16/8/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நலன்கள்.... அப்பனே நலன்களாகவே அப்பனே நிச்சயம்.. யாங்கள் கொடுக்க தயாராக!!!........
ஆனாலும் அப்பனே அதை நிச்சயம் மனிதன் வரும் காலத்தில் பெற்றுக் கொள்ளப் போவதில்லை!!!
ஏன் எதற்காக என்றால் அப்பனே மனிதனின் ஆசைகள் பேராசைகளப்பா!!!
அப்பனே இவை எடுத்துரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே... ஆனாலும் அப்பனே மனிதன் திருந்திய பாடு இல்லை அப்பனே
அப்பனே மாயையை தான் நிச்சயம் கேட்கின்றான் அப்பனே..
ஆனாலும் அப்பனே அதை எப்படி பின் யாங்கள் தர முடியும்?????????? அப்பனே!!!
அதனால் அப்பனே பின் நிச்சயம் அப்பனே சில சில மாறுதல்கள் கூட அதனால் அப்பனே துன்பங்களை விளைவித்து அப்பனே பக்குவங்களை பின் பலமாக கொடுத்து அப்பனே எவை என்று அறிந்தும் கூட அப்பனே தெரிந்தும் கூட அப்பனே நிச்சயம்... அப்பனே பரிபூர்ணமாகவே அப்பனே நன்மைகள் கூட அப்பனே நிச்சயம் பின் பெறும்பொழுதும் கூட அப்பனே அப்பொழுது தான் தெரியும் அப்பா... பல வழிகளிலும் கூட. அப்பனே
பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே பின் மனிதனுக்கு பிரச்சினைகளோடு திரிவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே எவ்வித பிரயோஜனமும் இல்லை.
ஏன்!? எதற்கு? பின் எவ்வகை? சார்ந்தது? பிரச்சனைகள்??? என்பதை எல்லாம் அப்பனே பின் அறிவதில்லை என்பேன் அப்பனே மனிதன்!!
இதனால் அப்பனே பின் அழிவுக்கு காரணம் பின் மனிதனே ஆகின்றான் என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே பின் பல பல பின் நூல்களிலும் கூட அப்பனே பின் அதாவது தேவாரம் இன்னும் திருவாசகம் அப்பனே இன்னும் இன்னும் பல நூல்கள் அப்பனே தேங்கி கிடக்கின்றது என்பேன் அப்பனே
அவையெல்லாம் அப்பனே நிச்சயம் மனிதன் பின் தன் எண்ணத்தில் கொண்டு வந்து அப்பனே பின் அவை ஓதி வந்தாலே அப்பனே சிறப்பான வாழ்க்கை வாழ முடியுமப்பா!!!
ஆனாலும் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் சிறப்பான வாழ்வை வாழ்வதற்கு அப்பனே இன்னும் அப்பனே பல பல புத்தகங்கள் கூட... இன்னும் அப்பனே பல ஞானிகள் எழுதி வைத்து!!!........
ஆனாலும் அப்பனே பின் அவற்றைக் கூட அப்பனே ஓதுவதில்லை என்பேன் அப்பனே.
அது மட்டும் இல்லாமல் இன்னும் இதிகாசங்கள் அப்பனே... ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே...
அதன்படியே அப்பனே மனிதன் நன்முறையாக வாழ்ந்து வந்தாலே நிச்சயம் அப்பனே கலியுகத்தை கடக்கலாம் என்பேன் அப்பனே
ஆனாலும் கலியுகத்தில் அப்பனே மனிதன் துன்பமோடு வாழ்கின்றான்.
இதனால் எதை என்றும் புரிய புரிய அப்பனே..அத். துன்பத்திற்கு எவை காரணம்??? எதை என்று புரிய புரிய அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் துன்பத்திற்கு மனிதனே காரணமாகின்றான் என்பதை எல்லாம் அப்பனே எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே.... வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே
இதனால் அப்பனே எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பேன் அப்பனே
அப்பனே எவ்வாறு எண்ணங்கள் அப்பனே மேன்மையாக உள்ளதோ!? அப்பனே மேன்மையான இடத்திற்கு அழைத்துச் செல்லும்!! அப்பனே பின் எவ்வாறு கீழ்தரமான எண்ணங்கள் உள்ளதோ... அப்பனே வாழ்க்கையும் கீழ்த்தரமாக போகும் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே புரிகின்றதா அப்பனே.. பின் தான் தம் எண்ணங்கள்!!
தான் தம் செய்த தவறுகள் நிச்சயம் அதாவது மனசாட்சிக்கு எதிராக அப்பனே யார்? ஒருவன்? செயல்படுகின்றானோ?? அப்பனே பின் எதை என்று புரிய புரிய!!!!....
அவை மட்டும் இல்லாமல் அப்பனே அன்னை தந்தையை ஏமாற்றுதல்!!! மறைவாக பொய் பேசுதல்... இவையெல்லாம் பின் நிச்சயம் கலியுகத்தில் நடக்கத்தான்!!... நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே...
இதனால் அப்பனே ஏன்!? எதற்கு?? ஆனால் அப்பனே இறைவனுக்காவது பயப்பட வேண்டும்!!!
ஆனாலும் இறைவனுக்கு கூட பயப்படுவதில்லை மனிதன்..
இதனால் தான் அப்பனே இறைவனே துன்பத்தை விளைவித்து அப்பனே மீண்டும் எதை என்றும் அறிய அறிய மனிதன் மீண்டும் இறைவனிடத்திற்கே செல்கின்றான்..
என்ன பயன்???? அப்பனே!!
அதனால்தான் நிச்சயம் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் பின் பொய் சொல்லாமல் எதை என்று கூட இளவயதில் எதன் மீதும் ஆசை கொள்ளாமை அப்பனே இப்படி இருந்தாலே போதுமானதப்பா!!!!
அப்பனே எண்ணற்ற மாற்றங்கள் அப்பனே நிச்சயம் மனிதனுக்கு நிகழுமப்பா !!!
ஆனாலும் அப்பனே மனிதன் அப்பனே தான் போன போக்கிலே போயிட்டு!!!...அப்பனே பின் தன்னைத் தானே அழித்து மற்றவர்களையும் அழித்து அப்பனே பின் எதை என்று கூட பின் தன் கர்மத்தையும் கூட அப்பனே பின் மற்றவரின் கர்மத்தையும் கூட சம்பாதித்து அப்பனே நிச்சயம் அப்பனே ஆடி அப்பனே வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே. கலியுகத்தில் அப்பனே.
இதனால் திருந்திய பாடு இல்லை அப்பனே இதனால் தான் அப்பனே அழிவுகள் அப்பனே பின் அங்கங்கு.!!!
.. ஆனாலும் பின் இறைவனுக்கு பயப்பட வேண்டும் என்பேன் அப்பனே
ஏனைய வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே பின் எதை என்றும் புரிய அப்பனே பின் நிச்சயம் அப்பனே நிர்வகிக்கும் திறன் அப்பனே இறைவன்... அது மட்டும் இல்லாமல் கண்காணிக்கும் திறனும் கூட.
இறைவன் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் அனைவரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்... பின் அப்பொழுது எதை என்று அறிய அறிய மனதில் நிறுத்த வேண்டும்!
பின் அவை செய்தால் தவறு இறைவன் நிச்சயம் தண்டித்து விடுவான் என்று நிச்சயம் மனதில் நிச்சயம் பின் மனிதனின் மனதில் இருக்க வேண்டும்... என்பவற்றுக்கெல்லாம்.....
அப்பனே எதை என்றும் புரிய இதனால் அப்படி பின் மனிதனை கூட எதை என்று அறிய அறிய இதனால் கண்காணிப்பு.... எதை என்று அறிய அறிய (கண்காணிப்பவராக) இறைவனாக இருக்கின்றான் எப்பொழுதும் கூட...
மனிதனின் அப்பனே எண்ணுகின்றானோ அதை என்ன எண்ணுகின்றானோ அதை நிச்சயம் இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்... தண்டனைகள் வரும் என்பதை நிச்சயம் எப்பொழுது உணர்கின்றானோ அப்பொழுதுதான் அப்பனே அதன் மூலம் எதை என்று புரிய அப்பனே வாழ்க்கை அமையும் !!!!
பின் அப்படி இல்லையென்றால் அப்பனே பின் தான் தம் எண்ணப்படியே சென்று கொண்டிருந்தால் அப்பனே பிரயோஜனம் இல்லை அப்பா... அழிவுகள் தான் நிச்சயம் என்பேன் அப்பனே..
இதனால் அப்பனே கலியுகத்தில் அழிவுகள் அப்பனே பலமாகவே இதனால் அப்பனே பெரும் அழிவை பின் சனீஸ்வரன் ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே.
அப்பனே எதனால் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் சனி ஈஸ்வரன் எதை என்றும் அறிய பின் நிச்சயம் அவந்தன் இல்லத்திலே (கும்பத்தில்) இருக்கின்ற பொழுது... அப்பனே அவந்தன் பின் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். பின் நீதி நிலைநாட்ட வேண்டும் என்பதற்கிணங்க... அப்பனே அழிவுகள் கொடுத்துத்தான் அப்பனே திருத்துவான் என்பேன் அப்பனே
அது மட்டும் இல்லாமல் திருந்தாவிடில் நிச்சயம் அப்பனே குருவானவன் (மீனத்தில் பெயர்ச்சி) இடத்திற்கும் அதாவது பின் சென்று அங்கேயும் கூட சில மாறுதல்கள்... நோய்களைக் கூட உண்டு பண்ணுவான் என்பேன் அப்பனே
இதனால் அப்பனே பின் அவனிடத்திலே எதை என்று அறிய அறிய!!!
""""ராஜ்ஜியம் !!!!! எதை என்று கூட!!
(சனி ஈஸ்வரனின் ராஜ்ஜியம்)
ஈசனிடமே பின் முக்தி எதை என்றும் அறிய அறிய ஈசனிடமே நிச்சயம் பெற்று வரங்கள் பெற்று நிச்சயம் எவ்வாறெல்லாம் தர்மங்கள் நிச்சயம் பின் தாழ்வடைகின்றதோ... அப்பொழுது யான் தண்டிப்பேன்... என்றெல்லாம் நிச்சயம் பின்... நீதிமானாக இருந்து என்றெல்லாம்
சனீஸ்வரன் நிச்சயம் அப்படியே பின் எதை என்று அறிய
பின் ஈசனிடமே முறையாக வரங்கள் பெற்று!!!!!
இதனால்தான் பின் அழிவுகள் பலமாக!!!
யான் ஏனைய வாக்குகளிலும் சொல்லிவிட்டேன்!!! நிச்சயம் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் ஈசனே பின் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் பின் நிச்சயம் பின் யாரும் என்னிடத்தில் வந்து விடுவார்கள் என்று சனீஸ்வரனும் நிச்சயம் பின் ஈசன் இட்ட கட்டளை!!!
அதேபோலத்தான் யான் தர்மத்தை நிலை நாட்ட நிச்சயம் செய்வேன் பின் அப்படி செய்தால் தான் மனிதன் திருந்துவான் என்பதற்கிணங்க... நிச்சயம் என்னிடத்தில் பின் யாரும் வந்து நிச்சயம் எதையும் பின் கேட்டிடாதீர்கள் (கேட்க வேண்டாம்) என்றெல்லாம்... நிச்சயம் பின் சனி ஈஸ்வரனும் கூட.
அதனால் நிச்சயம் அப்பனே இதனால் பின் வாழ்க்கை உங்களிடத்திலே அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே
பின் சனி ஈஸ்வரன் பிடித்து கொண்டால் நிச்சயம் பல பல வகைகளிலும் துன்பங்கள் விளைவிப்பான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டுள்ளீர்கள் என்பேன் அப்பனே
அப்படி இல்லையப்பா!!!
அப்பனே சனி ஈஸ்வரன் முதலில் பின் அதாவது
"""அஷ்டம சனி !!
இன்னும் அப்பனே
""கண்டக சனி!!! இன்னும்
""ஏழரை சனி!!! என்றெல்லாம்
அப்பனே....
பயந்து!! பயந்து!!.....
ஏன்? பயப்பட வேண்டும்??????
அப்பனே எதை என்று அறிய அறிய நீ என்ன தவறு செய்தாய்?????.... எதை என்று அறிந்தும் கூட!!! நீ என்ன தவறு செய்திருக்கின்றாய்!!! என்று தன் தவறை எண்ணித்தான் பயப்பட வேண்டுமே தவிர...
அப்பனே புண்ணியங்கள் தான தர்மங்கள் அப்பனே செய்திருந்தால் அப்பனே சனி ஈஸ்வரனுக்கு பயப்படத் தேவையில்லை என்பேன் அப்பனே !!!
இதனால் அப்பனே பின் அவை எடுத்துக்கொண்டு அப்பனே பல வழியிலும் கூட பல பரிகாரங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் சனி ஈஸ்வரன் இடத்தில் என்றும் நடக்காதப்பா!!! எதை என்று புரியப் புரிய
இதனால் அப்பனே பின் சனி ஈஸ்வரன் நல்லதைத்தான் செய்வான் என்பேன் அப்பனே!!!
முதலில் அப்பனே யாரை? பிடிப்பான்? என்றால்!!...
அப்பனே பின் எதை என்று அறிய அறிய மற்ற உயிர்களை கொன்று அப்பனே எதை என்று கூட குவித்து உண்பது!!!..
இதை தவிர்த்திடல் வேண்டும் என்பேன் அப்பனே
அப்படி இல்லை என்றால் சனி ஈஸ்வரன் பின்... அவனுடைய காலத்தில் நிச்சயம் எவை என்று அறிய அறிய விபத்துக்களை கூட இன்னும் அப்பனே பின் எவை என்று கூற அப்பனே. பல.. பிரிவு நிலைகளையும் ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அப்பனே பின் உங்களிடத்தில் வாழ்க்கையை வைத்துக்கொண்டு அப்பனே அவை இவை என்றெல்லாம் அப்பனே
இதனால் புரிந்து கொண்டு வாழுங்கள் புரிந்து கொண்டு வாருங்கள் என்பவை எல்லாம் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் பல நாட்கள் அப்பனே சனி ஈஸ்வரன் (சபரிமலையில்) இங்கு அமர்ந்திருப்பான் என்பேன் அப்பனே!!
அதாவது எதை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் பின் அய்யனும் கூட எவை என்று கூட அதாவது சபரி நாதனும் கூட அப்பனே பல வகையிலும் கூட அப்பனே பல மனிதர்களுக்கு கூட எடுத்துரைத்திட்டும் கூட ஒன்றும் கேட்கவில்லை மனிதர்கள்
அதனால் நிச்சயம் பின் அறிந்தும் கூட பின்.... இப்படியா???
எதை என்றும் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய புரிய நிச்சயம் யாரும் கேட்கவில்லை என்பதற்கிணங்க நிச்சயம் அழிவுகள் ஏற்படுத்துவதற்காக...யான் செல்கின்றேன் என்று பின் அறிந்தும் கூட பின் கோபமாக வந்து நின்றான்.
ஆனாலும் இதை அறிந்து சனீஸ்வரன் நிச்சயம் பின் சபரிநாதன் நிச்சயம் பின் நேர்மை பின் நீதியுடனே வாழ்பவன்!!!!! இப்படி வாழும் மனிதர்கள் இவர்களுக்கு இதனால் நிச்சயம் துணை புரிவோம் என்பதையெல்லாம்
""""நிர்கதி!!!
( யாரும் இல்லாத எவ் துணையும் இல்லாத கையறு நிலை)
பின் ""பரகதி!!!
( வீடுபேறு முக்தி மோட்சம்)
அறிந்தும் கூட பின்... யான் துணை இருக்கின்றேன் அறிந்தும் கூட பின் உன்னிடத்திலே இருக்கின்றேன் என்பதற்கிணங்க நிச்சயம் பின் அய்யனிடத்திலே இருக்கின்றான் நிச்சயம் அறிந்தும் கூட.
யார் ஒருவன் சரியாக பின் தர்மங்களை கடைப்பிடித்து பின் அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய அறிய வருகின்றார்களோ!!!!!. அப்பொழுது சனீஸ்வரன் கூட பின் நிச்சயம் பின் அய்யனுக்கு (அய்யப்பனின்)விருப்பத்திற்கு ஏற்பவே நிச்சயம்... பின் ஆனந்தத்தில் ஆழ்த்துவான் சனீஸ்வரன்.
அதனால் இவ் மலை தன்னிலே சனி ஈஸ்வரனும் கூட பின் அன்பாக இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் பின் ஐயனுக்கு பின் விருப்பம் உள்ளவர்களை கூட பின் அறிந்தும் கூட நிச்சயம் அறிவுகள் கொடுத்துக் கொண்டு வருகின்றான்!!
ஆனாலும் உண்மையை நீதியை கூட பின் தர்மங்களை கடைபிடிக்க வேண்டும்.
எதையும் அதாவது விரதங்கள் ஏன் எதற்கு என்பவை எல்லாம் நிச்சயம் இது போல் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் நிச்சயம் எக்குறைகளும் வராது என்பதற்கிணங்கவே... பின் சனி ஈஸ்வரனும் பிடிக்க மாட்டான் என்பதே நிச்சயம் தெரிவிக்கின்றான் இங்கு பின் சபரிநாதன்.
ஆனாலும் இதனை அறிந்து மக்கள் பின் அன்றைய தினத்தில் அதாவது ஒருமண்டலம் வரை அவை மட்டும் இல்லாமல் சில நாட்களிலே விரதம் இருந்து மீண்டும் எவை என்று கூட பின் போகும் பொழுது எல்லாம் நிச்சயம் தன் விரதத்தை முடித்துக் கொண்டு எதை எவையோ செய்கின்றான் மனிதன்.
இதனால் நிச்சயம் அறிந்தும் கூட வரும் காலங்களில் பலமாக இன்னும் அழிவுகள் இருக்கின்றது என்பதற்கிணங்க!!!!
(சபரிமலைக்கு மாலையிட்டு எப்படி கார்த்திகை மாதம் தொட்டு மண்டலகால விரதம் இருந்து பக்தர்கள் வாழ்கின்றார்களோ அதே போல வாழ்க்கை முழுவதும் விரத நெறியை கடைப்பிடித்து வாழ வேண்டும்.
சபரிமலை ஏறி ஐயப்பனை கண்டு மழையில் இருந்து இறங்கியவுடன் மனிதர்கள் அசைவ உணவு உண்பது அவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்வது என இப்படி இருந்தால் அழிவுகள் தான் வரும் கஷ்டங்கள் தான் வரும்.
இதைப் பற்றி ஏற்கனவே நம் குருநாதர் சபரிமலை தன்னில் வைத்து.... 19/7/2022 ல் சித்தன் அருள் 1163... வாக்கில் விரதம் என்பது என்ன எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி வாக்கில் உபதேசம் செய்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் 7/1/2023 சித்தன் அருள் 1257 ல் சபரிமலை 18 படிகள் தத்துவ ரகசியங்கள் ஐயப்பனின் அனுக்கிரகம் குறித்து குருநாதர் வாக்குகள் எழுதியுள்ளார் அனைவரும் மீண்டும் ஒருமுறை படித்து உணர்ந்து கொள்ளவும்)
இதனால் உண்மையாக வாழுங்கள் உத்தமனாக வாழுங்கள்... நிச்சயம் போதுமானது.
பின் அய்யனும் கூட பரிசுத்தமாகவே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட பின் ஐயனே எதை என்றும் அறிய அறிய பல வழிகளிலும் பின் மனிதர்கள் அனைத்தும் செய்துவிட்டு... அதாவது ஒரு மண்டலம் மட்டும் எதை என்று அறிய அறிய நிச்சயம் எவை என்று புரிய பின் விரதம் மேற்கொண்டால்... விட்டுவிடுவானா???? என்ன!!!!
(ஒரு மண்டலம் மட்டும் சுத்தமாக இருந்து விட்டு மீண்டும் சராசரி வாழ்க்கை வாழ்வதில் எந்த பயனும் இல்லை
கஷ்டங்கள் தான் மீண்டும் ஏற்படும்)
இன்னும் கஷ்டங்கள் இதனால் பின் மனிதன் சொல்வான்... யான் சபரிமலைதனக்கு சென்றேன் ஆனாலும் கஷ்டங்கள் வருகின்றதே என்பதை எல்லாம்
இதனால் மனிதனே எதை என்று அறிய அறிய
இறைவனை பொய் ஆக்குகின்றான் இங்கு!!!!
(மனிதன் தான் செய்த தவறுகளால் ஏற்படும் கஷ்டங்களுக்கு நாம் செய்த தவறு தான் காரணம் என்று எண்ணாமல் சபரிமலை சென்று வந்தேன் இறைவனை கண்டு வந்தேன் ஆனாலும் கஷ்டங்கள் கஷ்டங்கள்... அப்போது கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற சந்தேகமும் இறைவன் மீது நம்பிக்கையும் போய்விடுகின்றது மனதில் இறைவன் பொய் என்ற எண்ணமும் வந்து விடுகிறது...
இந்த இடத்தில் நம்முடைய கஷ்டங்களுக்கு நம்மளுடைய செயல்பாடுகள் தான் காரணம் என்று எண்ணாமல் இறைவனை காரணம் சொல்கின்றான் மனிதன்)
இதனால் வேண்டாம் எதை என்றும் அறிய அறிய!!!
நிச்சயம் பின் நீதியோடு வாழுங்கள் பின் தர்மத்தோடு வாழுங்கள் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் உத்தமனாக வாழுங்கள் என்பவை எல்லாம் சித்தர்கள் யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்...
அப்படி வாழ்ந்து வந்தால் இவ் அய்யன் உங்களைக் காண பின் ஓடோடி வருவான்
சொல்லிவிட்டேன்!!! அறிந்தும் எதை என்றும் கூட!!
இன்னும் இன்னும் பின் சித்தர்களும் கூட இங்கு தங்கி தங்கி பல வழிகளிலும் கூட பின் நன்மைகள் செய்ய தயாராக!!!!....
ஆனாலும் பின் அறிந்தும் கூட மனிதன் சரியில்லையே!!!
மனிதன் நடித்துக் கொண்டிருக்கின்றான் அதாவது அறிந்தும் கூட பின் ஓர் மண்டலம் மட்டும் விரதம் இருந்து மீண்டும் அறிந்தும் கூட அனைத்தும் செய்து விடுகின்றான்... இதுதான் மனிதனின் நடிப்பு.
அதனால்தான் பின் இவ் சபரிநாதனுக்கும் பின் மிகுந்த கோபங்கள் ஏற்பட்டு நிச்சயம் அழிவுகள் இன்னும் பலமாகவே
இதனால் நிச்சயம் அவை மட்டும் இல்லாமல் சில சில மனிதர்கள் இன்னும் இன்னும் கூட மாமிசங்களை உண்டு வந்து அதாவது... அறிந்தும் கூட இன்னும் பின் விரதங்கள் மட்டும் இருந்து மீண்டும் மாமிசத்தை எடுத்துக் கொள்கின்றார்கள்..
என்ன பயன்?????
எதையென்று கூட இதனால் இறைவனுக்கே எதை என்று புரிய அதாவது பின் இறைவனையே ஏமாற்றுகின்றது போல் இவை இருக்கின்றது.
எப்படி வாழ்வான்??? இங்கு!! அறிந்தும் கூட... பின் அவ் (ஜீவராசிகளின்) ஆன்மாக்களும் சொல்லும்... பின் ஓடோடி அய்யனே அய்யப்பனே!!!.....பார்!!!!! உன்னிடத்திலே நடிக்கின்றான் இவன்!!
பின் எங்களை எல்லாம் உட்கொண்டு நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பின் மண்டலம் வரை மட்டும் விரதம் இருந்து உன்னை நோக்குகின்றானே......
பின் இவையெல்லாம் நியாயமா?????..... என்றெல்லாம்!!!!
இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட... பின் அவர்களுக்கும் கூட அதாவது ஆன்மாக்களுக்கும் கூட வரங்கள் கொடுத்து!!!! அவ் ஆன்மாக்களே மனிதனை அழித்து விடுகின்றது.... சொல்லிவிட்டேன் அப்பனே!!!
(மனிதர்களால் கொல்லப்பட்டு உட்கொள்ளப்பட்ட உயிரினங்களின் ஆத்மாக்கள் இறைவனிடம் வேண்டி கதறும் பொழுது அந்த ஆத்மாக்களுக்கு வரங்களும் சக்தியும் கொடுத்து... அந்த ஆத்மாக்களால் மனிதர்களுக்கு தண்டனை கிடைக்கின்றது)
அறிந்தும் கூட அதனால் அப்பனே.. பின் வாழ்க்கை உங்கள் கையில் என்பேன் அப்பனே.... அதை சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே பின்....அதை தன் இன்னும் உயர்த்துவதற்கு... யாங்கள் வருவோம்!!!! அவ்வளவுதான்!!!!
என்போம் அப்பனே!!!
பின் இதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பின் எங்கு? அலைந்து சென்றாலும்!!!.... திரிந்தாலும் அப்பனே இறைவனை... நேசித்தாலும் அப்பனே பின் உண்மை இல்லை என்றால் அப்பனே இறைவன் கூட பின் கண்களுக்கு தெரிய போவதில்லை என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே இன்னும் இன்னும் அய்யனின் பின் ஆசிர்வாதங்கள் பின் மக்களுக்கு கிட்டி கொண்டே வருகின்றது...
ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் எதை என்று கூட அதிகம் பாவம் செய்தவர்கள் தான் என்பேன் அப்பனே... பின் புண்ணியம் செய்தவர்கள் அப்பனே குறைவே என்பேன் அப்பனே....அவ் பாவத்தை கழிக்க அப்பனே நிச்சயம் அப்பனே!! சனி ஈஸ்வரன் கூட பின் எதை என்று அறிய அறிய இங்கு பக்கத்திலே அமர்ந்து பின் எழுதி எழுதி அறிந்தும் கூட பின் கஷ்டங்களையும் தீர்த்து.. பின் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய அப்பனே இவை என்று அறிய அறிய!!
(சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் பக்தி ஒழுக்கம் பாவம் புண்ணியம் இவற்றை எல்லாம் ஐயப்பனுக்கு அருகில் இருந்து கொண்டு சனீஸ்வரன் கணக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கணக்குகள் எழுதி அதன்படி தண்டனைகளும் புண்ணியங்களும் வாழ்க்கையில் முன்னேற்றமும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் சனி ஈஸ்வரன்)
!
இதனால் நிச்சயம் அய்யனுக்கு பின் சேவகன் ஆகவே இருக்கின்றான் சனி ஈஸ்வரன்!!!
அதனால்தான் சொல்கின்றேன் நீங்கள் நீதி நியாயம் தர்மமோடு பின் வாழ்ந்தால் பின் அய்யனும் கூட சொல்லி அனுப்புவான்... சனீஸ்வரன் இடத்தில்!!!
அவர்களை நன்றாக கவனியுங்கள் என்று!!!!
பின் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின் நீதி நேர்மையோடு வாழுங்கள் நிச்சயம் பின் சனி ஈஸ்வரன் கூட மனமகிழ்ந்து அனைத்தையும் கொடுப்பான் நிச்சயம் சனி ஈஸ்வரனுக்கும் கூட பயப்படத் தேவையில்லை!!!
ஆனால் அதை விட்டுவிட்டு நிச்சயம் அனைத்து தவறுகளையும் பின் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் அழிவுகள் நிச்சயம்... சனி ஈஸ்வரனாலே!!!!!
சொல்லிவிட்டேன்!!! அறிந்தும் உண்மைதனை கூட!!!
இன்னும் இன்னும் பல பல கோடிகள் பின் எவை என்று அறிந்து அறிந்து மனிதன் பிறப்புக்கள் எடுத்து வந்தாலும் மனிதன் பின் திருந்த போவதில்லை.
அதனால்தான் பின் கலியுகம் அதிவிரைவிலேயே பின் முடிவடைய வேண்டும் என்பதற்கிணங்க... சித்தர்களும் அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய அறிய.
இதனால் பின் சரியாக வாழ்ந்து வாருங்கள் நிச்சயம் பின் நோய் நொடி இருக்காது.
நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் நீடுழி வாழலாம். நிச்சயம் அறிந்தும் கூட பின் கலியுகத்தில் என்பவை எல்லாம் !!! பின் எப்படி வாழ்ந்திடல் வேண்டும்? பின் எப்படி வாழ்ந்தால் நோயில்லாமல் வாழலாம்? என்பதையெல்லாம் எடுத்துரைத்து கொண்டே வருவோம்!!!
பின் ஏற்கனவே பின் எடுத்துரைத்து விட்டோம்... எவ்வாறு? நோய்கள் வரும்? என்பதைக் கூட!!!
அனைத்தும் பின் அழிவுக்காகவே பின் அறிந்தும் கூட மனிதனே... அழிவை ஏற்படுத்துகின்றான்... அறிந்தும் கூட...
அதனால் பின் அவ் அழிவை தடுக்கவே நிச்சயம் இறைவன் பல ரூபங்களிலும் கூட வந்து அதற்குள்ளே மனிதனை பின் திருத்த பார்க்கின்றான்... அப்படியும் திருந்திய பாடு இல்லை... நிச்சயம் பின் அழிவுகள் தான். பின்.. அறிந்தும் கூட.
இன்னும்.....
"""""" இவ்வருடத்தின் !!!!!!! எதை என்றும் அறிய அறிய... இன்னும் இன்னும் எவை என்று புரிய புரிய.... அவை சொன்னால் கூட நீங்கள் பயந்து..... ஏன் எதற்கு என்றெல்லாம்!!!!
ஆனாலும் நிச்சயம் முடிந்தளவு!!! யாங்கள் காப்போம்!!! அறிந்தும் கூட!!
பின் ஈசனிடம் முறையிட்டு!!!!!
நிச்சயம் பின் பாவங்கள் செய்யாதீர்கள் பின் நன்முறைகளாகவே நிச்சயம் பின் பிரார்த்தனை செய்யுங்கள் இறைவனிடத்தில் பின் அனுதினமும்.. பின் உட்கார்ந்து இல்லத்திலே பின் தீபம் ஏற்றி நிச்சயம் தியானங்கள் பின் செய்து கொண்டே!!!!
அவை மட்டும் இல்லாமல் பின் குடும்பத்தோடு அமர்ந்து பின் அறிந்தும் கூட தியானங்கள் இறைவனை நோக்கி செய்து கொண்டே வாருங்கள்...
நிச்சயம் மாலை வேளைகளிலும் கூட... நிச்சயம் அதிகாலை வேளையிலும் கூட இவ்வாறு... பின் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் மாற்றங்கள்!!!
இறைவன் நிச்சயம்.... இல்லத்தை தேடி வருவான்!!!
அப்படி இல்லை என்றால் நிச்சயம் முடியாதப்பா!!!! முடியாது!!!
எதை என்று அறிய அறிய ஒருவன் பின் இல்லத்திலே இறைவன் பக்தி நிச்சயம்.. இல்லை என்பதை எதை என்று ஒருவன் இறைவன் பக்தி ஒருவன் இல்லை என்கின்றான் பின் இன்னொருவன் இல்லத்திலே இறைவன் இல்லை என்று பின் இருவருக்குமே குழப்பம்.... சண்டைகள் சச்சரவுகள் அப்பனே
இவை நிச்சயம் பின் செய்து கொண்டே இருந்தால் பிள்ளைகளும் கூட இவ்வாறே!!!!
இதனால்தான் அப்பனே அழிவுகள் ஏற்படுகின்றது அப்பனே.. பின் குடும்பத்திலும் கூட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் நிச்சயம் என் பக்தர்களும் கூட இதை செய்ய வேண்டும் என்பேன் அப்பனே.
யார் ஒருவர் இதை செய்கின்றார்களோ நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் இன்னும் பக்குவங்கள் கொடுத்து யான் உயர்த்துவேன் என்பேன் அப்பனே... நல்விதமாகவே அப்பனே!!!
ஆனாலும் பின் அதாவது சித்தர்களின் பேச்சை கேட்பதற்கும் அதற்கு தகுந்தார் போல் நடப்பதற்கும் அப்பனே புண்ணியங்கள் வேண்டுமப்பா!!
புண்ணியங்கள் இல்லையப்பா!!
அதனால்தான் அங்கு செல்!! இங்கு செல்!! அதை செய்!! இதை செய்!!!... என்றெல்லாம் அப்பனே பின் என் மக்களுக்கு எடுத்துரைத்து அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே துன்பத்தை போக்கி... அப்பனே பின் அதாவது எதை என்று கூற பாவத்தை பின் போக்கி அப்பனே இன்பத்தையும் அதாவது பின் புண்ணியத்தையும் கூட அளித்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலன்களாகவே!!!
அதனால் அப்பனே பின் விட்டு விடுங்கள்.... அப்பனே நிச்சயம் அய்யன் கூட எதை என்று அறிய அறிய அப்பனே... இயலாதவர்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் பின் அனைத்தும் தெரிந்தவன்.. பின் இவ் அய்யன்!!!
அறிந்தும் கூட அப்பனே இதனால் நிச்சயம் உதவிகள் பல பல புரிவான் என்பேன் அப்பனே.... யாருக்கும் தெரியாத அளவிற்கும் கூட சில ரகசியங்கள் அப்பனே இவ் அய்யனுக்கு தெரியுமப்பா!!!
அப்பனே இவை என்று புரிய புரிய இதனால் அப்பனே... திடீரென்று மாற்றங்கள் அப்பனே நிச்சயம் நிகழும் அப்பா...
அவை மட்டும் இல்லாமல் அப்பனே இவ் மலையில் பல சிறப்புக்கள் ஒளிந்துள்ளது அப்பா!!!!
அப்பனே நிச்சயம் பின் 20 நாட்கள் அப்பனே பின் அனைத்து சித்தர்களும் கூட தவத்தில் இருந்து அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட அப்பனே பின் எதை என்று புரிய புரிய அப்பனே சபரிநாதன் அப்பனே பல பல அப்பனே பின் எதை என்று கூட விலங்குகளின் மீது கூட அமர்ந்து கொண்டு அப்பனே நிச்சயம் சுற்றி சுற்றி திரிந்து கொண்டே வருகின்றான் அப்பனே...
யார் ? எதை? எப்பொழுது? எதை என்று அறிய அறிய அதாவது.. பின் இறைவனை
(மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்ற உண்மையான பக்தர்கள் வீட்டிற்கு சென்று ஐயப்பன் பார்ப்பார்)
நோக்கி அதாவது அய்யனை நோக்கி வருவார்கள் என்பேன் அப்பனே...... அவர்கள் இல்லத்திலும் கூட சென்று பார்ப்பான் என்பேன் அப்பனே!!!
தூய உள்ளத்தோடு இருங்கள் அப்பனே பின் நடிக்காதீர்கள் என்பேன் அப்பனே
விரதம் இருந்து அப்பனே அப்படியே சரியாகவே பின்பற்றிக் கொண்டால் கடைப்பிடித்துக் கொண்டால் அப்பனே வாழ்க்கையில் தொல்லைகள் என்பதே இல்லை அப்பா
அப்பனே பின் அதாவது ஒரு மண்டலம் வரை பின் சபரிநாதனுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே பின் அப்படியே... வாழ்க்கை முழுவதும் இருந்து விட்டாலே போதுமானதப்பா !!!
(சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் அதாவது உணவு உண்ணாமல் இருப்பது மட்டும் விரதம் அல்ல மனது செயல்கள் தீய பழக்கங்களில் இருந்து ஒதுங்கி இருத்தல் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருத்தல் அன்னதானம் முதலிய தான தர்மங்கள் செய்தல் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுதல் சுகபோக இச்சைகளில் இருந்து ஒதுங்கி இருத்தல் உணவு கட்டுப்பாடு ஜீவகாருண்யம் இப்படி எல்லாம் இருப்பது தான் விரதம் இதை மண்டலகாலம் மட்டும் கடைபிடிக்காமல் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்தாலே போதுமானது)
அப்பனே நிச்சயம் உங்களுக்கு அணுவளவும் கூட அப்பனே கஷ்டங்கள் வராது அப்பனே
அப்படி எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே பின் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பேன் அப்பனே
கூட்டுப் பிரார்த்தனையில் அப்பனே நிச்சயம் திருவாசகத்தையும் கூட அப்பனே....
இன்னும்
"""" திருமுருகாற்றுப்படை ....!!!!
(நக்கீரர் இயற்றிய சங்கத்தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டுகளில் ஒன்றான திருமுருகாற்றுப்படை)
இன்னும் அறிந்தும் கூட அப்பனே பின் பல பல பாடல்களையும் அப்பனே பின்
"" கோளாறு பதிகத்தையும்!!!! அப்பனே
இன்னும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே...
நிச்சயம் என் மக்கள் இதை பாடிட்டு வந்தாலே அப்பனே நிச்சயம் அப்பனே பல பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா
இன்னும் உயர்வுகள் ஏற்படும் அப்பா
அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே... இதனால் அப்பனே அனைத்து விஷயங்களையும் கூட அப்பனே என் பக்தர்களுக்கும் கூட அப்பனே தெரிவித்து அப்பனே இன்னும் இன்னும் சில மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் என்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பக்தியை என் மக்கள் நிச்சயம் எதை என்று அறிய அறிய தெரிவிப்பார்கள் என்பேன் அப்பனே.
இவ்வாறு இருந்தால்தான் எவை என்று கூட அன்பாக இருத்தல் அப்பனே பின் அவசியம் என்பேன் அப்பனே பின் கோபம் கொள்ளாமை அவசியம் என்பேன் அப்பனே.
அவை மட்டுமில்லாமல் பின் அனைவரிடத்திலும் கூட பின் அழகாக பழகுவது!!! வேண்டும் என்பேன் அப்பனே.
பின் எவை என்று கூற அப்பனே அனைவருமே சித்தர்களின் பிள்ளைகள் அதாவது இறைவனின் பிள்ளைகள் என்று கூறுவது... அப்பனே இவையெல்லாம் அப்பனே பின் தானாகவே அப்பனே எங்களை வணங்குபவர்களுக்கு அப்பனே போட்டி பொறாமை இருக்கக் கூடாது என்பேன் அப்பனே..
தானாகவே அனைத்து வித்தைகளும் கூட அப்பனே பின் வரவேண்டும்... எவை என்றும் புரிய புரிய அப்பனே
அதனால் நீங்கள் சரியாகவே இருந்தால் அப்பனே அனைத்து வித்தைகளையும் கூட யானே சொல்லித்தருவேன் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.
இதனால் அப்பனே இன்னும் மாற்றங்கள் அப்பனே.. ஏற்பட எவை செய்ய வேண்டும்??? எங்கு செல்ல வேண்டும்??? அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக் கொடுப்பேன்!!! நலன்களாகவே!!!
அப்பனே!! எம்முடைய ஆசிகள்!!! ஆசிகளப்பா!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி அகத்தியர் பெருமானே 🙏
ReplyDeleteகுருவே போற்றி. தொகுத்துத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteஅன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1682 -சபரிமலை!
===========================================
https://www.youtube.com/watch?v=UVNm3_iCu4o
===========================================
உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள், உயர்வுகள் ஏற்பட, பல பல தரித்திரங்கள் விலக நிச்சயம் குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்
அப்பா அகத்தியா நன்றி 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUADI SARANAM
THIRUVADI SARANAM