( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
நம் குருநாதர்:- ( அடியவருக்குத் தனி வாக்கு. அதன் பின் பொது வாக்கு ஆரம்பம் ஆனது)
அம்மையே கவலைகள் இல்லாமல் இரு. ஒரு தந்தையானவன் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டுமோ நிச்சயம் செய்வேன். இவை அனைவருக்குமே பொருந்தும். அதனால் அவை இவை என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். இதனால் விதியில் உள்ளவை அழகாக அனைவருக்குமே நடந்து கொண்டிருக்கின்றது என்றுதான் யான் சொல்லுவேன். ஆனாலும் அவை மீறி கஷ்டத்தில் போய் விட்டால், யான் அழைத்து வந்து நிச்சயம் என் அருகில் நிற்க வைப்பேன். எவை என்று கூற பிரம்மாவிடம் சண்டையிட்டு பின் விதியைக்கூட மாற்றுவேன். சோதனைகளாக இருந்தாலும் ஓர் நாள் நிச்சயம் இன்பமாக மாறிவிடும். இன்பமாகவே பின் வாழ்க்கை போய்க்கொண்டே இருந்தால் யாரும், எதை என்று அறிய அறிய யான்தான் இறைவன் என்று சொல்லிவிடுவான். அதனால்தான் துன்பம் என்ற நிலைக்கு இறைவன் பின் மனிதனைத் தள்ளி நிச்சயம் சிறிது காலம் துன்பம் அனுபவி என்று இறைவனே கொடுத்தால் யார் என்ன செய்ய முடியும் தாயே? சொல்.
அடியவர்கள்:- ( அமைதி )
சுவடி ஓதும் மைந்தன்:- (விளக்கங்கள்)
நம் குருநாதர் :- அம்மையே சனீஸ்வரன் உந்தன் அருகிலேயே இருப்பான் எப்பொழுதும். அம்மையே (சனீஸ்வர தேவன்) அவர் கொடுத்தாலும், அடித்தாலும் யார் தாங்குவது. நீ நிச்சயம் விளக்க வேண்டும்?. அவனைப் பற்றி எடுத்துரை?
சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லுங்கம்மா சனீஸ்வர பகவானைப் பற்றி.
அடியவர்:- தருமவான் என்று சொல்றாங்க அவரைப்பத்தி. எந்த சனி நடந்தாலும், தர்மத்தோடும், நீதியோடும், நேர்மையோடும் நடந்து வந்தால் அந்த ஏழரைச்சனியாக இருந்தாலும் , அஷ்டமசனியாக இருந்தாலும் அந்த இறுதி கட்டத்தில உங்க மேல தப்பு இல்லை என்றால் உங்களை நிரூபிக்கக் கூடிய தர்மவான் அப்படி என்று சனீஸ்வரரை சொல்றாங்க. நவகிரகங்களில் ஒருத்தர். சூரிய பகவானின் புத்திரன்….
நம் குருநாதர்:- அம்மையே எதை என்று அறிய அறிய தர்மத்திற்கு ஏற்றவாறுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றான் சனியவன் என்பேன் . இன்னும் ஈர் ( 2 ) வருடங்கள் பின் மனிதனை பாடாய்ப் படுத்துவான். அம்மையே படுத்தலாமா? வேண்டாமா?
அடியவர்:- தமது இஷ்டம். தாங்க முடியவில்லை. ( குருநாதர் ஏற்கனவே உரைத்தது போல ஞான வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை. பல இன்னல்கள் பட்டு, பட்டு மனக்குழப்பங்கள் பட்டு...)
நம் குருநாதர்:- அம்மையே அப்பொழுது இவ்வுலகத்தில் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள் ஏராளமான மக்கள். அவர்களை எல்லாம் விட்டு விடலாமா?
அடியவர் :- தந்தையே , எனக்கு தெரியாது. உங்கள் இஷ்டம்.
நம் குருநாதர்:- அம்மையே, அப்பனே இதனால் நிச்சயம் கர்மாக்கள் மனிதனிடத்தில் அதிகமாயிற்று இக்கலியுகத்தில். அதனால்தான் இறைவனே பல மனிதர்களைச் சனியிடத்தில் பின் சரியாகவே பின் அதாவது நீதிபதியாக இருந்து, பின் வழி நடத்து என்று. இதனால் கலியுகத்தில் இன்னும் ஓர் வருடம், அல்லது ஈர் (2) வருடம் பல மனிதர்களுக்குக் கஷ்டங்கள்தான் தோன்றும். ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் அருள் பல பேர்களுக்கு இருப்பதால் நிச்சயம் யாங்கள் நல்வழிப் படுத்துவோம்.
ஆனாலும் சனீஸ்வரனும் என்னிடத்தில் அறிந்தும் அறிந்தும் கூட அகத்திய மாமுனிவரே, இவ்வாறே செய்து கொண்டிருந்தால் எப்படி என்று. ஆனாலும் மனிதனுக்கு யான் புத்தியைக்கொடுத்து , நல்வழிப்படுத்தி, பல புண்ணிய காரியங்களில் ஈடுபடுத்தி பின் புண்ணியத்தை செய்யச் சொல்கின்றேன் என்றெல்லாம் பின் வாக்குகள் பிரம்மாவிடம் கொடுத்துவிட்டேன்.
அதனால்தான் என்பக்தர்களுக்கு ஏதும் இல்லாவிடினும் சரி வாயில்லா ஜீவராசிகள் ஏதாவது கொடுத்துக்கொண்டே இருங்கள் என்றெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டுள்ளேன். அதைக் கூட கேட்காமல் எவை என்று அறிய அறிய திரிந்து வருகின்றானே, அப்பொழுது எப்படி பாவம் போகும் சொல்? தாயே நீயே, அனைவரும் இதைக் கூறுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- என்னுடைய பக்தர்கள் என்னால் முடியவில்லை என்றாலும் ஒரு எறும்புக்குக் கூட (அன்னம்) இடுங்கள் என்று சொல்கின்றார். அதை வைத்து நான் பிரம்மாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அவன் புண்ணியம் செய்துள்ளான் என்று. இல்ல சனீஸ்வரனிடம் சொல்லிவிடுவார். அவன் ( என் பக்தன் ) அதை செய்திட்டான் என்று. அப்போ நம் கையில் புண்ணியம் இருக்க வேண்டும்.
நம் குருநாதர்:- அதாவது மூட நம்பிக்கையிலேயே ( மனிதன் ) ஒளிந்துள்ளான் என்றெல்லாம் நேற்றைய பொழுதில் சொல்லி விட்டேன். அவ் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என் பக்தர்கள்.
இயற்கை (உணவு ) வகைகளை உட்கொள், உட்கொள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனாலும் கேட்பதில்லை. நோய் வந்த பிறகு, நோய் வந்து விட்டது என்று என்னிடத்தில் ஓடி வருகின்றான். இது நியாயமா?
சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள்)
நம் குருநாதர்:- அம்மையே விதியை யாரால் வெல்ல முடியும்? கூறு? நிச்சயம் கூற வேண்டும்?
அடியவர்:- தமது ஆசி, அருள் பெற்றவர்கள்..
நம் குருநாதர்:- அம்மையே அனைவருமே எம்முடைய ஆசிகள் பெற்றவர்கள்தான். ஏன் கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அனைவரிடத்திலும் கேளு?
அடியவர்:- இன்னும் அப்பாகிட்ட நெருங்கி..
நம் குருநாதர்:- அம்மையே கஷ்டங்கள் கொடுத்தால்தான் இறைவனை நிச்சயம் நெருங்குவான் மனிதன். அப்படி நெருங்கி விட்டால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அம்மையே இக்கலியுகத்தில் மனிதன் பிறந்துவிட்டாலே புண்ணியத்தை விட பாவம்தான் அதிக அளவில் இருக்கின்றது தாயே. அப்பொழுது பாவத்தின் சம்பளம் என்ன தாயே?
அடியவர்கள்:- பிறவி கொடுப்பீங்க
நம் குருநாதர்:- அனைவரையும் கேட்டுப்பார். ஒரு பிறவியே எவ்வளவு கஷ்டங்கள் என்று கூற. அடுத்த பிறப்பு ஒன்று வேண்டுமா?
அடியவர்கள் :- ( வேண்டாம் )
நம் குருநாதர்:- அதனால் தாயே முதலில் என்னிடத்தில் வருபவர்களுக்குக் கூட முதலில் கர்மத்தைத்தான் யான் அழிப்பேன். எதையும் கொடுக்க மாட்டேன். யான் என்ன கொடுப்பது தாயே. கர்மத்தை அழித்து விட்டால் தானாகவே அனைத்தும் நடந்துவிடும். புண்ணியம் பின் மேலோங்கும்.
அடியவர்கள்:- கர்மத்தை அழித்து விடுங்கள்.
நம் குருநாதர்:- அதனால்தான் யான் மௌனம் சாதித்து முதலில் கர்மத்தை எப்படி எல்லாம் அழிப்பது என்பதையெல்லாம் மனிதரிடத்தில் கூறிக்கொண்டே வருகின்றேன். அதை அழித்து விட்டாலே போதும். நிச்சயம் நிம்மதியான வாழ்க்கையும் பின் ( கிட்டும் ). என்னாலும் விதி தன்னை மாற்ற முடியும். ஆனாலும் பின் கடைசியில் அவ்விதியானது ஓர் நாள் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். இப்பொழுது எதை (முதலில்) அனுபவிக்க வேண்டும்? கூறுங்கள். பாவமா? புண்ணியமா?
அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) பாவம். கர்மா. அனுபவிச்சு தீர்த்துவிடனும்.
நம் குருநாதர்:- அம்மையே மரண தண்டனை என்று வைத்துக்கொள் ஒருவனுக்கு. ஆனாலும் அதன் மூலம் வேறு எதுவுமே யான் செய்துவிடுவேன். ஆனால் பிரம்மனுக்கு மரண தண்டனை முடிந்துவிட்டது என்று.
ஆனாலும் பின் 100%. (அதனை) பத்து சதவீதமாகக் குறைத்து அவை எல்லாம் எந்தனுக்குத் தெரியும்.
அம்மையே நிச்சயம் பாதி பாவம். பாதி புண்ணியம் எங்குள்ளது என்பதை நிச்சயம் நீ தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அனைத்தும் தெரிந்தால்தான் மோட்சம், முக்தி பெற முடியும். ஒன்றும் தெரியாமல் வந்து விட்டால் என்னிடத்தில் மீண்டும் நீ பிறக்க நேரிடும் தாயே. அதனால்தான் என் பக்தர்களுக்கு அனைத்தும் தெரிந்து கொள்ள யான் நிச்சயம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
( இது உலகோர் அனைவருக்கும் பொது. முக்தி / மோட்சம் கிடைக்க வேண்டும் என்றால் அவசியம் குருநாதர் ( “அன்புடன் அகத்தியர்” ) வாக்குகள் அனைத்தையும் அவசியம் தெரிந்து தெளிய வேண்டியது அவசியம்.)
இதனால்தான் அம்மையே அனைவருக்குமே கஷ்டங்கள்தான். உடம்பு (பிறவி) எடுத்து விட்டால் கஷ்டம் தாயே.
இதனால் படைக்கும் பொழுதே பிரம்மா , இவன் வாழ்க்கையில் பாதி கஷ்டம் , பாதி இன்பம் படவேண்டும் என்று ( விதியை எழுதுவார்). இதனை அறுபதிலிருந்து அல்லது எழுபதிலிருந்து பின் கூட்டிக் கழித்தால் தெரியும் என்பேன்.
( 30 அல்லது 35 வயது வரைக்கும் கஷ்டம். அதன் பின் இன்பம். அல்லது முதலில் இன்பம் பின் கஷ்டம். அவரவர் விதியை பொருத்து )
அம்மையே வயிற்றிற்கு மேல் உள்ளவை பாவம். வயிற்றிற்கும் கீழ் உள்ளவை புண்ணியம். அம்மையே அப்பொழுது எது பெரியது இக்கலியுகத்தில்?
( அடியவர்கள், நன்கு சிந்திக்கவும் இவ் மகத்தான வாக்குகளை.)
அம்மையே பின் எவ்வாறு பாவம் கொல்லும் என்பதைக்கூட நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள்.
அறிந்தும் கூட ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை கலியுகத்தில். ஆனாலும் யான் அறிவேன். ஏன் பிரச்சினை வருகின்றது தாயே நீ கூற வேண்டும்?
அடியவர்:- நம்ம செய்யும் வினைகளினால் வருகின்றது
அடியவர் 1:- ஆசைப்படுகின்றோம்.
நம் குருநாதர்:- எதை என்றும் அறிய அறிய யாராவது ஒருவனை, ஒருவளை எதை என்றும் புரியப் புரிய எந்தனுக்கு எதுவுமே தேவை இல்லை. உம்மைடைய ஆசிகள் மட்டும் போதும் என்று சொன்னால் அனைத்தும் நான் செய்வேன். ஆனால் சொல்வதற்கு ஆள் இல்லை தாயே.
அடியவர்:- (அனைத்து அடியவர்கள் அமைதி. ஆனால் விதியில் ஞான வாழ்க்கை என்ற அடியவர் ஒருவர் மட்டும்) உங்கள் ஆசிகள் மட்டும் போதும். நீங்க மட்டும் போதும். எனக்கு நிறைய செய்கின்றார் குருநாதர்.
நம் குருநாதர்:- அம்மையே செய்து கொண்டே இருக்கின்றேன். ( இவ் அடியவருக்குத் தனி வாக்குகள்) ஆனால் நீ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆனால் செய்வதாலும் சில பாவங்கள். ஆனாலும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை இதனால்தான் குழப்பங்கள்.
தன் பாவத்திற்கு ஏற்ப்பவே செய்ய வேண்டும். அப்பொழுதுதான் புண்ணியங்கள் பெருகும்.
அறிந்தும் அறிந்தும் அனைவருமே இறைவனின் குழந்தைகள். ஆனால் ஏன் கஷ்டப்படுகின்றார்கள்?
அடியவர்:- செய்த பாவம்.
நம் குருநாதர்:- அப்பனே அதை என்னால் நீக்க முடியும்.
அடியவர்கள்:- ஆசை, எதிர் பார்ப்புகள்.
நம் குருநாதர்:- அப்பனே இவைதன் அனைவருமே சொல்லிவிட்டதுதான்.
அடியவர்:- அகங்காரம்.
நம் குருநாதர்:- அப்பனே இவையும் இல்லை
அடியவர்:- வாழத் தெரியாமல்…
நம் குருநாதர்:- அப்பனே இவையும் இல்லை. இதனால் நிச்சயம் எதையும் பின் உள்நோக்கி , பின் வெளிநோக்கி அறிந்தும் கூட, அறிந்த பின்னும் என்ன? அறியாமல் பிறகும் என்ன? அறிந்து கொள்வதற்கு இதனால் கஷ்டங்கள் என்று ஒன்று கொடுத்தால் நிச்சயம் அனைத்தும் தெரிந்து விடும். (கஷ்டம்) மோட்சத்திற்கும் வழி வகுக்கும். பல உண்மைகள் தெரிய வரும். பல உண்மைகள் தெரிய வந்தால்தான் இவ் ஆன்மா மன சாந்தி அடையும். இன்பமாகவே சென்று கொண்டிருந்தால் மன சாந்தி அடையாது. மீண்டும் மீண்டும் ( பிறவி உண்டாகும்). தாயே, தந்தையே அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அனைவருமே புரியாமல் பின் அவை இவை என்றெல்லாம். இவைதன் கொடுப்பதற்கு யான் தயாராக இருக்கின்றேன். ஆனாலும் நீங்கள் கர்மத்தை மட்டுமே கேட்பீர்கள் அம்மையே, அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள் )
நம் குருநாதர்:- அம்மையே தந்தையானவன் கர்மத்தைக் கொடுப்பானா என்ன?
அடியவர் :- (கொடுக்க) மாட்டாங்க.
நம் குருநாதர்:- ஆனாலும் கர்மாதான் உங்களுக்குச் சந்தோசமாகத் தோன்றும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள். ஞானியர்களுக்கு சந்தோசம், அது மனிதர்களுக்குக் கஷ்டம். மனிதர்களின் சந்தோசம், அது ஞானியர்களின் கஷ்டம்.)
நம் குருநாதர்:- இதனால் ஞான நிலையைப் பெற வேண்டும். நிச்சயம் இறைவன் படைத்து விட்டான். இறைவன் அனைத்தும் சரியாகச் செய்துகொண்டே வருகின்றான். ஆனால் நீங்கள்தான் செய்வதில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- ( விளக்கங்கள் )
நம் குருநாதர்:- அம்மையே அறிந்தும் அறிந்தும் இதை யான் சொல்லி விட்டேன். காகம் அதிகாலையிலே அம்மையே பார்த்தீர்களா? அம்மையே கோழியின் தன்மையும் கூட பார்த்தீர்களா? இன்னும் பறவைகளின் குணத்தைப் பார்த்தீர்களா?
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
OM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஅடியேனுக்கு 48 அகவை ஆகிறது ஆனால் பிறப்பு முதல் இன்று வரை கஷ்டம் மட்டுமே அனுபவித்து வருகிறேன் நிலைமை அவ்வாறு இருக்க 30 ஆண்டுகள் மட்டுமே ஒரு மனிதன் கஷ்டம் அனுபவிப்பான் என்று சுவடியில் வந்தது தவறல்லவா
ReplyDelete