​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 2 September 2024

சித்தன் அருள் - 1674 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8)

நம் குருநாதர்:- ( ஒரு அடியவரைக்  காலையில் 5 மணிக்குத்  தினமும் எழச் சொன்னார்கள். அப்படி எழுந்தால் யான்  நன்றாகச் செய்வேன் என்று உரைத்தார்கள்.  இத்துடன் இவ் அடியவர் தாய், தந்தைக்குச்  சேவை செய்யச் சொன்னார்கள். தாய், தந்தைக்குச்  செய்யும் சேவை மகத்தான புண்ணியங்களை எளிதில் பெற்றுத்தரும் என்பதை அங்கு உள்ள அடியவர்கள் நன்கு உணர்ந்தனர்) 

அடியவர்  7:- ( அழகாகக்  குருநாதர் உரைத்தவற்றை எடுத்து உரைத்தார் அவ் அடியவருக்கு.) 

நம் குருநாதர்:- அப்பனே உன் பக்கத்தில் உள்ளோனை, அப்பனே உன் பிள்ளைகளை அழை. 

அடியவர் 10:- ( பிள்ளைகளை அழைத்தார் ) 

நம் குருநாதர்:- ( தனி வாக்குகள். இவ் அடியவர் குருநாதரை நம்பிக்கொண்டு உள்ளவர். தாய் , தந்தைக்குச்  சேவை செய்பவர்களே உலகத்திற்குச்  சேவை செய்ய இயலும். அதன் பின் பொது வாக்கு ஆரம்பமானது. )

நம் குருநாதர்:- அப்பனே சில பேருக்கு வேலை எளிதில் கிடைத்து விடுகின்றது. சிலபேருக்கு கிடைப்பதில்லை. ஏன் அப்பனே? பின் யாராவது சொல்லலாம் அப்பனே. 

அடியவர் 4:- பாவ கர்மா அதிகமாக உள்ளதால்..

நம் குருநாதர்:- அப்பனே அறிவு அறிவு என்று சொல்கின்றார்களே, அதுதான் அப்பனே. நீ நன்றாப்படித்தால் நன்றாக வேலை வருகின்றது. அப்பனே அவை மட்டும் இல்லாமல் படிப்பதற்குச்  சென்று பல வேலைகள் செய்கின்றார்கள் தவறான வேலைகள். பின் சரஸ்வதி அப்பனே உயர்த்துவாளா என்ன? பின் சரஸ்வதி இங்கு அருள் கொடுத்தால்தான் அறிவு, மலைமகள், திருமகள் எல்லாம் அப்பனே. இவை எல்லாம் அறிவின் வழியே வருகின்றது என்பேன் அம்மையே.

நம் குருநாதர்:- அப்பனே பல பேர்கள் ஏன் வேலைக்குச் செல்கின்றார்கள்? ஏன் செல்வதில்லை அப்பனே? 

அடியவர் 4:- கஷ்டங்கள் இல்லை. 

அடியவர் 12:- தேவைகள் இல்லை. Commitment இல்லை. 

நம் குருநாதர்:- (தனி வாக்குகள்) 

நம் குருநாதர்:- அனைத்தும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். அனைவரையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன். வேறு ஏதும் வேண்டுமா?

அடியவர் 12:- லோபாமுத்ரா அம்மாவிடமும், அப்பாவிடமும் எல்லோருக்கும் ஆசீர்வாதம்  வேண்டும். 

நம் குருநாதர்:- யான் வந்துவிட்டாலே பின் லோபாமுத்திரையும் வந்து விடுவாள் அம்மையே.

நம் குருநாதர்:- ( தனுசு , மீனம் தொடர்புடையவர்களை அழைத்தார்கள் ) 

நம் குருநாதர்:- ( தனி கேள்வி, பதில் வாக்குகள். எவ் கஷ்டங்கள் வந்தாலும் ஆலயங்களுக்குச்  சென்று வர நன்று. ஆலயங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என்றால் கூட ஆலய வாசல் படியையாவது நின்று விட்டு வர வேண்டும் என்று வாக்கு உரைத்தார்கள். ) 

நம் குருநாதர்:- சுய நலத்திற்காக மட்டும் இறைவனை வணங்கக்கூடாது என்பேன். அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன் அப்பனே. முதலில் பணத்திற்காக விளையாடுவார்கள் அப்பா. யான் அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்று. லட்சுமி ஒருவனிடம், ஒருவளிடம்  பணம் கொடுப்பாள் அப்பா. அதை அதை உன்னால் பயன்படுத்தவில்லை என்றால் தான் அப்பனே அது மற்றவனிடத்தில் சென்றுவிடும் அப்பா. மீண்டும் வருமா அப்பா? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

நம் குருநாதர்:- பணத்தாசைகள் மனிதனை விட்டுவிடாது என்பேன் அப்பனே. பணம் சென்றுவிட்டால் மீண்டும் நிச்சயம் யாங்களே வழிநடத்தினால்தான்  உண்டு.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா கவனம். பணம் போய்விட்டால் வராது. ஏன் பணத்தை கொடுக்கின்றீர்கள் என்று கேட்கின்றார். அந்த பணத்துக்கு சித்தர்கள் மனம் வைத்து ( திரும்பி வர ) உதவி செய்யவேண்டும் என்று உரைக்கின்றார். 

நம் குருநாதர்:- ( பொது வாக்கு ) அப்பனே பணத்தின் மீது இருக்கும் பக்தி இறைவனிடத்தில் இல்லையே!!! அப்பனே அவ்வாறு சென்றிருந்தால்தான் நீங்களும் இங்கு வந்திருக்கின்றீர்கள் அப்பனே. முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே. கஷ்டம் ஒன்று கொடுத்தால்தான் இறைவனிடத்தில் வருகின்றார்கள் அப்பனே. கஷ்டம் கொடுக்கவில்லை என்றால் இறைவன் யாரோ!!! ( தனி வாக்குகள் ) 

நம் குருநாதர்:- அப்பனே செற்களைப் பற்றிச்  சொன்னேன் அப்பனே. அதைப்பற்றி நீ எடுத்துரை? 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. Iyya vanakkam nam gurunathar avarkalin vakku then tamilakathil endru ketka vaipu kedaikkum

    ReplyDelete
  2. Ayya vanakam nam gurunathar avarkalin vakku then tamilakathil endru ketka mudiyum

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      நாடி வாசிக்கப்போகும் இடம் பற்றிய தகவல் முன்னரே கிடைப்பதில்லை. கிடைத்தால், இங்கு வெளியிடுகிறேன்!

      Delete
  3. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 9

    சித்தன் அருள் - 1674
    https://www.youtube.com/watch?v=6vc_lARDnL4

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா.குருநாதர் உரைக்கும் வாக்குகளில் ஏற்படும் சந்தேகம் மற்றும் ஆன்மீக சந்தேகங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு இவற்றை வழங்க அகத்திய பெருமானோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் அகத்தியர் மைந்தர்கள் சித்தர்கள் வழி செல்லும் ஆன்மீகப் பெரியோர்கள் இணைந்து ஒரு வாட்சப் அல்லது டெலிகிராம் குரூப் உருவாக்க வேண்டும்.இதன் மூலம் அகத்திய பெருமான் வழி செல்ல நினைப்பவர்களுக்கு உடனடி வழிகாட்டுதல் கிடைக்கும்.அகத்திய பெருமானிடம் வாக்கு
    கேட்க முடியாமல் என்னைப் போன்ற எத்தனையோ பேர் ஏங்கிக் கிடக்கின்றனர்.அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.இந்த வலைப்பூ மூலம் கருத்து பரிமாற்றம் செய்வது சிரமமாக இருப்பதால் இந்த வலைப்பூவை நடத்துபவர்கள்
    அதற்கான முயற்சியை குருவருளால் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete