​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 9 October 2024

சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில் 08-10-2024!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நீங்கள் அனுப்பித்தந்த கேள்விகளுடன் நம் குருநாதர் அகத்தியப்பெருமானை, திரு.ஜானகிராமனின் ஜீவநாடியில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவர் தந்த பதிலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.  

1. அய்யா அடியேன் சிறியோன்... இந்த வினாவிற்கு மன்னித்து அருள வேண்டுகிறேன்... வள்ளல் பெருமான் இந்த ஜீவ அருள் நாடியில் வந்து வாக்குகள், வழிநடத்துதல் கொடுக்க வேண்டுகிறோம்..

அப்பனே! நிச்சயம்! வள்ளல் பற்றி கேட்டானே அவனுக்கு வள்ளல் பற்றி தெரியுமா, என்ன? அவன் மிகப்பெரிய அறிவியிலன் அப்பா! அனைத்து கண்டுபிடிப்புகளும் கூட அவனுக்கு தெரியுமப்பா! இறைவன் எங்கு இருக்கின்றான்? இறைவனை எங்கு, எப்படி சென்றால் காணமுடியும் என்று அறிந்தவன். அனைத்தையும் செப்புவேன்! ஜோதியிலே ஒன்று இருக்கின்றது அப்பா! அதை யார் உணருகின்றானோ, அவனுக்கு முக்தியப்பா! அவன் அறிவியல் வழியாகவே கண்டுபிடித்தானப்பா! ஆனால் மனிதர்கள், ஜோதியை தான் பார்க்கின்றார்களே தவிர இந்த சூட்ச்சுமத்தை உணருவதில்லை.  கோடியில் ஒருவனுக்கே இது புரியுமப்பா. இதை புரிந்து கொண்டால், சத்தமே வராதப்பா!

2. என்னோட அகத்தியர் அப்பாவும் லோப முத்ரா அம்மாவும் நல்லா இருக்குறாங்களானு  கேட்க வேண்டும்

அப்பனே! நன்றா..............க இருக்கின்றோம் என்று சொல். ஆனாலும், அப்பனே! கவலை தான் என்பேன். ஏன் என்றால், மனிதன் குணங்கள் அப்பனே! தடுமாறிச் செல்கின்றது. என் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே! அதனால் அப்பனே, மனது சரியில்லை என்று சொல்!

3. இப்போது pcod,thyroid பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.இதற்கு மருத்துவம் என்ன? இதனால் பல பெண்கள் குழந்தையின்மையால் கஷ்டப்படுகிறார்கள்.இதற்கு மருத்துவம் மற்றும் பரிகாரம் கூறுங்கள் ஐயா.

அப்பனே! ஏன் எதற்கு இவ்வாறெல்லாம் வருகிறது என்பதை கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே! 

நல்லவிதமாக, தினமும் இயற்கை உணவை மட்டும் சமைத்து உண்ணச்சொல். பொன்னாங்கண்ணி கீரை, பிற கீரை வர்க்கங்கள் தினமும் சமைத்து சாப்பிடச்சொல், பிறகு பார்ப்போம்! அப்பனே!

4. ஒரு மருத்துவருக்கு CREATININE குறைப்பதற்கு நல்ல மருந்து சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். அது நல்ல பலனை அளிக்கிறது. இதை பிறருக்கு சொல்லி செய்யலாமா? என வினவுகிறார்.

அப்பனே! சொல்லிக் கொடுத்துவிட்டேன் நானே! பிறருக்கு சொல்லலாம் என்பேன்.  

5. வணக்கம் ஐயா. ஒரு சில வருடங்களாக அகத்தியர் ஐயாவே எமது குரு என்ற பூரண நம்பிக்கையுடன் இருக்கிறேன். சில நாட்களாக வீட்டில் இருக்கும் விக்கிரகங்களுக்கோ, அகத்தியர் அய்யாவின் திருவுருவ படத்திற்க்கோ பூஜை செய்ய மனம் வரவில்லை. மந்திரம் சொல்ல முடியவில்லை. உருவ வழிபாட்டை தாண்டி அருவத்தில் நாட்டம் ஏற்படுகிறது. சரியான நான் நிற்பது எங்கு என்று தெரியவில்லை.தேடி போவது என்ன என்பதும் விளங்கவில்லை. இதற்கு விடை கிடைக்குமா என்பதை அறியேன். தேவையான வழிகாட்டுதல் வேண்டுகிறேன் ஐயா.

அப்பனே! மனம் இருந்தால் ................ மார்க்கம் உண்டு. மனமில்லையேல், தீய சக்தி பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று பொருள். கவலையை விடு. யானே வழி பிறக்கச் செய்கிறேன். பார்த்துக் கொள்கிறேன். செய்ய வேண்டியதை செய்யச்சொல்.

6. என் அருமை தந்தையே, வாராகி அம்மாவின் மகிமைகளை உங்கள் வாக்கில் கேட்க வேண்டும் என ஆசை.

ஒவ்வொரு நேரத்திலும், நவ கிரகங்களுக்கு உதவிட அவ்வப்போது மனிதனை திருத்திட அவதாரம் எடுப்பாள் அவள் அன்னை. இன்னும் நீண்ட ரகசியங்கள் எல்லாம் சொல்வேன் அப்பனே! பொறுத்திரு.

7. ஓம் அகத்தீசாய நம. அகத்தியர் பெருமானே, எவ்வளவு முயன்றாலும் என்னால் புலை கொலையை தவிர்க்க முடியவில்லை அப்பா. 10 நாள்கள் சைவமாக இருந்தாலே மனம் புலாலை நோக்கியே செல்கிறது. தர்மத்தையும் கடைபிடிக்க மனம் தடுக்கின்றது. வழிகாட்டுங்கள் அப்பா. என்னை பக்குவபடுத்துங்கள் பெருமானே.

அப்பனே! இது போல் புண்ணியமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணவில்லை. நிச்சயம் நல்லதே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அதுபோல். நிச்சயம் எல்லோருமே, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனாலும், இந்த நினைப்புதான், பிழைப்பை கெட்டது என்பேன் அப்பா! அதனால்  தான், சித்தர்களையும், ஞானிகளையும் த்யானம் செய்து மனதை கட்டுப்படுத்துவாயப்பா.  இவ்வாசை இப்படியே சென்றால், புலன்களை அடித்து, தன்னை தானே அழித்துக்கொள்ளும் அப்பா.  ஆகவே அப்பனே, தன்னைத்தான் அடக்க முடியாதவன், எதையும் அடக்க முடியாதப்பா. மனதை, உலகத்தை, தன் குழந்தைகளை,  தன் குடும்பத்தை எதுவுமே ஆகாதப்பா.  

8. குருநாதருக்கு பணிவான வணக்கம்.குருநாதரே நான் மாற்று மதத்தை சார்ந்தவன்.வீட்டில் தங்களின் படம் வைத்து வழிபட ஆசை.ஆனால் வீட்டில் மனைவி விரும்பவில்லை சண்டை வருகிறது.ஓம் அகத்தீசாய நம என்று காலை எழுந்தவுடன் சொல்கிறேன்.மேலும் மனதில் நாமஜெபம் சொல்கிறேன்.தாங்கள் ஏற்றுகொள்கிறீர்களா குருநாதரே.என்னை கவனிக்கிறீர்களா குருவே.தங்களை வழிபட வழி கூறுங்கள் தந்தையே.நன்றி குருநாதரே.ஓம் அகத்தீசாய நம!

அப்பனே! எம்மதமும் எங்களுக்கு சம்மதமே! எங்களுக்கு மதம் நிச்சயம் தேவை இல்லை அப்பனே! மனம்தான் தேவை. அப்பனே, அவர்கள் விருப்பம் போல் வணங்கட்டும் அப்பனே! எம்மை வணங்கவில்லை என்று சொல்லவில்லை. நேர்மையோடு வாழுங்கள், நீதியோடு வாழுங்கள்! தங்கள், தங்கள் தர்மத்தை கடை பிடித்து வாழ வேண்டும் சொல்லிவிட்டேன். அவ்வாறு வாழ்ந்தாலே என்னுடைய ஆசிகளப்பா. நான் படம் வைத்து தான் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லையே. எங்கும் சொல்லவில்லை, யான்.

9. குருவே சரணம்!!! உங்கள் அருளாசியால், அடியவனின் அறியாமையை நீக்கிக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அடியவனின் அறியாமையை நீக்கி, தெளிவு பெற அருள வேண்டுகிறேன். என் அறியாமைகளில் சில. வட்டிக்கு பணம் கொடுப்பது அல்லது வாங்குவது பாவமா ? புண்ணியமா ?

பிறவி வட்டியையே யாராலும் கட்ட முடியவில்லை. ஏன் எதற்காக ஒருவன் கடன் வாங்குகிறான். அவன் கஷ்டத்திற்காகத்தானே கேட்கின்றான். அவ் கஷ்டத்திலும், சிறிதளவு கொடு என்று கேட்டால், அவன் வருத்தத்தோடுதான் கொடுப்பான், இனி எப்படி சமாளிப்பது என்று. அப்படி வருத்தத்தோடு கொடுக்கும் போது, அவகதிர்கள் உன்னை தாக்கும் பொழுது நீயும் கஷ்டப்படுவாய், என்பேன் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. அப்பா அகத்தியா அகத்தியா அகத்தியன் தந்தையே தாயே அனைத்தும் நீயே

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete