​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 11 October 2024

சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!

 
[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!] 

10, வட்டியை பிரதானமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் அது சார்ந்த துறையில் பணி செய்து பெறும் ஊதியம் பாவமா இல்லையா ?

​அப்பனே! அவனை, ஒவ்வொரு வீடாக செல்லச்சொல். வங்கியில் வேலை செய்பவர்கள் குடும்பம் எப்படி வாழ்கிறது என்று பார்க்கச் சொல். பிறகு இவந்தனுக்கு தெரிவிக்கின்றேன். இவன்தனும் இருந்தாலும், தண்டனை, தண்டனை தான்.  

11. அத்தகைய பணம் கொண்டு தர்மங்கள் செய்வதால் வரும் பாவமோ புண்ணியமோ யாருக்கு ?

​அந்த கதிர்கள் (நல்லதோ/கெட்டதோ) யாரையெல்லாம் தாக்குமோ, அவர்களுக்கு! அதனால்தான் பெரியவர்கள் கையை தொட்டு பேசுவதை விரும்பவில்லை.

12. அப்படியென்றால் அனைத்து தொழிலுக்கும் இது பொருந்துமே. பின்னர் எப்படி சம்பாத்தித்து வாழ்வது?

அதனால் தான் உழைத்துப் பிழைக்கச் சொல்கின்றோம், அப்பனே! உடம்பை எடுத்தாலே கஷ்டங்கள் என்பதால் தான், எதுவும் வேண்டாம் என செல் என்கிறோம். அதனால்தான் மனிதர்கள் பாவம் என்று உணர்ந்து, சித்தர்கள் யங்கள், ஏதாவது அவனுக்கு செய்து கொண்டிருக்கிறோம். பாவம் மனிதனென்று, மலைகளையும், காடுகளையும் ஏறி, தவம் செய்து, பாபத்தில் விழுந்து விட்டாலும், மனிதன் திருடனோ, வல்லவனோ அவனை தூக்கிவிட தயாராக இருக்கின்றோம். ஆனால் மனிதன் உணர்வதே இல்லை. படுகுழியில் விழுவோம் என்று.... 

13. அரசாங்கம் வட்டிக்கு கடன் வாங்குவது பாவமா ? புண்ணியமா ?

​அப்பனே! உன்னிடத்தில் புண்ணியங்கள் இருந்தால், இறைவன் ஒருவனை அனுப்பி வாங்கிச்செல்லுகின்றான். அதுவே பாவங்கள் இருந்தால் பிடுங்கிச் செல்லுகின்றான். இதை மாற்றி, மாற்றி யோசி, உனக்கு புரியும்!

14. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், பொய் கணக்கு எழுதியோ அல்லது மறைத்தோ சேர்க்கும் பணம் அல்லது சொத்து பாவமா ?

​அப்பனே, அனைத்தும் ஒரு நாள் எங்கு செல்கின்றது எனக் கூறு! அப்பனே! எங்கிருந்து வந்ததோ, அந்த இடத்துக்குத்தான் செல்லும் ஒருநாள். அதனால், பொய் கணக்கு எழுதினாலும், உண்மை கணக்கு எழுதினாலும், எல்லாம் செல்லப்போவது ஒரே இடத்துக்குத்தான். நதிகள் எங்கு சென்றாலும், கடலில்தான் கலக்கப் போகின்றது.

15. ஜீவகாருண்யம் கடைப்பிடிக்கும் ஒருவர் கசாப்பு கடையில் வேலை செய்தால் பாவமோ புண்ணியமோ யாருக்கு ?

​அப்பனே! ஜீவகாருண்யம் கடைபிடிப்பவன், கசாப்பு கடையில் வேலை பார்க்க மாட்டானப்பா! மனசாட்ச்சி ஒன்று இருக்கின்றது, நீயே கூறு!  அப்பனே! ஜீவகாருண்யத்தை பயன்படுத்தினால், கடுகளவும் கஷ்டங்கள் வராதப்பா! 

16.ஜீவசமாதி அடைகின்ற சித்தர்களின் திருமேனிகள் மண்ணிற்குள் எவ்வித மாற்றம் அடைகின்றன?

​அப்பனே! ஜீவசமாதியில் ஒருவன் இருக்கின்றான் என்றால், அங்கு சென்று தியானங்கள் செய்தாலே உன் உடம்பு ஆடுமப்பா. 

17. மனிதனது மனமானது எப்பொழுதும் நல்லவனவற்றையே சிந்திக்க குருநாதர் ஒரு உபாயம் நல்கிட வேண்டும் 

​அப்பனே! நிச்சயம் திருவாசகத்தை ஒதச்சொல் அப்பா! ஆனால் படிப்பதற்கும் சற்று கடினமாகத்தான் இருக்கும் அப்பனே! போகப்போக புரிந்து கொண்டு ஒரு தெளிவு வந்துவிடும் அப்பனே!

18. அண்ட சராசரத்தையும் ஆளும் அகத்திய பெருமான் பொற்பாத கமலங்கள் போற்றி .. வணக்கம் ஐயா ஒருவனுக்கு எந்த விடயம் எடுத்தாலும் எல்லாவற்றிலுமே தோல்வி ஏற்படும் போது வாழ்க்கை மீதே ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது .. நாம் வாழ்ந்து மட்டும் என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது .. இதிலிருந்து எப்படி ஐயா மீண்டு  வருவது ..

​அப்பனே! பெரியவர்கள் சொன்னார்கள். எதை எடுத்தாலும், தோல்வி, தோல்வி, தோல்வி என்றால் ஒரு நாள் வெற்றி. எதை எடுத்தாலும் வெற்றி, வெற்றி, வெற்றி என்றால் ஒரு நாள் தோல்வி. எனவே தோல்வி என்பது ஒவ்வொரு படி போல. என்னுடைய அருளும், ஆசிகளும் கூட. 

​19 : ஐயா   என்ன செய்வதென்றே தெரியாத திக்கற்ற நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வை நகர்த்தி செல்வது? மனிதன் பூமிக்கு எந்த நோக்கமாக வந்தான் என எப்படி தெரிந்து கொள்வது ..?

​அப்பனே! திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. எமது ஆசிகளும் கூட, கடை நாள் வரை யாம் இருப்போம் துணை. 

20. ஐயா யாரும் கண்டு கொள்ளாத பாழடைந்த பழைய சிவாலயத்தில் பூசை செய்து வரும் வாய்ப்பு யாருக்கு ஐயா கிடைக்கும் ..???

​அப்பனே! நிச்சயம், உண்டு, உண்டு என்பேன், ஈசன் எந்த நேரத்தில் என்ன தீர்மானிக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஈசன் மனம் மாறிக்கொண்டே இருப்பான். ஆகவே, அனைத்தும் ஈசன் செயல் என்றிருக்க, எக்கோவில் யாரால் கட்டப்பட்டது, அவனையே மறுபடியும் பிறப்பெடுக்க வைத்து அது நிறைவேற்றப்படும்.  

​ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

4 comments:

  1. ஓம் லோபமுத்துரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி திருவடிகள் சரணம்

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete