​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 29 September 2024

சித்தன் அருள் - 1686 - அன்புடன் அகத்தியர் - பழனி!




24/9/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். பழனி மலை.

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே ஆசிகள்... அப்பனே அறிந்தும் கூட அழகாகவே அப்பனே போகன் அப்பனே முருகனை வடிவமைத்தானப்பா. 

ஆனாலும் அப்பனே இவ்வாறு அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிச் சொல்லி வடிவமைத்தானப்பா... முருகா முருகா என்றெல்லாம் நினைத்து நினைத்து முருகனை எதை என்றும் அறிந்தும் கூட இவ்வாறெல்லாம்... மனிதர்கள் இங்கு வந்தால் நிச்சயம் பின் எவ்வாறு மனம் இருக்க வேண்டுமோ... அவ்வாறு மனம் இருந்தால் நிச்சயம் பின் உன்னுடைய அருள்கள் பின் தானாகவே அறிந்தும் கூட கைகளில் பின் தங்கி பின் அவர்களையும் கூட பின் தாக்கும் பொழுது... கூட அவர்களுக்கு அனைத்தும் நிறைவேறும் என்று. 

ஆனாலும் அப்பனே அவ் எண்ணங்கள் போல் வருவது பின் எவை என்று கூட கஷ்டங்களே என்பேன் அப்பனே 

சில மனிதர்கள் தான் பின் எதை என்று அறிந்தும் கூட பின் அவ் எண்ணங்களோடு வருகின்றார்கள் என்பேன் அப்பனே 

அவ்வாறு வருவதற்கெல்லாம் அப்பனே தானாகவே அப்பனே பின் கைகளில் எதை என்று அறிய அறிய சில கதிர்கள் இருக்குமப்பா!!!

அப்பனே தானாகவே அறிந்தும் கூட அதை நிச்சயம் பின் மனிதர்கள் மீது படும்பொழுது அப்பனே சில கர்ம வினைகள் நீங்கி அதாவது பாவங்கள் நீங்கி அப்பனே புண்ணியங்கள் அப்பனே ஆரம்பம் ஆகும் அப்பா 

ஆனாலும் மனிதர்களுக்கு இவை யாருக்குமே பின் தெரிவதில்லை என்பேன் அப்பனே 

அதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே 

எண்ணங்கள் உயர்வாக இருந்தால் போதுமானதப்பா 

அப்பனே அறிந்தும் கூட பின் அனைத்தும் அதாவது உங்களிடத்திலும் எதை என்று அறிய அறிய சில  துகள்கள் இருக்குமப்பா!!!

அப்பனே அவ் எண்ணங்கள் சரியாக இருக்கும் பொழுது அத் துகள்கள் அப்பனே ஆடிக் கொண்டே பலமாக அப்பனே வேகத்துடனே ஆடிக் கொண்டிருக்குமப்பா!!!

அதேபோலத்தான் அப்பனே முருகனின் கைகளில் கூட அப்பனே எப்பொழுதும் சில துகள்கள் ஆடிக்கொண்டே இருக்குமப்பா!!!

அப்பொழுது பின் நல் எண்ணத்தோடு (பழனிக்கு)அங்கு சென்று முருகனை வழிபட்டால் அப்பனே... பின் எதை என்று அறிய அறிய அத் துகள்களும் கூட... இத் துகள்களுடன் அப்பனே வேகத்தோடு பின் ஒட்டும் பொழுது அப்பனே பின் நீங்கள் விரும்பியது நடக்குமப்பா !!நடக்கும் !!!


(பழனி முருகனின் கைகளில் இருக்கும் துகள்களின் கதிர்வீச்சு நல் எண்ணத்தோடு பழனி முருகனை கைகூப்பி தொழுது வணங்கும் பொழுது மனிதர்கள் கைகளில் இருக்கும் துகள்களின் கதிர்வீச்சு இரண்டும் ஒன்றாக ஒட்டிக் கொள்ளும் பொழுது மனிதர்களுடைய நியாயமான கோரிக்கைகள் வேண்டுதல்கள் வழிபாடுகள் இவை எல்லாம் முருகனின் ஆசிர்வாதத்தோடு நன்றாக நடக்கும்)


ஆனாலும் இவை தன் அப்பனே ஆயிரத்தில் ஒருவனுக்கே தெரியுமப்பா இவைகள்!!! என்பேன் அப்பனே 

ஆனாலும் பின் அதனால்தான் அப்பனே தெரியாமல் வணங்கி விடாதீர்கள்... அப்பனே தெரியாமல் வணங்கி விடாதீர்கள் என்பவை எல்லாம்... சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே

பின் தெரிந்து வணங்க வேண்டும் என்பேன் அப்பனே

இறைவனிடத்தில் எப்படி வணங்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் செப்பிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

அதனால் அப்பனே இறைவனிடத்தில் அப்பனே நின்றாலே போதுமானதப்பா!!!

அப்பனே மனதில் என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து இறைவன் பரிசுத்தமாக கொடுப்பானப்பா!!!

அது மட்டும் இல்லாமல் பின் முருகன் எதை என்று அறிய அறிய பின் போகனை.... (போகர் சித்தரிடம்) உந்தனுக்கு என்ன வேண்டும்???? என்று!!! கடைசியில் பின் எடுத்துரைக்கும் பொழுது!!!!

போகர் சித்தர் 

முருகா!!!!!.... பின் உன் மீது அன்பு தான்!!! அறிந்தும் கூட பின் உன்னை எப்படி யான் விட்டு விட்டு செல்வது???

அப்பொழுது நிச்சயம் அறிந்தும் கூட பின் என்ன வேண்டுமானாலும் கேள்!!! என்று முருகனும் கூட!!!!

எதை என்று அறிய அறிய அதாவது பின் எதை என்று கூட உன் அருகிலேயே யான் இருக்க வேண்டும் என்று போகன்...

இதனால் அதாவது பின் எப்படி எதை என்று அறிய முருகா!!! எவை என்று கூட உன் அருகிலே இருக்க வேண்டும் உன் காலடியிலே இருக்க வேண்டும் என்று போகனும் கூட!!!

ஆனாலும் அறிந்தும் கூட முருகன்... எவை என்று அறிந்தும் கூட... 

போகர் சித்தர் 

முருகா எவை என்று அறிய அறிய...... உன்னை விட்டு யான் நீங்க கூடாது!!!! இங்கு வருபவருக்கெல்லாம் பின் நல் மனதாக உள்ளவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்!!! அதுமட்டுமில்லாமல் பின் நோய்கள் நொடிகள் கலியுகத்தில் பின் எதை என்று அறிய அறிய வரும்!!... பின் அவற்றையெல்லாம் பின் தீர்த்து மனிதனுக்கு அதாவது பின் எவை என்று கூட.... நீதான் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட!!!

முருகா!!! எதை என்று அறிய அறிய பல பல பேர்களையும் கூட நீ கவனிக்க முடியாது கலியுகத்தில்.    

அதனால் நிச்சயம் அறிந்தும் கூட....அவ் மனதுகளை அறிந்தும் கூட நோய்களையும் கூட யான் நீக்கி நிச்சயம் எவை என்று அறிய முருகா!!!! வரத்தைக் கொடு என்றெல்லாம்!!!

(முருகனிடம் போகர் சித்தர் இங்கு வருகின்ற மனிதர்களின் மனதை ஆராய்வதற்கும் நோய்நொடியை தீர்ப்பதற்கும் எந்தனுக்கு வரத்தைக் கொடு என்று) 

ஆனாலும் எதை என்று எவை என்றும் புரிய புரிய பின் எதை என்றும் அறிந்தும் கூட... புரிந்தும் கூட பல வகையிலும் கூட... போகனும் கூட பின் கைகளையும் பின் எதை என்று கால்களையும் தொட்டு தொட்டு முருகா!!! மனமில்லையே அறிந்தும் கூட உன்னை பிரிய மனமில்லையே... என்று அறிந்தும் கூட 

அப்பொழுது அறிந்தும் கூட எதை என்று கூட எவை என்று புரிய புரிய நிச்சயம் முருகா!!!
எனை எதையாவது மாற்று இங்கேயே...!!! அறிந்தும் எதை என்றும் புரிந்தும் இருக்கின்றேன்... உன் கைகளிலே இருக்க வேண்டும் என்று!!!


இதனால் பின் முருகனும் தண்டமாக மாற்றி விட்டான்!!!

(பழனி தண்டாயுதபாணி கைகளில் இருக்கும் தண்டம்  போகர் சித்தரின் மறு வடிவம்)

அப்பா!!!!!

அறிந்தும் கூட அத் தண்டத்தைப் பற்றி யாருக்காவது தெரியுமா????? என்றால் அப்பனே நிச்சயம் தெரியாதப்பா!!!

அப்பனே வரும் வரும் காலங்களில் சித்தர்கள் யாங்கள் தெரிவிப்போம் அப்பனே!!!!

இங்கே எதை என்றும் எவை என்றும் புரிகின்ற பொழுதும் கூட அப்பனே... பின் முருகனின் கைகளிலே போகன் இருக்கின்றானப்பா அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!!

பின் வருவோருக்கெல்லாம் நல் மனதாகவே அப்பனே இருந்தாலே அப்பனே பின் நிச்சயம் தண்டம் அப்பனே சிறிதாக ஆடுமப்பா!!!

அப்பனே நிச்சயம் அப்பொழுதே அனைத்து நோய்களும் போய்விடும் அப்பா... அப்பனே இதுதான் அப்பனே விளையாட்டு என்பேன் அப்பனே. 

இன்னும் இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது அப்பனே...இவ் மலையில் கூட அப்பனே.... அவையெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தால் அப்பனே... இன்னும் எதை என்று அறிய அறிய ரகசியங்களை எல்லாம் எடுத்து வருவேன் அப்பனே... பின் மனிதர்களுக்கு புரிவதற்கு எதை என்று அறிய அறிய அப்பனே !!!


அதாவது கலியுகத்தில் புரியாமல் வாழ்கின்றார்கள் என்பேன் அப்பனே... புரியாமல் வணங்குகின்றார்கள் என்பேன் அப்பனே.... அவ்வாறு பின் வணங்குகின்ற பொழுது.... எவ்வாறப்பா???? ஆசிகள் கிடைக்கும்???? அப்பனே!!!

பின் முருகனை வந்து வந்து வணங்குகின்றார்கள் அப்பனே ஆனாலும் எதற்காக??? வணங்குகின்றோம்!!! எவை என்றும் அறிந்தும் கூட... அறியாமல் கூட அப்பனே... ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் ஆசிகள் கிடைக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!

அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும்... அப்பனே எதை என்றும் அறிய நீதி நியாயம் எவை என்று அறிய அறிய அப்பனே தர்மத்தோடு அப்பனே எதை என்று அறிய அறிய அப்படி என்னால்... வாழ முடியவில்லையே மனிதனாக பிறந்து விட்டேனே என்றெல்லாம்... நீங்கள் யோசிக்கலாம் என்பேன் அப்பனே...


ஆனாலும் முருகா!!! எதை என்று அறிய அறிய வந்து விட்டேனே பின் நிச்சயம் ஏதாவது குறைகள் இருந்தாலும் என்னை மாற்றி பரிசுத்தப்படுத்தி அனைத்தும் கொடு என்று வேண்டிக் கொண்டால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அப்பனே..... தீயவனையும் கூட பின் நல்லோர்களாகவே மாற்றி விடுவான்!!!

அப்பனே இதற்கு பின் சான்றாக ஒரு உதாரணமாகவே இப்பொழுது யான் நிச்சயம் சொல்வேன் அப்பனே!!!

அதாவது...இப் பழனி தன்னில் அப்பனே நிச்சயம் எதை என்று கூட இது கலியுகத்திலே நடந்ததப்பா!!!

அப்பனே அதாவது அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட இதனால் அப்பனே முருகன்... பார்த்துக் கொண்டே இருந்தான் என்பேன் அப்பனே... இங்கு பின் ஒரு திருடன் இருந்தானப்பா!!!

அவன் அதாவது பக்தர்கள் இடத்திலெல்லாம் வருவது... பின் எதை என்று அறிய அறிய பக்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பின் அதாவது நகைகளை பறித்துக் கொள்வது... இன்னும் எதையெதையோ செய்து கொண்டிருந்தான்... பணத்தை எடுத்துக் கொள்வது என்று. 


ஆனாலும் சந்தோசமாக வாழ்ந்து வந்தான் அறிந்தும் கூட... எதை என்றும் அறிய அறிய..

ஆனாலும் பின் அவந்தனும் முருகனை வணங்குவானப்பா!!!

முருகா!!! இன்றைக்கு கொடுத்தாயே (வருமானம்) இதுவே போதும்!! என்று!!!
இப்படியே அறிந்தும் கூட.....

ஆனாலும்...

(நகைகளையும் பணத்தையும்பறிகொடுத்தவர்கள்) 

 அவர்களோ !! முருகா எதை என்றும் அறிந்தும் கூட உன்னை நம்பி தானே... வந்தேனே!!! இப்படி நகை பறிபோய்விட்டதே!!! எதை என்று அறிய அறிய பணங்கள் பறிபோய் விட்டதே!!!!!

அய்யய்யோ!!! முருகா!! முருகா!!...... என்றெல்லாம் அடித்துக் கொள்வார்கள்!!!

பின் முருகா !! உனை யான் வணங்கப் போவதுமில்லை... உன்னிடத்தில் வந்து தான் நகைகள் தொலைந்து விட்டது அதனால்... எதை என்றும் அறிய.அறிய.


அப்பனே இங்கு எவை என்று அப்பனே எதை என்று அறிய அறிய... இங்கு எதைக் குறிக்கின்றது அப்பனே???

பக்தியையா???? குறிக்கின்றது?? அப்பனே???

பாருங்கள் அப்பனே!!!!!

எதை என்று புரிய  புரிய இதனால் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே முருகன் கவனித்துக் கொண்டே இருந்தான்.... பார்ப்போம் என்று!!!

ஆனாலும் அவர்கள் இல்லத்திற்கு அதாவது நகைகள் எல்லாம் பறிபோனதே... அவர்கள் இல்லத்திற்கு சென்றான் முருகன்...

ஆனாலும் அப்பனே இவ் நகைகளுக்காக அப்பனே எதை என்று அறிய அறிய அவர்கள் இல்லத்தில் படங்கள் எல்லாம் முருகனின் படங்கள் எல்லாம் இருந்ததப்பா.... அதையெல்லாம் எடுத்து வெளியே தூரே!!! வீசிவிட்டார்கள் அப்பனே!!! எதை என்று அறிய அறிய அப்பொழுது.... இங்கு பாருங்கள் !!!அப்பனே!!!

பின் கலியுகத்தில் பின் பணங்களுக்கு தான் எவை என்று அறிய அறிய பின் நகைகளுக்கு தான் மதிப்பா????????????????

எதை என்று புரியப் புரிய அப்பனே மீண்டும் ஒரு நாடகத்தை ஆடினான் முருகன்.. எதை என்றும் அறிய எவை என்றும் புரிய.....

இதனால் பின் அவ் இல்லத்திற்கு எதை என்று கூட‌ அவ் ஊரில் நிச்சயம்.... பலத்த மழையை பெய்வித்து.... நிச்சயம் அவ் இல்லத்தில் கூட நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரியாமலும் கூட நிச்சயம் நீரும் கூட பின் எவை என்று தேங்கி நின்றது!!!(வீடு முழுவதும் வெள்ளம்)

பின் அவர்கள் நினைத்தார்கள் அறிந்தும் கூட.... முருகா எதை என்றும் அறிந்தும் கூட..... யாங்கள் என்ன தவறு செய்தோம்????? இவ் இல்லத்தைக் கூட விட்டு எதை என்று அறிந்தும் கூட கூட விட்டு வைக்கவில்லையே... பின் முருகா!!! என்று பின் ஓடோடி வந்தார்கள்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே எது எவை என்று அறிய அறிய ஆனாலும்.... வரும் வழியில் அப்பனே... சில விபத்துக்கள்!!!
அவர்களுக்கு.....

முருகா!!! எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை நிச்சயம் நீ இருந்தால் மட்டுமே போதுமானது!! என்றெல்லாம் அப்பனே பின் காலடியில் சரணடைந்து விட்டார்கள் என்பேன் அப்பனே!!! முருகா நீயே அனைத்தையும் பார்த்துக் கொள் என்று!!!

அப்பனே இவ்வாறு தான் அப்பனே... சோதனைகள் நடக்குமப்பா.... சோதனைகளில் அப்பனே பின் நிச்சயம்... ஜெயிக்க வேண்டுமே தவிர... அப்பனே பின் இறைவன் இல்லை என்று அந் நேரத்தில் சொல்லக்கூடாதப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இக்கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய.... ஆனாலும் அத்திருடன்.... அப்பனே இப்படியே செய்து கொண்டிருந்தான் என்பேன் அப்பனே 

அவந்தனுக்கு சந்தோசங்கள் அப்பனே... திருடுவான் உண்ணுவான்.... அப்பனே முருகா என்று சொல்வான் அப்பனே..

ஆனாலும் இல்லத்தில் வைத்து விடுவான் அனைத்தையும் கூட அப்பனே (திருடிய பொருள்கள்)

இவ்வாறு திருடிக் கொண்டு திருடிக் கொண்டு அப்பனே இல்லமே நிரம்பி விட்டது என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பொழுதுதான் யோசித்தான்.... இவ்வளவு நகைகள் எதற்கு??????

அறிந்தும் எதை என்று அறிய அறிய இனிமேல் திருடக்கூடாது என்று... ஆனாலும் மீண்டும் வந்தானப்பா!!!

பின் ஆனாலும் பின் நகைகள் அணிந்து கொண்டு ஒரு பெண்ணானவள் அப்பனே.. அப்படியே எதை என்று அறிய அறிய பின் எதை என்று அறிய அறிய முழுவதுமாக பின் கழுத்திலும் கூட காதுகளிலும் கூட.... ஆனாலும் இவந்தனுக்கு ஆசைகள் வந்துவிட்டதப்பா...

எவ்வாறு பிடுங்க வேண்டும் என்று???.... அந்தப் பெண்ணிடமிருந்து அனைத்தையும் பிடுங்கி சென்று விட்டானப்பா!!

ஆனாலும் எதை என்று... முருகா என்று சொன்னான்!!!

அப்பனே இப்படியே பின் மீண்டும் மீண்டும் அப்பனே எதை என்று கூட இல்லத்தில் அடுக்கி விட்டான் அப்பனே... ஆனாலும் எதை என்றும் புரிந்தும் கூட 

இதனால் பின் எவை என்றும் அறிய அறிய இவ்வளவு நகைகள் இவ்வளவு பணங்கள் வந்துவிட்டது... யான் என்ன செய்வோம் என்று அவனுக்கு அதாவது சிந்திக்க தொடங்கி விட்டானப்பா!!!

ஆனாலும் சரி... இனிமேல் பின் கொள்ளையடிக்க கூடாது... ஆனாலும் பின் கொள்ளையடித்தவர் அதாவது பறிகொடுத்தவர் இல்லங்களுக்கெல்லாம் செல்வோம்... சென்று பார்ப்போம்!!!

அதாவது அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எப்படி செல்வான்??? என்றெல்லாம் நீங்களும் யோசிக்கலாம்!!!

நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிந்தும் கூட அதாவது நிச்சயம் இவந்தனுக்கு... தெரியும்!!!! பின் வந்தவர்கள் யார் ? என்று!!!

எதை என்றும் புரிய புரிய எதை என்று கூட அதாவது பின் அதாவது இவந்தன் பின் அதாவது... இவந்தனுக்கு ஒரு யோசனை இருந்தது.... அதாவது இவ் நகைகள் யாருடையதோ!!! அதை தன் வாசனையாலே பின் கவனித்து இல்லங்களில் யார் எதை என்று அறிய அறிய எங்கு இருக்கின்றார்கள் மனிதர்கள் என்பவை எல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டு அங்கு செல்வான்..

இதனால் எதை என்றும் அறிந்தும் கூட பின் அனைவருமே புலம்பிக் கொண்டிருந்தார்கள் பின் அங்கு சென்றோமே... அதாவது பழனி மலைக்கு சென்றோமே... இவ்வாறு ஆகிவிட்டதே என்று.... திருடு போய்விட்டதே என்று!!!

பார்த்தால் ஒன்றுமே எதை என்று அறிய அறிய அனைவரும் புலம்பி கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் முருகனை மறந்து விட்டார்கள்..

எதை என்றும் புரிய மீண்டும் வந்தான்..பழனி தனக்கு !!

எதை என்று அறிய இவ் நகைகளுக்காக எதையென்றும் அறிய அறிய எதை என்றும் புரிந்தும் கூட... இப்படியா???

ஆனால் இவர்களுக்கு முருகன் மீது அன்பு இல்லையா?? என்று!! யோசிக்கத் தொடங்கினான் இத்திருடன் கூட! 

இதனால் பின் அமைதியாக உட்கார்ந்தான்!!! பார்ப்போம் இன்னும் எப்படி வருகின்றார்கள் என்று!!! எதை என்று கூட எதிர் நோக்கினான்!!! பல ஆண்டுகள்!!

ஆனாலும் அவர்களும்  வந்தார்கள் ஆனாலும் அவர்கள் என்ன எதை என்றும் அறிய அறிய நினைத்தார்கள் என்றால் இங்கு தான்... வந்தோம்!!! இங்குதான் எங்களுடைய நகைகளை பறிகொடுத்தோம் என்று நினைத்தார்களே தவிர... முருகனை மறந்து விட்டார்கள் அப்பனே..

(நகைகளையும் பணங்களையும் பறிகொடுத்தவர்கள் மீண்டும் பழனி மலைக்கு வந்து முருகனை நினைக்காமல் இங்கு தான் எங்கள் நகைகள் களவு போனது பணங்கள் திருட்டு போனது... என்றெல்லாம் நினைத்தார்களே தவிர முருகனை நினைக்கவில்லை)

இப்பொழுதெல்லாம் இப்படித்தானப்பா!!!!...

மனம் எங்கோ... விட்டு விட்டு அதாவது மனதை எங்கோ எதையோ நினைத்துக் கொண்டு விட்டு விட்டு... இங்கு எவை என்று புரிய புரிய... முருகா!!! முருகா!!! என்று வாய் தான் சொல்கின்றதப்பா!! அப்பனே 

முருகன் எப்படி கொடுப்பானப்பா????

யார் மீது தவறு??? இது!!! சொல்லுங்கள் அப்பனே!!! நீங்களே எதை என்று புரியப் புரிய!!

இதனால் அப்பனே பக்தி என்பது அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!

அனைத்திலும் ஜெயிக்கலாம் அப்பனே!!!

ஆனால் பக்தியில் ஜெயிப்பது அப்பனே இவ்வுலகத்தில் சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் இவ்வுலகத்தில் பக்தியை வைத்துக் கொண்டு ஏமாற்றுவான் மனிதன் அப்பனே.... அதை இதை அவை இவை என்றெல்லாம் கதைகள் பேசுவான் என்பேன் அப்பனே 

ஆனால் பின் எவை என்று அறிய அறிய அனைத்தும் எவை என்று புரிய புரிய அப்பனே தன்னுடைய பின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே பின் அதாவது பக்திகள் உள்ளோர்கள் எல்லாம் சில சில சமயங்களில் கூட அப்பனே பின் எவை என்று கூட எல்லை மீறுவார்கள் என்பேன் அப்பனே 

பின் வேடங்கள் போட்டுக்கொண்டு அப்பனே  எதை எதையோ செய்வார்கள் என்பேன் அப்பனே...

ஆனால் அவன் குடும்பத்தை அவனால் பின் நிச்சயம் காக்க முடிவதில்லை என்பேன் அப்பனே 

ஏன்? எதனால்?? என்றெல்லாம் அப்பனே... வரும் வரும் வாக்கியத்தில் யான் சொல்வேன் என்பேன் அப்பனே ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட அப்பனே 

அவை புரிந்து கொண்டால் நன்று!!!

இதனால் அப்பனே அதனால் தான் அப்பனே படிப்படியாக அதாவது ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு அப்பனே இவை தன் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே இவ்வாறு பின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு அப்பனே பின் எவை என்று கூட வணங்க வேண்டும் 

ஆனாலும் ஏனோ தானோ என்று கூட அப்பனே முதலிலே அப்பனே இறைவனை வணங்கி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாமலும் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமலும் மூன்றாம் வகுப்பில் பின் தேர்ச்சி பெறாமலும் அப்பனே எவை என்று அறிய அறிய... அப்பனே பத்தாம் வகுப்பிலே தேர்ச்சி பெற வேண்டும் என்றால்.... பக்தி ஒன்றும் தெரியாதப்பா 

இதே போலத்தான் அப்பனே பல நபர்கள் எதை என்றும் அறிந்தும் எவை என்றும் புரிந்தும் கூட பக்தி பின் தெரியாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே 

எவ்வாறப்பா??? இறைவன் கொடுப்பான்?? என்பேன் அப்பனே!!

அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் வருகின்ற பொழுது அப்பனே இறைவன் அருகிலே இருப்பானப்பா... சொல்லிவிட்டேன் அப்பனே... பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே பின் எவை என்று கூட பார்ப்போம் என்று இறைவன் பக்கத்திலே இருப்பானப்பா...

அப்பனே இன்பத்தில் அப்பனே நிச்சயம் இன்பமாக இருக்கும் பொழுது... இறைவன் அப்பனே தொலைவில் இருக்கின்றான் என்று தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பொழுது... துன்பம் பின் வந்தால் அப்பனே இறைவன் அப்பனே பார்ப்பானப்பா... ஒவ்வொரு மனிதனின் பின் மனதையும் பார்ப்பானப்பா!!! நல்விதமாகவே அப்பனே!!!

நிச்சயம் அதில் கூட நீங்கள் மனதாலே ஜெயித்து விட்டாலே அப்பனே இவ்வுலகத்தை ஜெயித்து விடலாம் என்று அப்பனே 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய....அத் திருடன் மீண்டும் மீண்டும் வந்தான்..

இவ்வளவு நகைகள் இவ்வளவு பின் பணங்கள்... இவ்வளவு பின் எதற்காக??? திருடினோம்?? பின் எதை எவை என்று அறிய அறிய!!!... மீண்டும் முருகா!!!! என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் அனுதினமும் முருகா முருகா என்றே சொல்லிக் கொண்டிருப்பான்...

ஆனாலும் முருகனும் எதை என்று அறிய அறிய பார்த்துக் கொண்டே இருந்தான்... ஆனாலும் இவந்தனுக்கு தண்டனைகள்... கொடுக்கவில்லையா?? என்று நீங்களும் கேட்கலாம்!!!

பின் இவ்வளவு திருடினானே இவந்தனுக்கு... உடனடியாக நிச்சயம் முருகன் தண்டனைகள் கொடுக்கலாம் என்று...

ஆனாலும் அப்பனே ஒன்றை நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும் அப்பனே...

பின்  இறைவன் சாதாரணமானவன் இல்லை என்பேன் அப்பனே... இறைவன் மிகப் பெரியவனப்பா!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் பொறுத்துக் கொள்வான் அப்பனே....

ஆனால் கடைசியில் தான் அப்பனே கொடுப்பான் என்பேன் அப்பனே தண்டனைகள்...

எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே துன்பங்கள் வருவது அப்பனே பின் எவை என்று கூட இறைவனே அதாவது பின் இறைவனே கொடுப்பது என்பேன் அப்பனே... பின் இன்பம் வருவதும் எதை என்று கூட இறைவனே கொடுப்பது என்பேன் அப்பனே..

யாராலும் இன்பத் துன்பத்தை அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே போக்கவும் முடியாது எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட முடியாதப்பா 

இறைவனே அப்பனே தந்து கொண்டிருக்கின்றான் அப்பனே பின் துன்பத்தை இறைவனே தந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அப்பனே பின் துன்பம் போக்க வேண்டும் என்று இறைவனிடத்திலே கேட்பான் அப்பனே மனிதனே 

எவ்வாறப்பா??? நியாயம்? அப்பனே!!!

அப்பொழுது இறைவன் மௌனத்தை காத்திருப்பான்....

அடப்பாவியே!!!! எதை என்று அறிய அறிய... உன் பக்கத்திலே இருக்கின்றேனே... பின் நீயே!!! போ !!!! என்று சொல்கின்றாயே!!! இது நியாயமா ?? என்று!!!!....

அப்பனே ஆனால் இன்பத்தை கொடுத்து விட்டால் அப்பனே அங்கு இறைவனையே மறந்து விடுகின்றான் அப்பனே..

அப்பனே எதை என்று கூட பாருங்கள் நீங்களே!!!
எதை என்று கூட 

அப்பனே கலியுகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே...

ஆனாலும் திருடனும் யோசித்தானப்பா!!! எதை என்றும் புரிய புரிய எதை என்று அறிந்தும் கூட ஆனாலும் மீண்டும் அவந்தனுக்கு யோசனைகள் வந்தது!!!

இவ்வாறு திருடி விட்டோமே!!!!! என்றெல்லாம் உணர்ந்து!! உணர்ந்து!!! எதை என்றும் புரிய புரிய..

அதனால் மீண்டும் பின் நகைகளை எல்லாம் பணத்தை எல்லாம்.... யார் யாரிடம் திருடினானோ.... அதையெல்லாம் எதை என்று அறிய அறிய... மீண்டும் அவர்களிடத்தில் சென்று கொடுப்போம் என்று!!! அவரவர் இல்லத்திற்கு சென்றான்!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய... அவர்கள்!!!

ஆனாலும் இவந்தனுக்கு ஒரு யோசனை!!!

முருகா முருகா என்று யார் சொல்கின்றார்களோ... அவர்களுக்குத்தான் நிச்சயம் திருப்பிக் கொடுப்போம் என்று இவ் நகைகளையும் பணத்தையும் கொடுப்போம் என்று இவன்!!!! பிடிவாதமாக இருந்தான்.

அதனால் இவன் திருடியவர்களின் இல்லத்திற்கு சென்றான்.... அங்கு பின் புலம்பி கொண்டு இருந்தார்கள்.... இன்னும் நகைகள்.... எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்??? இன்னும் பணங்களை எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்??? என்று!!

ஆனால் இவனோ அதாவது பின் எவை என்று அறிய அறிய மீண்டும் ஒரு நாள் அங்கேயே இருந்தான் பார்த்தான் அவர்களை.... அவர்கள் எப்போதாவது முருகனை நினைக்கின்றார்களா என்று!!!

ஆனாலும் அவர்கள் நினைக்கவில்லையப்பா!!! முருகா என்றெல்லாம் நினைக்கவில்லை!! அப்பொழுது இவர்கள் வீண் என்று!!! அங்கிருந்து சென்று விட்டான்!!

மீண்டும் பின் மறு வீடு!!! எதை என்று அறிய அறிய அவர்களையும் பார்த்தான்!!! அங்கும் கூட எதை என்று கூட இவ்வாறு திருடு போய்விட்டதே!!!... இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம்!!! எவ்வளவு சொத்து சேர்க்கலாம்?? என்றெல்லாம்!!!
ஆனாலும் இவர்களும் வீண் என்று... பின் மறு வீட்டுக்கு..... இவ்வாறெல்லாம் சென்று கொண்டு சென்று கொண்டு....

அப்பனே அனைவருமே பின் முருகனை மறந்து விட்டார்கள் என்பேன் அப்பனே...ஏன் ஏன் எதற்கு அப்பனே எதை என்று கூட பொருட்களை எல்லாம் திருடி விட்டார்களே என்று !!

இங்கு வந்து தான் திருடி விட்டார்கள் என்று முருகனை மறந்து விட்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய 

(அதாவது நாங்கள் பழனி மலைக்கு சென்றதால் தான் பழனி மலையில் வைத்து தான் எங்களுடைய நகை பணம் எல்லாம் திருடு போய்விட்டது என்றெல்லாம் நினைத்தார்களோ தவிர பழனி மலையில் முருகன் இருக்கின்றான் என்று முருகன் மீது பக்தி கொள்ளாமல் முருகனை நினைக்காமல் இருந்து விட்டார்கள்)

அதனால் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே 

உங்களிடத்தில் தேவையில்லாததை இறைவனே எடுத்துக் கொள்வானப்பா அவ்வளவுதான் என்பேன் அப்பனே...

எதுவும் சொந்தமில்லையப்பா!!
உயிரும் உங்களுக்கு சொந்தமில்லை... உடம்பும் சொந்தமில்லை அப்பனே!!!

அப்பொழுது எது? உங்களுக்கு சொந்தம்???

அப்பனே நீங்களே கூறுங்கள் என்பேன் அப்பனே!!!

அதாவது சொந்தம் இல்லாததைத்தான் அப்பனே சொந்தம் என்று தேடுகின்றவன் பின் மிகப் பெரிய முட்டாள் அப்பா... அதைதான் அப்பனே பின் மனிதன் தேடிக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே... எவை என்று அறிய பின் இவ்வுலகத்தில் பின் எதை என்று கூட....இவ் ஆன்மாவிற்கும் எதை என்று புரிய புரிய அப்பனே... எதை என்று அறிய அறிய உடம்பிற்கும் அப்பனே பின்  சொந்தம் பின் எதை என்று அறிய அறிய அப்பனே... இறைவனே என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் கொடுப்பான் உயிரையும்... அப்பனே எடுப்பான் உயிரையும் கூட 

அப்பனே நகைகளும் கொடுப்பான் அப்பனே எடுப்பான் இறைவன் என்பேன் அப்பனே.... எதை என்று அறிய அறிய அப்பனே... அனைத்தையும் கொடுப்பான் பின் மனைவி பிள்ளைகளையும் கொடுப்பான் எதை என்று கூட ஆனால் எடுப்பான் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதற்கு எதை என்று கூட எவை என்று கூட நீங்கள் இங்கு அப்பனே.... எதை என்று கூட முருகனைப் பார்!!!!

பழனி முருகன் திருவுருவச் சிலை


எதை என்று அறிய அறிய இப்பொழுதெல்லாம் செயற்கையாக. (குளோனிங்) மனிதர்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே.... ஆனால் அன்றே செயற்கை அதாவது போகன் செயற்கையாக எதை என்று கூட தயாரித்து விட்டான் அப்பனே.... அதாவது இப்படித்தான் செயற்கையாக மனிதன் அதாவது கலியுகத்தில் வரும் காலத்தில் தயாரிக்கப் போகின்றான் என்பது போகனுக்கு தெரியுமப்பா!!!

அப்பனே நீங்கள் பாருங்கள் முருகனை!!!

முருகனை பாருங்கள் அப்பனே!!!


பழனி மலை குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு பாகம் இரண்டில் தொடரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    ReplyDelete
  2. முருகா நீயே உற்ற துணை 🙏

    ReplyDelete