​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 1 December 2025

சித்தன் அருள் - 2026 - அன்புடன் அகத்தியர் - தேவனூர் வாக்கு!




சமீபத்தில் காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்:

அருள் தரும் கமலேஸ்வரி உடனுறை அருள்மிகு திருநாதீஸ்வரர் ஆலயம்.  தேவனூர். மேல்மலையனூர் விழுப்புரம். 

நமச்சிவாயனை மனதில் எண்ணி பரப்புகின்றேன் வாக்குகளை புசண்டனவன்!!!!


எதை?  என்று இன்னும் மனிதர்களுக்கு.. இன்னும் ஞானத்தை ஈசன் வழங்கிக் கொண்டே வருவான். 

ஏனென்றால் இக் கர்மா பூமியில் நிச்சயம்... பின் மனிதன் இறைவன் இல்லை என்று தான் சொல்லுவான். 

ஆனாலும் நிச்சயம் ஈசனே பல பல வடிவங்களில் உருவெடுப்பான். 

அதனால் பல பல முறைகள் ஏது? என்று கூற இன்னும் சிறப்புகள் தான் உண்டு என்பேன். 

அதனால்தான் நிச்சயம் ஈசனே நிச்சயமாய் தன் பக்தர்களை நிச்சயம் சில சோதனைகளுக்கு உட்படுத்தினாலும்.. தன்னை நிச்சயமாய் எதை என்று உணராமல் இருப்பவர்களையும் கூட... ஈசன் வரும் வரும் காலங்களில் நிச்சயமாய்.. ஒரு பலமான அடிகள் கொடுத்து நிச்சயமாய் மனதை மாற்றி என்னென்னவோ செய்யப் போகின்றான் என்பது உறுதி!!!

உறுதியாக சொல்லிவிட்டேன்!!!

ஏனென்றால் மனிதனின் புத்திகள் எதை எதையோ என்று நினைத்து... பின் இறைவன் இருக்கின்றானா???? இல்லையா???? என்ற சந்தேகங்களும் வந்துவிட்டது!!

ஏனென்றால் மனிதன் பொய்யைச் சொல்லிச் சொல்லி காசுகளுக்காகவே... அனைத்தும் பிழைப்பு நடத்திவிட்டான். 

இதனால் ஈசனே இறங்கி.. நல் முறையாகவே பின் இன்னும் மக்களுக்கு சேவை செய்யப் போகின்றான்!!

இதுதான் உண்மை!!!!

திருந்தினால் திருந்திக் கொள்ளுங்கள்!! மனிதா!!!

கடைசியாக ஈசனே எச்சரிக்கின்றான்!!!


அதனால் நிச்சயம் ஈசனே இப்பணியில் குதிக்கப் போகின்றான் என்பது உண்மை!!!

அதனால் நிச்சயம் பொய்யான மனிதர்களை நிச்சயம் ஈசனே அழித்துவிடுவான் சொல்லிவிட்டேன். 

அதனால் சித்தர்களின் பெயரைச் சொல்லியோ இன்னும் எதை என்று கூற... ஏமாற்றி விடாதீர்கள் என்பதை கூட!!!.... இன்னும் ஏராளமான வாக்குகளையும் நிச்சயம் யான் உரைத்துக் கொண்டே வருவேன். 

ஏனென்றால் இவ் ஈசன் சக்தி வாய்ந்தவன்.(திரு நாதீஸ்வரன்) 

ஏனென்றால் பின் இவ் ஆலயத்திற்கு வந்து வந்து பல பல அரசர்களும் அவை மட்டும் இல்லாமல் யானும் இங்கு வந்தேன். 

யானும் இங்கு வந்தேன் என்று கூட...(திருமூலர்) மூலனும் இங்கு வந்தான்... அகத்தியனும் வந்து இங்கு வழிபட்டு சென்று விட்டான்!!

பின் சப்த ரிஷிகளும் வந்து வழிபட்டு சென்று விட்டனர். 

ஆனாலும் இதனையும் எதனை என்று நோக்க??....
ஆனாலும் எவை என்று நிச்சயம் கூறுவது என்னவென்றால்....

ஏன் இங்கு வந்து வழிபட்டார்கள்??? என்றால்!!!......

நிச்சயம் பின் இதனை ஆண்ட சில சில தரித்திர மனிதர்களோ..இவை தன்  அழிக்க... திருத்தலத்தை அழிக்க முயன்றார்கள்!!!

ஆனாலும் நிச்சயம் இதை யாங்கள் உணர்ந்து கொண்டோம்.. சிறிது காலம் இங்கு தங்கி வந்தோம்... என்பதற்கிணங்க..யாங்கள் எங்கு... வருகின்றோமோ!?.... அங்கு சக்திகள் மிகுந்து காணப்பட்டுவிடும்.


இதனால் நிச்சயம் எதை என்று ஆனாலும்... ஈசனே!!!... இங்கு தங்கி... இன்னும் கூட இரவில் கூட இங்கு... ஈசன் நிச்சயம் தங்கி தான் வந்து கொண்டிருக்கின்றான். 

இதை பல வடிவங்களில் யார் உணர்வது?????

அதனால் ஈசனை எப் பிறப்பு? எடுத்தாலும் எத்தனை பிறவிகள்? எடுத்தாலும் நிச்சயம் ஈசனை.. உணர முடியாது என்பேன். 

இதனால் நல்விதமாகவே... ஈசனையே நினைத்து!! நினைத்து !!

ஈசா!!!!..... அனைத்திற்கும்  காரணம் என்று.. எவன் ஒருவன்? நினைக்கின்றானோ!!!... அவந்தனுக்கு மட்டும்தான் அவ் ஒலி ஓசை!!!!... நிச்சயம் அமாவாசை தன்னில்  கூட ஒலிக்கும்  என்பது நிச்சயம்!!!

(சலங்கை ஒலி)

இங்கு நிச்சயம் எதை என்று கூற!!!... இவ் அம்பாள்!!!!.(கமலேஸ்வரி)... நிச்சயம் சலங்கை சத்தத்துடனே... அமாவாசை பௌர்ணமி தினங்களில் இங்கே வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றாள்! இங்கெல்லாம்!!!


ஏனென்றால் நிச்சயம் அரசன்... அங்கே சொன்னேனே!!! எதை.. என்று உணராமலே...அவ் அரசனும் இவ் அம்மைக்கு. இவ் அம்மையிடம் முறையிட்டு விட்டான்.... பின் இங்கு வரும் வரும் காலங்களில் அநியாயங்கள் மிக்க... பின் உணராமலே மக்கள்.. அநியாயத்தை தேடி அலைகின்றனர். 

அவை மட்டும் இல்லாமல் தன் பணத்திற்காக எதை என்று கூற அனைத்தும் கூட விட்டு விட்டு இறைவனை.. நேசிக்க மாட்டார்கள். 

அதனால் நிச்சயம் தாயே!! நீ என் தாயாக இருந்து நிச்சயம் நீ அனைவரையும் பின் காக்க வேண்டும் என்று கூற!!

இதனால் இவ் அன்னையும் கூட சத்தியமாக என்று சத்தியம் செய்து விட்டாள்!! அவ் அரசனுக்கு!!

இதனால் தான் இவ் அம்மை இங்கு சுற்றிக்கொண்டே வருகின்றாள்!!!

இதனால் இங்கு நிச்சயமாய் எதை என்றும் உணராமலே பல மனிதர்கள் பின் இங்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தாலே போதுமானது. 

நிச்சயம் மாய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடலாம்!!

இதனால் சில சில இச்சைகளும் நிச்சயம் இவள் தன் நீக்கிவிடுவாள்... இங்கு இவ் அம்மைக்கு... அதிக சக்திகள் என்பேன். 

இவ் அம்மை என்ன சொல்கின்றாளோ???? அதுதான் ஈசனும் கேட்பான்!!!

 சொல்லிவிட்டேன்!!!

இதை நன்கு உணர்ந்தாலே இன்னும்.. ஏராளம்... இன்னும் ஈசனே நிச்சயம் இத்திருத்தலத்தை பன்மடங்கு எதை என்று கூட... வரும் காலங்களில் ஈசனே அமைத்துக் கொள்வான்.. என்பது உறுதியாக!!!

ஆனாலும் கலியுகத்திலும் எதை என்று தீர்மானிக்கும்.. மனிதர்கள் இங்கு இல்லையப்பா!! அனைத்தும் பொய்யான மனிதர்களே!!!

ஆனால் இறைவன் எதை என்று கூட நினைக்கும் பொழுது ஒன்றுமில்லாமல்.. ஆக்கி விடுகின்றார்கள். 

இதனால் நிச்சயம் ஈசன் இங்கேயே தங்கி தங்கி தான் பின் அனைவருக்கும் ஆசிகள் இன்னும்... இதனால் நிச்சயம்... மனதில் என்ன எதை என்று உணராமலே... நிச்சயம் எதை எதை செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்விப்பான்!!!!

ஆனாலும் தரித்திர மனிதர்களோ... எதை என்று கூட இவ் ஆலயத்தை பல வழிகளிலும் கூட...இதை பின் இடித்து. அனைத்தையும் பின் தரை மட்டமாக்க வேண்டும் என்பதைக் கூட... பல தரித்தர மனிதர்களின் எண்ணங்கள்!!!

ஆனால் நிச்சயம் வந்தார்கள்!!!

ஆனாலும் ஒரு சூட்சம ரகசியத்தை அழித்தும் விட்டார்கள்!!!!

ஆனால் எழும்பினான் ஈசன்!!!! திரும்பவும் கூட!!

அனைவருக்குமே ஆச்சரியங்கள்!!!

பின் எவை என்று கூற பின் அழித்துவிட்டோமே.... எதை என்று உணராமல் மீண்டும் எழுந்து நிற்கின்றதே!!!!( சிவலிங்கம்) 

யார் இதை அமைத்தார்கள்??? என்பதைக் கூட!!!

ஆனாலும் ஊர் மக்கள் எதை என்று கூற இங்கு சுற்றி இருக்கும் வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைவருக்குமே அவந்தன் அவ் தரித்திர மனிதனை தெரியும் என்பேன்... ஏனென்றால் அவன் சில நாட்கள் இங்கு ஆட்சியும் செய்து விட்டான்...

இதனால் அனைவரையும்... அழைத்து யார் இதை???

இவை தன் யாங்கள் அனைத்தையும் இடித்து தள்ளினோம்! ஆனாலும் ஒரே இரவில் சிறப்பு மிக்க தலமாக மாறிவிட்டதே!!!!...

யார் இதை உருவாக்கியது??? என்று கூட!!!

ஆனாலும் யாரும் அனைவரும் மறுத்து விட்டார்கள்!!!

ஆனாலும் இதையென்று அனைவரும் எதை என்று அவ் நிஜமானதை எதை என்று புரிந்து கொள்ளாத அளவிற்கும் கூட அவ் மனிதன் தரித்திர மனிதன் என்பதே.. என்பதுதான்.. அவனுடைய பெயரைக் கூட யார் இங்கு அழைக்க மாட்டேன்.. பின் எதனை என்பதை கூட நிரூபிக்கும் அளவிற்கு கூட !!!!

இதனால் நிச்சயம்  அனைவரையும் அடித்து நொறுக்கினான்!! பல ஆயிரம் மக்களையும் கூட அடித்து நொறுக்கினான்!!

ஆனாலும் யாரும்!!!.....

ஆனாலும் இதனை ஈசன் தான் செய்வது என்று உணராமல் தெரிந்து விட்டது. 

இதனால் மீண்டும் பின் அவ் தரித்திர மனிதன் மனிதர்களை விட்டு அழிக்க சொன்னான்!!!

ஆனாலும் மீண்டும் பின் அழித்தார்கள்.. அனைவரும் சேர்ந்து. 
ஆனாலும் அழுது புலம்பிக்கொண்டே!!


மக்களை இவ்வாறு அழித்தால் தான்.. உங்கள் குடும்பம் நலமாக வாழும்.. என்பதை கூட நிச்சயிக்கப்பட்டு பின்... எதை என்று கூட!!

இதனால் கண்ணீர் விட்டு மக்கள் அனைவரும் நமச்சிவாயா!!! நமச்சிவாயா!! என்று கூட. 

ஆனால்..இவை தன் தேவி பார்வதி அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். 

ஆனாலும் இதனை எதை என்று உணராமலே... திரும்பவும் அழித்துவிட்டார்கள். 

ஆனாலும் நிச்சயமாய் எதை என்று கூற பின் சிறிது நாட்கள் எவை என்று கூற பின் சிறிது நாட்கள் இல்லை... இரு அல்லது மூன்று இவைப்பின் நாட்களுக்கு இடையே இவை பின் எழுச்சி பெற்றது!!! (சிவலிங்கம்) 
திரும்பவும்!!

ஆனாலும் யூகித்துக் கொள்ளுங்கள்!!! எப்படி இவ் ஆலயம் என்பதை கூட!!

திரும்பவும் இச்செய்தி அவ் தரித்திர மனிதனுக்கு காதுகளில் எட்டி விட்டது!!!

ஆனாலும் இவை தன் உணர உணர... யார் இதை நோக்குவார்கள்?? என்பதைக் கூட!!.. இன்னும் அனைவரையும் அழைத்தார்கள்! பின் எதை என்று கூட ஆனால் திரும்பவும் மனிதர்களுக்கு அவ் பல ஆயிரம் மனிதர்களுக்கு... ஆச்சரியங்கள்!!! ஏன் எதை எப்படி என்பதை கூட... இதை தகர்த்துவிட்டும் கூட மீண்டும் இப்படி எழும்பி வருகின்றதே... யார் என்பதைக் கூட அனைவருக்குமே ஆச்சரியங்கள். 

ஆனாலும் யாரும் பின் சொல்லவில்லை. 

எதை என்று மீண்டும் அடித்து நொறுக்கினான் மனிதர்களை... காலால் பின்.. பல பல பின் தன் இயந்திரத்தில்(பீரங்கிகள் துப்பாக்கிகள்) உள்ள அனைத்து எதை என்று உணராமலே தற்பொழுது... நிலைமைகளில் அனைத்திலும் கூட.. அதனை பயன்படுத்தி அடித்து நொறுக்கினான்... மனிதர்களை... இதில் பலரும் காயம்!! எதை என்று கூட!!!

(காகபுஜண்டர் மகரிஷி இவ்விடத்தில் தற்பொழுது நிலைமைகளில் என்று குறிப்பிடுவது தற்காலத்தில் மனிதர்கள் ஆயுதமாக பயன்படுத்தும் பீரங்கிகள் துப்பாக்கிகள் ஆக இருக்கலாம் 19 ஆம் நூற்றாண்டில்  ஆலயம் இப்பகுதியை ஆண்ட நவாபுகளால் சிதைவுற்றது காகபுஜண்டர் மகரிஷி குறிப்பிடும் அரசன் தென் ஆற்காட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்)




ஆனாலும் ஒன்றை மட்டும் புரிகின்றது இதற்கு தகுந்தாற்போல் பின்... அனைத்து மக்களிடமும் யான் தான்... இதை கட்டினேன் என்று பின் ஈசன் மறைமுகமாக... வந்தான் மனித வடிவிலே!!!

எதை என்று உணர்ந்து ஆச்சரியப்பட்டார்கள் மனிதர்கள் அனைவருமே!!

ஆனாலும் பின் எதை என்று.. நிரூபணம் ஆகாமலே இன்னும்.. சில சில விஷயங்களும் இருக்கின்ற.. முறையினாலே உண்டு செல்வங்கள். 

இதனால் அனைவரின் கவலையையும் எளிதில் தீர்த்து விட்டான்..

ஆனாலும் அவந்தனும் (தரித்திர மனிதன் அரசன் ) கதி கலங்கி விட்டான். 

ஒரு மனிதனால் இவ்வாறு உருவாக்க முடியுமா??? என்பதைக் கூட!!

அதனால் பின் அவந்தனை(மனித ரூபத்தில் வந்த ஈசனை) 

அவ் தரித்திர மனிதனும் ஈசனையும் பின் கட்டி இன்னும் பின் கயிறால் (சவுக்கடி) அடித்தார்கள் எதை என்று கூட! 

இதனையும் கூட இன்னும் இதற்கு இதனால் அடித்து நொறுக்கி நொறுக்கி மீண்டும் பின்... எவ்வளவு??????? அடிகள் ஈசன் மீது!!!

இதனால் பின் உணராமல் இன்னும் எதை என்று கூட பின்... சுயரூபத்தை காண்பித்தான் ஈசன். 


இதனால்தான் இத்தலம் எதை என்று கூட இதனால் அவன்... திருந்தி விட்டான் கடைசியில்!!!

ஈசன் பக்தனாகவே மாறிவிட்டான்!!!

மக்கள் அனைவரின் நலன்கள் மீண்டும் செழிப்படைந்துவிட்டது!!

இதனால் அனைவரும் எவை எவை என்று கூட.. செல்வம் மிக்கவர்களாகவே.. அனைவருக்கும் அனைத்தும் கிடைத்துவிட்டது எளிதாகவே. 

இதனால் ஈசன் எதை என்று கூட அதனால்... சொல்கின்றேன்... இத் தலத்தை.. ஈசன் என்பதை கூட எப்படி உருவாக்கினான் என்பதை சொல்லிவிட்டேன். 

இதுதான் பின் செய்திகள். 
இன்னும் ஏராளம்!!

அதனால் இப்படி இதை செய்தவனுக்கு!!!!

(ஈசன் சுயமாக மீண்டும் மீண்டும் எழுந்தது) 

 அனைத்தும் எவை என்று கூட !!! இன்னும் மனிதனை நம்பாமல் ஈசனே செய்து கொள்வான்!!! இதுதான் அப்பனே வாக்கு சொல்லிவிட்டேன்!!

நன்முறைகளாக மீண்டும் மீண்டும்... எழுச்சி அடையச் செய்வான்...

எக்காலத்திலும் இவை அழியாது!!!!

(எவ்வளவு காலங்கள் ஆனாலும் இந்த திருத்தலம் அழியாது) 

மனிதன் அழிந்து போவான்...

ஆனால் நிச்சயம் இத் திருத்தலம் இன்னும் பல பல வருடங்களுக்கும் எழுந்து நிற்கும் என்பது உண்மை. 

இன்னும் சிறப்புகள் மிகுந்ததாகவே காணப்படும் என்பேன்.. இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றது???? என்பதை கூட பல சூட்சுமங்களோடு உரைக்கின்றேன்... அடுத்த திருத்தலத்திலும் கூட!!!!

ஆசிகள்!! ஆசிகள்!!






ஆலயம் பற்றிய விபரங்கள் 



(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)

பிரிவு: நடு நாடு

மாவட்டம்: விழுப்புரம்

திருக்கோயில்: அருள்மிகு அன்னை

கமலேஸ்வரி சமேத

திருநாதீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்

தலக் குறிப்புகள்:

விழுப்புர மாவட்டத்தில், விழுப்புரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலும், செஞ்சியிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், வளத்தி எனும் சிற்றூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது தேவனூர் திருநாதீஸ்வரர் திருக்கோயில். சுந்தரர் தேவாரத்தில் 'எங்கள் பிரானன் உறையும் திருத்தேவனூர்' என்று குறிக்கப் பெற்று 'தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கின்றது.

சோழர்கள்; பாண்டியர்கள்; நாயக்க மன்னர்கள் என்று வழிவழியாய்ப் பரமாரிக்கப் பெற்றுத் திருப்பணி கண்டு வந்துள்ள திருத்தலம், பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் விதமாய் விளங்கி வந்த பிரமாண்டமான இக்கற்கோயில் பின்னாளில் ஆற்காட் நவாபிற்கும் இராஜ தேசிங்கிற்கும் நடந்தேறிய போரில் முழுவதுமாய் கொள்ளையடிக்கப்பட்டுத் திருக்கோயிலும் பெருமளவு சிதைக்கப் பெற்றது. எண்ணிறந்த ஆண்டுகள் பூஜையின்றி சிதைந்திருந்த இவ்வாலயம் மத்திய அரசின் உதவியோடு புதுப்பிக்கப் பெற்று 2016ஆம் ஆண்டு குடமுழுக்கு கண்டு மிளிர்கின்றது.

சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளாலும், மலைப்பகுதிகளாலும் சூழப்பெற்றுள்ள ஏகாந்தமான திருச்சூழலில் அமைந்துள்ளது இத்திருக்கோயில், மூலமூர்த்தி திருநாதீஸ்வரர், அம்பிகை கமலேஸ்வரி. உட்ப்ரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம், வலதுபுறத்தில் அழகே ஒரு திருவடிவாய் திருப்புகழ் தெய்வமான நம் முருகக் கடவுள் நின்ற திருக்கோலத்தில், திருமுகத்தில் புன்முறுவலுடன், இரு தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், அருகிலேயே வணங்கிய திருக்கோலத்தில் அருணகிரிநாதர் எழுந்தருளி இருக்கின்றார்.

திருநாதீஸ்வரர் கோவில், தேவனூர், விழுப்புரம்
திருநாதீஸ்வரர் கோவில், தேவனூர், விழுப்புரம்
திருநாதீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் மலையனூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர் திருநாதீஸ்வரர் என்றும், தாயார் கமலேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலைப் பற்றி தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கோயில் தேவார வைப்பு ஸ்தலம் என்று கருதப்படுகிறது. அருணகிரிநாதர் இக்கோயிலின் முருகப்பெருமானைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளார். சந்திர தோஷத்திற்கு பரிகார ஸ்தலம் கோவில்.
இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பிற்கால பாண்டியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இந்தக் கோயிலைப் புதுப்பித்தனர். செஞ்சி ராஜா தேசிங்கு மற்றும் ஆற்காடு நவாப்களுக்கு இடையேயான போரின் போது இந்தக் கோயில் சேதப்படுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் அனைத்து செல்வங்களும் நவாப்களால் திருடப்பட்டன.


கோயில்
இது கிழக்கு நோக்கிய ஒரு பிரமாண்டமான பழமையான கோயில். கிழக்கு நுழைவாயிலில் உள்ள இடிந்த பெரிய கல் நுழைவாயில், அழகாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட ஒரு பெரிய கல் மண்டபத்திற்கு வழிவகுக்கிறது, அதைத் தொடர்ந்து தெற்கு நோக்கிய தெய்வ சன்னதி உள்ளது. 4 நந்திகள் நிறுவப்பட்டன, சில பழையவை பல சிலைகள், ஆவுடையார் மற்றும் லிங்கங்களுடன் கிடக்கின்றன. மூலவர் திருநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், கிழக்கு நோக்கி இருக்கிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் இருக்கிறார். லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் கருவறைச் சுவர்களைச் சுற்றி அமைந்துள்ள கோஷ்ட சிலைகள்.
கருவறை நுழைவாயிலில் விநாயகர் மற்றும் முருகனின் சிலைகள் காணப்படுகின்றன. தாயார் கமலேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார், தெற்கு நோக்கி இருக்கிறார். கோயில் வளாகத்தில் சூரியன், சந்திரன், நால்வர், விநாயகர், ஒரு சிவலிங்கம், அருணகிரிநாதர், வள்ளி மற்றும் தெய்வானையுடன்கூடிய முருகன், பைரவர், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. முருகப்பெருமான் நான்கு கைகளுடன் ஒற்றை முகத்துடன் இருக்கிறார். அவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவர் பழனி முருகனைப் போலவே இருக்கிறார்

ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன, அதன் மகிமையான கடந்த காலத்தைக் குறிக்கின்றன. இந்த கோயிலில் ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது.
இணைப்பு
மலையனூரிலிருந்து சுமார் 9 கி.மீ, மலையனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 11 கி.மீ, சேத்துப்பட்டிலிருந்து 12 கி.மீ, செஞ்சியிலிருந்து 18 கி.மீ, செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 18 கி.மீ, திண்டிவனத்திலிருந்து 42 கி.மீ, திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து 43 கி.மீ, விழுப்புரத்திலிருந்து 59 கி.மீ மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. தேவனூர் மாநில நெடுஞ்சாலை 4 இல் செஞ்சிக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. திண்டிவனம் பக்கத்திலிருந்து செல்லும்போது, செஞ்சியில் உள்ள பிரதான சந்திப்பில் வலதுபுறம் திரும்பி சேத்துப்பட்டைச் சாலையில் செல்லுங்கள். சுமார் 18 கி.மீ சென்று இந்த கோயிலை அடைய வலதுபுறம் திரும்பவும் 18 கி.மீ. செல்ல வேண்டும்.

அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 3 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.

(Google Maps:
https://maps.app.goo.gl/1JvzEq3kEfxmZv2e6?g_st=aw

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!


No comments:

Post a Comment