அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5 (நிறைவு பகுதி)
தேதி : 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
(21/12/2025 அன்று நடந்த இலங்கை கொட்டாச்சேனை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5 (நிறைவு பகுதி)
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே நலனும் தான் என்பேன் அப்பனே. அனைத்தும் அப்பனே பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே, ஈசன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் பல வகையான வாக்குகள் வருகின்ற பொழுது, அனைத்தும் புரியும் அப்பா. கவலை கொள்ள வேண்டாம் அப்பனே.
======================================
# ராகு கேது ரகசியங்கள் - இலங்கை தென் கடலின் அடியில், கண்களுக்கு தெரியாமல் பனி போல் இருக்கின்றது.
======================================
குருநாதர் :- மீண்டும் அப்பனே, முதலிருந்து வருவேன் அப்பனே. ராகு கேதுக்கள் எப்படிப்பட்டவை என்பவை எல்லாம் அப்பனே. அதாவது, அப்பனே, சொன்னேனே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்குதான் அவ் ராகு கேதுக்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கண்களுக்கு தெரியாமலே அப்பனே, எது என்று புரியாமல், புரியாமலே இருக்கின்றது அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- பின் கண்களுக்கு தெரியாமலே. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ராகு கேதுக்கள் எப்படி ஏது என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவையும் தற்பொழுது. அப்பனே, பின் பனி என்கிறார்களே. அப்பனே, அதன் போலவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே நீர் எவை என்று புரிய அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (ராகு கேது கிரகங்கள் பற்றி மீண்டும் வாக்கு உரைக்க ஆரம்பித்துவிட்டார் ஐயா. அந்த சுரா கல் இருக்கும் தென் இலங்கை கடலில் , அந்த இடத்தில் ராகு கேது கிரகங்கள் பனிக்கட்டியாக இருக்கின்றது. அதாவது பிம்பம் போல் எப்படி என்றால் , ஒரு கண்ணாடி போல் இருக்குங்க. அந்த ரெண்டு கிரகம் புரியுதுங்களா? கண்ணாடி போல் இருக்கிறது. )
குருநாதர் :- அப்பனே, இதன் அப்பனே, பின் கீழிருந்து, அப்பனே, நீரில் கூட இதே போல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சூரியனுக்கு அப்பனே, சில அப்பனே, மைல் தன்னிலே. அப்பனே, (ராகு கேது) அவை தன், அப்பனே, அப்படியே இருக்கும் அப்பா. அப்பனே, ஆனாலும், அப்பனே, இவைதன் படம் பிடிக்கவே முடியாது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, புரியுதுங்களா? இதனோட ஒரு பகுதி கடலை அருகிலே ஒன்று இருக்குதாம். மற்றொன்று சூரியனுக்கு சில மைல் தொலைவிலே இருக்குதாம். அது எப்படி இருக்கும்? கண்ணாடி மாதிரி இருக்குமாம். அந்த கிரகங்கள் வந்து கண்ணாடிகள் மாதிரி இருக்கும். நீங்க படம் கூட பிடிக்க முடியாது. சேட்டிலைட்ல படம் பிடிக்க முடியாது. )
குருநாதர் :- அப்பனே, இதிலிருந்தே தெரிகின்றதா? இறைவன் மிகப்பெரியவன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விஷயங்கள் கண்டுபிடிக்க முடியும், சில விஷயங்கள் கண்டுபிடிக்க முடியாது. இதிலிருந்து தெரியுதுப்பா, இறைவன் மிகப்பெரியாள்.)
குருநாதர் :- அப்பனே, இவற்றையும் காண விஞ்ஞானிகள் இன்னும் இயங்குகின்றார்கள் அப்பனே. ஆனால் முடியாது அப்பா. இறைவனின் சில லீலைகள் அப்பனே, யாராலும் அப்பனே கண்டுபிடிக்க முடியாது அப்பா. அப்படி கண்டுபிடித்தாலும், பைத்தியன் போல் ஆகிவிடுவான். இறந்தும் விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (சில ரகசியங்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இறைவன் எப்படி ஏது என்று நிறைய ஆராய்ச்சி செய்து உள்ளே சென்றால், கடைசியில் என்ன ஆகும்? அவர்கள் பைத்தியம் ஆகிவிடுவார்கள். கடைசியாக இறந்தும் விடுவார்கள்)
=================================
# நம் பாவ புண்ணிய கணக்கு , நமது முதுகில் குமிழ் போல இருக்கும்.
=================================
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, அப்பனே, இவ்பனி தன்னில் கூட அப்பனே, அப்படியே அப்பனே, எது என்று புரிய. அப்பனே, பின் ஈர்க்கும் அப்பனே, பின் மனிதனின் அப்பனே, அதாவது, உடம்பில் கூட. அப்பனே, சிறு அளவு அப்பனே, நிச்சயம் நீர் அப்படித்தான் இருக்கும் அப்பா. குமிழ் போன்று அப்பனே, இவைதன் அப்பனே, அதற்கும் அப்பனே, பின் ராகு கேதுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன் அப்பனே. பின்னாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாம்பின் வடிவிலே
சுவடி ஓதும் மைந்தன் :- ( நமது முதுகு பின்னாடி ஒரு குமிழ் இருக்கும், அது நீர் குமிழ், அது தெரியாதுங்க. ஐயா, நீர் குமிழ் இருந்தா எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு பின்னாடி குமிழ் இருக்குமாம். இதுக்கும் ராகு ராகு கேதுக்களுக்கும் சம்பந்தம் உண்டு. அய்யா புரியுதுங்களா? )
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய? அப்பனே, இதனால், அப்பனே, பின் அவைதான் பாவம், புண்ணியக் கணக்கும் என்றும் வைத்துக்கொள்ளலாம் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, இதனுடன் அப்பனே தொடர்பு கொள்ள, அப்பனே, பின் எப்பொழுதும், பின் ராகு கேதுக்கும், பின் பின்னே, அப்பனே, இருக்கும் அப்பனே. மூலாதாரத்துக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒளிபட்டுக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, ராகு கேதுக்கள் இருந்து யாரும் தப்பிக்க முடியாது அப்பா. அப்பனே, அதனால், நீங்கள் பின் என்ன செய்கின்றீர்களோ, அதை மீண்டும் ராகு கேதுக்கள் திருப்பி உங்களிடத்திலே அழகாக கொடுக்கும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இலங்கை இங்க மூலாதாரம் இருக்கும்போது, ராகு கேது கடலின் அடியில் கண்ணாடி/பனி போல இருக்கின்றது. அதுவும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் , வானில் மேலே மீண்டும் சூரியனுக்கு சில மைல் தொலைவில் பின்னாடி இருக்கின்றது. நமது உடம்பில் முதுகில் ஒரு நீர் குமிழ் போன்று இதுக்கும். அதுக்கும் ராகு கேது கனெக்சன் இருக்கு. அப்ப நீங்க என்ன செய்றீங்களோ, அது என்ன ஆகுமாம்? ராகு கேது அழகா உங்களுக்கு கொடுக்கும். திருப்பியும் நீங்க என்ன செய்றீங்களோ, அது வந்து ராகு கேதுக்கள் கண்டிப்பாக கொடுக்கும்.)
குருநாதர் :- அப்பனே, இவர்கள் கடந்து நீங்கள் மோட்சத்திற்கு போக முடியாது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ராகு கேதுக்களை கடந்து கடந்தால் மட்டும்தான் நீங்கள் மோட்சம் கதி போக முடியும். இல்லையென்றால், அப்படியே தான் இருக்க முடியும்.
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் ராகுவும் கேதுவும், அப்பனே, ஜாதகத்தில் வந்துவிட்டால், அப்பனே, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அப்பா. பாவத்தை அனுபவிக்க வேண்டும். புண்ணியத்தையும் அனுபவிக்க வேண்டும்.
===============================
# ராகு கேதுக்களை வென்றுவிட்டால், இவ்வுலகத்தை வென்றுவிடலாம்.
==============================
குருநாதர் :- அப்பனே, இன்னும் ராகு கேதுக்களின் விளக்கங்கள், அப்பனே, பல லட்சம் என்பேன் அப்பனே. ஒவ்வொன்றாக சொல்லுகின்ற பொழுதுதான் தெரியும். ஆனாலும், நான் ராகு கேதுக்களை பற்றி சொல்லிக்கொண்டே வந்தால், அப்பனே, புரியாமல் போகும் என்பேன் அப்பனே. இதனால்தான் சில விஷயங்கள், அப்பனே, பின் எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி சொல்லி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ராகு கேதுக்களை வென்றுவிட்டால், இவ்வுலகத்தை வென்றுவிடலாம்.
குருநாதர் :- அப்பனே, அவை தன் உருண்ட வடிவில் சுருண்டு கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, (ஜாதகத்தில்) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வருகின்ற பொழுது, அப்பனே, முன்னேற்ற தடைகள், அப்பனே, நோய்கள், மனக்குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. அவையும் தடுக்க யான் வழிகள் சொல்வேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அது என்ன ஆகிறது என்றால், ஐயா, நிலைமை இப்படித்தான். மேலே ஒன்று உள்ளது — சூரியனை நோக்கி உயர்ந்து நிற்கும் ஒன்று; அதற்குக் கீழே நீரில் பிரதிபலிப்பு போல இன்னொன்று உள்ளது. இவை இரண்டும் இடைவிடாமல் சுழன்று கொண்டே இருக்கும். ஒரு கணம் இங்கே, அடுத்த கணம் அங்கே — மேலே சென்று கீழே வந்து, கீழே இருந்து மேலே சென்று, தொடர்ச்சியாக சுழலும் இயக்கம். இந்தச் சுழற்சி மனிதனை ஒரு குறிப்பிட்ட நிலையிலே கொண்டு வந்துவிட்டால், அவனாலோ எதையும் செய்ய முடியாது. எந்த முயற்சியாலும், எந்த வலிமையாலும் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை. அப்படிப்பட்ட நிலையில்தான், அதற்கான வழிகளை நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்கின்றார் அய்யா.)
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் புரிந்தும், இதனால், அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் முடிவு சொல்லிவிட்டார்கள் அப்பனே. தான் தான், நிச்சயம், அதாவது ஒவ்வொரு செயலுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய அப்பனே, புரிந்து கொள்ளுங்கள், நீங்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால்தான் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். அதை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் எந்தச் செயலை செய்திருக்கிறீர்களோ, அதன் விளைவை ராகு,கேதுக்கள் தக்க நேரத்தில் அழகாகத் திருப்பிக் கொடுப்பார்கள்.)
குருநாதர் :- அப்பனே, அதை விட்டுவிட்டு, ராகு கேதுக்கள், பின் அப்பனே, இருக்கின்ற பொழுது, பரிகாரம் என்று ஓடி ஓடி செல்வார்கள். அப்பனே, எப்படி அப்பா நியாயம்?
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்போது ராகு–கேதுக்கள் வந்து, தங்களுக்கான பணியைச் செய்து முடிக்க வேண்டும். பாவம் இருந்தாலும் சரி, புண்ணியம் இருந்தாலும் சரி — அவர்கள் வர வேண்டிய நேரம் வந்துவிட்டால், தங்கள் செயலை நிறைவேற்றாமல் விடமாட்டார்கள். ஆனால் அப்படிப் பட்ட நேரத்தில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? பரிகாரங்கள் என்று இடம் இடமாக ஓடி ஓடி செல்வார்கள். அப்படி ஓடுவதால் எப்படி விஷயம் சரியாகும்? இது எப்படி நியாயம் என்று கேட்கின்றார் அய்யா)
==================================
# ராகு கேது - ஒரே பரிகாரம் - உலகில் முதன் முறையாக…..
==================================
குருநாதர் :- அப்பனே, சரியான விகிதத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, வந்தால், அப்பனே, பின் அதில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆண்டிற்கு ஒருமுறை, அப்பனே, திருக்காளத்தி (Srikalahasti) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இங்கு கீரிமலை, ராமேஸ்வரம், அப்பனே, நிச்சயம் ஸ்ரீவாஞ்சியம் அப்பனே, இன்னும், அப்பனே, சில தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- அண்ணாமலை அப்பனே, மதுரை தன்னில் கூட அப்பனே, வாழும் மீனாட்சி. அப்பனே, காசி தன்னில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இன்னும் அப்பனே, இங்கும் கூட நற்குண்டான் என்றெல்லாம் அப்பனே, நிச்சயம் நற்குண்டான் என்றெல்லாம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே.
குருநாதர் :- இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ராவணன் அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, நிச்சயம் ராகு கேதுக்களை வெல்ல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு மலையை வெட்டினான் என்பேன் அப்பனே. அத்திருத்தலத்திலும் கூட அப்பனே, அழகாக விழும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அதனால், அவரவர் அப்பனே, பின் ராசிகளுக்கும், அப்பனே, பின் லக்னத்திற்கும் ஏற்ப அப்பனே, அந்நாளில் சென்றிட்டு வந்தால் மட்டுமே, அவ் ராகு கேதுக்களின், அப்பனே, நிச்சயம் ஒளி அதிகமாக. அப்பனே, பின் உதிர்ந்து, அப்பனே, பின் தன்னிடத்தில் உள்ள, அப்பனே, சில தீயவற்றை, அப்பனே, பின் பாவத்தை தூரே எடுத்த போடும் அப்பனே. இதுவே பரிகாரம் என்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் விளக்குவது என்னவென்றால்: ஆண்டிற்கு ஒருமுறை திருகாளகத்தி, கீரிமலை, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம் போன்ற சில முக்கிய தலங்களில் ராகு கேதுக்களின் ஒரு விசேஷ சக்தி இறங்குகிறது; அதேபோல் அண்ணாமலை, மதுரை மீனாட்சி, காசி போன்ற தலங்களிலும் மறைந்த நற்குண்ட அந்த விசேஷ சக்தி இறங்குகிறது. ராவணனும் ராகு–கேதுக்களின் தாக்கத்தை வெல்ல ஒரு மலையை வெட்டியதாகக் கூறப்படுகிறது; அந்தத் திருத்தலங்களிலும் அந்த ஒளி அழகாக விழுகிறது. எனவே, ஒருவரின் ராசி மற்றும் லக்னத்திற்கேற்ற அந்த நியமிக்கப்பட்ட நாளில் இந்தத் தலங்களுக்கு சென்று வந்தால், ராகு–கேதுக்களின் ஒளி அதிகரித்து, அவர்களிடம் உள்ள சில தீயவைகளையும் பாவங்களையும் நீக்கி விடும்; இதுவே உண்மையான பரிகாரம் என அவர் கூறுகிறார் அய்யா )
====================================
# கதிர்காமத்தில் நடக்கும் வருடாந்த ஆடிவேல் திருவிழா - இங்கு ஆடி மாதம் முழுவதும் ராகு கேது ஒளி விழும்
===================================
குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, அழகாக, அப்பனே, வேளூர், அப்பனே, பின் நின்று கொண்டிருக்கின்றானே அப்பனே, கந்தன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று அறிய அங்கும் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எது என்று புரிய அப்பனே, பின் நிச்சயம் வருடத்திற்கு ஒரு முறை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒரு மாதம் ஒளி பட்டுக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் கதிர்காமத்தை, அப்பனே, மக்கள், பின் நாடி நாடி, அப்பனே, பின் பலர், அப்பனே, பின் நாடுகள் இருந்தும், அப்பனே, முன்பே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( வருடத்திற்கு ஒரு மாதம் கதிர்காமத்தில் மட்டும் தான் அந்த விசேஷ ஒளி வரும். வருடத்தில் ஒருமுறை அந்த ஒரு மாதம் ஒளி இருக்கும். அப்போது கதிர்காமத்தில் இருக்கும் சக்தி மிகப் பெரிய சக்தி. அந்த ஒரு மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த நேரத்தில் அங்கே சென்று வந்தால், அதனால் என்ன விளைவு ஏற்படும்? )
குருநாதர் :- அப்பனே, அதையும் திருவிழாவாக எடுத்து நடத்துகின்றார்கள் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- திருவிழாவை நடத்துகிறார்களே,
கூறிய பிரார்த்தனை அடியவர்கள் :- ஆடி மாதம் (கதிர்காமத்தில் நடக்கும் வருடாந்த ஆடிவேல் திருவிழா)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா… புரிகிறதா? திருவிழாவை எடுத்து நடத்துகிறார்கள், ஐயா… புரிகிறதா? ஆமாம், அந்த திருவிழா நடக்கும் அந்த மாதத்துக்கு தான். அப்ப அந்த மாதத்தில் அங்கே சென்றால் ராகு, கேது என்ன ஆகும்?
==============================
# ராகு கேதுக்கள் - பெண்ணாகவும் செயல்படும் ஒரு நேரத்தில். ஆணாகவும் செயல்படும்.
===============================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் ராகு கேதுக்கு ஆணா பெண்ணா? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்றே சொல்ல முடியாது அப்பா. பெண்ணாகவும் செயல்படும் ஒரு நேரத்தில். ஆணாகவும் செயல்படும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ராகு கேதுக்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாது? பெண்ணாகவும் செயல்படும், ஆணாகவும் செயல்படும்.
==================================
# கிரகங்களை வெல்லத்தான் திருவாசகம் பயன்படுகிறது
==================================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் புரிந்தும், இதனால், அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, கிரகங்கள் அப்பனே, பின் வெல்லத்தான் அப்பனே, இன்னும், அப்பனே, எதை என்று அறிய அப்பனே, பின் எதை என்று புரிய அப்பனே, பின் திருவாசகம் அப்பனே, பயன்படுகின்றது என்பேன் அப்பனே.
======================================
# அனைத்து கிரகங்களின் ஒளி - ஆடி 18 ஆம் தேதி அன்று கதிர்காமத்தின் மீது விழும். முருகப்பெருமானின் வேல் வீச்சால் அவ் ஒளியானது அங்கிருந்து எதிரொலித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கந்தப்பெருமானின் ஆலயங்களில் விழும். இதுவே ரகசியம்.
=====================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவையாவும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆடி. அப்பனே, பின் 18 அன்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரே இடத்தில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அனைத்து கிரகங்களும் ஒளி படும் என்பேன். அப்பனே, அதுதான். அப்பனே, பின் கதிர்காமம்
குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய அப்பனே, இதையும் கூட ஈசனிடமே அப்பனே, பின் முருகன், விழுகின்றதே , நிச்சயம் தன்னில் கூட. இங்கு மட்டும் ஒளி விழுகின்றதே . நிச்சயம் தன்னில் கூட இவ் ஒளியானது, நிச்சயம் எப்படி திடீரென்று நிச்சயம் பல, பின் நிச்சயம் தன்னில் கூட என்னை நம்பி வந்து கொண்டே இருக்கின்றார்கள் அல்லவா? இதை யான், நிச்சயம் தன்னில் அறிந்து புரிந்தும், இவை பின் அதாவது அனைத்தும் பின் திருத்தலங்களுக்கும் செல்ல வேண்டுமே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (கலியுகத்தில் இந்த ஒளி கதிர்காமம் இங்கே மட்டும் வந்து விழுந்தால், இங்கே மட்டும் நன்மை ஏற்படும். ஆனால் அந்த கிரக ஒளி அது எல்லா கோயில்களுக்கும் போக வேண்டும் என்றால், அதை யாரிடம் கேட்டார்? ஈசனிடம் கேட்டார் முருகப்பெருமான். ‘அப்பா, இந்த ஒளியை எல்லோருக்கும் எப்படி கொண்டு போவது? மற்ற கோயில்களுக்கு நான் இதை எப்படி சேர்ப்பது?’ என்று கேட்டவர் யார்? முருகப்பெருமான்.)
குருநாதர் :- (ஈசனார் முருகப்பெருமானிடம்) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட (வேலின்) கூர்முனையால் அப்பனே எடுத்து, அப்பனே எவை என்றறிய அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒரு அப்பனே ஒளி வருமப்பா. அப்பனே, சரியான நேரத்தில் அதில் கூட ( உன் வேலை எடுத்து ) அப்பனே எரி அப்பனே, பின் உன்னுடைய அப்பனே எதை என்றென்றும் நீ எங்கே இருக்கின்றாயோ, அங்கெல்லாம் அப்பனே அது பிரிந்து, அப்பனே போய், அப்பனே விழுமப்பா. இதனால்தான், அப்பனே அனைத்தும் அப்பனே எதை என்று புரிய அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒரு ஒளி வரும். அந்த ஒளி சரியான நேரத்தில் வந்து விட்டால், (கந்தப்பெருமான்) அவர் என்ன செய்வார்? வேல் எடுத்து என்ன செய்வார்? வேல் அதை எடுத்து வீசுவாராம். அந்த வேல் வீசப்படும் நேரத்தில் என்ன நடக்கும்? பிசுக் என்று எல்லா முருகன் கோயில்களிலும் அது சென்று தாக்கும். அப்ப முருகன் எங்கெங்கெல்லாம் இருக்கிறாரோ, அந்த எல்லா தலங்களிலும் என்ன நடக்கும்? அந்த ஒளி கிடைக்கும். )
குருநாதர் :- அப்பனே, இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் வேலை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஆடி தன்னில் கூட. அப்பனே, சிறப்பாகவே
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் ஆடி மாதத்தில் வந்து என்ன பண்றாங்க? காவடி எடுக்கிறது, வேல் குத்துகிறது. வேல் வழிபாடு என்பது ஆடி மாதத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.
குருநாதர் :- அப்பனே, இதை தெரியாமல், அப்பனே மனிதன் சுற்றிக் கொண்டிருப்பான் அப்பனே. எதற்காக? எவை என்று அறிய? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- (இதைக் தெரியாமல் மனிதன் என்ன செய்வான்? ‘அப்பா, வேல் எதற்காக?’ என்று கேட்பான். ராகு–கேதுவின் மீது ஒளி படும் நேரம் இது. அந்த பாதையில் சுழலும் போல ஒரு ஒளி படும். அவர் சொல்வது என்னவென்றால் — அந்த நேரத்தில் வேல் வீசினாரானால் என்ன ஆகும்? அந்த ஒளி எவ்வளவு வேகத்தில் வன்தொதோ , அதே வேகத்தில் அது எல்லாம் கலந்து போய் பிச்சு பிச்சு என்று பரவிவிடும். அது எங்கே விழும் தெரியுமா? எல்லா முருகன் கோயில்களிலும் விழும்.)
குருநாதர் :- அப்பா, அறிந்தும் கூட முதலில், அப்பனே, பின் எவை என்று கூட அறுபடைகளில் அப்பனே, பின்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா, கதிர்காமத்தில் இருந்து , தமிழகத்தில் உள்ள அறுபடை வீட்டிலும் அந்த ஒளி விழும் )
===============================
# பழனி மலை அடிவாரம் - ஆடி 18 ஆம் தேதி ரகசியங்கள். பழனி என்ற அப்பனே, சொல்லுக்கு, பாவங்களை போக்கிக் கொள்ளுதல் என்பது அர்த்தம்.
===============================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் எதை என்று புரிய அப்பனே, இதனால், அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் எதை என்றறிய அப்பனே, நிச்சயம் எவை என்றறிய அப்பனே, இதனுள்ளே, அப்பனே, இன்னும், அப்பனே, சரியாகவே வேல் ஒன்றை அப்பனே, பழனி தன்னிலே கூட.
குருநாதர் :- அப்பனே, இதனால், அங்கு, அப்பனே, பலர், அப்பனே, அவன் மலை தன்னில் கூட. அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின் அதாவது முருகனை நினைத்து, நினைத்து, அப்பனே, இன்னும், அப்பனே, அவ் மலை தன்னில் கீழே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே, இன்னும் தவம் ஏற்றிக் கொண்டே, வருவோருக்கெல்லாம்.
குருநாதர் :- அப்பனே, அங்கு, நிச்சயம் தன்னில் கூட. அந்நேரத்தில், அப்பனே, பின் பலமாக, அப்பனே, ஒளி படுகின்ற பொழுது, அப்பனே, அவ் முனிவர்களில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஒரு நிமிடம் கண் அசைப்பார்கள் அப்பா. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அன்றைய மாதத்தில், அப்பனே, கண் திறக்கின்ற பொழுது, அப்பனே, அவர்களையும் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒளியானது மனிதனிடத்தில் படுகின்ற பொழுது, அப்பனே, மனிதன், அப்பனே, பாவங்களை போக்கிக் கொள்கின்றான் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால், பாவங்கள், அப்பனே, போக்கிக் கொள்வது என்பது பழனி தன்னிலே.
குருநாதர் :- பழனி என்ற அப்பனே, சொல்லுக்கு, பாவங்களை போக்கிக் கொள்ளுதல் என்பது அர்த்தம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பழனி பற்றி பேசுகிறார். இங்கிருந்து போகும் அந்த ஒளியில், பழனியில் ஆடி மாதத்தில் மலைக்கீழ் ஞானிகள், ரிஷிகள் எல்லாம் வந்து தவம் ஏற்றிக் கொண்டிருக்கிறார்களாம். அப்போது அந்த ஒளி அங்கே படும்போது, அவர்கள் கண்ணைத் திறந்து பார்ப்பார்களாம். யார் அவர்கள்? ஞானிகள். அந்த நேரத்தில் நாம் அங்கே சென்றோம்னா, அவர்களுடைய அந்தக் கண் பார்வை நமக்குப் பாவத்தை போக்குமாம். எல்லாருடைய கண்கள் நம்மை நோக்கி விழும் பொழுது…
குருநாதர் :- அப்பனே, எதை என்றறிய ராகு கேதுவும், ராகு கேது தோஷமும் நீங்குமப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- பழனி என்பது ராகு, கேது நீக்கும் தலம். அந்தத் தோஷங்கள் எல்லாம் அங்கே சென்றால் பரிபூரணமாக நீங்குமப்பா.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, சென்று கொண்டே இருந்தாலே, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் எவை என்று, எவை என்று அறிய அப்பனே, பாவத்தை போக்குகின்ற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பாவத்தை வளர்க்கக்கூடிய ராகு கேதுக்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் சில பாவங்களை, அப்பனே, உடனடியாக, அப்பனே, இழந்து புண்ணியம் பெருகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா, புரியுதுங்களா? ராகு–கேதுக்கள் காரணமாக சில பாவங்கள் மனிதனுக்கு ஏற்படும். அதனால், பழனி அங்கே போனோம்னா என்ன ஆகும்? அந்த ராகுவால் ஏற்பட்ட பாவங்கள் புண்ணியமாக மாறும். அப்ப மனிதன் தூய்மை பெற முடியும்.
==========================
# வேல் மாறல் ரகசியங்கள்
==========================
குருநாதர் :- அப்பனே, இப்படித்தான் அப்பா, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, இதற்கும் சரித்திர, அப்பனே, எடுத்துக்காட்டாகவே, அப்பனே, வேல் மாறலும் உள்ளது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல்மாறல் சரித்திரம் பற்றி பேசும்போது, ராகு–கேதுக்கள் என்ன செய்கின்றனென்று தெரியும். வேல்மாறல் பற்றியதை நம்மால் படித்துக்கொண்டே இருந்தோம்னா, ராகு–கேதுக்களின் தாக்கம் குறையும்.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது பாடவே வேண்டும், அவசியம் என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- “இப்பொழுது நீங்கள் வேல்மாறல் பாட வேண்டும் ஐயா; அது அவசியம் என்பேன். என்று சொல்லிவிட்டார். வேல்மாறல் பாடுங்கள், ஐயா.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (வேல்மாறல் பாட ஆரம்பித்தார்கள்.. )
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
……………………
……………………
……………………
……………………
……………………
……………………
……………………
……………………
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (வேல்மாறல் படித்து முடித்தவுடன் )
சுவடி ஓதும் மைந்தன் :- (அங்குள்ள அனைவருக்கும் ) அருமையா படிச்சீங்க ஐயா.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- எனக்கு வேல்மாறல் என்றாலே , அப்படி ஒரு சந்தோஷம். எனக்கு தானாவே பிடிக்கும். வேல்மாறல் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
============================
# வேல் மாறல் படித்தால் - ராகு அதிஷ்டத்தை கொடுப்பார். கேது ஞானத்தைக் கொடுப்பார்.
=============================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இவை யாவும் அறிந்தும் கூட. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவை பாடிக்கொண்டே வந்தால், அப்பனே, ராகுவும், அப்பனே, பின் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்பனே, கேதுவானவனும் இன்னும் ஞானத்தை கொடுப்பான் என்பேன் அப்பனே. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை யார் அதிகமாக படித்துக் கொண்டு வருகிறார்களோ — ராகுவானவர் என்ன செய்வார்? அதிர்ஷ்டம் வழங்குவார். கேதுவானவர் என்ன செய்வார்? மேலும் ஞானத்தை அளிப்பார். அதை நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- அருளும் ஞானமும் ரெண்டும் கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, ரைட்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் 1 :- (வேல்மாறல் பாராயண பலன்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூர்ந்து உரைத்தார் பின்வருமாறு) அய்யா (இலங்கை அடியவர்) சொல்லித்தான் எனக்கு வேல்மாறல் கிடைச்சுச்சு அது. முதல் முதல்ல 2024 டிசம்பர் மாதம் படித்தேன். படிச்ச ஒரு மாசத்துல எங்க வீட்டுல என் மகளுக்கு கல்யாணமும் முடிந்தது. அதனால இன்னைக்கும் விடாம படிக்கிறேன். அய்யா தான் எனக்கு வழிகாட்டினார்
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஓம் நமச்சிவாய.
சுவடி ஓதும் மைந்தன் :- சூப்பர், சூப்பர். அதனால்தான் எல்லாத்தையும் கொடுக்கக்கூடிய கூடிய சக்தி வேல்மாறல் பாடலுக்கு இருக்கின்றது.
குருநாதர் :- அப்பனே, இதை ஒருவனுக்கு தெரிவித்தால், அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் எதை என்று பல, அப்பனே, எவை என்று பல. அதனால்தான், அப்பனே, ஒரு இடத்தில் இருந்துகொண்டு, அப்பனே, பல மக்களுக்கு எதை என்று புரிய. அப்பனே.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ராகுவும் கேதுவும், அப்பனே, நிச்சயம் பின் திருவிழாவில், அப்பனே, தொட்டிலில், அப்பனே, பின் வட்டம் அடிக்குமே. அப்பனே, இதுபோல் சுற்றிக்கொண்டே, அப்பனே.
குருநாதர் :- இதனால், அப்பனே, அங்கங்கு, அப்பனே, நிச்சயம் இவ்வாறாக சுற்றிக்கொண்டு, இவ்வாறாக வேகமாக சுற்றுகின்ற பொழுது, அப்பனே, அங்கங்கு, அப்பனே, விழும் அப்பா. அப்பனே, எதை என்று கூற , அதை நிச்சயம் தன்னில் கூட, அப்படியே திருப்பி அனுப்ப. அப்பனே, வேலானது தேவைப்படுகின்றது அப்பனே.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே, முருகன், அதை, அப்பனே, அப்படியே திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் எவை என்று முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ரங்கராட்டினம் என்று சொல்வார்கள், தெரியுமா? ரங்கராட்டினம் திருவிழாவில் சுத்திக் கொண்டே இருக்கும் — பார்த்திருக்கிறீர்களா? அதுபோல என்ன ஆகும்? ராகு–கேதுவும் சுத்திக் கொண்டே இருப்பார்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, பாஸ்ட் வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கும் போது, அந்த பனிக்கட்டி மாதிரி இருக்கும் ராகு - கேது கண்ணாடி என்ன ஆகும்? உடைந்து துண்டு துண்டாக விழும். அப்போது முருகப்பெருமான் அவர் என்ன செய்வார்? தனது வேலால் தூக்கி அடிப்பார்; மீண்டும் தூக்கி வந்து அடிப்பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படியிருக்க, இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் ராகு–கேதுவின் தாக்கத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பது தெரிகிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- மேலும், இந்த ராகு–கேதுக்கள் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேல்மாறல் அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் .
குருநாதர் :- இதனால் அப்பனே, அனைவருக்குமே சொல்கின்றேன், நீங்களும் வாக்குகள், வேண்டும், வேண்டும் என்று அப்பனே. ஆனால் உலகம் அழிவு நிலைக்கு செல்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் எல்லாருக்கும் வாக்கு சொல்றேன். ஆனா இப்ப உலகம் எதுக்கு போயிட்டு இருக்குது தெரியுமா? ஐயா, நேராக அழிவை நோக்கிப் போயிட்டு இருக்குது.
===============================
# அன்பு அடியவர்கள் அனைவரும் வேல்மாறல் பாராயணம் தினமும் செய்யவும்.
===============================
குருநாதர் :- இதனால் அப்பனே, இதனால் அனைவரும் இல்லத்திலும், அப்பனே, பின் வேல் ஒன்றை வைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வேல்மாறலை அப்பனே, பாடி துதித்துக் கொண்டே இருங்கள். தீபம் ஒன்றை ஏற்றி, அப்பனே, நிச்சயம் இதை செய்து வாருங்கள். அனைத்தும் வாக்குகள், அனைவருக்குமே கிட்டும்.
===============================
அடியவர்கள் பயன்படுத்திக் கொள்ள - அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த காலை 5-6 மணி , மாலை 7-8 மணி என்று தொடர்ந்து 2 பொழுதிலும் குடும்பத்துடன் அனைவரும் இல்லத்திலே கூட்டுப் பிரார்த்தனை செய்து படித்தால் வெற்றி உண்டாகும்.
05.10.2025 - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை - அன்புடன் இடைக்காடர் சித்தர் வாக்கு - பகுதி 2
https://siththanarul.blogspot.com/2025/10/1964-052025-2.html
===============================
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப அவர் கேட்டார் வந்து — “அனைவருக்கும் ஐயா, வாக்குகள் வேண்டும்”என்று. அதற்காக ஒரு பரிகாரத்தையும் சொல்லி இருக்கிறார். “வீட்டில் ஒரு வேல் வைங்க; அந்த வேல் வைத்துக்கிட்டு எல்லாருக்கும் இதுதான்… இதுதான் பரிகாரம்”
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாரும் கேட்பீங்களே வாக்கு எனக்கு வேண்டும் என்று. அப்ப அகத்தியர் என்ன சொல்கிறார்னா, “நான் எல்லாருக்கும் வாக்கு உரைக்கிறேன். இப்ப உலகம் அழிவை நோக்கிப் போயிட்டு இருக்குது. அதைத்தான் நாங்க பார்த்துக் கொள்கிறோம் ” என்று சொல்கின்றார். அதுக்குப் பிறகு, “உங்களுக்கு நான் வாக்கு சொல்றேன். எல்லாருக்கும் வந்து தனியா சொல்லுவார்” என்று சொல்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்கு என்ன செய்யணும்னா — வீட்டில் வேல் வைத்து, ஒரு தீபம் ஏற்றி, வேல்மாறல் படிச்சுக்கிட்டே வாங்கம்மா. உங்களுக்கு தேவையானவை கிடைக்கும்; சில பாவங்கள் கரைந்து போகும்.
குருநாதர் :- இன்னும் எதை என்று கூட அனைவருக்குமே சொல்கின்றேன். சரியாக பச்சை கற்பூரத்தையும் வெற்றிலையும் கூட உள்ளங்கையில் வைத்து, இவ்வேல்மாறலை துதித்து, நல்வழியாகவே பின் ஆற்றின் தண்ணீரில் விட்டால், இன்னும் உங்கள் பாவம் பின் தானாகவே ஓடும்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஓம் நமச்சிவாய.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( பாவங்கள் விலக குருநாதர் நல் வழி காட்டியதை நினைத்து மகிழ்ச்சியில் - பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நான் உங்களுக்கு எல்லாருக்கும் பரிகாரம் சொல்றேன். வேல்மாறல் பாடும் போது, வெற்றிலை–பாக்கு வைத்து, அதில் பச்சை கற்பூரம் வைக்கணும். நீங்க வேல்மாறல் பாடிக்கிட்டே இருந்து, கடைசியில் அதை எடுத்துக்கொண்டு போய், ஆற்றில் விடுவிடீர்கள் என்றால் உங்களுடைய சில பாவங்களும் கர்மங்களும் அதோடு ஓடி போயிடும்.
குருநாதர் :- இவை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே, பின் உங்களுக்கு, பின் நிச்சயம் தன்னில் கூட சந்தோஷத்தை அளித்துவிட்டால், பின் நீங்கள் மற்றவர்களுக்கும் சந்தோஷம், பின் நிச்சயம் தருவீர்கள்.
குருநாதர் :- அப்பா, அனைவருக்கும் சொல்கின்றேன். அப்பனே, முதலில் ஒருவன், ஒருவன், அப்பனே, முதுகில் பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றான். அப்பாவத்தை முதலில், பின் விளக்கினாலே, அப்பனே, அனைத்தும் யான் சொல்வேன். அப்பனே, நீங்கள் வந்துள்ளீர்கள். அப்பனே, நிச்சயம் யான் விளக்கி, அப்பனே, விடுவேன் என்பேன் அப்பனே. யான் சொல்வதை கேளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகத்துக்கு வரும்போது, ஒவ்வொருவரும் என்ன செய்கிறாங்க? முதுகில் பாவத்தை சுமந்து வருகிறார்கள். அந்த பாவத்தைப் பற்றி நான் சில விஷயங்கள் எல்லாம் சொல்லி இருக்கேன்பா… அதை நீங்க கேளுங்கப்பா. இன்னும், உங்களோட வாழ்க்கையைப் பற்றியும், எல்லாவற்றையும் பற்றியும் நான் சொல்றேன்னு அவர் சொல்லி இருக்காரு. ஐயா, புரியுதுங்களா.
குருநாதர் :- அப்பனே, நலமாகவே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, உங்களுக்கு, அப்பனே, புண்ணிய பாதையில் செல்க என்று சொல்லிவிட்டேன்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அப்புண்ணிய பாதையில் நீங்கள் சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, புண்ணியம் தானாகவே உங்களுக்கு நல்லது செய்யும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் உங்களுக்கெல்லாம் என்ன சொல்லிக் கொடுத்தேன்? புண்ணியத்தையே சொல்லிக் கொடுத்தேன். புண்ணியத்தை சொல்லிக் கொடுத்தா, அந்த புண்ணியமே என்ன ஆகும்? அந்த புண்ணியமே உங்களுக்கு பாதுகாப்பாக நிற்கும்.
குருநாதர் :- அப்பனே, இன்றளவும் பின் மற்றவர்களுக்காக நீங்கள் பாடிக் கொண்டவர்கள் என்பேன் அப்பனே, அது புண்ணியத்தில் போய் சேரும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் பிறருக்காக பாடி இருக்கீங்க. சிவபுராணம் எல்லாம். அது எதுல போய் சேரும்? புண்ணியத்துல போய் சேரும்.
குருநாதர் :- அப்பனே, உங்களை நீங்கள், அப்பனே, நிச்சயம் உணர்வீர்கள் என்பேன் அப்பனே. இன்னும், அப்பனே, பல வாக்குகள் யானே செப்புவேன் பொறுத்திருந்தால்.
குருநாதர் :- அப்பனே, இதனால், அப்பனே, பொறுத்தால், பூமி ஆள்வார் என்ற பழமொழியும், அப்பனே, நீங்கள் அறிந்ததே.
குருநாதர் :- அப்பனே, எம்முடைய சித்தர்கள் ஆசி இல்லாமல், அப்பனே, நீங்கள் இங்கு வந்திருக்க முடியாது அப்பா.
குருநாதர் :- அப்பனே, நினைத்துக் கொள்ளுங்கள், வாக்குகளும் உண்டு. யாங்கள் கொடுக்காமல் எங்கு போவோம்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நீங்க சித்தர்கள் ஆசி பெற்றிருக்கீங்க. அப்ப, உங்களுக்கு வாக்குகளும் கண்டிப்பாக உண்டு. அப்ப, உங்களுக்கு சொல்லாம, நாங்க எப்படி போயிடுவோம்? அய்யா புரியுதுங்களா? எல்லோருக்கும்,
குருநாதர் :- அப்பனே, நல்விதமாக, அப்பனே, ஒவ்வொரு விஷயத்திலும், அப்பனே, நீங்கள், அப்பனே, பின், அப்பனே, பின், அதாவது, உங்களை நான் அறிந்திருக்கின்றேன் அப்பனே. இதனால், அப்பனே, அனைத்தும் தீர்த்து வைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருந்தாலும், உங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்களை அகத்தியர் சொல்கிறார், நான் அறிந்திருக்கிறேன். அப்ப, உங்க பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும். அதை நான் வந்து முடிச்சு வைக்கிறேன்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( சுவடியில் எவ்வளவு வாக்குகள் எப்படி வருகின்றது என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்டார்) ஐயா, ஒரே பேஜ்ல இவ்வளவு வாசிச்சுட்டே இருக்கீங்களா? அவ்வளவு இருக்கு. ஆனா, இவ்வளவுதான் நீங்க வாங்க, இங்க பார்ப்பீங்க. அதனால்தான் இத்தனை நாளா சொல்லிட்டு இருக்கீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- (“ஐயா, இங்கே வாங்க என்று சொல்கிறேன். இதைப் பற்றி நீங்கள் ஒரே பக்கத்தில் வாசித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டிர்கள் அல்லவா? இதில் ஒன்றும் இருக்காது. அந்த நேரத்தில் ஓடிப்போகும். பெரிய சிரமமோ எடுப்போ இல்லாமல் இப்படி சென்று விடும். நீங்கள் இறைவன் அடியாராக இருக்கிறீர்கள். இங்கே வந்து, உங்களுக்கு, பல பேருக்கும் சந்தேகம் வரும்—எப்படி இதை எல்லாம் வாசிப்போம் என்று. ஒரே இதில்தான் என்றால், இதில் ஒன்றுமே இருக்காது; அந்த நேரத்தில் வந்து போய்விடும். ஆனால் இது ரொம்ப ஈஸி, கஷ்டமே இல்லை. பேப்பர் படிப்பது போல் தான். இதுவே ஜீவநாடி.)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஓம் நமசிவாய.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் வாக்கு கிடைக்கும் அய்யா. புண்ணியம் உள்ளவர்களுக்கு, புண்ணிய ஆன்மாக்களுக்கு எல்லா வாக்குகளும் கிடைக்கும். இதிலிருந்து உலக நன்மைக்காக பல நோய்களுக்கு மருந்துகள் வரும். நம்ம ஆபரேஷன் எப்படியோ , அதே மாதிரி எங்கெங்கு நோய் வருகிறது என்று அப்பவே சொல்லிவிட்டார். எது எடுத்தாலும் அதற்கான காரணம் இதிலிருந்தே வரும், ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இது ரொம்ப ஈஸி எனக்கு. அகத்தியர் அவர் கூட கஷ்டப்பட்டு சொல்ல வேண்டிய விஷயம். அவர் எல்லாருக்கும் எப்போது, எப்படி என்று சொல்லி நல்லதைக் காட்ட வேண்டும். ஆனாலும் இது எனக்கு செம்ம ஈஸி—ஈஸியா வந்ததெல்லாம் படிச்சிட்டு போயிருக்கலாம். அதனால் ரொம்ப சுலபம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் அருள் கிடைத்ததால்தான். உங்களுக்கு ஜீவநாடி பற்றி தெரிந்திருந்தால், நீங்களும் சித்தர்கள் அருள் பெற்றவர்கள்தான். சித்தர்கள் அருள் இல்லாமல் இங்கே வர முடியாது; அவரே சொல்கிறார். அதனால் அகத்தியர் உங்களை எல்லாம் பார்த்திருக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால் உங்களோட பிரச்சனை எனக்கு எளிதில் தெரியும். உங்களோட எண்ணங்கள் எல்லாமே நானே நிறைவேற்றித் தருவேன் என்று சொல்கின்றார். இன்னும் நீங்கள் பொறுத்திருந்தால், நான் பின்னும் வந்து எல்லாருக்கும் தனித்தனி வாக்குகள் உண்டு என்று சொல்கின்றார் அய்யா. ஏன்னா, இப்போது உலகம் ஒரு அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை நாங்க சரி செய்ய வேண்டியது இருக்கிறது. அதனால எல்லாருக்கும் அந்த வாய்ப்பு உண்டு. ‘உங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார்.
குருநாதர் :- அப்பப்பா அறிந்து பல திருத்தலங்கள் சுற்றிக் கொண்டே வந்திருக்கின்றேன். உங்களை பார்த்திருக்கின்றேன் அப்பா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்களை மீறித்தான் நீங்கள் திருத்தலத்திற்கே செல்ல வேண்டும். யாங்கள் வழிவிட்டால் மட்டுமே
குருநாதர் :- அப்பனே, அறிந்து புரிந்து இதனால் கஷ்டங்கள் விடுங்கள். அப்பனே, இவ் கஷ்டங்கள் மூலமாகவே தெளிவு பிறக்க, தெளிவு பிறந்திருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- “எல்லாரும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கஷ்டத்தில் தான் வந்திருக்கிறீர்கள். கஷ்டத்தை நம்பித்தான் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் தெரியுமா? அந்த கஷ்டத்தில்கூட நமக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. நம்ம இறைவன் இதற்காக ஒரு அருளைச் செய்திருக்கிறார். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதனால் கவலை எல்லாம் விடுங்கள்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- இப்ப எனக்கும் வாசிக்க கத்து தர இயலுமா? ( தனக்கும் ஜீவ நாடி படிக்க எப்படி என்று கற்றுக்கொடுங்கள் என்று கேட்டார்)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள் அங்கு )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, நான் இது எப்படிங்க ஐயா கத்துக்கொடுக்கிறது? ஏன்னா இது வந்து எனக்கே எப்படி வருது? ஐயா, இது கத்துக்கொடுக்கிறது இல்லைங்க ஐயா. இது எழுத்து வரும்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- இப்ப இதுல எழுத்து இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- (இப்போது வந்து நீங்கள் கற்றுக்கொடுக்கணும்னா, என்ன ஐயா? பதிகங்கள் பாடுங்க ஐயா. பதிகங்கள் எப்படி இருக்கிறதோ அதே மாதிரி இங்க எழுத்து வரும். இது எப்படி அய்யா நான் கற்றுக்கொடுக்க முடியும்? எனக்கே இது எப்படி படிக்கிறேன் என்று தெரியாது ஐயா. இதை கற்றுக்கொடுக்க முடியாது. ஏன்னா ஜோசியம் கற்றுக் கொடு என்றால் நான் கற்றுக் கொடுத்துடுவேன். வேற எதுவானாலும் கற்றுக் கொடுத்துடுவேன் ஐயா. இந்தப் பாடத்தை கற்றுக்கொள்ளுங்க ஐயா. இந்தப் பாடலைப் பாடுங்கன்னா நான் கற்றுக் கொடுத்துடுவேன். ஆனா இது ஜீவநாடி ஐயா. பல பேர் கேப்பாங்க—நான் எங்கே எப்படி அவங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது? இதில் இது எப்படி எழுத்துகள் வருதுன்னு எனக்கே இன்னும் புரியாம இருக்கிறது. )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஆனா இவர் படிக்கும்போது அந்தப் பிழை எல்லாம் திருத்திக்கிட்டே படிக்கிறாரு. அதுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இப்ப தானா சில நேரம் மானா வரும்போது பானான்னு திருத்திக்கொண்டு வாங்கிக்கிறாரு. அதுதான் நான் யோசிச்சேன். அதுதான் மீண்டும் மீண்டும் யோசிச்சேன். இதுல ஏதோ ஒரு அற்புதம் மாதிரி இருக்குது
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, டிவி சேனல்ல எப்படி படிக்கிறாங்க? ஏன்னா நியூஸ் போகுது—பாத்தீங்களா? சேனல்ல, டிவி சேனல்ல போயிட்டே இருக்கும். அதுபோலத்தான் இது போயிட்டே இருக்கும்.
அடியவர் 2 :- “இந்த வெள்ளை வசனம், காண்டம் பாக்குற மாதிரி ஏடுகள் வச்சிட்டு வருவாரான்னு” சொல்லி. இந்த ஜீவநாடி இலங்கைக்கு புதுசு. இலங்கை மக்களுக்கு தெரியாது. ஜீவநாடி அப்படின்னா கோடியில் ஒருத்தருக்கே கிடைக்க வேண்டிய ஒன்று. இவங்க பரம்பரை பரம்பரையா புண்ணியம் பண்ணி வந்ததால்தான் இந்த ஜீவநாடி ஒருத்தருக்கு கிடைக்கும். அந்த ஜீவநாடி கைக்கு கிடைக்கிறது—அது லேசான விஷயம் இல்ல. அதை எல்லாத்தையும் நினைச்சுப் பாருங்க. அது சாதாரண கோடியில் கிடைக்காது; கோடியில் கோடியில் ஒருத்தருக்கே கிடைக்கும்.
( இவ்வாக்கின் முடிவில் ஜீவநாடி பற்றி பல பலத்த உரையாடல்கள் அங்கு நடந்தது. அருமையான தருணங்கள் அவை)
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், 21.12.2025 அன்று ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, இலங்கையில் நடந்த சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!




ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete