​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 13 October 2024

சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்!

[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!] 

21. ஐயா தருமம் அல்லது தானம் செய்யும் போது உண்மையாகவே ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை எப்படி அறிவது... உதாரணமாக நாம் செய்யும் ஒரு தர்மம் அல்லது தானம் தவறான ஒரு நபருக்கு சென்று விட்டால் அந்த கர்மம் தருமம் சென்றவரை சாருமா ஐயா!

அப்பனே! தர்மமோ/தானமோ செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிற பொழுது, எதையும் நினைக்க கூடாது! கொடுத்துவிட வேண்டும், அவ்வளவுதான் அப்பனே! நீ முன் காலத்தில் ஒருவனுக்கு கொடுக்கின்றேன் என்று சொல்லியிருந்திருப்பாய், கொடுக்காமல் மடிந்திருப்பாய், இப்பொழுது கொடுக்கின்றாய், அவ்வளவுதான் அப்பனே!

23. காஞ்சியில் வாழ்ந்த ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் என்று அழைக்கப்படும் அந்த மகானை குறித்து எங்களுக்கு கூற முடியுமா?

அப்பனே! அறிந்து கூட, கூறுகின்றேன் அப்பனே. அவ்விடத்திலே இதை கூறுகின்றேன், பொறுத்திருந்தால், அப்பனே! நன் முறைகளாகவே, அப்பனே, அனைத்து விஷயங்களும் அவனுக்கு தெரியுமப்பா!

24. குருவே உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்!

எங்கள் ஆசிகள் எப்பொழுதும் உண்டு! ஆசிகள்!

25. அகத்திய பெருமான் பல நோய்களுக்கு மருந்து முறை கூறியுள்ளார் , ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறைபாடு (ஆண்மலடுத்தன்மை ) சரி செய்ய,  அகத்திய பெருமான்   மருத்துவ குறிப்பு சொன்னால் இது பலரை சென்றடையும். ஓம் அகத்தீசாய நமக!

அப்பனே, ஓரிதழ் தாமரை, பூமிச்சக்கரை, ஜாதிக்காய், அரச இலை, ஆலமர விதை, முருங்கை இலையும் கூட, இன்னும் நிறைய மூலிகைகள் இருந்தாலும், அவைகள் பலனளித்திட ஓரிரு மந்திரங்கள், தேவை படுகிறது. இதனால், பழனி தனை சென்றிட்டு, போகன் அப்பனை பார்த்திட்டு, வரச்சொல் அப்பனே! மந்திரத்தை அழகாகவே, விவரிக்கிறேன் அப்பனே!

26. கந்தர் ஷஷ்டி கவச்சத்தில் உள்ள ரைமிங் சொற்களின் (செககனா, மோகமோக, திகுகுண, டங்கு, டிங்குகு, முதலியன) அடிப்படை அர்த்தம், முக்கியத்துவத்தை விளக்கவும்.

இதிலுள்ள வாக்குகள், செப்ப செப்ப, அவை, சிலரின் உடலில், மனதில் உள்ள பாதிப்பை, அகற்றிவிடும். சந்தோஷங்கள் அடையுமப்பா. இவை தன்னை சொல்லிக் கொண்டிருந்தாலே, எவ் நோயும் அண்டத்தப்பா!

27. ஒரு நாளைக்கு எத்தனை முறை இதை கூற வேண்டும்?

அப்பனே! உன்னால் முடிந்த வரை. ஒருநாள் எத்தனை முறை உண்ண வேண்டும் என்று கூறு. 

27. சிவ கீதை, சௌந்தர்ய லஹிரி, வராஹ கவசம் மற்றும் வேல் மாறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

​அப்பனே! நிச்சயம், இதை ஓதி வந்தாலே போதுமானது! இதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள், யானே உணரவைப்பேன்.

28. தியானம் மற்றும் பிரார்த்தனைகளில் ஸ்ரீசக்கரத்தின் முக்கியத்துவத்தை விளக்குங்கள். ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாமா? (சங்கரன் கோவிலில் கோமதி அம்மன் சந்நிதி எதிரில்)

​அப்பனே, ஒருவன் ஸ்ரீசக்கரத்தை முன்னே வைத்து த்யானம் செய்து கொண்டிருந்தாலே, ஸ்ரீ சக்ரம் அனைத்தும் கொடுக்குமப்பா. கலியுகத்தில், இது மிக மிக அவசியம். சில தீய சக்திகளை அழிப்பதற்கும், இது பயன்படுகின்றது. அப்பனே, இவனை, ஐந்து பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வரச் சொல், பிறகு உரைக்கின்றேன், இது பற்றி கூட.

29. மேருவை பார்த்தேன்! வாங்கலாமா? எது உண்மையானது என்று எப்படி உணர்வது?

மேருவை பார்த்துவிட்டாய் அல்லவா. வாங்கிக்கொள். அவை, இவை என்றெல்லாம் யோசிக்க கூடாது. நீ உண்மையாக பூசை செய்! அது போதும். 

29. அய்யா தெரியாமல் கார் ஓட்டிய பொழுதுஒரு குட்டி நாயை அடித்து விட்டேன். அது முதல் மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என கூற முடியுமா?.

அப்பனே!  பைரவரை வீட்டில் வளர்க்க.  அல்லது பைரவர்களுக்கு தினமும் உண்ண உணவு கொடு. 

30. அய்யா! இவரது அக்கா மகள் 18 வயதாகிறது. இரவில் தினமும், உறக்கத்திலிருந்து அலறி அடித்துக்கொண்டு எழுகிறாள், ஏன் என்று தெரிய வில்லை. இதற்கு ஏதேனும் கூற முடியுமா?

உடனே, குற்றாலத்துக்கு போகச் சொல். அருவி நீர் தலையில் விழ குளிக்கச்சொல். புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதை அடிக்கடி செய்யவேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. அன்பு ஐயா மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

    ஐயா பதிலில் கூறியுள்ளது படி செய்கிறேன்.

    எங்க kelvigalai ஐயாவிடம் கேட்டமைக்கு மிக்க nandri .thangalin sevai
    thodarattum ,ஐயாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete