​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 1 September 2024

சித்தன் அருள் - 1672 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 8

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7)

நம் குருநாதர் :-  அப்பனே நல்வழிகள் பிறக்கும் அப்பா. ( இப்போது குருநாதர் ஒரு அடியவரை நோக்கி ) அப்பனே அறிவுகள் தெளிவுகள் இன்னும் நன்மைகளாகவே முடியும் அப்பா. அப்பனே வழி நடத்துவேன். ஒவ்வொன்றாகக்  கொடுக்கின்றேன். அப்பனே ஓர் நிலைமைக்கு எடுத்து வந்துவிட்டேன். அப்பனே உந்தனுக்கு என்ன தேவையப்பா? 

அடியவர் 7:- ( ஒன்றும்  தேவையில்லை என்பது போலத்  தலையசைத்தார் ) 

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே பின் அது போலவே அனைவருக்கும் கேட்டுச்சொல் அப்பனே? 

அடியவர் 7:- ( மற்ற அடியவர்களை ) உங்களுக்கு என்ன வேண்டும்? எதுக்காக அகத்தியரை நாடி வந்துள்ளீர்கள்? 

அடியவர் 9:- மனசு சஞ்சலமாகவே இருக்கு. மன நிம்மதியே இல்லை. எதற்கெடுத்தாலும் ஒரு பயம் இருக்கு. இறைவன்கிட்டயே நம்பிக்கை இன்னும் இல்லை. எப்படி நம்பிக்கை ஏற்படுத்துவது  என்று தெரியவில்லை. 

நம் குருநாதர் :- அப்பனே இதுவரை யான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் அப்பனே. இவள்தன் தூங்கிக் கொண்டிருந்தாளா என்று முதலில் கேளு. பின்பு உரை அனைத்தும். 

அடியவர் 9 :- எல்லாமே இறைவன்தான் செய்கின்றார் என்று சொல்றாங்க. அப்ப நம்ம என்ன?

அடியவர் 7:- முதலில் குருநாதர் என்ன சொன்னாங்க? ஏன் நாம் நம்மை உணரவில்லை? அறிவை பற்றிப்  பேசிக் கொண்டிருக்கின்றார்கள் குருநாதர். அந்த அறிவை வைத்து நம்மை நாம் ஏன் உணரவில்லை. அறிவின் துணை கொண்டுதான் இறைவனை அடையனும். அப்படி இருக்கையில் அந்த அறிவை நாம் உணரவில்லை. அந்த அறிவை உணராமல் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சரிங்களா. 

அந்த அறிவுதான் யோசிக்கின்றது. இப்போது நீங்கள் சொன்னீர்கள் ஒரு வார்த்தை இல்லையா? எனக்கு அந்த இறை நம்பிக்கை வரவில்லை என்று. அந்த நம்பிக்கை என்பது என்ன? அது ஒருவித அறிவுதான். அதை எப்படி இறைவனிடம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே இவ்வளவு தூரம் குருநாதர் எடுத்துச் சொல்கின்றார் பாருங்கள். அப்படின்றப்போ இறைவன் நம்மள சுற்றி் இயங்கிக் கொண்டிருக்கின்றான். ஒரு வாரத்தைச்  சொன்னார் குருநாதர். இறைவன் நம்முடன் இருக்கின்றார். நம்மிடையே  இயங்கிக்கொண்டு, நடமாடிக் கொண்டு உள்ளார். ஆனால் நாம் அதை நம்ப மறுக்கின்றோம். நம்ம என்றால் நம் அறிவு இறைவனை மறுக்கின்றது. அந்த நம்ப மறுக்கின்ற அறிவை நம்ம இன்னும் இறை பக்கம் செலுத்தி அதை உறுதிப்படுத்தனும். இறைவன் இருக்கின்றார். நம்முடன் வாழ்கின்றார். இல்லை என்றால் நமக்கு இப்படி குருநாதர் மூலம் வாக்கு கிடைக்குமா? குருநாதர் தான் இருந்த இடத்திலிருந்து  பட் ,பட்டென்று  அனைத்தும் சொல்கின்றார். ஒவ்வொருவரின் முக்காலத்தையும் சொல்கின்றார். இதெல்லாம்  யாரால் சொல்ல முடியும்? முக்காலம் உணர்ந்த ஞானிகள் அவர்கள். நமக்கு இதெல்லாம் தெரியுமா? அவங்களால எப்படி எல்லாம் எடுத்து சொல்ல முடியுது? அகத்தியர் ஒரு இறைவர். இறைவன் இருக்கின்றார் என்பது நமக்கு கூப்பிட்டு உணர்த்துகின்றார். நீ உணர்ந்துகொள்  என்று. மனப்பாடம் செய்யுங்கள் நீங்கள். தினமும் இறைவன் இருக்கின்றார். நம்மை சுற்றி இயங்கிக்கொண்டு உள்ளார் என்று. நாம் இறைவனை வணங்கவேண்டும். பிற உயிர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது என்று  மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் மனதில் உறு ஏற்ற ஏற்ற அறிவு என்பது மாறும். அறிவு என்பது கட்டுக்கடங்காத ஒரு காளை. அதை அடக்குவது என்பது எளிதல்ல. அதற்கு குருவருளும், திருவருளும் நிச்சயமாக வேண்டும். அதனால் அவர்களை பிரார்த்தனை  , வேண்டி  செய்யச் செய்ய அறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பண்படும்.

நம் குருநாதர் :- அப்பனே இன்னும் கேள். இவள்தான் அறிவாளி என்று கேட்டிருப்பாள் ( நினைத்துக் கொண்டு இருக்கின்றாள்). 

அடியவர் 9:- அறிவாளி என்று நினைக்கவில்லை ஐயா. இறைவனே எல்லாம் செய்கின்றான். எல்லாம் பார்த்துக் கொள்கின்றான். இறைவனால் மட்டும் எல்லாம் செய்ய முடியும் என்றால் ( இவ் அடியவர் பேசி முடிப்பதற்குள் குருநாதர் குறுக்கிட்டு…) 

நம் குருநாதர் :- அப்பனே இறைவனுக்கே மரியாதை கொடுப்பதில்லை இவள் இறைவனை எப்படி வணங்குவாள் கூறு?

அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) இறைவன் செய்கின்றார். இறைவன் பார்த்துக்கொள்வார். இப்படிச்  சொல்ல வேண்டும் ( மரியாதையாக இறைவனை ) 

நம் குருநாதர் :- அப்படி இருந்தால் தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுப்பாளா? நீயே கேளப்பா?  ( இறைவனுக்கே மதிப்பு தராதபோது , தாய் தந்தையரை எப்படி மதிக்க முடியும்? ) 

அடியவர்  7:- தாய், தந்தைதான் இறைவன். அதாவது ஒரு சூட்சுமம் ஒன்று உண்டு. 

நம் குருநாதர் :- அப்பனே ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. முதலில் தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்கின்றாளா என்று கேள்? 

அடியவர் 7:- தாய், தந்தைக்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா? 

அடியவர் 9:- ( இனி ) உண்மையாக இருக்கின்றேன். 

நம் குருநாதர்  :- அப்பனே இதை முதலில் சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- தாய், தந்தையை மதிக்காதவர்கள் இறைவனைப்  பார்க்கவும் முடியாது. இறைவனை உணர்ந்து கொள்ளவும் முடியாது.

நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் :- அப்பனே எப்படி இப்படி கேள்விகள் கேட்கலாம் என்று நீ கூறப்பா? 

அடியவர் 7 :- குருநாதர் சொல்வது உங்களுக்குப்  புரிகின்றதா? நீங்க உங்கள் முதல் கேள்வியை எப்படி ஆரம்பித்தீர்கள். இறைவனை உங்களால் நம்பமுடியவில்லை என்று ஆரம்பித்தீர்கள். (இறைவனை) நம்புவதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும். முதலில் நம் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். நம்மளை பெற்ற தாய் , தந்தையை மதித்தால்தான் இறைவனை நம்மால் உணர முடியும். நாம் மதிக்காத போது இறைவனை நிச்சயம் உணர முடியாது. அந்த அருளை நமக்குக்  கொடுக்க மாட்டார்கள். 

நம் குருநாதர் :- அப்பனே, பின் கூறு. இன்னும் கூறு.

அடியவர் 7:- தாய், தந்தை ஏன் முக்கியம் என்று குருநாதர் திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்றால்…

நம் குருநாதர் :- அப்பனே, இறைவனிடத்தில் நேரடியாகச் சென்றுவிட்டாள் அப்பனே. முதலில் தாய் தந்தையரைப் பற்றி கூறச் சொல். 

அடியவர் 7:- உங்கள் தாய் தந்தையைப் பற்றிச் சொல்லுங்கள். 

அடியவர் 9:- ( அமைதி ) 

நம் குருநாதர் :- அப்பனே ஏன் உந்தனை ( அடியவர் 7) நிற்க வைத்தேன் அப்பனே. இதைப் பற்றியும் ரகசியமாக சொல்கின்றேன். 

அடியவர் 7:- ( நின்று கொண்டே கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்). 

அடியவர் 9:- ( தாய், தந்தையைப்  பற்றி விவரித்தார்கள்.  ) 

நம் குருநாதர் :- ( இவ் அடியவருக்குத்  தனிப்பட்ட வாக்குகள் உரைத்தார்கள். அதில் சில பொது வாக்குகளும் உரைத்தார்கள். அந்த பொது வாக்குகள்) 

அப்பனே கோபப்பட்டாலே நோயின் தாக்கம் அதிகரிக்கின்றதப்பா. முதல் தெய்வம் தாய். ( தாயிடம் கோபம் கொள்வது தவறு. அப்படி கோபம் கொள்பவர்களுக்கு ) அப்போது இறைவன் கஷ்டத்தைக்  கொடுப்பானா? கொடுக்க மாட்டானா? 

அடியவர்கள் :- ( அமைதி ) 

நம் குருநாதர் :- அப்பனே மற்றவர்களுக்காக உழைக்கின்றீர்கள், பணத்தைச்  சம்பாதிக்கின்றீர்கள் அப்பனே. ஆனால் தாய், தந்தையருக்கு உழைத்து பின் புண்ணியத்தைச்  சம்பாதிக்க மறந்து விடுகின்றார்கள் அப்பனே. 

அடியவர் 7:- நம் கண்ணுக்குத்  தெரிந்து புண்ணியத்தைச்  சம்பாதிக்கும் source அப்பா, அம்மா. 

நம் குருநாதர் :- புண்ணியம்தான் நல்வழிப்படுத்தும். அப்பொழுது புண்ணியம் செய்யாமல் எவை நடந்தேறும்? 

அடியவர் 7:- ( விளக்கம் அளித்தார்கள். இதனிடையில்…. ) 

நம் குருநாதர் :- அப்பனே உன் முன்னே உள்ளவனைத்  தலை மீது குட்டு. அப்பனே பலமாகக்  குட்ட வேண்டும். 

அடியவர் 7:- ( குருநாதா!!!!! என்று பயத்துடன் குட்டினார் ) 

நம் குருநாதர்:- அப்பனே இதுவரை யான் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றேன் என்று அவனை எழுப்பி உன்னிடத்தில் கூறச்சொல்?

அடியவர் 7:- ( கேள்வி கேட்டார் ) 

அடியவர் 10:- கவனிக்கவில்லை. 

நம் குருநாதர்:- அப்பனே ஞாபகம் எங்கே அப்பனே? ஆனால் ( நாடி வாக்கு கேட்க ) வந்துவிட்டான். 

அடியவர் 10 :- ( அமைதி ) 

நம் குருநாதர் :- அப்பனே இதுபோலத்தான் திருத்தலத்திற்குச் சென்று அப்பனே அமைதியாக இறைவனை நினைத்து தியானம் செய்யாமல் எதை எதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது இறைவன் வருவானப்பா. போய் விடுவான் அப்படியே. 

( அடியவர்களே, இந்த வாக்கு மிக முக்கிய வாக்கு. இந்த அடியவரை வைத்து மகத்தான ஒரு பாடத்தை நம் அனைவருக்கும் உரைத்துள்ளார்கள் நம் குருநாதர். தரிசனம் மட்டும் போதாது. நாம் திருத்தலத்திற்குச்  சென்று குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது அந்த ஆலய இறைவன், இறைவியை நினைத்து அவசியம் தியானம் செய்வது  மிக அவசியம். அப்போதுதான் இறைவன்  நமக்கு இறையருள் செய்து நன்கு கிட்டி வாழ்வில் உயர இயலும். அப்படி இல்லையெனில் இறைவன் உங்களிடத்தில் வந்து அருள் செய்யாமல் சென்று விடுவார். அடியவர்கள் இந்த வாக்கை நன்கு உணர்ந்து இனிமேல் ஆலயங்களில் தியானங்கள் செய்து இறையருள் பெறுக.) 

நம் குருநாதர்:-  ( தனி வாக்குகள் உரைத்த பின் அடியவரை ( # 10 ) அமரச் சொன்னார்கள்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 8
    சித்தன் அருள் - 1672

    https://www.youtube.com/watch?v=LDf_hFu6oqU

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    சித்தர்கள் ஆட்சி

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பாதம் சரணம்.

    வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் 22 பகுதிகளாக வெளிவந்து நிறைவு அடைந்தது. அடியவர்கள் இந்த வாக்கினைப் படித்து மகிழ , இந்த 22 வழக்குகளின் பதிவு எண் மற்றும் அதன் 22 இணைப்புகள் ( blog spot links ) இங்கு அளிக்கின்றோம். இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப் புண்ணியங்கள் உண்டாகும். அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்துச் சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும்.

    சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
    https://siththanarul.blogspot.com/2024/06/1639-1.html

    சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
    https://siththanarul.blogspot.com/2024/06/1640-2.html

    சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
    https://siththanarul.blogspot.com/2024/07/1644-3.html

    சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
    https://siththanarul.blogspot.com/2024/07/1645-4.html

    சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
    https://siththanarul.blogspot.com/2024/08/1665-march-2024-5.html

    சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
    https://siththanarul.blogspot.com/2024/08/1666-march-2024-6.html

    சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
    https://siththanarul.blogspot.com/2024/08/1667-march-2024-7.html


    சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
    https://siththanarul.blogspot.com/2024/09/1672.html

    சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
    https://siththanarul.blogspot.com/2024/09/1674-march-2024-9.html

    சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
    https://siththanarul.blogspot.com/2024/10/1690-march-2024-10.html

    சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
    https://siththanarul.blogspot.com/2024/10/1698-march-2024-11.html

    சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
    https://siththanarul.blogspot.com/2024/10/1700-march-2024-12.html

    சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
    https://siththanarul.blogspot.com/2024/10/siththan-arul-1707-march-2024-13.html

    சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
    https://siththanarul.blogspot.com/2024/10/1704-march-2024-14.html

    சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
    https://siththanarul.blogspot.com/2024/10/1709-march-2024-15.html

    சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
    https://siththanarul.blogspot.com/2024/11/march-2024-16.html

    சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
    https://siththanarul.blogspot.com/2024/12/1755-march-2024-17.html

    சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
    https://siththanarul.blogspot.com/2024/12/1756-march-2024-18.html

    சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19
    https://siththanarul.blogspot.com/2024/12/1757-19.html

    சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
    https://siththanarul.blogspot.com/2024/12/1759-20.html

    சித்தன் அருள் - 1760 - மதுரை வாக்கு - 21
    https://siththanarul.blogspot.com/2024/12/1760-21.html

    சித்தன் அருள் - 1761 - மதுரை வாக்கு - 22
    https://siththanarul.blogspot.com/2024/12/1761-22.html


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete