[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்!
முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!]
40.பிறவிக்கடன் என்ன என்பதை ஒவ்வொருவரும் எப்படி அறிந்து கொள்வது? ஆன்மீகம்(ஆசைகள் அற்ற ஒன்று), குடும்ப வாழ்வு (செல்வம் தேவை உள்ளது) எவ்வாறு இணைப்பாக கொண்டு செல்வது?
அப்பனே! இதை நான் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன். ஏதன் மீது நாட்டம் செல்லுகின்றதோ, அதன் மீது சென்று கொண்டுதான் இருக்கும் என்பேன். இதை பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நாட்டம் இருந்தால் யானே தெரிவிப்பேன் அதை. என்னுடைய ஆசிகள்.
41. வாசி யோகம் பற்றி முழுமையான முறை மற்றும் அதன் நிலைகள் மற்றும் இக வாழ்க்கை கடமைகள் ஆற்றும் மனிதர்கள் அதை எம்முறையில் பயிற்சி கொள்ள வேண்டும் என்பதை அகத்தியர் அருள் செய்ய வேண்டுகிறேன்? அதை பயிற்சி கொள்ளும்போது வரும் உடல் சூடு போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும்? ஏற்கனவே இருக்கும் பதிவில் மூச்சு பயிற்சி பற்றி உள்ளது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
அப்பனே! இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவன், அடிக்கடி அண்ணாமலைக்கு செல்ல வேண்டும் அப்பனே! இதை பற்றிய ரகசியங்கள், இன்னும் விவரமாக வரும் என்பேன். எங்கெங்கு நின்று காற்றை உள்ளிழுக்க வேண்டும் என்பதை நிச்சயம் தெரிவிப்பேன். இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே.
42. பிறரிடம் அசைவம் உண்ண கூடாது என்று கூறினால்(அகத்தியர் கூறிய உடல் கிளர்ச்சி அறிவியல் ரீதியாகவோ, பிற உயிரை கொன்றால்/ துன்புறுத்தினால் அதன் வேதனை நமக்கு தோஷத்தை சேர்க்கும் ) சைவம் உணவகங்கள் (கீரை, காய்கறி) உயிர் தானே என்று வாதாடுகிரார்கள். என்ன விளக்கம் கூறினாலும் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
அப்பனே! இவ்வுலகத்தில் மனிதன் அழிய வேண்டும் என்பதுதான். பின்னர் மனிதன், தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். பின்னால் தான் மூளை! அறிவை பலமாகத்தான் கொடுத்திருக்கிறான் அப்பனே! அதைக்கூட சரியாக உபயோகிக்கத் தெரியாத, தன்னையும் கெடுத்து, தன் பிள்ளைகளையும் கெடுத்து, இப்பொழுது தெரியாதப்பா. தவறு செய்தவன் ஒருநாள் உணர்வான். ஓரிடத்தில் கைகட்டி பதில் சொல்ல வேண்டும். இவை எல்லாம் இப்பொழுது சுகமாகத்தான் இருக்குமப்பா. கடைசியில் பார்த்தால், எது ஒரு மனிதனுக்கு கடினமாக இருக்கிறதோ, அது பிற பகுதியில் சந்தோஷத்தை கொடுக்கும், எது ஒன்று இன்று சந்தோஷமாக இருக்கின்றதோ, அதை உட்கொண்டால் சந்தோஷமாக இருந்தால், வரப்போகும் நோய்க்கும் தயாராக இருக்க வேண்டும்.
43. திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற ஊர்களில் அகத்தியப்பெருமானின் ஆசி வாக்கு என நாடி வாசிக்கிறார்களே, அது உண்மையா என நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?
அப்பனே! போகப்போக இதை யார் ஒருவன் கேட்டானோ அவனுக்கே, தெரிய வைக்கிறேன் அப்பனே!
44. அய்யனே, பல இடங்களிலும், நீங்கள்தான் நாடியில் வந்து வாக்கு உரைக்கிறீர்கள் என கூறி நாடியை வைத்து பணம் சம்பாதிக்கும் மனிதர்களை வளரவிட்டு, நீங்கள் மௌனமாக இருப்பது ஏனோ?
அப்பனே! திருடனுக்கு கூட இறங்குவான் என்பேன், இவ் அகத்தியன்.
45. அய்யா வணக்கம் என் கூடப்பிறந்த அண்ணன் மகள் பெயர் நந்தினி வயது 22 நெஞ்சு பகுதியில் கட்டி உள்ளது அதை அறுவை சிகிச்சை செய்து சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள் அய்யா , குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர் மகளுக்கு மருத்துவராக குரு நாதர் அகத்திய பெருமான் இருக்க வேண்டும்.
அப்பனே, அறிந்தும் கூட மருத்துவராக யானே வருகின்றேன் அப்பனே.
46. குரு தேவருக்கு அடியேனின் வணக்கம் ஐயா.தினமும் வீட்டில் செய்ய கூடிய பிராத்தனை குறைந்தபட்சம் ஒரு 100 பேரையாவது ஆபத்தில் இருந்து காக்க வேண்டும். இதை சாத்தியப்படுத்த எவ்வாறு இறைவனை தொழுவது ஐயா.நன்றி!
நினைத்தாலே முக்தி தருவது திரு அண்ணாமலை. நினைத்தாலே இவ் பிள்ளைக்கு யான் தருவது அன்பு பரிசு! நிச்சயம் யான் பார்த்துக் கொள்ளுகின்றேன், நினைக்கச்சொல். சந்தோஷமே.
47. " இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் புத்தகங்கள்,செவி வழி செய்திகள் மூலமாக பல்வேறு கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்ற நிலையில், அதில் சிலவற்றை தேர்ந்து எடுத்து,ஸ்தல பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்கிறோம். இந்த ஆன்ம தேர்வு, ஒவ்வொரு ஆன்மாவிற்கும்,அதனின் தேவைக்கு ஏற்ப,ஈசனின் கட்டளை என்று சொல்வது சரியாக இருக்குமா?"
அப்பனே! இன்னும் பல ரகசியங்களை தெரிவிக்கின்றேன். இவ் திருத்தலத்திற்கு சென்றால், இறைவனை வணங்கினால், ஒளிக்கதிர்கள் ஒருவனுக்கு கிடைக்கும் என்பதை, நிச்சயம் அட்டவணைப்படுத்தி யான் சொல்கின்றேன், அப்பனே! பக்தர்களில் கோடியில் ஒருவனுக்கு இது தெரியுமப்பா. ஆகவே என் பக்தர்களுக்கும் வாய்ப்பளித்து, திருடனுக்கு ஒரு வாய்ப்பளித்து கொடுப்பேன், அனைத்தும் தெரிவிக்கின்றேன், அன்பு மகன்களே!
48. "உடல் நிலை,மன நிலை, வாழ்க்கை நிலை பாதிப்பு ஏற்பட்டால் தான் இறை அருள் கிடைக்குமா? இயற்கையையும் குருவையும் சார்ந்து இருக்கும் போது இவைகள் ஏற்படக்கூடாது, இல்லையா?"
அப்பனே! துன்பப்பட்டால் தான் இறைவன் அருகிலே இருப்பான். அதனால், அப்பனே! செதுக்க செதுக்க செதுக்க, புரிந்து கொள்ளப்பா. யான் ஒன்றும் சொல்வதற்கில்லை அப்பா!
49. (நால்வர் பெயர் சொல்லி) அத்தனை பேர் நாடியிலும் வந்து வாக்குரைத்தது, வாக்குரைப்பது நீங்கள் தானா?
அப்பனே! இதை பற்றி இப்பொழுது சொன்னாலும் வேண்டாமப்பா! பின் உணர்த்துகின்றேன் அப்பனே! கவலையை விடு அப்பனே!
50. ஏன் என்றால், ஒரே விஷயத்தைப்பற்றி, இந்த நாலு பேர் நாடியிலும் நாலு விதமாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்பொழுது, எதை தொடர்ந்து போவது என்பதில் மிகுந்த குழப்பம் வருகிறது!
அப்பனே! இவ்விவாதம் இப்பொழுது வேண்டாமப்பா. போகப்போக உனக்கு புரியும். தற்பொழுது, உனக்கே புரிந்திருக்கும், அப்பனே! இப்பொழுது வேண்டாமப்பா!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
This comment has been removed by the author.
ReplyDeleteRead the answer to question No:49
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி ஐயா, ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete