27/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்.பொதிகை மலை அடிவாரம்.
ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
அப்பனே எம்முடைய ஆசிகள்!!!
அப்பனே நேற்றைய பொழுதிலே அனைவருக்கும்!!! ஆசிகள்.
ஆனாலும் அப்பனே சில கர்மாக்களை கூட சுமந்து சுமந்து இதனால் தான் அப்பனே எவை என்றும் அறியாமலும் கூட அப்பனே அறிந்தும் உணர்ந்தும் கூட அப்பனே நிச்சயம் கர்மத்தில் இறங்கி விடுகின்றான் மனிதன்.
இதனால் அப்பனே பின் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அப்பனே பின் நன்மைகள் அறிந்தும் கூட அப்பனே தவறான பாதையில் சென்று அப்பனே எதை எதையோ செய்து விடுகின்றான்.
அதனால்தான் அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால்தான் சில சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்பனே அங்கே (பொதிகை மலை உச்சியில்) ஓதி இருந்தாலும் அப்பனே!!! எதை என்று அறிய அறிய சில மனிதர்கள் அப்பனே எதையோ எவை என்று கூறவும் எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே தவறாகவே!!!
(பொதிகை மலை உச்சிக்கு கேரளா வன துறையினர் இந்த முறை எந்த பொருளையும் அனுமதிக்கவில்லை!!! ஓலைச்சுவடி பெட்டகத்தையும் அனுமதிக்கவில்லை. அதனால் சுவடியை ஓதும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மலைக்கு மேலே சென்று குருநாதர் அகத்தியர் பெருமானின் தரிசனம் பெற்று கீழே வந்து ஜீவநாடி வாக்குகள் ஓதினார்!!! மேலே தரிசனத்தின் போதும் பல கெடுபிடிகள் தடைகளை விதித்தனர். ஆனால் குருநாதர் அகத்தியர் பெருமான் எப்படி எல்லாம் தன் பக்தர்களுக்கு அருள வேண்டுமோ அப்படி எல்லாம் அனைத்தையும் மாற்றி அருளி ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
ஓலைச்சுவடி பெட்டகத்தை மேலே கொண்டு செல்ல அனுமதிக்காததால் கீழேயே வைக்க வேண்டிய நிர்பந்தம்.
அப்பொழுது சிவகாசியை சேர்ந்த முருகனின் திருநாமம் கொண்ட அகத்தியர் அடியவர் ஒருவர் வருடம் தோறும் பொதிகை மலை பயணம் மேற்கொள்பவர் பொதிகை மலை பயணம் மட்டும் மேற்கொள்ளாமல் வரும் அன்பர்களுக்கு வேண்டி உணவுப் பொருள்கள் உணவை சமைத்து நீர் ஆதாரங்கள் பழச்சாறுகள் என அனைத்தையும் கொண்டு வந்து யாத்திரைக்கு உடன் வரும் பக்தர்களுக்கு வழங்கும் பணியை சிறப்பாக செய்து கொண்டே வருகின்றார். முன்பெல்லாம் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் உணவுப் பொருட்களை மேலே எடுத்துச் சென்று அனைவருக்கும் வழங்கும்பொழுது குருநாதரும் மனித ரூபத்தில் வந்து இவருடைய கைகளால் உணவை வாங்கி உண்டு மகிழ்ந்து ஆசிகள் தந்திருக்கின்றார்.
அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் தான் ஓலைச்சுவடி பெட்டகத்தை பாதுகாப்பாக வைத்து மலை மீது சென்றார் சுவடியை ஓதும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா.
தரிசனம் முடிந்து கீழே இறங்கி வந்த பின் ஜீவனாடியில் குருநாதர் அவரைப் பற்றியும் வாக்குகள் தந்தருளி ஆசீர்வாதம் செய்தார். குருநாதர் இந்த வாக்குகள் உரைக்கும் பொழுது அந்த பக்தர் அங்கு இல்லை மலைமீது தரிசனம் செய்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார்!!!
ஒவ்வொரு குழுவாக மலை பயணம் ஒவ்வொரு பேட்ச் ஆக பக்தர்கள் குழு செல்லும் பொழுது திரு ஜானகிராமன் ஐயா இறங்கி வந்த பொழுது அவர் மலையின் மீது இருந்தார்.
அவரைப் பற்றி குருநாதர் வாக்குகளில் பெருமையுடன் கூறினார்.
ஏற்கனவே நம் குருநாதர் முன்பே உரைத்திட்ட வாக்கின்படி யார்? யார்? என் பெயரைச் சொல்லி தவறுகள் செய்து வருகின்றார்களோ!!...... அவர்களையும் பெயரைச் சொல்லியே வாக்குகள் உரைப்பேன் அவர்களைப் பற்றி வெளிப்படுத்துவேன் என்று.... சில நபர்களைப் பற்றி வாக்குகளில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை கூறியும் இருக்கின்றார்
அதேபோல என்னுடைய பக்தர்கள் யாருக்கும் தெரியாமல் பல புண்ணியங்கள் செய்து வருகின்றார்கள் அவர்களையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் அவர்களைப் பற்றி வாக்குகளை தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல புண்ணிய செயல்கள் செய்து குருநாதர் அகத்தியரின் அன்புக்கு பாத்திரமான ஒரு பக்தரை பற்றி இந்த வாக்கில் உரைத்திருக்கின்றார்)
இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அவந்தனும் கூட அப்பனே எந்தனுக்கும் கூட எதை என்று அறிய அறிய ஒருமுறை அப்பனே அதாவது பின் மனித ரூபத்தில் வந்து அவனிடத்தில் வந்து அப்பனே சில சில வழிகளிலும் கூட உணவுகளை உட்கொண்டு யான் சென்றுவிட்டேன் அப்பனே. அவந்தன் அறியாமல் இருந்தான் அப்பனே.. அப்பொழுது ஆசிகள் கொடுத்து விட்டேன் அப்பனே.
இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன் தான தர்மங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே மீறிய நிலையில் எவன் உள்ளானோ அவனிடத்தில் யான் செல்வேன்!!! அதனால்தான் அப்பனே எம்முடைய ஆசிகள் அவந்தனுக்கும் கூட பரிபூரணம்!!! பரிபூரணம் அப்பனே !!!
இன்றைய நிலையில் எதை எதையோ பொய் சொல்லி அப்பனே அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்றெல்லாம் சொல்லி சொல்லி அப்பனே பணம் பறித்து அப்பனே!!! கடைசியில் அப்பனே அவந்தனை பின் அவனாலே பார்க்க முடிவதில்லை!!!
அவை மட்டும் இல்லாமல் அவனிடத்தில் இருப்பவர்கள் அனைவருமே அப்பனே எதை என்று அறிய அறிய கருமத்தையும் கூட இதனால் அப்பனே எவையும் ஆவது இல்லை.. இது போலத்தான் இன்றைய நிலையிலும் கூட நடந்து கொண்டே இருக்கின்றது அப்பனே.
நன் முறைகளாகவே எம்முடைய ஆசிகள் அப்பனே இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே நன் முறைகளாக நல் மனது அப்பனே பின் தூய்மை எதை என்றும் அறிய அறிய அப்பனே வாய்மை அப்பனே நீதி நேர்மை அப்பனே கடைப்பிடித்தால் யானே அப்பனே இறங்கி வந்து அப்பனே கையைப் பிடித்து அப்பனே இழுத்துச் செல்வேன் என்பேன் அப்பனே!!!
எதை என்றும் புரிய புரிய. அவை இல்லாமல் அப்பனே அனைத்தும் செய்து விட்டு வந்தாலும் எம்முடைய ஆசிகள் கிட்டி விடுமா ?? என்ன?? அப்பனே!!!
அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே என் பக்தன் எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் நன் முறைகளாகவே அவனிடத்தில் இருக்கட்டும்!!
(சுவடி பெட்டகம் அந்த பக்தருடைய வாகனத்தில்)
என்று அப்பனே அழகாகவே பின் அவந்தன்!!!
எந்தன் ஆசிகளோடு அப்பனே எவை என்று புரிய புரிய யானே!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!
எவை என்று அறிய அறிய நன்மைகள் செய்து கொண்டே இருந்தால் யான் நிச்சயம் வருவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
அழகாகவே.
அப்பனே உண்மை நிலை உணர வேண்டும் முதலில் அப்பனே உண்மை நிலையை உணராமல் அப்பனே எவர் எதை என்று வந்தாலும் அப்பனே நிச்சயம் பின் அறிந்திருக்கவும் பின் தெரிந்திருக்கவும் முடியாதப்பா!!!
இதனால் உண்மை நிலையை அப்பனே நிச்சயம் அறியுங்கள் அப்பனே!!! உண்மை நிலையை அறிந்து விட்டால் அப்பனே உயர்வு நிலைகள்.
ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... உண்மை நிலையை யாரும் அறிவதில்லையப்பா!!!
அறியாமல் அப்பனே வந்து சென்றாலும் லாபங்கள் இல்லையப்பா!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteAgatheesaya Namaha !
ReplyDeleteஅப்பா நன்றி சில சமயங்களில் மன அழுத்தம் ஆக இருக்கிறது...
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நம நன்றி ஐயா
ReplyDelete