​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 13 December 2025

சித்தன் அருள் - 2035 - அன்புடன் அகத்தியர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4


உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை

நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================

# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 

====================================


ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே. 


(மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4)


=================================

# பதிகங்கள் , இறை பாடல்கள் ரகசியங்கள் 

=================================


=====================================

# சிவபுராணம் பாராயணம் - 9 நிமிட ரகசியங்கள் 

=====================================


தேரையர் சித்தர் :-  எதை என்று புரிய? இவைத்தன் தத்துவத்தை உரைக்கின்றேனடா. மானிடா, அறிந்தும் எவை என்று புரிய? வாசகத்தை தேன் போல் பாடு. இவைத்தன் பின் கண்ணிமைக்கும் நேரத்தில் இடு. இதனைப் பற்றி உரைக்கின்றேனடா. இன்னும் இது இவை என்று கூட ரகசியங்கள். 


===============================

(சிவபுராணம் முழுவதும் பாடி எவ்வளவு நேரங்கள் ஆகின்றன என்று கணக்கிட சொன்னார்கள். அதன்படி சிவபுராணம் பாட ஆரம்பித்தனர் அடியவர்கள். சிவபுராணம் முழுவதும் பாடி முடிக்க 9 நிமிடங்கள் ஆனது.  பாடி முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பம் ஆனது.)

===============================


===============================

# சிவபுராணம் - “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” - தெரியவில்லையே, மானிடனுக்கு. 

===============================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இதைத்தன் பயன்படுத்த, நன்றே., இவைத்தன் என்ன உணர்ந்தீர்கள்?  இவைத்தன் பின், அதாவது, இவை தன்னே “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து”, ஆனாலும், பின் தெரியவில்லையே, மானிடனுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- (சிவபுராணத்தில் வரும் ஒரு வரி - “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து”  என்றால் ,   நம்ம எல்லோரும்  அதன் அர்த்தம் (meaning)  என்று நினைச்சுட்டு இருக்கிறோம். ஆனால் பாடல் பாடி முடிக்க ஒன்பது நிமிடம் தான் வருது. ஒன்பது நிமிஷம் தான் அதன் உண்மையான பொருள். அதைத் தான் நம்மை உணர சொல்லி உள்ளார்கள்.  அப்ப எல்லாமே நம்ம எந்த பாடல் பாடினாலும் என்ன பண்ணனும், ஒன்பதுக்கு நிமிடங்களுக்கு அப்புறம்…… ) 


தேரையர் சித்தர் :- இவைத்தன் ரகசியம், நிமிடத்திற்கு மேலே தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- (இது ஒரு ரகசியம் சொல்லி இருக்காங்க. எந்த பாட்டு எடுத்தாலும், நிறைய பதிகங்கள் இருக்குல்ல, ஆமா, எல்லா பாட்டை சொன்னாலும், ஒன்பது நிமிஷத்துக்கு மேல தான் இருக்கணும், மேல தான் இருக்கணும், அப்படித்தான் எழுதி இருப்பாங்க)


===========================================

# சிறிய பதிகங்கள் ஆனாலும் 9 நிமிடம் இழுத்து பாட வேண்டும் மெதுவாக 

===========================================


தேரையர் சித்தர் :- சில பாடல்கள் ஆனாலும், இவைதன் ஈர்க்க, நன்று, இன்னும் பலம், 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சில பதிகங்கள் இன்னும் இழுக்கனும்.  அது சின்ன பாட்டுன்னு நினைச்சிடாதீங்க. இழுத்து பாடனும்) 


========================================

# திருவாசகம் முற்றோதல்  ரகசியங்கள் - சரியாக 7 மணி 39 நிமிடங்கள்

========================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அனைத்தும் கூட்ட, ஒன்பது, ஒன்பது, அனைத்து பதிகங்களும் கூட்டடா. 


=============================

( ஒவ்வொரு பதிகத்திற்கும் 9 நிமிடம் என்று 9 , 9 ஆகா கூட்ட வேண்டும்.  முதல் பதிகம் சிவபுராணம் பாட 9 நிமிடங்கள் ஆனது. அப்போது திருவாசகத்தில் மொத்தம் 51 பதிகங்கள். 51 முறை 9 கூட்ட வேண்டும். அதாவது  51 X 9 = 459 நிமிடங்கள்.  அதாவது  - 459 / 60 = 7 மணி 39 நிமிடங்கள்.)

=============================


தேரையர் சித்தர் :- இவைத்தன் இதை என்று புரிய, இவைத்தன் பின் ஒருவனையும் விடாது. பின் இதைத்தன், பின் அதாவது, நீதிமானாக, நிச்சயம் செயல்படுகின்றானே, அறிந்தும், இவைத்தன் நிச்சயம் அறிந்தும், சனீஸ்வரனே. இவனுடைய எதை என்று எடுத்திட்டால், நிச்சயம், பின் எண்ணி, இவ் நேரத்தில் அனைத்தும் முடித்துவிட வேண்டும், இதில் குறைவானாலும், அதிகமானாலும், கஷ்டம், கஷ்டமே. 


சுவடி ஓதும் மைந்தன் :- திருவாசகத்தை எட்டு மணி நேரத்துல முடிக்கணும், எட்டு மணி நேரத்துல முடிக்கணும், அதுக்கு கம்மியானாலும், ஒன்னும் பிரயோஜனம் இல்ல, ஜாஸ்தியானாலும், ஜாஸ்தியானாலும், பிரயோஜனம் இல்லை



==========================================

# ரகசியம் - பரம ரகசியம் - அதி பரம  ரகசியம் 

==========================================



==========================================

# ஏன் திருவாசகத்தை - ஆதி ஈசன் நேரில் வந்து எழுத வேண்டும் ?

==========================================



==========================================

# ஆதி ஈசனாரின் திருவிளையாடல் - திருவாசகம் 

==========================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இவைத்தன், அதாவது, அறிந்தும், சனீஸ்வரன், ஈசனிடம் அறிந்தும், அதாவது, எவை என்று கூற, அறிய, சரியான தண்டனை, யான், பின் உன் பக்தராயினும் கொடுப்பேன் இவைத்தன் அறிந்தும், எதை என்று புரிய.


தேரையர் சித்தர் :- ஆனாலும், (ஆதி ஈசனாரோ) இவைத்தன் சரி, நீ எப்படி கொடுக்கின்றாயோ கொடு. அதற்கு யான் அமைக்கின்றேனே. பின் அதனை, பின் சரியாக யார் ஒருவன், பின் எடுத்துக் கொண்டாலோ, அதைத்தன் நிச்சயம், நீ தாக்கவே முடியாது என்று, ஈசனின் விளையாட்டு இது. ஆனாலும், உணர்ந்ததில்லையே யார்? அறிவதில்லையே யார் ? மனிதன் வாய்க்கு வந்ததெல்லாம் உளறிக்கொண்டு இருக்கின்றானே.


சுவடி ஓதும் மைந்தன் :-  எட்டு மணி நேரம் படிக்கணும், கம்மியா படிச்சாலும், சனீஸ்வரன் பாதிப்பு ஏற்படும், அதிகமா படிச்சாலும், சனீஸ்வரன் பாதிப்பு ஏற்படும், எட்டு மணி நேரம் இந்த பதிகங்களை பாடனும். அதை விட்டுவிட்டு, நீங்க உங்க ஆத்திர  அவசரத்துக்கு பாதியாக கட் பண்ணி, ரெண்டு மணி நேரம் படிக்கிறதும், 15 மணி நேரம் படிக்கிறதும், படிச்சீங்க, அப்படின்னா, இறைவனை வணங்குறதுல, பிரயோஜனம் இல்லைன்றாங்க. நம்ம நினைச்சுட்டு இருக்கிறோம், நான் படிச்சேனே. நாள் பூரா படிச்சேனே, ரெண்டு மணி நேரம் படிச்சேனே. 


ஐயா, அப்படி சொல்லாதீங்க, திருவாசகம் எட்டாவது திருமுறை, நீங்க சனிதேவன் அவர் வந்து எல்லாருக்குமே கஷ்டம் கொடுக்கிறது, நோய் கொடுக்கிறது, யாருன்னா, சனீஸ்வரன் தேவன் தான். அப்ப என்ன சொல்றாருன்னா, ஈசன் கையில முறையிடுறாரு.


போயிட்டு, சனீஸ்வர பகவான். நான் வந்து, நீ என்ன பண்ணாலும், யார் என்ன பண்ணாலும், நான் நோய் கொடுப்பேன், கஷ்டத்தை கொடுப்பேன், எல்லாம் கொடுப்பேன். 


அப்ப இவர் (ஆதி ஈசன் ) என்ன பண்றாரு, சரி, நீ கொடுத்துக்கோப்பா, நானும் எனக்கு ஒரு ஐடியா தெரியும்ல, என் கையில தான் வரத்தை பெற்ற, நீ வந்து, இவர்தான் வரத்தை கொடுத்துட்டாரு. சரி, நீ செய். பரவாயில்லை. ஆனால் அதை  நீக்குவதற்கு வழி சொல்கிறார், அதை நீக்குவதற்கு நான் வழி சொல்லிடுவேன். அப்ப நீ என்ன பண்ணுவ? நான் அமைதி ஆயிடுறேன., நான் யாரை பிடிக்க போறேன்? என்று சொல்லிவிட்டார்  சனீஸ்வரன். அப்ப, இது வந்து திருவாசகம் என்பது, நம்மள வந்து யாருமே ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா சனீஸ்வரன் விட்டாருன்னா, முடிஞ்சு போச்சு. யாரும் ஒன்னும் பண்ண முடியாது. அப்ப அது வந்து என்ன படிக்கணும், திருவாசகம் வந்து எட்டு மணி நேரம் வந்து படிக்கணும், நம்ம வந்து, ஆமா, எட்டாம் திருமுறை, அதை நீங்க படிச்சீங்கன்னா, எந்த கிரகத்தை வெல்லலாம், சனீஸ்வரனை வெல்லலாம், சனீஸ்வரனை வெல்லலாம். 



சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இந்த உரையின் சாரம் என்னவென்றால், முப்பெரும் தேவன், தர்ம தேவன், சனீஸ்வரன் மனிதர்களுக்கு கஷ்டங்களையும் நோய்களையும் தருவார். அவரை  வெல்ல ஒரே வழி, எட்டாவது திரு முறையை அதாவது  திருவாசகத்தில் உள்ள  51 பதிகங்களையும் -  எட்டு மணி நேரம் (459 நிமிடங்கள்)  தொடர்ந்து பாடுவதன் மூலம் தான் அவரின் தாக்கத்தில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ படித்தால் பயன் இல்லை. மேலும் சரியான தண்டனை கொடுப்பார் முப்பெரும் தேவன், தர்ம தேவன், சனீஸ்வரன்.  மிக சரியாக திருவாசகம் அதனை  எட்டு மணி நேரம் (459 நிமிடங்கள்)  முற்றோதல் நிறைவு செய்ய வேண்டும். முப்பெரும் தேவன், தர்ம தேவன், சனீஸ்வரன் தன் சக்தியால் துன்பம் கொடுத்தாலும், இறைவன் ஆதி ஈசனார்  அதற்கான தீர்வை திருவாசகத்தின் வழியாக மனித குலத்திற்கு அருளியுள்ளார். அதனால், எட்டாம் திருமுறையை எட்டு மணி நேரம் (459 நிமிடங்கள்)  தொடர்ந்து பாடுவதன் மூலம் சனீஸ்வரனின் பாதிப்பை வென்று, கிரகங்களின் துன்பத்தையும் தாண்ட முடியும்.)


==========================================

# திருவாசகத்தை - ஆதி ஈசன் நேரில் வந்து எழுதிய காரணம்.

==========================================


தேரையர் சித்தர் :- இவை தன் இவனை (தர்ம தேவன் சனீஸ்வரரை) வென்றுவிட்டால், அனைத்து கிரகங்களும் நன்மை செய்ய காத்திருக்க.


தேரையர் சித்தர் :- இவைத்தன் அதனாலே, இறைவன், அதாவது ஈசன் இறங்கி வந்து எழுதினானே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப இதனாலதான் வந்து ரகசியமா வந்து என்ன பண்ணாரு, அவரு திருவாசகத்தை எழுதிட்டாரு, அப்ப திருவாசகத்தை வந்து படிச்சோம்னா என்ன ஆகும், கிரகங்கள் என்ன ஆகும், இயங்காது, கிரகங்களை வெல்லலாம், கிரகங்களை வெல்லலாம், அதாவது சனீஸ்வரனை வெல்லலாம்னு சொல்றாங்க, சனீஸ்வரன் வெல்லலாம், எல்லா கிரகங்களையும் வென்ற மாதிரின்றாங்க)


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், அனைத்தும், பின் அதாவது, பின் எட்டு, எட்டின் அறிந்தும், பின் நவ, பின் பத்து, இவைக்குள்ளே அனைத்து மந்திரங்களும், நிமிடமும் அறிந்தும், இவை என்றும் கண்ணிமைக்கும், இவை என்று அறிய, அனைத்தும் அடக்கம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எட்டு, ஒன்பது, ஒன்பது, பத்து, இதனுள்ளே. நீங்க மந்திரம் ஜெயிச்சாலும், செகண்ட்ல முடிச்சிடனும், எந்த பதிகங்கள் படிச்சாலும், சொன்னாலும், எட்டு, ஒன்பது, பத்துக்குள்ள முடிச்சிடனும், 


தேரையர் சித்தர் :- ஏன் சொன்னேன்டா, இவை? 


=============================

# விஷ்ணு சஹஸ்ரநாமம் - 12 மணி நேர பாராயண ரகசியங்கள் 

=============================


தேரையர் சித்தர் :- இவைதன் பின் மற்றொன்று அறிந்தும், ஈர்க்க 12 அறிந்தும், விஷ்ணு சஹஸ்ரநாமம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் 12 மணி நேரம் படிக்கணும், விஷ்ணு சஹஸ்ரநாமம்.


தேரையர் சித்தர் :- இவைத்தன் பலனும் அப்படியே கிடைக்கும். அறிந்தும், இதைத்தன் ஏன் என்ற, இவைத்தன் பின் சனீஸ்வரனும் சென்று அறிந்தும், இவைத்தன் பின் நாராயணனும் அறிந்தும், அதாவது அனைத்தும் செய்துவிட்டு, பணம் வந்து, பணம் வேண்டுமென்று உன்னிடத்தில் கேட்பார்களே, அதை யான் தடுக்க அறிந்தும், இவைத்தன் நிச்சயம் இதை என்று எப்படி என்றெல்லாம்?. இதனால் சனீஸ்வரனே, இவைத்தன் நிச்சயம், இதைத்தன் புரிய. ஆனாலும் அருள் இல்லையே, இதை என்று புரிய, இதனால் இவைத்தன் எடுக்க ஏன் இங்கு சொன்னேன், இவைத்தன் ஒரு நாள் முழுவதுமே, பின் இரவு பகல் அல்லது.


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஐயா விஷ்ணு சஹஸ்ரநாமம் எப்படி படிக்க வேண்டும் ? ஒன்று பகல்  12 மணி நேரம் படிக்கணும் இல்லை என்றால் இரவு 12 மணி நேரம் படிக்கணும். அதாவது ஒன்று இரவு 12 மணி நேரம் படிக்கலாம், இல்லை என்றால் பகல் 12 மணி நேரம் படிக்கணும்)


தேரையர் சித்தர் :- இவைத்தன் அர்த்தம் என்ன, இவ் நேரங்களுக்கு அர்த்தம் என்ன, ஏதோ நேரங்கள் செல்கின்றது என்று நினைக்கின்றான் மனித மூடன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( மனிதன் “நேரம் போகிறது” என்று சொன்னாலும், நேரம் உண்மையில் எதற்காக நகர்கிறது, அதன் இயல்பு என்ன என்பதைக் குறித்து அவனுக்குத் தெளிவு இல்லை; 12, 1, 2, 3, 4, 5 என்று எண்ணிக்கொண்டே நேரத்தைப் பதிவு செய்கிறான், ஆனால் நேரத்தின் உண்மையான பொருள் அவனுக்குப் புரியாத புதிராகவே உள்ளது )


================================

# விஷ்ணு சஹஸ்ரநாமம் - இரவு 12 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 

================================


================================

# விஷ்ணு சஹஸ்ரநாமம் - நண்பகல் 12 மணி முதல்  இரவு 12 மணி வரை 

================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் சரியாக இயக்குவது , இதைத்தன் எப்பொழுதும் பின் நின்றால், அறிந்தும், சுற்றும், இதைத்தன் நிறுத்தி, இதைத்தன் பின் பூஜ்ஜியத்தில் தொடங்க நன்று.


சுவடி ஓதும் மைந்தன் :-  (இரவு  12 மணிக்கு தொடங்க வேண்டும். நைட்டு 12, ஜீரோ, ஜீரோ ஆகுற நேரத்துல தொடங்கணும்)


தேரையர் சித்தர் :- இவைத்தன் பூஜ்ஜியமாக இருக்க, அனைத்தும், இவைத்தன் சரியான பின் அறிந்தும், இவைத்தன் சரியான இயக்கத்தில் இருக்கும். அப்பொழுது தொடங்கிவிட்டால், கதிர் இயக்கங்கள் பலமாக நம் மீது விழுந்து, சில பாவங்கள் தொலைந்து, பாவம் என்பது என்ன, பின் ஒட்டிக்கொண்டிருக்கும், பின் கதிர் இயக்கமே, 


அடியவர் :- ( விஷ்ணு சகஸ்ரநாமம் 12 மணி நேரம், காலை, பகல், இரவு, பகல் சொல்றாங்க, அதாவது ஜீரோ பகல் 12 மணியிலிருந்து, இரவு 12 மணி, இல்லைன்னா, இரவு 12 மணியிலிருந்து, மதியம் 12 மணி வரைக்கும் சொல்லணும் என்று சொல்கின்றார்கள்.  எனவே இப்படி சொல்லும்பொழுது, அந்த சுழற்சியில், கதிர் இயக்கங்கள் நம்ம உடம்பு அதிகமா ஈர்க்கும். நல்லதுன்றாங்க)  



================================

# விஷ்ணு சஹஸ்ரநாமம் - அறுவை சிகிச்சை நிலை ஏற்படாது காக்கும் 

================================


தேரையர் சித்தர் :- யார் எவை என்று பின்பற்ற, இவை சொன்னால், பின் அறுவை சிகிச்சை இல்லையடா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த மாதிரி தொடர்ந்து பாராயணம் செஞ்சோம் என்றால் , தேவையில்லை, ஹாஸ்பிடல் போக தேவையில்லை. )


================================

# விஷ்ணு சஹஸ்ரநாமம் - உடம்பை காக்கும் நல் மருந்து

================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் மருந்து, 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது என்னவாம்?  மந்திரம் கிடையாது.  மருந்து. 


தேரையர் சித்தர் :-  அறிந்து, எவை என்று, அனைத்தும் மந்திரங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, மனித மூடன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (எல்லாமே என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் ? விஷ்ணு சஹஸ்ரநாமம் மூலம் இறைவனை துதிக்கிறோம். பகவான் பெருமாள் நாராயணன் அவரை சந்தோஷப்படுத்துறேன். அவருக்கு செய்றோம்னு நினைச்சுட்டு இருக்கிறோம்.  முட்டாள் மனிதர்களே, உன் உடம்பை பார்த்துக் தான்  விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லாம். அதாவது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு நல்  மருந்து) 


தேரையர் சித்தர் :- இவைத்தன் உணராமல், சேர்க்கையான உருண்டையை எடுத்துக்கொண்டால், அதன் பைத்தியமாகி, இன்னும் அதுவே நோய்களாக போயிற்று. அதன் பைத்தியத்தில் பிடித்து, உட்கொள்ளலாம், உட்கொள்ளலாம் என்று. அதுவே ஞாபகம், இவையெல்லாம் எப்படி ஞாபகம் வருமடா?


சுவடி ஓதும் மைந்தன் :-  ( செயற்கை உணவு,  அப்ப என்ன சொல்றாருன்னா, இதெல்லாம் பண்ண முடியாது என்று ,   என்ன செய்தார்கள் என்றால் , மாத்திரை உருண்டை, மாத்திரை எடுத்துக்கணும்னா, நோயே இல்லாம இருக்கும் என்று  உங்களுக்கு  மாத்திரை எடுத்து சொல்லுவாங்க. அப்ப அது என்ன ஆகும் என்றால் , பைத்தியம் மாதிரி, அதையே எடுத்துக்கொண்டு, எடுத்து, எடுத்துக்கிட்டு, அடிக்ட் (adict/அடிமை) ஆயிருவோம்ன்றாங்க. அடிமை ஆயிருவோம்ன்றாங்க. மாத்திரை அடிமை. அடிக்ட் ஆயிடுவோம். அப்ப நீங்க இது இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் மருந்துக்கு அடிக்ட் ஆகுங்க என்று சொல்கின்றார். இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் மருந்துக்கு அடிக்ட் ஆகிவிட்டால்,  நீங்க விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை ஒரு தடவை அடிக்ட் ஆயிட்டீங்கன்னா, உன் நோயே இருக்காது )


====================================

# மருந்து விற்பனை அதிகரிக்க - சில வசிய மருந்துகளை அதில் இடுகின்றனர்

==================================== 


தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் விற்பனை அதிகரிக்க, சிறு மூலப்பொருளை அறிந்தும், மனித தரித்திரன் இன்னும் ஈர்க்க, காசுகள் பொங்க, இதனால் அவை தன் வசியமடா 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( என்ன சொல்றாரு, மூலப்பொருள் சேர்க்கிறாங்க, அது ஒரு மூலப்பொருள் தெரியாம சேர்க்கிறாங்க. அது வசியம். அப்ப நீங்க ஒரு தடவை மாத்திரை எடுத்துக்கினீங்கன்னா, அடிக்ட் (அடிமை) ஆயிடுவீங்க. நீங்க வந்து அடிக்ட் ஆயிடுவீங்க, அப்ப என்ன பண்ணனும், அது எடுத்துக்கிட்டே தான் இருக்கும், அந்த ஞாபகம் வந்துரும், உங்களுக்கு வந்து அந்த நேரத்துல ஞாபகம் வந்துரும். - அதாவது மீண்டும் மீண்டும் மாத்திரை எடுக்க வேண்டும் என்ற நினைப்புதான் அதிகமாகும்) 


தேரையர் சித்தர் :- இறையின்  அன்பு ஏதடா?


சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப நீங்க அந்த ஞாபகத்தில் இருக்கும் பொழுது, இறைவன் மீது அன்பு  எங்க இருக்கும்?  இறைவனை எப்படி நம்ம இறைவனை நம்புவோம்? இறைவனின் நினைப்பு நமக்கு போய்விடும்) 


==========================

# நோய் வராமலே இருக்க அதிகாலை செய்ய வேண்டிய உடற்பயிற்சி 

==========================


தேரையர் சித்தர் :- இவைத்தன் நோய் வராமலே நிற்க, அறிந்தும், அதிகாலை அறிந்தும், இவைத்தன் ஓட, அறிந்தும், கால்களை அறிந்தும், இட்டு, அறிந்தும், பின் விரித்து ஆட, அறிந்தும், கைகளையும் சுற்ற, தலையையும் சுற்ற….


=====================================

# வில்வம் + துளசி  + அருகம்புல் - அதிகாலையில் வெறும் வயிற்றில்..

=====================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் பின் இடித்து, பின் துளசி தன்னிலும் , வில்வ இலையிலும், பின் அருகம்புல்லையும் (Bermuda Grass), பின் அதி , அதி , காலையிலே, பின் உட்கொள்ள, உட்கொண்டு, உட்கொண்டு வளர, அனைத்தும், பின் உடம்பில் உள்ள பல கதிர் இயக்கங்கள், பின் அறிந்தும், வெளியே வந்து, உடம்பும் ஆரோக்கியமடா. 


(பின்வரும் காணொளி பகுதியில் எப்படி இந்த பயிற்சி செய்யவேண்டும் என்று அடியவர் செய்து காட்டியதை பார்த்து,  அது போல் அனுதினமும் அதிகாலையில் உடல் பயிற்சி செய்க. இவ் அடியவர் செய்தது புண்ணியம் என்று சுவடி ஓதும் மைந்தன் உரைப்பதை கேளுங்கள். எனவே அடியவர்கள்  இது போல நமது அன்பு அடியவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள். நமது  அடியவர்கள் உடல் நலமாகும். இதனால்  உங்களுக்கும்  புண்ணியங்களும் கிட்டும்.) 


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=4h52m34s



=====================================

# வில்வம் + துளசி  + அருகம்புல் - தீய கதிர்வீச்சுகள் உடலை விட்டு வெளியேறும்.

=====================================


சுவடி ஓதும் மைந்தன்  :- கேட்டுக்கோங்கம்மா, அம்மா தெரிஞ்சுக்கோங்கம்மா, இதெல்லாம் நோய் வராம, ஏன்னா இந்த காலகட்டத்துல நோய் வருமாம். தேரையர் சொல்றாரு, இது மாதிரி செஞ்சு, நீங்க என்ன பண்ணனுமா, சொல்லுங்க ஐயா. துளசியும், அருகம்புல்லையும், வில்வத்தையும், எடுத்துக்கிட்டு வந்தீங்கன்னா….


அடியவர் :- ( வெறும் வயித்துல எடுத்துட்டு வரணும், இந்த தீய கதிர்வீச்சுகள் வந்து வெளியில போகும்ன்றாங்க. ) 


==================================

# வில்வம் + துளசி  + அருகம்புல் + அங்கபிரதட்சணம் ரகசியங்கள் 

==================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இதைத்தன் பின் மதிய வேளையிலே அறிந்தும், இதைத்தன் நிச்சயம் அதிகாலையிலே, பின்பு இவை எடுத்து, பின்பு, பின் அஷ்டாந்திரமாக, பின் அறிந்தும், பின் உடம்பை சுற்ற. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( வில்வம் + துளசி  + அருகம்புல்  அதிகாலையில் எடுத்துக் கொண்டு, உங்கள் விருப்பம் போல்   உங்கள்  இல்லத்தில் அல்லது ஆலயத்தில் அங்கபிரதட்சணம் செய்ய வேண்டும். இப்படி அங்கபிரதட்சணம்  செய்தல் என்ன ஆகும் ?)


==================================

# (1) அதிகாலை + (2) வில்வம் + (3) துளசி  + (4) அருகம்புல் + (5) அங்கபிரதட்சணம்   நோய்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறிவிடும் ரகசியங்கள்

==================================


தேரையர் சித்தர் :- ஆங்காங்கு பதியுமடா, இச்சாறு. பின் எங்கேயடா, நோய் பயப்பட்டு ஓடி விடுமடா, 


சுவடி ஓதும் மைந்தன்  :-   ( அதிகாலையில் , துளசி , வில்வம் , அருகம்புல் சாறு வெறும் வயிற்றில் எடுத்து அங்கபிரதட்சணம் ஆகா உடலை சுற்ற வேண்டும். அங்கங்க என்ன ஆகும், சாறு உடலின் உள்ளே இறங்கும். அப்ப நோய் என்ன ஆகுமாம்? பயந்து ஓடிவிடும்)


தேரையர் சித்தர் :- ஆரோக்கியமே, மனிதனிடத்தில் அறிந்தும், இவைத்தன் சித்தர்கள், எவை என்று அறிய, யாங்கள் பயன்படுத்தினோம், எவை என்று கூட, ஆண்டுகள், ஆண்டுகள், அவை என்று, எவை என்று அறிய, பின் ஊன் உடம்பை வைத்துக்கொண்டு, உயிரை வாழலாம், பின் பல வருடங்களாக, 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இந்த உடம்பை வச்சுக்கிட்டு, நாங்க எல்லாம் சொல்றதை செஞ்சீங்கன்னா, என்ன ஆகுமா, பல வருடங்கள் நாங்க வாழ்ந்தோம்பா, அப்படின்றாங்க.


தேரையர் சித்தர் :- இன்னும் மனிதனுக்கு எழுதி வைத்தோமே, அழகாக, பின் சுவடிகளில் , ஆனால் காசுக்காக, அனைத்தும் விற்றுவிட்டானே, ஏன், எதற்கு என்றால், பின் அவன் லாபம் அடைய வேண்டுமே, மனிதன், 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இதெல்லாம் எழுதிட்டு வச்சாங்க, இருக்குது, ஓலைச்சுவடியில். ஆனா என்ன ஆனது?  நம்ம மனுஷன் காசு சம்பாதிக்கணுமே என்று அதை எல்லாம் விற்றுவிட்டார்கள் .) 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் நோயோடு உடம்பா, உடம்போடு நோயா?


====================================

# இனிப்பு நோய்க்கு  அதாவது சர்க்கரை நோய்க்கு  மருந்து தயாரிக்கும் வாக்கு ஆரம்பம்  - பின் வரும் வாக்கை பல முறை நன்கு உள்வாங்கி படிக்கவும். அனைவருக்கும் சொல்லவும்.

====================================


==================================

# (1) மதிய வேலை நெல்லிக்கனியை மென்று தின்ன நன்று.

==================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் இப்படி செய்ய, இதைத்தன் இடித்து, அறிந்தும், மதிய வேலை தன்னிலே, அறிந்தும், நெல்லிக்கனியை மென்று தின்ன, நன்று, 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (நெல்லிக்கனியை மதிய வேலையில் சுவைத்து சாப்பிடணும்.) 


=======================================

# பீடைகள் நீக்கும் ரகசியம் 

(1) கொய்யா இலை

(2) மா இலை

(3) அரச இலை

(4) வெற்றிலை  

(5) செம்பருத்தி இலைகள், பூக்கள், 

தனித்தனியாக தண்ணீரில் இட்டு  நன்கு  கொதிக்க வைத்து, அது நன்றாக காய்ந்த பிறகு தனித்தனியாக அந்த  தண்ணீரை குடிக்க வேண்டும். பழங்கள் உண்ண வேண்டும்.

=======================================


தேரையர் சித்தர் :- இவை என்று அறிய, பின் பழங்களோடு, பின் இதை என்று, கொய்யா மா , அரச இலை, இதை என்று, இதனுள்ளே அடக்கம், 


தேரையர் சித்தர் :-  இவை என்று அறிந்து, இதைத்தன் நிச்சயம் தன்னில், அறிந்தும், இவைத்தன் பின் சூடியேற்றி, இதைத்தன் அதன் நீரை, பின் உட்கொள்ள, மறையுமடா, பீடை. 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் வெற்றிலை


தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் செம்பருத்தியை, 


தேரையர் சித்தர் :- இதைத்தன் செம்பருத்தி, செம்பருத்தி, இலைகள், பூக்கள், இவைத்தன் மாறுமடா, இப்பொழுதெல்லாம் பெருக்கெடுத்து ஓடுகின்றதே, இனிப்பு  நோய்  என்று, 


சுவடி ஓதும் மைந்தன்  :-   ( மாங்காய் இலை, பிறகு கொய்யா இலை, அரசமரத்தின் இலை, வெற்றிலை, செம்பருத்தி இலை - இவற்றை தனித்தனியாக  தண்ணீரில் இட்டு  நன்கு  கொதிக்க வைத்து, அது தனித்தனியாக  நன்றாக காய்ந்த பிறகு, தனித்தனியாக  அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.) 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   :-   (என்ன செய்யவேண்டும் , கொதிக்க வைக்கணும்.  சுகருக்கு மருந்து சொல்றாங்க. இதெல்லாம் நீங்க டெய்லி செஞ்சு வந்தீங்கன்னா, என்ன ஆகுமா, சுகர் ஓடி போயிரும். என்ன சொன்னாரு, அது வந்து நெல்லிக்காய், இனிப்பு, இப்ப எல்லாம் வருகிறது. நெல்லிக்காய், துவர்ப்பு, அதை மென்னு சாப்பிடணும், ருசிச்சு சாப்பிடணும், அதுக்கப்புறம் மா இலையை கொதிக்க வைத்து குடிக்கணும். கொய்யா இலையை கொதிக்க வைத்து குடிக்கணும். அரச இலையை கொதிக்க வைத்து குடிக்கணும். சரிங்களா, அதுக்கப்புறம் வந்து, இது, இதெல்லாம் ரெக்கார்ட் ஆகுதுங்களா, ஏன் இதெல்லாம் பொக்கிஷம், இதெல்லாம் யாருக்கும் தெரியாது, ஏன்னா உங்களுக்கு இந்த காலகட்டத்துல எது முதல்ல எடுத்துட்டு வந்து விட்டார். பாருங்க  பணத்தை பத்தி எடுத்துட்டு வந்து விட்டார். அடுத்து நோயை பத்தி எடுத்துட்டு வந்து விட்டார். எல்லாமே சொல்லுவாங்க சித்தர்கள்.  முதல்ல ஒரு மனுஷனுக்கு என்ன தேவை, பணம். அதை பற்றி சொல்லிட்டாங்க. நோய் வந்துச்சுன்னா, என்ன ஆகும்? ஒன்னும் பண்ண முடியாது.  நம்ம என்ன பண்ணுவோம்னா, எல்லாத்தையும் மொத்தமா போட்டு, கொதிக்க வச்சு சாப்பிடுவோம், கிடையாது அப்படி செய்ய கூடாது.  அந்த அறுசுவை  உடம்புக்குள்ள இறங்கணும், அறுசுவை இருக்கு, பாருங்க, இப்ப மூலிகை குடி குடிச்சோம், பாருங்க, அதுல அருகம்புல், வில்வம், துளசி, வேப்பிலை, அத்தி இலை, நெல்லிக்காய், எலுமிச்சை, சுக்கு, எல்லாமே இருக்கு, அறுசுவை, இதே போல, அறுசுவையில, இந்த இந்த இந்த எடுத்துட்டீங்கன்னா, சுகர் ஓடிடும்ன்றாங்க, சுகர் ஓடிடும்ன்றாரு. ஓகேங்களா) 


==========================================

#   அங்க பிரதக்ஷணம் - தனித்தனியாக அந்த  தண்ணீரை குடித்த பின்னர்.

==========================================


=======================================

# சர்க்கரை (இனிப்பு) நோய் - உங்களை பார்த்து பயந்து ஓடும் 

======================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் அங்க பிரதக்ஷணம் செய்ய, ஓடுமடா, இனிப்பு நோய். 


சுவடி ஓதும் மைந்தன்   :-  இதை இதை சாப்பிட்டுட்டு, நீங்க அங்க பிரதக்ஷணம் செய்தால் , உங்க வீட்டுக்குள்ள, நீங்களே அங்க பிரதக்ஷணம், அங்க பிரதக்ஷணம் செய்யுங்கன்றாங்க, உடற்பயிற்சி மாதிரி.


தேரையர் சித்தர் :- இவைதன் தயங்குவான், மனிதன்.


சுவடி ஓதும் மைந்தன்   :- (இதை செய்றதுக்கு மனிதன் அசிங்கப்படுவானாம், தயங்குவானாம்.)


தேரையர் சித்தர் :- ஆனால் மருத்துவமனைக்கு சென்றால், அழகாக, அனைத்தும், எவை என்று அறிய, ஐயயோ என்று.


தேரையர் சித்தர் :- இதைத்தன் இயக்க, பின் இவை என்று, பின் அறிந்தும், இவைத்தன் வாரத்திற்கோ, வருடத்திற்கோ, இரண்டு வருடத்திற்கோ, கதிர் இயக்கம் பலமாக படுகின்ற பொழுது, இதைத்தன் உடம்பு தாங்க முடியாமல், இவைத்தன் பின் சுலபமாக இருந்தால், அவ் கதிர் இயக்கம் பின் பட்டால், பின் இறப்படா. பின் நிச்சயம் திடீர் இறப்படா, 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்    :-  ( நம்மை அறியாமல் சில கதிர் வீச்சுகள் நமது உடம்பில் ஏறிவிடும். சித்தர் சொல்வதை எல்லாம் சாப்பிட்டால் அவ் கதிர்வீச்சில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இல்லையெனில் …….? ? ? திடீர் இறப்பு…..)


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment