​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 September 2024

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி!







25/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்:திருமலை திருப்பதி.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!


அப்பனே சில வினைகள் அப்பனே அதையும் கூட எம்முடைய ஆசிகளாலும் பின் அருளாலும் நிச்சயம் யான் மாற்றம் அடையச் செய்வேன் அப்பனே!! இதனால் குறைகள் இல்லை என்பேன் அப்பனே! நல்முறையாகவே அப்பனே!!

இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது பின் அழிவு நிலைக்கு தான் செல்கின்றது இவ்வுலகம்!!!

அதனால்தான் அப்பனே என் பக்தர்களை அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் இப்படி செய்தால்!!!!...... தர்மங்களை காத்து நின்றால் அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் அப்பனே... நீடூழி வாழலாம் என்பதற்கிணங்க அப்பனே பின் தன்னை சார்ந்தோரும் அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் பெற்று அப்பனே வாழ்ந்திடலாம் என்பேன். 

இதனால்தான் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே வாக்குகள் பரப்பிக் கொண்டே இருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள்!!


இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே பெருமானுடைய அனுகிரகங்கள் கூட அப்பனே ஏன் எதற்கு என்று கூற 

இவனைப் பற்றி யான் இப்பொழுது அப்பனே நிச்சயம் சொல்வேன் அப்பனே நல் முறைகளாகவே அப்பனே 


அப்பனே அண்ணாமலையிலிருந்து அப்பனே ஒரு முதியோன் (முதியவர்) அப்பனே!! அவந்தனும் அறிந்தும் கூட அண்ணாமலையான் மீது பிரியம் கொண்டவன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அனுதினமும் அவந்தனுக்கு பின் வேலையே மலையை (கிரி) வலம் வந்து... அதாவது அப்பனே வலம் வந்து அப்பனே பின் அதாவது இப்பொழுது கூட ராஜகோபுரம் பின் அருகே அமர்ந்து தியானங்கள் செய்து பின் அங்கேயே உறங்கிடுவான்!!


அப்பனே ஆனாலும் ஏதோ எவை என்று அறிய அறிய அப்பனே பின் கொடுத்ததை அதாவது பின் அறிந்தும் கூட பின் யாராவது எதை கொடுத்தாலும் அதை தன் வாங்கி உட்கொண்டு அப்பனே பின் அனுதினமும் இப்படியே!!!


அப்பனே இப்படியே அறிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை கூட ஆனாலும் பின் யாரிடமும் தர்மம் ஏந்த மாட்டானப்பா!!! அப்பனே! 


ஆனாலும் பின் அறிந்தும் கூட நிச்சயம் பின் ஈசன் படி அளப்பான் என்பதை கூட அவந்தனக்கு தெரிந்தது!!!

இதனால் யாரிடமும் கை ஏந்தவும் மாட்டான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே அதாவது அறிந்தும் கூட ஈசனையே நினைத்து கொண்டு!!!! ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே அவந்தனுக்குப் பின் உதவிடுவார்கள் என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!

அப்பனே பின் எவை என்று அறிய அறிய கிடைக்காவிடிலும் கூட யாங்களே (சித்தர்கள்) பின் மனித ரூபம் எடுத்து அவனிடத்தில் சென்று பின் வழங்கியும் உள்ளோம் என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே ஈசனே பின் சோதிக்க!!!!....... அப்பனே அறிந்தும் கூட!!!


இதனால் யாரும் எவை என்றும் அறிய அறிய ஈசன் பின் அவந்தனக்கு பின் பார்ப்போம்... அதாவது அறிந்தும் கூட பின் அதாவது பார்வதி தேவியை பார்த்து !!!

தேவியே பார் இவந்தனை!!!
ஆனாலும் அறிந்தும் கூட பின் எந்தனையே நினைத்து எனையே அழைத்துக் கொண்டிருக்கின்றான்!!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று!!

ஆனாலும் யாரிடமும் கூட தர்மம் ஏந்தவில்லை!!! பின் ஏதோ கொடுக்கின்றார்கள்!! உண்ணுகின்றான் அவ்வளவுதான்!!!

ஒரு சோதனையை நடத்துவோம் என்று!!!

பின் அறிந்தும் கூட ஈசனும் கூட சரி அறிந்தும் கூட பின் பார்வதி தேவியும் கூட பின் அறிந்தும் பின்..


. ஈசனே !! எவை என்று புரிய நிச்சயம் பின் இதற்காகத்தானே!!!!....... நீ அறிந்தும் கூட !!!........(சோதனைக்காக)பின் இவ்வளவு நேரங்கள்!!!! ... இதனால் உன் விளையாட்டை தொடங்கு என்று!!!!


இதனால் யாருமே பின் அறிந்தும் கூட.......(எதுவும் வழங்கவில்லை அவருக்கு) 


இரு நாட்கள்,மூன்று நாட்கள் ,நான்கு நாட்கள் , ஐந்து நாட்கள் ,இப்படியே சென்று கொண்டே இருந்தது... அறிந்தும் கூட...

யாரும் பின் கொடுக்கவில்லை 

ஆனாலும் இவன் மனதில் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட நமச்சிவாயா நமச்சிவாயா என்று 

ஆனாலும் தர்மம் ஏந்தலாமா???
என்றெல்லாம் மனதில் தோன்றியது!!

இல்லை வேண்டாம் பின் ஈசனையை நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது பின்.... தந்தால் தரட்டும் இல்லையென்றால்... இங்கேயே உயிரை விடுவோம் என்று!!!

ஆனாலும் அறிந்தும் புரிந்தும் புரிந்தும் கூட...

மீண்டும் பின் அதாவது தண்ணீர் கூட கிடைக்கவில்லை!!... அறிந்தும். 


பின் ஆனாலும் மீண்டும் (கிரி)வலத்தை வந்தான்!! மலையை ஒரு முறை!! அறிந்தும் கூட. 

ஆனால் எதை என்று அறிய அறிய பின்...ஈசனே!!!! அறிந்தும் கூட இது சோதனையா??? என்றெல்லாம் மனதில்!!!

ஆனாலும் மீண்டும் அறிந்த வண்ணம் பின் மீண்டும் (கிரி) வலங்கள் வந்து!!! வலங்கள் வந்து பின்.... ஆனாலும் பின் சுற்றியது பின் அதாவது மயக்கம்... கூட!!!!  எதை என்று அறிய!!!... கீழே விழுந்தும் விட்டான்!!

ஆனாலும் அறிந்தும் எவை என்றும் அறிய அறிய வீழ்ந்து கிடந்த போதிலும் ஆனாலும் நமச்சிவாயா நமச்சிவாயா என்று அழைத்துக் கொண்டு!!!!

ஆனாலும் பார்வதி தேவியும்... பின் அறிந்தும்!!!

ஈசனே!!!!!..... பின் போதும்!!!
இவ்வளவு நாட்கள்!?? அறிந்தும்!!

ஆனாலும் ஒரு மனிதன் எப்படி பின் அதாவது உண்ணாமல் இருப்பது????

அறிந்தும் கூட!!!

 போதும் இவந்தனை மேலும் சோதிக்காதே!!! என்றெல்லாம்!!

பார்ப்போம் என்றெல்லாம். 

ஆனாலும் ஈசனாரும் நிச்சயம் அறிந்தும் கூட பின் தேவியே!!! யான் சென்று வருகின்றேன் என்று 
நிச்சயம் பின் அவ் முதியவன் இடத்திற்கு ஈசன் சென்றான் மனித ரூபம் எடுத்து!!!! 

அப்பனே !!! எழும்!!!!

அறிந்தும் என்று என்றெல்லாம்!!!

(ஈசன் அந்த முதியவனை மடியில் படுக்க வைத்து)
ஆனாலும் பின் மடியில் படுக்க வைத்து அறிந்தும் கூட என்ன வேண்டும்??? என்று கூட!!!

நமச்சிவாயா என்ற ஒரு வார்த்தை!!!

ஆனாலும் பின் முதியவனே நமச்சிவாயா நமச்சிவாயா என்று அழைத்துக் கொண்டிருக்கின்றாயே!!!
யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

 ஆனாலும் இப்பொழுது அறிந்தும் எதை என்று அறிய அறிய !!!

இப்படி மயக்க நிலையில் கூட வந்து விட்டாய்!!! உந்தனுக்கு உணவு ஏதாவது வேண்டுமா??? என்று!!!

நிச்சயம் வேண்டாம்!!! அறிந்தும்!! எதை என்று அறிய அறிய.... ஏதாவது அதாவது யான் கேட்க மாட்டேன்!!! நிச்சயம் ஈசனே படி அளந்தால்தான் யான் நிச்சயம் பின் உண்ணுவேன் என்றெல்லாம்!!!! சபதம் ஏற்று!!!!


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய புரிய 

ஆனாலும் ஈசனாரும் கூட பின் நிச்சயம் நீ பின் உண்ணவில்லை அதனால் தான் மயக்கம் என்று!!


ஆம்...!!!! யான்!! உண்ணவில்லை!!!!

பின் ஐந்தாறு நாட்கள் பின் ஆகிவிட்டது!!! அறிந்தும் எதை என்று புரிய இதனால் பின் அனுதினமும் எவரோ ஒருவர் எந்தனுக்கு உணவு கொடுத்தனர்!!!

ஆனாலும் இப்பொழுது நிலைமை யாரும் கொடுக்கவில்லை!!! யானும் யாரிடமும் கேட்க மாட்டேன் என்று!!!


பின் ஈசனும்!!!!!... அடப்பாவியே!!!!... அறிந்தும் கூட பின் இத்தனை  ஈசனை பார்த்து கொண்டு அறிந்தும் எவை என்றும் பின் புரிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய ஈசன் மீது கோபம் வரவில்லையா உந்தனுக்கு????

பின் உந்தனுக்கு உணவு கூட தரவில்லை... பின் அவன் என்ன ஈசன்????

என்றெல்லாம்!!!

பின் எதை என்று அறிய அறிய அவந்தன் பின் எழுந்து நின்று கோபத்தோடு... அறிந்தும் கூட 


(முதியவர் வேடத்தில் வந்த ஈசனை பார்த்து)

மனிதனே!!!.... நிறுத்தும்!!!!!!

எதை என்று அறிய அறிய எனை எப்படி வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பேசு!!!

ஆனால் ஈசனை பேசாதே என்று!!!



(முதியவர் வேடத்தில் வந்த ஈசன்)

பின் ஈசன் அவ்வளவு பெரியவனா ??
என்று!!!


பின் வந்தது ஈசன் தான் என்று அவந்தன் உணரவில்லை!!!

அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே ஈசன் இதுபோலெல்லாம் வருவானப்பா கலியுகத்தில் என்பேன் அப்பனே 

ஆனால் பல பேர்கள் அப்பனே நமச்சிவாயா நமச்சிவாயா!!! என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே.... வந்தவுடன் யார் என்று கூட தெரியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் அவ் சக்தி அதாவது அப்பனே உங்களுக்கு உணர முடியாதப்பா!!!

அவ்வளவு சக்திகள்!!!!!!!!!


அதனால்தான் அப்பனே பக்குவங்கள் பிறக்க வேண்டும்.. சக்திகளை எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் அப்பனே இறைவன் வந்தாலும் அதை தாங்க கூடிய வலிமை உங்களிடத்தில் இருக்குமப்பா!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் இவை என்று புரிய புரிய ஆனாலும்... பின் சரி எதை என்றும் அறிய அறிய...


(முதியவர் வேடத்தில் வந்த ஈசன்)

பின் சரி!!!!!!  உன் ஈசன் தான் உண்மை !!!

அப்படியென்றால் உந்தனுக்கு உணவை கொடுக்குமாறு சொல்!!!! என்று!!!


(பக்தன்)
இதனால் பின் ஈசனே!!!! அறிந்தும் கூட பின் உணவுக்காகவா????

 இதுபோல்???.............




யான் எதைக் கேட்டேன்???



 அறிந்தும்... யான் எதையும்!!.......................


ஆனாலும் உன்னிடத்திலிருந்து யான் கேட்கின்றேன் பின்... தர்மம் ஈயும்!!!! என்று!!!


(தர்மம் கொடுங்கள் என்று)

பின் அறிந்தும் கூட பின்
கெட்டியாக ஈசன் அவந்தனை அணைத்துக் கொண்டு அறிந்தும் கூட பின் 

""""யான் தான் ஈசன்!!!!..... என்றெல்லாம்!!!


அவந்தன் நிச்சயம் போதும் இந்த வாழ்க்கை என்றெல்லாம் பின் அறிந்தும் கூட கெட்டியாக பிடித்துக் கொண்டு அறிந்தும் எதை என்று அறிய அறிய 


 ஈசன்!!!

இன்னும் ... உந்தனுக்கு என்ன ஆசை ??? என்று!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய.. பின் எவை என்று கூற ஓர் ஆசை.... எந்தனுக்கு!!!

என்னை மலையில் விட்டு விடு அதாவது எதை என்று கூட பின் ஏழு மலையை தாண்டி நிச்சயம் அங்கு தவங்கள் செய்யப் போகின்றேன்!!!

அறிந்தும் கூட பின் அதாவது அங்கே நாராயணன் கூட இருக்கின்றானே... பின் அங்கே விட்டுவிடு... பின் உன்னை பார்த்து விட்டேன் அவந்தனையும் பார்த்து பின் செல்கின்றேன் என்று!!!

ஆனாலும் அப்பனே இங்கு குறிப்பது இறைவன் ஒருவனே தான்!!!

ஆனாலும் கடைசியில் இதைப் பற்றி நிச்சயம் விவரமாக எடுத்துரைக்கும் போது தான் தெரியும்!!!

ஆனாலும் முதலிலே அப்பனே ஒவ்வொன்றாக பின் தெரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் என்பேன் அப்பனே 

அப்பொழுதுதான் அப்பனே ஏன் எதற்காக அவதாரங்கள்??? அப்பனே என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!

அதனால் அப்பனே தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே பின் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே 

இதனால் அறிந்தும் கூட சரி!!! யான் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின்.. அங்கு அழைத்துச் செல்கின்றேன் என்று ஈசன் நிச்சயம் அப்பனே என் தோளில் ஏறு என்று!!!

அவந்தனும் நிச்சயம் ஏறி அமர்ந்தான் அப்பனே... பின் நொடிப் பொழுதில் இங்கு வந்து விட்டான் (திருமலை திருப்பதிக்கு) அப்பனே!!!


இதே போலத்தான் அப்பனே ஈசன் மீது பாசம் வைத்திருப்பவர்களை நிச்சயம் அப்பனே ஈசன் சிறிது சோதிப்பான் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் உயரத்தில் வைப்பானப்பா அறிந்தும் கூட...

பின் முதுகில் சுமப்பானப்பா!!!

ஆனால் இன்றைய மனிதர்களோ !!????????யான் ஈசனுக்கு அதை செய்தேன்!!! இதை செய்தேன் !!! இன்னும் ஈசன் வரவில்லையே!!!... இவ்வளவு கஷ்டங்கள் என்றெல்லாம் குழம்பிக் கொண்டு இருப்பானப்பா!!!

இதுதான் பக்தியா?? அப்பனே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய...

அதனால் தான் அப்பனே பின் கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாகும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அறிந்தும் கூட அவந்தனுக்கு சந்தோஷங்கள் இதனால் அப்பனே இங்கும் கூட அவன் அமைதியாக அறிந்தும் கூட பின் மீண்டும் அப்பனே தொடங்கினான் அவன் ஆட்டத்தை!!!

நாராயணா !! நாராயணா!! என்றெல்லாம் அப்பனே!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய..

இப்பொழுது உள் நுழைகின்றார்களே....( தரிசன நுழைவு வாயில்) அக் கோபுரத்தில் தான் பின் எதை என்று கூட வெளியில் நாராயணா நாராயணா!!! என்றெல்லாம் பின் அழைத்துக் கொண்டே இருந்தான் அப்பனே 

ஆனாலும் பின் வருவோர்களும் போவோர்களும் கூட இவனைப் பார்த்து அறிந்தும்... நாராயணனை உள்ளே சென்று பார்!!! என்றெல்லாம் கூற!!!

நிச்சயம் யான் ஏன்?? உள்ளே சென்று பார்க்க வேண்டும்!!! ஈசனையே பார்த்து விட்டேன் அறிந்தும் கூட!!!

நாராயணன் வரட்டும் என்று!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய... மீண்டும் நாராயணா நாராயணா என்றெல்லாம் 

ஆனாலும் அறிந்தும் கூட இன்னொருவன் இவனிடத்திற்கு வந்தான்!!!

பின் நாராயணனை போய் பார் என்று!!!

ஆனாலும் அவந்தனுக்கு புத்திகள்... இவன் புகுத்தினான்!!

ஆனாலும்... யான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை இவ்வுலகத்தில்!!!

பிறந்து விட்டேன்!!!.... பின் அதாவது ஆசைகளே இல்லை...

பின் ஏன்???? பெருமானை யான் சென்று பார்க்க வேண்டும்????

ஆனாலும் இதில் கூட அர்த்தம் அடங்கியுள்ளது அப்பனே!!!
அறிந்தும் கூட!!

ஆனாலும் அங்கு என்ன சொன்னான் என்பது அறிந்தும் எதை என்று அறிய அறிய அதாவது... இவை என்று புரிய புரியாமல் இருந்தாலும் இதை நிச்சயம் பின் உள் சென்று அப்பனே பின் அறிந்தால் நன்று என்பேன் அப்பனே!!

பின் அதாவது ஆசை!!! எதை என்று அறிய அறிய அப்பனே திருமாலை காண்பதற்கு என்று ஈசனிடம் முறையிட்டான். 

ஆனாலும் இங்கு ஆசைகளே இல்லை என்று.... சொன்னானே!!!!

இதற்கு என்ன அர்த்தம்?????

அப்பனே யோசியுங்கள் என்பேன். அப்பனே!!!

இதை யோசித்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட பின்.... இதை யோசித்தவனுக்கே அப்பனே பின்  முழு... அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சிறிது.. பின் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே இடையிடையே.... இவ்வாறெல்லாம் யான் இனி நிச்சயம் வாக்குகளில் கூட பின் உங்களை யோசிக்க வைப்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் பின் யோசிக்காமலே அப்பனே சென்று விட்டால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்பதையெல்லாம் யான் அறிவேன் அப்பனே 

இதனால் அப்பனே... பின் இவ் முதியவன் சொன்னானப்பா ஆசைகளே இல்லை என்று 

ஆனால் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய..
 அங்கு (திருவண்ணாமலையில்) ஆசைகள்  பின் அதாவது மலையில் ஏற வேண்டும் என்று !!

இங்கு(திருப்பதியில்) ஆசைகள் இல்லை என்று!!
எதனை குறிப்பிட்டான்?????? அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் எவை என்று அறிய அறிய... பின் ஆனாலும் அவந்தனும் யான் இறைவனையே வணங்கிக் கொண்டு இருந்தேன்!

 ஆனாலும் வரட்டும்!! எதை என்று புரிய யான் எதற்காகவும் அதாவது அவனிடத்தில் (நாராயணனிடம் ) எதையும் கேட்கப் போவதில்லை.. இதனால் பின் அறிந்தும் கூட வரட்டும் என்று. 

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் இன்னொருவன் வந்தானப்பா 
அறிந்தும் கூட 

எதை என்று அறிய ஏன் இங்கு நீ அமர்ந்து இருக்கின்றாய்??? உள்ளே சென்று நாராயணனை பார்ப்போம் என்று!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும் பின் அவந்தனும் அப்பனே ஒரு பெரிய செல்வந்தன் அப்பா 

ஆனாலும் எதை என்றும் புரிய புரிய... ஆனால் எதை என்று அறிய அறிய... பின் நீ ஏன்?? பார்க்கின்றாய் என்று முதியவன்.... நாராயணனை நீ ஏன் பார்க்கப் போகின்றாய் என்று செல்வந்தனிடம் கேட்டான்!!

ஆனாலும் செல்வந்தனோ!!! சொன்னான்!!! பின் எந்தனுக்கு நாராயணன் செல்வங்கள் அதிகம் கொடுத்து விட்டான்!! அதனால் பார்க்க செல்கின்றேன்!!.. பின் மீண்டும் செல்வத்தை கொடுப்பான் என்று!!


ஆனால் நகைத்தான்!!!!  அவ் முதியவன்!!!
பின் பளார் !!!  என்று அடி!!! எதை என்று புரிய செல்வந்தன்!! ஆனாலும் அமைதியாக என்னையே அடித்து விட்டாயா?!!! அறிந்தும் கூட... பின் எதை என்று அறிய அறிய!!!

ஆமாம்!! எதை என்று புரிய புரிய ஏதோ அதாவது எவை என்று புரியாமல் இருந்தாலும் நீயும் நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டிருக்கின்றாய்!!!

ஆனால் 
 யானும் இங்கு ஒரு காலத்தில் நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டிருந்தேன்!!!

ஆனாலும் அறிந்தும் கூட நாராயணன் எதுவுமே தரவில்லை!!!




அப்பனே.... இவன் பின் எப்படி? செல்வந்தன் ஆனான்??  என்றெல்லாம்.. நீங்கள் யோசிக்கலாம்!!!

ஆனாலும் சொன்னான் அவ் முதியவனிடம்... பின் நாராயணன் எனக்கு பின் எதுவுமே தரவில்லை என்று!!!


 ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே...

. முதியவனும்!!

 அப்பொழுது நீ ஏன் இங்கு வந்தாய் ??? என்று அறிந்தும் கூட!!!

நிச்சயம் பின் அறிந்தும் அதனால் தான் மீண்டும் மீண்டும் யான் சொல்லிக் கொண்டே இருக்க மாட்டேன் என்றெல்லாம் செல்வந்தனுக்கு கோபம் வந்தது...

பின் ஆனாலும் இவந்தனுக்கும் அடியாட்கள் அறிந்தும் கூட...

(செல்வந்தன் தன் அடியாட்களிடம் இந்த முதியவரை வெளியே இழுத்துக் கொண்டு விட்டு விடுங்கள் என்று)

இவனை இழுத்து வெளியே பின் விடுங்கள் என்றெல்லாம்

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய!!

 ஆனாலும் பெருமான் மனித ரூபம் எடுத்து... வந்து 

நிச்சயம் வந்து ஏன்?? இவந்தனை இங்கிருந்து பின் வெளியில் அதாவது வெளியே துரத்துகின்றீர்கள்!!??
இவன் இங்கே தான் இருக்க வேண்டும் என்று!!! பெருமானும் கூட!!!

வந்தது யார் ?என்று உணரவில்லை!!!

வந்துவிட்டான் அப்பனே அறிந்தும் கூட.... எதன் மீது நாட்டம்? எதை என்று அறிய 

அப்பனே ஆனாலும் அச்செல்வந்தனும் கூட (நாராயணனை பார்த்து) நீ யார்?? இவந்தனுக்கு அறிந்தும் கூட (ஆதரவு) செய்வதற்கு அறிந்தும் கூட என்று!!

(மனித ரூபத்தில் வந்த நாராயணன் முதியவனை கைகாட்டி)

இவந்தன் அறிந்தும் கூட பின் நிச்சயம் என் பக்தன் என்று!!!!


செல்வந்தன்
(மனித ரூபத்தில் வந்த நாராயணனை பார்த்து) 

நீயே ஒரு வீண்!!!!....

அதாவது சொல்கின்றான் அப்பா பின் செல்வந்தன் நீயே ஒரு வீண்!!! அறிந்தும் கூட உந்தனுக்கு.. இவன் பக்தனா??
பெருமானுக்கு பக்தன் என்று பின் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை 

ஆனாலும் அறிந்தும் கூட நீ யார்?? என்பதையெல்லாம் அறிந்தும் கூட!!


மனித ரூபத்தில் வந்த நாராயணன்

இதனால் போக போக புரியும் என்பது!!!

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் இவந்தன் இங்கேதான் இருக்க வேண்டும் என்று பின் அடம் பிடித்தான்!!!


மீண்டும் சரி!!!! பின் காவலாளிகள் வந்து இங்கேயே இவ் முதியவன் தங்கட்டும் என்று...

 நிச்சயம் அதாவது செல்வந்தனும் கூட பின் தரிசனம் பார்த்து விட்டு வந்தான் 

ஆனாலும் முதியவனும் கூட அறிந்தும் கூட!!!! பார்த்திட்டாயா??!!! அறிந்தும் கூட!! நாராயணனை!!!

நாராயணன் பின் என்ன சொன்னான்????


நீ என்ன கேட்டாய்?? என்று!!


ஆனாலும் நாராயணனிடம் யான் எதையுமே கேட்கவில்லை!!! அறிந்தும் கூட!!

 ஆனாலும் பின் செல்வந்தன்!!!

 என்னிடத்தில் வந்துவிடு... ஒருவன் இருக்கின்றான் அவனிடத்தில் சென்றால் அனைத்தும் பின் வரும்!!!

அதாவது அவந்தன் எதை என்று புரிய புரிய என்றெல்லாம் அதாவது அவந்தன் இடத்தில் அனைத்தும் இருக்கின்றது !!


பின் நாராயணா நாராயணா என்று அதாவது பெயருக்காக தான் நாராயணன்!!! இங்கு வருகின்றேன்...
ஏதோ வந்தோமா!! பார்த்தோமா!!
 என்று சென்று விட வேண்டும்!!



என் முன்னோர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்!!

ஆனாலும் ஒருவன் (மாந்திரீகம்) இருக்கின்றான் நிச்சயம் அனைத்தும் அவன் செய்வான்!!!!

 அவனிடத்தில் நீயும் வருகின்றாயா? பணமும் பின் அதிக அளவு உந்தனுக்கு கொடுப்பான் என்று!!! அறிந்தும் கூட 

எதை என்றும் புரியப் புரிய 

இதனால் நிச்சயம் பின் நகைத்தான்!!! முதியவன் கூட!!

சரி என்று அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய அறிய 

மீண்டும் பின் அதாவது சில ஆண்டுகள் பின் கழிந்தது!!!

மீண்டும் வந்தான் செல்வந்தன். அறிந்தும் கூட!!! யாருமே வரவில்லை (அடியாட்கள் ) அவன் மட்டும் வந்தான்!! அதாவது அவ்செல்வந்தன் மட்டும்!!!!
அதாவது கவலைகள் நிறைந்த முகம்... பின் நோய்கள் அறிந்தும் கூட. 

ஆனாலும் பின் முதியவன் அங்கே தான் இருந்தான் ஆரோக்கியமாக!!!

செல்வந்தனே என்று அழைத்தான்!!!


செல்வந்தன்!!

யான் இப்பொழுது செல்வந்தன் இல்லை... ஏழையாக இருக்கின்றேன் அறிந்தும் எதை என்று அறிய அறிய... எவை என்று புரியப் புரிய அனைத்தும் இழந்து விட்டேன்.... மனைவி பிள்ளைகள் அறிந்தும் கூட அனைவரும் காலமாகிவிட்டனர்!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அதாவது முதியவன் சொன்னான்...

உந்தனுக்கு ஒருவன் இருந்தானே அவன் தான்... அனைத்தும் தருகின்றான் என்று சொன்னாயே!!!

அவன் யார்?? என்று!! முதியவன் கேட்க 


செல்வந்தனும்

நிச்சயம் அறிந்தும் சொல்கின்றேன் அவந்தன் அதாவது மாய மந்திரவாதிகள் அறிந்தும்... அதாவது மாய வலையில் அறிந்தும் கூட பின் பல வித்தைகள் காட்டி இப்படி செய்தால் இவை என்று அறிய அறிய பின் வசியம் செய்து கொண்டு எதை என்றும் புரிந்தும் கூட இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் சொன்னான். 

யானும் சொன்னேன் அதாவது இறைவனை இங்கு மறந்து விட்டேன்!!! ஆனாலும் பின் பேருக்காக தான் இறைவனை வணங்க வேண்டும்... ஆனால் இவ்வாறு வழியில் சென்றால் அனைத்தும் கிட்டும் என்று சொல்லிவிட்டான்.... அவன் சொன்னபடியே அனைத்தும் செய்தேன். 

ஆனாலும் அனைத்தும் கிட்டியது அறிந்தும் கூட... ஆனாலும் பின் சந்தோஷமாக இருந்தேன்..

கடைசியில் பார்த்தால் அவந்தனும் அழிந்து விட்டான் நிச்சயம் அறிந்தும் கூட பின் குடும்பமும் அழிந்து விட்டது.. எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய புரியாமல் யான் இப்பொழுது இங்கு வந்திருக்கின்றேன்!!

இப்பொழுதாவது உண்மையான எதை என்றும் புரிய புரிய... நாராயணனை நம்புகின்றேன் என்று 


அப்பனே இது போலத்தான் அப்பனே இறைவனை நம்புகின்றான் அப்பனே தீய சக்திகளையும் நம்புகின்றானப்பா இவ்வுலகத்தில் அப்பனே 

ஏன் அப்பனே இங்கு அமர்ந்திருக்கின்றானே.... இவந்தனுக்கும் கூட இப்படித்தான் அப்பனே
(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை ஓதும்பொழுது அருகில் இருந்த அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய வாக்கு) 

எதை என்று புரிய புதிய அப்பனே எவை என்று அறியாமலும் சென்று அப்பனே கடைசியில் அப்பனே!!! எங்கு போவது ???

அதாவது.... பெருமானிடம் கூட பலமுறை வந்தானப்பா.. இவன்!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய நன்றாகவில்லை என்பேன் அப்பனே 

ஆனால் மனதில் நினைத்தானப்பா... பின் ஏன்?? இவ்வளவு... கஷ்டங்கள் ஏன் எந்தனக்கு??

பின் பெருமாளை வந்து பார்க்கின்றோமே என்று !!

பெருமான் இவனைப் பார்த்து நினைத்தானப்பா!!!

பைத்தியக்காரனே!!!! நீ எங்கு சென்றாய்??? என்னையே அறிந்தும் கூட பின் முழு மனதாக மனதில் நினைத்தாயா? என்று அப்பனே!!

(பாதி மனம் இறைவனை நம்புவது வணங்குவது !!
பாதி மனம் மந்திரங்கள் தந்திரங்கள் ஏவல் வசியம் என நாடி சென்று அவர்களையும் நம்புவது)



எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் முழு மனதோடு அப்பனே ஒன்றை வணங்கினால் அப்பனே அதாவது இறைவனை வணங்கினால் அப்பனே நிச்சயம் கஷ்டங்களோடு!!! அதாவது கஷ்டங்கள் இருந்தாலும் அப்பனே கடைசியில் அனைத்தும் கொடுப்பானப்பா !!

அப்பனே மற்றவர்களை அதாவது மற்றவர்களை தீய வழியில் அப்பனே அழைத்து அவை செய்கின்றேன் இவை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே... கண் கட்டும் வித்தையப்பா இதையெல்லாம்!!! தெரிவித்துக் கொண்டு அப்பனே செய்துவிட்டு கடைசியில் பார்த்தால் அப்பனே அவந்தனும் அழிந்து விடுவான் அப்பனே பின்... அவனை அதாவது பின் தொடர்ந்தாலே  அவனும் அதாவது தொடர்பவனும் அழிந்து விடுவானப்பா 


அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே 
உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் என்று அப்பனே 

இவந்தனுக்கு பின் வெறுப்பாகிவிட்டது!!! இவ்வளவு பின் வந்து கொண்டே இருக்கின்றோமே பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கின்றோமே 
பெருமான் ஒன்றுமே தரவில்லையே என்று!! அறிந்தும் கூட!!

இதனால் இனிமேல் பெருமாளையே பார்க்க கூடாது... என்ற மனநிலை வருகின்ற பொழுது... பெருமானே இவன் மனதை மாற்றி விட்டானப்பா!!!

பின் வரட்டும்... எதையென்றும்  அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய என்றெல்லாம்...இவன் மனதை மாற்றி இப்பொழுது கூட அழைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா 

இதுவும் நாராயணனின் ஒரு செயலே!!!

புத்தி கெட்ட மனிதன் !!!

 நின்றிருப்பான்...(திருப்பதி மலைக்கு வராமல்)

நின்றிருந்தால்??!!!! இவந்தனுக்கு நோய் வந்திருக்கும் ஒரு பெரிய நோய் வந்திருக்கும்!!! ஆனாலும் பெருமானும் விடவில்லை!!! 

பின் ஏதோ வந்து விட்டான்... இன்னும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று அவன் உத்தரவிட...!!!


 நிச்சயம் வந்து கொண்டிருக்கின்றானப்பா!!

நீ வரவில்லை அப்பனே... அறிந்தும் கூட உன் மனநிலை எப்போதோ  மாறிவிட்டதப்பா!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே... முழு எவை என்று அறிய அறிய அப்பனே அங்கு இங்கு எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் வீண் அப்பா 


இறைவனால் முடியாதது மனிதனால் நிச்சயம் முடியாதப்பா!!!

இன்னும் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே!!! இன்னும் அவை இவை என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் பின் தீய சக்திகளும் இருக்கின்றதப்பா!!!

அதற்காகவும் கூட அப்பனே பின் அடுத்தடுத்த வாக்குகளில் கூட அப்பனே நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே... அவையெல்லாம் எப்படி வேலை செய்கின்றது??? என்பதையெல்லாம் அப்பனே!!!

அதனால் அப்பனே இறைவனை நம்பினால் அப்பனே நிச்சயம் தீய சக்தியும் கூட பயந்து ஓடுமப்பா !!!

இவந்தன் இறைவனை நம்புகின்றான்... இவனைக் கூட பின் நெருங்கினால் இறைவன் அடித்து விடுவான் என்று!!

ஆனாலும் அப்பனே இறைவனை நம்பாமல் திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவ் தீயசக்திகள் நிச்சயம் பின் அனைத்தும் கொடுக்கலாம் என்று கொடுக்கும்!! கொடுக்கும்!! அப்பனே!!

ஆனால் கடைசியில் பார்த்தால் நிச்சயம் கொன்றுவிடுமப்பா!! உன்னையே தின்று விடுமப்பா...!! சொல்லிவிட்டேன் அப்பனே 

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே....

பல பல அப்பனே சுவடிகள் கூட அப்பனே மறைந்து விட்டது என்பேன் அப்பனே... மனிதருக்கெல்லாம் அப்பனே பின் அழகாகவே ரிஷிகள் ஞானிகள் அப்பனே எழுதி வைத்து அப்பனே சென்றார்கள் என்பேன் அப்பனே 

ஆனால் மனிதன் அதை அப்பனே நிச்சயம் கடலில் எல்லாம் வீசினான் என்பேன் அப்பனே.... ராமேஸ்வரத்தில் பல ஓலைச்சுவடிகளும் மறைந்து உள்ளது என்பேன் அப்பனே ஓரிடத்தில் என்பேன் அப்பனே. 

ஆனாலும் நீருக்கடியில் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் அப்படியே பின் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அனைத்தும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அழிந்து விடும் என்பேன் அப்பனே..

 ஆனால் அதாவது பன ஓலை என்றும் அழியாதப்பா!!!

இதற்கு ஒரு சக்தி இருக்கின்றதப்பா!!!


(சித்தன் அருள் - 1662 - அன்புடன் அகத்தியர் - முன்னைநாதர் ஆலயம் ஸ்ரீலங்கா வாக்கில் கூட பன ஓலைச்சுவடி கள் ரகசியங்கள் குறித்து குருநாதர் அகத்திய பெருமான் கூறியுள்ளார்!)


நிச்சயம் அதனைப் பற்றியும் யான் சொல்வேன் அப்பனே 


பல பல வேறு வேறு இலைகளையும் யாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் அப்பனே.... பல பல எவை என்று அறிய அறிய அப்பனே 

ஆனால் இதனை ஏன் (பன மர ஓலைகளை) தேர்ந்தெடுத்தோம்?? என்றெல்லாம் அப்பனே 
அனைத்தும் யாங்கள் செப்புவோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே அறிந்தும் அறிந்தும் எனையே நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா!! அதனால் அதாவது அப்பனே எந்தனுக்கு என்னென்ன?? விஷயம் தெரிந்திருக்கின்றது!! 
அப்பனே ஆனாலும் அனைத்தும் எந்தனுக்கு தெரியும் பின் எவை என்றும் அறிய அறிய!!


 ஆனாலும் அப்பனே... யான் இங்கு சொல்ல மாட்டேன்... எதை என்று கூட என்னை தானே யான் பெருமையாக எவை என்றும் அறிய  அறிய அப்பனே... யான் பெருமை கூறினால் மற்றொருவனும் கூறுவான் என்பேன் அப்பனே 

பின் அறிந்தும் கூட பின் தன்னைப் பற்றியே அதாவது அகத்தியனை பற்றியே அகத்தியன் பெருமையாக கூறுகின்றான் என்று!!

வேண்டாமப்பா !!!

அப்பனே பின் நிச்சயம் எந்தனுக்கு பின் அறிந்தும் அறிந்தது புரிந்தது அப்பனே அனைத்தும் அப்பனே உங்களுக்கு யான் சொல்வேன் அப்பனே!!!

முதலில் என்னுடைய பக்தர்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே 

பின் தெரியாமல் வணங்கினால் அப்பனே பின் அதாவது பின் அகத்தியன் மீது பாசம் காட்டி விட்டு பின் கடைசியில் அகத்தியன் ஒன்றுமே செய்யவில்லையே என்று நீங்கள் அமைதியாக அப்பனே வாயால் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே 

அதனால் தான் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் பின் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்கின்றேன் அப்பனே 

அப்பனே தீய சக்திகள் அப்பனே இன்னும் எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது காற்றினிலே வந்து கொண்டிருக்கின்றதப்பா!!!

அப்பனே இன்னும் அப்பனே அதாவது வளிமண்டலத்தில் அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட சில செல்கள் அப்பனே அப்படியே அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே... ஒரு சக்தியால் அப்பனே பின் ஈர்த்து வைத்து கொண்டுள்ளதப்பா 

அவை நிச்சயம் அப்பனே விழுந்தால் அப்பனே அனைவரையும் தாக்கி விடும் என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு என்பவை எல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே இங்கிருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே பலவகையான அப்பனே சில சில செயற்கைகள் மனிதனால் அப்பனே தயாரித்து தயாரித்து!!

(பல்வேறு ரசாயனங்கள் தொழிற்சாலைகள் வெளியிடும் அமில புகைகள் நச்சுப் புகைகள் எல்லாம் மேலே சென்று வளிமண்டலத்தை தாக்கும் பொழுது மேலே இருக்கும் தீய சக்திகள் காற்றிலே பரவி மேலும் மனிதர்களை தாக்கும்)



ஆனாலும் அப்பனே அதை தன் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அதை எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே பின் செயற்கையாக மனிதன் இன்னும் தயாரித்துக் கொண்டிருந்தால் அப்பனே அது அங்கு எவை என்றும் அறிய அறிய அப்பனே... அதன் இருப்பு எவை என்று கூட இங்கே வந்து விடும் அப்பா.... அதாவது அப்பனே காற்றிலே பரவுகின்றது...அப்பனே.. எதை என்று புரிய புரிய அப்பனே பின்.... இன்னும் அப்பனே மனிதன் தயாரிக்க தயாரிக்க மனிதன் எவை என்று அறிய அறிய அப்பனே பின் அவை தன் ஈர்க்கும் பொழுது அப்பனே ஆனாலும் பின் பரந்து விரிந்து பின் உட் புகும் (சுவாசத்தின் வழியாக உடலுக்குள்ளே) பொழுது அப்பனே இன்னும் நோய்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே மனிதனை மனிதனே அப்பனை அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!



(திருமலையில் செல்வந்தனுக்கும் முதியவருக்கும் நடந்த விவாதம்)


இதனால் அப்பனே எதை என்றும் புரிய புரிய...

பின் அவ் முதியவனும் சொன்னான்.... நிச்சயம் அறிந்தும் கூட அனைத்தும் உன்னை பார்த்தேன்!!!

அதாவது நீ உன்னை செல்வந்தனாக பார்த்தேன் பிள்ளைகளோடு இருந்தாய் மனைவியோடு இருந்தாய் பின் ஆட்களோடு இருந்தாய் 

ஆனால் இப்படி ஆகிவிட்டாயே என்று!!!


செல்வந்தன் 


நிச்சயம் அறிந்தும் கூட அப்பொழுது பின் உணரவில்லை எதை என்று அறிய இப்பொழுது உணருகின்றேன்... பெருமானை பற்றி... அறிந்தும் கூட நோய்கள்!!! எந்தனுக்கு வந்துவிட்டது! 

இவன்தான் (நாராயணன் தான்) காப்பாற்ற வேண்டும் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய என்றெல்லாம்


முதியவன் 


நிச்சயம் சரி!!! எவை என்றும் அறிய அறிய என்னிடத்தில் உட்காரு!!! போதும்!!

அதாவது அனைத்தையும் அனுபவித்து விட்டாய் அல்லவா நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பெருமானுக்காக  இவ் உயிர்!!! நிச்சயம் பெருமான் வருவான் உன்னையும் காப்பான்!! ஏதோ என்று நிச்சயம் என்னிடத்திலே அமர் என்று!!!

அவந்தனும் அதாவது செல்வந்தனும் அமர்ந்து கொண்டானப்பா..

நிச்சயம் அப்பனே பெருமானும் வந்தானப்பா.. 

அறிந்தும் எதை என்று புரிய புரிய... பின் முதியவனே அறிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய 

யான் தான் அப்பா... நாராயணன் !!!!

நிச்சயம் பின் இவ்வளவு எவை என்று கூற அன்பா??? என் மீது!!
என்றெல்லாம் கட்டி தழுவி கொண்டான். 

உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேள்!!! இப்பொழுதே தருகின்றேன் என்று 


அப்பா!!! அறிந்தும் கூட பின் பெருமானே!! நாராயணனே!!! திவ்ய ரூபனே!!!

எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!!!!

இதோ பக்கத்தில் உட்கார்ந்து இருக்கின்றானே.... இவன் பெரிய செல்வந்தன்... நீ!!!இவன் நோயை குணமாக்கும்!!!

 அனைத்தும் பின் எவை என்றும் அறிய அறிய எதை என்று புரிந்தும் கூட... அனைத்தும் இருந்தது இவனிடத்தில்!!

ஆனாலும் இப்பொழுது தீய சக்திகளை பின் பயன்படுத்தி பின் யாரோ ஒருவன் இவந்தனை ஏமாற்றி இருக்கின்றான்!!! இவந்தனுக்கு அனைத்தும் கொடுத்துவிடு!! இவன் வாழட்டும் என்று!!

இதுதான் பின் பெருமானே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய


 பின் பெருமானே!!!!

 பின்  உன் அன்பிற்கு பின் எதை என்று அறிய அறிய... கட்டுப்படுகின்றேன் யானே!!

அறிந்தும் கொடு!!!

 என்று முதியோன்  பின் அறிந்தும் கூட பின் பெருமானிடத்தில் கூறி.....
நிச்சயம் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!! உன்னை பார்த்தேனே அதுவே போதும் !!!!
இங்கே யான் மடிந்து போகின்றேன்!!!

நீ இவந்தனுக்கு கொடு பின் பெருமானே என்று !!!



நாராயணன் 

நிச்சயம் கொடுக்கின்றேன் என்று உடனே அனைத்தையும் உயிர்ப்பித்தானப்பா...!!


 அப்பனே பின் இறைவனால் செய்ய முடியாதது பின் வேறு எந்த சக்தியாலும் செய்ய முடியாதப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே 


செல்வந்தன் 

இதனால் பெருமானே பின் நீ தான் துணை....

 நிச்சயம் இங்கு வருவோருக்கெல்லாம் இங்கு யான் ஏதோ ஒரு ரூபமாக நிச்சயம் நோய்களை குணமாக்குகின்றேன் என்று  அவந்தனும் கூட!!!


 எதை என்றும் புரிய புரிய.... அவன் குடும்பமே நிச்சயம் அறிந்தும் கூட உயிர் எடுத்து விடு  !!  நிச்சயம்  உடைமைகள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட.... 



அதனால் அவர்கள் அனைவரும் இங்குதான் இருக்கின்றார்களப்பா !!!

சில சில நோய்களையும் கூட தீர்த்துக் கொண்டே இருக்கின்றார்களப்பா!!!

அப்பனே செடி கொடி வழிகளாக அப்பனே!!

அவ் செடிகளும் எங்கு இருக்கின்றது?? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே

 எவை என்று கூட வெட்டுவார்கள்.. மீண்டும் வருமப்பா!!

 (வெட்டிய செடிகள் மீண்டும் வளரும்)

. எதை என்று கூட.. அது அவர்கள் தானப்பா!!!

அப்பனே சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களப்பா!!!

 அப்பனே... இதுதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே மூலாதாரம் என்பேன் அப்பனே 

இறைவனை நம்பினால் எப்பொழுதும் கெடுவதில்லை என்பேன் அப்பனே 

பின் நாராயணனின் லீலைகள் இன்னும் சொல்கின்றேன் அப்பனே 

நலன்கள்!! ஆசிகள்!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை ,,,🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. அப்பா நீயே உற்ற துணை

    ReplyDelete
  4. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NARI AYYANE

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete