​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 31 December 2025

சித்தன் அருள் - 2060 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - 2








அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2 

நாள் : 28/12/2025 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை பதிவு : https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h31m00s


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===================================
# அன்புடன் திருமூலர் சித்தர்  வாக்கு 
===================================

அகிலமெல்லாம் ஆளக்கூடிய பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியைம் பணிந்து செப்புகின்றேனே, மூலனவனே.

அப்பா அறிந்தும் முதல் பாடலை பின் என்னுடைய பாடலை எடுத்து.

சுவடி ஓதும் மைந்தன் :- முதல் பாடல் திருமந்திரம் பாடுங்க, ஐயா. 

அடியவர்  :- ( பின் வரும் முதல்   பாடலை பாட ஆரம்பித்தார்கள் ) 

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் 
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

அடியவர்  :-  ( இந்த ராகத்தில் இதுவரை நான் எந்த ஒரு இசையும் படைத்ததில்லை. இந்த ராகத்தின் பெயர் ‘ஆனந்த பைரவி’. இது எப்படி என்னுள் தோன்றியது எனக்கே தெரியாது. 32 ஆண்டுகளில், இந்த ராகத்தை நான் பாடும் முதல் முறை இதுதான். இது முற்றிலும் இயற்கையாகவே என்னுள் உருவானது — உண்மையாகச் சொன்னால் அப்படித்தான். )

திருமூலர் சித்தர் : - இவையாவும் உணர்ந்ததே அறிந்தும் இறைவன் யார் என்பதை நிமித்தம் காட்டி எங்கு என் அறிந்தும் யார் பெரியவன் என்று அறிந்தும் கூட யான் பாடி சொல்லியுள்ளேன். நீங்கள் யோசியுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (திருமூலர் சொல்கிறார். நான் எங்கு வந்து, யார் பெரியவன் என்று பாடியிருக்கிறேன்; அதை நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா?’ என்று கேட்கிறார்.)


அடியவர்  :-  ( மேலே பாடிய பாடலின் பொருள் விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்கள் ) இறைவன் ஒருவனே, அவனைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது, உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்ட சராசரங்களும், அதில் உள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான். ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள், அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது, எப்படி கசப்பான மருந்தும், இனிப்பான மருந்தும் நோயை குணப்படுத்துகிறதோ, அதுபோலவே இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும். இரண்டாக இருக்கும் இறைவனே, பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று விதமான தொழில்களையும் புரிகின்றன. மூன்றாய் நின்ற இறைவனே, உயிர்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில், ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான். நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாகவும் இருக்கின்றான். அதாவது, தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளால் மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன், அவன் ஒருவனே. ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே, உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தம், ஆக்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கின்றான். ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே, மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து, யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி, ஏழாவது சகஸ்ர தளத்திலிருந்து சென்று, அதையும் தாண்டி பரவெளியில் உரைத்திருக்கின்றான். ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனே, தனக்குள்ளே உணர்ந்து, உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

திருமூலர் சித்தர் : - இவைதன் அப்பா அறிந்தும் எது என்று புரிய நிலையில் என்ன உள்ளது என்பதெல்லாம் மானிடன் அறிவானா என்ன? நிச்சயம் அறிவதில்லையே. அவையான் இங்கு செப்ப வந்தேனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மைப் பொருளை யாரும் அறியல, அதை நான் இங்கு வந்து சொல்றேன் என்று திருமூலர் சொல்றார். 

திருமூலர் சித்தர் : - இவை அன்பின் முதலில் ஈசனை படித்து, ஈசனை முன்னிறுத்தி, முன்னிறுத்தி பின் சொல்வேன், நிச்சயம், எவை என்று கூற, திருவாசகம் எனும் புத்தகம் எதனைப் பின் சார்ந்தது? 

சுவடி ஓதும் மைந்தன் :- திருவாசகம் என்ற புத்தகம் எதனை சார்ந்தது? 

திருமூலர் சித்தர் : - இதை எவை என்று கூற, இதனை, இதனையும், இதனை, இப்படியும் இதனை அழைப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :- வாசகத்தை திருவாசகத்தை இப்படியும் அழைப்பார். இன்னொரு பொருள் என்ன? 

அடியவர் 2:- சைவ நூல், சைவ நூல், 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 


திருமூலர் சித்தர் : - அப்பா, இதைப்பற்றி எப்படி நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சைவம் என்றால் என்ன?)

அடியவர் 2:- சமயம், சைவம் என்பது ஒரு சமயம். அதுமட்டுமில்லாம, இயற்கையை சார்ந்து வாழ்வது சமயம். சைவம்.


திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் புரிந்தும் கூட மீண்டும் எடுத்துரைக்கின்றேன். சைவம் என்பது எதனை குறிக்கின்றது? 

சுவடி ஓதும் மைந்தன் :- சைவம் என்பது எதனை குறிக்கின்றது? 

திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் எது என்று புரிய, அப்பனே. ஆனாலும் இதை நிச்சயம் தன்னில் கூட காண்பிப்பதில்லை. மனிதன் பின் இவ்வாறு காண்பித்து, காண்பித்து எது என்று அறிய, இறைவனிடத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றானே. 
சுவடி ஓதும் மைந்தன் :-  ( “சைவம்… சைவம் என்பதன் குறிப்பு என்ன? எல்லா இடங்களிலும் அன்பை செலுத்த வேண்டும். அப்படியிருக்க, அன்பு செலுத்தாமல் என்ன செய்கிறான்? மனிதன் நடிக்கிறான்—திருவாசகத்தை வைத்துக் கொண்டு மேடையில் நின்று நடிப்பதுபோல். அப்புறம் என்ன செய்கிறார்கள்? எல்லா உயிர்களையும் கொன்று முடித்துவிட்டார்கள், ஐயா. இங்கே என்ன செய்கிறார்? இறைவன் கையில், ஈசன் கையில் என்ன செய்கிறார்கள்? நடித்து நிக்கிறார்கள்… முடிந்துவிட்டது. )
திருமூலர் சித்தர் : -  அப்பா, அடுத்த மதத்தை எவை என்று அறிய, இயேசுவே அறிந்தும் இவை தன் ஆடுகளை வளர்த்தான். ஏனென்றால், இவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று. ஆனால், நிச்சயம் அதை மனிதன் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால், நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எவை என்று அவையே வெட்டுகின்றான். இப்பொழுது இங்கு என்ன ஆயிற்று? 
சுவடி ஓதும் மைந்தன் :- ( இயேசு பற்றி சொல்கிறார்… அப்போ, இவர்கள் என்ன நடிக்கிறார்கள்? இயேசுநாதர் ஆடுகளை வளர்த்தார்—எதற்காக வளர்த்தார்? அதை வெட்டக்கூடாது. அன்பு செலுத்த வேண்டும். அந்த உயிர்கள் எல்லாம் உங்களுக்காக, உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும், அன்பை கொண்டு வரவும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்கவும் இருக்கின்றன. )
திருமூலர் சித்தர் : -  பின், நிச்சயம் தன்னில் கூட மனிதன், மனிதன் அழித்துக் கொள்ளும்போது, இவை தன் பார்த்தால் சந்தோஷம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (மனிதன்… மனிதன் சண்டை போடும், அந்த ஆடுகளை நீங்கள் பார்த்தால் என்ன வரும்? சந்தோஷம் தான் வரும். )

திருமூலர் சித்தர் : -  ஆனாலும், எவை என்று கூற, ஆனால் உங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று இயேசு கூறினான். ஆனால், மனிதன் சுயநலத்திற்காக மாற்றி அமைத்துவிட்டான். அப்பொழுது, அவனிடத்திலே நடித்துக் கொண்டிருக்கின்றார்களே, இது நியாயமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இயேசு என்ன சொல்கிறாராம்?  மனிதனுக்குள் சண்டை எழும்போது, ஆடு உங்களுக்காகவே படைக்கப்பட்டது தானே. இந்த ஆடுகள், மாடுகள்—all these beings—நமக்காகத்தான். அப்படியிருக்க, நாம் என்ன செய்ய வேண்டும்? அவற்றை மகிழ்ச்சியுடன் வைத்துக் காப்பாற்ற வேண்டும். ஆனா என்ன செய்கிறார்கள்? அப்படியே வெட்டுவதற்காக என்று மாற்றி , வெட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அப்ப, என்ன செய்கிறார்கள்? நடிக்கிறார்கள் இயேசு விடமே நின்று நடித்து கொண்டிருக்கிறார்கள். முடிந்துவிட்டது. )

திருமூலர் சித்தர் : -  அப்பா, எவை என்று கூற, எதை என்று அறிய, நபியோனே (பெருமான் நபிகள் நாயகம்) அறிந்தும் கூட, எதை என்று கூற, உன் கண்ணுக்கு பின் எத்தனை தொலைவு, எதை நிச்சயம் தன்னில் கூட குறிக்கின்றதோ, அதை அத்தொலைவில் இருக்கும் பின், ஜீவராசிகள் அனைத்தும் உந்தனக்கே சொந்தம். அதை நீ பாதுகாக்க வேண்டும். எவனாவது எவை என்று அறிய, பின் இதைத்தான் நிச்சயம் பாதுகாக்கின்றானா என்ன? அங்கும் நடித்துவிட்டான் மனிதன். இங்கு எது மெய்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( நபிகள் நாயகம் பற்றி சொல்கிறார்… என்ன சொல்கிறார்? உன் கண்ணுக்கு எவ்வளவு தூரம் தெரிகிறதோ, அந்த எல்லை வரை உள்ள அனைத்தும் உனக்கே சொந்தம். அதை நீ பாதுகாக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நபிகள் நாயகம். ஐயா—எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறார். சித்தர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நமக்கு தெரியாது.  ஆனால் நபிகள் நாயகம் சொல்வது என்னன்னா: ‘உன் கண்களுக்கு எட்டும் தொலைவில் தெரியும் அனைத்தும் உனது பொறுப்பு. அதை நீ பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.’ ஆனால் மனிதன் அவ்வாறு பாதுகாக்கிறானா? இல்லை. )

திருமூலர் சித்தர் : -  அப்பப்பா, இவையெல்லாம் தெரியாத மனிதன், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஒன்றுத்துக்கு உதவாதவனே என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இதெல்லாம் வந்து தெரிஞ்சுக்கல. அப்ப யாரு நபிகள் நாயகத்தை ஏமாத்தி இருக்காங்க? இயேசுநாதரை ஏமாத்தி இருக்காங்க. சிவனை ஏமாத்தி இருக்காங்க. அப்ப யாரு இங்க நல்லவங்க? )  

திருமூலர் சித்தர் : - அப்பா, அறிந்தும் பின் புத்தனே சொன்னான். பின் அனைத்தும் நிச்சயம், பின் தன்னைப் போலே எண்  என்று. யார்? 

சுவடி ஓதும் மைந்தன் :- (புத்த சமயத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார் இப்போது. புத்தர் என்ன சொன்னார்?  ‘தன்னைப் போல பிறரையும்  நீ எண்ணு’ (நினை)  என்று சொல்லி வைத்தார்.  யார் சொன்னார்? புத்தர் சொன்னார். யாராவது அதைச் செய்கிறார்களா?  அதுவும் பொய்தான். )

===========================
# திருமந்திரத்தில் பல பாடல்களை மறைத்தே வைத்துவிட்டனர்.
===========================

திருமூலர் சித்தர் : -  அப்பா, இதை யான் எங்கு எதை என்று அறிய, இதை எடுத்து வந்தேனே. இன்னும் பல பாடல்களை அதை மறைத்தே விட்டனர். இதைத்தான் யான் சொன்னேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் திருமூலர், திருமூலர், திருமூலர் நிறைய பாடல்களை எடுத்துட்டு வந்தார். நிறைய பாடல் எடுத்துக்கொண்டார். இதை தான் நான் சொன்னேன்ப்பா. உங்க பத்தி நான் கெட்டது சொல்லலப்பா. மறைச்சிட்டாங்கன்றார். 

திருமூலர் சித்தர் : -  அப்பப்பா, ஏனென்றால் கலியுகத்தில் மனிதன் யான் பெரியவன், நீ பெரியவன், என் மதம் பெரியது என்று அழிக்க வேண்டும் என்று என் புத்தகத்தையே மறைத்து விட்டான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்பவே  இதை எல்லாம் எழுதி வைத்தாராம் திருமூலர். அப்ப மனிதன் என்ன செய்தானாம்?  ‘என் சமயம் பெரியது, உன் சமயம் பெரியது’ என்று சண்டை போடுவதற்காக, என் புத்தகத்தையே வந்து மறைத்துட்டான்பா. )

திருமூலர் சித்தர் : - யாங்கள் விடுவோமா? என்ன கலியுகத்தில்? 

திருமூலர் சித்தர் : -  யான் தவங்கள் ஏற்றது என்ன? எதை என்று புரிய ஈசனிடத்தில் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :-  ( அப்போ நான் ஈசனிடத்தில் செய்த தவம் அதன் பயன் என்ன என்று அவர் கேட்கிறார்.  என்ன பிரயோஜனம்? தவம் செய்ததற்கு பயன் எல்லாம் வீணாகிவிட்டதா? நான் எழுதிய நூல்கள்—அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறேன். )
திருமூலர் சித்தர் : -  ஆனால் நிச்சயம் தன்னில் கூட, தன் சுயநலத்திற்காக, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் பின் அதாவது அடித்துக் கொள்வான் இக்கலியுகத்தில். 

திருமூலர் சித்தர் : -  ஆனால் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். இதுதான் மனிதனின் மூடநம்பிக்கை. நிச்சயம் அனைவருமே இறைவனிடத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

திருமூலர் சித்தர் : -  அப்பொழுது மனிதனை கஷ்டத்திற்குள் இன்னும் வைக்கலாமா? என்ன நீங்களே சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  ( “அப்ப இன்னும் மனிதன் என்ன செய்யலாம்—கஷ்டத்தில் வைக்கலாமா, வேண்டாமா? பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் என்ன சொல்லி இருக்கிறார்கள்? முதலில் எடுத்த உடனே, சைவத்தின் கருத்து என்ன என்பதை அழகாகச் சொல்லி வைத்தார்கள்: ‘எல்லா உயிர்களும் ஒன்று; அன்பே சைவத்தின் அடிப்படை.’ ஆனால் திருமூலர் எழுதிய பல பாடல்களையே மறைத்துவிட்டார்கள். அப்போ என்ன செய்கிறார்கள்? திருவாசகத்தை நடிப்பதுபோல் படிக்கிறார்கள். அடுத்து இயேசுநாதர் பற்றி சொன்னார்கள். அன்பு பற்றி என்ன? நம்ம வீடுகளில் ஜீவராசிகளை வளர்க்க வேண்டும். குருநாதர் கூட கூட்டு பிரார்த்தனையில் ‘வீட்டில் ஜீவராசிகளை வளர்த்தால்தான் அன்பு வளரும்’ என்று சொன்னார். முன்னொரு காலத்தில் மனிதன் ஆடும், மாடும் வளர்த்தான்; இப்போது யார் வீட்டில் என்ன வளர்க்கிறார்கள்? எதுவும் இல்லை. அதனால் அன்பும் கருணையும் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறான்; அதனால் இந்த கலியுகத்தில் பொறாமையும் கோபமும் தான் வெளிப்படுகிறது. வீட்டில் ஜீவராசிகளை வளர்க்க வேண்டும்—இதையே யார் சுட்டிக் காட்டினார்? இயேசுநாதர். ‘உங்களுக்காக படைக்கப்பட்டவை’ என்று அவர் சொன்னார். ஆனால் அதைத் தவறாக மாற்றி, அங்கங்கே பொய்யாக மாற்றி ஏமாற்றிவிட்டார்கள். அடுத்து நபிகள் நாயகம். நபிகள் நாயகம் சொல்வது என்ன? ‘உன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உள்ள ஜீவராசிகள் அனைத்தும் உனக்கு சொந்தம்.’ சொந்தம் என்றால் அடித்து கொல்வது அல்ல; அவற்றுக்கு உணவு கொடுத்து, நீர் கொடுத்து, போஷித்து நல்லபடியா வளர்க்க வேண்டும்; தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அடுத்து புத்தர். புத்தர் அன்பைப் பற்றி ‘தன்னைப் போல பிறரையும் நினை’ என்று சொன்னார். ஆனால் அதையும் யாரும் மதிக்கவில்லை.” ) 


திருமூலர் சித்தர் : -   இவையாவும் செப்பி அறிந்து பல ஞானியர்கள் தவம் இயற்றி, ஆனால் அவர்கள் பின் பொய்யாக்கினார்கள் மனிதர்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகத்தில் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (சொன்னது எல்லாமே வந்து பொய்யாகிட்டாங்க. ஞானிகள் சொன்னதெல்லாம் இப்ப நீங்க—ஒரு ஞானி சொன்னதை—சாதாரண மனுஷன் நீங்கத்தான் பொய்யாக்கிட்டீங்கப்பா. அப்படி பொய்யாக்கிட்டு நீங்க நிம்மதியா வாழ முடியும் என்று  நினைக்கிறீங்களா? நிம்மதி இருக்குமா?  இருக்காது. கஷ்டம்தான் மிஞ்சும் என்று சொல்கின்றார்

திருமூலர் சித்தர் : -  இவைத்தன் இதுதான் கலியுகம். இதைத்தன் அறிவியல் வழியாகவே அகத்தியன் பின் உரைக்கும் பொழுது தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (இது நீங்க நார்மலா சொன்னா, சாதாரண ஆன்மீக வழியில சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்கப்பா. கலியுகத்தில் அறிவுகள் அப்படித்தான் இருக்குது. அதனால்தான் அறிவியல் வழியாக அகத்திய பெருமான் வந்து நமக்கு தெளிவா எடுத்துரைக்கிறப்போ, நாம இந்த அறிவுக்கு வந்து சொல்லுன்னு உரைக்கிறாங்க )

திருமூலர் சித்தர் : -   ஏன் எதற்கு இவையெல்லாம் பொய்யாக்கினான் என்றால் மனிதனின் ஆட்சி எதை என்று புரிய பின் இக்கலியுகத்தில் நடக்க வேண்டும் என்பது விதி. 

திருமூலர் சித்தர் : -   அப்பொழுது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இறைவனை இப்படியே பின் நிச்சயம் தன் மனிதனே பொய்யாக்குவான். இதுதான் கலியுகத்தின் உச்சக்கட்டம். 

========================================
# இறைவன் சொல்லியிருப்பதை யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ, அவனது வாழ்க்கை செம்மையாகும்.
========================================

திருமூலர் சித்தர் : -   இறைவன் எதை என்று கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட சொல்லியிருப்பதை பின் யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ, அவனது வாழ்க்கை செம்மையாகும். செம்மையாயிற்று. அவன் விரும்பியதை பின் நிச்சயம் நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  (இறைவன் சொன்னதை யார் கடைப்பிடிக்கிறாங்களோ… இறைவன் என்ன சொன்னாரு? என்ன சொன்னாரு? திருமூலர் என்ன சொன்னாங்க? இயேசுநாதர் என்ன சொன்னாரு? நபிகள் நாயகம் என்ன சொன்னாங்க? புத்தர் என்ன சொன்னாரு? இதுதான் இறைவன் சொன்னது. இறைவனுடைய கருத்து அதுதான். இதை எவன் ஒருத்தன் கடைபிடிக்கிறானோ, அவன் வாழ்க்கையில நிம்மதி மிஞ்சும் ப்பா. கடைபிடிக்காதவனுக்கு ஒன்றும் கிடைக்காது ன்றாங்க )

==============================
# ஈசனே தமிழ் எழுத்துக்கள் !!!
==============================

திருமூலர் சித்தர் : -   எதை என்று புரிய யான் இன்னும் சாந்த எழுத்துக்களிலே சொல்வேன். அறிந்தும் எதை என்று எவை என்று கூற தமிழ் எழுத்துக்களே, ஈசனே !!!!! 

=============================
அடியவர்கள் தமிழ் மொழியின் ஆழ்  ரகசியங்களை அறிந்து கொள்ள :-
சித்தன் அருள் - 1587 - அன்புடன் அகத்தியர் - மீர் காட், கங்கை கரை!
https://siththanarul.blogspot.com/2024/04/1587.html
=============================


திருமூலர் சித்தர் : -   இவைதன் வாய்ப்பாடாக அனைத்து மொழியும் இவைதானே பேசுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அனைத்து மொழியும் இது வாய்ப்பாடு. அதான் இக்கு ச் இஞ்  சின்னு இருக்காங்க இல்ல? அது வாய்ப்பாடு. அனைத்து மொழி எல்லா மொழிகளும் இதிலிருந்து தான் வந்ததுன்னு சொல்லி தான் வந்தது. இதுதான் பேசுவாங்க. இப்படித்தான் பேசுவாங்கன்றார். 

திருமூலர் சித்தர் : -   இவைதன் பின் அரிச்சுவடி இயக்க நன்று. இப்பொழுது 


அடியவர் :- ( தமிழ் அரிச்சுவடியை வேகமா படித்தார் _)

கா, ஞா, சா, ஞா, டா, நா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, லா, ரா, நா. 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

===========================
# தமிழ் மொழிதான் உலகத்தில் அனைவரும் பேசுவார்களே 
===========================

திருமூலர் சித்தர் : -   அப்பா, எவை என்று அறிய அனைத்தும் இம்மொழிதான். உலகத்தில் உள்ள அனைவரும் பேசுவார்களே. 

திருமூலர் சித்தர் : -  இவைதன் இவ் எதை அறிந்தும் கூட இதிலிருந்தே வந்தவை மந்திரங்கள் எல்லாம். இதைத்தன் அசைத்தாலே உடலில் உள்ள பின் அசைவுகள் அனைத்தும் பின் அசையும். நோய்களும் மறையும், மந்திரங்களும் ஏறும். மனிதன் தன் நிலையை, தன் நிலையை தெரிந்து கொள்ளலாம். 

அடியவர் :-  ( இந்த எழுத்துக்களில் தான் எல்லா மந்திரங்களும் வந்ததுப்பா. இந்த மந்திரங்களை—இந்த எழுத்துக்களை—நீங்க தெளிவா உச்சரித்தாலே, அதுவே பெரிய மந்திரங்களாகும். இதனால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் எல்லாம் மறையும் )

திருமூலர் சித்தர் : -   இதனால் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட சரியாகவே பல வழியிலும் கூட உண்மைகள் எடுத்துரைப்பேன். ஆனாலும் இதற்குள்ளே அறிந்தும் சில விஷயங்கள் உங்களுக்கு வாழ்வதற்காக தேரையன் சொல்வான். அதை நிச்சயம் தன்னில் அறிந்தும் அதை பயன்படுத்த நன்று. இன்னும் யோசனைகள், இன்னும் வாக்குகளில் பல பல உரைகளில் யான் தெரிவிப்பேன். இப்பொழுது போதும். இதனாலே பின் இறைவன் எதை என்று அறிய அனைத்தும் சமமாக எண்ண வேண்டும் சொல்லிவிட்டேன். 

திருமூலர் சித்தர் : -  இதை அறியாமல் இன்னும் யான் பெரியவன் எதை என்று அறிய இருந்தால், பின் அழிவுகள் நிச்சயம். 

திருமூலர் சித்தர் : -  இதனாலே மனிதன் மனிதனே தன்னைத்தானே வெட்டிக்கொள்வான். அதற்குள்ளே சித்தர்கள் யாங்கள் நிச்சயம் மனிதனை திருத்த வேண்டும். இல்லையென்றால், உலகத்தை அடியோடு அழிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அதான் திருப்பித் திருப்பி சொல்லிட்டு இருக்காங்க. எல்லா மனிதர்களும் ஒருத்தர்–ஒருத்தன். அதான் எல்லா போர்களும், சண்டைகளும் நிறைய. அங்கங்க இயற்கை சீற்றம் பத்தாது. மனுஷன் தனக்குள்ளே போட்டி, பொறாமை எல்லாம் அடித்துக்கொள்ள ஆரம்பிச்சுட்டான். இது இன்னும் பெருகும் ப்பா. அப்போ இதெல்லாம் மாத்துறதுக்காக நாங்க இறங்கி வரோம். ஒன்னு இறங்கி வருவோம். கேக்கலையா? அடி—அடிதான். பின்னி எடுப்பாங்க. சித்தர்கள் வந்து அடிதான் )

திருமூலர் சித்தர் : -   அப்பப்பா, எவை என்று கூற. அப்படி திருந்தவில்லை என்றால், அப்பனை கெட்டவனை பின் உயர்வு ஆக்கி, அதன் மூலம் அடித்து விடுவோம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :-  ( பாருங்க, ஒரு கெட்டவனை தூக்கி மேல வச்சிட்டா என்ன ஆகும்? பேச முடியுமா? அவ்வளவுதான். ஒரு கெட்டவனை அரசன் மாதிரி மேல வச்சா, ஒன்னு திருந்துங்கன்னு சொல்லுறாங்க. அப்படி திருந்தலைன்னா, கெட்டவனின் செயல்களாலே நமக்கு தட்டுப்பாடுகள் வரும். துன்பம் வரும். எல்லாருக்கும் சிரமம் ஏற்படும் ன்றாங்க. கெட்டவனை முன்னிலையில வச்சா—ஐயா, புரியுதுங்களா—அதன் விளைவு நல்லதா இருக்காது. அதனாலே முடிவில் நாமே நல்லா திருந்தணும். எல்லாம் நல்லா இருக்கணும். ஒற்றுமையா இருக்கணும். நம்ம வாழ்க்கை நல்லா இருந்தா பிரச்சனை எதுவும் வராது. இல்லன்னா, சித்தர்கள் சொல்வது என்ன? கெட்டவனை உயர்த்துல வச்சா, அதன் விளைவால் மக்கள் துன்பப்படுவாங்கப்பா )

திருமூலர் சித்தர் : -  அப்பனே, இங்கு யார் செய்த தவறு சொல்லுங்கள். ஆனால் இறைவன் மீது எவை, எவை என்று அறிய. 

திருமூலர் சித்தர் : -  அறிந்தும், மனிதன் திருந்தி விட்டால் யாருக்கும் இங்கு வேலை ஏது? 

திருமூலர் சித்தர் : -  அவரவர் அறிந்தும் புரிந்தும் தான் தான் வேலைகளை சரியாக செய்ய, இறைவன் கண்ணுக்கு புலப்படுவான். 

திருமூலர் சித்தர் : - மூட நம்பிக்கை நிச்சயம் இப்படியே செயல்பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயம் இறைவனும் கண்ணுக்கு தெரியப்போவதில்லை. இறைவன் இல்லை என்றுதான் கலியுகத்தில் மனிதன் செப்புவான். 

திருமூலர் சித்தர் : - எவை என்று அறிவித்து, திங்களில் பின் அவதாரங்கள் எடுத்த அடியேனுக்கு எதை என்று புரிய மார்கழி திங்கள் மிக மிகவும் பிடித்தது. அவனை நோக்கி ஒரு பாடலை பாடுங்கள். அறிந்து கூட அனைவருக்கும் ஆசீர்வாதம் செல்லட்டும். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( பத்து அவதாரம் எடுத்தார் யாரு? பெருமாள். பெருமாளை நினைச்சு ஒரு பாடல் பாடுங்கப்பா. எல்லாருக்கும் ஆசீர்வாதம்—மார்கழி மாசத்துல எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். ஐயா, பாடுங்க. இதுலேயே ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாட்டு இருக்கும். பாருங்க, மகாவிஷ்ணு துதி, பக்கம் 32 ) 

திருமூலர் சித்தர் : -  அப்பா, அறிந்தும் எவை என்று கூற, பின் அவனை தாலாட்டு பாருங்கள். அப்பா, இதை பாடி விடாதே. 

திருமூலர் சித்தர் : -  இவை அறிந்தும் எவை என்று புரிய குறையேது என்றும் 

குருநாதர் அழைத்த இசையமைப்பாளர் , பாடகர் :-  ( பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார். அவ் பாடலை பின் வரும் நேரலையில் கேட்டு மகிழுங்கள்)
https://www.youtube.com/watch?v=pQWznAAW8DU&t=3h53m20s
( பாடல் வரிகள் ) 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல்
நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட
வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின்
நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா….



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் ….) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: