சித்தன் அருள் - 1680 ன் தொடர்ச்சியாக.......
இதனால் அப்பனே புண்ணியங்கள் பின் மிஞ்ச மிஞ்ச அப்பனே தேவையில்லை எம்மிடத்தில் வருவதற்கு!!!
எதை என்று அறிய யானே வருவேன்!!! யானே வருவேன் என்றெல்லாம் அப்பனே!!! அதுதான் அப்பனே இப்பொழுதும் கூட
சான்று!!! என்பேன் அப்பனே!!!
அவனிடத்தில் உணவையும் உண்டுள்ளேன்!!! அப்பனே நல்முறையாக அப்பனே பானத்தையும் அப்பனே எதை என்று அறிய அறிய அருந்தியுள்ளேன் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
(ஒவ்வொரு யாத்திரையின் போதும் உணவும் பல சாறுகளும் பொதிகை மலை பயணத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வரும் அந்த சிவகாசியை சேர்ந்த அடியவர் தந்த உணவையும் பழச்சாறையும் குருநாதர் உண்டுள்ளார்)
இதுபோலத்தான் அப்பனே சேவைகள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!
சேவைகள் செய்ய செய்ய அப்பனே நிச்சயம் கர்மாக்கள் கர்மாக்கள் குறைந்து அப்பனே புண்ணியங்கள் அதிகரிக்க தானாகவே அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே!!!! அவன் மீது அளவு கடந்த பாசமப்பா!!!
அறிந்தும் கூட இதனால் அப்பனே இன்னும் அவந்தனுக்கு பல வகையிலும் கூட என்னென்ன தேவையோ அவையெல்லாம் யான் கொடுப்பேன் அப்பனே!! கர்மங்கள் சேராமல் அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே நன்முறைகளாக!!
அதனால் அப்பனே எவருக்கு எவை எத்தகுதி அப்பனே எவை என்று அறிய அறிய பின் தகுதிகள் அப்பனே பார்த்துத்தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட தகுதி என்றால் உண்மை நேர்மை அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நற் சிந்தனைகள் அப்பனே இதுதான் எங்களுக்கு தேவை!!!
இதுதான் தகுதி!!!
இத் தகுதி அப்பனே பின் யாருக்கும் உள்ளதோ அதாவது எதை என்று அறிய அறிய போட்டி பொறாமைகள் அப்பனே அவை என்று அறிய இன்னும் இன்னும் அப்பனே பிறரை பழி கூறுதல் அதாவது இவையெல்லாம் நீக்கி அப்பனை இருந்தாலே போதுமானதப்பா தகுதிகள் வந்துவிடும். தானாகவே!! யாங்களும் வந்து விடுவோம் அப்பனே நலங்களாகவே அனைத்தும் தந்து விடுவோம் அப்பனே
எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் என்னை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அவை வேண்டும் இவை வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே
ஆனாலும் கொடுத்தாலும் அப்பனே அவையெல்லாம் பின் அதாவது பின் அதாவது ஒழுங்காக வைத்து வாழ முடியுமா என்றால்..????.. என்றெல்லாம் நிச்சயம் முடியாதப்பா !!!
எதை என்றும் அறிய அறிய
அதனால்தான் அப்பனே தகுதிகளுக்கு ஏற்றவாறு தான் யாங்கள் கொடுப்போம்.
அதனால் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் முதலில் அப்பனே!!!
தன்னை உணராமல் எதை கொடுத்தாலும் அப்பனே எவை என்று புரிய புரிய அதனால்தான் அப்பனே முதலில் தன்னை உணருங்கள் தன்னை உணருங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!! அப்பனே
தன்னை உணர்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட யாங்களே வருவோம் அப்பனே!!!
தன்னை யார் ஒருவன் உணர்ந்துள்ளானோ... அவன்தானப்பா எதை என்று அறிய அறிய எங்களை புரிந்திருப்பான் அப்பனே!!!!
அப்பொழுதுதான் பல உண்மைகள் தெரிந்திருக்கும் என்பேன் அப்பனே
அப்படி உணராவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றும் புரியாதப்பா!!!
யாங்கள் சொன்னாலும் அது பொய் என்று சொல்லி விடுவான் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இப்படித்தான் பல பேர்களும் கூட அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!! இவையெல்லாம் அவந்தனுக்கு தெரியாதப்பா!!! உண்மை நிலை தெரியாமல் அப்பனே யாங்கள் எதை பின் எதை என்று அறிய அறிய உரைத்தாலும் அது பொய்யாக போகுமப்பா!!
அப்பனே சொல்லிவிட்டேன்
இதனால்தான் அப்பனே உண்மை நிலை அப்பனே எவை என்று அறிய அறிய உண்மை நிலையை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா!!! எங்களிடத்தில் வருவதற்கும் தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே.
தகுதி உள்ளவரை கூட யாங்கள் அழைப்போம் என்பேன் அப்பனே!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய
அவந்தனுக்கும் எம்முடைய ஆசிகள்!!!!.அவந்தன் பின் அதாவது அவந்தனுக்கும் அவந்தன் இல்லத்தில் உள்ள அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே பரிபூரணமாகவே!!! அறிந்தும் கூட அப்பனே!! நலன்கள் ஆகவே நலங்களாகவே இன்னும் வெற்றிகள் கிட்டும் என்பேன் அப்பனே!!! அவன் விரும்பியதை நிச்சயம் யானே தருவேன்... அவன் இல்லத்திற்கும் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே
. அதனால்தான் அப்பனே நல் முறைகளாக அப்பனே!!!
எவருக்கு ??எதைக் கொடுக்க வேண்டும் அப்பனே.....
அவந்தன் எதிர்பார்த்தானா என்ன ???? அப்பனே!!!!
பின் சட்டென்று!!! அப்பனே! (யான் அவந்தன் இடத்தில்)
அதேபோலத்தான் அப்பனே நீங்கள் எதிர் பார்க்காதவாறு அப்பனே யானே தருவேன் அப்பனே!!!
எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் எதை என்று அறிய அறிய அன்பை பொழிந்தாலே போதுமானதப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!! ஆசைகளை ஒழித்தாலே அப்பனே அனைத்தும் வந்து விடும் என்பேன் அப்பனே!!
ஆனால் மனிதன் அதை கேட்பதே இல்லை அப்பனே!!!
தாய் தந்தையை வணங்குங்கள் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அதையும் கேட்பதில்லை என்பேன் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான் மனிதன் அப்பனே.. முதலில் அதை திருத்தி வந்தாலே போதுமானதப்பா அனைத்தும் எம்முடைய அருளால் அப்பனே கிடைக்குமப்பா!!!
அப்பனே எதை என்றும் புரிய புரிய....
அகத்தியன் அன்பு நிறைந்தவன் தான் அப்பனே பாசத்திற்கு கட்டுப்பட்டவன் தான் அப்பனே
ஆனாலும் அப்பனே மனிதன் அதை தவறான பாதையிலே எடுத்துச் சென்று விடுகின்றான் அப்பனே
அதில் கூட அப்பனே என் பெயரை வைத்துக் கொண்டு கூட அப்பனே தவறான வழியில் அப்பனே அதாவது பின் மது மாது இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பெண் இதற்கெல்லாம் அடிமையாகி விடுகின்றான் அப்பனே
இதனால் தான் அப்பனே ஒரு அடி அடிக்கின்றேன் அப்பனே... மற்றவை எல்லாம் எதை என்று அறிய அறிய
சித்தர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அப்பனே அனைத்தும் பொய் கணக்காக மாறும் அப்பா!!! வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய
அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட சித்தர்களின் வாழ்க்கை எவனுக்கும் தெரிவதில்லை அப்பா..... பின் தெரியாதவன் தான் அப்பனே எவை என்று அறிய எப்படி எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே
உண்மை நிலைகளை சித்தர்கள் சொன்னால் அவை பொய் என்று சொல்வான் அப்பனே மனிதன்.
ஏனென்றால் மனிதன் தான் சித்தன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே... அவன் தவறான கருத்துக்களை கூட பரப்புவான் என்பேன் அப்பனே வரும் காலத்தில் அப்பனே....
எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கும் தண்டனைகள் உண்டு அப்பனே...
எவை என்று அறிய அறிய அவர்கள் இல்லத்திற்கும்!!!!......?????
அப்பனே சிறிது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அப்பனே!!! இவ்வாறு யோசித்தாலே போதுமானதப்பா!!!!
யோசிப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!
எவை என்று அறிய சித்தன் என்பவன் யார்??? என்பதைக் கூட நிச்சயம் தெரிவதில்லை என்பேன் அப்பனே!!! யான் தான் சித்தன் என்று மனிதன் வரும் காலத்தில் சொல்வான் அப்பனே
அவையெல்லாம் பொய்களப்பா!!!
எவை என்று அறிய அறிய யான் தான் இறைவன் என்று சொல்வான் அப்பா அவைகளும் பொய்களப்பா!!
எதை என்றும் அறிய அறிய யான் ஞானி என்று சொல்வான் அப்பனே அவன் தான் முதல் வகையான திருடனப்பா!!!
யான் சித்தன் என்பான் அப்பனே அவனும் திருடனப்பா!!!
யான் தான் இறைவன் என்கின்றானே அவனும் திருடனப்பா!!
இறைவன் என்னிடத்தில் பேசுகின்றான் என்கின்றானே அவனும் திருடனப்பா!!!
அப்பனே இறைவன் தன்னை ஆட்கொண்டு விட்டால் எதையும் பேசமாட்டானப்பா!!!
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
உண்மை நிலையை தெரியாமல் அப்பனே அலைந்து திரிந்தால் அப்பனே இன்னும் கஷ்டங்கள் தான் உங்களுக்கு வரும் என்பேன் அப்பனே!!!
ஏனென்றால் படைத்தவன் இறைவன்!!!! அவந்தனுக்கு தெரியுமப்பா!!! எதை எதை கொடுக்க வேண்டும் என்பது!!!!
ஆனாலும் அப்பனே தன்னிடத்தில் ஒரு சக்தி இருக்கின்றதப்பா!!! அவ் சக்தியை யார் ஒருவன் எழுப்புகின்றானோ?? அவந்தனுக்கு அனைத்தும் கிடைக்குமப்பா!!!
அவ் சக்தியை எழுப்புவதற்கு யாங்களே துணை புரிவோம் அப்பனே!!!
எங்களை நம்பி அதாவது ஓடோடி வந்துவிட்டால் அப்பனே அவ் சக்தியை எவ்வாறு எழுப்புவது என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் கற்றுக் கொடுத்து அப்பனே அனைத்தும் செய்வோம் அப்பனே!!!
ஆனால் அப்பனே அறிந்தும் கூட மனிதன் பின்னால்தான் எவை என்று கூட மனிதன் செல்கின்றான் அப்பனே!!!
எப்படியப்பா?? அப்பனே அனைத்தும் கொடுக்க முடியும்?????
அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே அனைத்தையும் செய்து விட்டு கடைசியில் அப்பனே அதாவது காதல் செய்வான் திருமணம் முடிப்பான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வான் அப்பனே இவை எல்லாம் வீண் என்று பின் அற்ப சுக வாழ்க்கை என்று நினைத்து அப்பனே அதாவது அவனுக்கு தோன்றிவிடும்!!!!
அதாவது பக்திக்குள் நுழைவோம் ஏதாவது பரப்புவோம் என்று அப்பனே அதாவது நேரத்தை வீணடிப்பதற்காகவே பக்திக்கு வந்து விடுகின்றானப்பா!!!
எப்படி அப்பா??? ஒன்றுமே தெரியாமல் அப்பனே நிச்சயம் யான் கேள்விகளை கேட்பேன் வரும் காலங்களில்!!!!!!
அதற்கு சரியான பதில் யார் ஒருவன் உரைக்கின்றானோ???!!!!
அப்பனே யாரும் உரைக்கப் போவதில்லை என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
எதை என்று புரியப் புரிய அதனால் அப்பனே தவறான பாதையில் செல்லாதீர்கள் அப்பனே கர்மத்தை சேகரித்துக் கொள்ளாதீர்கள் அப்பனே!!!
அப்பனே எவை என்று புரிய புரிய அக் கர்மத்தை சேகரித்துக் கொண்டு அப்பனே சித்தர்களிடத்தில் வந்தாலும் அப்பனே இறைவனிடத்தில் சென்றாலும் அப்பனே ஒன்றும் லாபம் இல்லை அப்பா!!! கஷ்டங்கள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே!
இதனால் சித்தனை பற்றி எவருமே தெரிந்திருப்பதில்லை என்பேன் அப்பனே!!!
அப்பனே எதை என்று அறிய அறிய சித்தனை வணங்கினாலும் அவந்தனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது!!!
"""""" ஏனென்றால் சரியாக வணங்கவில்லை என்பேன். அப்பனே சொல்லிவிட்டேன் இங்கிருந்தே அப்பனே சொல்லிவிட்டேன்!! அப்பனே!!! (பொதிகை மலையிலிருந்து)
எதை என்று அறிய அறிய அனைத்தும் என்னிடமே என்பேன் அப்பனே
அதாவது அனைத்தும் என் இடமே!!!!!
(இந்த பிரபஞ்சம் முழுவதும் அகத்தியரின் இடம்) எவை என்று கூற அதனால் பின் அதாவது மாய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அப்பனே எப்பொழுது வருகின்றீர்களோ அப்பொழுது எதை என்று அறிய அறிய என்னை நினைத்தாலும் அப்பனே மாய வாழ்க்கை!! உங்களை பார்த்து விடுவேன் அப்பனே அவையெல்லாம் நீக்கி விடுவேன் அப்பனே
அதனால் அப்பனே தான தர்மங்கள் எங்கு நிறைந்திருக்கின்றதோ அங்கு வருவேன் என்பதற்கிணங்கவே இதுவே சான்று என்பேன் அப்பனே!!!
தன் பக்தன் அப்பனே இன்னும் என் பக்தனை உயர்த்துவேன் என்பேன் அப்பனே இன்னும் காசுகள் கொடுத்து இன்னும் அப்பனே தான தர்மத்தை பின் செய்ய சொல்வேன் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!
அவந்தனை எதை என்று அறிய அறிய அப்பனே எல்லோருக்கும் எதை என்று அறிய அறிய நொந்து எதை என்று அறிய அறிய அப்படியே எவை என்று அறிய அறிய பின் கால்கள் ஓய்ந்துவிடும் அப்பனே!!! அப்பொழுது அவன் பானத்தை கொடுப்பானே!!!!
அப்பப்பா!!!!!!!!! யானும் அதை வாங்கி உண்டுள்ளேன்!!! சாப்பிட்டு எதை என்று அறிய அறிய அப்பனே!!! சரியாகவே அவன் பின் உணவை சமைப்பான் அப்பனே
அருமை அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அதையும் யானும் லோபா முத்திரையும் கந்தனும் அப்பனே உட்கொண்டு உள்ளோம் அப்பனே !!!!
(ஒருமுறை பொதிகை மலை பயணத்தின் போது அந்த பக்தர் நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு பொங்கல் சமைத்து மேலே படைத்திட வேண்டும் என்று எண்ணி அதற்கு தேவையான பொருட்களை திருவனந்தபுரத்தில் வாங்கிக் கொண்டு மேலே ஏறி அத்திரி மலை கேம்பில் வைத்து கொட்டும் மழையில் சுவையாக சூடாக சக்கரை பொங்கல் சமைத்து குருநாதருக்கு பொதிகை மலையில் படையல் இட்டார்!!!! படைத்து பூஜை செய்து முடித்த பிறகு அவருக்கும் தோன்றிய விஷயம் என்னவென்றால் குருநாதர் இதை கண்டிப்பாக இந்த படையில் ஏற்றுக்கொண்டு உண்டார் என்பது இவருக்கு மனதிலும் அந்த திருப்தியும் ஆசீர்வாதமும் உண்டாயிற்று)
(அதேபோல பொதிகை மலைக்கு குழுவாக செல்லும் பொழுது மற்ற குழுவினரும் வருவார்கள்!!! கையோடு எலுமிச்சம் பழம் மற்றும் கருப்பட்டியை காய்ச்சி கருப்பட்டி பாகு ஆக எடுத்துச்சென்று அனைத்து பக்தர்களுக்கும் எலுமிச்சம்பழச் சாறு ஆக செய்து சுமை தூக்கி களுக்கும் மலைக்கு அழைத்துச் செல்லும் வயதான டூரிஸ்ட் கைட் பெரியவர்களுக்கும் மனம் போல அருந்துங்கள் அருந்துங்கள் அனைவரும் களைப்பை போக்கிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் வழங்குவார்)
அதனால்தான் அப்பனே!!!
பரிசுத்தமாக இவனிடத்திலே பத்திரமாக இருக்கட்டும் என்று அப்பனே சுவடியையும் கூட நலமாகவே எவை என்றும் அறிய அறிய....
(பொதிகை மலை மிகவும் கஷ்டப்பட்டு ஏறி கால்கள் வலி எடுத்து களைப்பாக இருக்கும் பொழுது அந்த பக்தர் அனைவருக்கும் எலுமிச்சை ஜூஸ் அதாவது பழச்சாறுகள் வழங்குவார்!!
மேலே அத்திரி மலை கேம்பில் உணவுகளையும் சுவையாக தயாரித்து அனைவருக்கும் மனம்போல் வழங்குவார் அந்த பக்தர்!!!
உணவும் பானமும். அருமை என்று குருநாதர் தன் திருவாயால் சான்றிதழ் கொடுக்கும்பொழுதே எந்த அளவிற்கு குருநாதர் அவர் செய்யும் செயல்களால் நெகிழ்ந்து இருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்!!!!!
அதனால் தான் ஒரு நாள் முழுவதும் அவருடைய வாகனத்திலேயே சுவடி இருக்கட்டும் என்று குருநாதர் அருள் செய்தார். இன்னும் இன்னும் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சரியான வழியில் சென்று கொண்டு இருந்தாலே அப்பனே இச்சுவடி உங்கள் பின்னே வரும் அப்பா!!!!
நீங்கள் அலைய தேவையில்லை அப்பனே
ஆனால் அப்பனே எவை என்று கூட நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தால் பணம் அதாவது லட்சுமி உங்கள் பின்னே வருவாள் என்பேன் அப்பனே...
அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் தேடிச் சென்றாலும் கிடைக்காதப்பா!!! எவை என்று புரிய புரிய!!!
ஆனாலும் மனக் கவலைகள் இன்னும் ஆரோக்கியமான வாழ்க்கை இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சரியான பரப்புகளை அதாவது பரப்புரைகளை (பக்தி பிரச்சாரம்) கூறி கூறி மனிதனை மனிதன் ஏமாற்றுவான் அப்பனே மனசாட்சி இல்லாமல் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே இறைவன் நிலைக்கு வந்து விட்டால் ஒரு மனசாட்சி வேண்டுமப்பா!!!
ஆனால் அதை பின் எவரிடமே எதிர்பார்க்க முடியவில்லையே!!!
அதனால்தான் அப்பா குறைகளாகவே அதனால்தான் அப்பனே பின் மனிதன் எவ்வாறு என்பதையும் கூட அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கின்றோம் அப்பனே எதை என்று புரிய புரிய
அப்பனே எதை என்றும் புரிய புரிய அவந்தனும் ஒரு பிறப்பில் அப்பனே அதாவது இங்கேயே பிறந்து (பொதிகை மலை பகுதியில்) அப்பனே எதை என்றும் புரிய புரிய என்னிடத்தில் வந்து கொண்டே இருந்தான் அப்பனே!!!!
ஏன் ??எதற்கு ?? அப்பனே !! விறகு சுமந்து பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின் வந்து வந்து தம் இல்லத்தை அப்பனே காப்பாற்றி வந்தான் என்பேன் அப்பனே!!!
பின் அவ் விறகை விற்றால் தான் அப்பனே எதை என்று கூட அப்பனே அவந்தனுக்கு அதாவது அவன் இல்லத்திற்கும் அவன் குழந்தைகளுக்கும் கூட அப்பனே உணவு என்பேன் அப்பனே..
அப்படி (விறகு விற்க) இல்லையென்றால் உணவே இல்லையப்பா!!!
ஆனாலும் இப்படியே அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட என்னையே வணங்கிக் கொண்டிருந்தான் அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் கூட... அகத்தியன்!! அகத்தியன்!! என்று!!
ஆனாலும் எவை என்று அறிய ஒரு பத்து நாட்கள் அப்பனே விறகை யாருமே வாங்கவில்லை !!!
இதனால் வீட்டில் உள்ள அனைவருமே பட்டினி!!!
எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய அனைவருமே எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட இவ் மலையின் மீது ஏறி குதித்து விடுவோம்!!!!
ஏன்???? இந்த பிறப்பு???? என்று மேலே ஏறினான் அப்பனே!!!
அவந்தனும் அவன் இல்லத்தவளும் எதை என்று கூட அவன் பிள்ளைகளும்!!!
ஆனாலும் அப்பனே எதை என்று புரிய புரிய யான் தடுத்து நிறுத்தினேன் அவந்தனை!!!
எதை என்று புரிய புரிய ஏன்??? இவ்வாறு என்பதெல்லாம்!!!
ஆனாலும் அவந்தனும் என்னை கேட்டான்!!!
நீ யார்?? என்று கூட!!!
யான் தான் அகத்தியன் என்று!!!!யான்!!!
அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டான் என்னை!!!
அகத்தியனே எதை என்று புரிய புரிய அப்பா எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு எங்களுக்கு உணவு கூட இல்லை ஒருவேளை உணவு கூட இல்லை அறிந்தும் கூட
இதனால் என்ன பயன்???
அதனால் விறகை விற்று எதை என்று அறிய அறிய யாங்கள் உண்டு கொண்டிருந்தோம்... அதையும் யாரும் வாங்கவில்லை இதனால் இங்கே மடிந்து விடலாம் என்று
ஆனாலும் பின் எதை என்று புரிய புரிய யான் இருக்கின்றேன் என்று யான் கூறினேன்!!!!
அப்பொழுதும் கூட நிச்சயம் வேண்டாம்!!! இப்பிறவி போதும்!! அறிந்தும் அறிந்தும் என்றெல்லாம்!!!
இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை பிறந்து என்று!!!
ஆனாலும் நிச்சயம் யான் (அகத்தியர்) வாக்களித்தேன்!!!
அப்பனே அடுத்த பிறப்பு எடுப்பாய்!!! நிச்சயம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இப்பொழுது நீ உணவுக்கு உன்னால் முடியவில்லை எதை என்று அறிய ஒருவளை உணவு உண்ணக்கூட வழியில்லை!!!
அடுத்த பிறப்பில் உந்தனுக்கு சொகுசான எவை என்று கூட அப்பனே உணவையும் எதை என்று கூட சொகுசான வாழ்க்கையையும் கூட நீயும் அப்பனே மற்றவர்களுக்கு உணவு கொடுக்கலாம் எதை என்று அறிய அறிய
அது தான் அப்பா புண்ணியம் என்றெல்லாம் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய ஆனாலும் அவந்தனும் கூட அப்படியா!!!!!!
எதை என்று அறிய அறிய ஒருவேளை கூட எந்தனுக்கு உணவு கூட இல்லை
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இப்படியா ஒரு பிறப்பு நிச்சயம் கொடுங்கள் என்றெல்லாம்.
அகத்தியா எவை என்று புரியும் எதை என்று அறிய அறிய அகத்தியா!!! என்றெல்லாம் அகத்தியா!! அகத்தியா!!! என்றெல்லாம் அப்பா!! அப்பா!! என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு!!!!
இதனால் பிறவியும் கொடுத்து விட்டேன் அப்பனே!!!
அவனுக்கு என்னென்ன தேவையோ அவை எதை என்று அறிய அறிய கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே நலமாகவே!!!
அப்பனே அதற்காகத்தான் அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே... ஜென்மத்தில் எதை என்று அறிய அறிய அனைவருக்கும் கொடுப்பாய் இவ் மலையிலே ஏறுவாய் அப்பனே அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பாய் என்பதை கூட யான் வாக்களித்து விட்டேன் அப்பனே.
அதேபோலவே எவை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றானப்பா!!!
எதை என்று அறிய அறிய அப்பனே இதனால்...அவன் செய்த புண்ணியங்கள் அப்பனே கடைசியில் இங்கேயே என்னை நிச்சயம் பார்ப்பானப்பா!!
ஒருமுறை வந்துவிட்டேன் அப்பனே வாங்கிக் கொண்டு எதை என்று அறிய மீண்டும் அவனிடத்தில் வருவேனப்பா!!! நலமாகவே இப்பிறவியே அவந்தனுக்கு கடைப்பிறப்பு!!
கெட்டியாக எனை பிறப்பிலேயே என்னை பிடித்துக் கொள்வான் அப்பா!!! காட்சிகள் உண்டு அப்பனே!!!
அதுபோலத்தான் அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!
அவை இவை என்றெல்லாம் அப்பனே பின்னே சென்றால் அப்பனே பின் ஒன்றும் இல்லை அப்பா!!!
நிச்சயம் அப்பனே உன்னிடத்தில் சக்திகள் பல பல உள்ளது என்பேன் அப்பனே அதாவது மனிதனிடத்தில்.
அவை யார் ஒருவன் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றானோ அப்பனே அவன் உயர்வான் என்பேன் அப்பனே.
இல்லையென்றால் அப்பனே தாழ்வான் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே உயர்வான இடத்தில் அப்பனே பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொருவரையும் கூட
இப் பொதிகை தன்னில் இருந்து!!அப்பனே சாதாரண இல்லை என்பேன் அப்பனே!!!
எவை எங்கிருக்க வேண்டுமோ?? அவை தன் அங்கு இருக்க வேண்டியது என்பதற்கிணங்க அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அறிய அறிய அதனால் தான் அப்பனே அனைவரையும் பின் பார்த்து அப்பனே எவை என்று கூட என் பக்தர்கள் வீட்டிற்கும் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே
ஆனாலும் அப்பனே பின் அங்கு சரியாக ஒவ்வொருவரும் கூட ஒவ்வொரு மனக்குழப்பத்திலும் இருக்கின்றார்களப்பா!!!
எப்படியப்பா ??நன்மைகள் செய்வது???
இதனால்தான் அப்பனே தண்டனைகள் அதிகமானால் தான் அப்பனே மனிதன் திருந்துவானப்பா!!!
என் பக்தர்களாயினும் நிச்சயம் வரும் காலத்தில் தண்டனைகள் அதிகமாகும் அப்பா...
அப்பொழுதுதான் நீங்கள் திருந்துவீர்கள் அப்பொழுதுதான் மோட்ச கதியை அடைவீர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே
நலன்களாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் அப்பனே வாக்குகள் காத்துக் கொண்டிருக்க நலன்கள் ஆசிகளப்பா!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteநன்றி இறைவா, ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteபதிவு 1682 நீக்கபட்டதா அன்பரே?
ReplyDeleteYes
Deleteஐயா வணக்கம், காசி வாக்கு படிக்க வில்லை.... ஏன் நீக்கபட்டது?
DeleteRead 1668. Its the same. Wrong repetition. Hence removed.
Delete