​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 19 October 2024

சித்தன் அருள் - 1702 -பாகம் 8 - கேள்வி-பதில்!


[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 
  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!
  முன் பதிவு - சித்தன் அருள் - 1699 -பாகம் 7 - கேள்வி-பதில்!]

71. தியானம் , தவம் செய்கின்ற போது உடலில் எம்மாதிரி மாற்றங்கள் நிகழும் , விஞ்ஞான  பூர்வமாக விளக்குங்கள் . தியானம் , தவம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று அறிவியல் ரீதியாக கூறுங்கள் .

அறிந்தும், அறிந்தும் கூட, இதை பற்றி, திருத்தலத்தில் வைத்து உரைக்கின்றேன் என்று சொல்.

72. கோள்களின் தசா  புத்தி என்பது எவ்வாறு பிரிக்கப்பட்டது , ஒவ்வொரு கோள்களுக்கும் இத்துணை வருடங்கள் என்பது எதன்  அடிப்படையில் குருவே ?

அப்பாப்பா! இதன் அடிப்படை தத்துவத்தை இடைக்காடன் வந்து சொல்வனப்பா. அனைத்தும் உண்டு, அனைவருக்குமே. என் பக்தர்கள் அனைத்தும் தெளிவு பெற வேண்டும் என்றுதான், அனைத்தும் புரிய வைப்பேன். கவலைகள் இல்லை.  

73. இக்கலியுகம் எத்துணை ஆண்டுகள் நீடிக்கும் ?

அப்பப்பா! அதை பற்றியும் சொல்வேன் யான். மனிதனிடத்தில் தான் உள்ளது. அதை பற்றியும் ரகசியமாக உரைப்பேன்.

74. அய்யா! ஒரு கேள்வியை சமர்ப்பிக்கிறேன்! இந்த வருட கடைசியில், இயற்க்கை பேரழிவுகள் நிறைய நடக்கும் என்று சொல்கிறார்கள்! உண்மையா?

நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே! பின்னர் அனைவரும் சொல்கின்றார்கள். உண்மை நிலை புதிரானது. கிரகங்கள் படியும் கூட, ஒரு பெரிய கிரகம் பூமியை நெருங்குகின்றது. அதன் மண்டலத்திலிருந்து விலகினால், மனிதன் முதல் அத்தனையும் கூட........ விதியை ஆராய்ந்து சொல்ல வேண்டும் அப்பனே! ஆனாலும் இதனை மாற்றத்தான் போராடிக் கொண்டு இருக்கின்றோம். இதனால் தான் அப்பனே, மனிதன் போராடவில்லை அப்பனே. இருந்தலும், புத்திகள் இல்லை அப்பனே. பொறுத்திருந்தால், பெரிய அளவில் எதுவும் வராமல் இருப்பதற்க்கே, எங்கள் முயற்சிகள், அப்பனே! அதனால், கவலையை விடு.

75. அப்படிப்பட்ட ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி?

​அப்பனே! யாங்கள் இருக்கின்றோம், இப்புவியில் வேகத்தை நிச்சயம் அதிகரிக்கச் செய்ய வேண்டும். குறைந்து விட்டால் அப்பனே, மலைகளும், காடுகளும், அனைத்தும், அப்படியே ஓடுமப்பா. காலகாலமாக மனிதன் எண்ணத்திற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு. மனிதன் என்ன செய்கிறானோ அதற்க்கு ஏற்ப இறைவன் கொடுப்பான். அதனால், கவலையை விடுங்கள் அப்பனே, யங்கள் இருக்கின்றோம் அப்பனே. 

76. இறை நாமங்களை ஜெபிக்க ஜெபிக்க உடலில் எம்மாதிரி மாற்றங்கள் நிகழும் ?

​நல் மனதோடு இறை நாமங்களை ஜெபிக்க ஜெபிக்க, நினைத்தது எல்லாம் நிறைவேறும். மனது சரியில்லாதவன் எதை செப்பினாலும் வீணப்பா.

77. கோவில்களில் நடக்கிற விஷயம் மனதை நிறையவே பாதிக்கிறதே!

அப்பனே! இறைவனே பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கின்றான். உனக்கென்ன கவலை. இவை எல்லாம் இறைவன் திருவிளையாடல் என்பேன். அவ் நாடகத்தில் தேர்ச்சி பெறுவதும், தோல்வி பெறுவதும் இறைவனுடைய செயல்கள். மனிதன், தேர்வு எழுதிக் கொண்டு இருக்கின்றான் அப்பனே! அதில் வெற்றியா, தோல்வியா என்பதை இறைவன் தான் தீர்மானிக்கிறான். கவலையை விடு.

78. இந்த மாதிரி நீங்கள் சொல்கிற பொழுது, கோவிலுக்கு போகும் பொழுது, எதிர்பார்ப்பில்லாமல், இறைவனை மட்டும் பார்க்க முடிந்தால் போதும் என்கிற எண்ணத்தோடு போகிறவனுக்கு கூட நிறைய அளவுக்கு மோசமான அனுபவங்கள் கிடைக்கறது!

அப்பனே! கலியுகத்தில் என்னென்ன நடக்க வேண்டும் என்பதை எல்லாம் அறிந்தும் கூட, இறைவன் அருகில் இருந்தால், கண்டு கொள்ள மாட்டார்கள் அப்பா. அப்பனே, அது மட்டுமல்லாமல், கடல் அலைகளும் வருமப்பா! அது மட்டும் அல்லாமல், மலைகளாலும், மனிதன், மனிதன் சண்டைகளாலும், அநியாயமாகவும், பின் பொய் சொல்பவனாகவும், இன்னும் கர்மத்தை சரியாக பயன் படுத்தாதவனாகவும், அப்பனே, இன்னும் இன்னும் அறிந்தும் கூட அழிவுகள், அப்பனே! மனிதன் எப்பொழுதெல்லாம் எல்லை மீறுகின்றானோ, அப்பொழுதெல்லாம் இறைவன் எல்லை மீறுவானப்பா. இது யார் தவறு?  

79. ஒவ்வொரு கிரங்களுக்கு உரிய அணுக்கள் ஒவ்வொன்றாக மனிதனின் உடலில் உள்ளன என்று கூறியிருந்தீர்கள். அது ஒவ்வொன்றும் தத்தமது தசா புத்தியில் பலம் பெற்று ஆட ஆரம்பிக்குமா  குருவே ?

​அப்பனே! நிச்சயம் உண்டு என்பேன், அப்பனே! ஆனால் இவற்றுக்கான தகுதிகள், எவ் இடத்தில் என்று உரைக்கின்றேன். அப்பனே! நிச்சயம், யாங்கள் கை விடப்போவதில்லை அப்பனே. இதனால், தெளிவு பெறவே, யான் பலமாக செப்பி வருகின்றேன் அப்பனே. யான் பார்த்துக் கொளகின்றேன், நன் முறைகளாகவே. அப்பனே! சூரியனார் கோவில் சென்று இறைவனை நல்முறைகளாகவே வணங்கி, ஒரு மணி நேரம் அமர்ந்து த்யானம் செய்து, பின்னர் மங்களாம்பிகையை வணங்கி அருள் பெற்று, திருவெண்காடு சென்று தரிசனம் செய்து, சீர்காழியில் இருக்கும் அஷ்ட பைரவரையும் வணங்கி வரச் சொல், பின்பு உரைப்பேன். 

​80. ஒரு நிகழ்வு  /விடயம்  ஆரம்பத்தில் மிகவும் பிடித்தது ஆகி பின்னர் அதுவே பிடிக்காமல் ஆகி சலிப்பு அடைவதற்கு என்ன காரணம் , அணுக்கள் பழையது ஆவது காரணமா அல்லது அது சமயம் அணுக்கள் மறைந்து போகின்றனவா .

​அப்பனே! அறிந்தும் கூட. சர்க்கரையை உட்கொண்டு இருந்தால் என்னவாகும் அப்பனே. அப்பனே! தக்க வைக்க, மனிதனின் பங்கு நிறையவே உள்ளது. வரும் காலத்தில் இதனை பற்றி எடுத்துரைப்பேன். 

​ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete