​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 30 October 2024

சித்தன் அருள் - 1718 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-5!


குருநாதர்: பணத்தை கொடுப்பவன் முன்னே சென்று விடுகிறானப்பா! இறைவன் பின் "உடனடியாக செல்!" என்று அனுப்பி விடுகிறானப்பா! ஆனால் அப்பனே! பின் வரிசையில் நிற்பவன், கடைசியில் பார்க்கின்றான், இறைவன் அது தானப்பா! இதுதான் தர்மம் என்பேன் அப்பனே! கவலையை விடு அப்பனே! அவ்வளவு கர்மாவும் அவனை சேரும் என்பேன் அப்பனே! பின் வரும் காலத்தில் இவை எல்லாம் மாற்றுவேன் என்பேன் அப்பனே! இப்பொழுது வந்தமர்ந்தானே! அவன் உயிரை கூட யான்தான் காப்பாற்றினேன், என்பேன் அப்பனே! அப்பனே, சரியான நேரத்தில் யான் இல்லையென்றால், அவன் இறந்திருப்பான் அப்பனே! பின் அப்பனே, அவனிடம் யான் கைமாறு கேட்டேனா என்ன, சொல் மகனே! 

அடியவர்: என் கேள்வி என்னவென்றால், ஒரு விஷயம் நடந்தபின், நான் தான் காப்பாற்றினேன் என்று சொல்வதில், என்ன பெருமை? அது நடக்காமல் இருந்திருக்க வேண்டும்! 

குருநாதர்: அப்பனே! சொல்லுகிறேன் அப்பனே! அங்கு சாக்கடை இருக்கின்றது! அங்கு தீங்கு இருக்கின்றது! என அப்பனே முன்னே சொல்லிவிட்டால், அதற்காகத்தான் செல்வான் என்பேன் அப்பனே! அதாவது அப்பனே! அங்கு உணவு பின் கொடுக்கின்றார்கள் என்றால், அங்கு தான் செல்வார்கள் அப்பனே! அங்கு சர்க்கரை கொடுக்கின்றார்கள் என்றால் அங்கு தான் செல்வார்கள் அப்பனே! நிச்சயம் நியாயம் நடக்கின்றது என்று சொல், நிச்சயம் செல்ல மாட்டானப்பா! அப்பனே, சொல்லிவிட்டாலும், இதில் என்ன உள்ளது என்று யான் முன்னரே தெரிவிக்க முடியும், அப்பனே! அதற்கும், புண்ணியங்கள், பலப்பல. அப்பனே, யான் சொல்லிக் காப்பாற்றுபவன் இல்லை! அப்பனே! ஆபத்து வந்தால், நிச்சயம் கட்டிப்பிடிப்பேன்! அப்பனே! அன்பு மகன்களே! உன்னை ஒரு மாணவன் என்று நினைத்துக்கொள்! ஆசிரியன் நான் தேர்வுத்தாளை முன்னரே தந்துவிட்டால், நீ எப்படி முன்னேறுவாய்? கூறு! இதற்கு விளக்கம் தரவேண்டும் நீ, நிச்சயம்! 

அடியவர்: அதற்கு மேலும், மதிப்பெண் வாங்குவதற்கு என்ன பண்ண வேண்டுமோ, அதைத்தான் பண்ணப் பார்ப்பேன்!

குருநாதர்: அப்பனே! கேள்வித்தாளயே, உன்னிடம் கொடுத்து விடுகின்றேன். ஆசிரியன் திருடனா? மாணவன் திருடனா? இதற்கு முதலில் பதில் கூறு! அனைவருமே!, இதற்கு பதில் கூற வேண்டும், எது நியாயம் என்று! ஆசிரியன் சரியானவனாக இருந்தால், தக்க நேரத்தில் உதவி விடுவானப்பா! இது தான் குரு! 

அடியவர்: இறைவனுடைய அருகாமையும், இறைவனுடைய நெருங்கிய தொடர்பும், பந்தமும் ஒருவனை ஆபத்திலிருந்து காப்பாற்றாதா?

குருநாதர்: நிச்சயம் அப்பனே! இறைவன் பக்கத்திலிருந்து, ஏதாவது உணர்த்தி நிச்சயம், உன் பிள்ளையே இருக்கின்றது. நிச்சயம் நீ என்ன எண்ணுவாய்? நிச்சயம் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்றுதானே எண்ணுவாய். அது போலத்தான் இறைவனும், தன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அழகாக எடுத்து சென்று விடுவான். அவ்வளவே!

அடியவர்: சரி! தஞ்சாவூரில் அப்பனை தொழுதுவிட்டு, பழனியில் முருகரை பார்க்கச் செல்லும் போதுதான், நான் சொன்ன விபத்து நடந்தது. ஏன், இந்த இரண்டிற்கும் இடையில், இறைவன் அவர்களை பாதுக்காக்க தவறினாரோ?

குருநாதர்: அப்பனே! அறிந்தும் கூட பாதுகாத்துத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே! யோசி!

அடியவர்: எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும்?

குருநாதர்: அப்பனே! ஆசிரியனே சொல்லிக் கொண்டிருந்தால், புத்திகள்..........

அடியவர்: இல்லை, உங்கள் குழந்தை இங்கிருந்து அந்த பக்கம் நடந்து போகிறது, அந்த படியில் தடுக்கி விழும் என்றால், போகாதே என்று தடுத்து நிறுத்த மாட்டீர்களா?

குருநாதர்: அப்பனே! பைத்தியக்காரன்!, அப்பனே, ஒரு குழந்தை விழுந்துவிட்டால், அதை எடுத்துவிட்டால், அப்பனே, விழுந்து எழுந்தால் தான் அருமை தெரியும் அப்பனே! நான் கையை பிடித்திருக்கலாம் என்பேன் அப்பனே!  ஆனாலும், அப்பனே, நீ பார் அப்பனே! நீயும் குழந்தை பெற்றிருக்கிறாய் அப்பனே! தானாக விழுந்துவிட்டால், தானாக எழுந்து விடுவாள் அப்பனே! யான் தூக்கி விட்டால், தூக்கி விடுவார், தூக்கி விடுவார் என்று கடைசியில் கிணற்றில் விழுந்து .... என்ன செய்ய முடியும் அப்பனே! கூறு அப்பனே!

அடியவர்: நான் கேட்பது வேறு விஷயம். எப்படி என்றால், இந்த விபத்து நடந்தது, போன முறை நீங்கள் இங்கு வந்து நாடி வாசித்ததற்கு அடுத்த நாள். நாடி வாசித்த அன்று தான் கிளம்பி போகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கலாம் இல்ல?

குருநாதர்: அப்பனே! நீ குழந்தையப்பா! அவ்வளவுதான் சொல்வேன். பின் விழுந்து, எழுந்திருக்கிறது, அவ்வளவுதான் யான் சொல்வேன்.

அடியவர்: நான் அல்ல, என் நண்பர்களை பற்றி கேட்டேன்!

குருநாதர்: அப்பனே! யாராயினும் சரி! அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. என்னிடத்தில் வரவில்லை என்றால்...... சொல்லக்கூடாது அப்பனே! சில விஷயங்கள் சொன்னாலும், பாபங்கள் ஏற்பட்டுவிடுமப்பா. இதனால் அப்பனே, உலகம், இன்னும் மாற்றம் அடைய வேண்டும். இன்னமும் கேட்டுக் கொண்டு இருக்கின்றாய் அப்பனே! அப்பனே! இறந்திருப்பார்கள் அப்பனே! யான் காப்பாற்றிவிட்டேன் அப்பனே! அவ்வளவுதான்.

அடியவர்: காப்பாற்றிவிட்டேன், அதை பற்றி கேட்காதே என்று எதிர்மறையாக கூறுகிறீர்கள். சரி! விட்டுவிடுகிறேன்! தேவை இல்லை. அந்த விபத்தினால் வந்த சில உடல் பிரச்சினைகள் எல்லோருக்கும் இருக்கிறது. அது எப்பொழுது சரியாகும்?

குருநாதர்: அப்பனே! பிரச்சினைகள் இல்லை. சரி செய்கிறேன் அப்பனே! காப்பாற்ற முடிந்தவனுக்கு, சரி செய்யவும் தெரியுமப்பா!

அடியவர்: அப்படியே ஆகட்டும்! அதுவும் நல்லதுதான்.

சிறிது நேர அமைதிக்குப்பின்......

அடியவர்: தர்மத்தை, நீதியை எல்லோருக்கும் கூறி அறிவை குடுக்கறீங்க! அதை தெரிந்து கொண்டு, அந்த வழியில் ஒரு மனிதனானவன் போகிற பொழுது, விஷயங்கள், வேறு விதத்தில் நடக்கிறது!

குருநாதர்: அப்பனே! நிச்சயம் கலியுகத்தில், பல கவலைகள், நடக்க வேண்டும் என்பது விதியப்பா! ஆனால் நிச்சயம் கவலைகள் இல்லை, தர்மத்தை கடைப்பிடித்து சென்றாலே போதுமானதப்பா. அப்பனே! நிச்சயம் தடுமாறலாம், தாமதமாகலாம், பின்னர் ஜெயிக்குமப்பா. அவன் அருகில் நின்ற தர்மம் ஜெயித்துவிட்டால், அவன் பரம்பரை பரம்பரையாக நன்றாக வாழும் அப்பனே!

அடியவர்: ஐயா! வசியத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

குருநாதர்: யானே என் பக்தர்களை காப்பாற்றிக் கொண்டுதான் வருகிறேன். வசம்பை பயன்படுத்திக் கொள். எங்கு சென்றாலும், வசம்பை உன்னுடன் வைத்துக்கொள். பின்பு, சிறிது பச்சைக் கற்பூரத்தை வைத்துக்கொள், இன்னும் இன்னும் சொல்வதென்றால், வசம்பை வைத்துக் கொண்டிருந்துவிட்டு, இரவினில் இல்லத்தில் ஏரிய வைக்க, அதன் புகை வீடெங்கும் பரவுகின்ற பொழுது அப்பனே! அது சிறிது சிறிதாக அவை கழியுமப்பா, சொல்லிவிட்டேன்! இது அனைவருக்குமே பொருந்தும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete