​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 17 October 2024

சித்தன் அருள் - 1697 -பாகம் 6 - கேள்வி-பதில்!

 

[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 

  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!]

51. கோவிலுக்கு செல்வதில் கூட குழப்பம் வருகிறது! அதனால் தான் கேட்டேன்!

அப்பனே! திருத்தலம் செல்லலாம் அப்பனே! அகத்தியன் சொல்வது நடக்கவில்லையே என்று ஏங்குகின்றார்கள். ஆனாலும் திருத்தலத்துக்கு எப்படி செல்ல வேண்டும், எங்கு நிற்க வேண்டும், எங்கு அமர்ந்து தியானங்கள் செய்ய வேண்டும், எங்கு தீபங்கள் ஏற்றினால் நல்லது என்பவைகளை அங்கு இருந்து அவன் உள்ளத்திற்குள் பிரதிபலித்து மாறும் என்பதை எல்லாம் அறிவோம் அப்பனே. யார் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் கடைசியில் யான் தான் சொல்லப் போகிறேன். அப்போது  அப்பனே! உண்மைகளை அவரவர் தெரிந்து கொண்டால் தான் நன்று. இப்பொழுது என்ன சொன்னாலும், இந்த சுவடியை ஓதுபவன் மீதும் குற்றம் வந்துவிடும், அன்பு மகனே. 

52. எளிய பிராணயமம் மூச்சு பயிற்சியை சொல்லித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

அப்பனே! முதலில் எளிமையாக தெரிந்ததை செய்து வரச்சொல். பின்பு உரைக்கின்றேன். 

53. ஐயா சூரிய நமஸ்காரத்தைப் பற்றி கூறவும் ஐயா!

அப்பனே! அவன் எதிரில் சும்மா நின்றாலே போதுமப்பா. உடலால் ஆசனங்கள் செய்து, அங்கப்பிரதக்ஷிணமும் செய்தாலே போதுமப்பா.

54. ஐயனே அகத்தியப் பெருமானே அடியேன் உலக மக்கள் நலம் பெற கோளாறு பதிக்கத்தையும், சிவபுராணத்தையும் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றேன் இந்நூலிற்கு தங்களின் அருள் ஆசியும் சித்த பெருமக்களின் அருளாசியும் சிவபெருமானின் அருள் ஆசியும் கிடைக்க வேண்டும் ஐயனே.... ஓம் அகத்தீசாய நம..

அப்பனே! எம்முடைய ஆசிகள் இருந்ததினால் தான் இதை வெளியிட்டிருக்கின்றான் அப்பனே! என்னப்பா கேள்வி, இது?

55. ஒருவன் அல்லது ஒருவள் ஆன்மீகத்தில் சரியான பாதையில் செல்கிறீர்களா என்று தெரிந்து கொள்வது எப்படி? அவர் தம்மை மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

அப்பனே! அமைதியாக திருத்தலத்தை நாடி, இறைவன் திருத்தலத்தில் அமர்ந்து கொண்டாலே போதுமானதப்பா. மீதியெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே! 

56.ஐயா செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவாக்கப்படும் பசுக்கள் மற்றும் மனித இனங்களுக்கும் ஆன்மபதிவுகள் உண்டா என்றும் அந்த வகையான விலங்கினங்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக் கீரைபோன்ற செயல்பாடுகள் எவ்விடத்தில் பதியப்படும்???

அப்பனே! இவை எல்லாம் ஒரு கேள்விகளா அப்பா! இவற்றை பற்றி இப்பொழுது, தேவை இல்லை. பின்பு உரைப்பேன் இதை பற்றி அப்பனே!

அப்பனே! உங்களையே, யான் பொம்மைகள் என்று சொன்னேன்! அப்பனே! அப்படித்தான் இயக்குகின்றன என்று சொன்னேன். அப்பனே! மனிதன், மனிதனையே இயக்குவானப்பா. இன்னும் ரகசியத்தை எல்லாம் சொல்லுகின்றேன். இதனைப்பற்றி இப்பொழுது விவரமாக குறிப்பிட்டாலும், தேவை இல்லை அப்பனே. நன் முறைகளாக ஒரு பசுவையும், கன்றையும் இல்லத்தில் வளர்க்கச்சொல், பின்பு உரைக்கின்றேன்!

57. ஐயா வணக்கம்   உத்திராக்ஷம்  ஒரு முகம்  ஐந்து  முகம்  எல்லாம் ஒரு சக்தி வாய்ந்ததா கன்னி பெண்கள்  மற்றும் திருமண ஆன பெண்கள்  அணியலாமா? 

அப்பனே! ஈசன் என்றாலே சக்தி மிகுந்தவன் தான் அப்பனே. ஈசன் என்றாலே பின் ருத்திராக்ஷம் என்பேன் அப்பனே. ஈசனை, ருத்திராக்ஷ ரூபத்தில் பார்த்தாலே போதுமானதப்பா! 

58. விஷ்ணு அவதாரங்கள் ,,--- கிருஷ்ணர்,ராமசந்திரமூர்த்தி. போல முருகன் வந்தாரா ? ஞானசம்பந்தரின்   3 வயதில் உமையம்மை ஞானபால் குடுத்தாங்க  அவர் தமிழ்  வளர்க்க வந்ததாரா? 

அப்பனே, இவை எல்லாம் ஒவ்வொரு திருத்தலத்தில் சொன்னால் தான் புரியுமப்பா. முருகன் ஒவ்வொரு திருத்தலத்தில் என்னென்ன செப்பினான் என்றும், ஒவ்வொரு குடும்பத்தை எப்படி காப்பாற்றினான் என்பதும் விவரமாக தெரிவிக்கின்றேன், பொறுத்திருக்க. 

59. இறையருளால் தங்களை  வணங்கி எனது கேள்வி அனுப்புகிறேன். சென்ற முறை கேள்வி -பதிலில் மரம் நடுதல் பற்றி கேட்டேன். அதற்கு ஆதி முதல்வர் அகத்தியர் பத்தாயிரம் மரம் நட உத்தரவு இட்டார். என்னால் இப்போது வரை ஒரு மரம்தான் நட முடிந்தது. என்னுடைய இயலாமையால் தான் நடைபெறவில்லை. தயவு கூர்ந்து அகத்தியர் அருகில் இருந்து நடத்தி தர வேண்டும். என்னை நல்வழி படுத்த வேண்டுகிறேன். அகத்தியர் அருள் வேண்டுகிறேன். ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.

அப்பனே! நடத்தி வைக்கின்றேன் அப்பனே!

60. குருநாதருக்கு அடியனின் பணிவான நமஸ்காரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சில நட்சத்திர ராசிக்காரர்கள் சில கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது என்கிறார்கள் உதாரணமாக தனுசு ராசிக்காரர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் செய்ய கூடாது தரிசித்தால் பிரச்சனைகள் அதிகமாகும் என்கிறார்கள். இதைப் பற்றி குருநாதர் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

அப்பனே! அப்படியே வைத்துக்கொள்வோம் அப்பனே! தனுசு, வில் அம்பை குறிக்கும். அதாவது ராமனை குறிக்கும் என்பேன் அப்பனே. அவன் அவதாரம் தான் நாராயணன் என்பேன் அப்பனே. அவன் மிக கருணை உள்ளவனப்பா. அவனை போய் வணங்க மனிதனுக்கு தகுதிகள் வேண்டுமப்பா. அதாவது, மனிதன் தான் இங்கு தெய்வமாகினான் என உணரவேண்டும். மனிதனை, அதை செய்யக் கூடாது இதை செய்யக் கூடாது என்று கூறி நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்கள், அப்பனே! இதனால் நிச்சயம் எச்சரிக்கிறேன். அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்று கூற மனிதனுக்கு ஏத்தகுதியும் இல்லை அப்பனே. சொல்லிவிட்டேன், அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete