​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 27 October 2024

சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2






குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த புதுமையான ரகசியங்கள் வாக்கு பாகம் 2

அப்பனே!!!அதற்குத்தான் புண்ணியம்!!! அறிந்தும் கூட!!!

புண்ணியங்கள் வேண்டும் புண்ணியங்கள் வேண்டும் என்பதையெல்லாம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அதாவது அதனால் தான் அப்பனே பல திருத்தலங்கள் ஏன் செல்ல சொல்கின்றோம் என்றால் அப்பனே அங்கங்கு அப்பனே சில கிரகங்களின் தாக்கம் அதிகரிக்க அப்பனே அங்கங்கே பின் எதை என்று கூட கதிர்கள் விழுகின்றதப்பா!!!

அவையெல்லாம் அப்பனே மனிதர் உடம்பில் விழுகின்ற பொழுது அப்பனே அதற்கும் உடம்பிற்கும் சம்பந்தம் உள்ளது என்பேன் அப்பனே!!

 சரியாகவே அப்பனே நல்விதமாகவே விழுகின்ற பொழுது யோகங்களாக மாறி அப்பனே சில தரித்திரங்கள் நீங்கி அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்பட்டு அப்பனே அனைத்து பிரச்சினைகளும் தீர்கின்றதப்பா!!!


அப்பனே அதே போலத்தான் அப்பனே பல வழிகளிலும் கூட முன்னோர்கள் ஏன் எதற்கு முன்னோர்களின் ஆசிகள் வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைக்கின்றார்கள் என்றால் நிச்சயம் அப்பனே அதாவது... ஒருவன் நேற்றைய பொழுதிலே யான் சொன்னேன் அப்பனே ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் அப்பனே அனைவரும் யோகமானவர்கள் இல்லை என்பதை கூட... அதனால் அப்பனே சொல்கின்றேன் இப்பொழுது ரகசியத்தை!!!!

நேற்றைய பொழுதில் குருநாதர் கூறிய வாக்கு 


அப்பனே பல பல மனிதர்கள் ஒரே நேரத்தில் பிறக்கின்றார்கள் என்பேன் அப்பனே 
பல பல எவை என்று அறிய அறிய அப்பனே அப்படி ஒரே நேரத்தில் பிறக்கின்ற அனைவருக்கும் ஒரே ஜாதகமாக இருக்கும் என்பேன் அப்பனே.... 


ஆனாலும் அவர்களுக்கு உயர்வுகளும் தாழ்வுகளும் கூட...

இப்படி ஏன் வருகின்றது??? என்பதை யோசித்தீர்களா அப்பனே?????

புண்ணியங்கள் தான் காரணம் என்பேன் அப்பனே அனைத்திற்கும் என்பேன் அப்பனே!!!...

(அடியவர்களே அதாவது ஒரு உதாரணத்திற்காக சென்னையில் ஒரு நாள்  குறிப்பிட்ட நேரத்தில்  சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சரியாக ஆறு மணிக்கு பல குழந்தைகள் பிறக்கும் அவர்களுக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த நேரத்தின்படி ராசி நட்சத்திரம் ஜாதகம் எல்லாம் ஒன்றாக இருக்கும்.... ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கின்றார்களா?? என்றால் இல்லை!!

 இங்கு ஒருவருடைய பிறப்பும் வாழும் வாழ்க்கையும் அந்த ஆத்மாக்கள் செய்த பாவம் புண்ணியத்தால் தீர்மானிக்கப்படுகின்றது)





நேற்றைய பொழுதில் குருநாதர் உரைத்திருந்தார் அதன் ரகசியத்தை இப்பொழுது பார்க்கலாம்!!!


அதாவது பின் ஏன் இப்பொழுது கூட நீ உயர்வான இடத்தை அடைந்து உள்ளாய் (வட இந்திய அகத்தியர் பக்தர்) என்பதற்கிணங்க!!!... உன் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அவ் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அவ் முன்னோர்களுக்கு முன்னோர்கள் அப்பனே... இவர்கள் எல்லாம் அப்பனே புண்ணிய நதிகளில் நீராடி நீராடி பல திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே நுண்ணுயிரிகளை அதிகமாக பெற்று கொண்டு அப்படியே அவ் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதிகமாகவே அப்படியே அப்பனே பின் உயிரோடு அதாவது அழியாது பாதுகாத்து அப்பனே... அவை தன் அப்படியே பிறக்கும் பொழுது... பிறக்கப் பிறக்க அப்பனே குழந்தைகள் பிறக்க பிறக்க அப்படி நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட!!!

(இங்கு நுண்ணுயிர்கள் அறிவியல் பெயரில் அழியாமல் இருப்பது டிஎன்ஏ மரபணுக்கள் குரோமோசோம்கள் ஜெனிடிக் ஜீன்ஸ் என்பதை புரிந்து கொள்க!!! 
DNA, Genes & Chromosomes)



இதனால்தான் அப்பனே அவை பக்குவமாக மீண்டும் அவ் நுண்ணுயிர்கள் இறக்கக் கூடாது அப்படியே அப்பனே நிச்சயம் பல புண்ணிய நதிகளில் கூட நீராட நீராட அப்பனே நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் அப்பா..

இதுதான் அப்பனே ரகசியம் என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே யான் சொல்லியதை நீ கேட்டாய் அதனால் தான் அப்பனே இன்னும் அப்பனே இப்பொழுது ரகசியங்களை எல்லாம் உரைக்கப் போகின்றேன்!!!


அப்பனே நல் விதமாக இதற்காகத்தான் அப்பனே முன்பு அப்பனே நல்விதமாக ஆற்றோரத்திலும் அப்பனே கடலோரத்திலும் நல் விதமாக பிரார்த்தனைகள் செய்வார்கள் என்பேன் அப்பனே அதிகாலையிலே என்பேன் அப்பனே 

அப்பொழுது நுண்ணுயிர்கள் அப்பனே பலமாகவே பின் இவ்வாறு வந்தடைகின்ற பொழுது அப்பனே ஆரோக்கியத்தோடும் அப்பனே அனைத்து நலன்களும் பெற்று வாழ்ந்தனர் 

ஆனால் இப்போது அது இல்லை அப்பா!!!!


பிரம்ம முகூர்த்த ரகசியம். 

அப்பனே ஏன் ? எதற்கு ? பிரம்ம முகூர்த்தம் என்கின்றார்கள் அப்பனே...

சரியான நேரத்தில் அப்பனே அறிந்தும் கூட சந்திரனிலிருந்து அப்பனே நிச்சயம் அப்பனே பின் அனுதினமும் பின் அதாவது பின் கண்ணுக்கு தெரியாத ஒரு ஒளியானது அப்பனே சூரியனை நோக்கி செல்லுமப்பா!!!


அப்பனே அப்பொழுது பின் அனைத்து கிரகங்களையும் கூட செயலிழக்க செய்யும் என்பேன்  அவ் ஒளியானது..


 அப்பொழுது அனைத்தும் அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக் கொண்டாலும் சரி.... அப்பனே அறிந்தும் கூட என்ன எதை என்று கூட பின் படித்தாலும் அப்பனே பின் வரும் காலத்தில் அப்பனே மிகப்பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றதப்பா!!!!


(பிரம்ம முகூர்த்தம் என்பது நாம் இரவை சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான காலமாகக் கருதினால், இரவின் கடைசி காலாண்டு பிரம்ம முஹூர்த்த நேரமாகும் - அதிகாலை 3:30 முதல் 5:30 அல்லது 6:00 வரை, அல்லது எந்த நேரமாக இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன்பாக மிச்சம் இருக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும்....

இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் சந்திரனிலிருந்து சூரியனை நோக்கி கிளம்பிச் செல்லும் ஒளி ஆனது செல்லும்பொழுது மீதி உள்ள கிரகங்களின் தாக்கத்தை வலுவிழக்க செய்து விடும். அந்த நேரத்தில் கிரகங்களின் பாதிப்புகள் ஏற்படுவதில்லை அதனால் தான் அந்த நேரத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வேண்டிக் கொள்வது 
தியானம் செய்வது!! யோகாசனம் உடற்பயிற்சிகள் செய்வது பிராணாயாமம் செய்வது பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது அதாவது மாணவர்கள் கல்வி படிக்கும்பொழுது மனப்பாடம் எளிதில் ஆகிவிடும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இப்படியே செய்து கொண்டு வரும் பொழுது எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட முடியும்)

இதை யாரும் அறிவதில்லை என்பேன் அப்பனே... இதை பின் எவ் விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!


அப்பனே அது தீபம் போல செல்லுமப்பா!!!


 இதனை தான் அப்பனே வள்ளல் பெருமான் (வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்) கண்டுபிடித்தான் என்பேன் அப்பனே 

பின் இவ் ஒளியானது தான் அப்பனே இறைவன் என்று அப்பனே அவன் புரிந்து கொண்டான் என்பேன். 

அப்பனே இப்பொழுது கூட பல பல வழிகளிலும் கூட அப்பனே விஞ்ஞானத்தைப் பற்றி யான் எழுதி இருக்கின்றேன் அப்பனே பல வழிகளிலும் கூட ஆனாலும் அப்பனே பின் திருத்தலங்களில் வைத்திருந்தேன் அப்பனே தஞ்சை தன்னில் கூட அப்பனே 
(தஞ்சாவூர்) ஆனால் அப்பனே பல பல வழிகளில் கூட அதை தன் அப்பனே பணத்திற்காகவே திருடிவிட்டார்கள் அப்பனே!!!

அப்பனே அழகாகவே இதனால் அப்பனே பல வழிகளில் கூட அப்பனே இதனால் தான் தீப வழிபாடு அப்பனே அறிந்தும் கூட 

அதேபோல் அவை எவை என்று அறிய அப்பனே அவ் ஒளியானது இவ்வாறு செல்கின்ற பொழுது தீபம் போலே செல்லும் அப்பா எரிந்து கொண்டே!!!

ஆனால் அவை கண்களுக்கு தெரியாதப்பா... அதற்கும் அப்பனே பிம்பம் இருக்கின்றதப்பா!!

அதனை நிச்சயம் மனிதனால் எதை என்று அறிய அறிய

நிச்சயம் கண்டுபிடிக்க முடியாதப்பா... இதுதான் அப்பனே ரகசியம் என்பேன் அப்பனே... பின் அதாவது மனிதனுக்கு தெரியாத ரகசியங்கள் இன்னும் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே 

உந்தனுக்கு/உங்களுக்கு அனைத்தையும்  சொல்வேன் நீ அனைத்தும் கற்றுக்கொள் அப்பனே!!


அப்பனே அவை மட்டும் இல்லாமல் சந்திரனின் கிரகத்திலிருந்து அப்பனே அதிகாலையிலே யான் சொன்னேனே... அப்பனே பின் அறிந்தும் கூட... முதலில் கங்கை தன்னில் கூட அப்பனே உற்பத்தியாகின்றதே (கங்கோத்ரி கோமுகி பகுதிகளில்) எதை என்று கூட... அங்கே குள்ளர்கள் வந்து நீராடுவார்கள் அப்பா !!!! அதுதான் அப்பனே அறிந்தும் கூட அவர்களிடத்தில் அப்பனே அவ் அன்பு எதை என்று கூட நிறைந்து...அவ் சந்திரனின் நுண்ணுயிர்கள் அதிகம் அப்பா பின் அனுதினமும் அப்பனே.. பின் அதாவது தட்டில் பறந்து பறந்து வந்து!!!

 (பறக்கும் தட்டு Unidentified Flying Object' UFO (யுஎஃப்ஒ)


(சித்திர குள்ளர்கள் பற்றிய வாக்குகள் குருநாதர் ஏற்கனவே தன் வாக்குகளில் கூறியுள்ளார்

சித்தன் அருள் 1613 அம்பாஜி சக்தி பீடம் 

சித்தன் அருள் 1631 பெங்களூர் சத்சங்கம் .. பதிவுகளில் விரிவாக காணலாம்)

 அப்பனே வந்து வந்து அங்கே பின் அமர்ந்து தியானங்கள் செய்து அப்பனே நன் முறைகளாகவே நீராடி அப்பனே அவ் நீராடுகின்ற பொழுது அது அப்படியே பின் சந்திரனின் கிரகத்தின் தன்மை அப்பனே நிச்சயம் கங்கையதனில் பின் அப்படியே செல்லுமப்பா!!!



 இதனால் அப்பனே பின் பைத்தியக்காரர்களும் கூட வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே கங்கை தன்னில் குளிக்கும் பொழுது புத்துணர்ச்சி பெற்று அப்பனே தீர (ஆழ்ந்து )அப்பனே பின் யோசிக்கும் திறன் உண்டாகுமப்பா!!! அப்பனே!!!


அப்பனே இதே போலத்தான் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட கடல் தன்னில் கூட அதாவது பின் நீர் எவை என்று அறிய அறிய அப்பனே அதிகாலையிலே நிச்சயம் அப்பனே பல வகையிலும் கூட எதை என்று அறிந்தும் கூட பல நுண்ணுயிரிகள் பல வகையிலும் கூட யோகங்கள் என்பதற்கிணங்க அப்பனே எங்கெங்கு கிரகங்களின் தன்மை அப்பனே கூட இதனால் தான் அப்பனே யோகங்கள் இன்னும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் கூட அப்பனே எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலன்களாகவே 

இதனால்தான் அப்பனே எதை என்றும் கூட புரிந்து வாழ வேண்டும்... புரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே பின் நிச்சயம் மீண்டும் மீண்டும் அதாவது பூமிக்கு வந்து வந்து அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இறக்கத்தான் வேண்டும். ஆனால் அறிந்தும் கூட. 

அதனால் பின் அதாவது புண்ணியவான்கள் அப்பனே ஏன் எதற்கு புண்ணியவான்கள் என்கின்றோம் என்று யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே...

நலன்களாகவே அப்பனே இவ்வாறு பின் நுண்ணுயிர்கள் இவ்வாறு கலந்து வந்து கலந்து வந்து பக்திக்குள் நுழைந்து நுழைந்து பல தவங்களும் செய்து செய்து வந்தால் தான் அப்பனே அவ் நுண்ணுயிரிகள் அப்படியே இருக்கும்... தக்க வைத்துக் கொள்ளும் அப்பனே. 

இதனால் தான் அப்பனே யோகங்கள்... 

குருநாதர் உரைத்த ரகசிய வாக்குகள் பாகம் மூன்றில் தொடரும்

ஓம்  லோபாமுத்திரா சமேத  அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete