​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 October 2024

சித்தன் அருள் - 1690 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 10


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 10

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9)

நம் குருநாதர்:- அப்பனே செல்களைப் பற்றிச்  சொன்னேன் அப்பனே. அதைப்பற்றி நீ எடுத்துரை?

அடியவர் 7:- ( கண்களில் உள்ள பாவ புண்ணிய அணுக்கள் எப்படி இயங்குகின்றது என்பதை அழகாக எடுத்து உரைத்தார். இந்த வாக்குகள் படிக்க இவ் தொடர் வாக்கில் 5ஆம் பகுதியைப் படிக்கவும் - சித்தன் அருள் - 1665 )

நம் குருநாதர்:- ( இங்கு ஒரு அடியவர் தொழில் தொடர்பாக நீண்ட நேரம் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் குருநாதர். அந்த வாக்கில் உள்ள பொது வாக்குகளை இங்கு காண்போம். குருநாதர் வாக்கை மீறிச் சென்றதால் பிரச்சினைகள் வந்தடைந்தது. ஆனாலும் குருநாதர் உதவி புரிவதாக உரைத்தார்கள். ) 

ஆசிரியன்,  இக்கேள்விக்குத்தான் தேர்வில் பதில் வரும் என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே. இது ஆசிரியனின் அறிவா இல்லை அது மாணவனின் முட்டாளா? 

( விதியில் என்ன உள்ளது என்று அதனை உணர்ந்து,  நம் குருநாதர் நம்மில் பலருக்கு விதி என்ற தேர்வின் கேள்விகளை முன்பே நமக்கு உரைத்து அந்த கேள்விகளுக்குப் நம்மை தயார் செய்துகொள் என்று உரைக்கின்றார்கள். ஆனால் அதனை உணராத பல மாணவர்கள் வேறு கேள்விகளுக்கு பதில் படித்தால் வாழ்வில் சிக்கல் உண்டாகும் என்பதை சுட்டிக்காட்டி உரைத்த பொது கேள்வி இது என்று உணர்க. ) 

அடியவர் 7, 13 :- ( குருநாதரை) சோதித்துப் பார்க்காதீர்கள் என்று சொல்லுகின்றார். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஆசிரியர் உரைத்த கேள்விக்குப் பதில் படித்தால், தேர்வில் வெற்றி பெறுவீர்களா? 

அடியவர்:- கண்டிப்பாக படிப்பேன்

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ ஏன் குருநாதர் வார்த்தையைக் கேட்கவில்லை என்று கேட்கின்றார் குருநாதர். 

அடியவர்:- (அமைதி)

நம் குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் மூட நம்பிக்கையிலேயே ஒளிந்துள்ளான் என்பேன் அப்பனே. முதலில் அதை வெளிக்கொண்டு வந்தால்தான் அப்பனே திருந்துவான். 
அப்பனே இதனால் பின் நன்மைகள் யான்தான் தரவேண்டும்.

( குருநாதர் வாக்கை மீறி விதியில் இல்லாத்தை செய்ததால் வந்த வினை குறித்த தனிப்பட்ட வாக்குகள் )

அப்பனே மாற்றித்தருகின்றேன். அப்பனே கடும் போராட்டமும், அப்பனே மன உறுதியும், அப்பனே நம்பிக்கையும் கூட இருந்தால் நிச்சயம் அனைத்தும் யான் செய்வேன்.

சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாருக்கும் பொது. நம்பிக்கை, confident, அகத்தியர் எனக்கு செய்வார், அவரைத்தவிர ஒன்றும் இல்லை என்று correct ஆக இருந்தால் , எல்லோருக்கும் சொல்கின்றார் ஐயா. எல்லாமே நானே செய்துவிடுவேன் என்று குருநாதர் சொல்கின்றார்.

நம் குருநாதர்:-  அப்பனே நம்பிக்கை இல்லாமல் செய்கின்றார்களே, அதனால்தான் எந்தனுக்கு கோபமப்பா.

அப்பனே பலபேரை யான் பார்த்துவிட்டேன் இது போல் அப்பனே. ஒன்றைச் சொல்வேன் அப்பனே. ஆனாலும் அனைவரும் போலவே என்னையும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. ஆனாலும் அகத்தியனா சொன்னான்? மீண்டும் மனிதனை பார்ப்போம் என்று மனிதனிடத்தில் திரும்பி விடுகின்றார்கள் அப்பனே. இதுதான் அப்பனே குறை. யான் கண்டுகொள்வதே இல்லை. 

( இந்த வாக்கை அடியவர்கள் நன்கு உள் வாங்க வேண்டும். உண்மையில் ஈரேழு உலகங்களின் பிரம்ம ரிஷி , பொதிகை வேந்தன், கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அளிக்கும் மகத்தான வாக்கை பின்பற்றினாலே அவர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்,  நாம் அவர்மீது வைக்கும் அசைக்க இயலாத நம்பிக்கை மூலம் அனைத்தும் நமக்காக செய்து விடுவார்கள். உயர்ந்து விடலாம் எளிதில். சித்தன் அருள் வலைதளத்தில் உள்ள “அன்புடன் அகத்தியர்”  வாக்கை மட்டுமே எடுத்து, அதிலேயே வாழ்ந்து, உங்களுக்கான ஒரு சுய பாதுகாப்பு வட்டமாக வைத்து,  அதன் மூலமே அவ்வாக்கின் படி மட்டுமே வழி நடக்க , நடக்க - பல உயர்வுகள் உங்கள் வாழ்வில் காண இயலும். 

ஆனால் அடியவர்கள் பலர், குறுக்கு வழியில் உடனே முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தினால் அவர்கள் தவறாக வழி தவறி,  நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அளிக்கும் வாக்கிலிருந்து  விலகி, பிரிந்து , அவர்கள் ஜோதிடம், ஜாதகம், அருள் வாக்கு, வாஸ்து, எண் கணிதம், பரிகாரம் , மந்திரம், தந்திரம், யந்திரம் , பணம் பறிக்கும் தரித்திரம் பிடித்த மனித குருமார்கள் மற்றும் இதர ஆன்மீக வழிகளில் இறங்க வைத்து , அவர்கள் கர்மாவை அதிகப்படுத்தி, இப்போதுதான் அவர்கள் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரியாமல் அவ் எண்ணமே பாவ படு குழியில் விழ வைக்கின்றது. வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் மீண்டும்.) 

நம் குருநாதர்:- அப்பனே பாவத்தில் இருந்து பின் விடுபட்டு மனிதனால் நிச்சயம் அப்பனே முடியாதப்பா. அப்பனே மனிதன் வாயால் …பின் நாக்கெல்லாம் விஷமப்பா. 

அப்பனே ஆனாலும் தந்திரத்தை வைத்து சொல்வானப்பா. அதுவும் தோல்வி அடைந்துவிடும் அப்பா.  இதனால் நன்மைகளைச் செய்ய வேண்டும் அப்பனே. இறைவனை நாடி, நாடி இன்னும் கட்டுக்கதைகள் விடுவார்களப்பா. மனிதன் அதை நம்பிவிடுவான் அப்பா சுலபமாக. 

அப்பனே கலியுகத்தில் பின் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே பின் ஏமாற்றம்தான் மிச்சம். அப்பனே திருத்தலத்திற்கும் செல்கின்றீர்கள் அப்பனே. மனிதனிடத்திற்கும் செல்கின்றீர்கள் அப்பனே. அப்பொழுது இறைவன் என்ன செய்வான் அப்பனே???? கூறுங்கள்?????? அனைவருமே. 

அடியவர் :-  என்ன செய்தாலும் விதியை மாற்ற முடியாது ஐயா. இறைவன் நினைத்தால்தான் மாற்ற முடியும். 

நம் குருநாதர் :- அப்பனே விதி, எப்படி மாற்ற முடியாது என்று  சொல்லுகின்றாய்? 

அடியவர்:- ஐயா மனிதர்களுக்கு (விதியை மாற்றும்) தகுதியே கிடையாது ஐயா. 

நம் குருநாதர்:- அப்பனே பின் சொல்லி இருக்கலாமே. இறைவனுக்கு மட்டுமே உண்டு. பின் சித்தர்களுக்கு மட்டுமே உண்டு என்று அப்பனே. ஏன் வாயால் வரவில்லை? 

அடியவர் :- இப்ப முழுவதும் முதலில் எப்படி இருந்தோமோ அது போல இருக்க வேண்டும். (விதி முழுவதும் அனுபவிக்கவேண்டும்.) 

நம் குருநாதர்:- அப்பனே விதி விலக்கு என்று உள்ளதே அதை மறந்து விட்டாயா? 

அடியவர்:- ( சித்தர்கள்) அவங்க சொல்ரபடி கேட்டால்… ( விதி விலக்கு நடக்கும்). 

நம் குருநாதர்:- ( இவ் அடியவரின் விதி மாறிய வாக்கு உரைக்கப்பட்டது ) விதி மாறவில்லையா என்ன?

அடியவர்:- ஐயா தான் மாத்திவிட்டாங்க..

நம் குருநாதர் :- ( இவ் அடியவருக்குத் தனி வாக்கு . உரையாடலில் பல சிரிப்புகள் அங்கு ) 
அப்பனே நலமாக என்னுடைய ஆசிகள் அப்பனே. 

அடியவர் :- ( ஆசீர்வாதம் ) எனக்காங்க ஐயா!!!!

நம் குருநாதர்:- ஆச்சரியத்துடன் பார்க்கின்றாய். அப்பனே அகத்தியனும் நமக்கு ஆசிர்வதித்தான். அமைதியாக உட்கார். 
( மற்றொரு அடியவருக்குத் தனி வாக்கு) 

சுவடி ஓதும் மைந்தன்:- ( சில விளக்கங்கள் ) 

நம் குருநாதர்:- ( தனி வாக்குகள் ) 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:


  1. இறைவா !!!!! நீயே அனைத்தும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) பகுதி 1 - 10

    https://youtube.com/playlist?list=PLr-rfmzhELfqr16db5Poymji0GHGOaRju&feature=shared

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. ஓம் அக்த்தீசாய நமக 🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete