​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 30 December 2025

சித்தன் அருள் - 2057 - அன்புடன் அகத்தியர் - இலங்கை யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - 4







அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 4 (நிறைவு பகுதி)


தேதி : 23/12/2025, செவ்வாய்க்கிழமை. 
நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை...
இடம் : கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம்




இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.  


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால் 23/12/2025 அன்று நடந்த யாழ்ப்பாணம் கீரிமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 4) (நிறைவு பகுதி)


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா படிக்கிறேன், நீங்க எல்லாம் சிவபுராணத்தை படிச்சீங்க. சந்தோஷம்! திரும்பி படிக்கின்றேன் அய்யா.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- சரிங்க அய்யா 


குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய அப்பனே, இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, கிரகங்களைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட. இராவணன், அப்பனே, நிச்சயம் அழகாக எழுதி வைத்துள்ளான் அப்பா. கிரகங்களைப் பற்றி கூட இராவணனுக்கு தெரியும் என்பேன்  அப்பனே, 


குருநாதர் :-  அப்பனே, கிரகத்தை வென்றால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தன் கையில் என்றெல்லாம் தெரியும் அப்பா, இராவணனுக்கு. அப்பனே, ஆனாலும் அனைத்தும் யான் சொல்லிக் கொண்டே இருந்தால், இராவணன் அகத்திய மாமுனிவரே, அனைத்தும் மனிதனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றாய்  என்று. அதனால், அவனிடத்திலே இன்னும், அப்பனே, பல நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைத்து விட்டு, அவை யாவையும் யான் செப்புவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தால், ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று அவர் கேட்பார். அப்போது நான் அவரிடமே அடுத்த அனுமதியை கேட்டு சொல்கின்றேன்.


குருநாதர் :-  அப்பனே, எவை எதை என்று புரிய? நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் இராவணனுக்கும் அவ் சக்தி உள்ளதப்பா. பின் நாடியில் வருவதற்கும், 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனாலும், அமைதியாக, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நாட்கள் செல்லும்.


சுவடி ஓதும் மைந்தன் :- எதிர்பார்க்கலாம். ஆனா என்ன ஆகும்? நாட்கள் போகும், எப்பன்னு தெரியாது.


குருநாதர் :-  அப்பப்பா, எப்படி எல்லாம் கிரகங்களை, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட ஆராய்ச்சி, அப்பனே, பின் செய்தான் என்று தெரியுமா? 


குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, கிரகங்கள் எல்லாம், அப்பனே, பின் அவனிடத்தில் தோல்வி கண்டு விட்டது. நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எங்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஆயுள் எதை என்று அறிய, அப்பனே, பின் ஒன்றும் தெரியாமல், கிரகங்கள் எல்லாம், அப்பனே, பின் அவனை மீண்டும் வணங்கி, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று எங்களை, பின் செயல்படுத்தி விடுங்கள் நிச்சயம். அப்பொழுதுதான், பின் நிச்சயம், எங்களால், பின் மனிதனுக்கு, பின் எதைனை  தர முடியுமோ, அவை தர முடியும் என்று. அப்பனே, இதனால் விட்டு விட்டான் கிரகங்களையும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- “அவர் கிரகங்களையே வென்று விட்டார். கடைசியில் என்ன நடந்தது? அவர் கிரகங்களையே நேராக எதிர்த்து அடக்கினார் — கணக்கு இப்படித்தான் முடிந்தது. ஐயா, அவர் உண்மையிலேயே கிரகங்களை வென்றவர். எவ்வளவு ஆராய்ச்சி செய்து, எவ்வளவு முயற்சி எடுத்தாரோ, இறுதியில் கிரகங்களையே அடக்கினார். அப்புறம் கிரகங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொடுக்க வேண்டிய பலனையே கொடுக்க முடியாமல் போனது. அதனால் அவர்கள் வந்து, ‘அப்பா, நீ இப்படிச் செய்தால் ; மனிதனுக்கு எங்களால் கொடுக்க வேண்டியதை கொடுக்க முடியாது’ என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் ‘சரி’ என்று சம்மதித்து கிரகங்களை விட்டுவிட்டார்..


==========================================
# ராவணேஸ்வரரின் கண்களின் சக்தி - ஒரே நேரத்தில் உலகத்தையே பார்க்கலாம் 
===========================================


குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது இரு கண்களால் , அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இராவணன் ஒரே நேரத்தில், அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, பின் உலகத்தையே காணலாம் என்பேன்  அப்பனே.  அப்பேர்ப்பட்ட சக்தி, அப்பனே, இப்பொழுது அவையெல்லாம், அப்பனே, ஆங்கிலத்தில், அப்பனே, உள்ளது என்பேன்  அப்பனே, அதுதான் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இப்போது கேமரா என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலவே, அவருடைய இரண்டு கண்களால் இந்த உலகத்தையே காண முடியும். அது சாதாரண கேமரா அல்ல — இப்போது சொல்லும் கேமராவைப் போல, எத்தனை பிக்சர் இருந்தாலும் அதைக் கடந்து பார்க்கும் சக்தி. அப்படிப் பவர் கொண்ட இரண்டு கண்கள்; கேமரா போல மிகத் தூரம் வரை பார்க்கும். அவர் அப்படிப் பார்த்தால், இந்த உலகமே முழுவதும் அவருக்கு தெளிவாகத் தெரியும்.


குருநாதர் :-  ஏன், எதற்கு?  அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதற்காக என்றெல்லாம், அப்பனே  நிச்சயம் சொல்லுகின்றேன் அப்பனே. 


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களை, அப்பனே, சக்தி ஊட்டுங்கள் முதலில். அப்பனே, அப்பொழுதுதான் அனைத்தும் புரியும். அப்பனே, நிச்சயம், யாங்கள் சக்தி ஊட்டுகின்றேன். அப்பனே, போக போக. 


சுவடி ஓதும் மைந்தன் :- “அப்புறம் அவர்கள் என்ன செய்கிறார்கள்? சக்தியை உங்களுக்குள் ஏற்றினால் தான்,  அந்த சக்தி ஓடத் தொடங்கினால்தான், நீங்கள் இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- அந்த சக்தி இல்லைன்னா, 


குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது கேட்கின்றானே. இவன் போல் கேள்விதான் கேட்க வேண்டும். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இப்போ நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் பாருங்கள்— ஆனால் அந்த சக்தி இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? நீங்கள் கேள்வியிலேயே நிற்க வேண்டிய நிலைதான் வரும், என அவர் கூறுகிறார்.


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இன்னும், அப்பனே, எவை என்று புரிய அப்பனே, ஏன், எதற்காக அப்பனே, மனிதனின், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதாவது ஒரு அப்பனே, பின் சாதாரண அப்பனே, மனிதன். அப்பனே, இல்லை என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அப்பனே, இரும்பு மனிதனே என்று. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ்  இரும்பு இருக்குல்ல என்னென்ன உள்ளது? எங்கெங்க? அப்பனே  நிச்சயம் தன்னில். இறைவன், அப்பனே  நிச்சயம் தன்னில் சக்தி கொடுக்கின்றான். சக்தி இல்லை என்றால், அப்பனே, என்ன ஆகும் என்பதெல்லாம், அப்பனே, விளக்கத்தோடு வரைபடத்தோடு யான் சொல்கின்றேன். அப்பனே, வருங்காலத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  “ரோபோ என்றால் இரும்பு மனிதன் என்று சொல்வார்கள். எங்கு பேட்டரி வைத்தாலும் அது இயங்கும் — ஏனெனில் அது முழுவதும் வரைபடம் (ப்ரோக்ராம்) அடிப்படையில் செயல்படும். இதைத் தொடர்ந்து நான் அடுத்தடுத்த வாக்கியங்களில் விளக்கப் போகிறேன் என்று அவர் கூறுகிறார்.


குருநாதர் :-  அப்பனே, சொல்லிவிட்டேன். இன்னும் கூட அனுமானிடமே, அப்பனே  நிச்சயம் தன்னோடு  ராமன் இடமே அப்பனே, கேட்டு. அப்பனே, இன்னும் அடுத்தடுத்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவை அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  எதை செப்பினால், இன்னும் அப்பனே, பின் உங்களுக்கு ஆற்றல் கிடைக்கும் என்பதெல்லாம். அப்பனே, ஏனென்றால் அவர்களிடம், அப்பனே, அனுமதி கேட்டுத்தான் என்பேன்  அப்பனே. ஏனென்றால் பின் அவர், அப்பனே, பூமி. அப்பா, இது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “நான் இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மந்திரங்கள் உங்களுக்கு தேவையான சக்திகளை எல்லாம். ஆனால் நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் பூமிக்கு நான் வந்திருப்பதால், அவர்களிடமிருந்து அனுமதி கேட்டுத்தான் நான் சொல்ல முடியும், அப்பா…


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் சொல்வேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா கண்டிப்பாக சொல்வேன். (இலங்கையில் அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் போது)


குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் கலியுகத்தில், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒவ்வொருவருக்கும், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று , அப்பனே, இவ்வாறு தெரிந்து கொண்டால், அப்பனே, பின் உலகத்தை, அப்பனே, அழகாக, அப்பனே, காத்திடலாம் என்பேன்  அப்பனே.


குருநாதர் :- அப்பனே, ஒவ்வொரு ஒவ்வொரு மனிதனுக்கு மட்டும் அப்பனே, ஏன் அவ்வளவு சக்திகள்? பின் அப்பனே  நிச்சயம், பின் ஒரு மனிதனுக்கு சக்தி இல்லை. ஏன் யாராவது நினைப்பது உண்டா? சிந்திப்பது உண்டா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  “ஒவ்வொரு மனிதரும் தங்கள் தங்களுடைய உயரத்தில் இருக்கிறார்கள்; அனைவருக்கும் ஒரு வகை சக்தி உண்டு. ஆயிரம் பேரை ஆட்டிப் படைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அப்போது ஒருவர் கேட்பார்: ‘நீங்கள் சாதாரண மனிதர்; உங்களால் ஏன் அப்படிச் செய்ய முடியாது? ஏன் அவருக்கு மட்டும் அந்த அளவு சக்தி?’ காரணம் — அவரிடம் ஒரு தனிப்பட்ட ரேடியேஷன் போன்ற சக்தி உள்ளது.


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வுடம்பு எங்கு சென்றால், உடனடியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  உயரத்தை எட்டி விடும் என்பதெல்லாம் யாங்கள் அறிவோம். 


குருநாதர் :- அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, அத்திருத்தலத்தை யாங்கள் சொல்லுவோம். அப்பனே, அங்கு சென்றால், அப்பனே, நிச்சயம் நீடோடி அப்பனே, பின் உங்களை சார்ந்தவர்கள், அப்பனே, நீங்களும், அப்பனே, பின் சக்திகளை ஏற்றிக்கொண்டு, பின் உங்களிடத்தில் இருக்கிறவர்களும் சக்திகளை ஏற்றலாம் என்பேன்  அப்பனே, அதற்கும் பொறுத்தாக வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அந்த இடங்களுக்கு  போனால்… 


குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் நட்சத்திரங்களும், கிரகங்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதற்கு அதிகரிக்கும், அப்பனே, உங்கள் உடம்பில், அப்பனே, பதிந்துள்ளது என்பேன்  அப்பனே.  


இதனால், அப்பனே, அது எங்கு, அப்பனே, அதிகமாக காணப்படும் என்பதை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே. ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நல்ல விதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இராவணன் எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே. அப்பனே, பின் இன்னும் உடம்புகள் எங்கெங்கெல்லாம் புதைத்து வைத்துள்ளான். எங்கு சென்றால், அப்பனே, எதை என்று ஒரு லாபம் என்பதெல்லாம் அப்பனே.


======================================
# நகுலேஸ்வரம் மூலவர் - நகுலேஸ்வரர் மூலவர் (சிவபெருமான்) - இராவணேஸ்வரர் பிரதிஷ்டை செய்த சுரா  கல்லின் ஒரு பகுதி. நகுலேஸ்வர மூலவர்.
======================================


குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் அவ் சுரா கல்லை  பற்றி கூட பேசினேனே. எங்கெல்லாம், அப்பனே, பின் அதனை அவன் எடுத்து வைத்திருக்கின்றான் என்பதெல்லாம் சொல்வேன். அங்கு சென்றாலே போதுமானது என்பேன்  அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அவன் எடுத்து வந்து வைத்து தான், அப்பனே, இங்கு, அப்பனே, பின் ஈசன், பின் லிங்கமாக உள்ளது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணேஸ்வரர் அவர் எடுத்துச் சென்று வைத்ததுதான் இங்கு இருக்கிறது. நகுலேஸ்வரன் கோயிலில் உள்ள சிவலிங்கம், அந்தக் சுரா கல்லிலிருந்து எடுத்து வந்து இங்கு வைத்தது யார்? இராவணேஸ்வரர். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய? அப்பனே, இன்னும் சொல்கின்றேன். அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே. ஆனாலும், அங்கு யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த கோயிலுக்கு அதிகமா பேரு, அவ்வளவு சீக்கிரம் முடியாது என்று சொல்கின்றார்.. 


குருநாதர் :-  அப்பனே, இன்னும் எது என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதனடியில் புதைத்தும் வைத்துள்ளான் என்பேன்  அப்பனே, நிச்சயம் இராவணன் என்பேன்  அப்பனே, சிறு சிறிதாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கீழுக்கும் அங்க இராவணன் புதைத்து வைத்திருக்கிறார். 


================================
# நகுலேஸ்வரம் - ராமேஸ்வரம் சுரங்கப்பாதை 
================================


குருநாதர் :-  அப்பனே, இதற்கும், அப்பனே  நிச்சயம் ராமேஸ்வருக்கும் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  பின் ஒரு வழி உண்டு என்பேன்  அப்பனே, நிச்சயம் அதில் பல வித்தைகள் இருக்கின்றது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த நகுலேஸ்வரன் கோயிலுக்கும் ராமேஸ்வரத்துக்கும் ஒரு சுரங்கப் பாதை உண்டு. . அந்தப் பாதையில் பல ரகசியங்கள் மறைந்திருக்கின்றன என்று என்று சொல்கின்றார்.”


===================================================
இவ் சுரங்கப்பாதை குறித்து அறிந்து கொள்ள நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ராமேஸ்வரம் பாதாள ஆஞ்சநேயர் ரகசியங்கள் 
சித்தன் அருள் 1965
https://siththanarul.blogspot.com/2025/10/1965.html.


ஏற்கனவே ஒரு முக்கோண வடிவமாக நாகலோகம் பாதாள லோகம் பித்ருலோகம் குறித்து திரிகோணமலை நகுலேஸ்வரம் ராமேஸ்வரம்... என வழிப்பாதைகள் இருக்கின்றது இறந்தவர்களின் ஆத்மா இந்த வழியில் தான் பயணம் செய்ய முடியும் என்பதை இலங்கை வாக்கில் குருநாதர் கூறியிருக்கின்றார் மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தெளிவாக அனைத்து விஷயங்களும் புரியும்.
===================================================
சித்தன் அருள் - 1658 - அன்புடன் அகத்தியர் - நாகபூஷணி திருக்கோயில்!
https://siththanarul.blogspot.com/2024/08/1658.html


ராமேஸ்வரத்திலிருந்து அப்பனே எதை என்று கூட நகுலேஸ்வரம் எதை என்று புரிய புரிய அப்பனே (திரி)கோணமலை இதனைச் சுற்றி எவை என்று அறிய அறிய அப்பனே நாகலோகம் உள்ளதப்பா!!!


( அடியவர்கள் உலக வரைபடத்தை பெரிதாக பார்க்க பெர்முடா முக்கோணம் மற்றும்  இந்த ராமேஸ்வரம் , நகுலேஸ்வரம் , திருகோணமலை முக்கோணமும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பது புரியும்.)
===================================================


குருநாதர் :-  அப்பனே, (ராமேஸ்வரம்) அங்கிருந்து என்ன என்றெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அங்கிருந்து, அப்பனே, (மதுரை) மீனாட்சி தாய்க்கும் சுரங்கம். 


குருநாதர் :- அப்பனே, இப்பொழுது தேவையில்லை. அப்பனே, பின் நேரங்கள், அப்பனே, நிச்சயம் வந்து கொண்டே. அப்பனே, ஒவ்வொன்றாக உரைத்துக் கொண்டே, அதை யான் செப்புவேன் அப்பனே. 


===============================
# நகுலேஸ்வரத்தில் அனுமனின் மந்திரங்கள் செம்பினால் சக்திகள் உங்களுக்கு தானாக ஏறும்
===============================


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. இதனால் தான், அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அனுமானின், அப்பனே, பின் மந்திரங்கள் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் இன்னும், அப்பனே, பல வகையான மந்திரங்கள் கூட இங்கு வந்து அப்பனே  நிச்சயம் அழகாக, அப்பனே, செப்பினாலே. அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  கடன், அப்பனே, எதை என்று பார்த்து. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. சக்திகள் உங்களுக்கே தானாகவே ஏறும் அப்பா. 


========================================
# நகுலேஸ்வரம் மண் அதனை உங்கள்  இல்லத்தில் வைத்தால் , தீய சக்திகள் ஓடிவிடும்.
=========================================


குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில். அதனால்தான், அப்பனே  நிச்சயம் தன்னில் ஒவ்வொரு இல்லத்திலும் கூட. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  அவர்கள் புதைந்துள்ள, அப்பனே, மண்ணை எடுத்துக்கொண்டு இல்லத்திலே வைத்தால், அப்பனே, தீய சக்திகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ் தீய சக்திகள் எப்படி உருவாகிறது என்பதெல்லாம் யான் வருங்காலத்தில் செப்புவேன். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-   “அதனால்தான் அனுமனின் உடல் புதைந்திருக்கிறது, இல்லையா? அந்தந்த இடங்களில் பெரிய சக்தி இருக்கிறது. அந்த மண்ணை வீட்டில் வைக்கச் சொல்கிறார்கள். அதை வைத்தால் என்ன ஆகும்? தீய சக்தி வராது. சக்தி கொஞ்சம் உயர்ந்து நிலைபெறும்.


குருநாதர் :-  அப்பனே, நல்முறையாகவே. அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் ஏன் எதை என்றால், அப்பனே, உங்கள் அப்பனே, பின் இதைப்போல். அப்பனே, எங்கள் பேச்சை கேட்டாலே, உங்கள் குறை தானாகவே யாங்கள் தீர்த்து விடுவோம் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது மாதிரி உங்கள் கஷ்டம், எங்கள் கஷ்டம். நீங்க சொல்றீங்க இல்லையா, இங்க வந்து எங்க பேச்சை கேட்டாலே என்ன ஆகும்? உங்க பிரச்சனைகள் தானாவே தீர்ந்து விடும். 


குருநாதர் :-  அப்பனே, அதேபோல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, உங்கள் கதிரியக்கம் , அப்பனே, பின் அதிகமாக இருந்தால், பல கோடி சித்தர்கள் வந்து வாக்குகள்  செப்புவார்கள் என்பேன்  அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்க ரேடியேஷன் அதிகமா இருந்துச்சுன்னா என்ன பண்ணுவாங்க? எல்லா சித்தர்களும் வந்து நம்மகிட்டயே பேசுவாங்க. 


குருநாதர் :-  அப்பனே, நல்முறையாக இதனால், அப்பனே, எப்படி வளர்ப்பது? அப்பனே, நிச்சயம் அறிவை, அப்பனே, பின் எப்படி வளர்ப்பது உடம்பை? அப்பனே, எப்படி சக்தியை கூட்டுவது? என்பதெல்லாம் வருங்காலம், வருங்காலத்தில். அப்பனே, நிச்சயம் யான் செப்புவேன் அப்பனே. 


இதனால், அப்பனே, நிச்சயம் எதற்காக இங்கு வந்தேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எவை என்று கூற அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்டிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவை என்று கூற ராமனுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது, அனுமானுக்கும், அப்பனே, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இராவணனுக்கும், அப்பனே, பின் அதன் பற்றி  தெரிந்து கொண்டே ஆகவேண்டும். 


இன்னும், அப்பனே, பின் அவர்களைக் கேட்டு, அப்பனே, உங்களுக்கு பின் சில ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட யானே சொல்லிக் கொடுத்திருக்கின்றேன் பல வகையிலும் அவர்களுக்கு.  ஆனாலும், அப்பனே, நிச்சயம் அவர்கள் அனுமதி பெற்றால் தான், அப்பனே, உங்களுக்கும் கூட. அப்பனே, நிச்சயம் பின் அதாவது, அப்பனே, சில தீமைகள் விலகிவிடும் அப்பா. 


குருநாதர் :- அப்பனே, ஞான சூட்சுமத்தை சொல்லிவிட்டேன் அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இங்கு இருக்கும் மண், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனுமானின் மண் என்பேன்  அப்பனே, எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “இங்கு இருக்கும் மண் , இது அனுமான் மண். அதை எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால், உங்களுக்கு பல விஷயங்கள் தெரியும் என்று சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே அவர்கள் இதைச் சொல்லியிருந்தார்கள்.


குருநாதர் :-  அப்பனே, பறந்து பின் விரிந்து காணப்படுகின்றது என்பேன்  அப்பனே. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் அப்பனே, விரிந்து அப்பனே, எங்கெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எதற்காக இவ்வுடம்பு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


எங்கு சென்றால், அப்பனே, பின் கதிர் இயக்கங்கள். அப்பனே, அதாவது, அப்பனே, நிச்சயம் இன்னும், அப்பனே, சக்திகள் ஏறும் என்பதை எல்லாம், அப்பனே, வருங்காலத்தில் யான் தெரிவிப்பேன் என்பேன்  அப்பனே. கவலை கொள்ளாதீர்கள். பின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இப்பொழுது போதும் அப்பா. 


அப்பனே, எவ் ரகசியத்தை சொல்ல அப்பனே, எதற்காக அப்பனே, பின் வந்தேனே ஒரு ரகசியம். அப்பனே  நிச்சயம் அதுதான் அனுமானின் ரகசியம் சொல்லிவிட்டேன். 


அப்பனே, பின் இன்னும் ரகசியங்களாக, பின், பின், பின் வாக்கில் உரைக்கின்றேன். அப்பனே, இப்பொழுது போதும் அப்பா. 


ஆசிகள் ! 


ஆசிகள் !!


உங்கள் குறைகள் எல்லாம் கூட யான் அறிவேன் அப்பனே. தீர்த்து வைக்கின்றேன். அவரவர் எண்ணம் படி, நிச்சயம் நடக்கட்டும். ஆசிகள், அப்பா, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, கவலை கொள்ள வேண்டாம். யான் சொல்வதை அழகாக ஏற்றுக்கொண்டு, அப்பனே, வாருங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அடுத்தும், அப்பனே, பின் ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


ஆசிகள் !


ஆசிகள் !!


அப்பனே, சொல்ல வந்தேனே. பின், அனுமானை பற்றி சொல்லிவிட்டேன். 


ஆசிகள் !!! 


இதுதான், அப்பனே, நிச்சயம் தர்மம். அப்பனே, தர்மத்தை காத்திடுங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாக. 


அப்பனே, பின் தர்ம வழியில் சென்று விடுங்கள் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தர்ம வழியில் சென்று கொண்டே அப்பனே, இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில சில. அப்பனே, தடங்களும் தாமதங்களும் வரலாம். 


ஆனாலும், அப்பனே, கவலை கொள்ளாதீர்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின், அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின், நிச்சயம் அழகாக அனுமானும் தர்ம வழியில் தான் எடுத்துச் செல்வான் அப்பனே. உண்மைகளை புரிய வைப்பான் என்றால், அப்பனே  நிச்சயம் அனுமான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே. 


இன்னும், அப்பனே, விவரமான வாக்கெல்லாம் அடுத்தடுத்து யான் செப்புவேன். 


ஆசிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


உங்கள் குறைகள் எல்லாம். அப்பனே, சிறு சிறுதாக. அப்பனே, ஏனென்றால், அப்பனே, விதியிலே எழுதப்பட்டுள்ளது என்பேன்  அப்பனே.  அவையெல்லாம், அப்பனே, மாற்றுவது சாதாரணம் இல்லை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால் மாற்றுகின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


யான் சொல்வதை கேளுங்கள் அப்பனே. 


ஆசிகள் !
ஆசிகள் !! 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மீண்டும் சந்திப்போம். 


ஆசிகள் !
ஆசிகள் !! 

(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 23.12.2025 அன்று கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், நகுலேஸ்வரம், யாழ்ப்பாணம், இலங்கையில்  நடந்த  சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் நிறைவு பெற்றது.)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment