தேதி: 19/12/2025, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
இடம்:- கதிர்காமம் கந்தன் திருக்கோவில், முருகன் தெய்வானை சன்னதி மண்டபம், இலங்கை.
ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். நல் விதமாகவே கடத்திச் செல்லும்.
முருகனுடைய ஆசீர்வாதங்கள் உயர்வு பெறச் செய்யும்.
நல் மாற்றங்கள் நிச்சயம் உண்டு. கவலை கொள்ளாதீர்கள், அறிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோருக்கும் நல்ல மாற்றங்கள் உண்டு உங்களுக்கு. நீங்க எதை பற்றியும் கவலைப்படாதீங்க. முருகனோட அனுக்கிரகங்களும், எங்களோட அனுக்கிரகங்கள் இருக்கும் பொழுது நல்லாவே, நீங்க வந்து மாற்றங்கள் தேடி வரும்.)
====================================
# குருநாதர் பல விஞ்ஞான வாக்குகள் செப்ப உள்ளார்கள் நமக்கு…
====================================
குருநாதர் :- எதை எப்படி சில குறிப்பிட்ட எதை என்று முன்னிறுத்த பல விஞ்ஞான பின் பூர்வமாகவே யான் வாக்குகள் செப்புவேன்.
அப்பொழுதுதான் மனிதனும் எதை என்று புரிந்து கொள்ள ஏதுவாகவே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் சொல்வது என்னவென்றால் — தான் கூறும் ஞானம் எல்லாமே விஞ்ஞான முறையில் தான் இருக்கும்; அப்படிச் சொன்னால்தான் கலியுகத்தில் உள்ள மனிதர்கள் அதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.)
குருநாதர் :- எதை எவை என்று அறிய பின் பாதி பின் கெட்டும் விட்டது. புவி தன்னில் அறிந்தும் நீர்!!... பின் ஊரை பின் நீராலே நிரப்பி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இலங்கை உலகத்தின் பாதி பகுதி - குமரிக்கண்டம் - அழிந்து விட்டது. இப்போது நாம் வாழும் உலகம், அந்த குமரிக்கண்டம் முழு உலகத்தின் 50% மட்டுமே. மீதமிருந்த மற்ற பாதி உலகம் முழுவதும் நீரில் மூழ்கி, அங்கே வாழ்ந்த மனிதர்கள் அனைத்தும் அழிந்துவிட்டார்கள். )
குருநாதர் :-
இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட இவை யார் செப்புவார்????
ஒன்றுமே தெரியவில்லை. மனிதனுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்கப்பா. மனிதனுக்கு இன்னும் ஒன்னும் புரியாமல் நிலைமையிலே இருக்கிறான்.
=====================================
# சித்தர்கள் சொல்லும் உண்மைகளை தெரிந்து கொண்டால் , வாழ்வில் ஏற்றங்கள்
=====================================
குருநாதர் :- அறிந்தும் இதனாலே அனைத்தும் புரிந்து கொண்டதோர் அறிவித்து நாள் முதலே, அப்பனே கவலை வேண்டாம்.
இன்னும் இன்னும் ஏற்றங்கள். அப்பனே உண்மை நிலையை புரிந்து கொண்டாலே ஏற்றங்கள். அப்பனே பொய்யை, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்து கொண்டாலே, அப்பனே தோல்வி.
இவ்வளவுதான் வாழ்க்கை!!!
முடிந்திற்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (உண்மையை அறிந்தவர்களுக்கே வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்; பொய்யை நம்புகிறவர்களுக்கு தோல்வி தவிர வேறில்லை.)
==================================
# எதை கேட்டாலும் தரும் சுரா கல்
=================================
குருநாதர் :- அப்பனே உண்மை ஞானம், அப்பனே எவ்வாறு செப்புதல் வேண்டும்?? என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்களுடைய அனுக்கிரகத்தாலும் ஆசிகளாகவும் யாங்கள் செப்புவோம்.
அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!!
"""அவ் “சுரா கல்”. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட !!......
அறிந்தும் கூட, அப்பனே அனைத்தும் பின் எதிரொளிக்கும் சக்தி.
அப்பனே, இதைத்தன், அப்பனே அவ் “சுரா கல்” அப்பனே, எதை கேட்டாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட தருமப்பா.
குருநாதர் :- அப்பனே, இவைத்தன், அப்பனே, அதாவது அங்கிருந்து, அப்பனே எதனால் என்பவை எல்லாம் ஒளிபட்டு கொண்டே இருக்கின்றது அப்பனே.
அங்கிருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அதன் நேரே, அப்பனே நிச்சயம் சூரியன் சரியாக இருக்கின்றான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!
=================================
# சூரிய தேவன் அந்த சுரா கல்லலின் நேர்கோட்டில் அமைந்துள்ளார்
==================================
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-
( “சுரா கல்” என்று அழைக்கப்படும் ஒரு பெரிய புனிதக் கல் பழங்காலத்தில் இருந்தது. ஆயிரம்–இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கல்லை மிகப் பெரிய ஞானிகள் வணங்கி வந்தார்கள்; அவர்களுக்கு உலகின் உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தது. பின்னர் காலப்போக்கில், அந்தக் கல் கடலில் மூழ்கி மறைந்து போய்விட்டது.
அந்தக் கல்லின் பாதி கடலில் மூழ்கி, இப்போது அதை கண்டுபிடிக்க முடியாத நிலை. “சுரா கல்” நேரே தான் சூரியன் சரியாக இருக்கின்றார். அந்தக் கல் எங்கு இருக்கிறது என்று சொல்வதற்காக, அது சூரியனின் ஒளிக்கீழ், ஒரு வட்டமான பாதையில் அதாவது, அது எங்கோ மறைந்து இருந்தாலும், ஒரு தெய்வீக ஒளி அல்லது சூரிய சக்தியுடன் தொடர்புடைய இடத்தில் இருக்கிறது. சூரிய ஒளி “சுரா கல்” மீது பட்டு கொண்டே இருக்கின்றது. )
==================================
# உங்கள் ஜாதகத்தில் சூரியனை நல் வழி படுத்துவது எப்படி ?
==================================
குருநாதர் :- எதைத்தன் அறிவிக்க, அப்பனே, இதைத்தான் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஜாதகத்தில், அப்பனே, சூரியன் (வலிமை) வலுப்பெற வேண்டும் என்பேன் அப்பனே. அதனால், அப்பனே, சூரியன் வலுப் பெற வேண்டும் என்றெல்லாம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் சூரியன் வலுப்பெற்றால்தான் அதன் சக்தி மனிதனை ஈர்த்து உயர்த்தும். அதனால் தான் ஜாதகத்தில் சூரியன் வழி பெற வேண்டும். சூரியன் சரியான நிலையில் இருந்தால், அதன் ஒளி, ஆற்றல், ஈர்ப்பு சக்தி மனிதனின் வாழ்க்கையை ஆதரித்து முன்னேற்றம் தரும். சூரியன் வழி பெற்றால் அதன் சக்தி மனிதனை ஈர்த்து செயல்படுத்தும்.)
==================================
# சிவபுராணம் ரகசியங்கள் - சிவபுராணம் ஓதினால் சூரிய, சந்திரர்களை உங்கள் ஜாதகத்தில் நல் வழி படுத்தும்.
==================================
குருநாதர் :- அப்பனே, இவை பின் ஞானங்கள் அறிய. அப்பனே, பலவற்றை கடந்து, அப்பனே, இவை தன் உணர்ந்து கொள்வதற்கும், அப்பனே, சமயங்கள்!!!...
இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவைக்கும், அப்பனே, சூரியனை இயக்குவதற்கும் சக்திகள். அப்பனே, பலமாக, அப்பனே, இருப்பதற்கும், அப்பனே, சந்திரன், அப்பனே, பலமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பைத்தியன் போல் திரிவான் என்பேன் அப்பனே.
இதனாலே, அப்பனே, இவை இரண்டும், அப்பனே, (சுரா கல் ) அக்கல்லை. அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதிரொளித்து, எதிரொளித்து, இதன் மேலே, அதன்பட்டு, அதன் மீது இவைப்பட்டு. (மாறி மாறி தொட்டு)
அப்பனே, பின், இவ்வாறு இருக்கின்ற பொழுது, இவை இரண்டு கிரகமும், அப்பனே, பின், சரியாக இருந்தாலே, ஒருவன் மனநிலை சரியாக இருக்கும் என்பேன் அப்பனே.
இவற்றைப் பின் இயக்க, அப்பனே, சிவபுராணம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட என்று தேவை ஒன்று தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.
இதை சரியாகவே, இதனால், அப்பனே, அனைத்தும், அப்பனே, வெல்ல இறைவன் சரியானவை எல்லாம் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.
ஆனால் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மக்கள், அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (சூரியனும் சந்திரனும் மனநிலைக்கும் வாழ்க்கை நிலைக்கும் முக்கியமான சக்திகளை வழங்குகின்றன. சூரியன் ஈர்ப்பு சக்தியையும், சந்திரன் மனத்திற்கான நிலைத்தன்மையும் தர வேண்டும்; இல்லையெனில் மனிதன் மன அமைதி இழந்து தவறான நிலைக்கு செல்வான். இந்த இரு கிரகங்களும் “சுரா கல்” மீதி எதிரொளித்து, ஒருவரின் உள்ளத்தில் சரியாக செயல்பட்டால்தான் மனநிலை சமநிலையாக இருக்கும். இந்த (சூரியனும் சந்திரனும்) இரண்டையும் இயக்குவதற்கான வழி சிவபுராணம். சிவபுராணத்தை தொடர்ந்து பாடினால் சூரியனும் சந்திரனும் சரியாக இயங்கி, மனிதனின் வாழ்க்கை ஒழுங்காகும் . இறைவன் அனைத்தையும் சரியாக அமைத்திருந்தாலும், மக்கள் அதை புரிந்து கொள்ளாமல் தவறிவிடுகிறார்கள் )
==================================
# சிவபுராணம் ரகசியங்கள் - சந்திரன் நிச்சயம் சரியாக செயல்படும்.
==================================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் மனத் தெளிவுகள் ஏற்படும் என்பேன். அப்பனே, அப்பனே, சந்திரன், அப்பனே, நிச்சயம் சரியாக செயல்படுவான் என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (சந்திரன் சரியாக செயல்பட்டால் மனதில் தெளிவு உருவாகும், மனஅமைதி நிலைபெறும்.. சந்திர கிரகம் நல்ல நிலையில் இருந்தால் மனிதனின் மனநிலை மென்மையாகவும் சமநிலையாகவும் இருக்கும்; ஆனால் சந்திரன் பாதிக்கப்பட்டால் மனக்குழப்பம், அலைச்சல், நிலைத்தன்மையின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதற்கான தீர்வாக, சிவபுராணம் தொடர்ந்து பாடினால் சந்திரன் வழி பெற்று வலிமை பெறுவார், அதன் மூலம் மனநிலையும் சீராகும்)
===============================
# சிவபுராணம் - ஜாதகத்தில் சூரிய சந்திரர்களை சமன் செய்யும்
===============================
குருநாதர் :- அப்பனே, அவ்வாறு எல்லாம் எதை என்று புரியும். அப்பனே, சூரியனுக்கும் இதேதான் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, இவைதன் கூட, அப்பனே, சரியாகவே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (சூரியனுக்கும் இதேதான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் மிக மிக அவசியமாக இருக்கிறது. சிவபுராணம்.)
=========================
# ஏன் கூட்டுப் பிரார்த்தனை அவசியம் அனைவருக்கும்? என்ற ரகசியம்
=========================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே. அப்பனே, இன்னும் ஞானங்கள், இவ்வாறாகவே ஞானங்கள். அப்பனே, பல கோடி,
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கிரகங்களுக்கும் கூட, அப்பனே, ஒவ்வொரு பாடலாக, அப்பனே, நிச்சயம் ஒருவனாக சொன்னால், அப்பனே, நிச்சயம் எத்தனை காலங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றது????????.
ஆயுள் காலம் முடிந்து விடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஞானங்கள் எண்ணிலடங்கா கோடிகளாக இருந்தாலும், அவற்றை ஒவ்வொருவரும் தனியாகப் பாடி அறிந்து கொள்ள முயன்றால், ஒரு ஆயுள் காலமே போதாது என்று உணர்த்துகிறார். சிவபுராணத்தை தனியாகப் படித்தால் வெற்றி கிடைக்கும் நேரம் வாழ்க்கையின் இறுதியில் தான் வரும், அப்போது கிடைத்த வெற்றிக்கு பயன் என்ன????
சாதிக்க வேண்டியது இளமையிலேயே சாதிக்க வேண்டும் என்பதே உண்மை. அதற்கான வழி கூட்டு பிரார்த்தனை—ஏனெனில் ஆயிரம் பேர் உள்ள கூட்டுப்பிரார்தனையில் ஒருவன் ஒரு முறை பாடினாலும், ஆயிரம் பேர் சேர்ந்து படுவதால் அவருக்கு அது ஆயிரம் மடங்கு பலனாகும்; தனியாக 1000 தடவை சொல்ல முடியாததை, கூட்டமாக ஒரு தடவை சொன்னாலே ஆயிரம் தடவை சொன்ன பலன் கிடைக்கும். மனம் சிதறாமல், காலம் வீணாகாமல், சக்தி சிதறாமல், எல்லாரும் சேர்ந்து ஒரே ஒலியில் சிவபுராணத்தை பாடும்போது, அந்த ஒற்றுமை சிவபுராண ஜபம் எண்ணற்ற பாராயணங்கள் பலனைத் தரும் என்று கூறியதன் சாரமே இதுவாகும்.)
=================================
# அனைத்தின் மூலம் - சுரா கல் - ரகசியங்களை சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள்
=================================
குருநாதர் :- அப்பனே, இதைத்தன் உணர. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பண்பு அப்பனே, (சுரா) கல்லில் தானப்பா உள்ளது என்பேன். அப்பனே,
அப்பனே, இப்படியும் வைத்துக்கொள்ளலாம். அப்பனே, இறைவனை, அப்பனே, ஏன் எதற்காக? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!
ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அனைத்து இடத்திலும் அப்பனே, பின், அதாவது, அப்பனே, எதை என்று புரிய புரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( “சுரா கல்” எனப்படும் அந்த புனிதக் கல்லில் ஒரு தனிப் பண்பும் தெய்வீக சக்தியும் உள்ளன; அதை உணர்ந்தாலே இறைவன் ஏன் அனைத்தையும் படைத்தான், ஏன் எல்லா இடத்திலும் ஒரே சக்தி பரவி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்தக் கல் எதை வேண்டியும் கொடுக்கக்கூடிய சக்தி கொண்டது; அதற்கருகில் தவம் செய்தால் தவத்தின் பலன் பல மடங்கு அதிகரித்து, மனிதன் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதிக்க முடியும். அதனால் தான் அந்தக் கல்லின் வடிவம் அல்லது சின்னம் பல இடங்களில் தெய்வீகப் பொருளாக , கல் சிலையாக உள்ளது; அது அந்த சக்தியை நினைவூட்டும் அடையாளம். இந்த ரகசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அவசியம். )
===========================
# உலகின் சக்தி மூலம் - “சுரா கல்” - அது உலகத்தையே ஈர்க்கும் சக்தி கொண்டது.
===========================
===============================
# “சுரா கல்“ ரகசியங்கள் - இறைவனுக்கு தீப ஒளி , அபிஷேகங்கள் , வாசனை திரவியங்கள் ஏன் சமர்ப்பிக்கின்றோம்???
==============================
குருநாதர் :- அப்பனே, இவற்றை விட நன்மைகளாக. இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அக் கல்லிற்கு (சுரா கல்), அப்பனே, சாதாரணமாகவே அனைத்து ஒளிகளும் கிடைக்குமப்பா.
அப்பனே, பின் நீரிலே ஒளிந்து உள்ளதப்பா. அப்பனே, அதனைச் சுற்றி. அப்பனே, பன்மடங்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நல்விதமாக அப்பனே, இயற்கை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பல வகையான அப்பனே, பூக்களும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாசனையான பல பல திரவியங்கள் கூட தானாகவே இருக்கின்றதப்பா.
இதனால் அப்பனே, அக் கல் அப்பனே, நிச்சயம் அதாவது, அப்பனே, பின் உலகத்தையே அப்பனே, பின் ஈர்க்கும் அப்பனே, ஒவ்வொரு மனதையும் கூட.
இதனாலே. அப்பனே, பின் இறைவனுக்கும் கூட இப்படியே செய்யச் செய்ய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்படியே ஆயிற்று என்றும் நீங்கள் ஏன் அப்பனே வைத்துக் கொள்ளலாம் அல்லவா?
(இறைவன் சிலைகளுக்கு பூக்கள் மலர் மாலைகள் சந்தனம் ஜவ்வாது வாசனை திரவியங்கள் ஏன் சமர்ப்பிக்கின்றோம் என்ற ரகசியம்)
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( குருநாதர் கூறுவது என்னவென்றால், சுரா கல் அது நீரில் மறைந்திருந்தாலும், அதைச் சுற்றி ஒளி, வாசனை மிக்க பூக்கள், இலைகள், திரவியங்கள் போன்றவை தானாகவே உருவாகி, அந்தக் கல்லின் ஆற்றலை பல மடங்கு உயர்த்துகின்றன. உலகத்தையே ஈர்க்கும் ஒரு விசேஷ சக்தியை உருவாக்குகின்றன; இதனால் தான் ஆலயங்களில் , பூசைகளில் இறைவனுக்கும் ஒளி, வாசனை, திரவியங்கள் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றது. இதை உணர்ந்தாலே, ஏன் இறைவனை இவ்வாறு வழிபடுகிறோம் என்பதும் தெளிவாகப் புரியும்.)
குருநாதர் :- அப்பப்பா, அறிந்தும் பெரிய பெரிய ஞானியர்கள் அதிலே இருந்து தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- (பெரிய பெரிய ஞானிகள் எல்லாம், யார் எங்கிருந்து வராங்க? அந்த சுரா கல் மூலம் தான் உருவாகி வராங்க. )
=================================
# “சுரா கல்” - தனது சக்திகளை, ஒளிகளை மேலும் கீழும் , வட்ட வடிவத்திலும் வரி வரியாக அனுப்பிக்கொண்டே இருக்கும்
=================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவைதன். அப்பனே, பின் எவ்வாறு எதை என்றறிய கீழுக்கும், அப்பனே, மேலுக்கும், அப்பனே, பின் ஒளி எப்பொழுதும் அப்பனே பின் வட்டமாகவும். அப்பனே, நிச்சயம் சுற்றிக்கொண்டே, சுற்றிக்கொண்டே. அப்பனே, வரி வரி ஆகவே !!! (வட்ட வடிவில் ஒளி சக்தி கதிர்கள்)
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (குருநாதர் கூறுவது என்னவென்றால், அந்த தெய்வீக சக்தியின் இயல்பு எப்போதும் மேலுக்கும் கீழுக்கும் அலைபோல் நகர்ந்து, வட்டமாகச் சுற்றி கொண்டே இருக்கும் ஒரு தொடர்ச்சியான ஒளி அலை போன்ற இயக்கம். அது நின்றுவிடாது; வரி வரியாக, அலை அலைபோல் பரவி கொண்டே இருக்கும். இந்த அலைகள் (waves) உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தாலும், அவர்களை முழுவதும் தொடும் வகையில் பரவும்.,
==============================
# கதிர் காமத்திலிருந்து மேல் நோக்கி பார்த்தால் - ஏன் அவ்வளவு திருத்தலங்கள் என்று புரியும்.
============================
குருநாதர் :- அப்பனே, ஏன் பின் அப்பனே இங்கு மட்டும்????
அப்பனே, அதாவது இங்கிருந்து மேல்நோக்கி பாருங்கள். அப்பனே, ஏன் அவ்வளவு திருத்தலங்கள் என்பது யாராவது உணர்ந்தீர்களா? என்ன
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (குருநாதர் கூறுவது என்னவென்றால், “ஏன் இந்த இடத்திலிருந்து மேல்நோக்கி சென்றால் மட்டுமே இத்தனை திருத்தலங்கள், கோயில்கள் அதிகமாக இருக்கின்றன?” என்பதைக் கவனிக்க வேண்டும். மேல்நோக்கி செல்லும் அந்தப் பகுதிகளில் பல திருத்தலங்கள் உருவாகியுள்ளன. இதை உணர்ந்து பார்க்கும்போது, ஏன் மேல்நோக்கி சென்றால் கோயில்கள் அதிகம் தோன்றுகின்றன என்பதின் ரகசியம் தெளிவாகிறது)
=================================
# ஏன் இலங்கையை அவசியம் அனைவரும் காக்க வேண்டும் ?
=================================
=========================
# “சுரா கல்” உலகின் இதயம். இலங்கை அதன் அருகில்.
=========================
================================
# உலகத்தின் இதயம் தென் இலங்கை - இலங்கையை நன்றாக வைக்க வேண்டியது மிக அவசியம். உலக வரைபடத்தில் தென் இலங்கை அதனை இதயமாக வைத்து வரைந்து பாருங்கள்.
==============================
குருநாதர் :- அப்பப்பா, அறிந்தும் எதை என்று அறிய. அப்பனே, அக்கல்லானது கீழே. அப்பனே, நிச்சயம் இதுதான் இதயமப்பா,
இங்கிருந்து இதயத்தை அப்படியே வரைந்தால், அப்பனே, பின் நிச்சயம்.
அதனால்தான் அப்பனே, முதலில் இதயத்தை நன்றாக வைக்க வேண்டும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஸ்ரீலங்காவை இதயத்தின் தொடக்கப் பகுதியாகக் காட்டி, அங்கிருந்து இந்தியா வரை ஒரு இதய வடிவம் உருவாகிறது . இந்த வரைபடத்தில் இதயம் செல்லும் பாதையில் ஒரு கோயில் அமைந்துள்ளது )
(ஸ்ரீலங்காவில் இருந்து இதயம் தொடங்கி மேலே இந்தியாவை நோக்கி விரிகிறது; அந்த இதயப்பகுதியின் வழியே இறைவனின் சக்தி அதிகமாக இறங்குகிறது.)
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஐயா. என்ன சொல்றாருன்னா, அந்த முக்கியமான அந்த மேப் போட்டு பாருங்க, ஐயா. அதாவது இறைத்தன்மை வெளிப்படுறது!
நம்மளுடைய தென்பகுதியில இருக்குங்க. தென்பகுதி கடல் கூட மூழ்கி இருக்கு.
கீழ வயிறு பகுதி முழுகிச்சு. எல்லாம் அதாவது நீங்க மாத்திரைக்கு ( அதாவது எல்லைக்கு ) போனீங்கன்னு சொன்னா, அங்க வந்து நம்மளோட பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் இருக்குது.
எத்தனை பேர் போயிருக்கீங்கன்னு தெரியாது.
அது இப்ப விஷ்ணு கோவில்ல தான் இருக்குது. தேவனூர் விஷ்ணு கோவில்னு சொல்லுவாங்க. தேவந்தர விஷ்ணு கோவில். அந்த தேவந்தர விஷ்ணு கோவிலுக்கு பணியே கடல் அப்படியே மூழ்கி இருக்குது. அந்த கடலுக்குள்ள தான் அந்த கல்லு இருக்கு. அந்த கல்லை நீங்க பார்த்தீங்கன்னா, ஹார்ட் ஷேப்ல வந்தீங்கன்னா, அப்படியே ஒரு ஹார்ட் மாதிரி போட்டீங்கன்னா, அது இந்தியாவோட அப்படியே இணைந்து விடும்.
கீழ இருந்து ஒரு இதய ஷேப் தான் போயிட்டு, அதுக்குள்ள தான் அவ்வளவு கோயில்களும் இறையாற்றல். அத்தனை கோயில்களும் அதுக்குள்ள அடக்குவாங்க. அது எங்க ஆரம்பிக்கும்னு சொன்னா, இலங்கையில தென் திசையில் இருந்து ஆரம்பிக்கும்னு சொன்னாரு.
இப்ப அகத்தியர் நாடியில் வரக்குள்ள சொன்னாரு, சூரிய ஒளி அங்க படும் அப்படின்னு சொன்னாரு. நான் அந்த ஐயா சொன்னதுனால சொல்றேன். எத்தனை பேர் போயிருக்கீங்கன்னு தெரியாது. தேவந்திர கோவிலுக்கு தேவந்திர கோவில்ல இருந்து மேல ஒரு சின்ன மலை ஒன்று இருக்கு. அந்த கோவில்ல இருந்து பார்க்க ஒரு மலை மாதிரி ஒரு பெரிய மலை, சின்ன மலை. அங்க ஒரு பழைய கோயில் ஒன்னு இருக்கு. அதை வந்து இதுக்கு எடுத்து ஒதுக்கி வச்சிருக்காங்க. இதுக்கு புறா வித்யாவுக்கு ஒதுக்கி வச்சிருக்காங்க. அந்த கோவிலுக்கு போயிட்டு பார்த்தா, இன்னொரு கோயில் ஒன்னு இருக்கும். என்ன கோயில்னு கேட்டா, அதான் சூரியனார் கோயில். அந்த சூரியனார் கோயில்ல தான் முதல் முதல் சூரிய ஒளி படுமாம். அப்ப அந்த காலத்துல ஜாதகம் பாக்குறவங்க எல்லாம் அங்க உட்கார்ந்து சூரியன் ஒளிபடுற நேரம் அந்த நேரத்தை குறிப்பாங்களாம். அப்படின்னு ஒரு கதை ஒன்னு இருக்குது. இன்னைக்கு இந்த ஐயாவுக்கு இந்த கதை தெரியாது.
ஆனா இன்னைக்கு ஜீவ நாடியில அவர் சொல்றாரு, சூரிய ஒளி பட்ட இடம் அப்படின்னு சொல்றாரு. புரிஞ்சுச்சா? ஐயா, புரிஞ்சுச்சா? எல்லாம் புரிஞ்சுச்சுங்களா? ஐயா, ஏன்னா இது ரகசியம். அது கோவில்ல சூரியனார் கோயில் தான் சொல்றது. தேவந்திரையில இருக்கு. முடிஞ்சா போயிட்டு வாங்க. )
=================================================================
இலங்கையில் உள்ள பஞ்சீஸ்வரங்கள் (Pancha Ishwarams) - ஐந்து ஈஸ்வரங்கள்:
1.நகுலேஸ்வரம் (Naguleswaram): யாழ்ப்பாணத்திற்கு அருகில் வடக்கில் அமைந்துள்ளது.
2.கேதீஸ்வரம் (Ketheeswaram): மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
3.கோணேஸ்வரம் (Koneswaram): திருகோணமலையில், சுவாமி மலை மீது அமைந்துள்ளது,
4.முன்னீஸ்வரம் (Munneswaram): சிலாபம் அருகே அமைந்துள்ளது.
5.தொண்டேஸ்வரம் (Tondeswaram): தெற்கில், மாத்தறையில் அமைந்துள்ளது.
=================================================================
===============================
# முதலில் இதய பகுதி கெட்டுவிட்டால், அனைத்தும் அழிந்துவிடும்.
===============================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இதனால் அப்பனே, முதலில் இவ் இதய பகுதி கெட்டுவிட்டால், அப்பனே, அனைத்தும் அழிந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (சித்தர்கள் ஏன் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில் அதிகமாக தோன்றினார்கள்?? என்றால், அந்தப் பகுதி உலகின் “இதயப்பகுதி” போல ஆன்மிகத் துடிப்பும் பக்தி சக்தியும் நிறைந்த இடம் என்பதால்தான். இறைவன் தங்கும் அந்த இதயத் தலத்தை பாதுகாப்பது மிக முக்கியம்; அது கெட்டுவிட்டால் மற்ற அனைத்தும் சிதைந்து விடும் .
===================================
# ஏன் அனைத்து சித்தர்களும் , ஞானியர்களும் இலங்கைக்கு வந்தனர்?
===================================
குருநாதர் :- அதனால் தானப்பா, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, அனைவரும் இங்கு வந்தோம் என்போம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- அதனால் தான் சித்தர்கள் தாமாகவே அறிந்தும் புரிந்தும் இதயப் பகுதியாகக் கருதப்படும் இந்த புனிதத் தலத்திற்கே வந்தார்கள் அந்த இதயத் தலத்தில் நல்ல எண்ணங்கள் புகுந்து வளர வேண்டும் என்பதற்காகவே சித்தர்கள் இங்கு வந்தார்கள்..
===================================
# உலகின் இதயம் கெட்டு விட்டால் - உலகம் அழிந்துவிடும்
===================================
குருநாதர் :- அப்பனே, பின் இதயம் அழிந்துவிட்டால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தானாக அழிந்துவிடும் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே ரகசியம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இதயப் பகுதி — அது கெட்டுவிட்டால், வெளிப்புற உலகில் எதுவும் நிலைக்காது. சித்தர்கள் ஏன் தமிழ்நாட்டைத் தேடி வந்தார்கள் என்ற ரகசியம் இதில்தான் இருக்கிறது: உலகின் ஆன்மிக இதயம் போலத் துடிக்கும் இந்த நிலத்தில் நல்ல எண்ணங்கள், நல்ல சக்தி, நல்ல வழி மனிதர்களுக்குள் ஊற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வந்தார்கள். இதயத் தலம் சிதைந்துவிட்டால் அனைத்தும் சிதைந்து விடும்; அதனால் இதயத்தைப் பாதுகாப்பதே முதன்மை)
================================
# இறைவனின் இதயத்தில் பல ஞானியர்கள் ஜீவ சமாதி அடைந்த ரகசியம்.
================================
குருநாதர் :- அப்பனே, இதை அறிவித்து இதனால்தான் அப்பனே அங்கங்கும் எதை என்று அறிய. அப்பனே, பல ஞானியர்கள் அப்பனே அக் கல்லை தொட்டு அப்பனே ஜீவ சமாதியும் அடைந்துள்ளார் என்பேன் அப்பனே. இன்னும் உயிரோட்டமாகவே இருக்கின்றார்கள். இதை யார் அறிவார்?
அப்பனே, பின் அவர்களும் நிச்சயம் தன்னில் கூட. அதாவது இறைவன் இதயத்திலே அப்பனே இருக்க வேண்டும் என்று எண்ணிதானே அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (பல ஞானிகள், தங்கள் ஆன்மிக உணர்வால், இறைவனின் “இதயப்பகுதி” எனக் கருதப்படும் இந்த புனிதத் தலத்தைத் தொட்டு, அதாவது “சுரா கல்” அதனை தொட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளனர். அவர்கள் இன்னும் உயிரோட்டமாய், தெய்வீக சக்தியாகவே நிலைத்து உள்ளார்கள். ஏன் இத்தனை ஜீவ சமாதிகள் இங்கு உள்ளன என்ற ரகசியம் இதுவே. இறைவனின் இதயத்திலே தாங்களும் நிலைத்திருக்க வேண்டும், இறைவன் எப்போதும் தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆழமான விருப்பத்தால் அவர்கள் இந்த நிலத்தில் சமாதி அடைந்தார்கள்.
குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் அப்பனே இறைவனைப் பற்றி அப்பனே தெரிந்து கொள்ளுதல் அவசியம். அப்பனே, எதனால் என்பவை எல்லாம் இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறைவனின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது தன் இதயத்திலே அப்பனே பின் அமர்ந்தே கொண்டே இருந்தால், அப்பனே எப்பொழுதும் உயிரோட தான் இருப்பார்கள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இறைவன் இதயத்திலே, ஜீவசமாதி அடைந்தால் - அந்த தெய்வீக உணர்வு எப்போதும் “உயிரோடு” — அதாவது ஆன்மிக விழிப்புடன் — வைத்திருக்கும். இதயத்தில் இறைவன் அமர்ந்திருக்க வேண்டும் என்று பல ஞானிகள் ஜீவ சமாதி அடைந்தார்கள் அவர்கள் இறைவனின் சன்னிதியில், இறைவனின் கல்லருகே தங்குவதன் மூலம் தெய்வீக உயிரோட்டத்தில் தொடர்கிறார்கள்.)
==================================
# “சுரா கல்லின் அருகே பூகம்பம் ஏற்பட்டால் - சுரா கல் அசையும். அதனால் உலகமே அசையும். பெரும் அனர்த்தம் உண்டாகும்.
==================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது அப்பனே, இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
அப்பனே, அதாவது அப்பனே மீண்டும் எது என்று புரிய அப்பனே. அதாவது அப்பனே விரிசல்கள் அப்பனே, பின் சுரா கல்லின் அப்பனே பக்கத்தில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
பின் இன்னும் அப்பனே, பின் அதி விரைவிலே அப்பனே பூகம்பங்கள் எழப்போகின்றது என்பேன் அப்பனே.
இவ்வாறு பூகம்பங்கள் எழுந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அப்பனே சுரா கல்லும். அப்பனே, அசைந்து விடுமப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது அப்பனே அங்கங்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் பூகம்பங்கள் அப்பனே, இன்னும் அப்பனே, பின் எது என்று அறிய. அப்பனே, பல வகையில் சேதாரங்கள் ஏற்படுமப்பா.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( சுரா கல் எனப்படும் புனிதக் கல்லின் அருகில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள், பூகம்பம் ஏற்பட்டால் அந்தக் கல் அசைந்து விடும்; அந்த அசைவு தொடங்கியவுடன் சுற்றியுள்ள அனைத்தும் அதிர்ந்து, பெரும் சேதங்கள், அழிவுகள் ஏற்படும்.)
=====================================
# ஏன் இலங்கை கதிர்காமம் - எவ் யுகத்திலும் அழியக்கூடாது?
=====================================
குருநாதர் :- அப்பனே, இவைத்தன் அப்பனே எவை என்று அறிய. அப்பனே, இதற்கு அப்பனே, பின் இங்கேதான் அப்பனே. இங்கு அழியக்கூடாது என்பேன் அப்பனே. இங்கு அழிந்தால் அனைத்திலும் அழிவுதான் என்று அப்பனே, பின் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (கதிர்காமம் ஒரு சாதாரண புனிதத் தலம் அல்ல — அதனால் எந்த யுகத்திலும் இந்தத் தலம் அழியக் கூடாது என்று குருநாதர் வலியுறுத்துகிறார். கதிர்காமத்தில் அழிவு ஏற்பட்டால், அதன் அதிர்வு உலகமெங்கும் பரவி, மனித குலமே அழிவை நோக்கிச் செல்லும் எனவே இலங்கை, கதிர்காமம் பாதுகாப்பாக, புனிதமாக, நிலைத்திருக்க வேண்டும்.)
=====================================
# ஏன் கதிர்காமதில் முருகப்பெருமான் வேலுடன் ?
=====================================
குருநாதர் :- அப்பா, அதனால்தான் முருகன் பாதுகாவலராக. அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால்தான் முருகப்பெருமான் இங்கு இருப்பது பாதுகாப்புக்காக தான்)
குருநாதர் :- பின் நிச்சயம் என்னையும், வேலையும் தாண்டி செல்லக்கூடாது என்று.
(நம் குருநாதர் ஜனவரி மாதம் 2025 ம் ஆண்டு கதிர்காமம் ஆலயத்தில் கூறிய வாக்கில்... வரும் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எந்திர தகடு மற்றும் வேல் வீசி எடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் செயல் தனை வாக்கில் ஏற்கனவே கூறியிருக்கின்றார்
சித்தன் அருள் 1787 இந்த வாக்குகளை மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது புரிந்து கொள்ளலாம். https://siththanarul.blogspot.com/2025/01/1787.html )
சுவடி ஓதும் மைந்தன் :- (முருகப்பெருமான் என்னையும், என் வேலையும் மீறி எதுவும் செல்லக்கூடாது என்று பாதுகாவலராக அருள்பாலிக்கின்றார். கதிர்காமம் இங்க அழிவு ஏற்பட்டது என்றால் அடுத்து என்ன ஆகும்? நிறைய அழிவுதான். அதனால, முதல்ல இங்க கீழ அழிவு ஏற்பட கூடாது).
குருநாதர் :- அப்பனே, இவைத்தன் அப்பனே, இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. அப்பனே, அறிந்து கூட இதனால, அப்பனே, இவைத்தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, தலைகீழாக நிற்கலாம் மனிதன் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, ஆனாலும் இதயம் எங்கே இருக்கும் அப்பா நீ கூறு?.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( மனிதன் எந்த நிலைப்பாட்டிலும் — தலைகீழாக நின்றாலும், சாய்ந்தாலும், திரும்பியும் — உடலின் அமைப்பில் இதயம் எப்போதும் ஒரே இடத்திலேயே இருக்கும். உடல் நிலை மாறினாலும், இதயத்தின் நிலை மாறாது; அது நிலைத்ததாகவே இருக்கும். இதன் மூலம், இதயம் என்பது இவ் உலகம் எப்படி இருந்தாலும், அந்த நிலை மாறாத சுரா கல் .)
============================
# குமரி கண்டம் - உலகின் வயிற்று பகுதி
============================
குருநாதர் :- அப்பப்பா, அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட, வயிற்றுப் பகுதி நீர். அப்பனே, அவ் வயிற்றில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அழுக்குகள் நிறைந்துவிட்டால், அப்பனே, என்ன ஆகும்?
தெரியுமா அப்பா? நீங்கள் யோசியுங்கள் சிறிது !!
=========================
# சுரா கல் வளர, வளர. சூரியனின் வெளிச்சமும் அதிகமாக இருக்கும்.
=========================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, அப்பனே, அப்பனே, சுரா கல் வளர, வளர. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சூரியனின் வெளிச்சமும் அதிகமாக இருக்குமப்பா.
=========================
# இலங்கையில் நீர் உள் புக மூல காரணம் - ரகசியங்கள்
=========================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, சூரியன் வெப்பம் அதிகமாகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இன்னும் ஊடுருவும் அப்பனே அதாவது, அறிந்தும் கூட.
அப்பனே சில நேரங்களில், அப்பனே, ஓரிடத்தில், அப்பனே, சூரியன் வெப்பம் அப்பனே, நிச்சயம், பின் கடலுக்கு அடியில், அப்பனே, சென்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தரையை தாக்குமப்பா.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இதனாலே பூகம்பங்கள் என்பேன்.
அப்பனே, இதனால், அப்பனே, அங்கு வெடிக்கின்ற பொழுது, அப்பனே, நீர், அப்பனே, அப்படியே எது என்று புரிய. அப்பனே, எவை என்று அறிய. அப்பனே, தத்தளிக்கும் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, ஊருக்குள்ளே சுனாமியாக நீர் புகுந்துவிடும் ) என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, பல பல ஆயிரக்கணக்கான, அப்பனே, இவ்வாறு தான், அப்பனே, அழிந்து கொண்டு, அழிந்து கொண்டு, இங்கு வந்துள்ளது என்பேன் அப்பனே!!
இப்பொழுது இந்ந நாள்வரை (2025 ஆம் ஆண்டு சமீபத்தில் கூட கடும் மழையால் பலத்த அழிவை சந்தித்தது).
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( சூரியன் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் கதிர்கள் கடலின் ஆழத்துக்குள் ஊடுருவி, அடித்தளத்தை தாக்கும் அளவுக்கு சக்தி பெறுகின்றன. அந்த தாக்கம் சில நேரங்களில் நிலத்தடியில் வெடிப்புகளை உருவாக்கி பூகம்பங்களை ஏற்படுத்தும். பூகம்பம் ஏற்பட்டால் கடல் தத்தளித்து, நீர் கரையோரப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கும். )
குருநாதர் :- அப்பனே, சூரியனின் ஆயுட்காலம் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, குறைவே வர வர.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( சூரியனின் ஆயுட்காலம் மெதுவாகக் குறைந்து வருவதால் அதன் தாக்கமும் மாற்றங்களும் பூமியில் அதிகமாக உணரப்படுகின்றன. )
=============================
# அழிவின் முதிர்ந்த நிலை - வெயில்
============================
குருநாதர் :- அப்பப்பா , இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, முதிர்ந்த நிலை. அப்ப, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, என்பதற்கு சான்று வெயில் தானப்பா.
குருநாதர் :- அப்பனே, எவை எதை என்று புரிய? அப்பனே, இதனால், அப்பனே, இவையெல்லாம் குறைக்க. அப்பனே, நிச்சயம் யாரால் முடியும் என்பேன்? அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் : - இதையெல்லாம் குறைக்க யாரால் முடியும்?
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- இறைவன்
குருநாதர் :- அப்பனே, இறைவன் என்ற சொல்லை அப்புறம், அப்புறம், அப்பனே, வைப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் : - இறைவன் என்ற சொல்லை அப்புறம் பிறகு பார்ப்போம். இப்ப சொல்லுங்க என்று சொல்கின்றார்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- மனிதனால்
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட. அப்பனே, அப்பனே, அவ் சுரா கல்லால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் : - (சுரா கல்லால் மட்டும்தான் முடியும். அழிவு தணிக்க/குறைக்க முடியும். )
=============================
# சுரா கல் = இறைவன்
=============================
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது எண்ணிக் கொள்ளலாம். அந்த சுரா கல் அப்பனே, இறைவன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் : - இப்ப நீங்க எண்ணிக் கொள்ளலாம். அந்த சுரா கல் அது கடவுளாகவும் இருக்கலாம், இல்ல?
=============================
# ஒரே ஒரு “சுரா கல்” தான் இவ் உலகில்
=============================
குருநாதர் :- அப்பனே, பின் சுரா கல் ஒன்றுதான் என்பேன் அப்பனே, பல வகை இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் : - சுரா கல் என்பது ஒன்னுதான், பல வகை இல்லை.
=============================
# ஒரே ஒரு “சுரா கல்” அதில் இருந்து தான் பலவகை தெய்வங்கள் உலகில் தோன்றின
=============================
குருநாதர் :- அப்பனே, அதை உடைத்தால் வேண்டுமென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதுபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( : “சுரா கல் ஒன்று மட்டுமே; அதிலிருந்தே அனைத்து தெய்வங்களும் தோன்றின” குருநாதர் கூறுவது, சுரா கல் பல வகை அல்ல — ஒரே ஒரு தெய்வீக மூலக்கல். அந்த ஒரே மூலத்திலிருந்து உடைந்து வெளிப்பட்ட சக்திகளே முருகன், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, இயேசு, புத்தர், நபி போன்ற பல தெய்வங்களாக வெளிப்பட்டன. அதாவது, உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் ஒரே பரம்பொருளின் பிரிவுகள், என்பதை சூட்சுமமாகச் சொல்கிறார். இந்தக் கருத்து “இறைவன் ஒருவன்; அவனிடமிருந்து பல வடிவங்கள். அதாவது ஏகன் அநேகன் என்ற தத்துவம்..)
==============================
# உண்மை நிலை தெரியாவிட்டால் உலகில் அழிவுகள் மதத்தினால் வரும்
==============================
குருநாதர் :- நிச்சயம் இவை தெரியாமல் இருந்தால் வரும் காலத்தில், பின் நிச்சயம், பின் மனிதன், மனிதனை என் இறைவன் பெரியவன், என் இறைவன் பெரியவன் என்றெல்லாம், நிச்சயம் அழிவுகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- (இதெல்லாம் உண்மை நிலை தெரியலைன்னா என்ன ஆகும் ? ஒரு காலத்துல என் இறைவன் பெரியவன்? என் இறைவன் பெரியவன் என்று சொல்லிட்டு மதச் சண்டைகள் அழிவுகள், சண்டைகள் தான் வரும்.)
குருநாதர் :- ஏனென்றால், பின் ஏன் எதற்கு இறைவன் யார் என்றே தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- (முதல்ல இறைவன் யார் என்றே தெரியாது. அப்ப இதெல்லாம் புரிஞ்சுக்கோங்க என்று சொல்கின்றார்.).
==============================
# ஏன் தேரையர் சித்தர் - ராமேஸ்வரத்தில் கடலில் சிவபுராணம் ஓதி , கடலில் தீபம் இட்டு பால் கடலில் ஊற்றி, இலங்கை நன்றாக இருக்க வழிபாடு செய்யச் சொன்னார் ? - ரகசியம்.
https://siththanarul.blogspot.com/2025/12/2041-8.html
சித்தன் அருள் - 2041 - அன்புடன் அகத்தியர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8!
==============================
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அதாவது அவ் சுரா கல்லுக்கு எவை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் அச் சுரா கல்லிற்கு பின் தேரையனும் அழகாக எவை என்று புரிய. பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட மனசாந்தி எது என்று அறிய. நிச்சயம் பின் அறிந்தும் எவை என்று புரியாமல் இருந்தாலும், அப்பனே நல் விதமாகவே. அப்பனே அறிந்தும் கூட.
(ராமேஸ்வரத்தில் வழிபாடு செய்ய தேரையர் சித்தர் வாக்கில் சொன்னதற்கு காரணம் சுரா கல்லுக்கு சாந்தியை ஏற்படுத்துவதற்கு)
குருநாதர் :- இதனால், அப்பனே பல வகையிலும், திருத்தலங்களுக்கு கூட அபிஷேகங்கள் ஆராதனை செய்கின்றீர்கள் அல்லவா?
அதனால், அப்பனே நிச்சயம் பின், அதாவது சுரா கல்லிற்கு உள்நுழைந்து, அப்பனே அபிஷேகங்கள், அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்ய முடியாதப்பா. இதனால், அப்பனே அதன் ஒளி. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே நல் விதமாகவே கடல் பின் நீரிலே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட செய்தாலே, பின் அப்பனே ஒளி அதிவேகமாக செல்லுமப்பா.
குருநாதர் :- இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் அடிக்கடி அமாவாசை தினம், அப்பனே பௌர்ணமி தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கடலில் நீராடி, அப்பனே வேண்டுதலை, அப்பனே வைத்தால், உடனடியாக, அப்பனே சிறிது காலத்திலே நிறைவேறிவிடும் என்பேன் அப்பனே, பின் அறிந்தும் கூட. அப்பனே, பழைய வழக்கு.
(பண்டைய காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது)
சுவடி ஓதும் மைந்தன்:- ( ஏன் அமாவாசையிலும் பௌர்ணமியில் நன்கு கடலில் குளித்து , நம்ம வேண்டுதலை வைத்தோம் என்றால் , அது நேரடியாக விரைவில் சீக்கிரம் அந்த சுரா கல்லுக்கு போய் சேர்ந்துவிடும். கொஞ்ச நேரத்திலேயே, குறுகிய காலத்திலேயே நமது வேண்டுதல் பலிக்கும் என்பது பழைய வழக்கு.)
=================================
# உடம்பில் உள்ள சில தரித்திரம் , வியாதிகள் நீங்க - கடலில் குளிக்க வேண்டும்.
=================================
குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, உடம்பில் உள்ள வலிகள், அப்பனே, பின் அதிவேகமாக ஈர்த்துக் கொள்ளுமப்பா அவ் சுரா கல்.
சுவடி ஓதும் மைந்தன்:- (நமது உடம்பில் உள்ள வியாதிகள், சில நோய்கள், சில இதெல்லாம் தரித்திரம் எல்லாம் இருக்குது. பார்த்தீங்களா? அது என்ன ஆகும்? உடனேயே அந்த சுரா கல் நீக்கிவிடும். )
================================
# கடலில் குளித்தால் - அதர்வண வேதம் , மாயா வித்தைகள், செய் வினைகள் தவிடு பொடியாகும். செய் வினை ஏவி விட்ட நபரை சென்று தாக்கும். அவசியம் அடியவர்கள் கடலில் குளிக்கவும். இதுவே முதலில் செய்ய வேண்டும் அனைவரும்.
================================
குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, மாய வித்தைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இக்கலியுகத்தில் மனிதன் செய்து கொண்டே இருக்கின்றான் அப்பனே. இதனால் (கடலில்) குளித்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவையும் கூட, அவை ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அப்பனே.
அக்கல்லானதுக்கு அவ்வளவு சிறப்பு.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் எவன் செய்தானோ, அவனுக்கு மீண்டும் அது கொடுக்கும் என்பேன் அப்பனே. இதனால், அவனே, பின் நிச்சயம் அனுபவிப்பான் என்பேன் அப்பனே.
=============================
(யார் மாந்திரீகம் தீய செயல்கள் நெகட்டிவ் எதிர்மறை வினைகளை செய்கின்றார்களோ அவர்களுக்கு திருப்பி தாக்கும்... அதனால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கடலில் குளிக்க வேண்டும்)
=============================
சுவடி ஓதும் மைந்தன்:- ( கடலில் குளிப்பது ஒரு சாதாரண சடங்கு அல்ல — அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் கடலில் குளித்து மனதைத் தூய்மைப்படுத்தினால், நம் மீது இருந்த சில பாதிப்புகள் அந்த தெய்வீகக் கல்லின் சக்தியால் திருப்பி விடப்படும் . பாவமானாலும் சரி புண்ணியம் ஆனாலும் சரி அப்படியே அந்த கல் எதிரொலிக்கும்.
நல்ல எண்ணங்களுடன் குளித்தால், அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு அந்த சுரா கல்லைத் தாக்கி, நமக்கான நன்மை வந்து சேரும்... தீமை எண்ணங்களுடன் குளித்தால் தீமையும் திரும்ப நமக்கே வந்து சேரும் . )
=====================================
# சுரா கல் - அசையும் திசையில் அழிவுகள் உண்டாகும்
=====================================
குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அறிந்தும் புரிந்தும், இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அவை தன் வருடத்திற்கு ஒருமுறை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே. அப்பனே, அவ் திசையில், அப்பனே, சிறிது சிறிதாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மாற்றங்கள் அடைந்து. அப்பனே, பின் அசைந்தால், அப்பனே, அங்கு அழிவுகள் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- (ஆண்டுக்கு ஒரு முறை இயற்கையில் நிகழும் நுண்ணிய மாற்றங்கள் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று குருநாதர் விளக்குகிறார். ஒரு புனிதக் கல் , அந்த சுரா கல் டிகிரி கணக்கில் மிகச் சிறிய இன்ச் அளவுக்கு கூட அசைந்தால், அந்த அசைவு எந்த திசையில் நடந்ததோ, அந்த திசையில் அழிவின் தாக்கமும் நேரடியாகப் பரவும். எந்த பக்கம் உயர்த்தப்பட வேண்டும், எந்த பக்கம் தாழ்த்தப்பட வேண்டும் என்பதையும் யாரும் முன்கூட்டியே அறிய முடியாது; சிறிய மாற்றமே பெரிய அழிவை உருவாக்கும் .)
===============================
# சுரா கல் ரகசியம் இவ்வுலகில் விஞ்ஞானிக்கும் தெரியாது
================================
குருநாதர் :- அப்பனே, பின் விஞ்ஞானிக்கும் தெரியாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. விஞ்ஞானிக்கும் தெரியாது.
குருநாதர் :- அப்பனே, இப்படி இருக்க. அப்பனே, மனிதனால் உலகத்தை காப்பாற்ற முடியுமா? என்ன?
அப்பனே, தன்னைத் தானே காப்பாற்ற முடியாதப்பா. முதலில்,
சுவடி ஓதும் மைந்தன்:- இப்படி இருக்க, மனிதனுக்கே ஒன்னும் தெரியல. தன்னையே காப்பாற்ற தெரியாத மனிதனுக்கு, உலகத்தை எப்படி காக்க தெரியும்? முடியாது.
குருநாதர் :- அப்பனே, படைத்தவன் யாரோ, பின் அவனே காக்க முடியும். சொல்லிவிட்டேன்.
=============================
# சுரா கல் - அதுவே தேவலோகம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
=============================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும், அப்பனே, அக் கல்லை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எடுத்துக்காட்டாக சொல்கின்றேன் இங்கு. அப்பனே, தேவலோகம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த சுரா கல்லை தேவலோகம் என்று நீங்க வைத்துக்கொள்ளலாம்.
குருநாதர் :- அப்பனே, (சுரா கல்) அங்கிருந்து தான் அனுப்பப்படுகின்றார்கள். அப்பனே, உலகத்தை காக்க.
அப்பனே, யார் யார்? அப்பனே, தகுதி உள்ளவர்கள் என்று
சுவடி ஓதும் மைந்தன்:- (சுரா கல், அங்கிருந்தே உலகத்தை காக்கத் தகுதியானவர்கள் அனுப்பப்படுகிறார்கள் அந்தக் கல் தேவலோகமாக வைத்துக் கொள்ளலாம்; அங்கிருந்து வெளிப்படும் சக்திகளே மனிதர்களையும் உலகத்தையும் பாதுகாக்கின்றன. முழுவதும், சுரா கல் ஒரு தேவலோகம்)
===============================
# சுரா கல் - இவ் உலகில் உள்ள அனைவருக்கும் தாயகம்
===============================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாகத்தான் எது என்று புரிய. அப்பனே, எங்கிருந்து அப்பனே வந்தவையோ? அப்பனே, நிச்சயம். அப்பனே, அதாவது, அப்பனே, ஒரே இல்லத்தில், பின் ஒரே இல்லத்திலிருந்து வந்தால், அப்பனே, இதற்கு பெயர் என்ன?
சுவடி ஓதும் மைந்தன்:- (அது சுரா கல் என்பது ஒரு வீடு. அந்த ஒரே வீட்ல இருந்து யார் வருவாங்க? ஒரு வீட்ல யார் இருப்பாங்க? அப்பா இருப்பாங்க, அம்மா இருப்பாங்க, பிள்ளைங்க இருப்பாங்க. அப்ப நாம் எல்லாம் யாரு? எல்லாமே ஒன்னுதான்.)
குருநாதர் :- அப்பனே, ஒன்றிலிருந்து அப்பனே பிரித்தெடுக்கப்படுகின்றது. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
ஆனாலும் இன்னும், அப்பனே, அப்பனே, புரியாத நிலையில் இருந்தாலும், அப்பனே, புரிய வைப்போம் சித்தர்கள் யாங்கள் அப்பனே.
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய? அப்பனே, இதனால், அப்பனே, ஒரொரு முறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கிரகங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சம அளவு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, பல அளவு, பல அளவு. அப்பனே, மிகுந்து. அப்பனே, நிச்சயம் வேகத்தை, அதாவது, அப்பனே, பின் சூடானதை, அப்பனே, காட்டுகின்ற பொழுது, அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
எங்கு எதை என்று அறிய, அப்பனே, அவ்வாறாக, அப்பனே, பின் அறிந்தும், இதன் தன்மையை, அப்பனே, பின் அவ் தன்னில் கல்லில் விழுந்து, அப்பனே, பின் அதைத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, சரியாகவே. அப்பனே, ஒரு வேகத்தோடு வந்து, அப்பனே, கடைசியில் நிற்கும் என்பேன் அப்பனே. அங்குதான் அழிவு என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- (கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே சமநிலைக்கு வரும் போது, அவற்றின் வேகம், சூடு, ஒளி ஆகியவை சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை உருவாக்கும் என்று குருநாதர் விளக்குகிறார். அந்த தாக்கம் சுரா கல்லைத் தாக்கி, அதிலிருந்து மீண்டும் பிரதிபலித்து ஒரு திசையில் மிகுந்த வேகத்துடன் செல்கிறது. அந்த பிரதிபலிப்பு எந்த திசையில் விழுகிறதோ, அங்கே அழிவு நிகழும். கிரகங்களின் சக்தியும் கல்லைத் தாக்கி திரும்பி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும்)
====================================
# ஏன் சித்தர்கள் பல இடங்களில் திருத்தலங்களை அமைத்தார்கள்?
====================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதை பிடிக்க வேண்டும் என்பேன். அப்பனே, அதனால்தான், அப்பனே, இத்தனை அப்பனே, பின் நிச்சயம் யாங்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம்.
குருநாதர் :- அப்பனே, அதை எவ்வாறு பிடிக்க???? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
குருநாதர் :- அப்பனே, யாங்கள் அமைத்தோம் திருத்தலங்களை அப்பனே. இங்கு இங்குதான். அப்பனே, பட்டு பட்டு இவ்வாறாக. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதிவேகமாக. நிச்சயம் தன்னில் கூட, பின் அவ் எவை என்று கூட வெப்பமானது அப்பனே, நிச்சயம் வரும் என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, ஆங்காங்கு, பின் அவை தன் தடுக்கவே. அப்பனே, பின் திருத்தலங்களை உருவாக்கினோம்.
(இப்போது சித்தர்கள் யாங்கள் அமைத்த திருத்தலங்கள்)
அதையும் மீறி, அப்பனே, சற்று!!!! என்ன செய்வது அப்பனே?
(சக்தி வாய்ந்த திருத்தலங்களை நிறுவி அழிவுகளை தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள் அதையும் மீறி சிறிதளவு அழிவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது)
சுவடி ஓதும் மைந்தன்:- ( கிரகங்களில் இருந்து வரும் ஒளி , சுரா கல்லின் மீது பட்டு எதிரொலித்து அழிவுகளை ஏற்படுத்தாமல் இருக்க சித்தர்கள் உருவாக்கியுள்ளார்கள் திருத்தலங்கள். ஆனால் இப்போது அதையும் மீறி சூழ்நிலை உருவாகியுள்ளது. என்ன செய்ய என்று கேட்கிறார் அய்யா. )
===========================
# எல்லை மீறிச் செல்லும் அழிவுகள்
===========================
குருநாதர் :- அப்பனே, ஆனால் அழிவு வருகின்றதே என்ன சொல்ல யான்?????
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனா, அப்பனே, அழிவு வருகின்றதே அதையும் தாண்டி.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அதற்காக. அப்பனே, பின் மனிதர்கள். அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் மனது, அப்பனே, சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- அதனால், அப்பனே, இறைவனுக்கு கோபம் வரக்கூடாது என்பேன் அப்பனே எப்பொழுதும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், மனிதன் மீது இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால், அதை அப்படியே விட்டு விடுவான் என்பேன் அப்பனே. தொலையட்டும் அப்பனே என்று.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( மனிதன் கடவுளிடம் வேண்டுவது மட்டுமல்ல, கடவுளுக்குத் தகுந்த மனநிலையிலும் அன்பிலும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அன்பும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தால், கடவுள் நமக்காக இரங்கி செய்வார்”. அதனால் நாம் உண்மையான அன்பும் நம்பிக்கையும் கொண்டு தொழுந்தால், “பரவாயில்லை, நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கடவுள் நம்மை காப்பாற்றுவார். இல்லையெனில், அவர் அதை விட்டுவிடுவார். )
குருநாதர் :- அப்பனே, இதனால் எதை என்று புரிய அப்பனே, இறைவன் அப்பனே படைத்தவன். இதனால், பின் இறைவனுக்கு, பின் நிச்சயம் காக்கவும் தெரியும். அழிக்கவும் தெரியும் என்பேன் அப்பனே.
ஏனென்றால் இறைவன் அப்பனே மிகப் பெரியவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும், அப்பனே, இறைவனை மீறி, அப்பனே, பின் மனிதன் அப்பனே, நிச்சயம் தர்மத்தை தலைக் கீழாக்கிக் கொண்டே, சென்று கொண்டே இருக்கின்ற பொழுது, இறைவன் என்ன செய்வானப்பா????.
குருநாதர் :- அப்பனே, நீங்களும் சொல்லலாம். அப்பனே, அப்பனே, எளியோர்கள். அப்பனே, நிச்சயம். அப்பனே, என்றெல்லாம். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்களும் சொல்லலாம். யாரோ செய்யற தப்புக்கு, யாரோ அனுபவிக்கிறாங்கப்பான்றாங்க என்று நீங்க சொல்லலாம், கேட்கலாம்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, பின் கொடுத்தது. அப்பனே, உடம்பையும் உயிரையும் இறைவன் என்பேன். அப்பனே,
ஏனென்றால் பயம். அப்பனே, அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லாத்துக்கும் யார் உடம்பும் உயிரும் கொடுத்தது யாரு? கடவுள்.
யாரை எடுக்கணும்? யாரை விட்டு வைக்கணும் என்று இறைவனே முடிவு பண்ணுவார். )
குருநாதர் :- அப்பனே, அழிவுகள் இல்லாமல் இருந்தால், அழிவுகள் இல்லாமல் இருந்தால், அப்பனே, நிச்சயம். அப்பனே, மனிதன் என்னென்னவோ செய்து விடுவான் என்பேன். அப்பனே, மனிதன் தான் இறைவன் என்று. அப்பனே, நிச்சயம் சொல்லி, அப்பனே, அனைத்தும் அழித்து விடுவானப்பா,
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஐயா, புரியுதுங்களா? அழிவு என்ற இயற்கைத் தண்டனை அல்லது கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், மனிதன் எல்லை மீறி நடந்து கொள்வான் என்பதே. மனிதனுக்கு எந்தத் தடையும் இல்லையெனில், “நான் தான் கடவுள், என் சட்டமே சட்டம்” என்று அகங்காரத்தில் மூழ்கி, தன் விருப்பப்படி உலகையே அழித்து விடும் நிலைக்கு சென்று விடுவான் என்று குருநாதர் எச்சரிக்கிறார். அழிவு இல்லையெனில் மனிதன் கட்டுப்பாடின்றி செயல்பட்டு அனைத்தையும் சீரழித்து விடுவான்.)
குருநாதர் :- அப்பனே, இவை தன் அப்பனே பல ஊர்களில் நடந்தது. அவையெல்லாம் கடலுக்கு அடியில்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மனிதன் எல்லை மீறி நடந்து கொண்ட காலங்களில், உலகில் பல அழிவுகள் நிகழ்ந்தன; அவை அனைத்தும் மனிதனின் செயல்களின் விளைவாகவே வந்தவை. இதனால் இறைவன் “இது போதும், மனிதன் இவ்வாறு தொடர வேண்டாம்” என்று தீர்மானித்து, கடலில் பெரும் அழிவை ஏற்படுத்தி மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழித்தார். ஆனால் முழுவதையும் அழிக்காமல், இன்னும் பாதியை விட்டுவைத்தார் — மனிதன் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக. இந்த பகுதி, அழிவு என்பது தண்டனை மட்டுமல்ல, மனிதனுக்கு விழிப்புணர்வு தருவதற்காக இறைவன் இந்த தண்டனையை ஏற்படுத்தி உள்ளார்)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் கலியுகம், அழியுகம் என்பேன். அப்பனே, இதனால், அப்பனே, உடனடியாக அழியாதப்பா. சிறிது சிறிதாகவே !!
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( கலியுகம் என்பது திடீர் என்று அழியாது. மெதுவாக, படிப்படியாக நடைபெறும் அழிவு என்று குருநாதர் சொல்கின்றார். கலியுகம் தொடங்கிய தருணத்திலிருந்தே உலகில் அழிவு நிகழ்ந்து கொண்டே வந்தது, ஆனால் மனிதனுக்கு அது தெரியவில்லை; இப்போது தான் அதன் விளைவுகள் தெளிவாகப் புரிகின்றன. உலகின் ஒரு பகுதி ஏற்கனவே அழிந்துவிட்டது, இன்னும் பாதி மட்டும் தான் நிலைத்து நிற்கிறது.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அப்ப பாதியை காக்க. அப்பனே, ஓடோடி. அப்பனே, இன்னும் ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே,
இறைவனை. அப்பனே, நிச்சயம் காணலாம் என்பேன். அப்பனே, அப்பனே,
நல்முறையாக இன்னும் விவரமானதெல்லாம் விவரிக்கின்றேன். அப்பனே, பின் அப்பனே, மற்றவர்களுக்காக பாடுங்கள். புராணத்தை.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (குருநாதர் இன்னும் பல ரகசியங்களை சொல்லப் போவதாகவும், அதற்கான தகுதி மனதில் அன்பும் பிறருக்காக வேண்டும் மனப்பான்மையும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். சிவபுராணத்தைப் பாடி, பிறருக்காக நல்வாழ்வு வேண்டி, மகிழ்ச்சியுடன் பக்தி செய்யும்போது, மேலும் ஆழமான ரகசியங்கள் வெளிப்படும் என்கிறார். “
அவை வாழ்க்கையை எளிதாக வெற்றியடைய உதவும் ரகசியங்கள் என்று விளக்குகிறார். சித்தர்கள் இந்த ரகசியங்களைப் பகிர்ந்து, பிறருக்காக பாடி வேண்டும்போது, அவர்களின் வினைகளும் குறையும், நன்மையும் பெருகும் .)
( கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், 19.12.2025 அன்று நடந்த இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்…. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment