[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1699 -பாகம் 7 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1702 -பாகம் 8 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1703 -பாகம் 9 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1705 -பாகம் 10 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1706 -பாகம் 11 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1707 -பாகம்-12 - கேள்வி-பதில்!]
121. அதே போல் சென்ற பிறவியில் செய்த பாவம் என்ன என்பது இந்த பிறவியில் நமக்கு தெரியாது ஆனால் அதற்காக இப்பொழுது வாழ்க்கையில் நிறைய கஷ்டபடுகிறோம். இது எந்த விதத்தில் ஒருவனை நேர்வழியில் செல்ல உதவும்? அடிபடுகிறவனுக்கு, வலி தானே முன் நிற்கும்! நியாய தர்மம், முன் கர்மாக்களா நினைவில் வரும்?
அப்பப்பா! நிச்சயம் தெரிய வரும் அப்பனே! அப்பனே! நல்ல எண்ணத்தோடு புண்ணிய கார்யங்கள் செய்து வந்தால், யானே எடுத்துரைப்பேன், நிச்சயமாக அவ் கர்மாக்களை. யங்களே பின் அழிப்போம்.
122. கோவில்களை இடித்துவிட்டு, இருமுடி கட்டி சபரிமலை சென்று, அல்லது வேறு கோவில்களில் பூஜை பரிகாரங்கள் செய்வதால், இன்றைய அரசியல்வாதிகள், சிறப்பாக வாழ்கிறார்களே! கோவில்/இறைவன் சொத்துக்களை/உண்டியலை கொள்ளை அடிப்பவர்களும் எல்லா வசதிகளோடும் வாழ்கிறார்கள்.
அப்பப்பா! எல்லோரும் ஒன்றை ஞ்சாபக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! ஏற்கனவே பலப்பல வழிகளிலும் செப்பிவிட்டார்கள். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இதை மட்டும் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது புண்ணியங்கள் மெதுவாகத்தான் செயல்படும். அதை விட பாபங்கள் மெதுவாக செயல்படும்.
123.தவறு செய்பவனை தண்டிக்காமல், இன்றைய மனிதர்களை, அதுவும் உங்களிடம் வாக்கு கேட்க வரும் அடியவர்களை, எல்லா வாக்கிலும் திட்டி தீர்ப்பதில் என்ன லாபம் கிடைக்கிறது?
அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது, தாயவள், என்ன தவறு செய்தாலும் பொறுத்துக்க கொண்டு தான் இருப்பாள் அல்லவா? பெரியவனாக ஆக, நிச்சயம் திட்டி தீர்ப்பாள், அப்பொழுது தான் புத்திகள் வரும்.
124. இந்த நாட்டை ஆண்ட அனைத்து மன்னர்களும், போர் என்கிற பெயரில் எத்தனையோ பேர்களை கொன்று குவித்து வாழ்ந்துள்ளார்கள். அப்படிப்பட்ட மன்னர்கள், சித்தர்கள் துணையுடன் நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார்கள். அதனால், அவர்கள் செய்த ப்ரம்மஹத்தி பாபம் தீர்க்கப்பட்டதா?
இப்பிறவியிலும் கூட, இப்பொழுதெல்லாம் தெருஓரத்தில் (அவர்கள்) பிச்சை ஏந்தி கொண்டு இருக்கின்றார்கள். புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் கூறுகிறேன், ஏன் பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை அப்பா. அதனால் தான் சொல்லித் தந்து கொண்டு இருக்கின்றேன், முதலில் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று தேர்ச்சி பெறட்டும் என்று. அதெல்லாம் தேவை இல்லை, பண்ணிட்றேண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது நியாயமா அப்பா!
125.இப்படிப்பட்ட மன்னர்களை சித்தர்கள் ஆதரித்தது எந்த விதத்தில் நியாயம்?
அப்பனே! பின் நீங்கள் பார்த்தீர்களா?
126. ஆமாம் அதற்க்கு உதாரணம் இருக்கே. தஞ்சாவூர் கோவில் இருக்கு,
அப்பப்பா, அறிந்தும் கூட அவர்கள், இப்படி செய்தார்களா என்று பார்த்தீர்களா என்ன?
127. மன்னனாக இருந்தால் போர் செய்யாமல் இருக்க முடியுமா? யுத்தம் செய்யாமல் இருக்க முடியுமா?
இதற்க்கு சரியான, நீண்ட விளக்கம் இருக்கின்றது அப்பனே. பிறகு ஏதாவது ஒன்று சொல்லிவிட்டாலும் பிறகு, தவறான முன் உதாரணம் ஆகிவிடும், அப்பனே! விளக்கத்தை அனைத்தையும் கடந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது தான், அனைத்தும் சரியாக தெரியுமப்பா. இப்பொழுது எதோ ஒன்றை யான் கூறிவிடலாம். குழப்பங்கள் தான் வரும். ஆதலால், அக்கேள்விக்கு பதில் இல்லை.
128. இறைவனுக்கு திருப்தி எப்பொழுது வரும்?
அப்பப்பா! இறைவன் என்ன நினைக்கின்றான், மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று மனதில் நினைக்கின்றான், பூலோகத்திற்கு அனுப்பினால் தான் நிச்சயம் நிம்மதி. இங்கு இறைவன் மீது தவறுதான். இறைவனே தலை குனிகின்றான், நிச்சயம் மனிதனை அழிக்க. எப்படியாயினும், கவலைகள் இல்லை.
129. இறைவன் தான் படைத்த மனிதர்களில், தவறு செய்து வாழப்பவர்களை தண்டிக்காமல், முடிந்த வரை நேர்மையாக வாழ்பவர்களை, சோதிக்கிறேன் என்ற பெயரில், மிக கடினமாக தண்டிப்பதேன்?
அப்பப்பா! நல்லோர்களை சோதித்து, பலம் பெற செய்து, பின் தீயவைகளை அழிக்க வேண்டும் அப்பனே!
130. அது சரி! நீங்களே சொல்லிவிட்டீர்கள் "நல்லவர்கள்" என்று. அப்புறம் எதுக்கு சோதனை வேண்டிக் கிடக்கிறது?
அப்பனே! சோதனை என்று வைத்தல் தான் அனைத்தும் புரியும் அப்பனே! அது மட்டுமல்லாமல் அப்பனே, செதுக்கச் செதுக்கத்தான் பக்க பலம் வரும் என்பேன் அப்பனே. சோதனைகள் இன்றி நல்லவர்கள் என்று எப்படி தீர்மானிப்பது.
{அப்படி என்றால், நீங்கள் முதலிலேயே "நல்லவர்கள்" என்று சான்றிதழ் கொடுக்க கூடாது]
131. தாங்கள் உத்தரவின் பேரில் "திருவாசகம் முற்றோதல்" எல்லா இடங்களிலும் அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கிறது. இதில் புதிதாக உருவாகிய பிரச்சினை என்னவென்றால், ஊர் விட்டு ஊர் வந்து இதில் கலந்து விட்டு போகும் பல அடியவர்கள், நாம் குருவருளால் ஒரு இறை சேவை செய்கிறோம் என்று உணராமல், இத்தனை ரூபாய் தக்ஷிணையாக தர வேண்டும் எனவும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், நடத்துபவர்களை குறை கூறுவதும், குறைவாக பேசுவதும் நடக்கிறது. இப்படி அதை நடத்தி மனவேதனை அடைவது தேவையா?
அப்பப்பா! எங்கு காசுகள் இருக்கிறதோ, அங்கு ஒன்றும் செயல் படாதப்பா. அனைத்தும் பொய்யாகிவிடும். தேவையில்லை (நடத்த) இறைவனுக்கு காசுகள் தேவையில்லை அப்பா! உண்மையான அன்புகள் தான் தேவை என்பேன் அப்பனே!
132.பூண்டு, வெங்காயம் உணவில் தவிர்க்க வேண்டும் என்கின்றார்களே அதன் உண்மையான தாத்பரியம் யாது?
இப்பொழுது இதற்க்கு விளக்கங்கள் தேவை இல்லை என்பேன் அப்பனே!
133. வணக்கம் ஐயா.சிவ தாண்டவம் ஸ்லோகத்தை பற்றிக் கூறவும் ஐயா
நிச்சயம், உத்தரகோசமங்கைக்கு சென்று வரச்சொல்.
134. பெண்களுக்கு ஏன் மாதாவிடாய் வருகிறது,பெண்களுக்கு ஏன் பிரசவ வலியை இறைவன் ஏற்படுத்தினான்.
இதை பற்றி எல்லாம் விரிவாக உரைக்கும் நேரத்தில் கேட்கச்சொல், தெரிவிக்கின்றேன்.
135. உறங்கும் போது ஆன்மா எங்கே பயணிக்கிறது?
இதைப்பற்றி யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதை தேடி படித்து வரச்சொல்.
136.சுயம்பு என்றால் என்ன?
இவை எல்லாம் ஒரு கேள்வியே இல்லை! நேரில் வரச்சொல், பார்த்துக் கொள்கின்றேன்.
137.சிவன் ஏன் உயிர்களை உருவக்கினார்
இதை பற்றியும் நேரில் தான் செப்புவேன். ஈசனை பற்றி இப்படியா கேட்பது? பயபக்தியோடு கேட்கச்சொல். நிச்சயம், ஒரு திருத்தலத்தில் வைத்து விரிவாக செப்புவேன்.
138.ஐயா வணக்கம் நான் அசைவ உணவுகளை உண்பதில்லை. ஆனால் பணி காரணமாக அசைவ உணவுகளை கடையில் வாங்கி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது இது குறித்து குருநாதரிடம் கேட்டு சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அப்பப்பா! என்னுடைய ஆசிகள் எந்நாளும். யானே மாற்றி விடுகிறேன் அப்பா!
அகத்திய பெருமான் - இனி வரும் கேள்விகளுக்கு பதிலை, அவர்களை நேரில் வரச்சொல். அப்படி வந்தால் தான் அவர்களுக்கு புரியுமப்பா!
139.சிவன் அல்லது சக்தி எப்படி உருவனார்கள்,இரண்டு சக்திகளும் எப்படி உருவானது
140.ஆண்,பெண் எதனால் உருவானர்கள்
141.அனைத்து கிரகங்களும் ஏன் கோள வடிவமாக உள்ளன
142. உயிரின் அம்சம் என்ன?
143.இறைவனே எல்லாம்,பிறகு ஜிவ ராசிகள் ஏன்?,
144.உலகம் எப்போது பெண் ஆன்மாவல் ஆளப்படும்
145.ஈசன் எதனால் உருவானவார்?
146.பெண் பலாத்காரம் செய்யபடுகிறாள் ஏன்?அவ்வாறு ஏன் உருவாக்கப்பட்டாள்
147.தீமை ஏன் உருவானது தீமை என்று நான் கூறுவது,எண்ணங்களே
148.யுகங்கள் ஏன் உருவாக்கப்பட்டன அதன் தட்பரியம் என்ன?
149.காலம் என்றால் என்ன?விரிவாக கூறவும், இரவு,பகல் ஏன்?
150. ஈர்ப்பு விசை என்றால் என்ன?அறிவியல் சார்ந்து வேண்டாம்
151.விண்வெளியில் ஏன் பறக்கிறான்,ஏன் அக்காற்றை சுவாசிக்க முடியவில்லை, oxygen,carbon di oxide என்றால் என்ன?
152.இராமாயணம்,மாகபாரதம் ஏன் ஒரு பெண்மை மையப்படுத்தி உருவானது
153. தோன்றாலின் மையம் என்ன
அடியவர்கள் அனுப்பித்தந்த கேள்விகளும் - அதற்கான பதில்களும் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
தொகுத்து அளித்தமைக்கு நன்றி அக்னிலிங்கம் ஐயா, எல்லா கேள்விக்கான விடையும் ஏற்கனவே அகத்தியர் ஐயா விளக்கமாக விடை அளித்து உள்ளார், சித்தன் அருள் வளைதளத்தை 1 முதல் தற்போது வரையும், PDF கோப்புகளையும் படித்தாலே மனதில் எந்த ஐயமும் வராது. ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇத்துணை கேள்விகளுக்கும் இறங்கி வந்து கருணையுடன் நாடியில் வாக்கு உரைத்த அப்பா அகத்தியருக்கு கோடான கோடி நன்றிகள்!....
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை துணை
ReplyDeleteAmma Appa Nimda padha kamala saranam ,
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete