கங்கோத்திரி ஈசன் பார்வதி தேவியார் அகத்திய பெருமான் உரையாடிய வாக்கு பாகம் 2 தொடர்கின்றது.
ஈசன்
அகத்தியனே வா!!!!!
நிச்சயம் எவ்வாறெல்லாம் பூலோகத்தில் நீ திரிந்து கொண்டே இருக்கின்றாய்!!! எவ்வாறெல்லாம்? உன்னை வைத்து பொருள்கள் சம்பாதிக்கின்றார்கள்!!!
எவ்வாறெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட உன் பெயரையே சொல்லி... உந்தனுக்கு அபிஷேகங்களும் செய்து பின் அதாவது எவை எவையோ என்றெல்லாம் சொல்லி சொல்லி பொய்யும் இன்னும் பொறாமையும் இன்னும்... எதை எதையோ???!?!?!?!?!?!?!?!?!!!!...
அவை மட்டும் இல்லாமல் மற்றொருவன் அழிந்து விட வேண்டும்... யான் மட்டும் நீடூழி வாழ வேண்டும் என்றெல்லாம் நிச்சயம்... உன்னுடைய பக்தர்களைப் பற்றி... உன் தாயவளிடம் நீயே கூறு!!! அகத்தியா!!!!!
குருநாதர் அகத்தியர் பெருமான் வருகை
அப்பா!!!!...... பின் அம்மா!!!!!!... நிச்சயம் யானும் சுற்றிக் கொண்டே இருக்கின்றேன்!! என் பக்தர்கள் இல்லத்திற்கு சென்று கொண்டே இருக்கின்றேன்!!!
ஆனாலும் பின் உடனடியாக கிடைக்க வேண்டும்... அதாவது உடனடியாக கிடைக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்...
ஆனால் உடனடியாக பின் கிடைத்து விட்டாலும்... நிச்சயம் அதை தன் அதாவது எப்படி பின் உடனடியாக.... கிடைத்து விடுகின்றதோ????
அதேபோல் உடனடியாகவே அனைத்தும் சென்றுவிடும் என்பதையெல்லாம்... மனிதனுக்கு தெரியவே இல்லை!!!
ஆனால் மெது மெதுவாக கொடுத்தால் நிச்சயமாய் அதை தன் கடை நாள் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யாரும் விரும்புவதில்லை..
என்னிடம் வருகின்றார்கள் அவை இவை என்று... அதைத் தா !! இதைத் தா என்று! கூறுகின்றார்கள்.
ஆனாலும் யானும் மௌனத்தை காத்து அதாவது வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்களே என்று... என் பக்தர்களே..... அறிந்தும்
ஈசன்
அகத்தியா!!!..... அறிந்தும் நீ வேறா?????....யான் வேறா????
அகத்தியர்
அய்யய்யோ !!!!!!!........அப்பா!!!! அப்படி எல்லாம் சொல்லி விடாதீர்கள்!!!!! உன்னுள் நான் அடைக்கலம் ஆனவன் தான்!!!!
பார்வதி தேவியாரை பார்த்து
தாயே!!!! இப்படி எல்லாம் ஏன் பின் கூறுகின்றார் என் தந்தையே!!!!
பார்வதி தேவியார்
நிச்சயம் பின் அகத்தியா அறிந்தும் கூட நிச்சயம் எங்கள் செல்லப்பிள்ளை நீ!!!!
ஆனாலும் அதனால் தான் பின் நீ சொல்வதற்கெல்லாம் பின் அதாவது உன் தந்தையார் நிச்சயம் அதே போல் நிச்சயம் ஆகட்டும் ஆகட்டும் என்று!!
நிச்சயம் உன் தந்தையை விட நீ நிச்சயம் பின் குணத்திலும் அறிவிலும் இன்னும் பல பல விஷயங்களில் கூட உயர்ந்தவன் தான்!!!
அதனால்தான் இவ் பூலோகத்தில் உனை அனுப்பி அனுப்பி மக்களுக்கு பல தெளிவுகளை பெற்று பெற்று தந்திட வேண்டும்.... என்பவையெல்லாம் அவா!!!! (ஆசை)
அதாவது பின் உன் தந்தையின் அவா!!!
அகத்தியர்
பின் தாயே !! தந்தையே!!! அதற்காகத்தான் என் பக்தர்கள் நிச்சயம் அதாவது பின் நல்லோர் ஆயினும் தீயோர் ஆயினும் நிச்சயம் கெடக்கூடாது என்றெல்லாம் எண்ணி!! எண்ணி!! நிச்சயம் அதாவது ஒவ்வொரு... அதாவது அகத்தியா!!! என்று பின் அகத்தியா!!!... அதாவது ஓம் அகத்தியா என்றெல்லாம் இன்னும் எவை எவையோ குரு முனிவரே என்றெல்லாம்... தந்தையே என்றும்!!... இன்னும்
இன்னும் இன்னும் பின் உயரத்திற்கு சென்று எனை அழைத்து!!!......(குருநாதர் நாமங்களைச் சொல்லி பிரார்த்தனை)
ஆனாலும் எனை அழைத்தாலே!!!! எந்தனுக்கு கருணையாக தோன்றி விடுகின்றது!!!! ஏதாவது செய்ய வேண்டும் என்று!!!
ஆனாலும் யானும் செல்கின்றேன்....அவ் அவ் இல்லத்திற்கெல்லாம்!!!
(நாமங்களை சொல்லி வழிபடும் பக்தர்கள் வீடுகளுக்கெல்லாம்)
சென்று சென்று பார்த்தால்???... ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் வணங்குகின்றார்கள் என்பது தெரிகின்றது!!!
அதுமட்டுமில்லாமல்.... ஆனாலும் புத்தியும் கொடுக்கின்றேன்.... நீ என்னென்ன? பாவங்கள்? செய்திருக்கின்றாய்??? அதனை எல்லாம் யோசி!! என்று?!!
ஆனாலும் அதைக் கூட யோசிப்பதில்லை!!
அதனால் பின் அதாவது பின் தாயே!! தந்தையே!!!...
மனிதன் கேட்பதெல்லாம்!?!?!?! கர்மாவை தான்!!!
கர்மாவை தான் கேட்கின்றான்.
யான் எப்படி?? கொடுப்பது???
யாராவது ஒருவன் நிச்சயம் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ வேண்டும்.
பின் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி நிச்சயம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.... பக்தர்களுக்குள் பக்தர்கள்... அன்பாக இருக்க வேண்டும்....
யான் பெரியோன்!!! இவன் சிறியோன்!! என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும்...
இன்னும் மதிப்பு பின் எதை அறிந்தும் கூட.... அனைவரும் ஒன்றே என்று எண்ண வேண்டும்!!!!
ஆனால் இல்லையே !! புத்தி கெட்ட மனிதனுக்கு!!!!
அதனால் தான் அதனால் தான் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று சென்று.... தாயே!! தந்தையே!! அவர்களுக்கு புத்தியும் கொடுத்து நல்வழிப்படுத்துகின்றேன்!!!
ஆனாலும் நிச்சயம் பின் தாயே!! தந்தையே!! எவ் முடிவிற்கும் நீங்கள் வந்து விடாதீர்கள்!!!!
என் பக்தர்கள் நிச்சயம் திருந்துவார்கள்!!! திருந்துவார்கள்!!.... நிச்சயம்!!!
ஈசன்
பின் அகத்தியனே அறிந்தும் கூட..... அனைத்தும் நீ அறிவாய்!!!
ஆனாலும் உன் பக்தர்களையும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்....
ஆனாலும் யான் தான் பக்தன் யான் சொல்லுவது தான் உறுதி என்று..... அவை மட்டும் இல்லாமல் பின் என்னிடத்தில் தான் அனைத்து தகுதிகளும் இருக்கின்றது.... அவன் பொய் என்றெல்லாம்!!! (மற்றவர்)
மற்றொருவனை பார்த்தால் பின்.... இவனைப் பார்த்து அவன், இவன் பொய்யன் என்று!!!
ஆனால் மற்றொருவனை பார்த்து அங்கு பொய்!!! ஆனால் அகத்தியன் என்று!!... இன்னும் இன்னும்!!!.... இன்னும் இன்னும் அங்கு அகத்தியன் இருப்பதில்லை என்னிடத்தில் மட்டும்தான் இருக்கின்றான் என்று!!!
ஆனாலும் அகத்தியா!! உன்னை வைத்து நிச்சயம் அதாவது!!!... நீ கருணை படைத்தவன் என்று பின் உணராமல் சென்று விட்டார்கள்!!
இன்னும் ஒரு படி மேலே சென்று.... அவனா? அவன் தரித்திரன் என்று!!!
இன்னொருவன் நிச்சயம்... அவனா???? அவன் சாகப் போகின்றவன் என்று!!!
இவ்வாறெல்லாம் உன் பக்தர்கள் வாயில் வரலாமா?????????
சொல் !!!
ஆனாலும் நிச்சயம் அகத்தியனே!!!! இன்னும் உன் பக்தர்கள்!!! திருந்தவில்லை!!! உண்மை நிலைகள் தெரியவில்லை!!! இன்னும் ஒவ்வொருவரும்!!! பின் பகைவராக இருக்கின்றார்கள்!
நிச்சயம் கடைசி வாய்ப்பாக யான் தருகின்றேன்.... அடுத்தபடி நிச்சயம்... அழிவுதான்!!!!
அகத்தியர்
பின் அறிந்தும் தந்தையே!!!! அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள்!!!!..
நிச்சயம் இவ்பூலோகத்தில்... பொய்யை சொல்லி சொல்லி அப்படியே உண்மையை அதாவது... பொய்யை சொல்லி சொல்லி.... உண்மையென நம்ப வைத்து.... அழைத்து வந்து விட்டார்கள்.... மனிதர்கள் மீது தவறில்லை... இதனால் நிச்சயம் என் பக்தர்களுக்கு நல் புத்தியை புகுத்தி நிச்சயம் அறிந்தும் கூட.....
அதாவது என் பக்தர்கள் இன்னும் இன்னும் பின் நல்லோர்களும் இருக்கின்றார்கள்.... அவர்களை ஒவ்வொருவரையும் உயரத்திற்கு கொண்டு வந்து இவ்வுலகத்தில் அனைத்து விஷயங்களையும் தெரிய வைக்கின்றேன்..
பார்வதி தேவியாரை பார்த்து அகத்தியர்
நிச்சயம் அதனால் பின் தாயே!!! தந்தையிடம் சொல்!!! நிச்சயம் பின் அறிந்தும் உண்மைதனை கூட!!!
இதைக் கூட பயன்படுத்தத் தெரியாத மனிதர்கள்... எங்கு?? எதை?? வேண்டும்?? எதை அறிந்தும்.... இவை தன் உணராமலும் கூட... பின் தவித்து தவித்து!... வாழ்கின்றார்கள்.... வாழ்கின்றார்கள்... வாழ்கின்றார்கள்!!..
ஈசன்
முனிவரே!!
நிச்சயம் அதாவது பிள்ளை என்றும் உன்னை அழைக்கலாம்!!! நிச்சயம் கருணையானவன் என்றும் உன்னை அழைக்கலாம் நிச்சயம் பின் புதல்வா... பின் அறிந்தும் கூட.... அணைத்து கொள்கின்றேன் பாசத்துடன்.!!!
நிச்சயம் பின் நம்பி விடாதே!!!
உன்னை கூட பின்... அகத்தியா என்று சொல்வார்கள்!!!
ஆனாலும் கருணை மழை பொழிந்து பின் அறிந்தும் கூட எவை என்று அறிய இன்னும் தேவாதி தேவர்களையும் கூட ஏமாற்றியவர்கள் தான் இவ் மனிதர்கள்!!!.
அச் சாபங்கள்தான் இக்கலி யுகத்தில் இவர்களை ஒழுங்காகவே... வாழ முடியவில்லாமல்.... அதாவது நிச்சயம்.... இனிமேல் யார் ஒருவன் தவறு செய்கின்றானோ????...
அவன் அகத்தியன் என்று சொல்வதற்கும் கூட பின் அதாவது மதிப்பு இல்லை!!
பின் அகத்தியா அறிந்தும் கூட நிச்சயம் அவ்வாறு அதாவது... உன்னை உன் மதிப்பு தெரியாதவர்கள் அதாவது அகத்தியா என்று அழைத்து விட்டால் யான் வாயிலே தட்டுவேன் (அடிப்பேன்) இன்னும் கஷ்டத்தை பின் கொடுப்பேன்...
இங்கிருந்தே!!!.... அதாவது பின் இங்கிருந்தே என்னுடைய இடத்திலிருந்தே!!!
இங்கிருந்து சில தொலைவில் உள்ளது தான் என் குகை!!!
நிச்சயம் இங்கிருந்தே சொல்கின்றேன்... பின் அதாவது உன் பெயரை நிச்சயம் அதாவது... உன்னை வணங்கியும் கூட.... தவறு யார் ஒருவன் செய்கின்றானோ???
அவனை நிச்சயம் யான் தண்டிப்பேன்!!!
உன்னைப் பற்றி தெரியவில்லை!!!!!..... உன்னைப் பற்றி தெரியவில்லை!!!... புதல்வனே!!!
அறிந்தும் பின் அதாவது எவ்வளவு?? உயர்ந்தவன் நீ!!!
அறிந்தும் அனைத்து விஷயங்களும் கூட... பின் அதாவது நல்லோர்களையும் கூட தீயோர்களையும் கூட பின் பாகுபாடின்றி அனைத்தும் செய்பவன் நீ!!!
அதாவது பின் உனை அதாவது உன் பெயரை களங்கப்படுத்துபவனுக்கு நிச்சயம் தண்டனைகள் உண்டு
இன்னும் இன்னும் அதாவது பின் அறிந்தும் கூட கீழ்நோக்கி தான் செல்வார்கள் என்பதை எல்லாம் இன்னும் அழிவுகளை கொடுக்க தயாராகவே இருக்கின்றேன்...
பின் அகத்தியனே என்று அறிந்தும்!!!
அகத்தியர்
ஆனால் தந்தையே!!! அவ்வாறு செய்து விடாதீர்கள்!!!!... பின் மனிதர்கள் பாவக்காரர்கள்!!! பாவப்பட்ட ஜென்மங்கள்!!!
அறிந்தும் கூட யான் பின் ஏதாவது ஒன்றை செய்து மனிதர்களின் சில பாவங்களையும் கூட தொலைத்து விடுகின்றேன்!
என் அதாவது என் புண்ணியங்கள் பல பல என்று தாயே !! தந்தையே!! உங்களுக்கே தெரியும்!!!
அவை கூட என் பக்தர்களுக்கு கொடுத்து நிச்சயம் அவர்களை நல்வழிப்படுத்துகின்றேன்.
(மனிதர்களை திருத்த மனிதர்களை காக்க தன்னுடைய சொந்த புண்ணியத்திலிருந்து கருணைக்கடல் அகத்தியர் பெருமான் தன்னுடைய புண்ணிய கணக்கில் இருந்து மனிதர்களுக்கு கொடுத்து மனிதர்களுடைய பாவங்களை அகற்றி நல்வழி படுத்துவதற்கு ஈசனிடம் அற்ப பதர்களாகிய நம் மானிட குலத்தை காப்பதற்கு ஈசனிடம் மன்றாடுகின்றார்)
அதனால் பின் தந்தையே!!!! நிச்சயம் அவ்வளவு அவசரப்படாதீர்கள்!!!! மெதுவாக இருங்கள்!!(அமைதியாக இருங்கள்)
நிச்சயம் இன்னும் ஏனைய சித்தர்களும் இருக்கின்றார்கள்.. இன்னும் அவர்களையும் அழைத்துக் கொண்டு பின் நல் பண்பை கூட ... அதாவது பின் திடீரென்று மனதில் புகுந்து அவர்களை (மனிதர்களை)மாற்றி அமைத்து நிச்சயம் அவர்களால் இவ்வுலகம் செழிப்படையும் என்பது யான் நம்பிக்கையோடு கூறுகின்றேன்!!!
தாயே!!!..... தாயே!!!!... கூறும் தந்தையிடம்!!!!
ஈசன்
அகத்தியனே!! நில்லும்!!! நிச்சயம் மீண்டும் ஒரு வாய்ப்பை தருகின்றேன் உனக்கு!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட... அதனால் மீண்டும் பின் அறிந்தும் எதை என்று புதுப்புது விஷயங்களை கூட உலகிற்கு செப்பு!!!!
நிச்சயம் மனிதனை எவ்வாறு? அதாவது யான் படைக்கின்றேன் என்று இன்னும் பின் தெரியவில்லை!!
அதாவது இன்னும் இன்னும் அறிவியல் வழியாகவும் இன்னும் ஞானங்கள் அறிந்தும் கூட... நீ!!! உந்தனுக்கு அறிந்தவை எல்லாம்... நிச்சயம் உன் பக்தர்களுக்கு எடுத்துரை!!!!
திருந்தினால்!! திருந்தட்டும்!!!
இல்லையென்றால் நிச்சயம் அப்படியே விட்டுவிடு!!!
அகத்தியர்
இல்லை!! இல்லை!! தந்தையே!!
பின் அவ்வாறு நிச்சயம்... முயன்று பார்க்கின்றேன் நிச்சயம் பின் என் பக்தர்கள் மீது அதாவது பின் நம்பிக்கை உண்டு!!!
நிச்சயம் திருந்துவார்கள்!!!
திருந்துவார்கள் பின் எங்கு அறிந்தும் கூட....
தாயே நிச்சயம் பின் அதாவது தாயே தந்தையே எந்தனுக்கு அருள்கள் கொடுக்கும்!!!
இன்னும் கொடுக்கும்!!!
(ஈசனிடம் பார்வதி தேவியிடம் குருநாதர் அருள்கள் வேண்டுகின்றார்)
ஈசன்
பின் அடடா!!!!..... அடடா!!!!!... அகத்தியனே உன்னிடத்தில் இல்லாத திறமைகளா ???? பின் உன்னிடம் இல்லாத திறமைகளா!!!??? பின் உன்னிடம் இருக்கும் திறமைகளை நிச்சயம் இவ்வுலகத்தை அழிக்கவும் செய்யும்!!! காக்கவும் செய்யும்!!!
நிச்சயமாய் அகத்தியனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் எதை என்று கூட
பின் தேவியே!!!! கேட்டாயா!!! கேட்டாயா தேவியே!!!!
பார்வதி தேவியார்
நிச்சயம் அன்பானவனே!! கேட்டேன் அனைத்தையும் கூட!!!!
அதனால் நீயும் பொறுத்தாகத்தான் வேண்டும்!!! நிச்சயம் சிறிது காலம்!!
நிச்சயம் யானும் அகத்தியனுக்கு உதவியாகவே நிற்கின்றேன்.
அகத்தியன் அதாவது இங்கிருந்து சொல்கின்றேன்... பின் சரியாகவே யார் ஒருவன் அகத்தியன் சொன்னதை சரியாகவே பயன்படுத்துகின்றானோ???...... அவந்தனுக்கு தோல்விகளே இல்லை!!! வெற்றிகள் உண்டு!!!
நிச்சயம் இது என்னுடைய வாக்கு!!!! இங்கிருந்தே கூறுகின்றேன்!!! இவ் இமயம் தன்னில் இருந்து கூட!!! அறிந்தும் கூட பொய்க்காது!!! அகத்தியன் சொன்னால்!!!!
வாக்கு!! வாக்கு!! தான்!! பொய்க்காது!!!
நிச்சயம் அவ் வாக்கு பொய்த்து விட்டால் அவன் பொய்யன் என்று அதாவது மனிதன் பொய் சொல்லி தான் திரிகின்றான்!!! நிச்சயம் அறிந்தும் கூட அதாவது நிச்சயம் பின் அதாவது... அகத்தியனே!!!... நீ உடனடியாக கொடுத்தாலும் யான் சோதிப்பேன்!!! வரும் காலத்தில்!!!
அதனால் உன் துணையுடனே துணையாகவே இருக்கின்றேன்!!!! அதனால் உன் நாடகத்தை நடத்து!!! நடத்து!!!
ஆசிகள் ஆசிகள் அனைவருக்குமே!!!!
ஆலயம் மற்றும் விபரங்கள்
கங்கோத்ரி ஆலயம் சார்தாம் எனப்படும் நான்கு புனித ஸ்தலங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
கங்கோத்ரியில் உள்ள ஆறு பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.
பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்து, அதனாலேயே பாகீரதி ஆறு எனும் பெயர் உண்டாயிற்று.
கங்கோத்ரி ஆலயத்தில் கங்கை அம்மனுக்கு சிலையும் ஆதி சங்கராச்சாரியாரின் சிலையும், கோவிலுக்குள் பகீரதன் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. கங்கோத்ரி கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் மேலும் நான்கு கோயில்கள் உள்ளன, அவை சிவன், கணேஷ், ஹனுமான் மற்றும் பகீரதன் ஆகியோருக்கு உள்ளது.
கங்கோத்ரி செல்வதற்கு ரிஷிகேஷ் டேராடூன் போன்ற ஊர்களில் இருந்து உத்தர் காசி சென்று அங்கிருந்து தனியார் அரசாங்க போக்குவரத்தை பயன்படுத்தி செல்லலாம். டெல்லியில் இருந்து ரிஷிகேஷ் வந்து அங்கிருந்து உத்தர் காசி கங்கோத்ரி செல்லலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி கருணைக்கடல் அகத்தியர் பெருமானே 🙏
ReplyDeleteதலைப்பில் வாக்கிற்கு பதிலாக பாக்கு என்றிருக்கிறது ஐயா
ReplyDeleteகுருவடி சரணம்.
ReplyDeleteதங்களை மட்டும் இரக்கம் உள்ளவர்களாக காட்டி கொள்ளும் ஈசனும் பார்வதி தேவியும் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உடலை உயிருடன் சிதைத்து உண்ணுமாறு படைப்பினை ஏன் செய்தார்கள்?
கலியன் என்பவன் யார்?
எதற்காக படைத்தார்கள்?யார் படைத்தது?
இந்த கேள்விக்கான பதில் தெரிந்தவர்கள் கூறவும்
அகத்தியன் வாழ்க 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete