​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 15 October 2024

சித்தன் அருள் - 1694 - அன்புடன் அகத்தியர் - ஈசனும் பார்வதி தேவியாரும்!








30/9/2024 அன்று ஈசனும் பார்வதி தேவியாரும் மீண்டும் உரையாடிய வாக்கு. 

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!

கங்கோத்திரியில் ஈசனும் பார்வதி தேவியாரும் குருநாதர் அகத்திய பெருமானும் உரையாடி வாக்கு உரைத்ததை அடுத்து...

மற்ற நாள் கங்கோத்திரியில் இருந்து உத்தர் காசி வரும் வழியில் உள்ள பழமையான பைரவர் கோயில்... பைரோன்காட்டி/ பைரோன்காட்... எனும் இடத்தில் உள்ளது...

இந்த ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை வணங்கி வாக்குவாசிக்க துவங்கிய பொழுது....

உலகை ஆளும் ஈசனும் பார்வதி தேவியாரும் மீண்டும் சுவடியில் வந்து விவாதம் புரிந்தனர். 

 சிவசக்தி விவாதம் செய்த வாக்குகள் பின்வருமாறு!!!!

அன்னை பார்வதி தேவியார்

""""உலகெங்கும் அவரவர் விருப்பப்படியே வாழட்டும் என்று கருணை படைத்த எம் மனதில் உள்ள ஈசா!!!!

உன்னைப் பணிந்து மீண்டும்...யான் ஒரு கேள்வியை உன்னிடம் கேட்கப் போகின்றேன்!!!!

ஈசன் 

தேவியே கேளும்!!!

நிச்சயமாய் யான் தெரிவிக்கின்றேன்!!!

பார்வதி தேவியார்!!

அதாவது என் மனதினுள்ளே அழகாக குடி கொண்டிருப்பவனே!!!!! எப்பொழுதும் உன் நினைவால் நிச்சயம்... யானும் !!!!.....

பின் வாடிக் கொண்டே!!!..... வாடிக்கொண்டே!!!! மனிதர்கள்!!!...பின் இவை அறிந்தும் கூட மனிதனை நீ பிறக்க வைக்கின்றாய்!!!!

பிறக்க வைக்கின்றாய்!!!...

ஆனாலும் பின் மனிதனாக பிறப்பெடுத்து இவ்வாறு வாழ்தல் என்பதை எல்லாம் நிச்சயம் பின் தன் தன் பின் அதாவது விதியின் பாதை என்றே பூலோகத்தில் மனிதர்கள் பேசுகின்றார்கள்!!!

(இப்படி எல்லாம் நாம் வாழ்வது நம் தலையெழுத்து நம் தலைவிதி என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்)

எப்படி? இது சாத்தியம்?????
எப்படி ? இது சாத்தியம்?????

ஈசன்.

தேவியே கேளும்.!!!!
நிச்சயம் பின் ஒரு அதாவது பத்து வயது வரையே!!!

நிச்சயம் இதனை நீ சொல்வது... பின் உறுதியாகத்தான்!!!... பின் அப்படியும் சென்றாலும் ஒரு 15 வயது களில்... 15 வயதுகள் வரை தான் அதுவும் செயல்படும்!!

ஆனால் பின் அறிந்தும் உண்மைதனை கூட பின் 15 வயதிலிருந்து பின் அவரவர் என்னென்ன??? செய்கின்றார்களோ... அதற்கு ஏற்றவாறே பின் தக்க தண்டனை அவனே பெற்றுக் கொள்கின்றான் அவ்வளவுதான். 

ஆனாலும் சிறிது இடைவெளி விட்டு!! இடைவெளி விட்டு!!!....

 ஆனாலும் நிச்சயம் அகத்தியன் சொன்னது போல் நிச்சயம் இதனை பின் அறிந்தும் கூட கண்களில் கூட ஒளி பிம்பமாகவே நிச்சயம்தனை ஒரு கதிர்... அதாவது ஒரு கதிர் அனைத்தும் சேமிக்கும் திறன்.. அதாவது அகத்தியன் சொன்னவாறே!!! இன்னும் இன்னும்!!! பல இடங்களில் கூட அதாவது... அவந்தனே அதாவது அவந்தனே சொல்லும் பொழுது தான் அனைவருக்கும் தெரியும். 

அதை அறிந்தும் அறிந்தும் கூட தேவியே!!!... இப்படித்தான் மானிடன் அதாவது.. அக் கதிர் நிச்சயம் சேகரித்துக் கொண்டே இருக்கும். 

ஆனாலும் பின் சேகரித்து சேகரித்து... அதற்கு தகுந்தாற்போல் நிச்சயம் பின் அதாவது நெற்றியில் தன்னை மூன்றாவது கண் இருக்கும் அல்லவா பின்.... 

நீங்கள் பின் எதை? அதாவது மனிதர்கள் எதை செய்கின்றார்களோ???? அதற்கு தகுந்தார் போல கோடுகள் நிச்சயம் பரவும்!!!


(சித்தன் அருள் 1188 நெற்றியில் உள்ள கோடுகளை பற்றிய பதிவு குருநாதர் உரைத்ததை நினைவு படுத்துகின்றோம்)



அதாவது அதனை கூட (தலை)விதி என்றும் கூட சொல்லலாம்!!!

தக்க சமயத்தில் ஆனாலும் அதனையும் கூட நிச்சயம் சித்தர்கள்!!!

 பாவத்தில் விழாதே!! பாவத்தில் விழாதே!! என்றெல்லாம்!! சொல்லிக் கொண்டே வருகின்றனர்...

ஆனாலும் மனிதன் அப்படியே போய் விழுகின்றான்... அவ்வளவுதான்!!!

தேவியே!!! இது யார் தவறு????

பார்வதி தேவியார் 

கருணை படைத்தவரே!!!! நிச்சயம்... நிச்சயம் பின் அறிந்து விட்டேன்!!!

சரி !!!

பின் அதாவது பின் நல்லவனாகவே வாழ வேண்டும் அதாவது அனைத்தும் மனிதனுக்கு பின் நிறைவேற வேண்டும்... ஆனால் அதற்கு பின் என்னதான் செய்ய வேண்டும்??? மனிதன்!???

ஏனென்றால் மனிதனுக்கு ஒன்றும் தெரியாமல் பாவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றானல்லவா!!!

அதற்கு ஏதாவது பின் விடியலை நிச்சயம் கொடுங்கள்!!! கருணை படைத்தவரே!!!!.....

ஈசன் 

தேவியே கேள்!!!! நிச்சயம் அதனால்தான் சித்தர்கள் பன்மடங்கு திருத்தலங்களை உருவாக்கினர்!!!

உருவாக்கினர்!!!.... அங்கெல்லாம் நிச்சயம் சக்திகளை எப்படி எல்லாம் கூட்ட வேண்டும் ?? என்று!!! அறிந்தறிந்து கூட்டினர்!!!!

ஆனாலும் அதற்கு கூட செல்ல???????

(சித்தர்கள் சக்தியை கூட்டி உருவாக்கிய திருத்தலங்களுக்கு மனிதர்கள் செல்வதற்கு கூட???????)

ஆனாலும் அறிந்தும் கூட முதலிலே படைக்கும் பொழுதே இங்கெல்லாம் செல்ல வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் அதாவது எப்பொழுதும் மறக்கக்கூடாது என்பதற்கிணங்க.... நிச்சயம் அதாவது மூன்றாவது (கண்ணில்) நெற்றி தன்னில் கூட அதாவது பின் புகுத்தி தான் அனுப்பி வைக்கின்றோம்.

ஆனால் மனிதனோ!!! அதனை பின் கண்டு கொள்ளாமல் எதை எதையோ? கண்டு கொண்டு !!

கண்டு கொண்டு!!!

ஆனாலும் அதற்கு தகுந்தார் போல்... பின் பல திருத்தலங்கள்.. சித்தர்கள் வடிவமைத்தனர்... அங்கு செல்க!!!...... என்று!!!

ஆனால் அங்கெல்லாம் ஒருமுறை சென்று பின் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால்???? நிச்சயம் எப்படி??????????

அதுபோலத்தான் எண்ணுகின்றான்!!!....

மனிதன் பணிக்கு ஒரு மாதம் மட்டும் சென்றால் போதுமா???
இரு மாதம் மட்டும் சென்றால் போதுமா????

பின் நின்றுவிட வேண்டியது தானே மனிதன்!?!?!?!?!!!!!?!?!

ஆனால் மனிதர்களுக்கு ஆசைகள் எங்கு இருக்கின்றது என்று பார் !!!...தேவியே!!!!

பின் அதேபோல் இன்னும் பணங்கள் சேர்க்க மனிதர்கள் எதை எதையோ கவனித்து கொண்டிருக்கும் பொழுது... திருத்தலங்களை மறந்து விடுகின்றார்கள்..

ஆனால் இன்னும் திருத்தலங்கள் செல்லச் செல்ல பின் ஒவ்வொரு திருத்தலத்திற்கும் நிச்சயம் ஒருவன் நூறு தடவையாவது செல்ல வேண்டும்...

அப்பொழுதுதான் அவன் பாவம் பின் நிச்சயம்... யானே கரைப்பேன்!!!... அப்படி இல்லை என்றால் நிச்சயம் கரைக்கப்போவதில்லை!!!

ஏன்?? எதற்கு?? எதை எதையோ தேடுகின்ற மனிதன்..?!?!?!?!!!!

அதாவது முதலிலே பின் தேடு!! என்று நிச்சயம் அதாவது அழகு......???

அறிந்தும் கூட அதாவது அறிவை தேடு!!! என்றுதான் யான் நிச்சயம்......அழகாகவே அதாவது பின் விதி தனை கூட!!

 (விதியில் எழுதி அனுப்பி கூட)

ஆனாலும் அதைத் தேடுவதே இல்லை!!!

வேறு எதையோ தேடி தேடி அலைந்து!?!?!?!?!......

ஆனால் கர்மத்தில் நுழைந்து கடைசியில் தான் அதாவது முதலிலே எழுதினேனே அதை கடைசியில் பயன்படுத்துகின்றான் மனிதன்!!!

(மனிதர்கள் ஒவ்வொருவருடைய தலைவிதியிலும் படைக்கும் பொழுது இந்தந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் இந்தந்த திருத்தலங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே விதியில் எழுதி அனுப்புகின்றார் ஈசன். 

இந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு கேள்வி எழும்!!!... தலை எழுத்தில் தலைவிதியில் எந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பது நமக்கு எப்படி தெரியும்????? என்று!!!!

உண்மைதான்... இதற்குத்தான்.... குருநாதர் அகத்தியர் பெருமான் ஒவ்வொரு வாக்கிலும் படித்து படித்து சொல்கின்றார்..... உங்கள் விதியில் என்ன இருப்பது என்று உங்களுக்கு தெரியாது சித்தர்கள் நாங்கள் வந்து சொன்னால்தான் உங்களுக்கு தெரியும் நாங்கள் வந்து சொல்வதற்கும் உங்களிடம் புண்ணியம் வேண்டும் என்று!!!

மனிதர்கள் தன்னுடைய தலைவிதியில் குறிப்பிட்ட எந்தெந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பது தெரியாது !! 

ஆனால் இதையெல்லாம் சித்தர்கள் வந்து வாக்குகளில் அங்கு செல்!! இங்கு செல்!! என்று சொன்னால் தான் தெரியும் அதைத்தான் நம் குருநாதர் அகத்தியர் பெருமானும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சொல்லச் சொல்லி ஆலயங்களில் உள்ள சக்திகளை கதிர்வீச்சுகளை சொல்லி வழிநடத்துகின்றார். 

குருநாதர் வந்து வாக்கில் நம்முடைய தலைவிதியில் என்ன உள்ளது என்பதை சொல்வதற்கும் இதை நாம் அறிந்து கொள்வதற்கும் அதன்படி நடந்து கொள்வதற்கும் புண்ணியம் தேவை. (சித்தன் அருள் 1426.ஓதிமலை வாக்கு)

இங்கு நன்றாக கவனிக்கவும்... புண்ணியம் இருந்தால்தான் வாக்குகள் வரும் புண்ணியங்கள் இருந்தால் தான் நம் தலைவிதியில் எழுதியுள்ள ஆலயங்களுக்கு செல்லவும் எந்தெந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதும் தெரிந்து கொள்ள முடியும். 

உண்மையான பக்தியும் நேர்மையும் தான தர்மங்களும் செய்தால் புண்ணியங்கள் தானாக வரும் புண்ணியங்கள் தானாக வந்தால் சித்தர்களும் தானாக வருவார்கள் வாக்குகள் தருவார்கள் வழி நடத்துவார்கள்! 

சமீபத்தில் கூட குருநாதர் தர்மத்தை விட பரிகாரம் வேறு ஒன்றும் இல்லை என்று கூறி இருக்கின்றார். தானம் தர்மம் அதன் மூலம் கிடைக்கும் புண்ணியம் இதை வைத்துதான் மனித வாழ்க்கையே பிறவியே வரையறுக்கப்படுகின்றது. பிறவிக்கடலை நீந்தவும் உதவுகின்றது.

ஆனால் இதை செய்யாமல் மனிதர்கள் தன் இஷ்டத்திற்கு பாதி வாழ்க்கை வாழ்ந்து விட்டு மீதி வாழ்க்கையை கடக்க கடைசி காலத்தில் ஆலயம் ஆலயம் ஆக சென்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று இந்த இடத்தில் ஈசன் கேட்கின்றார்)

என்ன லாபம்????

அதாவது முதலிலே திருத்தலங்கள் பல பல சென்று கொண்டே இருக்க வேண்டும்!!

ஒரு முறையல்ல!!!

சொல்லிவிட்டேன்!!!... மீண்டும் மீண்டும் இதை தன் அகத்தியன் தான் வாக்குகளில் சொல்லி அருள்வான். 

அது மட்டும் இல்லாமல் நிச்சயம் பின் இன்னும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் கூட.... நிச்சயம் சென்று கொண்டே இருந்தாலே!!!

(ஆகாசம் சிதம்பரம் 
அக்னி திருவண்ணாமலை 
நிலம் காஞ்சி ஏகாம்பரம்
வாயு காலகஸ்தி 
நீர் திருவானைக்காவல்) 

(இந்த பஞ்சபூத திருத்தலங்கள் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் ஈசன் சிதம்பரத்திலிருந்து தன் யாத்திரையை தொடங்கி மேற்கூறிய வரிசைப்படி வலம் வந்து சுற்றி திரிந்து அதிகாலையில் திருவானைக்காவலிலே காவிரியில் நீராடுவான் என்று ஏற்கனவே குருநாதர் கூறியதை நினைவு படுத்துகின்றோம். 
சித்தன் அருள் பதிவு எண் 998)


பின் அதாவது..... யான் ஆடும் (நடராஜர் சிதம்பரம்) அறிந்தும் அறிந்தும் இதை தன் கூட பின்... யான் ஆடிவிட்டால் பின் ஆட்டம் இன்னும்... இன்னும் !!!......(உலகம் நல்படியாகவே இயங்கும்)


ஆனால் யான் ஆடுவதை நிறுத்திவிட்டால்??????.... அனைத்தும் அடங்கிவிடும்!!!

அதாவது தில்லை...(சிதம்பரம்)

அங்கும் கூட இன்னும் சென்று கொண்டே இருந்தால்.....

(சிதம்பரம் அடிக்கடி சென்று கொண்டே இருக்க வேண்டும்) 

ஆனாலும் மனிதன் எவ்வாறு என்று அறிவதைக் கூட அறியாமல் விட்டுவிட்டு.... ஒரு தடவை அங்கு சென்று வருகின்றோம்.... நல்லது நடக்கட்டும் என்று... ஒரு தடவை மட்டும் பின் சென்று விடுவது...

பின் அதாவது அங்கு சென்றேனே!!!!!!... ஈசன் ஆலயத்திற்கு சென்றேனே!!!......

ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!!!

ஆனால் இப்படித்தான் மனிதன் !!!!


அறிவுகளை யான் புகுத்தி தான் அனுப்புகின்றேன் தேவியே!!!! புண்ணியங்களை பெருக்கெடுக்க வைத்து பின் நிச்சயம் அனுப்புகின்றேன் தேவியே!!!

ஆனால் மனிதன் தான் பின் தவறு செய்கின்றான்!!!


பார்வதி தேவியார் 

கருணை படைத்தவரே!!!! அறிந்தும் நிச்சயம் மனிதன் தவறு செய்யாது இருக்க வேண்டும்!!!!

அதற்கு ஏதாவது நிச்சயம் உபயம் கூறுங்கள்!!!


ஈசன் 

பின் தேவியே!! கேளும். நிச்சயம் பார்த்தோம்!! சித்தர்களும் பார்த்தார்கள்!! அன்பாக கூறினார்கள்!! நிச்சயம் இன்னும் இன்னும் அறிந்தறிந்து கூறினார்கள்!

 ஆனாலும் மாறவில்லை மனிதன்!!

அதனால் தண்டனைகள் தான் யான் நிச்சயம் பின் நிச்சயம் தண்டனைகள் கொடுத்து தான் நிச்சயம் திருத்த வேண்டுமே தவிர... பின் அறிந்தும் கூட!!!


பார்வதி தேவியார் 

கருணை படைத்தவரே!!! நிச்சயம் நீங்களே.... இவ்வாறு சொன்னால்???? 

மக்கள் எவ்வாறு வாழ்வது????


ஈசன்

 ஆனாலும் அறிந்ததே!!! பின் தேவியே கேளும்!!!... நிச்சயம் தம் தந்தைக்கு ஒரு பிள்ளை பின் தந்தை பேச்சை கேட்டால் நன்றாகவே வாழ்ந்திடுவான்!!!
தந்தைக்கும் சந்தோஷம்!!! தந்தையும் அனைத்தும் வாங்கி தருவான்!!!

பின் இத்தந்தையும் (ஈசன்) அதேபோலத்தான்!!! பின் அதாவது அனுப்புகின்றேன்!!! பூலோகத்திற்கு!!!... பின் அனைத்தும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று!!!

(அனைத்து உயிர்களுக்கும் இப்படித்தான் வாழ வேண்டும் இதுதான் செய்ய வேண்டும் என்று விதியில் எழுதி புத்தியுடன் அனுப்புகின்றார் ஈசன்!!!... ஈசன் கட்டளை படி அனைத்து ஜீவராசிகளும் சரியாக வாழ்ந்து விட்டு செல்லும் நிலைமையில் மனிதன் மட்டுமே எல்லையை மீறி இறைவன் வகுத்து தந்த பாதையை விதியை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான்)

ஆனாலும் மனிதன் அதையும் தாண்டி செல்கின்றான்!!! பாவத்தில் வீழ்ந்து மீண்டும்... அறிந்தும் அறியாமலும்... இருக்கின்றானே!!!!........

எப்படி தேவியே????.... அறிந்தும்!!! எதை என்று அறிய அறிய அதேபோல் நிச்சயம் தனை யான் அறிந்தும் கூட... எதைச் செப்பினேனோ!???? அதை சரியாகவே பயன்படுத்தினால்... அவந்தனுக்கு வெற்றி நிச்சயம்!!! அவந்தனுக்கு அனைத்தும் கிட்டும்!!!

ஆனால் அது பின் நிச்சயம் நடக்கப் போவதில்லை!!!

அதனால் அழிவுகளில் தான் நிச்சயம் சென்றடையும். இன்னும் நோய்களை கூட பரப்புகின்றேன்... அறிந்தும் கூட!!!


பார்வதி தேவியார் 

கருணை படைத்தவரே!!! அப்படியெல்லாம் உன் வாயால் நிச்சயம் பின் கூறுதல் கூடாது!!!!!!

நிச்சயம் ஏதோ மனிதன் தெரியாமலே வந்திட்டான்!!!
பின் அதாவது அதையாவது திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை தாரும்!!!!!!


ஈசன் 

நிச்சயம் தேவியே!!! யான் சந்தர்ப்பத்தை தந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!! சித்தர்களும் கூட நிச்சயம் சந்தர்ப்பத்தை!!! தந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!

ஆனாலும் அதைக் கூட பொருட்படுத்த நிச்சயம் முடியாமல்!!!.......

ஆனாலும் பின் எதில் எதிலோ?? வீழ்ந்து மடிகின்றான் மனிதன்.. அறிந்தும் கூட!!!

ஆனாலும் பின் அதாவது பின் எப்படி தேவியே?????



பார்வதி தேவியார் 

பின் தேவாதி தேவனே!!!!! நிச்சயம் அறிந்தும் கூட!!! ஏன் மனிதர்களில் சிலர் கூட ஏன் ஏழைகளாக???? இன்னும் சிலர் பின் அதாவது செல்வந்தர்களாக!!!!!.... ஏன்? இப்படி மனிதர்களை படைக்கின்றாய்?????? நீ!!!!!
அதற்கு பதில் அளிக்க வேண்டும்!!!


ஈசன் 

நிச்சயம் தேவியே!!!! அனைத்தையும் அதாவது அனைவரையும் யான் செல்வந்தராக எப்பொழுதும் படைத்ததில்லை!!!!... பின் ஏன்? எதற்கு? என்று!!!

யான் அனைவரையுமே சமமாகத்தான் படைக்கின்றேன்!!!

ஆனால் அவனவன் நிச்சயம் அதாவது சித்தர்கள் செப்பி விட்டார்கள்!!!!

தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்!!!..

. அத் தகுதிகளை யார் ஒருவன்? வளர்த்துக் கொள்கின்றானோ?..... அவந்தனுக்கு அதாவது நிச்சயம் மேலே செல்வான்!!!

அவை மட்டுமல்ல!!! அவை மட்டுமல்ல!!!!.... நிச்சயம் நல் மனதாகவும் இருக்க வேண்டும்!!! அவ் நல் மனதை பெற்று விட்டால்... நிச்சயம் பின் அறிந்தும் கூட.... உயர்வான வாழ்க்கையே வாழ்வான் 

ஆனால் இப்பொழுது மனிதன் தாழ்வான  எண்ணங்களோடு வாழ்கின்றான்!! இதனால் நிச்சயம் தாழ்வான பகுதிக்கு தான் செல்வான் நிச்சயம் தேவியே!!!!


பார்வதி தேவியார்!!!

நிறுத்துங்கள்!!!! தேவாதி தேவனே!!!! அப்படி என்றால் நிச்சயம் அறிந்தும் கூட!!!..... செல்வந்தன் இட்ட கட்டளை தான்  நடக்குமா ??? என்ன????


ஈசன் 

தேவியே மறந்து விடாதே!!!! நிச்சயம் பின் அவந்தன் நினைத்துக் கொள்ளலாம்!!!!.....


யான் ஒருவன் இருக்கின்றேன் மறந்துவிடாதே!!!!!

(இவ்வுலகத்தில் மன்னன் ஈசனே என்பேன் அப்பனே!!
சித்தன் அருள் பதிவு எண் 1057)


பார்வதி தேவியார் 

நிச்சயம் தேவாதி தேவனே!! அனைத்தும் அறிந்தவர் நீர்!!!

ஆனாலும் அறிந்தும் கூட மனிதனுக்கு... சந்தர்ப்பத்தை...தாரீர்!!!!!...தாரீர்!!...


ஈசன் 

நிச்சயம் தேவியே!!! யான் சந்தர்ப்பத்தை தந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!... சித்தர்களும் கூட சந்தர்ப்பத்தை தந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!

ஆனாலும் நிச்சயம்... என்னையே அழைத்தாலும் யான் வந்து விடுவேன்!!!

(ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா)

ஆனாலும் அதையே மந்திரமாகவே ஜெபித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! ஆனால் எப்படி எதை என்று அறிய!!! போட்டி பொறாமைகள் இன்னும் இன்னும் அதாவது இன்னும்..... சிவப்பு ஆடையை (காவி சாமியார் உடை) கூட உடுத்தி !! உடுத்தி!!... அதையும் கூட காவி என்கின்றார்கள்!!
அதனையும் கூட உடையாக அணிந்து அதாவது!!!....

 யான் தள்ளியே நிற்கின்றேன்!!!! என்றுதான் அதற்கு அர்த்தம்!!!


(காவி உடை அணிந்து துறவியாகி விட்டாலே இந்த உலகத்தில் பந்தம் பாசம் சொந்தம் பந்தம் விருப்பு வெறுப்பு காமம் குரோதம் விரோதம் இன்பம் துன்பம் என அனைத்திலும் இருந்து விலகி தூரே விலகி அனைத்திலும் இருந்து தள்ளி நிற்கின்றேன் என்றுதான் பொருள்)


ஆனால் இப்பொழுது அப்படியா?? என்ன????

நிச்சயம் முன் வந்து பின் பல தவறுகளையும் கூட செய்து செய்து.... என்னென்ன அக்கிரமங்கள்??? அதை வைத்துக்கொண்டு!!!! அதாவது அவ் பின் துணியை பார்த்தாலே!!! நிச்சயம்....தாம் .. பின் அவரவர்களுக்கு தெரிய வேண்டும்!!!

 யாங்கள் (லோக இச்சையில் இருந்து) தள்ளித்தான் நிற்கின்றோம் யாரிடமும் பேச மாட்டோம் என்று உணர்தல் வேண்டும்!!!
இத்துணியை அணிந்தவன்!!!(காவிதுறவி)

அதாவது இத்துணியை நிச்சயம் அணிந்தவன் அப்படித்தான் எண்ண வேண்டும்!!!

ஆனாலும் அப்படி இல்லை!!!

மற்றவர்களும் அப்படித்தான் எண்ண வேண்டும்!!!

(துறவிகளை  காணும் பொது ஜனங்கள் கூட) 

ஐயோ!!!! பின் இவந்தன்
பின் அதாவது பின் ஈசன் அருகிலே இருக்கின்றான் என்று!!!

ஆனாலும் யாரிடமும் பேசலாகாது!!!!!...

(காவி துறவிகள் யாரிடமும் பேசாமல் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும்)


ஆனாலும் அத் துணியை அணிந்து பின் எவ்வாறெல்லாம்????????????.... பின் அதாவது அழிவை தேடிச்சென்று எவ்வாறெல்லாம்... செய்கின்றான் என்பதை எல்லாம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!

அதாவது நிச்சயம் 
 தவறு செய்தான்!!!....
 தவறு செய்கின்றான் 
தவறு செய்து கொண்டே இருக்கின்றான்.........

தேவியே  !!!...அறிந்தும் கூட!!! நிச்சயம் இப்படி திருத்தா விடில்.... இன்னும் வரும் மனிதர்கள் நிச்சயம் ஒழுங்காகவே பின் வாழவும் மாட்டார்கள்!!!

நிச்சயம் இப்படியே கடைப்பிடித்து!!!..............…...


அதனால்தான் முதலிலே பயத்தை ஏற்படுத்த வேண்டும்!!!

பயத்தை ஏற்படுத்தி விட்டால்!! நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்று!!!

ஆனாலும் பயத்தை ஏற்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அறிந்தும் கூட... எவை என்றும் கூட தெரியாமல் மனிதன் பின் இன்னும் இன்னும் தவறுகள் செய்து பாவத்தை சம்பாதித்து பின் அதாவது மனைவியை.. கெடுக்கின்றான் பின் அதாவது கணவனை கெடுக்கின்றாள்... அதாவது பிள்ளைகளும் கெடுகின்றார்கள்....... நிச்சயம் அவையெல்லாம் தெரிந்தும் பின் வாழத் தெரியாமல் நிச்சயம் அவர்களையும் கூட பின் அதாவது பின் நரகத்திற்கு தள்ளி!! தள்ளி!!!

இதனால்தான் தேவியே!!! பின் யாருடைய தவறு???? என்று..நீயே கூறு!!


பார்வதி தேவியார் 

அன்பானவனே!!! நிச்சயமாய் அறிந்தேன்!!!

அறிந்தேன்!!! ஏன்? எதற்கு!!? என்றெல்லாம் அதாவது நிச்சயம் அறிந்தேன் அதாவது நிச்சயம் பின் சிறு மனதளவாவது சந்தர்ப்பத்தை தாருங்கள்!!! மனிதன் திருந்துவான் என்று!!

ஈசன் 

பின் தேவியே நிச்சயம் கேளும்!! அறிந்தும்!!

அதனால்தான் நிச்சயம்தன்னை அதாவது சித்தர்கள் அனைவரையும் கூட... பின் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி எப்படி எல்லாம் என்றெல்லாம் சில பாவங்களையும் கூட!! (அகற்றி)

சித்தன்... வந்தாலே அவ் இல்லத்தில் சுபிட்சம் ஏற்படுவது உறுதி!!

இதனால்தான் பின் இல்லத்திற்கே செல்க!!!! என்று சித்தர்கள் அனைவருக்கும் யான் கட்டளை இட்டேன்!!


(கருணைக்கடல் ஈசன் ஒவ்வொரு சித்தருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பாவத்தை அகற்றி ஆசிகள் தருவதற்கு கட்டளை தந்துவிட்டார்.. சித்தர்கள் ஒவ்வொருவருடைய வீட்டிற்கு வந்தாலே சுபிட்சம் தான் ஐஸ்வர்யம் தான்... சித்தர்கள் மனிதர்கள் நம்முடைய வீட்டிற்கு வருவதற்கான தகுதியை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குருநாதர் ஏற்கனவே கூறி இருக்கின்றார் தான தர்மங்கள் செய்து உண்மையான பக்தியை கடைப்பிடித்தாலே எங்களைத் தேடி நீங்கள் வரத் தேவையில்லை உங்களை தேடி நாங்கள் வருவோம் என்று... இதன் பொருள் இதுதான்!!! நம்மிடம் புண்ணியங்கள் இருந்தால் சித்தர்களே நம்மை தேடி வருவார்கள் நம் வீட்டிற்கும் வருவார்கள் இதற்கு குருநாதர் பலவாக்குகளில் பல முறை எடுத்து காட்டாக திருவிளையாடல்களை நடத்தியுள்ளார் )



அதையும் மீறியும் கூட பின் அவர்கள் அதாவது மனிதர்கள் தவறு செய்தால் நிச்சயம் ஒன்றும் ஆகப்போவதில்லை..


பார்வதி தேவியார் 

பின் அதாவது தேவாதி தேவனே!!!

அறிந்தும் கூட பின் எப்படித்தான் வாழ வேண்டும்??? உலகத்தில்!!


ஈசன்

அதாவது பின் நன் முறைகளாகவே தேவியே அறிந்தும் கூட முதலில் மனது தூய்மையாக இருக்க வேண்டும்!!! மனது தூய்மை இல்லை என்றால்.... எச் செயலை செய்தாலும் தோல்வியில் முடிந்துவிடும்! 

நிச்சயம் ஆனால் மனதை கட்டுக்குள் அதாவது அறிந்தும் கூட கட்டுப்படுத்த வேண்டும்!! என்றெல்லாம்!...


பார்வதி தேவியார் 

நிச்சயம் தேவாதி தேவனே!!! பின் நீ இவ்வாறு படைத்தாய்!! அல்லவா!!...

நிச்சயம் மனதை கூட கட்டுப்படுத்துவதற்கு வழிகள் சொல்லும்!!!!


ஈசன் 

நிச்சயம் தேவியே அறிந்தும் கூட இதனை ஏற்கனவே பின் செப்பியும் விட்டார்கள் சித்தர்கள்!!!

ஆனாலும் மீண்டும் சொல்கின்றேன்!!!!

மனதை!!! மனதை நிச்சயம் அறிந்தும் கூட பின் நிறுத்த வேண்டும்!!! அதாவது தியானத்தில் பின் அதாவது தியானத்தில் நிச்சயம் தான் ஏதோ ஒன்றை நினைத்து நினைத்து... நிச்சயம் ஏதாவது ஒன்றை நல்லதை நினைத்து அமைதியாக உட்கார்ந்தாலே போதுமானது!!!
எவ் ஞாபகமும் வராது!!!

(குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே விளக்கை ஏற்றி அந்த விளக்கின் ஜோதி ஜூவாலையை பார்த்து தியானம் செய்யலாம் அல்லது மனதின் உள்ளே கார்த்திகை தீபம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்யலாம் என்றெல்லாம் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்)



ஆனால் இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு ஞாபகத்தில் தான் அமருகின்றான். 

பின் அனைத்தும் அறிந்தேன்!! 


அதாவது அமர்ந்து கொள்கின்றான்!!!!... தியானம் செய்கின்றேன்!?!?!?! என்று சொல்கின்றான்!!.... ஆனாலும் அறிந்தும் இதை தன் உணர்ந்தும்கூட.... தியானத்தில் எவை எவையோ நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!..
ஆனால் இவையெல்லாம் தியானமாகாது!!!!


நிச்சயம் ஒழுங்காகவே நிச்சயம் தியானத்தை மேற்கொண்டால்... பெரும் வெற்றி மீது வெற்றி தான்!!


பார்வதி தேவியார் 

பின் தேவாதி தேவனே!!!!

 அறிந்தும் கூட பின் மனிதனுக்கு அனைத்தும் கொடு!!! அனைத்தும் கொடு!!! உடனடியாகவே!!

ஈசன் 
நிச்சயம் தேவியே நிச்சயம் யான் கொடுக்க தயாராகி தான் இருக்கின்றேன்!!!

ஆனால் மனிதனுக்கு அறிவில்லையே????

யான் கொடுத்தாலும் அதை பயன்படுத்த தெரியாது!!!

அதனால் யான் கொடுத்தாலும் அவன் அதை அழிவு நிலைக்கு தான் எடுத்துச் செல்வான்!!

அதனால்தான் யான் நிச்சயம் சில கஷ்டங்களை கூட கொடுத்து தருகின்றேன்.... அதாவது கொடுத்துத்தான் நிச்சயம் கஷ்டங்களை கொடுத்து பக்குவப்படுத்தி விட்டால் நிச்சயம்... அவந்தன் நீடூழி வாழ்வான்!!!

ஆனால் அதற்குள்ளேயே நிச்சயம் எந்தனுக்கு... கஷ்டங்கள் வந்துவிட்டதே என்று ஓடோடி எதை எதையோ தேடுகின்றான்!!! மனிதன் சொல்லுவதை நம்புகின்றான்! 

( போலி மனிதர்கள் உரைக்கும் பரிகாரங்களை நம்பி)



ஆனால் இன்னும் பின் அதாவது...பல பல பல நிச்சயம் பின் அதாவது புத்தகங்களை கூட ஞானிகள் அழகாக எழுதி வைத்தனர்....

(அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்)

நால்வர் எழுதியதையும் கூட நிச்சயம்!!! என்னுடைய அடியார்கள் அதாவது நிச்சயம் பின் நாயன்மார்களும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அவர்களின் வாழ்க்கை (வரலாற்றை) நிச்சயம் பின் படித்தாலே போதுமானது!!!!! நிச்சயம் மாற்றங்கள்!!! 

அதாவது எனக்கு அதாவது தேவியே!!!

""""எந்தனை !!!!......வந்து வணங்கினால் மட்டும் போதாது!!!!!!

நிச்சயம் அறிந்தும் முதலில் என்னுடைய அடியார்களை நிச்சயம் வணங்கி அதாவது... நிச்சயம் எப்படி எல்லாம்??? வாழ்ந்தார்கள்!!! நிச்சயம் எப்படி எல்லாம் அவர்கள் என் மீது பின் பற்று கொண்டார்கள்!! என்றெல்லாம் உணர்க!!

உணரவைத்து அதாவது உணர்ந்து தெளிவடைந்து... வந்தால் தான் என்னுடைய ஆசிகளும் கிட்டுமே!!!!!!....

நிச்சயம் என் முன் அப்படியே வந்து விட்டால் கிட்டுமா??? என்ன!!???

எதை எதையோ செய்து விட்டு நிச்சயம் வந்து என் முன்னே நின்றால்... என்ன???? யான் தந்து விடுவேனா??? என்ன??
தேவியே!!!......

(ஈசனை வணங்குவதற்கு முன் ஈசனின் அடியார்களான நாயன்மார்களை பற்றி அவர்கள் காண்பித்த பக்தியை பற்றி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை எப்படியெல்லாம் ஈசன் மீது பற்று கொண்டார்கள் அன்பு காட்டினார்கள் ஈசனுக்காகவே வாழ்ந்தார்கள் கடைசியில் ஈசனுடனே இரண்டற கலந்தார்கள் என்பதை எல்லாம் அறிந்து படித்து!! தெரிந்து !!உணர்ந்து !! அவர்கள் காட்டிய அவர்கள் சென்றடைந்த பக்தி பாதையில் நம்முடைய மனதையும் செலுத்தி ஈசனை வணங்கினால் !!! ஈசனின் ஆசிகள் கிட்டும்)



பார்வதி தேவியார் 

நிச்சயம் தேவாதி தேவனே!!!... நீர் கருணை உள்ளவர்தான்!!! ஆனாலும் நிச்சயம் ஏதாவது ஒன்றை கொடுத்து அனுப்புங்கள்!!!!!

ஈசன் 

தேவியே கேளும்!!!!!
நிச்சயம் இவ்வுலகத்தில் வந்தோருக்கெல்லாம் ஏதாவது ஒரு புண்ணியத்தை யான் கொடுத்து தான் அனுப்புகின்றேன்!!!

ஆனால் அதை மீண்டும் தவறான வழியில் எடுத்துச் செல்கின்றான் மனிதன்!!!

எப்படி??? எப்படி தேவியே நியாயம்?? நீயே கூறும்!!!!

நிச்சயம் இன்னும் நிச்சயம் இன்னும் சித்தர்களை கூட... நிச்சயம் இன்னும் வாக்குகளை செப்ப வைத்து... நிச்சயமாய் இவ்வுலகத்தை...!!!!!(மாற்றம் அடைய)

 நிச்சயம் எவ்வாறெல்லாம் பரப்ப வேண்டுமோ..... மனிதனுக்கு உண்மைகளை கூட நேர்மைகளை கூட தர்மத்தைக் கூட.... அவ்வாறெல்லாம் பரப்பி நிச்சயம்.... பின் செய்வோம்!!!

அதாவது வாழ்வதும்!!!!
வீழ்வதும்!!!... பின் எவை என்று அறிந்தும் கூட!!! வெற்றி அடைவதும் பின்.... தோல்வியில் முடிவதும் மனிதனிடத்திலே இருக்கின்றது!!!!

பின் உங்களுக்கு தகுதிக்கேற்பவே!!!! அதாவது நீ தகுதியானவனாகவே இருந்தால்... அனைத்தும் கொடுப்பேன் யான். 

ஆசிகள்!! ஆசிகள்!!! மீண்டும் ஒரு ஸ்தலத்தில் உரைக்கின்றேன்!!! அனைவருக்குமே ஆசிகள்!! ஆசிகள்!!



ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

பிராட்சின் காலபைரவர் மந்திர் 
பைரோட்காட்.
உத்தர் காசி மாவட்டம் 
உத்தர்கண்ட் மாநிலம்.

கங்கோத்ரியிலிருந்து 9 கி.மீ தொலைவிலும், ஹர்சிலில் இருந்து 16.5 கி.மீ தொலைவிலும் உள்ள பைரோங்காட்டி அல்லது பைரோன்காட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கோயில் ஆகும்.

ஜத் கங்கை மற்றும் பாகீரதி நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் பைரோன் காட்டி அமைந்துள்ளது. வண்ணமயமான பாகீரதி (கங்கை) பைரோன் காடியில் காணப்படுகிறது, அங்கு நீலாங் மலைத்தொடரில் இருந்து வரும் ஜாஹ்னவி அல்லது ஜத் கங்கா என்ற நீல நதியுடன் இணைகிறது. பைரோன்காட்டியில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பைரவ நாத் கோயில் உள்ளது, இது கங்கோத்திரி செல்லும் பொழுதும் திரும்பி வரும் பொழுதும். இந்த இடத்தை சாலை வழியாக எளிதில் அணுகலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. om namashivaya
    om namashivaya
    om namashivaya

    guruvadi saranam
    thiruvadi saranam
    nanri ayyane

    ReplyDelete
  4. இறைவா!!!!! நீயே அனைத்தும்.

    அன்புடன் சிவசக்தி வாக்கு

    உலகை ஆளும் ஈசனாரும் பார்வதி தேவியாரும் சுவடியில் உலகோருக்கு உரைத்த அதி முக்கிய வாக்குகள்.
    https://youtu.be/KtGlRYG6Mtk

    சித்தன் அருள் - 1694
    சித்தர்கள் ஆட்சி - 399

    உலகை ஆளும் ஈசனாரும் பார்வதி தேவியாரும் சுவடியில் உலகோருக்கு உரைத்த அதி முக்கிய வாக்குகள்.

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete