குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ரகசியங்கள் பாகம் 1 மற்றும் உத்தரவு
வணக்கம் அகத்தியர் அடியவர்களே
துலாம் மாதமான இந்த ஐப்பசி திங்களில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்ததை அனைவரும் அறிவீர்கள்!!!
குருநாதர் ஒவ்வொரு மாதத்திலும் என்னுடைய பக்தர்கள் என்னென்ன செய்ய வேண்டும்???? என்பதை தெரிவித்துக் கொண்டே வருகின்றார்
அப்பனே யான் வாக்குகளில் செப்பிக் கொண்டே வருவதை அப்படியே கடைபிடித்து வர வேண்டும் அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் என்று குருநாதர் தன்னுடைய வாக்குகளில் சித்திரை மாதம் தொட்டு பங்குனி மாதம் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வாக்குகளில் நமக்கு உபதேசம் செய்து வழி நடத்தி வருகின்றார்..
சித்திரையில் சித்திரகுப்தர் வழிபாடு... ஆடியில் பித்ருக்கள் வழிபாடு ஆவணியில் கணபதி வழிபாடு கன்னி மாதமான புரட்டாசி திங்களில் நவராத்திரி தேவியர் நவகிரக வழிபாடு... ஐப்பசியில் புண்ணிய நதிகளில் நீராடல் அப்படியே கார்த்திகை மார்கழி தை என பங்குனி வரை தன் பக்தர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே வாக்குகள் தந்து அதனை செய்யச் சொல்லி வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி கர்மாக்களையும் பாவங்களையும் குறைத்து கஷ்டங்களிலிருந்து மீண்டு வருவதற்கு பல புண்ணிய காரியங்களை செய்ய சொல்லி குருநாதர் நம்மை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்!!
அதன்படி ஐப்பசி திங்கள் துலாம் மாதமான இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும் என்று ஒவ்வொரு வருடத்திலும் யான் உருவாக்கிய நதிகளில் சென்ற நீராட வேண்டும் என்று ஒவ்வொரு வருடத்திற்கும் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என இப்படி படிப்படியாக என்னென்ன செய்ய வேண்டும் என்று வாக்குகளில் உபதேசம் செய்து கொண்டே இருக்கின்றார்.
புண்ணிய நதிகளில் பச்சைக் கற்பூரத்தை இட்டு நீராட வேண்டும் மூழ்கி மூழ்கி நீராட வேண்டும் நதிகளின் நீரின் உள்ளே கண்விழித்து பார்க்க வேண்டும்... எனவும் 2022 ஆண்டு துருவ நட்சத்திரம் சனி பகவான் ஐப்பசி மாதத்தில் என்ன தொடர்பு? என்பதை பற்றியும் அறிவியல் ரீதியாகவும் புண்ணிய நதிகளில் நீராடி விட்டு அதாவது தாமிரபரணி நதிக்கரையில் குருநாதர் உருவாக்கிய நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் வழிபாடு செய்து வர வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்து இருந்தார்.
இந்த முறை புண்ணிய நதிகளில் ஒன்பது நாட்கள் நீராட வேண்டும் என்றும்... நவராத்திரியில் நவதானியங்களையும் உப்பையும் வைத்து வழிபாடு செய்யச் சொல்லி அதனை ஐப்பசி மாதம் வரும் அமாவாசையில் கடலிலோ புண்ணிய நதியிலோ சென்று இட்டு விட்டு நீராடி வரவேண்டும் என்று உத்தரவு தந்திருந்தார்.
திருவனந்தபுரத்தில் பக்தர்களின் கேள்வி பதில் இந்த வாக்கிலும் ஐப்பசி மாதத்தில் புண்ணிய நதிகளில் சப்தரிஷிகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து நீராடுவார்கள்... இதனால் இந்த மாதத்தில் நீங்களும் நீராடினால் சில கர்மாக்கள் குறையும் என்றும் குருநாதர் கூறியிருந்தார்.
... புலஸ்தியர் மகரிஷி பொதிகை மலைவாக்கில் ஒருமுறை குருநாதர் அகத்திய பெருமான் இந்த உலகத்திற்கு புதுமையான விஷயங்களை எல்லாம் வந்து சொல்வார் இந்த உலகத்தை மாற்றுவார் என்று சித்தன் அருள் பதிவு 1353 ல் அகத்தியருக்கு புகழ் மாலையாக வாக்குகள் தந்ததில் கூறியிருந்தது நினைவில் இருக்கலாம்.
அதேபோல் கங்கோத்திரியில் உலகை ஆளும் ஈசனும் பார்வதி தேவியாரும் விவாதம் செய்து வாக்குகள் கூறிய போது ஈசன் குருநாதருக்கு அகத்தியா!!!! புதுப்புது விஷயங்களை கூட இந்த உலகத்திற்கு செப்பு என்று வாக்குகள் கூறி இருந்தார் சித்தன் அருள் பதிவு 1692.
இதன்படி குருநாதர் வாக்குகளில்... மனிதர்கள் இதுவரை அறியாத பல ரகசியங்களை குருநாதர்... வாக்குகளில் கூறியுள்ளார்.
குருநாதரின் வாக்கையே முழுமூச்சாக கவனத்தில் வைத்துக் கொண்டு குருநாதர் சொல்வதை எல்லாம் அப்படியே கடைபிடித்து வரும் வட இந்தியாவில் வசித்து வரும் ஒரு அகத்தியர் பக்தர் குருநாதரின் இந்த வாக்கினை கேட்டு விட்டு அவரால் காவேரி நதிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆவதால் குருநாதரிடம் வாக்குகள் வாங்கி அதன்படி உடனடியாக அருகில் இருக்கும் கங்கை நதிக்கு சென்று அதாவது ஹரித்துவார் கங்கை நதி உற்பத்தியாகி பிரவாகம் எடுக்கும் இடத்திற்கு சென்று நீராடி விட்டு... கருணை உள்ள குருநாதரே தாங்கள் கூறியபடி அடியேன் நீராடி வந்து விட்டேன் என்று குருநாதரிடம் மகிழ்ச்சியோடு வணங்கி ஆசீர்வாதம் குருநாதரிடம் கேட்ட பொழுது
நம் குருநாதர் அகத்திய பெருமான் புண்ணிய நதிகளில் நீராடுவதை குறித்து அதன் தார்பரியம் என்ன அதன் உள்ளே இருக்கும் தேவ ரகசியங்கள்.. என்ன என்பதைப் பற்றி பொறுமையாக விளக்கத்துடன் குருநாதர் எடுத்து கூறினார்.
குருநாதர் புதுமையான பல விஷயங்களை எடுத்துக் கூறுயதை.... குருநாதர் கூறிய ரகசியங்கள் ஒவ்வொரு பாகமாக வெளியே வரும்!!!....
இதில் குருநாதர் கூறிய ரகசியங்களில் இந்த மாதத்திற்கான ஐப்பசி துலாஸ்நானம் நீராடுதல் குறித்து குருநாதர் உரைத்த வாக்குகளை உத்தரவை முதலில் பதிவு செய்கின்றோம் .
துலாஸ்நானம் என்றால் தமிழ் மாதங்கள் 12 சித்திரை வைகாசி வருவதை போல் பன்னிரண்டு ராசிகளையும் வரிசையாக கணக்கிட்டால் ஐப்பசி மாதம் துலாம் மாதமாக இருக்கின்றது குருநாதர் வாக்குகளில் கன்னி மாதம் புரட்டாசி மாதம் தனு மாதம் மார்கழி மாதம் என குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க. சூரியன் துலாத்தில் சஞ்சரிக்கும் இந்த மாதம் துலாம் மாதம் என அழைக்கப்படுகின்றது துலாம் மாதத்தில் செய்யப்படும் ஸ்நானம் துலாஸ்நானம் எனப்படுகின்றது.
அதில் முதலில் புண்ணிய நதிகளில் நீராடுவதன் ரகசியத்தை பற்றியும்.... அடுத்து கந்த சஷ்டி விரதம் இதனை பற்றியும் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் குருநாதர் கூறி இருக்கின்றார்!!
குருநாதர் உரைத்த வாக்குகள் பின்வருமாறு!!!
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! அப்பனே ஆசிகளப்பா!!!
ஏன் எதற்கு பின் நலன்களாகவே கங்கை நதியிலும் கூட அதாவது அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது இவ் ஐப்பசி திங்களில் ஏன் அப்பனே நிச்சயமாய் அப்பனே பின் நீராட.... என்னவென்று... எதற்காக என்று எல்லாம் அப்பனே.... இப்பொழுது உந்தனுக்கு/உங்களுக்கு புரிய வைக்கப் போகின்றேன் அப்பனே!!!!!
அப்பனே அறிந்தும் கூட இதனை அறிவியல் வழியாகவே.... சில நுண்ணுயிர்கள்
(நன்மை பயக்கும் பாக்டீரியாபேஜ் Bps T4 .... இவ்வகையான நுண்ணுயிரிகள் கங்கை நதியில் அதிகமாக காணப்படுகின்றது என்பதை தற்போது அறிவியல் கண்டுபிடித்து இருந்தாலும் இதைல்லாம் சித்தர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து கங்கை நதியின் புனித தன்மையை மகிமையை மானிடர்களுக்கு முன்பே உணர்த்தி இருக்கின்றார்கள்)
அப்பனே நுண்ணுயிர்கள் அதாவது கங்கோத்ரி அதன் மேலே இன்னும் அப்பனே...
( அதாவது கங்கோத்திரி கங்கை நதி பகிரதி நதியாக மேலே இன்னும் 19 கிலோமீட்டர் தொலைவில் கோமுகி என்னும் இடம் இருக்கின்றது அங்குள்ள குகையில் இருந்து தான் கங்கை நதி உற்பத்தியாகின்றது என்று ஓரளவு கணக்கு சொல்லி இருக்கின்றார்கள் கங்கோத்திரி வாக்கிலும் ஈசன் என்னுடைய குகை இங்கிருந்து தொலைவில் இருக்கின்றது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்க!!!... கங்கை நதி அங்கு இன்னும் பல ரகசியங்களை உள்ளடக்கி அங்கிருந்து உற்பத்தி ஆகின்றது அப்படியே மேலே சென்றால் மானசரோவரும் கைலாயமும் இருக்கின்றது)
சில தொலைவில் கூட அப்பனே பின்... ஈசன் அப்பனே பின் பார்வதி தேவியும் கூட ஒளிந்து நின்று அப்பனே நிச்சயம் அனு தினமுமே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அங்கிருந்தே அவந்தன் (ஈசன்) காலடியில் இருந்தே அப்பனே பின் துவங்குகின்றது (கங்கை நதி) அப்பனே!!
இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் அவ்வாறு நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே கங்கை நதி வருகின்ற பொழுது... அவன் காலடியில் இருந்து வருகின்ற பொழுது அப்பனே அவந்தன் இன்னும் அப்பனே அதாவது அப்படி உண்மைதனை கூட எடுத்துரைத்தால் அப்பனே சக்தி மிகுந்தவன் என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே இறைவனை அதாவது நிச்சயம் அப்பனே பின் காந்தகம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அங்கு ஒரு பெரிய காந்தகம் உள்ளதப்பா!!(கங்கை நதி உருவாகும் இடத்தில்) அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா!!
அப்பனே அவ் காந்தகத்தில் அடியில் இருந்து தான் கங்கை நதி வருகின்றது என்பேன் அப்பனே!!! அங்கிருந்து துவங்கும் பொழுது நுண்ணுயிர்கள் அப்பனே பல பல வெளிப்படும் என்பேன் அப்பனே.... அப்படியே இங்கு வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே.... நீராடினால் அப்பனே நிச்சயம் நன்மைகள் பல பல என்பேன் அப்பனே
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது கிரகங்கள் அப்பனே பின் மறைமுகமாக இன்னும் அப்பனே... நவ கிரகங்கள் தான் என்று சொல்கின்றார்கள் அப்பனே... இன்னும் அப்பனே பின் அதாவது அண்டத்தில் இன்னும் பல பல கிரகங்களும் கூட இருக்கின்றது அப்பனே
இதனால் அப்பனே ஒன்றுக்கொன்று உராயும்!!! அதாவது...இவ் ஐப்பசி திங்களில் கூட ஒன்றுக்கொன்று உராய்கின்ற பொழுது அப்பனே பரிசுத்தமான ஆற்றல் என்பது அப்பனே அதாவது கங்கை நதி உருவாகின்றதே... அதாவது யான் சொன்னேனே அவ் காந்தகத்தில் தான் அப்பனே அதில் உராய்கின்ற பொழுது அப்பனே சில சில அப்பனே அதாவது நுண்ணுயிர்களை இவ் காந்தகம் அப்பனே அப்படியே ஈர்க்கும் அப்பா!!
அப்பனே அதாவது இதன் ஈசனையும் கூட பின் சம்மதித்து அதாவது அறிவியலையும் கூட சம்மதித்து உந்தனுக்கு/ உங்களுக்கு சொல்கின்றேன் அப்பனே.... இன்னும் புதுமையான விஷயங்களை உங்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது இன்னும் புரியுமப்பா!!
அப்பனே இவைதன் பின் உராய்கின்ற பொழுது அப்படியே பின் அதாவது இங்கிருந்து அப்பனே எடுத்துக் கொண்டாலே... கங்கை தன்னில் இருந்து அப்பனே கீழே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் அப்பனே இங்கு பட்டு அதாவது அவ் காந்தத்தில் பட்டு... மீண்டும் அப்பனே எவ்வளவு வேகம் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது காவிரியில் கூட அப்பனே பின் அங்கு படும் அப்பா.... அதாவது அங்கு உருவாகின்றதே அங்கு படும் அப்பா....(குருநாதர் அகத்தியப் பெருமானின் தலமான குடகு தலை காவிரியில் துவங்கி காவிரி நதி கடலில் சென்று சேரும் தலங்கள் முழுவதும்)
அதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் அனைத்து... மாதங்களிலும் இப்படி செல்லாதா என்று????...(கேள்வி எழலாம்)
ஆனாலும் அப்பனே இவ் மாதத்தில் தான்... அப்பனே சக்திகள் அப்பனே பின் குவிந்து நிற்குமப்பா... போகப்போக அப்பனே அவை குறைவாகிவிடும் என்பேன் அப்பனே!!!
அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே இறைவனையும் கூட அறிவியலையும் கூட ஒன்றாக இணைத்தோம் என்போம் அப்பனே
அப்பனே அதே போலத்தான் அப்பனே அறிந்தும் கூட அதாவது சில நுண்ணுயிர்கள் அப்பனே நிச்சயம் அதாவது... மனிதர்களின் மூளையை சுற்றி இருக்கும் அப்பா... அப்பனே இதை பின் யாரும் கண்டுபிடிக்க முடியாதப்பா
ஆனாலும் அப்பனே இவ் புண்ணிய நதிகளில் நீராடும் பொழுது.... நதிகளில் அங்கு வரும் நுண்ணுயிர்கள் கூட!!...
இங்கு இருக்கும் (மூளையை சுற்றி இருக்கும்) நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதாவது அப்பனே அவ் நுண்ணுயிர்கள் அப்பனே அதாவது அப்பனே அப்படியே நிற்குமப்பா அப்பனே வேலை செய்யாமல்!!!
திடீரென்று அப்பனே அவ் சக்திகளான... பின் நுண்ணுயிர்கள் வரும்பொழுது (நதிகளில்) அப்பனே இதை தாக்குகின்ற பொழுது இதற்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டு அப்பனே பின் அப்படியே அப்பனே பின் செயல்பட அதிவேகமாக செயல்படுகின்ற பொழுது அப்பனே யோகங்கள் நடக்குமப்பா!!!!
அப்பனே அதற்காகத்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே... பின் அப்பனே முதலில் மூன்று முறை பின் (நதியில் நீராடும் பொழுது) தலை மூழ்கி அப்பனே கண்களில் கூட நிச்சயம் அப்பனே அப்பனே அவ் நுண்ணுயிர்கள் ஈர்க்கும் பொழுது கண்களில் கூட அப்பனே அதாவது எப்பொழுதும் அப்பனே சக்திகள் இருந்து கொண்டே இருக்கும் அப்பா
அப்பனே ரகசியங்கள் யாங்கள் சித்தர்கள் கண்டுபிடித்தோம் அப்பனே ஆனாலும்... அனைத்தும் அப்பனே மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே... இன்னும் ரகசியங்கள் சொல்லப் போகின்றேன் உந்தனுக்கு/ உங்களுக்கு அப்பனே!!!
இதனால்தான் அப்பனே கண்களில் கூட அதாவது சிறிது சிறிதாக நுண்ணுயிர்கள் பின் அழிகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் கண்ணும் அதாவது பார்வை குறைபாடும் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே
இவ்வாறு புண்ணிய நதிகளில் நிச்சயம் அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் அழிந்து கொண்டே போகின்றது இதனால் தான் அப்பனே பார்வை குறைபாடு இதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட நீராட அவ் கண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களுடன் நதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே ஒன்றாக இணையும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே பார்வை அதிகரிக்குமப்பா!!
அப்பனே இதுதான் அப்பனே சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!
அப்பனே இதே போலத்தான் அப்பனே பற்களில் கூட இருக்கும் அப்பா... இதனால் அப்பனே நன் முறைகளாகவே முதலில் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சிறிதளவாவது அப்பனே நிச்சயம் எடுத்து அப்பனே பற்களில் தொட...
(புண்ணிய நதிகளின் நீரை கொண்டு வாய் கொப்பளித்தல்)
அப்பனே இவ் பற்களில் இருக்கும் நுண்ணுயிர்களும் அப்பனே செயல்பட ஆரம்பிக்கும் என்பேன் அப்பனே
அதனால் அப்பனே பற்கள் நன்றாகவே இருக்கும் என்பேன் அப்பனே நோய்களும் வராதப்பா!!!
அப்பனே அதே போல் அப்பனே கங்கை தன்னில் அப்பனே அதிக நுண்ணுயிர்கள் அப்பா இதனால் அப்பனே பின் அதாவது கங்கை தன்னில் குளித்தாலே பாவம் போகும் என்கின்றார்கள் அப்பனே.. இதனால் அப்பனே நிச்சயம் பல பல நுண்ணுயிர்கள் அப்பனே பின் எதை என்றும் கூட அப்பனே அதாவது மனிதன் வளர்கின்ற பொழுது இறந்து கொண்டே இருக்கும் அப்பா
(மனித உடம்பில் இருக்கும் நுண்ணுயிர்கள் செல்கள் மனிதர்கள் வளர வளர அவை இறந்து கொண்டே இருக்கும்)
அப்பனே ஆனால் கங்கை தன்னில் நீராடினால் அப்பனே நிச்சயம் அப்பனே மீண்டும் அவ் நுண்ணுயிர்கள் நுண்ணுயிர்கள் கூட அப்பனே அதாவது மனிதர்கள் உடம்பில் இருக்கும் நுண்ணுயிர்கள் கூட நீராடும் பொழுது அப்பனே பின் அதாவது உராய்கின்ற பொழுது அப்பனே மீண்டும் புத்துணர்ச்சி பெற்று அப்பனே பின் இளமை போல் காட்சியளித்து அப்பனே மீண்டும் யோகங்கள் பிறக்கும் அப்பா!!!
அப்பனே இதனால்தான் அப்பனை கைலாயம் என்கின்றார்கள் எதை என்று புரிய புரிய அப்பனே அங்கு பின் எவை என்று கூட அனைத்து கிரகங்களும் கூட அப்பனே நிச்சயம் உராய்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இளமை யோகங்கள் அப்பனே அதாவது அறிந்தும் கூட நதிகளில் கூட அப்பனே கங்கை நதியில் கூட நீராடி கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் அவ் நுண்ணுயிர்கள் அப்பனே அதாவது பிறக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் கூட பல கோடி நுண்ணுயிர்கள் பின் கண்களுக்கு தெரியாமலே!!!
இதனால் அப்பனே சிறிது சிறிதாக அழிகின்ற பொழுது அப்பனே அதாவது அவ் நுண்ணுயிர்கள் சரியாகவே அப்பனே பின் அதாவது அனைத்து நுண்ணுயிர்களும் கூட உயிருடன் இருக்கும் பொழுது தான் அப்பனே... கிரகங்களின் தாக்கங்களும் கூட அப்படியே எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிகின்ற பொழுதும் கூட அப்படியே யோகங்களாக மாறி அப்பனே நிச்சயம் அப்பனே பின் பன்மடங்காக உயரும்.
இதன் தொடர்ச்சியாக ரகசியங்கள் வாக்கு பாகம் இரண்டில் வெளி வரும்.
இவ் வாக்கினை அடுத்து 24/10/2024 காசியில் கங்கை நதியில் குருநாதர் அடியவர்களுக்கு
தந்த உத்தரவு!!
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!
அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் ஏன் புண்ணிய நதிகளில் நீராடச் சொன்னேன்???? என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் பல பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே
சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இவ் ஐப்பசி திங்களில் கூட அப்பனே நன் முறைகளாகவே புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே நிச்சயம் அப்பனே பின் சில பாவங்கள் கரையுமப்பா
அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிவியல் ரீதியாகவே யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே
(மேலே குருநாதர் கூறிய ரகசிய வாக்கு)
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு அப்பனே பின் நிச்சயமாய் அப்பனே பின் சந்தோசமாகவே பின் நிச்சயம் அனைத்தும் பின் அதாவது செல்களும் கூட அதாவது அப்பனே பின் சிறு சிறு நுண்ணுயிர்களும் கூட அப்பனே அப்படியே ஆடும் பொழுது அப்பனே அதை தக்க வைக்க அப்பனே நிச்சயம் பின் முருக பெருமானை கூட சரியாகவே!!!
(கந்த சஷ்டி விரதம்)
( 2/11/2024 ஐப்பசி 16 சனிக்கிழமை முதல் 8/11/2024 ஐப்பசி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஸ்கந்த சஷ்டி விரத நாட்கள்)
அதாவது நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே பின் ஏன் எதற்கு என்று பின் ஐப்பசி மாதத்தில் கூட விரதத்தை அதாவது கந்த சஷ்டி விரதத்தை அப்பனை ஏன் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது...அவ் நுண்ணுயிர்கள் நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு ஆடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் இன்னும் அதிகமாகவே... (உணவுகள்) உட்கொண்டால் அப்பனே இன்னும் அப்பனே உடம்பிற்கு கேடுகளப்பா!!!
இதனால் அப்பனே பின் அதிகமாகவே வளரும் தன்மை அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் அப்பனே சில சில அப்பனே பின் அதாவது சரியாகவே முருகப்பெருமானை வணங்கிட்டு அப்பனே சரியான உணவுகளை அதாவது பழங்களை கூட எடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே போதுமானதப்பா
(கந்த சஷ்டி விரத நாட்களில் அதிக அளவு உணவை உண்ணாமல் இயற்கையான பழங்களை உண்ணுதல் வேண்டும்)
அப்பனே தெளிவு பெற யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே
அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் அருணகிரி அழகாக முருகனை நோக்கி!!! அப்பனே பின் பாடி உள்ளான் அப்பனே
(திருப்புகழ்)
அவ் பாடல்களையும் கூட அப்பனே பின் ஒவ்வொரு நாளும் அப்பனே நிச்சயம் பின் விரதத்தில் பாடி வர நன்று என்பேன் அப்பனே
அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அனுதினமும் அப்பனே பின் அதாவது அறுபடை வீடுகளையும் கூட அதாவது மனதில் வேண்டிக்கொண்டு!!! அப்பனே அங்கு இருக்கும் முருகனை மனதில் மனதார வேண்டிக் கொண்டு அப்பனே பின் நிச்சயம் பின் என்ன?... வரங்கள் எதை என்று அறிய அறிய... சாரும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அழகாகவே இன்னும் இன்னும் அப்பனே...
(கந்த சஷ்டி விரத நாட்களில் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்றும் வழிபாடு செய்ய முடியும். அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி அறுபடை வீடு முருகனை நினைத்துக் கொண்டு முருகனை மனதில் நிறுத்தி நமது நியாயமான கோரிக்கைகளை அதாவது வரங்களை வேண்டிக்கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும் )
நிச்சயம் அப்பனே இன்னும் கர்மா தான்... அதாவது பாவம்தான் அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே.. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே சில சில பின் அதாவது அப்பனே பின் தகர்வு அதாவது நிச்சயம் அப்பனே
அதாவது அப்பனே நிச்சயம் அதாவது நீக்கிவிட அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் அப்பா
அதாவது அப்பனே பின் சிலசில வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் துன்பங்கள் அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட வந்து இருக்கும் என்பேன் அப்பனே
அதனால் அவற்றையெல்லாம் அகற்றி நிச்சயம் வாக்குகள் உரைத்து அப்பனே நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்தி அப்பனே நீங்கள் வேண்டியதை அப்பனே நிச்சயம் யான் கொடுத்திடுவேன் அப்பனே
இதனால் குறைகள் ஏதும் இல்லை அப்பா... அப்பனே நிச்சயம் அப்பனே ஆசிரியன் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுக்கின்ற பொழுது அவ் மாணவன் சரியாகவே ஆசிரியன் பேச்சை கேட்டு வந்தாலே போதுமானதப்பா!!
அனைத்தும் அப்பனே நிச்சயம் அப்பனே புரிந்து கொள்வான் மாணவன் கூட... ஆசிரியனுக்கும் கூட சந்தோஷங்கள் அப்பனே.. இதனால் அனைத்தும் செய்திடுவான் அவ் ஆசிரியன் கூட
இதனால் அப்பனே நிச்சயம் யான் சொல்லியதை பின் சரியாகவே கடைப்பிடித்து வந்தாலே போதுமானதப்பா இன்னும் பலமாக வாக்குகள் செப்பி அப்பனே விதியின் பின் ரகசியத்தைக் கூட எடுத்துரைப்பேன் அப்பனே.
இதனை சரியாக செய்க!!!!
அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பா இங்கிருந்தே அப்பனே!!
ஈசன் ஆசிகளும் பார்வதி தேவியின் ஆசிகளும் கூட அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் உண்டு உண்டு என்பேன் அப்பனே.
அதுமட்டுமில்லாமல் அப்பனே இன்னும் இன்னும் பின் (நவம்பர் 1 ஐப்பசி அமாவாசை) அமாவாசை திதிகளில் கூட
இயலாதவர்கெல்லாம் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட இல்லத்தில் கூட அப்பனே நல்விதமாகவே அவர்களுக்கும் உணவை கொடுத்து மகிழ்வீர்களாக!!!
(அமாவாசை அன்று நவதானியத்தையும் குப்பையும் கடலிலோ ஆற்றிலோ சென்று கரைத்து விட்டு வழிபாடு செய்து விட்டு வந்து வீட்டில் உணவை சமைத்து இயலாதவர்களை வீட்டிற்கு அழைத்து உணவை பரிமாற வேண்டும்)
அப்பனே நிச்சயம் ஆசிகளப்பா ஆசிகள்!!! மீண்டும் பின் விவரிக்கின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDelete