சொல்லவில்லை, ஆனால், அவனுக்கு இருக்கிற அனுபவம், அவன் முன்னாடி இருக்கிற நிகழ்ச்சிகள், அவனுடைய அறிவுக்கு ஏற்ற மாதிரித்தான் யோசிக்க முடியும். புரிஞ்சுதா? இதெல்லாம் நல்லது என்று பார்த்து செய்து கொண்டே போயிண்டே இருக்கோம், நீங்கள் பின்னாடியே, மன்னிக்கவும், உங்களை சொல்லவில்லை, பின்னாடி கர்மா அடித்துக்கொண்டே வந்து கொண்டு இருக்கிறது, உதாரணமாக பாருங்கள், இந்த உடம்பு, இந்த உடம்பில் சிதைப்பதற்கு என்ன இருக்கிறது?
குருநாதர்: அப்பனே! எதை என்று அறிய அறிய! உயிர் இருக்கின்றது! அவ்வளவுதான் என்பேன் அப்பனே! அறிந்தும் கூட, ஒரு ஞானியனுக்கு உடம்பு தேவையா என்ன? மகனே, சிந்தித்துக் கொள்! அப்பனே! எங்கெங்கெல்லாம் வந்தாய், எப்படியெல்லாம் வந்தாய், பதஞ்சலி முனிவன் அப்படியே, அப்பொழுதே சொல்லிவிட்டான், இவந்தனுக்கு உடம்பே தேவை இல்லை, என்று! அவன் உன்னை கண்டான் என்பேன் அப்பனே. அவன் நினைத்தான், அதாவது, அவன் உடம்பையும் பார்த்தான், உன் உடம்பையும் பார்த்தான், அப்பொழுது நன்றாக இருந்தது உந்தனுக்கு. இதை யான் ரகசியமாக சொல்வேன் இப்பொழுதும் கூட. சொல்வதற்கில்லை, பொருத்திரு!
அடியவர்: நான் என்ன செய்யா? ஏன் என்றால், கேள்வி கேட்கிற நேரத்தில் "பொறுத்திரு என்று" சொல்லிவிட்டால், நான் எங்கு செல்வது? நான் கேட்க நினைத்த ஒரு கேள்வி என்ன வென்றால், இறைவன் அனைத்தையும் உருவாக்குகிற பொழுது, நல்ல குணங்களை கொடுக்க வேண்டும், நல்ல விஷயங்களை பண்ணவேண்டும் (மனிதன்) என்று நினைக்கிற பொழுது.......
குருநாதர்: அப்பனே! தெரிந்துகொள் அப்பனே! ஒரு குழந்தை பிறக்கின்றது. தந்தையானவனும், தாயானவளும் நாள் புத்திகள் சொல்லித்தான் வளர்க்கின்றனர். ஆனால், வளர, வளர, ஏன் அவ்வாறு போய்விடுகின்றது என்று சிந்தித்தாயா? சிறிது நேரம் சிந்தித்துக்கொள் மகனே! இதனால், இறைவன், நன்றாகத்தான் பிறக்க வைக்கின்றான், மகனே! ஆனால், அப்பனே, வளர வளர அவன்தன் மனதை மாற்றிக்கொள்கின்றான் அப்பனே! ஆனாலும் அப்பனே, இள வயதிலே நிச்சயம் பக்தியை காட்டி, அவனை அணைத்துக் கொள்ளச்சொல், இறைவன், அனைத்தும் கொடுப்பான் அப்பனே! சொல்லிவிட்டேன். இளம் வயதில் ஏதேதோ செய்துவிட்டு, பின் கஷ்டம் வந்தால், பின்பு இறைவா, இறைவா என்று ஓடுவதா? இதனால் என்ன லாபம், அப்பனே!
அடியவர்: இல்லை என்று சொல்லல! நீங்கள் சொல்கிற அந்த விஷயம் ஒரு விதத்தில் நல்லதுதான். ஆனால், எந்த தகுதியும் இல்லாத ஒரு மனிதனுக்கு, தன இள வயதிற்கு திரும்பி போக முடியாது.
குருநாதர்: அப்பனே! எங்களால் முடியுமப்பா! முதியவனையும் இளையவனாக மாற்றலாம், அப்பா! இளமையனையும் கூட முதியவனாக மாற்றலாம் அப்பா! எங்கள் இடத்தில் இல்லாத வித்தையா, அப்பனே. இதை தெரிந்து கொண்டே பேசுவது நியாயமா?
அடியவர்: உங்களால் முடியும், இல்லை என நான் சொல்லல! சாதாரண மனிதனுக்கு, அது கிடையாது. அவன் திரும்பி போக முடியாது. செய்ததை மாற்றி எழுதவும் அவனால முடியாது. செய்த கர்மாவின் பலனை அனுபவிக்க அவன் தயாராகத்தான் இருக்க வேண்டும்.
குருநாதர்: அப்பனே! சரியாக வந்துவிட்டாய். நீயே மாட்டிக்கொண்டாய் அப்பனே! இப்படித்தான் என் பக்தர்கள் அனைவரும் கூட. புண்ணியமே இல்லாமல், என் சிறு புண்ணியத்தை அவர்களுக்கு கொடுத்து, பிரம்மாவிடம் கூறி காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
அடியவர்: என் விஷயத்தில், உங்கள் புண்ணியத்தைக் கொடுத்துதான் காப்பாற்றினீர்கள் என்று சொன்னீர்கள்! அதில், எனக்கொரு கேள்வி இருக்கிறது! என் வாழ்க்கையின் 35 வருடம் நான் பக்தி பூர்வமாக அனைவரிடமும், எல்லாத்தையுமே விட்டு கொடுத்துதான் வாழ்ந்திருக்கேன்.
குருநாதர்: 35 வருடங்கள், அனைத்தையும் விட்டு கொடுத்து பிறருக்காக வாழ்ந்தவன், ரகசியம் சொல்லக்கூடாது எனினும் கூறுகிறேன், ஞானியாக மாறியிருப்பான், அவனுக்கு உடல் ஏது? உணவு ஏது? மனைவி ஏது? பின் சொந்த பந்தங்கள் ஏது? அப்பனே! ஒதுங்கி நிற்பானப்பா, ஞானி! நிச்சயம் உந்தனுக்கு, நிறைய விஷயங்கள் மறைமுகமாகவே உரைக்கின்றேன் அப்பனே!
அடியவர்: நீங்கள், ஞானியின் மனநிலையை சொல்கிற பொழுது, நான் ஒத்துக் கொள்கிறேன், இல்லை என்று சொல்லவில்லை. எனக்கென்று ஒரு மனைவி, குழந்தை, தாய், தந்தை இதை எல்லாம் ஒரு குடும்பமாக கொடுத்த பின்.......
குருநாதர்: அப்பனே! அப்படி சொல்லக்கூடாது! அனைவரையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பா! ஆனால் அனைவரும், தன் பிள்ளை, தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று, இன்னும் நன்றாக வளர வேண்டும் என்று! ஆனாலும், இறைவனை வணங்குவதில்லை மனிதன். இறைவனே! நீ தான் படைத்தாய், அனைத்தும் நீயே சரிசெய் என்று! யாராவது வணங்குகிறார்களா? இல்லை! அதே போலத்தான் மனிதனும் இல்லத்தாளை கொடுத்துவிட்டால், யான் தான் பாதுகாக்க வேண்டும் என்றும். அனைத்தும், பின் அங்கு நிச்சயிக்கப்பட்டுத்தான் இங்கு வருகின்றது. நிச்சயித்தவனுக்கு தெரியுமப்பா, பார்த்துக் கொள்வதற்கு, அன்பு மகனே!
அடியவர்: அது சரிதான், இல்லை என்று கூறவில்லை! ஆனால் நேரத்தை பாருங்கள்! இறைவனுக்கே நேரம் சரி இல்லை போல. திருவண்ணாமலையிலும், திருச்செந்தூரிலும், பழனியிலும், திருத்தணியிலும், எல்லா இடத்திலும், இறைவனை வணங்குவதற்கு, பணம் இவ்வளவு கொடுக்க வேண்டும், பொருள் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பதே, கேவலமான ஒரு மனிதனாக இருக்கிறான். நீங்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
குருநாதர்: அப்பனே! அறிந்தும் கூட, வேடிக்கைதான் பார்க்கின்றேன் அப்பனே! பணத்தை கொடுக்கின்றவனை விரட்டி அடிக்கின்றான் இறைவன்!
அடியவர்: அதெப்படி முடியும்?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete