அன்புடன் அகத்திய மாமுனிவர் 26/12/2025 அன்று இலங்கை சர்வதேச வானொலி ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனம் நேத்ரா TV, தமிழ் மொழி தொலைக்காட்சி சேனலில் உரைத்த வாக்கு.
உலக சர்வதேச வானொலி வரலாற்றில் முதன் முறையாக நேரடி நேர்காணலில் குருநாதர் உலகத்திற்கு உலக நன்மைக்கு உரைத்த வாக்கு
தேதி : 26/12/2025, வெள்ளிக்கிழமை
இடம் : இலங்கை சர்வதேச வானொலி ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனம், தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல் , நேத்ரா TV
Youtube Link :- https://www.youtube.com/watch?v=ZoF1iuLw-Ro
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
பின் அறிந்தும் இவை யாவும் , அதாவது மானிட குலம் அறிந்தும் என்னவென்று தெரியாமலே, அதாவது கலியுகத்தில் பின் அழிந்து கொண்டே போகும். போகும் எதனால் என்பவை எல்லாம் மனிதன் அறிந்திராது. ஏனென்றால் பின் வரும் பின் காலங்களில் அறிந்தும் செயற்கையாகவே அனைத்தும் மாறும். இவ் செயற்கையாக மாறுகின்ற பொழுது, அனைத்தும், அதாவது மூளை செயலிழந்து போகும். இதனால் என்னென்ன, ஏது என்றெல்லாம் அறியாமல், அதாவது செயற்கையை மனிதன் பயன்படுத்தினால், பின் உடம்பில் உள்ள உறுப்புகள் பாழாகி என்னென்ன நோய்கள் வரும் என்பதை எல்லாம்.
அவை மட்டுமில்லாமல், அறிந்தும் இன்னும் மனிதன், அதாவது என்னென்ன செய்கின்றானோ, அதற்கு தகுந்தார் போலே, இயற்கையும் நிச்சயம் தன்னில் கூட. அதாவது நிச்சயம் மனிதன் என்ன செய்கின்றானோ, அதை நிச்சயம் தன்னில் அறிந்தும், மீண்டும் இயற்கையானது அழிவுகளை ஏற்படுத்தும்.
இதனால்தான், பின் நல் மனதாக உயர்ந்த எண்ணங்களோடு பறந்த, பின் பறந்த அறிந்தும் கூட, மனத்தோடு இருந்தால், இறைவன் தன் மனதில் நிற்பான்.
அப்படி பின் நின்றால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வுலகத்தை எப்படி, ஏது என்றெல்லாம் புரியும்.
புரிந்தும் அறிந்தும் கூட, எதை என்று கூட, இறைவனையும் காணலாம்.
ஏன், எதற்கு இறைவன் யார் என்பவன், அறிந்தும் புரிந்தும், எதற்காக இத்தனை இத்தனை, பின் தேடி தேடி, மனிதன், அதாவது மனிதன் தான், அதாவது இவ்வுலகையே கெட்டு, அதாவது பின் அறிந்தும் புரிந்தும்.
இறைவன் அனைவரையும் அழகாக படைத்து, பின் அனைத்தும் தந்து கொண்டேதான் இருக்கின்றான். ஆனால் மனிதனோ, பின் அழிவுகள் அறிந்தும் புரிந்தும், இதனால், பின் கலியுகத்தில் அழிவுகள் மனிதனால் தான் வரும்.
================================
# எப்போது அழிவுகள் நிற்கும் ?
================================
மனிதன் எப்பொழுது நல் மனதாக திருந்துகின்றானோ, அப்பொழுது இவ்அழிவுகள் நிற்கும். மனிதனின் எண்ணங்கள் சரியில்லை என்றால், பின் மனிதன் தீய தீயதன்னில் கீழே இறங்கிக் கொண்டே வந்தால், அறிந்தும் புரிந்தும், பின் அனைத்தும் அழிவுகளை சந்திக்க நேரிடும்.
இதனால்தான், அறிந்தும் எதை என்று புரிய, பக்தி ஒன்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும். இன்னும் ஆழமான பக்தியை அறிந்தும், எவை என்றும் கூட, பின் மக்களுக்கு, பின் தெரியப்படுத்தினால், பின் இதன் மூலம், பின் அறிவு வளரும். நல் சிந்தைகள், நல் சிந்தனைகள் வளரும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும்,
இவ்வாறு நல் சிந்தனைகள் வளர்கின்ற பொழுது, எப்பொழுது பின் செயற்கையாக, பின் எதை என்று அனைத்திலும், எப்பொழுதும் எதை என்று புரிந்தும் கூட, செயற்கையாகவே, மனிதன் எதை என்று புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இதனால், ஒரு நாள், எதை என்று புரியாமலும், திடீரென்று, நிச்சயம் தன்னில் கூட, பல நோய்கள் வந்துவிடும். பல பலவற்றையும் கூட சந்திக்க நேரிடும். என்ன, ஏது என்றெல்லாம், பின் உடம்பு அறிந்தும் கூட, பின் அதாவது அதி விரைவிலே, எதை என்று புரியாமல், திரண்டு அறிந்தும் புரிந்தும், இவை ஒன்று ஞானத்தை பெறாமல், இறைவனை காணாமல், நிச்சயம் பின் அழிந்துவிடும் இவ்வுடம்பு.
இதனாலே பரிசுத்த அறிந்தும், பின் புரிந்தும் என்ன, எதுவென்று புதுமையான கால யுகத்தில் அறிந்தும் புரிந்தும் கூட. இதனால்தான், பின் அனைத்து, பின் அதாவது தேவாதி தேவர்களும், நிச்சயம் தன்னில் ரிஷிமார்களும், எப்பொழுதெல்லாம் அதர்மம், பின் தலைக்கீழ் நிற்கின்றதோ, அப்பொழுதெல்லாம் நாங்கள் பிறந்து அறிந்தும் மக்களை காப்பாற்றுவோம் என்பதை எல்லாம்.
அதேபோலத்தான் வருங்காலத்தில் மனிதனுக்கு, அதாவது கலியுகத்தை எப்படி வெல்லலாம் என்பவை எல்லாம் தெரியாதப்பா, அப்பனே. இதனால் புதுமையான விஷயங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அப்பனே, பின் ஞானவான்கள் வருவார்கள், அப்பா. மனிதர்களுக்கு தெளிவுகள் பெற, அப்பனே.
ஏனென்றால், அப்பனே, நிச்சயம் மனிதனே, அப்பனே, எண்ணற்ற, அப்பனே, பின் எவை என்று புரியாமலும் கூட, பின்னிப் பிணைந்துள்ளது என்பேன், அப்பனே. சில சில துகள்களாயினும், அப்பனே, எவை என்று உரிய, அப்பனே. இதனால் அனைத்தும் சூரியனுக்கும் சரி, அப்பனே, இன்னும் சந்திரனுக்கும் சரி, அப்பனே.
=============================
# புவிக்கு வயதாகிக் கொண்டே போகின்றது.
# புவியின் வேகம் குறைந்து கொண்டே வருகின்றது.
=============================
அவை மட்டுமில்லாமல், அப்பனே, புவிக்கு, அப்பனே, வயதாகிக் கொண்டே போகின்றது என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, பல அழிவுகள் சந்திக்க நேரிடும் என்பேன், அப்பனே.
இதைத்தன் எவ்விஞ்ஞானங்களாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடிக்க முடியாது, அப்பா.
இதனால், அப்பனே, புவியின், அப்பனே, பின் இவ்வாறு சரியான வேகத்திலே, அப்பனே, புவியானது எதை என்று புரிய, அப்பனே, சுற்றிக் கொண்டிருந்தாலே, அப்பனே, அனைத்து இயக்கங்களும் சரியாகிவிடும்.
ஆனாலும், அப்பனே, வயதாக, அப்பனே, புவியின் வேகம் குறைந்து கொண்டே வர வர, அப்பனே, மனிதன் எண்ணங்கள் மாறும், அப்பா.
அப்பனே, அதாவது ஒவ்வொரு, அப்பனே, நிச்சயம் வருடத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சிறிது, அப்பனே, பின் அதாவது குறையும், அப்பா.
இதனால், அப்பனே, நிச்சயம் அவ்வாறு குறைகின்ற நேரத்தில், அப்பனே, எங்கோ ஒரு அழிவு ஏற்படுகின்றது என்பேன், அப்பனே.
ஆனால் இதை சரியாக மனிதனால் கணிக்க முடியாது, அப்பா. அப்பனே, சித்தர் பெருமக்களாலே கணிக்க முடியும் என்பேன், அப்பனே.
===================================
# பூமியின் வேகத்தை அதிகரிக்க…
===================================
இதனால்தான், அப்பனே, அவ்வழிவும் தடுக்க வேண்டும்.
அப்பனே, சரியான புவியின் வேகத்தை கூட அதிகரிக்க வேண்டும். அப்பனே, அதை எப்படி என்றால், மனிதனால் மட்டுமே முடியும் என்பேன், அப்பனே.
================================
# ஒருமுறை மனிதன் பேசினால் ஒரு கோடி துகள்கள் வெளியே வருகின்றது
================================
இதனால், அப்பனே, சாதாரணம் இல்லை. அப்பனே, மனிதனின் சொல் சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே. மனிதனின் சொல்லில், அப்பனே, அவ்வளவு எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, ஒரு முறை, அப்பனே, மனிதன் பேசினால், அப்பனே, நிச்சயம் ஒரு கோடி, அப்பனே, துகள்கள் வெளியே வருகின்றது என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
இதை யார் அறிவார்? எவரும் பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனிடத்திலே அனைத்து திறமைகளும் ஒளிந்திருக்கின்றது என்பேன், அப்பனே.
இவை சரி செய்யவே, அப்பனே, மனிதனுக்கு தெளிவு பெறவே, அப்பனே, மனிதனுக்கு தெளிவுகள் சரியாக, அப்பனே, யாங்கள் கற்பித்துவிட்டால், மனிதன் வாழ்ந்து கொள்வான், அப்பனே.
தன்னை சார்ந்தோரும் வாழ வைப்பான் என்பேன், அப்பனே. இவ்வாறு வாழுகின்ற பொழுது, சந்தோஷமாக வாழ்ந்து, இறைவனையும் காண்பான் என்பேன், அப்பனே.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்
இன்னும், அப்பனே, பல வகையில் கூட மனிதருக்கு எடுத்துரைக்க போகின்றேன், அப்பனே. சித்தர்கள் யாவரும் நலம் அறிந்து, அப்பனே, வருவார்கள், அப்பா. தெரிந்து கொள்வார்கள் என்பேன், அப்பனே. இன்னும் கூட, அப்பனே, ஞானங்கள்.
ஆசிகள் !
ஆசிகள் !!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)

No comments:
Post a Comment