பழனி மலை வாக்கு பாகம் 2 தொடர்கின்றது!!!
முருகனை பாருங்கள் அப்பனே!!!
எவை என்று அறிய அறிய இரும்பு மனிதனைப் போலே இருப்பான்.... இப்பொழுதெல்லாம் செயற்கையாக (ஹியூமன் ரோபாட்ஸ்)...
ஆனாலும் அப்பனே உடையை அப்பனே போட்டு விட்டால் அப்பனே நிச்சயம் சாதாரண மனிதனாக இருப்பான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே பின் இப்பொழுது பின் கண்டுபிடிக்கும் அதாவது எதை என்று அறிய அறிய மின்சார மனிதனை அப்பனே...(Humanoid robots) எதை என்று அறிய அறிய போகன் எப்பொழுதோ... அமைத்து விட்டான் என்பேன் அப்பனே
அதாவது முருகனை பாருங்கள் என்பேன். அப்பனே எதை என்று அறிய முருகனை அப்பனே... பார்த்தாலும் மனிதனைப் போலவே இருப்பானப்பா!!!!
அப்பனே ஆனால் உடை அணிந்து விட்டால் அப்பனே சாதாரண மனிதனாக மாறிவிடுவான் அப்பா...
அப்பனே எடுத்துரைத்துக்கொண்டே!!!!!!!!! அதாவது முருகன் சொல்லிக்கொண்டே..!!!!!! எதை என்று அறிய அறிய!!.....
'''''''என்னுடைய வேடம்... இவ்வளவுதான்!!!.... சிறிது நாள் தான் என்றெல்லாம்!!!...
அப்பனே முருகன்!!! அவன் காண்பித்துக் கொண்டே இருக்கின்றான்!!!
ஆனால் மனிதனோ எதை என்று அறிய அறிய.... அவந்தனுக்கே அதாவது .
. அப்பப்பா!!! பார்த்துக் கொள்ளுங்கள்!! தெரிந்து கொள்ளுங்கள்!!!
என்னுடைய எவை என்று அறிய அறிய என்னுடைய வேடமே சிறிது காலம் தான். அதாவது.. சில மணி நேரம்தான்... மாறுகின்றது... பின் அனைத்தும்... எதை என்று கூட ராஜகோலம்.. இன்னும் எதையெதையோ கோலம் கடைசியில் பார்த்தால் ஒன்றும் இல்லாமல் போகின்றது என்றெல்லாம்!!!!
(பழனி முருகனுக்கு
ராஜ அலங்காரம் வைதீக அலங்காரம் பால சுப்பிரமணியன் அலங்காரம் வேடன் அலங்காரம் என அனுதினமும் வேடங்களில் அலங்கரித்து தரிசனம் தந்தாலும் கடைசியில் ஆண்டி கோலத்தில் அதாவது சன்னியாசி அலங்காரம் கௌபீனம் அணிந்து தண்டம் ஏந்தி தரிசனம் கோலம்..... கடைசியில் இதுதான் என்பதை முருகனின் இந்த கோலம் உணர்த்துகின்றது)
ஆனால் மனிதனோ இதையெல்லாம் உணர்வதே இல்லை அப்பா.... அப்பனே மனிதனின் வாழ்க்கையும் இப்படித்தானப்பா!!!
குழந்தையாக பிறக்கின்றான்... அப்பனே இன்னும் வளருகின்றான்... அப்பனே திருமணம் செய்கின்றான்
அப்பனே பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய... தன்னால் (என்னால்) முடிந்ததா என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் அப்பனே இல்லையப்பா!!!
இல்லை!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே... மனிதனுக்கு என்னென்ன தேவையோ???? இறைவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான்...
ஆனால் அதை மனிதன் உணர்வதே இல்லை... அவ்வளவுதான் என்பேன் அப்பனே.... எதை என்று புரிய புரிய
இதனால் அப்பனே தன்னைத் தானே உணர்ந்து கொள்ளுங்கள்...
நீங்கள் யார் ?? என்று தெரிந்து கொண்டால் அப்பனே நீங்கள் யார் என்று அப்பனே தெரிந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா புண்ணியங்கள் வேண்டும்!!!
அவ்வாறு புண்ணியங்கள் இருந்தால் அப்பனே நிச்சயம் யாங்கள் வருவோம் உங்களிடத்தில் தேடி என்பேன் அப்பனே
அதாவது உங்கள் அனைவருக்குமே... எதை என்றும் புரிய புரிய அப்பனே... எதை என்று அறிய அறிய. குருவானவன் மறைமுகமாக இருந்து இயக்கிக் கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே
ஏன் இந்த கவலை????
எதை என்று புரிய புரிய
ஆனாலும் மீண்டும் திருடனே அப்பனே... எவை என்று அறிய அறிய...
முருகா எவை என்று அறிய அறிய உன்னிடத்தில் பக்திகளே இல்லையே.... மனிதன் ஏமாற்றுகின்றான்... பின் யான் திருடன் என்று ஒத்துக் கொள்கின்றேன்
ஆனால் மனிதனோ உன்னை நினைத்து நினைத்து அவை வேண்டும் இவை வேண்டும் என்று உன்னையே ஏமாற்றுகின்றார்களே முருகா.... என்றெல்லாம் அவ் திருடனும்... முருகனை நோக்கி பின் ஓடோடி மலையேறினான்..
அறிந்தும் அறிந்தும் முருகா முருகா ஏமாந்து விடாதே!!! ஏமாந்து விடாதே!!!!....
மனிதன் உன்னை கேட்பதெல்லாம்... அவை தா!!! இவை தா !! என்று
ஆனால் தந்துவிட்டால் உன்னையே பின் மறந்து விடுகின்றான்... யான் பார்த்தேன் யான் பார்த்தேன் என்று..
ஆனால் முருகன் பலமாக சிரித்தான்!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய
அப்பனே.... பார்த்தாயா எதை என்று அறிய அறிய திருடனுக்கும் ஒரு மனம் இருக்கின்றதப்பா அங்கு
அப்பொழுது எவை என்று கூட... எதை என்று அறிய அறிய..... திருடனுக்கு கொடுப்பானா?
மற்றவர்களுக்கு??????!!!!!.....
அப்பனே..... நீங்களே சிந்தியுங்கள் என்பேன் அப்பனே!!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய மீண்டும் கீழே இறங்கி வந்தான்...அவ் திருடன்
ஆஹா!! எதை என்றும் புரிய புரிய பின் முருகனுக்கே இவ்வளவு சோதனைகளா??? நிச்சயம் மனிதன் ஆனாலும்.... பின் மனசாட்சி உறுத்தியது!!!
யானும் மனிதனே தான்!!! எதை என்று அறிய அறிய ஆனாலும் முருகனை இப்படி ஏமாற்றுகின்றார்களே???? எதை என்று அறிய அறிய நகைகள் வேண்டும் பணங்கள் வேண்டும் இன்னும் அனைத்தும் வேண்டும் என்று... நிச்சயம் கொடுத்து விட்டால் முருகனையே மறந்து விடுகின்றார்களே
இன்னும் இன்னும் வேண்டும் என்று சொல்கின்றார்களே என்றெல்லாம்
ஆனாலும் திருடனுக்கும் ஒரு மனம் அப்பனே!!!
இவ் மனம் தான் இவ் மனதை தான் இறைவன் பார்க்கின்றானப்பா!!!
அப்பனே அதே போலத்தான் அப்பனே மனம் உயர்வாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே...
நிச்சயம் தாழ்வானதாக இருக்கக் கூடாது என்பேன் அப்பனே... அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய இப்படித்தான் இக் கலியுகத்தில் அப்பனே எவை என்று கூட பக்தியும் பொய்யாக்குவான் என்பேன் அப்பனே மனிதன்
அப்பனே ஏதோ ஒரு பின் சுயநலத்திற்காகவே அப்பனே... எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட வாழ்ந்து வருவான் என்பேன் அப்பனே... தன் சுயநலத்திற்காக பின் வாழ்ந்து வந்தால் அப்பனே இறைவன் பின் எதையுமே செய்ய மாட்டான் அப்பா
மற்றொருவர் நலனை யார் ஒருவன் விரும்புகின்றானோ... அவர்கள் நிச்சயம் உயரத்தில் இருப்பார்களப்பா!!!
இதனால் தன்னை பற்றி சிந்திப்பதை நிச்சயம் அப்பனே விட்டு விடுங்கள்.... அப்பனே உங்களைப் பற்றி இறைவன் தான் சிந்திக்க வேண்டும்....
சொல்லிவிட்டேன் அப்பனே...
எதை என்று புரிய புரிய... புரிந்து கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.... எம்முடைய ஆசிகளப்பா அனைவருக்குமே!!!
அப்பனே இன்றும் உங்களை யான் பார்த்தருளினேன் அப்பனே!!! அனைவருக்குமே ஆசிகள்.... முருகனும் பின் வள்ளி தெய்வானையோடு வந்து பின் பார்த்திட்டான் அப்பனே... ஆசிகள்... ஆசிகள்!!!
(பழனி மலையில் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யா சுவடி படிக்கும் பொழுது உடன் இருந்த அடியவர்களுக்கு குருநாதர் தந்த ஆசிர்வாதம்)
அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய மீண்டும் மீண்டும் திருடன் அழுது கொண்டே!!! இருந்தான்!!!
பின் கீழே இறங்கி வந்து இவ்வாறெல்லாம் எவை என்று கூட... முருகனை ஏமாற்றுகின்றார்களே முருகனை ஏமாற்றுகின்றார்களே... என்றெல்லாம்...
ஆனால் அப்பனே யாருக்காவது எதை என்றும் அறிய அறிய... முருகா எதை என்று கூட நீ தான்... எடுத்துக் கொண்டாய் எங்கள் நகைகள்... உந்தனுக்கே சொந்தம் என்று யாராவது சொன்னானா????
(அதாவது பழனி மலைக்கு வந்தோம் இங்கு நடந்தது முருகனின் செயலே!!! முருகனே கொடுத்தார் முருகனே எடுத்துக் கொண்டார் என்ற மனோபாவம் வரவில்லை யாருக்கும். எங்களிடமிருந்து பறிபோனதை எல்லாம் முருகா உந்தனுக்கே சொந்தம் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை)
அப்பனே இல்லையப்பா
அப்பனே மீண்டும் அழுது கொண்டே அத் திருடன் முருகா உன்னை ஏமாற்றுகின்றார்கள் மனிதர்கள்... ஏமாற்றுகின்றார்கள் மனிதர்கள் என்றெல்லாம் அவ் திருடனும் எதை என்றும் அறிந்து...!!
மீண்டும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய மீண்டும் மலை மீது ஏறினான்.
ஆனால் இம்முறை ஒன்றுமே பேசவில்லை... முருகனிடம்!!!
அழுதான்!!!! முருகா உன்னை ஏமாற்றுகின்றார்கள் மனிதர்கள் என்று சொன்னான்!!
அப்பனே இது போல் யாராவது சொல்பவர்கள் உண்டா???
சொல்லுங்கள் நீங்களே அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே சொல்வதே இல்லை
ஆனால் முருகனுக்கும் எதை என்று அறிய அறிய... தெரியுமப்பா அனைத்தும் கூட
அதனால் மீண்டும் முருகா உன்னை ஏமாற்றுகின்றார்கள்... இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தானே தவிர... ஆனாலும் மீண்டும் இல்லத்திற்கு சென்றான் மௌனத்தோடு... அழுது கொண்டே!!!..... இவ்வளவு நகைகளையும் கூட இவ்வளவு பணங்களையும் கூட... யான் எங்கு??? வைப்பேன்???
எதற்காக?? எதை என்றும் அறிய அறிய... பின் இவ்வளவு நகைகளையும் திருடினேன்!! எதை என்று அறிய அறிய அதாவது... எங்களுக்கும் இவைகள் உபயோகப்படவே இல்லை பின் யாருக்காவது உபயோகப்பட வேண்டும் என்றாலும்!!... நிச்சயம் அவர்களும் ஒழுங்காக இல்லை!!.. என்றெல்லாம் யோசித்தான்!!!
நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட இதனால்.... பாருங்களப்பா!!!
இவன் மனது எதை என்று கூட... ஆனால் திருடினான் அப்பனே!!!... ஒத்துக்கொள்ளுங்கள் நீங்களே எதை என்று அறிய அறிய....
ஆனால் அவந்தனுக்கு அங்கு ஆசைகள்... இருந்ததா??????
பாருங்கள்!!!!
எதை என்றும் அறிய அறிய எதற்காக?? திருடுகின்றோம் என்பதை தெரியாமல் அவன் திருடி விட்டான்!!... அவ்வளவுதான்!!
ஆனால் மீண்டும் கொடுத்து விடலாம் என்று....
ஆனால் முருகா முருகா என்று சொல்ல வேண்டும் என்று... எதை என்றும் புரியப் புரிய ஆனாலும்... நிச்சயம் பின் இவை எல்லாம்... தேவையில்லை என்று
ஆனால் இவையெல்லாம் வீண்... அவர்களுக்கு சென்றாலும் அவர்கள் ஒழுங்காக பின் இதை வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று......அவ் குடிசையை அதாவது அவ்வளவு நகைகள் பணத்துடன் எதை என்று அறிய அறிய சில எண்ணெய்களை ஊற்றி எரிக்க.... அதாவது இத்தோடு செல்லட்டும் அனைத்து தீவினைகளும் என்று நிச்சயம்... எரிக்க!!! எரிக்க... எவை என்று
ஆனாலும் எரிக்க முற்பட்டான்
ஆனால் முருகன் விடவில்லை...
பலத்த காற்று.. மழையும் கூட!!
ஆனாலும்.... முருகா!!! என்ன சோதனை இது???? என்றெல்லாம்
ஆனாலும் அப்பொழுதும் கூட முருகனை நினைத்தான் அவ் திருடனப்பா!!!
அதனால் இங்கு திருடன் நல்லோன் (நல்லவன்) என்றெல்லாம் அப்பனே... எவை என்று கூட மனிதனுக்கு மனிதன் அப்பனே பின் கூறிக் கொள்வது... தவறே என்பேன் அப்பனே!!
யாங்கள் முடிவெடுக்க வேண்டும்!!!!
யார்? திருடன்???? யார்? நல்லவன் ???? என்று !!!!
அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மனிதனோ அப்பனே ஏதோ செய்து விட்டால் திருடன் என்று சொல்லி விடுவான்!!!
ஆனால் அப்பனே அப்படி எல்லாம் நிச்சயம் பேசக்கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்று கூட... அவர்கள் எதை எதையோ செய்கின்றார்களே அவர்கள் மட்டும் நன்றாக இருக்கின்றார்களே என்றெல்லாம்... அப்பனே மனிதன் பேசுவான் அப்பா... அதுவும் தவறு என்பேன் அப்பனே... எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது....
""""குணங்களுக்கு ஏற்பவே இறைவன் கொடுக்கின்றானப்பா!!!.....
ஏனென்றால் அப்பனே உங்களை படைத்தவன் இறைவனப்பா!!!
எப்பொழுது??? எதை தர வேண்டும்?? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தெரியுமப்பா!!!
அப்பனே அதனால் பின் எதை என்று அறிய அறிய அப்பனே உங்கள் கைகளில் எதுவுமே இல்லையப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் வருகின்ற பொழுதும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் எதுவுமே சொந்தமில்லாமல் அப்பனே.. உடம்பை மட்டும் !!....
அப்பனே.... போகும்பொழுது கூட... எதுவும் சொந்தமில்லாமல் அப்பனே அதாவது இப்பொழுது சட்டைகள்... அணிந்து உள்ளீர்களே!!!....... அதையும் கூட அறுத்துவிட்டு... அப்பனே எவை என்று அறிய அறிய தூக்கி வீசி விடுவார்கள் என்பேன் அப்பனே!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது... யார்? உங்களை பாவம் என்று பார்க்க வேண்டும் என்றால் இறைவன்தான் பார்ப்பானப்பா!!
ஐயோ பாவமே... இவனை அனுப்பினோமே பூலோகத்திற்கு!!!
இவன் தெரியாமல் வாழ்ந்திட்டானே.... முட்டாள் மனிதனே.... வாழ்ந்திட்டாயே!!!!..... இப்படி!!!.. என்று!!!
உங்களுக்காக கடைநாள் வரை யார் அழுவார்கள்?? என்றால் இறைவன் மட்டுமே!!!...
அப்பனே... அழலாம்!!!......மனைவி அழலாம்!!! அப்பனே
பிள்ளைகள் அழலாம்!!
ஆனாலும் ஓர் மாதம் இரு மாதம் அல்லது... ஒரு வருடம்!!!............. அல்லது இரு வருடம் என்று... அழலாம்...
ஆனால் அப்பனே அப்படி இல்லையப்பா... சித்தர்கள் யாங்கள்....
உங்கள் பின்னாலே!!!! யாங்கள் !!!
இப்படி வாழத் தெரியாமல்... வாழ்ந்து விட்டீர்களே என்றெல்லாம்... ஓடோடி வந்து மீண்டும்... பிறப்பெடுத்து... எவை என்று அறிய அறிய வந்தாலும்... அதாவது முன் ஜென்மத்திலே இவன்... தெரியாமல் வாழ்ந்திட்டானே.....
இச் ஜென்மத்திலாவது யாங்கள்... கற்றுக் கொடுப்போம் என்று...
இதுதான் அப்பனே... குருவின் லீலை என்பேன் அப்பனே...
யாங்கள் தேடி வருவோம் என்போம் அப்பனே.... அதனால் உங்களுக்கு பக்குவங்கள் கொடுத்து!!!...
பிறப்பே !!!...... வேண்டாம் என்று அப்பனே!!!!... மனித பிறப்பே வேண்டாம் எதை என்று அறிய அறிய அதாவது சில பாவங்களையும் கரைத்து புண்ணியங்களையும் பெருக்கி அப்பனே... எவை என்றும் அறிய அறிய அப்பனே.. கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் யாங்கள் என்பேன் அப்பனே
அதனால் உங்களை யாரும் இங்கு பாவம் என்று பார்க்க மாட்டார்களப்பா!!!!
இறைவன் தான் கடை நாள் வரையிலும் கூட... அதாவது இவ் ஆன்மாவுக்கு எதை என்று கூட பாவம் என்று இறைவன் தான் பார்ப்பானப்பா!!!
அதனால் அப்பனே மனிதர்கள் பின்.... வேடம் (நாடகம்) தான் என்பேன் அப்பனே
அப்பனே இவ் வேடத்தை எதை என்றும் அறிய அறிய மீண்டும் மீண்டும் !!!
அப்பனே அத்திருடன்.... முருகனை நோக்கினான்... முருகா ஏமாந்து விட்டாயே என்று தான் கூறினான்... அறிந்தும் கூட எதை என்று கூட
மீண்டும் கீழே இறங்கினான்...
ஆனாலும் அத்திருடனுக்கு பின் எவை என்றும் புரிய புரிய ஒன்றுமே இல்லை எதை என்று அறிய சொந்த பந்தங்கள் இல்லை... எதை என்றும் அறிய அறிய ஆனாலும்.. பின் மீண்டும் யோசித்தான்...
நிச்சயம் அனைவருக்கும் கொடுத்து விடுவோமா என்று.. அறிந்தும் எதை என்று புரிய புரிய....
ஆனால் சரி!!! ... கீழே உட்காருவோம்... பார்ப்போம்!!!!... பின்... பிச்சை ஏந்துவோம்!!!.... யார் ஒருவன்?? நம் தனக்கு பிச்சை இடுகின்றானோ!?.... அவந்தனுக்கு... இதைக் கொடுப்போம் என்று!!! நம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று!!! என்று!!
ஆனாலும் பின் பிச்சை தாருங்கள்!!!!... பிச்சை தாருங்கள்!!!... என்று பின் அனைவரிடமும் கூவிக்கொண்டே இருந்தான்... அதாவது அழைத்துக் கொண்டே இருந்தான்.. அனைவரிடத்திலும் கூட...
ஒருவன் வந்தான்... ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தான்...
பின் சந்தோஷம் அடைந்தான்!!
ஆனாலும் பின் திருடனோ!? எதற்காகப்பா??? கொடுக்கின்றாய் என்று கேட்டான்!!!!
பின் நீ வாழ்வதற்கு!!! எதை என்றும் அறிய அறிய
ஆனால் பின் திருடனோ!? எதை என்றும் அறிய அறிய!!
அப்படியா!!!!... நீ வாழ்வதற்கு யான்... தருகின்றேன் என்று வா என்னுடன் வா என்று கையைப் பிடித்து அழைத்தான்!!
ஆனால் அவன் எட்டி உதைத்தானப்பா!!! பிச்சை ஏந்திய திருடனை அவன்!!!
நீ எந்தனக்கு தருகின்றாயா??? என்று!!!
அப்பனே புரிந்து கொண்டீர்களா??? இதை!!
அப்பனே.... யார் யாருக்கு????? எதை?? எப்பொழுது?? தரவேண்டுமோ???
அப்பொழுதுதானப்பா!!! வரும் அனைத்தும் கூட!!!
பார்த்தாயா அங்கு... அமைதியாக அவன் சென்றிருந்தால்... அப்பனே அவர்களுக்கு... எவை என்று அறிய அறிய
மீண்டும் சரி!!! அப்பனே...இவந்தன்... தட்டி கழித்து விட்டான்...
மீண்டும் பார்ப்போம்... என்றெல்லாம் மீண்டும் பிச்சை இடுங்கள்!! பிச்சை இடுங்கள்!!! என்றெல்லாம் நிச்சயம் கூவி அழைத்துக் கொண்டிருந்தான்..
ஒரு பெண் வந்தாள்!!! அறிந்தும் எதை என்றும் புரிய புரிய.... ஆனால் மீண்டும் சில நாணயங்களை...அளித்தாள்!!!
அம்மையே!!!... ஏன்? எதற்காக? எந்தனுக்கு... போடுகின்றாய்???
அந்தப் பெண்ணும்.... இவனைப் பார்த்து
நீ கேட்டாய்!!! அதற்காகத்தான் கொடுத்தேன் என்று!!
ஆனாலும் அறிந்தும் கூட... என்னிடத்திலும் நிறைய தங்க நகைகள் இருக்கின்றது.. தாயே!!!... நீயும் ஏழ்மையாக இருக்கின்றாய்!!!... அதனால் பின் என் இல்லத்திற்கு வா உந்தனுக்கு அனைத்தும் தருகின்றேன் என்று!!!
ஆனால் அந்தப் பெண் தன் செருப்பை கழற்றி அடித்தாளப்பா!!! அத்திருடனை.. எதை என்றும் புரிய புரிய.
அப்பனே அதனால் புரிந்து கொள்வதில்லை மனிதர்கள் என்பேன் அப்பனே
அப்பொழுது அப்பனே அவள் தனக்கு... இவ்வாறு எதை என்றும் அறிய அறிய...
அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய அவன் அமர்ந்தானப்பா!!!
முருகா நிச்சயம்... எதை என்று கூட இப்படி எல்லாம்... பாடுப்படுகின்றேனே... நிச்சயம் யான் செய்த.. தவறுகள் தான்...
அதனால் நிச்சயம் யான் பொறுத்துக் கொள்கின்றேன் என்று!!!
மீண்டும் அத் திருடன் பிச்சை கொடுங்கள் பிச்சை கொடுங்கள் என்று மீண்டும்..
வந்தார்கள் ஒரு எவை என்று அறிய அறிய. ஒரு. இருபது நபர்கள் வந்தார்கள்... அனைவரும் அப்பப்பா எதை என்று கூட... பிச்சை ஏந்துகின்றாயா... இந்தா இதை வைத்துக் கொள் என்று... எதை என்று புரிய புரிய!!!
ஆனாலும்... இவர்கள் நல்லோர்கள் தான் என்று எண்ணி!!!... பின் ஆனாலும் யோசித்தான்... இவர்களிடம் கேட்கலாமா?? வேண்டாமா?? என்று !!! அறிந்தும் கூட
அதனால் நிச்சயம் நல்லோர்கள் என்று எண்ணி எதை என்று அறிய அறிய என்னிடத்தில் காசுகளும் பணங்களும் தேங்கி நிற்கின்றது.... அதை எடுத்துச் சென்று நீங்கள்... யாருக்காவது கொடுங்கள் என்று!!!
எதை என்று அறிய அறிய அவ் 20 பேரும் பின் அதாவது... எதை என்று கூட இவனை பின் அடித்து பின் நொறுக்கினார்கள்....... பிச்சைக்காரனே... எங்களிடத்தில் பிச்சை ஏந்தி விட்டு... !!!!பொய்யா??? சொல்கின்றாய் என்று!!!
(பிச்சை எடுத்துக்கொண்டு என்னிடத்தில் பணம் நகை இருக்கின்றது என்று பொய்யா சொல்கின்றாய் என்று)
அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே... எதை என்றும் அறிய அறிய அப்பனே
ஆனால் இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான் அப்பா....
இதைத்தான் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்..
ஆனால் மனிதன் அதைப் பெற்றுக் கொள்வதற்கு அப்பனே மனிதன் எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.... உண்மையான மனது இருந்தால் எங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்று இருந்தால் அப்பனே அனைத்தும் கொடுப்பானப்பா இறைவன்!! அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!
நீங்கள் தேடி தேடிச் சென்றாலும் அப்பனே உங்களுக்கு எவை தர வேண்டுமா... அதைத்தான் இறைவன் தருவான் அவ்வளவு தான் அப்பனே...
இதில் எதை என்றும் புரிய சொல்லுங்கள் நீங்களே அப்பனே
தர்மம் எங்கே??
நியாயம் எங்கே??
நீதி எங்கே???
எதை என்று அறிய ஆனாலும் அப்பனே இவை தன் மனிதன் உரைக்கக் கூடாது அப்பனே...
இறைவன் தான் அப்பனே அனைத்தையும் கண்காணித்து கொண்டிருக்கின்றான்...
இன்னும் இன்னும் மனிதன் அப்பனே பின் பக்தியை பொய்யாக்குவான் அப்பா இதனால் தான் அப்பனே... எதை என்று அறிய அறிய பக்திக்கு உள்ளே அப்பனே யான் பெரியவன் அவன் சிறியவன் என்றெல்லாம் சொல்வான் அப்பா..
. அப்பனே உண்மையான ஞானி அப்பனே எதுவும் பேசமாட்டானப்பா!!
அதாவது பொய்யான மனிதன் என்னிடத்தில் இறைவன் இருக்கின்றான்.. முருகன் பேசுகின்றான் யான் அனைத்தும் செய்து தருவேன் கிரகங்களை பற்றி எல்லாம் கூறுகின்றான் அப்பனே... எதற்காக???.... அப்பனே... தான் வாழ்வதற்காக!!! தன் வயிற்று பிழைப்பிற்காகவே... தவிர அப்பனே... எதை என்று அறிய அறிய
அதாவது... அவனிடத்தில் செல்!!!! நீயே கேள்!!! எந்தனுக்கு கஷ்டமாக இருக்கின்றது!!... ஒரு ஆயிரம் ரூபாய் கொடு!!! அனைத்து வசதிகளும் என் இல்லத்திற்கு செய்து தா!!! என்றெல்லாம் கேள்!!!
அப்பனே யாரும் அப்பனே நிச்சயம் செய்ய மாட்டார்கள் அப்பா...
ஆனால் அப்போதிலிருந்து அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்...
ஆனாலும் இருக்கின்றார்கள் அப்பா.. சில பேர் அப்பனே
ஆனாலும் அவர்களும் அப்பனே மறைந்து தான் வாழ்கின்றார்கள் என்பேன் அப்பனே....
இதனால் அப்பனே மீண்டும் அவ் திருடன் அப்பனே பின் அதாவது இவ்வாறெல்லாம் அடிவாங்கி தான் அப்பனே கடைசியில் அப்பனே... முருகா.. பார்த்தாயா!!! எதை என்று அறிய அறிய யான் திருடினேன்.... யான் திருடன் தான்!!!
ஆனாலும் யாருக்காவது கொடுத்து விடலாம் என்று பார்த்தேன்....
ஆனாலும் எதை என்றும் புரிய எவை என்றும் அறிய அறிய யாருமே அதற்கு உபயோகமாகவே இல்லை...
முருகா எதை என்று அறிய அறிய.... யாராவது ஒருத்தனை நீ அனுப்பு... என்றெல்லாம்
ஆனாலும் எதை என்று புரியப் புரிய ஆனாலும்.... சரி பார்ப்போம்!! என்று எதை என்றும் அறிய அறிய...
"" முருகனே வந்தான்!!!...
பிச்சைக்காரனே என்று பின் அவந்தனை அழைத்தான்... பின் எதை என்று அறிய அறிய
அவன்!!... யான் பிச்சைக்காரன் தான்!!! என்ன வேண்டும்??? என்று!!
பின் ஆனால் இவ்வளவையும் பார்த்து பார்த்து அவ் பிச்சைக்காரனுக்கே... அதாவது அதன் திருடனுக்கே கோபம் வந்துவிட்டது... எதை என்று அறிய அறிய
என்ன வேண்டும்?? என்று!!
முருகன்
அப்பா ஒன்றும் வேண்டாம் உன்னிடத்தில் அமர்ந்து யான் பிச்சை எடுக்கப் போகின்றேன் என்று முருகனும்...
ஆனாலும் அவந்தனுக்கோ... இவ்வளவு அடிகள் வாங்கினேன்... நிச்சயம் அனைவருக்கும் தெரிவித்தேன்... யாரும் ஒருவர் கூட நிச்சயம் ஒத்து வரவில்லை....
அதாவது ஆனாலும் இவந்தனையாவது அழைத்து சென்று கொடுப்போமா... என்று!!
சரி!!!........என்று கூட பின் எவை என்று அறிய அறிய... பின் அதாவது முருகன் அமர்ந்தான்!!!
நாம் இருவருமே பிச்சை கேட்போம்... என்று முருகனும் சொன்னான்!!!
அத் திருடன்
சரி சரி எதை என்று அறிய அறிய யான்... அடி வாங்கினேன் அவ்வளவுதான் மிச்சம்... நீயும் அடி வாங்க போகின்றாயா என்று... மனதில் எதை என்றும் அறிய அறிய நினைத்தான்.
ஆனால் அவன் மனதில் நினைத்தது முருகனுக்கு கேட்டது!!!.... எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எவை என்று அறிய அறிய.... ஆனாலும் அவ் திருடன் நிச்சயம் எவை என்று அறிய அறிய.... பார்ப்போம்!!!
உந்தனுக்கு அதிகமா?? எந்தனுக்கு அதிகமா?? என்று!! அதாவது பின் அதாவது யான் முருகா முருகா என்று சொல்கின்றேன்.... நீயும் அமைதியாக இரு... எவை என்று அறிய அறிய... யாருக்கு என்று பார்ப்போம்!!! என்று!!
ஆனால் திருடனும் முருகா முருகா முருகா என்று சொல்லிக் கொண்டிருந்தான்!!! யாருமே... அவனை கண்டுகொள்ளவே இல்லை!!!
ஆனால் அமைதியாக இருந்தான்... எவை என்று கூற பின்...
அவந்தனுக்கு தான் பின் அனைத்துமே சென்றது..(தர்மம் செய்த அனைத்தும் முருகனுக்கே சென்றது தர்மம் செய்தவர்கள் அனைவரும் முருகனுக்கு தான் தர்மம் இட்டார்கள்). அவன் தான் முருகன்.
அப்பப்பா... இதில் கூட எவை என்றும் அறிய அறிய... அதாவது துன்பம் வரும் நேரத்தில்... அமைதியாக இருக்க வேண்டும்... அப்பனே எதை என்றும் அறிய அறிய... எதை என்றும் புரிய புரிய அப்பனே... எவை நோக்கினாலும் அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே
அவ்வாறு அமைதியாக இருந்து விட்டாலே அனைத்துமே கிடைக்குமப்பா
அதாவது எந்தனுக்கு துன்பம் எனக்கு அவை வந்துவிட்டது இவை வந்துவிட்டது என்றெல்லாம்... என்னால் வாழ முடியவில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே.... எவை என்று அறிய அறிய ஒன்றும் கிடைக்காதப்பா!!!
அப்பனே அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் ஞானங்கள் வேண்டும் மனிதனுக்கு அப்பனே
ஞானத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்பதெல்லாம் அப்பனே யான் உரைத்துக் கொண்டே வருவேன் என்பேன் அப்பனே
அதனால் குறைகள் இல்லையப்பா
இதனால் மீண்டும் முருகனை நோக்கினான் திருடன்.எதை என்று கூட பின் அதாவது... நிச்சயம் எதை என்று புரிய புரிய
முருகனும் அத்திருடனை பார்த்து
நீயும் முருகா!! முருகா!!! என்று நீ அழைத்தாய் உந்தனுக்கு ஒன்றுமே தரவில்லை...
யான் அமைதியாக இருந்தேன் அனைத்துமே எந்தனுக்கு வந்துவிட்டது என்றும் முருகனும் சொன்னான்.. எவை என்று அறிய அறிய
ஆனாலும் சரி உந்தனுக்கே இருக்கட்டும்!!!... எதை என்றும் புரிய புரிய அதாவது... மீண்டும் ஒரு ரகசியத்தை சொல்கின்றேன்... யான் ஒரு திருடன்.... ஆனாலும் திருடி திருடி எவை என்று கூட அனைத்தும் என்னிடத்தில் இருக்கின்றது... பின் செல்வோமா என்று!!!
அப்படியா!!!!.. என்று முருகனும் வந்தான்!! எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட
ஆனாலும் எவை என்றும் புரிய புரிய எவை என்று அறிய அறிய... ஆனாலும் நிச்சயம்.. முருகா யான் திருடியது!!!....
ஆனாலும் தெரிந்து விட்டது ஏனென்றால் அவந்தன் எதையுமே நினைக்கவில்லை!!
திருடினானே தவிர அவ்வளவுதான்....
ஆனால் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் முருகா முருகா முருகா என்று தான்!!!
ஆனாலும் பின் தெரிந்துவிட்டது.... வந்தது முருகன் தான் என்று!!!
ஏனென்றால் யாருமே வரவில்லை.... இவன் ஒருவன் மட்டும் வந்திருக்கின்றான் என்றால் இவன் முருகன் தான் நம்மிடத்திற்கு வந்திருக்கின்றான் நமக்கு முருகன் தான் சொந்தம் என்று... முருகன் வந்து விட்டான்
முருகா எதை என்று எடுத்துக்கொள் என்றெல்லாம்.. நிச்சயம் எதை என்று அறிய அறிய... மீண்டும் எதை என்று அறிய ஆனாலும்... எதை என்று புரிகின்ற பொழுதும் கூட... நிச்சயம் பின் எடுத்துச் செல்வோம் என்று அப்பனே அழகாகவே... அனைத்தும் பின் இருவருமே முருகனும் கூட எவை என்று சேர்ந்து மலை மேலே தூக்கி சென்றனர் அப்பனே... ஓரிடத்தில் புதைத்தனர் என்பேன் அப்பனே... இன்னும் கூட அவ்விடம் அப்பனே... எதை என்று கூட அத்திருடன் எவை என்று அறிய அறிய யான் இங்கே இருக்கின்றேன்... மோட்சத்தை தாரும்!!!
மோட்சத்தை தா முருகா என்று!!
ஆனாலும் முருகா அறிந்தும் கூட பின் எதை என்று கூட யான் திருடன் தான்!!!!! வருவோருக்கெல்லாம் நிச்சயம் பின் யான்... ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும்.. மனதை மாற்ற வேண்டும்!!! அவ் அருளையாவது கொடு என் பாவத்தை.........!!!!
அப்படியே ஆகட்டும் என்று!!! முருகனும்!!
அப்பனே அவந்தனின் சமாதியும் இருக்கின்றது... வரும் காலத்தில் யான் எடுத்துரைப்பேன்... அங்கு எவ்வாறு செல்வது?? என்று அப்பனே!!
அதனால் அத் திருடன் கூட அப்பனே... அனைவருக்கும் பின் எவை என்று அறிய அறிய கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே......மீண்டும் அப்பனே திருடிய பொருள்களை எல்லாம் முருகன் அவரவருக்கு கொடுத்து விட்டான் என்பேன் அப்பனே...
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே உங்களுக்கு சொந்தமானது அப்பனே எவை என்று அறிய அறிய யாராலும் அப்பனே பறிக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே...
ஆனாலும் அப்பனே ஒரு விஷயத்தில் போகும் மறு விஷயத்தில்... வருமப்பா!!(ஒரு வழியில் சென்றால் மறு வழியில் வரும்)
அப்பனே நிச்சயம் உண்மையான பின் அன்பையும் பின் பக்தியையும் இறைவனிடத்தில் காட்டினாலே... இறைவன் ஓடோடி வருவானப்பா!!!
அப்பனே உங்கள் அனைவருக்குமே ஆசிர்வாதங்கள் அப்பனே நலன்கள் என்பேன் அப்பனே.. எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு என்பேன் அப்பனே... ஆசிகள் ஆசிகளப்பா!! கோடிகள்!
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஅன்னை லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ! பழநி தண்டாயுதபாணிக்கு அரோகரா! என்னதவம் செய்தேன், இந்த சித்தன் அருள் மூலம் இறைவனின் அற்புதங்களை அறிந்து கொள்ள!
ReplyDeleteநன்றி அக்னிலிங்கம் ஐயா
இறைவா நீயே உற்ற துணை 🙏
ReplyDeleteஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SRANAM
சஷ்டி கவசத்தை சுருக்கமாக சொல்ல முடியும் என்று சிலர் சொல்கிறார்களே. அது பற்றி...?
ReplyDelete6 சஷ்டி கவசம் உள்ளதே. மற்ற கவசங்கள் ஏன் பிரபலம் ஆகவில்லை?
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete