வணக்கம் அகத்தியர் அடியவர்களே
குருநாதர் அகத்திய பெருமானின் கட்டளைப்படி இலங்கையில் கூட்டு பிரார்த்தனை சிவபுராணம் பாராயணம் நிகழ்வு நடைபெற உள்ளது..
கதிர்காமத்தில் கூட்டுப் பிரார்த்தனை
பதினெட்டு சித்தர்களில் மூத்த சித்தரான ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் ஜீவநாடி அருள் வாக்குக்கு அமைய கதிர்காமத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை ஸ்ரீ அகத்தியர் கூட்டுப்பிரார்த்தனை குழுவினர் ஏற்பாடு செய்யும் கூட்டுப்பிரார்த்தனையானது கதிர்காமம் தெய்வானை அம்மன் சந்நிதியில் நடைபெறும் .காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வு மாலைவரை நடைபெறவுள்ளது. இதில் ஜீவ நாடி வாசித்து, சிவபுராணம் கோளறுபதிகம் முற்றோதுதல் இடம்பெறும்.
இந்நிகழ்வுக்காக தமிழ்நாட்டில் இருந்து ஜீவ நாடி வாசிக்கும் அருளாளர் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா கலந்து கொள்கிறார்.
இலங்கைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்தை குறைத்திடவும் இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டியும் இக் கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும்.
அனைவரும் இந்த புண்ணிய கைங்கரியத்தில் கலந்துகொண்டு அருள் பெறுவதோடு நமது நாட்டையும் மக்களையும் பாதுகாப்போமாக.
இது சித்தர்கள் நமக்கு கொடுக்கும் அரிய வாய்ப்பு.
இதில் சித்தர்கள் ஜீவ நாடியின் மூலம் நம்மோடு தொடர்புகொண்டு வாக்குரைப்பார்கள். அனைத்து சித்தர்களின் நேரடி ஆசிகளைப்பெற வாருங்கள் (தொடர்பு எண் ; 0719560460, 07776099 55,0777318030)
-எச்.எச்.விக்கிரமசிங்க
உலக நன்மைக்காக கதிர்காமத்தில் அகத்திய மாமுனிவர் தலைமையில் நடைபெற இருக்கும் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை அழைப்பிதழ்.
ஓம் நமசிவாய
தேதி: 19/12/2025, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடம் கதிர்காமம் கந்தன் திருக்கோவில், இலங்கை.
அனைவரும் வருக! இறையருள் பெறுக
மற்றும்
உலக நன்மைக்காக நகுலேஸ்வரத்தில் அகத்திய மாமுனிவரின் தலைமையில் நடைபெற இருக்கும் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை அழைப்பிதழ்.
ஓம் நமசிவாய
தேதி: 23/12/2025, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
இடம்: கீரிமலை தீர்த்தக்கரை மண்டபம், யாழ்ப்பாணம்
அனைவரும் வருக! இறையருள் பெறுக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!


.jpeg)
No comments:
Post a Comment