​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 September 2024

சித்தன் அருள் - 1678 - அன்புடன் அகத்தியர் - பீமேஸ்வரலிங்கம்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

திருப்பதி காளகஸ்தி திருத்தலங்களுக்கு இடையே வசிஸ்டர் மகரிஷியின் ஆசிரமம் இருந்த இடமாக நம் குருநாதர் அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கில் உரைத்த பீமேஸ்வரலிங்கம் ஆலயத்திலே குருநாதர் கூறிய மறு வாக்கு

ஏற்கனவே பீமேஸ்வரர் ஆலயத்தில் உரைத்த வாக்கு

சித்தன் அருள் 1382 ல்  வெளிவந்துள்ளது!!!

தற்சமயம் ஆலயத்திற்கு பூஜை செய்து கொண்டு வரும் திரு ராகவேந்திர ரெட்டி அவர்கள்!!
 குருநாதர் இந்த ஆலயத்தில் வந்து வாக்குகள் தந்த பிறகு பக்த பெருமக்கள் அவ்வப்போது வந்து செல்கின்றார்கள் இருந்தாலும் இங்கு ஈசனின் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்!!! ஆலயம் அமைந்துள்ள இந்த நிலமும் பிரச்சினையாக உள்ளது இதற்கு என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை குருநாதர் நல்ல வழி காட்ட வேண்டும் 

எங்களுக்கு இந்த மனக்குறை எப்பொழுது தீரும்??? என்று வருத்தத்துடன் கேட்டிருந்தார்!!!

 அதன்படி ஆந்திராவில் வாழும் அகத்தியர்   அடியவர்கள் இந்த ஆலயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரும் சேர்ந்து குருநாதரிடம் விண்ணப்பம் வைக்க!!!

அகத்தியர் ஜீவநாடி சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு குருநாதர் அகத்திய பெருமான் யான் அங்கு வந்து வாக்குகள் செப்புகின்றேன் என்று கூறியிருந்தார்!!!

 அதன்படி திரு ஜானகிராமன் ஐயா அங்கு சென்ற பொழுது அடியவர்களும் ஆலயத்திற்கு தொண்டு செய்யும் நபர்களும் அங்கு இருந்தனர். 

பீமேஷ்வர் ஆலயத்தில் வைத்து குருநாதர் வாக்குகள் நல்கினார்!!!



ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!


அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!


அப்பனே அது மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே இவைதன் இங்கு இருக்கக் கூடாது (பீமேஸ்வர் ஆலயம்) என்பதற்கிணங்க அப்பனே சில மனிதர்கள் கூட நினைக்கின்றார்கள்!!!


ஆனாலும் அப்பனே இதற்கு தீர்வுகள் அப்பனே ஈசனிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே... அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் மனிதன் அங்கு இருக்கின்றது இங்கு இருக்கின்றது... என்பதெல்லாம் மனிதன் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கலாம்!!!!

ஆனாலும் அப்பனே அனைத்தும் அப்பனே பின் அழிவு நிலைக்கு அப்பனே எடுத்துச் சென்று அப்பனே இதைக் கூட ஆக்கிரமித்து அப்பனே இங்கெல்லாம் அப்பனே எவை என்று அறிந்தும் கூட அப்பனே.. ஏதோ பின் ஒன்றை செய்ய துடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே !!!!


ஆனால் ஈசன் அப்பனே நிச்சயம் தண்டித்து அப்பனே... அறிந்தும் கூட இதனால் அப்பனே காலப்போக்கில் எதை என்று புரிய புரிய ஈசன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இடமெல்லாம் அப்பனே ஆனாலும் சில மனிதர்கள் அப்பனே அவை எல்லாம் மாற்றி அப்பனே அவை தன் அமைத்து தன் பெயருக்காக அப்பனே எவை எவையோ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே !!!!

இதனால் அப்பனே சென்றாலும் அப்பனே தோல்விகள் ஏற்படும் என்பேன் அப்பனே!!!!



இதனால் அப்பனே எதை என்றும் கூற இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதில் கூட பல பின் அரசு சார்ந்தும் கூட அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே இவை தன் கூட பின் குறிக்கிட்டாலும் அப்பனே சில சில அப்பனே பின் தொந்தரவுகள் பலமாகவே வருமப்பா!!!!


இதனால் அப்பனே சிறப்பிக்குமாறு அப்பனே நல்விதமாகவே அப்பனே இப்படியே அப்பனே ஈசனே மாற்றத்தை ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே மனிதனால் இவைதான் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே ஈசனே இங்கிருக்கின்றானப்பா
ஈசனே அனைத்தும் அப்பனே செய்து முடிப்பான் அப்பா!!!!


அம்மையே அறிந்தும் கூட எவை என்றும் புரிய புரிய ஆனாலும் பின் எதை என்று புரியப் புரிய இப்பொழுது தொடங்கினாலும் பின் பல பிரச்சினைகள் எதை என்று அறியாமலே இங்கு வரும் அம்மா அறிந்தும் கூட 

பல அரசு சார்ந்த எதை என்று அறிய அறிய பின் அதாவது ஒரு செல்வாக்கு மிக்க பின் அவனிடத்தில் இவையெல்லாம் அதாவது கட்டுப்பாட்டில் உள்ளது..




அம்மையே எதை என்றும் அறிய அறிய தடை இல்லை தாமதங்கள் இல்லை ஆனாலும் ஈசனே பொறுத்துக் கொண்டிருக்கின்றான். 




எதை என்று புரியப் புரிய வரும் காலங்களில் இவையெல்லாம் எடுக்கச் சொல்லி எதை என்று அறிய அறிய பின்பு எவை என்று அறிய அறிய இங்கெல்லாம் பின் பெரிய கட்டிடங்கள் எல்லாம் வரப்போகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்...


ஆனாலும் ஈசன் விளையாட்டு அப்பொழுது இருந்து தொடங்கும்!!!!


எதை என்று புரிய புரிய ஆனாலும் எதை என்று அறிய அறிய உங்களிடத்திலும் பின் பண மதிப்பை பற்றி பேசுவார்கள் அப்பா 




எதை என்று புரிய  புரிய இதனால் ஈசனே அனைத்தும் செய்து முடித்து கொள்வான் கவலையை விடுங்கள்



எதை என்று புரிய பின் நிச்சயம் ஈசனே பின் அழைத்துக் கொள்வான்  அமைத்து கொள்வான் என்பேன் அப்பனே 


ஆனாலும் அப்பனே இவை என்று கூற இதுபோல் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் போகப் போக அப்பனே நிச்சயம் பின் மாற்றத்தால் அப்பனே அறிந்தும் கூட பின் உயரிய இடம் ஆகும் என்பேன் அப்பனே 


எதை என்று புரிய புரிய அப்பனே ஆனாலும் இவைதன் அப்பனே அதாவது அப்பனே சில ரகசியங்களும் தெரியாதப்பா மனிதனுக்கு அப்பனே 

ஆனாலும் இங்கு பல ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே 

நல் விதமாகவே ஆனாலும் ஈசனும் அப்பனே சரியான ஈசனின் அனுக்கிரகம் பெற்றிருந்தால்தான் இங்கும் வர முடியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் 


எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நல்விதமாகவே பின் ஈசனே பின் ஒரு ஆள் மூலம் எடுத்துச் செல்வான் என்பேன் அப்பனே
அரசு எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாகவே!!!



அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அழிவு காலம் இது என்பேன் 
அப்பனே அதனால் அப்பனே பின் நன்மைகள் ஏற்படாது இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே... அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே ஈசன் பின் எதை என்று அறிந்து அப்பனே இங்கு கொடுப்பான் என்பதை எல்லாம் வரும் வரும் வாக்கியத்தில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே அதாவது சில சில திருத்தலங்கள் அப்பனே பலமாகவே உள்ளது என்பேன் அப்பனே ஆனாலும் அவைதன் பின் மக்களுக்கு தெரியாமல் போயிற்று என்பேன் அப்பனே... ஏனென்றால் மனிதன் அப்பனே மாய வலையில் சிக்கிக் கொண்டு அப்படியே பின் போய்க்கொண்டே இருக்கின்ற பொழுது அப்பனே இறைவன் பின் மறைவான இடத்திலே...


(இறைவன் மறைவான இடத்திலிருந்து கொண்டு மக்கள் இங்கு தேடி வரட்டும் என்று)

பின் வரட்டும்!! வரட்டும்!! என்றெல்லாம் அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவைதன் புரியாத அளவிற்கும் கூட அப்பனே பின் அதாவது மனிதனுக்கு அப்பனே இறை பக்தி கூட வருங்காலத்தில் என்ன சொன்னாலும் அப்பனே கேட்க மாட்டான் என்பேன் அப்பனே 

இதனால் அழிவு நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே இவ்வுலகம்!!



மனிதர்களால். அனைத்தும் முடியும் என்றால் அப்பனே இறைவன் எதற்கு கூறுங்கள் 


அதனால் அப்பனே யார் மூலம் எதைச் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் அப்பனே ஈசன் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஈசனே அனைத்தும் செய்து கொள்வான் என்பேன் அப்பனே

ஆனால் அப்பனே மனிதன் தான் அப்பனே எதை என்று அறிய அறிய தெரியாமல் ஈசனுக்கு அவை இவை என்றெல்லாம் பின் செய்யப் போகின்றேன் என்றெல்லாம் அப்பனே 


ஆனாலும் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்படி அறிந்தும் கூட ஆனாலும் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பின் ஈசனே தீர்மானித்திருக்கின்றான் அப்பனே

இதனால் பின் இவந்தன் (ஈசன் )அமைதியாக இங்கு வருவானப்பா!!! பின் வந்த செல்வானப்பா!!!! அதனால் அப்பனே இவனே முடிவெடுப்பான்!!!!


இதனால் அப்பனே பின் இங்கு கேட்டவருக்கு அப்பனே கேட்ட வரம் தருபவன் இவன் என்பேன் அப்பனே 

ஆனாலும் முன் ஜென்மத்தில் எதை என்று அறிய அறிய இப்படி செய்கின்ற பொழுது....(வேண்டுவோருக்கு வேண்டிய வரம்) எவை என்று கூட பின் ஒரு அரசனானவன் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இப்படியே பின் ஈசன் அதாவது எதை என்று அறிய அறிய அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் பின் மனிதர்கள் அதாவது நம்முடைய பேச்சுக்களையும் கேட்க மாட்டார்கள் என்று உணர்ந்து பின் அனைத்தையும் அப்பனே அழித்தனர்!!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய இப்பொழுதும் அவன் பிறந்து அண்ணாமலையில் பிச்சை ஏந்தி நிற்கின்றான் அப்பனே!!!



(வேண்டிக் கொள்வோருக்கு வேண்டிய வரம் தந்து வாழ்க்கையை மாற்றி அமைத்து தரும் ஈசன். இந்த பீமேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களும் பக்தர்களும் வந்து இறைவனிடம் வேண்டி அவர்கள் வாழ்க்கை மாறி உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள் இதை அறிந்த இந்த பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் இப்படியே மக்கள் அனைவரும் உயர்ந்து சென்று விட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள் நம்முடைய பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்று இதற்கெல்லாம் காரணம் இந்த ஆலயத்தில் வரம் தரும் ஈசன் தான் என்று இந்த ஆலயத்தை இடித்து அழித்து விட்டான்!!!

அந்த அரசனும் இந்த பிறவியில் பிறந்திருக்கின்றான்!!! தற்போது திருவண்ணாமலையில் பிச்சை ஏந்தி திரிகின்றான்!!!


மேலும் இந்த ஆலயத்தில் இருந்த பல லிங்கங்களை அழித்தவர்கள் காளகஸ்தி ஆலய வாசலிலும் பிச்சை ஏந்தி நிற்கின்றார்கள் இதைப் பற்றி குருநாதர் ஏற்கனவே பீமேஸ்வரர் ஆலய வாக்கில் கூறியிருக்கின்றார் 

சித்தன் அருள் 1382 ல் பீமேஸ்வரம் ஆலய வாக்கு வெளிவந்துள்ளது மீண்டும் அடியவர்கள் படித்து உணர்ந்து கொள்ளவும்)




அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் யார் எதைச் செய்தாலும்!!!

அப்பனே இவந்தனை அதாவது ஈசனை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கேட்டு வரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்!!!!!



நல்விதமாக அறிந்தும் அறிந்தும் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பல பல சக்திகள் இங்கு காணப்படுகின்றது என்பேன் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் சர்ப்பங்களும் கூட அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அவையே தடுக்குமப்பா!!!!

(ஆலயத்தை அழிக்க நினைத்தால் நாகங்கள் தடுக்கும்)


பின் தெரிந்தால் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்று விடுவான் என்பேன் அப்பனே எவை என்று அறிய இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சில சில பின் இறைவன்கள் தங்கி இருக்கின்றார்கள் உள்ளே 


(ஆலயத்திற்கு அடியில். சிலா இறை மூர்த்தங்கள்)


அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய அப்பனே.....பல..... ரகசியமான பல விஷயங்கள் இங்கு இருக்கின்றன அப்பனே... மனிதன் திருடனப்பா!!!

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் எவை என்று புரிய புரிய இன்னும் அப்பனே ரகசியங்கள் சொன்னால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நீங்களும் அப்பனே இப்படித்தான் என்று யோசிப்பீர்கள் 


சக்திகள் பலம் என்பேன் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் பின் 5 அடி அல்லது அப்பனே பின் ஆறு அடி அப்பனே தோண்டினால் அப்பனே.. சர்ப்பங்கள் வெளிவருமப்பா இங்கு!!!



ஆலயத்திற்கு பூசை செய்து வரும் திரு ராகவேந்திரர் ரெட்டி அவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு



அப்பனே கவலைகள் இல்லை உந்தனுக்கு என்ன தேவையோ அதை ஈசன் கொடுப்பான் என்பேன் அப்பனே... நீ எதை என்று அறிய அறிய இங்கு நீ ஒரு காவலாளி என்பேன்!!!!



எதை என்றும் புரிய புதிய புரிய அப்பனே பல மாற்றங்கள் ஈசனே உங்கள் குடும்பத்திற்கு செய்வித்தான் என்பேன் அப்பனே.. இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய பின் காலப்போக்கில் பின் நீங்களே மாறுவீர்கள் என்பேன். அப்பனே!!!


இதனால் அப்பனே குறைகள் இல்லை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

அதனால் ஈசனே இதுதான் நிம்மதி என்று பின் எவை என்று அறிய நினைக்கின்றானப்பா!!!




மனிதன் ஆசை பேராசை அப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரும் வரும் காலத்தில் அப்பனே பொய்யான பக்திகள் செலுத்தி செலுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் கலியுகத்தில் ஏமாற்றுக்காரர்கள் தான் மிச்சம் என்பேன். அப்பனே 



இதனால் அப்பனே என்னவென்று அதனால் உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு அப்பனே இறைவன் பெயரைச் சொல்லியும் ஏமாற்றி விடலாம் என்றெல்லாம் அப்பனே பின் பக்திக்குள் நுழைவார்களப்பா


நிச்சயம் பின் உழைத்தாலும் எதை என்று அறிய அறிய பின் உழைத்து எதை என்று அறிய அறிய அப்பனே வாழ்ந்தால் தான் அப்பனே இறைவனே பின் வருவான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இவனே (ஈசனே) தடையை ஏற்படுத்தி உள்ளான் என்பேன் அப்பனே 



அப்பனே பின் அருள்கள் அதனால் கேட்டதை அப்படியே பின் கொடுப்பானப்பா 


அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே யானே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே 


யானே இங்கு ஸ்தலத்தை பின் அமைத்தாலும் அப்பனே திருடர்கள் தான் வருவார்களப்பா!!!



(ராகவேந்திர ரெட்டி அவரிடம் குருநாதர்)

உன்னையே அப்பனே வெளியே அனுப்பி விடுவார்கள் அப்பனே!!! இதை உனக்கு சம்மதமா???

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே பின் நன்முறைகளாகவே ஈசன் கருணையும் அப்பனே பின் பார்வதியின் கருணை நிச்சயம் பின் ஓங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே 

இதனால் கவலையை விடுங்கள் அப்பனே பின் அவரவருக்கு என்ன தேவை என்பதை கூட உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் இவ் ஈசனே அப்பனே கொடுப்பான் என்பேன் அப்பனே நல் முறைகளாகவே 


இதனால் அப்பனே பின் வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே வாழ்க்கையில் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே உந்தனுக்கும் பல வகையிலும் கூட எம்முடைய ஆசிகள் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு இருப்பதால் அப்பனே அப்பனே பின்  நினைத்த காரியங்கள் அப்பனே சில தடை தாமதங்கள் நிச்சயம் அப்பனே பின் ஏற்பட்டாலும் அப்பனே நிச்சயம் சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம்  அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் கந்தனுடைய அனுக்கிரகங்களும் கூட அப்பனே பல கோடி அப்பா இதனால் அப்பனே உன் இல்லத்திற்கே பின் வந்து சென்று அப்பனே நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட கந்தன் வந்து கொண்டே இருக்கின்றான் சஷ்டி தன்னில். 


முயற்சிகள் எதை என்று புரியப் புரிய இதனால் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே கவலையை விடுங்கள் எதை என்று புரிய புரிய அப்பனே பல மனிதருக்கு பல உண்மைகள் தெரியாதப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஈசன் பின் அழகாகவே தனியாகவே இருக்கின்றான் என்பேன் அப்பனே அங்கெல்லாம் சென்று விட்டு வந்தாலே அப்பனே பின் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பேன் அப்பனே 


இதனால் அருள்கள் அப்பனே பின் தானாகவே உயர்ந்துவிடும் என்பேன் அப்பனே 

இதனால் நிச்சயம் அப்பன ஈசனே பின் அதாவது ஈசனின் விளையாட்டை பாருங்கள் 

அறிந்தும் எதை என்று அறிய திடீரென்று திருத்தலத்தை கட்டுவேன் என்கின்றாய்?!! ஆனால் கட்ட முடியுமா கூறு!! அனைவரையும் கூறச் சொல்லுங்கள்!!



அப்பனே அனைவரையும் பார்த்து ஒரு கேள்வியை கேட்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட 

அப்பனே இல்லாதவனுக்கு இருக்கின்றது பின் அறிந்தும் கூட பின் இருந்தவனுக்கு இல்லை ஏன்??
இதற்கு என்ன அர்த்தம்??


அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது இல்லாதவனிடத்திலே அப்பனே இறைவன் இருக்கின்றான் அவ்வளவுதான்!

அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் இங்கு உள்ள அனைவருக்கும் எல்லாக் குறையும் தீர்த்து வைப்பான் அப்பனே பின் பல விதத்திலும் கூட நிச்சயம் அருள் ஈந்து நல்விதமாகவே யானே பின் எடுத்துச் செல்வேன் இதனையும் கூட!!! கவலையை விடுங்கள் 

அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் வேலைகள் நடக்கும் என்பேன்!!!


அறிந்தும் கூட இதனால் பின் அவரவர் தன் கடமையை செய்தாலே போதுமானது தாயே பின் அனைத்தும் நடக்கும் 

கடமையைச் செய்யாமல் பின் எதை செய்தாலும் வீண்!!!

ஏன் எதற்கு எவை என்றும் அறிய அறிய இவ்வளவு  என்று கூட ஆசிகள் தாயே அனைத்தும் எதை என்றும் அறிய அறிய... அம்மையே பின் என்னையும் எதை என்று அறிய அறிய முன் ஜென்மத்திலே பந்தங்கள் அதனால் தான் எவை என்றும் அறிய அறிய அதனால் தான் எவை என்று கூட இனிமேலும் பின் தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இங்கு அழைத்து உந்தனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் வாக்குகளாக 

ஆசிகள் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எவை என்றும் புரிய புரிய இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும் அதாவது பின் எவை என்று அறிய அறிய இவ்வுலகத்திற்கு எதற்காக வந்தோம் எதை என்று அறிய அறிய எப்படி வாழ்ந்தோம் எவை என்றும் அறிய அறிய ஆனால் வந்தவர்கள் எல்லாம் நிச்சயம் பின் போகத்தான்!!!

ஆனாலும் அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் யார் ஒருவன் அனைத்து விஷயங்களும் தெரிந்து கொள்கின்றானோ அவந்தன் உயரிய இடத்தில் இருப்பான் பின் அனைத்து விஷயங்களும் அவந்தனை உயர்வான இடத்திற்கு எடுத்துச் செல்லும் அதை விட்டுவிட்டு பின் அடுத்தவனை நம்பினால் நிச்சயம் பின் ஏமாந்து பின் உட்கார வேண்டியதுதான் இதை அனைவருக்குமே அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் 



எதை என்று அறிய அறிய அப்பனே ஈசன் சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

ஈசன் ஏன் இங்கு அழைத்தான்?? அப்பனே அறிந்தும் கூட ஏன்?? இங்கு வாக்குகள் பின் அவன் அருளால் செப்பிக் கொண்டிருக்கின்றேன் என்பதை எல்லாம் நீங்கள் உணர்ந்துள்ளீர்களா????

இல்லை என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே பின் உணர்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே பின் உணர்ந்து செய்வோருக்கு அப்பனே நிச்சயம் பின் ஈசனே அருகில் இருப்பான். 

அதாவது தன் கடமையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ நிச்சயம் இவந்தன் பின் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான் இவனை உயர்த்தி விடலாம் என்று இறைவன் நினைப்பான் 

ஆனால் தன் கடமையை செய்யாமல் இருந்தால் பின் இறைவனும் பார்த்துவிட்டு நிச்சயம் பின் இவன் தரித்திரன் இவன் இப்படியே இருக்கட்டும் என்று சென்று கொண்டே இருப்பான் இதுதான் வாழ்க்கை 


அருள்கள் எதை என்றும் அறிய அறிய இதனால் அனைத்திற்கும் காரணம் பின் ஈசனே என்பேன் 

ஈசனே பின் அனைத்தும் செய்து கொள்வான் 

எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய இன்றில்லை!!! நாளையில்லை !! அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே


இன்னும் பின் பல ரகசியங்களுடன் பின் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே ஈசனிடத்திற்கு இப்பொழுதும் கூட பின் ரிஷிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே யார் அறிவார் அப்பனே 

அப்பொழுதெல்லாம் அப்பனே பெருமாளை (திருப்பதி ஏழுமலையானை) பார்ப்பதற்கும் அப்பனே பின் காலாத்ரி நாதனை (காளஹஸ்தி)பார்ப்பதற்கும் அப்பனே பல வகையிலும் மனிதர்கள் இங்கு வருவார்களப்பா!!! அப்பனே சந்தோஷமாக அன்னத்தையும் உட்கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு பல பல ஞானிகளும் தங்கி அப்பனே இங்கேயே கூட மாண்டுள்ளார்களப்பா!!!

(பல பல ஞானிகளின் ஜீவ சமாதிகளும் இங்கே உள்ளது)


இதனால் எவை என்றும் அறிய அறிய பல பரிசுத்தமான ஆத்மாக்களும் இங்கு உள்ளது என்பேன் இதனால் எவை என்று கூட அவர்களே செய்து முடிப்பார்கள் 


எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய யார் வந்தாலும் அப்பனே ஈசனை நெருங்க முடியாதப்பா!!!


அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய நிச்சயம் ஆட்டத்தை பாருங்கள் அப்பனே!!!


அப்பனே நன் முறைகளாக எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே!!!

 அம்மையே!!!!

 எதை என்று அறிய அறிய இன்னும் இவ் ஆன்மாக்கள் எவை என்றும் அறிய அறிய எதை என்று அறிய அறிய எவ்வகையான பந்தங்கள் என்றெல்லாம் இங்கெல்லாம் சுற்றி திரிந்திருந்தாய் என்பவையெல்லாம் எடுத்துரைக்கும் பொழுது அப்பொழுது உன் வாழ்க்கையை பற்றி தெரியும் நிச்சயம் அறிந்தும் கூட இச் சென்மத்திலே எவை என்று அறிய அறிய நிச்சயம் பின் ஈசனுக்கு பின் திருத்தலம் கட்டும் யோகமும் உண்டு....
ஆசிகள் நலன்கள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. ஐயா கோவில் எங்கு உள்ளது? சென்னையில் இருந்து எப்படி செல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா இந்த பதிவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது சித்தன் அருள் 1382ல் சென்று படித்துப் பார்க்கவும் .
      அந்த பதிவையும் படியுங்கள் அதில் முழு முகவரி விவரங்கள் எல்லாம் இருக்கின்றது ஒரு பதிவு எண்ணை குறிப்பிட்டால் அந்த பதிவு எண்ணையும் கூகுள் டைப் செய்து சித்தன் அருளில் ஏற்கனவே குருநாதர் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை பாருங்கள் அதில் தொலை தொடர்பு எண் முதல் கொண்டு முழு முகவரியும் இருக்கின்றது நன்றி வணக்கம்

      Delete
    2. https://maps.app.goo.gl/yuyHcoynbCvMx6Rk9

      Delete
  4. தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete