​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 21 October 2024

சித்தன் அருள் - 1705 - பாகம் 10 - கேள்வி-பதில்!

 

[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 

  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1699 -பாகம் 7 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1702 -பாகம் 8 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1703 -பாகம் 9 - கேள்வி-பதில்!]

91. ஆலயங்களில் இருப்பது இறைவன் அமர்ந்த சிலையா? அல்லது கற்சிலையா? எத்தனையோ வருடங்களாக பூசை செய்த இறைவன் திருஉருவ சிலைகள் உடைக்கப்படுகிறது, கோவில்கள் இடிக்கப் படுகிறது. அவ்வாறு செய்பவர்களை, மற்றவர்கள் கண் முன் இறைவன் தண்டிப்பதே இல்லை. அவர்கள் மேலும் மேலும் பலம் பெற்று, நிறைய தவறுகளை செய்து செல்வச் செழிப்போடு வாழ்கிறார்களே!, இப்படி அழிக்கப்படும்போது நீங்கள் சித்தர்கள், மனிதர்களை திருத்தி வாழ வைக்க வந்த இறை தூதர்கள், எங்கே போய்விட்டீர்கள்?

அனைத்தும் இறைவனுக்குரிய சொந்தங்களே, இதனால், இறைவனே அமைதி காத்திருக்கும் பொழுது, நிச்சயம் இதற்கெல்லாம் மாற்று வரும். ஏன், எதற்கு என்றெல்லாம் இப்பொழுது கேட்டாலும், அவை எல்லாம் வெளியே தெரியாமல் போகும். பின் நடப்பதெல்லாம், நன்மைக்கே என்று உணரவேண்டும். நிச்சயம், இறைவன், அனைத்தும் பார்த்துக்கொண்டே, ரசித்துக்கொண்டே இருக்கின்றான். ஏன், எதற்க்காக என்பவை எல்லாம். இவை எல்லாம் செய்யும் பொழுது, அழிவுகளே மிஞ்சும் என்பது மனிதனுக்கு தெரியாதா என்ன? நிச்சயம் இறைவன் தீண்டினால் (சீறினால்) யாரும் தாங்க மாட்டார்கள். ஏதேனும் கூறிவிட்டாள், இப்படி கூறிவிட்டான் அகத்தியன் என்று கூறுவீர்கள். முதலிலிருந்து சொல்லவேண்டும், சொல்வேன், அப்பொழுது நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். திருத்தலங்கள் அழிகிறது என்றால், மனிதனும் அழிவான் என்று அர்த்தம். ஆனால் மனிதன் வாழ்வதற்கு முயற்சிகள்  எடுக்கவில்லையே, மனிதன் அழிவான் என்றுதான் அர்த்தம். இதனைப்பற்றி இப்பொழுது வேண்டாம்,  சொல்லிவிட்டேன்.இன்னும் நான்  சொல்கின்றேன்.

யாங்கள் அமைத்த ஆலயங்களை யாராவது கையை வைக்கச்சொல். ஆனால் மனிதனோ, ஏதோ ஒரு தீய சக்தியை வசியப்படுத்தி கொண்டு வந்து கீழே வைத்து, அனைவரும் வரவேண்டும் என்று வைத்தால், ஒழுங்காக பார்க்கவும் தெரியாது அவந்தனுக்கு. இப்படித்தான் கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை உணவு உட்கொள்ளக்கூட முடியாத அளவுக்கு உள்ளது பல திருத்தலங்கள். விளக்கு எரிவதற்கு கூட காசுகள் இல்லை. அத்திருத்தலங்கள் எல்லாம் அழியட்டும், பின் புது திருத்தலங்கள் எல்லாம் கட்டட்டும் என்று நீங்களே யோசிக்கின்றீர்களா? 

92. அடியேன் கேட்பது என்னவென்றால், நூறு வருடங்களுக்கு மேல் பூஜை புனஸ்காரம் நடந்த ஒரு கோவில். நரசிம்மரும், ஆஞ்சநேயரும் அமர்ந்த கோவில், அத்தனை சக்தி வாய்ந்தது. இருவரும் வாயை மூடிக் கொண்டு இருக்க, மொத்தமாக இடித்து கீழே போட்டார்கள்! 

இவை எல்லாம் அழிவுக்கு, கலியுகம் எல்லை மீறி, முற்றிக்கொண்டே வருகிறது என்று அர்த்தம். 

93. நரசிம்மன் என்றால், இப்படித்தான் அவதாரம் எடுப்பார், தப்பு பண்ணினால் தண்டிப்பார் என்பதெல்லாம், எங்க போச்சு?

அனைவருக்கும் இப்படிப்பட்ட அழிவினால், கோபம் தான் வருகிறது. அதனால் தான், அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது. இங்கே அழிவுகள் காத்துக் கொண்டு இருக்கின்றது. எதோ ஒரு காரணத்தால் தடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்நேரமே அவ் நகரம் அழிந்திருக்க வேண்டியதுதான். ஏதோ ஒரு காரணத்துக்காக இறைவன் அமைதியாக இருக்கின்றான். யாங்களும் தடுத்துக் கொண்டு இருக்கின்றோம். 

94. இங்கு அதர்மம் தான் வளர்கிறது, எப்படி உழைத்தாலும் தர்மத்தை காணவே இல்லை. 

கலியுகம், இதை அதர்மம் என்று தான் கூற வேண்டும். நிச்சயம் எங்கள் பேச்சை கேட்டால், தர்மத்தை நிலை நாட்டுவோம். கலியுகத்தில் அதர்ம வழியிலே செல்ல வேண்டும் என்பதே விதி. கலியுகத்தில், பின் பாவப்பட்டவர்கள் தான் பிறப்பார்கள். புண்ணியப்பட்டவர்கள், சிறிதளவே. அதனால் தான், புண்ணியங்களை நாங்கள் அழைத்து, அவர்கள் வழி நன்மைகளை உரைத்து, பல பாபங்களை போக்கிக்கொண்டு இருக்கின்றோம். இருப்பினும், கலியுகத்தில், பாப்பம் செய்பவர்கள்தான் அதிகம். என்னை நினைத்துக்கொண்டே இருப்பவர்களின் பாபத்தை போக்கி, நிச்சயம் நன்மைகளை செய்வேன். மெதுவாக செய்தாலும், நீங்கள் கேட்டதற்கு உண்டு, நிச்சயம் தருவேன், அன்பு மகன்களே! அன்பு மகள்களே!

95. உங்கள் கூற்றின்படி கொஞ்சம் நல்லது செய்பவன் கூட நடக்கிற விஷயங்களை பார்த்து, இறைவன், சித்தர்களின் அமைதியை பார்த்து, மனம் வெறுத்து தான் போகிறான். உயர்ந்த கருத்துக்களை நாடியில் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆயினும் நடைமுறைக்கு அது ஒருபோதும் ஒத்துப் போவதில்லையே!

அதனால் தான், அழிவுகள் என்று ஈசன் வைத்திருக்கின்றான். போகப்போக புரியும், பின்பு கேட்கச்சொல். ஆறு மாதங்கள் செல்லட்டும். அப்பொழுது கேட்டால், புத்திகள் வரும், இதற்கு பதில்கள் வரும். 

96.   மூளை தொடர்பான நோய்கள் தீர என்ன செய்ய வேண்டும் ? மூலம் எனும் குறைபாடு சரியாக என்ன செய்ய வேண்டும்?

அப்பப்பா ! முன்னே பொய் சொன்னால், பின்னே. அதாவது, என்னென்ன தேவையானது மட்டும் உட்கொள்ள வேண்டும். தேவை இல்லாததை உட்க்கொண்டாள், அப்பப்பா! முன்னே, பின்னே. தவறு என்று தெரிந்தும் செய்வான், பின் காண்பித்து விடும்.  

97. கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை சரி செய்வதற்கான நடைமுறை என்ன?

அப்பாப்பா! இருந்தும், அதை சரி செய்யவே முடியாது. ஆனால், தானாகவே, 30 வயதுக்கு மேல் அதுவாகவே கழியும். பின் அதற்கான உபாயங்களையும் கூட நிச்சயம் யான் எடுத்துரைப்பேன். ஏன் என்றால், பலங்கள் அதிகம், ராகு, கேதுவுக்கு. நிச்சயம் மறு வாக்கில் சொல்லுகின்றேன்.

 98. மாயையிலிருந்து விடுபடுவது எப்படி? அதற்கு ஏதேனும் மந்திரம் உள்ளதா?

நிச்சயம் யாங்களே, அதற்க்கு வழி தெரிவிக்கின்றோம், வரும் காலத்தில்.

 99. சோழபுரம் சிவன் கோவிலில் சமாதி அடைந்த சித்தர் யார்.( ராஜபாளையம் அருகில்)

சித்தர் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை கூறமுடியுமா? 

அறிந்தும் கூட பக்கத்தில் நிறைய மரணங்கள் நடந்துள்ளது. ஆகவே, அத்திருத்தலத்தில் வந்து யாம் செப்புவோம்.

 100. நீரிழிவு நோயைத் தடுக்க சிறந்த வழி எது? எளிய முறையில் கிடைக்கும் மருந்துகளை கொடுங்கள்.

வெற்றிலை, பாக்கும் நிச்சயம் உண்டு வர உண்டு வர, அது மட்டும் இல்லாமல், பின்னர் மணத்தக்காளி என்ற மூலிகையை உண்டு வர, உண்டு வர, அது மட்டுமல்லாமல், நிச்சயம் ஓடுதல், பின்னர், அதிகாலை, மதியம், பின்னர் இரவில், இந்த மூலிகைகளை தண்ணீரில் சூடாக்கி பின்னர் குடித்தாலே போதுமானது. அனைத்தும் நல்கும். அது மட்டுமல்லாமல், சரியான தேனை எடுத்து, வெறும் வயிற்றில் உட்கொண்டாலே போதுமானது. அதுமட்டுமல்லாமல், உமிழ்நீரை அப்படியே உள்ளுக்குள் அனுப்பிக் கொண்டிருக்க பின் நன்று, ஆசிகள். அதாவது, ஒரு சில கர்மா வினைகளையும் போக்க வேண்டும். வரும் காலத்தில் அதை செப்புவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete