( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12 )
( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய இவ் மதுரை தொடர் வாக்குகளின் முதல் 12 பகுதிகள் 2024ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடந்த சத்சங்கம் ஆகும். மறுநாள் (18-3-2024) காலையில் மீண்டும் சத்சங்கம் ஆரம்பம் ஆனது. பகுதி 13 முதல் இவ்வாக்குகள் தொடர்கின்றது.)
நம் குருநாதர்:- ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் அளித்த குறிப்பை அடுத்து அங்கு உள்ளவர்களை அழைத்தார்கள். கேள்வி பதில் ஆரம்பம் ஆனது)
நம் குருநாதர் :- ( ஓர் அடியவருக்கு ஞான வாழ்க்கை என்று விதி. அவ் அடியவருக்கு உரைத்த வாக்குகளில் உள்ள பொது வாக்குகள்)
ஞான வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்லை. பல இன்னல்கள் பட்டு, பட்டு அறிந்தும் கூட மனக்குழப்பங்கள் பட்டு பைத்திய நிலை ஏற்பட்டு பின் ஞான நிலை அடைவாய்.
உனையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் உன் இல்லத்தில் இருந்தே. சேவைகள் செய். யானே அருகில் இருக்கின்றேன்.
அனைவரிடத்திலும் ஒன்றைச்சொல்கின்றேன். யாருக்காவது இவ்வுலகத்தில் பின் நிச்சயம் மனிதனாயினும், நிச்சயம் பல பல வாயில்லா ஜீவராசிகளாயினும் நிச்சயம் மற்றவர்களுக்குப் பயன்பாடாகவே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இறைவனே கஷ்டத்தை அள்ளிக் கொடுப்பான். பின் அவை மட்டும் இல்லாமல் இறைவனிடத்தில் சேர்ந்து போவீர்கள்.
கலியுகத்தில் இன்னல்களும் இன்னும் சோதனைகளும் பலமாக வரும் என்பேன். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாமல் கூட பக்தியைக் காட்டிலும் ( பக்தியைக் காட்டினாலும் கூட ) நிச்சயம் வரும் அம்மா. ஆனால் புண்ணியம் செய்தவர்கள் நீங்கள். பல ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் ஆயினும் நிச்சயம் அகத்தியன் என்ற பெயரையே நீங்கள் வாயால் உச்சரிக்க முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்கள் அனைவரும் புண்ணியவாதிங்கதான். பல ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அகத்தியன் என்ற வார்த்தையை…( உச்சரிக்க முடியும் ).
நம் குருநாதர்:- ஆனாலும் எந்தனுக்கு கஷ்டங்கள். பின் வேலை இல்லை. இன்னும் பின் படிப்புகள் இல்லை என்பவர்களுக்கு மட்டுமே அதாவது ஏழ்மை இருப்பவர்களுக்கு மட்டுமே எந்தனுக்கு அதிக அளவில் பிடிக்கும் தாயே. அப்பொழுது யாருக்கு யான் செய்வது? இருப்பவனுக்குச் செய்வதா? இயலாதவனுக்குச் செய்வதா?
சுவடி ஓதும் மைந்தன் :- பதில் சொல்லுங்க அம்மா. புரியுதா எல்லோருக்கும்?
நம் குருநாதர்:- எதை என்று புரியப் புரிய. அப்பொழுதுதான் குழம்புவான். புத்திகள் வரும் என்பது.
சுவடி ஓதும் மைந்தன்:- வேலை, காசு இல்லாம இருக்கும்போது, சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்கும் போது புத்தி வருமாம். அப்போதுதான் குருநாதர் போய் பக்கத்தில் உட்காருவார். என்னதான் இவர் செய்வார் என்று பார்க்கலாம் என்று.
நம் குருநாதர்:- பரிகாரமாகவே நான் இருக்கின்றேன் உந்தனுக்கு. உந்தனுக்கு என்ன தேவையோ அதை யான் கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றேன் இப்பொழுது கூட.
அடியவர்:- நான் எங்கு இருக்க வேண்டும்?
நம் குருநாதர்:- எங்கேயாவது இரு. அனைத்தும் என்னிடம்தான்.
அடியவர்:- நன்றி தந்தையே.
நம் குருநாதர்:- யாராவது தந்தைக்கு நன்றி கூறுவார்களா? நீயே பின்னுக்கு போகின்றாய்.
அடியவர்:- அம்மையப்பா மன்னித்து விடுங்கள்
நம் குருநாதர்:- தவறு செய்தவன்தான் தந்தையிடம் மன்னிப்பு கேட்பான்.
அடியவர்:- அம்மையப்பா, அகத்தீசா!!!!!!
ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete