​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 17 December 2025

சித்தன் அருள் - 2041 - அன்புடன் அகத்தியர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8!



உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை

====================================

# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 

====================================

ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே. 

(மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8) 

================================

(வணக்கம் கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களே ,  கூட்டுப் பிரார்த்தனை மூலம் என்னென்ன நன்மைகள் இவ் உலகிற்கு நடந்துள்ளது என்று இந்த பதிவில் காண்போம்)

===============================

===========================================

# ஒரு மிகப்பெரிய பூகம்பத்தை அகத்திய மாமுனிவர் தடுத்து விட்டார்கள் 

===========================================

தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் அகத்தியன் குருநாதன் பல வகைகளும் கூட, பின் பூகம்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடுத்துவிட்டான். அறிந்தும் இதை என்று ஒரு பத்து நாட்களுக்கு முன்பே, 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  நமச்சிவாய அகத்தியர் பத்தி சொல்றாரு. பூகம்பம் ஏற்பட்டிக்கணும். என்ன பண்ணிட்டாரு? தடுத்துட்டாங்க ஐயா, தடுத்துட்டார். 

==================================

# கூட்டுப் பிரார்த்தனை - ஒற்றுமையே வலிமை

=================================

தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிய, இதனாலே ஒற்றுமையே வலிமை. ஒற்றுமையாக இருந்து போராடினால், இறைவனிடத்தில் நிச்சயம் அனைத்தும் மாறிடும்டா. அதனால்தான் அழைத்தோமடா.  

சுவடி ஓதும் மைந்தன் :- ஒற்றுமையே வலிமை. ஒரு பழமொழி உண்டு, எல்லாரும் வந்து சேர்ந்து, இறைவனிடத்தில் ஃபைட் பண்ணீங்கன்னா, என்ன பண்ணனும்? ஃபைட் பண்ணனும். இதெல்லாம் நீங்க என்ன பண்றீங்க? ஃபைட் பண்ணிட்டு, ஃபைட் பண்ண வரோம். நம்ப, உலக மக்கள் விதியை மாத்துறோம். நம்ம ஃபைட் பண்ணி, சண்டை போட வரோம்.  இறைவன் கையில, எப்பா காப்பாத்துப்பா. நாங்க சிவபுராணம்  பாடுறோம் இல்ல, எல்லாம் வரோம் இல்ல, அங்கிருந்து வரோம் இல்ல, காசு கொடுத்து எல்லாம் இது வரோம் இல்ல. அதனால வந்து, நீ காப்பாத்துறேன்னு, ஃபைட் பண்றீங்க. 

=====================

# (சித்தன் அருள் - 2027 - அன்புடன் அகத்தியர் - அண்ணாமலை கார்த்திகை தீபவாக்கு!)

=====================


தேரையர் சித்தர் :- ஏன்? அண்ணாமலையில் அறிந்தும், குரு, குருநாதன் சொன்னானே, அறிந்தும் ஈசன் அவை தன் தீபத்தை பின் மறைத்து விடலாம் என்று எண்ணி, அவ் மறைத்திருந்தால், உலகம் இருளில் மூழ்கி இருக்கும். ஆனால் அகத்தியனே, மன்றாடி, பின் வந்திருக்கிறார்களே  என்று, விட்டுவிடு என்று சிறிது நேரம் காண்பித்தானடா. புத்தி கெட்ட மனிதர்களே, யார் அறிவார் இது ?


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  ( பெருங்கருணை. அந்த திருவண்ணாமலை வாக்கு படிச்சு, எத்தனை பேர் படிச்சீங்கன்னு தெரியல. திருவண்ணாமலைக்கு வந்து கூட்டு பிரார்த்தனைக்கு போக சொன்னார், தெரியுதா? இப்ப ஏன் அங்க போக சொன்னார், தெரியுங்களா? ஏன்னா, கொஞ்சம்  விட்டு இருந்தால், ஈசன் என்ன பண்ணிருப்பாராம்? கார்த்திகை தீபத்தை அணைச்சிருப்பார். இந்த நேரத்துல அவர் முடிவு எடுத்துட்டாரு, வேணாம்டா, தேவையில்லை என்று  சொல்லிட்டு. ஆனாலும் குருநாதர் அகத்திய மாமுனிவர் என்ன  செய்தார்கள் என்றால் , ஈசனாரிடம் சென்று , முறையிட்டு -  வேணாம்ப்பா, உன்னை தேடி இத்தனை பேர் கூட்டுப் பிரார்த்தனைக்கு வந்தாங்க. ஏன்னா, அதனாலதான் முருகரே பாடுனாருங்க. ஐயா, பாட்டு.. திருவண்ணாமலை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஓகேங்களா? அதனால …)


தேரையர் சித்தர் :- இவை அறிவித்து அறிந்து, ஏதோ பின் உட்கார்ந்து, பின் இருக்கின்றோமே என்று நினைக்காதீர்கள். புண்ணியங்கள், புண்ணிய ஆன்மாக்களே, அதற்கு வலுவூட்டி, அறிந்தும் மற்றவர்களுக்கு சேவை செய்ய.


சுவடி ஓதும் மைந்தன்  :-   நீங்க சும்மா உட்கார்ந்து நினைக்காதீங்கம்மா. புண்ணிய ஆன்மாக்கள், அந்த ஆன்மாக்கு நான் இன்னும் கொடுக்கிறேன், இன்னும் நான் வலு கொடுக்கிறேன். நீங்க போய் நல்லது செஞ்சுக்கோங்க, நல்லா இருங்கன்னு சொல்றாரு. ஐயா, புரியுதுங்களா? 


தேரையர் சித்தர் :- இவைத்தன் இதை ஒருத்தனுக்கு கொடுத்தால், அவன் சுயநலக்காரனாக பயன்படுத்திக் கொள்வான், பணம் ஈட்டுவான். அனைவரையும் அழைத்து வந்து, இப்பொழுது அறிந்தும், இப்படி பின் கொடுத்தால், நீங்கள் அறிந்தும், பின் அச்சக்திகளில் உன் இல்லத்தில் பின் கொடுக்க, பின் இல்லம் சுபிட்சமாகும். இதனால்தான் வரச் சொன்னார்கள் சித்தர்கள். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  நம்ம எல்லா பேரையும் இதுக்காகத்தான் கூட்டு பிரார்த்தனை மொத்தம் சொல்லி இருக்காங்க. இப்ப உங்க வீட்டு, உங்க வீட்ல பத்து பேர் இருப்பாங்க, உங்க வீட்ல அஞ்சு பேர் இருப்பாங்க, உங்க வீட்ல ரெண்டு பேர் இருப்பாங்க. அப்ப என்ன ஆகும்னா, சில புண்ணியங்கள் எல்லாம் இங்க தருகின்ற பொழுது, நீங்க அங்க போய் காலை வச்சு என்ன ஆகும்? பகிரப்படும் உங்க பிள்ளைகள் என்ன ஆகும்? கொஞ்சம் நல்லா இருப்போம், கொஞ்சம் மாறும். இங்க தெரிஞ்சுக்கிறதுக்கு எல்லாம் வந்து, நீங்க பண்ணுவீங்க இல்ல? ஏதாவது ஒன்னு அடுத்து காசு வரப்போகுது, ஒரு ரூபாய். ஐயா, காயின் வந்துரும், எல்லாம் காயின் வந்துரும். 


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :- சாதாரணம் இல்ல, உங்களுக்கு கொடுக்கிறாருன்னு சொல்றாரு. நீங்க வந்து நாலு பேருக்கு அதான் சொல்லுங்க. ஐயா. நம்ம குருநாதர் வந்து என்ன சொல்றாங்கன்னா, நம்ம அதாவது இங்க வர்றவங்க கூட்டு பிரார்த்தனைக்கு வர்றவங்க எல்லா பேருக்கும் புண்ணிய ஒளி அவங்க கொடுக்குறாங்க. ஏன்னா, எல்லா புண்ணியங்கள் செய்யறதுக்கு, நமக்கு புண்ணியம் தேவைப்படுறது. அந்த எண்ணங்கள் தோன்றதுக்கே, அதுக்காக அந்த புண்ணிய ஒளியை நம்ம கொடுக்கிறோம்னு சொல்லி இருக்காங்க. அந்த புண்ணிய ஒளியை நம்ம என்ன வாங்கிட்டு போயி, அந்த புண்ணிய ஒளி நம்ம மேல பட்டு வீட்டுக்கு போறப்போ, வீட்ல புண்ணிய ஒளி தெரிக்குமாம். அப்படி தெரிக்கிறப்போ, உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் இந்த புண்ணியங்கள் பரவும். ஒருத்தருக்கு இது கொடுத்தா, சுயநலம். அதனால, உங்க எல்லா பேரையும் கூப்பிட்டு, மொத்தமா இந்த புண்ணியங்களை நான் உங்களுக்கு கொடுக்கிறேன்ப்பா. குடும்பத்தினர் எல்லாருக்கும் பகிர்ந்துக்கோங்க.


===================================

# உங்கள் இல்லங்களில் மண் அகல் தீபங்களில் கிராம்பையும் பச்சை கற்பூரத்தையும் இட்டு ஏற்றுங்கள். அத்தீபம் நிச்சயம் பின் ஈர்க்குமடா சில சக்திகளை. உங்கள் இல்லங்களில் தீய சக்திகள் அலறியடித்து ஓடும்  நீரை போலே.

==================================


தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும், இவைத்தன் சக்திகள் ஈர்க்குமடா. யான் சொன்னேனே, இங்கு அறிந்தும், இவைத்தன் சரியான தீபத்திலே அறிந்தும், இவைத்தன் பின் இட, அதாவது நவதானியங்கள் தூள் செய்து அறிந்தும், இவைத்தன் பின் அறிந்தும், பின் பலமாக, பின் எரியும், பின் நெருப்பு தன்னில் அறிந்தும், அதில் ஈய. இவை மட்டுமில்லாமல், எதை பின் கிராம்பையும் அறிந்தும், சிறிதளவு பின் பச்சை கற்பூரத்தையும் பின் இட்டு, அதை எரித்துக் கொண்டு அறிந்தும், அத்தீபம் நிச்சயம் பின் ஈர்க்குமடா சில சக்திகளை. சில தீங்கு விளைவிக்கும், பின் அறிந்தும், பின் தீய சக்திகள் ஓடுமடா  நீரின் போலே.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  என்ன சொல்றாருன்னா, உங்களுக்கு சொல்றாரு. நீங்க தீபம் ஏத்துறாங்க இல்ல? வீட்ல நவதானியம்  நல்லா அரைச்சு வச்சுக்கோங்க, பொடியா பண்ணிக்கோங்க. பச்சை கற்பூரம்,கிராம்பு, இது எல்லாம் சேர்த்து, அதுல போட்டு விளக்கு எரியுறப்போ, அந்த அதுல போட்டீங்கன்னா, அதுல சில சக்திகள் வந்து ஈர்க்கப்படும். அப்போ சில இது வந்து நல்ல ஒளி வந்து பரவும், அப்படின்னு நல்ல ஒளிக்கு உங்களுக்கு பரவும், பரவும். 


=================================

# உங்கள் இல்லத்தில் தீய சக்திகள் அலறியடித்து ஓட - திருக்கோயில் குங்குமம் , விபூதிகளை விளக்கின் உள் இடுக தினமும். ஏற்றுக மண் அகல் தீபம் தினமும்.

=================================


தேரையர் சித்தர் :- இவை அறிந்து, அதில் தன்னில் சுத்தமாக அறிந்தும், இவைத்தன் உணர, திருக்கோயில்களில் அறிந்தும், பின் எடுத்து வருகிறீர்களே. சிறிதளவு குங்குமமும் அறிந்தும், இவைத்தன் பின் விபூதியும்  இட்டிடுக, தீய சக்திகள் ஓடிடுமே. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  அந்த விளக்குல வந்து, இந்த விபூதி குங்குமம் திருத்தலங்களுக்கு போய் கொண்டு வர்றோம். பாருங்க, அந்த விளக்குல அதை போடணும்ன்றாங்க.


தேரையர் சித்தர் :- இவைதன் எடுத்து வந்து, பின் பூசிக்கொண்டு, தூரே எழுந்து விடுகின்றானே, என்ன பயன்? புத்திகெட்ட மனிதனடா. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :-  கோயில்ல கொடுக்குறாங்க, பூசிக்கிறோம், தூக்கி எறிஞ்சிக்கிறோம். எதுக்கு கொடுத்தாங்கன்னு தெரியல. அதை வச்சு என்ன பண்ணனும்னு தெரியல, என்ன பண்ணனும்னு தெரியல. சொல்றாங்க, விபூதி குங்குமத்தை என்ன பண்ணனும்னு சொல்றாங்க இப்போ. 


====================================

# ஆலயத்தின் சக்திகள் உங்களுக்கு தினமும் உங்கள் இல்லங்களில் கிடைக்கும் அதி பரம சித்த ரகசியம். 

====================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் இவ் இதில்  எதை என்று புரிய இட்டால், அங்கு இருக்கும், பின் அறிந்தும், பின் பின் இதை என்று புரிந்தும், சக்திகள் இங்கே கிடைக்குமடா. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  :- ஒரு பெரிய உண்மையை சொல்லி இருக்காங்க. இப்ப ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் ஒரு நட்சத்திரங்கள், ஒரு கிரகங்களுடைய ஒளி அங்க படுதுன்னு சொல்றாங்க இல்ல? அதை வச்சுதான் சித்தர்கள் கட்டி இருக்காங்க. அப்போ அந்த ஒரு கிரகத்துடைய, அந்த அந்த நட்சத்திரத்துடைய சக்தி வந்து, அந்த திருநீற்றிலயும், குங்குமத்திலயும் ஈர்த்து வச்சிருக்காங்க. அதை வீட்ல கொண்டு வந்து, நீங்க விளக்குல போடுறப்போ, அங்க என்ன பலன் கிடைச்சதோ, அந்த பலன் உங்க வீட்டுக்கு கிடைக்கும்னு சொல்றாங்க. அந்த ஆற்றல், ஒளி ஆற்றல். 


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (மகிழ்ச்சியில் பலத்த கை தட்டல்கள்)


=====================================

# இலங்கையில் பலத்த அழிவுகள் வர உள்ளது - இன்னும் ஒரு  ஆண்டுகளில் 

=====================================


தேரையர் சித்தர் :- அறிந்தும், பின் பக்கத்து அறிந்தும், இவைத்தன் பின் இல்லத்திலே அறிந்தும், பல அழிவுகள். சொன்னானடா போகனை அறிந்தும் யாரும் அதை உபயோகப் படுத்தவில்லையடா. 


சுவடி ஓதும் மைந்தன்  :- (பக்கத்து நாட்டுல இலங்கையில் சொன்னாரு. அதை பக்கத்து வீடுன்னு சொல்றாரு. அதை இலங்கையில் என்ன சொல்றாரு தெரியுமா? போகப் பெருமானுடைய வாக்கு அங்க படிக்கிறோம். அழிவு வந்துச்சு, அழிவு வந்துட்டே இருக்குதுப்பா. இலங்கையில் கதிர்காமத்தில் படிக்கிறோம். போகர் சொல்றாரு, இலங்கையில் அழிவு வந்துட்டே இருக்குதுப்பா, வந்துட்டே இருக்குதுப்பான்னு சொல்றாரு. நிறுத்துப்பா, நிறுத்துப்பான்னு சொல்றாரு போகர். ஆனால் அது மனிதர்களுக்கும் தெரியும்டா. ஆனால் விட்டாங்களேடா.) 


======================================

# அனைவரும் இலங்கை வாழ் நல் உள்ளங்களுக்கு - கட்டாயம் இவ் பதிவை கொண்டு சேர்க்கவும். நேரில் எடுத்து சொல்லவும். உலகெங்கும் அங்கங்கு சிவ புராணம் கூட்டு பிராத்தனைகள் செய்யவும் - அவ் தேசம் அழிவில் இருந்து தப்பிக்க…..

======================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அங்கும் அறிந்தும், இன்னும் ஒரு ஆண்டே நிற்கின்றது. அவதேசம் அழியுமடா. இதனாலே எதை என்று கூற, நில நடுக்கமும் அறிந்தும், மீண்டும் எவை என்று நீர் வருகின்ற பொழுது, அத்தேசம் அழிந்து விடுமடா. அதனுள்ளே பிரார்த்தனை அறிந்தும், நீங்களுமடா, பின் வைத்து அறிந்தும், பாடுங்கடா. பின் திருவாசகத்தை அமுதம் போலே. 


சுவடி ஓதும் மைந்தன்  :- நமசிவாய. இன்னும் ஒரு வருஷம் தான். அழிஞ்சிரும்ன்றாங்க. இலங்கையை எப்பன்னு தெரியாது. அப்ப இன்னும் கூட்டு பிரார்த்தனை எல்லாம் நல்லா பண்ணுங்கப்பா. காப்பாத்தி விடுங்கப்பா. 


தேரையர் சித்தர் :- இதை என்று அறிய, பின் அப் புண்ணியம் உங்களைச் சேர, பின் சந்ததிகள் பெருகும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப என்ன சொல்றாரு? வம்சம் தலைக்கும்ன்றாங்க. நம்ம ஆமா, ஆமா, ஆமா. நான் கதிர்காமத்துக்கு போனேன், பாடுனாரு. ஆனா எல்லாம் ரெண்டு கேட்டு, ஒரு அடியார் கேட்டு இருந்தாரு. வந்து ஆனா அது மிஸ் பண்ணிட்டாரு. அவர் வந்து இந்த எப்படி அழிவு காரணம்னு சொல்லிட்டு, அப்ப அடுத்து அழியப்போகுது. அதை நினைச்சு, அந்த நான் தேசத்தை நினைச்சு, ஒரு சிவபுராணத்தை வந்து பாடுங்கடான்றாரு. வந்து 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் பின் அங்கும் எதை என்று அறிய, பின் இதை என்று புரிய அறிந்தும், யாங்கள் ஏற்பாடுகள் செய்வோம். பின் அறிந்தும், அவ் நிலநடுக்கத்தை. ஆனாலும், இதை என்று அறிய, ஈசன் எவ்வாறு அறிந்தும், அறிந்தும், புரிந்தும். ஆனால் தடுத்து நிறுத்த முடியும், நீங்கள் நினைத்தால், 


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (சிவபுராணம் பாடி , தங்களால் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும் என்ற உற்சாகத்தில் , மகிழ்ச்சியில் பலத்த கை தட்டல்கள்)


சுவடி ஓதும் மைந்தன்  :-  நமச்சிவாய, நமச்சிவாய. மனிதனால தடுத்து நிறுத்த முடியும். இது யாருக்காக பண்றது? இது உலக நன்மைக்காக. ஏன்னா, கலியுகம் அழிஞ்சு தான் போகுதுன்றாரு. அதை தடுத்து நிறுத்தனும்னா, நம்ம வந்து சண்டை, ஃபைட்டிங் பண்றோம். அவ்வளவுதான். யாரு கூட ஃபைட்டிங் பண்றோம்? இறைவன் கூட ஃபைட்டிங் பண்றோம். எப்பா பார்த்துப்பான்னு சொல்லிட்டு, இதெல்லாம் பாடி, இது மாதிரி பண்றோம். அதனால அது அப்புறம் சொல்லுவார். ஏன்னா அடுத்த நிலைக்கு சொல்லுவார். அங்க வந்து என்ன பண்ண, எது பண்ணனும்னு சொல்லி சொல்லுவார். 


=======================================

# ராமேஸ்வரத்தில் கடலில் தீபம் இட்டு  வழிபாடு செய்ய வேண்டும்  - இலங்கையை பேரழிவிலிருந்து காப்பாற்ற

======================================= 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும், புரிந்தும், எவை என்று அறிய, ராமேஸ்வரத்திலே, அறிந்தும், புரிந்தும், பின் கடல் தன்னிலே தீபங்கள் இடுங்கடா. அதிவிரைவிலே. 


சுவடி ஓதும் மைந்தன்  :- (அப்ப ராமேஸ்வரத்துக்கு போய், நீங்க எல்லாம் போயிட்டு,  கடல்ல தீபம் விடுங்க என்று சொல்கின்றார்.)


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும், புரிந்தும், நன்றாக நினைத்து, அறிந்தும், பின் அறிந்தும், இவைத்தன் பால், பின் அதில் கலந்து, அறிந்தும் கூட, சிவபுராண, பின் ஓதிடுக. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( பால்  கடல் ஊற்றி , கடலில்  தீபம் ஏத்தி, சிவபுராணம் பாடுங்க என்று சொல்கின்றார்.)


தேரையர் சித்தர் :-  இவைதன் இன்னும் ஞான சூட்சங்கள் அறிந்தும், இவைத்தன் எடுத்து, ஆனால் மனிதனால் சொல்ல முடியும். அவ்வழிவுகள், இவ்வழிவுகள் வர முடியும், அறிந்தும் வந்து கொண்டே, பின் அதை அழியும் என்று. ஆனால் புத்திகெட்ட மனிதன், இறைவனிடத்தில் கேட்கவில்லையே. எப்படி நிற்பது என்பது?  இதுதான் முட்டாள். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (மனிதர்கள் எப்போதும் “அழிவு வருது, சுனாமி வருது, மழை பேரழிவு வருது” என்று பயத்தை மட்டும் காட்டுகிறார்கள்; ஆனால் அந்த அழிவை எப்படி தடுக்கலாம், என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கேட்கவும், சொல்லவும் முயற்சிக்கவில்லை. பயத்தை பரப்புவது எளிது, ஆனால் தீர்வைத் தேடுவது யாருக்கும் தோன்றவில்லை என்பதையே அவர் “முட்டாள்தனம்” என்று சொல்கிறார்.)


தேரையர் சித்தர் :-  அரிதன் மாற்றுவோம். நாங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்களே 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (அதை மாற்றுவோம். இப்பதான் மாத்தி வச்சோம், நீங்க பார்த்திருப்பீங்கன்றாரு. பத்து நாளைக்கு முன்னாடி சொன்னாங்க இல்ல, நிலநடுக்கம் பெரிய நிலநடுக்கத்தை மாத்தி வச்சிருக்காங்க. இன்னொன்னு மாத்தி வச்சிருக்காரு. என்னது? மழை வரும்னு சொன்னாங்க. எங்க வந்துச்சு, பார்த்தீங்களா? திருப்பி வாபஸ் வாங்கினாங்க. யாராவது கேட்டீங்களா? )


===============================================

# சித்தர்கள் பேச்சை கேட்டால் ,  நீங்கள் நினைத்த வாழ்க்கையை வாழலாம். 

===============================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் மாற்ற முடியும். எங்களால். யாங்கள் சொல்லியதை, நீங்கள் கேட்டால், அறிந்தும் அழிவும் தடுத்துவிடும். புண்ணியங்கள் ஏறிவிடும், வெற்றியும் கொள்ளலாம். நீங்கள் நினைத்த வாழ்க்கையும் வாழலாம். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (நாங்க சொல்றதை, நீங்க கேட்டா என்ன ஆகுமா? அழியறதும் தடுக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு புண்ணியம் சேரும். நீங்க அந்த புண்ணியத்தின் மூலமா நீங்கள் நினைத்த வாழ்க்கையும் வாழலாம். )


==================================

# பக்கத்து வீட்டோன் - இலங்கைக்கு சிவபுராணம் பாட உத்தரவு 

==================================


தேரையர் சித்தர் :- இதை அறிவித்து, இதை என் புரிய, பின் பக்கத்து, பின் வீட்டோனுக்கு, பின் நினைத்து, பின் பாடுங்களேன். 


( அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள் )


=================================

# ஏன் இவுலகில் கார்த்திகை,மார்கழி, தை மாதங்களில் அழிவுகள் பலமாகிறது?

=================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிய மற்றொரு ரகசியத்தையும் சொல்கின்றேன் கேளுடா. 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறியாது பின் கார்த்திகை அதாவது மார்கழி அறிந்தும் பின் தை அறிந்தும் இவைதன்றில் அழிவுகள் பலமடா. ஏன் என்று யோசித்தவர்கள் உண்டோ? 


தேரையர் சித்தர் :-  இதில் தன்னில் ஏன் இறைவனை அதிகமாக படையெடுத்து ஓடுகின்றார் தெரியுமாடா? 


தேரையர் சித்தர் :-  எவை என்று அறிய ஆடுகள் கூட்டம் கூட்டமாக போகின்றது அதில் பின்னாலே அறிந்தும் அப்படித்தானடா உங்கள் வாழ்க்கையும் கூட. 


தேரையர் சித்தர் :-  இறைவனை வணங்குவதற்கு அறிந்தும் தெரிந்து கொள்வதற்கும் அறிந்தும் தெரிந்து வணங்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (இறைவன் வணங்குறது பெருசு இல்ல. தெரிந்து வணங்கணும். அதுதான் பெருசு. அப்பதானே எல்லாம் நடக்கும்ன்றார்) 


======================================

# கிரகங்களின் பாதையில், சூரியன் நடுவே யாருக்கும் தெரியாத அறிந்தும் கண்ணாடி போல் இன்னொரு கிரகம் பெரிய கிரகம்.

=====================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும் தன் தன் பாதையில் அழகாக கிரகங்களும் சுற்றிச் சுற்றி சூரியனை அறிந்தும் இதன் நடுவே யாருக்கும் தெரியாத அறிந்தும் கண்ணாடி போல் பின் இன்னொரு கிரகம் பெரிய கிரகம் எது என்று அறிய மறைத்திட கீழே நகருமடா அவைதனும் சுற்றி 


சுவடி ஓதும் மைந்தன்  :- (சூரியனைச் சுற்றி ஒரு கண்ணாடி போன்ற கிரகம் , யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு கிரகம் இருப்பதாகவும், அது ஒரு வட்டமாக சுழன்று கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அந்த கிரகம் பூமியின் மீது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வந்தால், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சூரிய ஒளி மற்றும் சக்தி பூமிக்கு முழுமையாக வராமல் தடுக்கப்படுகிறது. கிரகங்களும் அந்த ஒளியைப் பெற முடியாமல் மறைக்கப்படுகின்றன; இதனால் பூமிக்கும் உயிர்களுக்கும் தேவையான சக்தி குறைகிறது என்ற கருத்தை அவர் விளக்குகிறார்.)


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும் மேலே அறிந்தும் இவைத்தன் அதாவது பங்குனி சித்திரை வைகாசி அறிந்தும் மேலே எழும்புமடா. அப்பொழுதும் கூட அறிந்தும் சக்திகள் நிச்சயம் அறிந்தும் குறைவடா. 


தேரையர் சித்தர் :-  தெரியுமடா இதனுள்ளே அதிக பக்திகள் செலுத்தி செலுத்தி அறிந்தும் பின் அதாவது நீங்கள் அறிந்தும் எவை என்று ஏன் என்று ஆனாலும் அதை இப்பொழுது கூட எதிலும் தெரியாதடா அது தன் பின் அறிந்தும் இவைத்தன் எவை என்று புரிய எதுவும் பின் படமும் எடுக்க முடியாதடா.


சுவடி ஓதும் மைந்தன்  :-  (படம் கூட பிடிக்க முடியாது. சேட்டிலைட்ல பாருங்க அது கூட அது கண்டுபிடிக்க முடியாதாம். அது கண்ணாடி மாதிரி இருக்குமாம். கண்ணாடி இருந்தா என்ன ஆகும்? தெரியாது கண்ணுக்கு தெரியாது. கேட்ச் பண்ண முடியாது. இப்ப ஒரு சூரியன் இருந்தா அது கேட்ச் பண்ண முடியும். ஆனா இந்த கண்ணாடி கிரகத்தை கேட்ச் பண்ண முடியாது.)


தேரையர் சித்தர் :-  இவை உணர்ந்தோர் எவர் அறிந்தும் பின் விஞ்ஞானி என்கிறார்கள் 


சுவடி ஓதும் மைந்தன்  :- (விஞ்ஞானிகளாலும் இந்த மறைபடலத்தை கண்டுபிடிக்க முடியாது, ஏனெனில் அது கண்ணாடி போன்றது; கண்ணாடி முன் இருந்தால் கேமரா எதையும் சரியாகப் பிடிக்க முடியாதது போல, இந்த படலமும் ஒளியையும் சக்தியையும் பிரதிபலித்து மறைத்து விடுகிறது. அதனால் அது கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாது. ஆனால் அந்த படலம் சக்திகளை மட்டும் தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது; அதுவே அதன் உண்மையான செயல்பாடு.)


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும் அச் சக்திகளை பின் எடுத்து வர சித்தர் குள்ளோர்கள் வருகின்றார்கள். பின் நிற்க. நீங்கள் பக்தி செலுத்தினால் மட்டுமே அவர்களும் ஓடி ஓடி வருவார்களடா. 


சுவடி ஓதும் மைந்தன்  :-   (கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தியுடன் இறைவனை வணங்கினால், அந்த காலத்தில் வரும் சக்தி குறைபாடுகளில் இருந்து “சித்திரக்குள்ளர்” போன்ற உயர் தெய்வீக சக்திகள் நம்மை பாதுகாப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த மாதங்கள் ஆன்மிக ரீதியாக மிக முக்கியமானவை; அன்பும் பக்தியும் அதிகமாக இருக்க வேண்டிய காலம். பக்தி உள்ளவர்களை தெய்வீக சக்திகள் காப்பாற்றுவார்கள்)


தேரையர் சித்தர் :-  இவை தன் அறிந்தோர் எவர் எவரும் இல்லையே இதனால் அழிவுகளை பின் எதை என்று புரிந்து கொள்ள ஆளில்லையே 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் இப்படி செய்தாலும், அவரும் வணங்கி விரும்புவார்கள் சித்தர் குள்ளர்களும் கூட. 


=====================================

# கூட்டு பிரார்த்தனை அடியவர்களுக்கு கிட்டும் தேவலோக புண்ணியங்கள் - நீங்கள் விரும்பியதை எளிதில் வென்று விடலாம். 

=====================================


சுவடி ஓதும் மைந்தன்  :-  நீங்க இப்படி எல்லாம் வந்து எல்லாம் ஒன்னா சேர்ந்து, மக்களுக்காக போறேன்னா மட்டும்தான், அவங்க என்ன பண்ணுவாங்கயா? மனசு இறங்குவாங்க. மனசு இறங்குவாங்க. 


தேரையர் சித்தர் :-  தேவலோகத்திலிருந்து அறிந்தும் சில புண்ணியங்கள் உங்களுக்கு கொடுக்க, அறிந்தும் பின் நீங்கள் விரும்பியதை எளிதில் வென்று விடலாம். 


சுவடி ஓதும் மைந்தன்  :- (அவங்க தேவலோகத்திலிருந்து வருவாங்க. அவங்க வந்து அந்த மாதத்துல அப்ப நீங்க என்ன பண்ணலாம் நீங்க அது மாதிரி வந்து போராடி நல்லா வந்து வணங்குகின்ற பொழுது, தேவலோகத்திலிருந்து  அங்க இருக்கிற புண்ணியம் உங்களுக்கு கொடுப்பாங்க)


======================

# ஓம் ரகசியங்கள் 

======================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் அட மூடனே அறிந்தும் ஓம் என்பது என்ன 


அடியவர் :- ஓம் என்பது என்ன அஹார அஹார உஹார வஹாரம் ஆ ஓ எம் 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் எதை என்று அறிய மற்றவர் சொல்வது சொல்லாதடா பைத்தியமே. 


சுவடி ஓதும் மைந்தன்  :- எல்லாரும் சொல்லிக் கொடுத்தாங்க பாருங்க. அதையே சொல்லாதடா 


தேரையர் சித்தர் :-  இவை சொல்லி சொல்லியே மனிதன் மூடன் ஆகிவிட்டான் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இவ்வாறு மத்தவங்க சொல்லி சொல்லி சொன்னது தான் மனிதன் மூடன் முட்டாளாகிட்டான். ஓம் எழுதுங்க ஐயா.


( ஒரு தாளில் ஓம் எழுதினார்கள் ) 


======================================

# ஏன் நாம் “ஓம்” பயன்படுத்துகின்றோம்? 

=====================================


தேரையர் சித்தர் :-  எவை என்று புரிய இதன் தன்மை எங்கு எதற்கு இவ் ஓம் பயன்படுத்துகின்றோம் அனைத்திலும்?


சுவடி ஓதும் மைந்தன்  :-  இந்த ஓம் ஏன் பயன்படுத்துகின்றோம் ஐயா நீங்க டிஃபரெண்ட்டா சொல்லணும்.


தேரையர் சித்தர் :-  எவை என்று புரிய இதைத்தன் அறிந்தும் தெரியாதடா. (ஓம்) இதுதான் உலகமடா.


==================================

# ௐ - எழுத்தின் நடுவில்  நடுவில் இருக்கின்றதே அதுவே சித்தர் குள்ளர்கள் வாழும் இடம் . 

================================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் நடுவில் இருக்கின்றதே அதுவே சித்தர் குள்ளர்கள் வாழும் இடமடா. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப ஓம் எழுத்தில் இங்க நடுவுல வெட்டவெளி இருக்குது பாருங்க. இங்க வெட்டவெளி இருக்குது பார்த்தீங்களா? இதுதான் சித்தர் குள்ளர்கள் சித்தர் குள்ளர்கள் வாழ்ற இடம். 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவைத்தன் அறிய நீங்கள் அழைத்தாலே வந்து விடுவார்கள் அவர்கள். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (அவங்க இங்க இருக்காங்க ஐயா. ஓம் புரியுதுங்களா அம்மா? புரியுதுங்களா? இதுதான் உலகம். புது உலகம். இது சித்தர குள்ளர்கள் வாழும் இடம். ஓம் என்ற எழுத்தில், இந்த இடைவெளிதான் சித்தர குள்ளர்கள் வாழும் இடம். இங்க ஏதாவது பாதிப்பா வந்துச்சுன்னா, சித்தர குள்ளர்கள் இவங்க என்ன பண்ணுவாங்கயா? இப்ப சொன்னாரு பாருங்க  பக்கத்து வீட்டுக்காரன் என்று, இவங்க வருவாங்க, அப்ப என்ன ஆகுது உலகம் உலகம் உருண்டைதான் ஆனா இதுல எத்தனை அடக்கம் பாருங்களேன் ஐயா புரியுதுங்களா? )


தேரையர் சித்தர் :-  எவை என்று பின்பற்ற அனைத்தும் இவை தன் ஓம்கார உடனே பின் சொன்னால் அறிந்தும் சித்தர் குள்ளர்களுக்கு கேட்குமடா 


சுவடி ஓதும் மைந்தன்  :- முதல்ல ஓம்னு எப்பவுமே சொல்லணும். இதுதான் அவங்களுக்கு கேட்குமாம். ஐயா புரியுதுங்களா?


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவை என்று அறிய இன் சத்தம் பின் அறிந்தும் பின் உருண்டு கொண்டே போகின்றதே உலகம் இதனுடைய சத்தம் பின் அறிந்தும் எதை என்று கூற பின் ஓம் என்று.


தேரையர் சித்தர் :-  ஆனாலும் இவைதன் கேட்டுக்கொண்டே இருக்குமடா சித்தர் குள்ளர்கள் அறிந்தும் இன்னும் அறிந்தும் புரிந்தும் இவைதன் பன்மடங்கு ஆக்க நிச்சயம் மனிதன் தள்ளாடுகின்றான் என்று தெரியுமடா 


சுவடி ஓதும் மைந்தன்  :- ( ஓம் என்று நீங்க, ஓம் அதனை ஒரு மந்திரத்துல இணைச்சீங்கன்னா என்ன ஆகுமாம்? இந்த சத்தம் வந்து ஓ மனிதன் தானா? என்று  சித்தர் குள்ளருக்கு தெரியும். அதனாலதான் ஓம் நமசிவாயன்றது ஓம் நமோ நம அப்ப ஓம் என்ற யாரை நம்ம கூப்பிடுறோம் எதுக்கு பயன்படுத்துறோம் சித்திரகுள்ரை கூப்பிடுறதுக்காக பயன்படுத்துறோம். எங்களை முடியவில்லை. நீங்காவது ஹெல்ப் பண்ணுங்கப்பான்னு சொல்லிட்டு..)


தேரையர் சித்தர் :-  இதைத்தன் அறிய எவை என்று புரிய இன்னும் பின் தேவலோகத்தை பற்றி உரைப்பார்கள் சித்தர்கள் பின் நேரங்கள் எனக்கே போதவில்லை. 


=============================

# அத்திரி மகரிஷி - ரகசிய மந்திரத்தை உரைக்க உள்ளார்கள் 

=============================


தேரையர் சித்தர் :-  இவைதன் இன்னும் அறிந்தும் இவைத்தன் அறிந்தும் அத்திரியான் வருவானடா. ரகசிய மந்திரத்தையும் கூறுவானடா. 


=============================

# சுகபிரம்ம ரிஷி - சஞ்சீவி மந்திரத்தை மந்திரத்தை உரைக்க உள்ளார்கள் 

=============================


தேரையர் சித்தர் :-  சுகனும் அறிந்தும் சஞ்சீவி மந்திரத்தை எழுத்துரைப்பானடா பொறுத்திருந்தால். 


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


சுவடி ஓதும் மைந்தன்  :-  சுகபிரம்ம ரிஷி அவரும் ஒரு அடுத்து வருவாரு. அப்ப அவர் அந்த மந்திரத்தையும் சொல்லித் தராறு சொல்லித் தராறுன்றாரு. 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்தும் அனைத்தும் உங்களுக்காகவே. 


தேரையர் சித்தர் :-  இதில் கூட குற்றம் காண்பவர்கள் இருக்கின்றானடா இறைவன் என்று பெயரைச் சொல்லி நடிப்பவன் இருக்கின்றானடா. 


சுவடி ஓதும் மைந்தன்  :- இதுல கூட என்ன பண்ணுவாங்களாம் என்னவோ குற்றம் சொல்லுவோம் இருப்பாங்க நடிப்பவனும் இருக்கிறானாம்.


தேரையர் சித்தர் :- பிறர் நலம் பின் அறியாமை மூடன் அவன் இருந்தால் என்ன? இல்லாவிடில் என்ன? எங்கள் ஆசி கிட்டாது எங்களை அழைத்தாலும். 


தேரையர் சித்தர் :- பின் சித்தர்கள் செய்யவில்லையே. சித்தரை நம்பினால் இப்படித்தான் கஷ்டம் என்று புலம்புவான் மனிதன் மூடனடா. இப்படியே சென்று கொண்டிருக்கின்றான் காலம் காலங்களாக. 


===============================

# சித்தர்களின்  பக்தர்கள் - விளக்கு போல பிரகாசித்து,  பிறரை  நலம் பெற செய்ய வேண்டும் 

===============================


தேரையர் சித்தர் :-  அப்பா எரிகின்றதே பார்த்தாயா? அது எரியாவிடில் என்ன லாபம்?


தேரையர் சித்தர் :- அப்படித்தான் என் பக்தர்கள் இருக்க வேண்டும். சித்தன் பக்தன் இருக்க வேண்டும். அறிந்தும் யாங்கள் தருவோம் அனைத்தும். 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( சித்தர்களை வணங்க வேண்டும் என்றால், முதலில் நம்ம வாழ்க்கை சுயநலமில்லாமல் இருக்கணும். அவர்கள் சொல்வது —  “தனக்காக மட்டும் வாழ்ந்தால்  வாழ்க்கை முடிந்தது. மற்றவர்களுக்காக வாழ்ந்தா தான் மனிதன் உயர்வான்.” ஒரு விளக்கு எப்படி தன்னை கரைத்து நாலு பேருக்கு வெளிச்சம் கொடுக்கிறதோ, அதே மாதிரி மனிதன் மற்றவர்களுக்கு பயன் அளிக்கணும். சுயநலத்திற்காக மட்டும் வாழ்ந்தால், சித்தர்கள் அதை வேஸ்ட் என்று சொல்வாங்க. அப்படி வாழ்பவர்களை அவர்கள் “எங்களை வணங்காதே” என்று தள்ளி விடுவாங்க. ஆனா மக்களுக்காக, பிறருக்காக, உலகுக்காக, வாழ்பவர்களை சித்தர்கள் ஏற்றுக் கொள்வாங்க, ஆசீர்வதிப்பாங்க. )

தேரையர் சித்தர் :-  இதில் இன்னும் வருவார்களா திருடர்கள். நான் சித்தன் என்று கூறிக்கொண்டு, என்னால் முடியுமடா என்று. அடடா பாவிகளே. 


தேரையர் சித்தர் :- அவன் அவன் குடும்பத்தையே அவனால் பார்க்க முடியாதடா.


தேரையர் சித்தர் :- இவை தன் மனிதன் சொல்லிக்கொண்டே இருக்கின்ற சொல்லிக்கொண்டே இருப்பான் வேடத்தை போட்டு. ஏனென்றால் நம்ப வேண்டும். பின் தீயவதி நடக்கின்றது. அவை நடக்கின்றது பூகம்பங்கள் வருகின்றது. எதை என்று அறிய இன்னும் பின் மனிதன் அழியப் போகின்றான் என்று அதற்கு எவை என்று எப்படி விடிவு அதற்கு எப்படி அறிந்து எவை என்று தெரியாது 


தேரையர் சித்தர் :-  இதுதான் மனிதனின் சுயநலம் என்பேன். 


தேரையர் சித்தர் :- அப்பொழுதே நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் தன் சுயநலத்துக்காகவே சொல்கின்றான் என்று. 


தேரையர் சித்தர் :- தடுப்பது எவர்? அப்பொழுது அனைவரும் பொய்யானவரே வேடதாரிகளே இறைவனை வைத்து. இறைவனை வைத்து சம்பாதிக்கலாம். ஆனால் ஒன்றும் முடியாது அப்பா. 


தேரையர் சித்தர் :-  அன்றும் இன்றும் இன்னும் எப்பொழுதும் இதை அறிவித்து கிரகங்களைப் பற்றி எல்லாம் எடுத்துரைக்கப் போகின்றேன் புதுப்புதுவாக அறிந்தும் இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். அறிந்தும் ஏனென்றால் யாங்கள் இக் கலியுகத்தில் வரவில்லை என்றால் அனைத்துமே அழிந்துவிடும் இதனால்தான் வந்து எவர் தடுத்தாலும் பின் நிச்சயம் யாங்கள் வந்து மீட்போம். தன் மக்களை.


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


தேரையர் சித்தர் :- அறிந்தும் எவை என்று அறிய நல்லோர்களும் தேடித் தேடி, உன் முன்னோர்களும் தேடித் தேடி, அறிந்தும் இவை என்று இப்படியே விட்டுவிட்டால் மனித குலம் போய்விடுமடா. 


தேரையர் சித்தர் :-  இவை என்று குமரி கண்டத்தில் அறிந்தும் பின் அறிந்தும் இவைத்தன் வெடித்திருந்தால் அறிந்தும் பின் பக்கத்து வீடான அறிந்தும் இப்பொழுதே எதை என்று புரிய அங்கும் அழிவுகள். பின் மலாய்யோன் அறிந்தும் இவை என்றும் சிங்கையோன் எவை என்று புரிய இந்தோன் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (அப்ப குமரி கண்டத்துல ஒரு பெரிய நிலநடுக்கம் வந்திருக்கணும். அங்க எல்லாம் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தால் இலங்கை, சிங்கப்பூர் ,மலையாசியா,  இந்தோனேசியா    அழிஞ்சிட்டு இருக்கும்.)



தேரையர் சித்தர் :- ஆனால் காத்திடுவோமே யாங்கள் நாங்க அங்க காத்திரு இருக்கிறோம்டா காத்திடுவோமே இன்னும் அறிந்து வரப்போகின்றதே. ஆனாலும் முடித்து விடுவோம் அதனை. இப்பொழுது நிலைமைக்கு 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் மனிதனால் முடியுமா என்றால் பின் நிச்சயம் முடியாதடா 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இது மனிதனால் முடியுமா ?


தேரையர் சித்தர் :-  எவை என்று எவ்வளவு கண்டுபிடிப்புகள் இருந்தாலும் அழிவு தானடா 


சுவடி ஓதும் மைந்தன்  :- (நீ எவ்வளவுனா கண்டு பிடிச்சுக்கோ. எதை எதையோ கண்டு பிடிச்சுக்கோ. புதுசு புதுசா கண்டு பிடிச்சுக்கோ. ஆனால் நிச்சயம் அழிவை தடுக்க முடியாது.) 


தேரையர் சித்தர் :- அறிந்தும் யாங்களே தடுப்போம்.


=====================================

# ஆதி ஈசனார்  முன்னால் நந்திய பெருமான் ஆலயங்களில் நிற்பதன் ரகசியம் 

=====================================


தேரையர் சித்தர் :- எதை என்று அறிய, ஈசனை அறிந்தும் நிற்கின்றதே, நந்தியன் எதற்காக அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய?. 


சுவடி ஓதும் மைந்தன்  :- (ஈசன் முன்னாடி எதுக்கு நந்திய பெருமான் நிக்கிறாரு  நிக்கிறாரு?) 


தேரையர் சித்தர் :-  ஈசனே!!!!! அறிந்தும் எவை என்று கலியுகத்தில், அறிந்தும் பல அறிந்தும், ஜீவராசிகளை பின் கொல்லப் போகின்றார்கள். அதனால் யான் முன்னே நிற்கின்றேன். எனை அறிந்தும் பார்த்து பரிதாபப்பட்டு வந்தால்தான் ஆசிகள் தர வேண்டும், என்று ஈசனிடம். அதனால்தான் அறிந்தும் பசும் வடிவிலே அறிந்தும் நிற்கின்றானடா நந்தியம்பெருமான்.


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


சுவடி ஓதும் மைந்தன்  :-  (நந்தியம் பெருமான். யார் நிற்கிறார் தெரியுங்களா? அவர் இந்த வடிவத்தை ஏன் எடுத்தார் என்றால் ,  ஈசனே !!! கலியுகத்துல நிறைய பசுமாடுகள்  எல்லாம் சொல்லுங்கப்பா. அதனால் என்னை பார்த்தாவது கொல்லாம இருக்கணும். என்ன பார்த்துட்டு தான் உன்னை பார்க்க வந்து, அந்த மனசாட்சியோடு இருந்தா,  நீ ஆசி கொடு. இல்லனா அழி என்று  சொல்லிட்டார். யாரு நந்தியம்பெருமான். அதனால்தான் கோயிலுக்குள்ள போனா வெளிய இருக்காங்க நந்தியம்பெருமான்)


தேரையர் சித்தர் :-  அறிந்தும் எவை என்று புதிய இதேபோல் இட்டான் அறிந்தும் ஒவ்வொரு அறிந்தும் கூட இறைவனுக்கு இவை கொல்லக்கூடாது என்று. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இதே போல தான் என்னது ஒவ்வொரு விலங்கும் நீ வந்து உன் முன்னாடி நிக்கணும். முருகனுக்கு என்ன நிக்குது அங்க? மயிலு சேவலு அதை நீ கொண்டுட்டு வரலன்னா தான் அங்க ஆசி. இல்லைன்னா அடி. எல்லாருக்கும் என்ன இருக்குது ஒவ்வொரு உயிர் இருக்குது யாரு பன்றி யாரு இதெல்லாம் எதுக்காம் இதெல்லாம் கொல்லக்கூடாதுடா )


================================

#  பசு மாடுகளை வெட்டுவோர் பின் தின்னுவோர் அறிந்தும் பின் புற்று நோயடா

================================


தேரையர் சித்தர் :-  அதிகமாக அதிகமாக இன்னும் அறிந்தும் பசு மாடுகளை அறிந்தும் இவை என்று அறிய வெட்டுவோர் பின் தின்னுவோர் அறிந்தும் பின் புற்று நோயடா 


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)


================================

#  பசு மாடுகளை வெட்டுவோர் பின் தின்னுவோர் அறிந்தும் பின் புற்று நோயடா

================================


தேரையர் சித்தர் :-  இவை தன் அறிய அறிய இன்னும் இன்னும் அதிகமாக மாமிசத்தை உட்கொண்ட உட்கொண்ட வருமடா புற்றுநோய் 


சுவடி ஓதும் மைந்தன்  :- (இன்னும் மாடு எல்லாம் வெட்டுறது சாப்பிட்டா என்ன ஆகுமாம்? புற்றுநோய் வந்து கொண்டே இருக்குமடா )


===========================

# அவசியம் மரம் நடுவீர் - இன்றே 

==========================


தேரையர் சித்தர் :-  தடுப்பீர்களா? அறிந்தும் இவை என்று அறிய பின் மரத்தை நடுவீர். பின் நடாவிடில் அடுத்த ஆண்டு அறிந்தும், பிற தீய பின் அறிந்தும் இவை என்று கூற பின் ஒளி அலைகள் எவ்வாறாக கலந்து பின் நோய்கள் அதிகமாக பரவுமடா பின் இன்றில் இருந்தே நடுங்களடா. 



சுவடி ஓதும் மைந்தன்  :- (என்ன சொல்றாரு தெரியுங்களா? மரங்கள் மரங்கள் நட சொல்றாரு. எல்லாரும் என்ன பண்ணனும்? மரங்கள் நடணும். இன்னும் அடுத்த ஆண்டுல அதிகமா மரங்கள் இல்லைன்னா என்ன ஆகுமாம் ?  ஒளி கதிர்கள் கலந்து வரும் பொழுது என்ன ஆகுமா மூச்சுல நம்ம சுவாசிக்கும் பொழுது என்ன ஆகுமா நோய் வரும் அப்ப என்ன பண்ணனும்? மரம் நடணும்) 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இதை என்று அறிய பின் இவைதன் பின் உங்களுக்கு நீங்களே செய்யும் உதவியடா. 


சுவடி ஓதும் மைந்தன்  :- (அது எங்களுக்காக  கேட்கவில்லை. உங்களுக்கு நீங்களே செய்யும் உதவிகள்,) 


======================================

# அன்பு அடியவர்களே - உங்கள் ஜென்ம நட்சத்திர மரத்தை  பலமாக நிறைய நடுங்கள். புண்ணியங்களும் பெருகும். நன்கு வாழ்வாங்கு வாழ்வீர்கள்.

======================================  


தேரையர் சித்தர் :- புண்ணியமடா. அவரவர் நட்சத்திரத்தில் பின் இருக்கின்றதடா அவையே பின் செய்யுங்களேடா. பின் இன்னும் புண்ணியங்கள் பெருக்குமேடா வாழ்வீர்களேடா. தாய்களே தந்தைகளே. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்படி இல்லன்னா உங்க உங்க நட்சத்திரம் எல்லாருக்கும் தெரியும்ல தெரியும்ல. அதை வாங்கிட்டு போய் அங்கங்க நடுங்க. உங்களுக்கும் புண்ணியமாகும். நமக்கும் புண்ணியம் இருக்கும். உலகத்துக்கும் புண்ணியம் கிடைக்கும்.


=======================================================

27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் (உதாரணங்கள்):-


அஸ்வினி: எட்டி மரம்

பரணி: நெல்லி மரம்

கார்த்திகை: அத்தி மரம்

ரோகிணி: நாவல் மரம்

மிருகசீரிஷம்: கருங்காலி மரம்

திருவாதிரை: செங்கருங்காலி மரம்

புனர்பூசம்: மூங்கில் மரம்

பூசம்: அரச மரம் (புஷ்பம்)

ஆயில்யம்: புன்னை மரம்

மகம்: ஆலமரம்

பூரம்: பலா மரம் / புரசு

உத்திரம்: அலரி மரம் / இலந்தை

சித்திரை:   வில்வம்

அஸ்தம்: அத்தி மரம் / மகாவில்வம்

சுவாதி: வில்வம் 

விசாகம் – விளா

அனுஷம் – மகிழ்

கேட்டை – பிராய்

மூலம் – மரா

பூராடம் – வஞ்சி

உத்திராடம் – பலா

திருவோணம் – எருக்கு

அவிட்டம் – வன்னி

சதயம் – கடம்பு

பூரட்டாதி – தேமா

உத்திரட்டாதி – வேம்பு

ரேவதி: இலுப்பை மரம் 

=======================================================


தேரையர் சித்தர் :-  எதை என்று அறிய நிச்சயம் நீங்கள் எல்லாம் திருந்தி விட்டால் அறிந்தும் புரிந்தும் எவருக்கும் இங்கு வேலை இல்லையேடா. அவரவர் வேலை பார்த்து சென்று கொண்டே இருப்பார்களடா. 


தேரையர் சித்தர் :- இதனாலே மனித குலத்தை காக்கவே அழிவுகள் பலமாக வந்து கொண்டே இருக்கின்றது அதை காக்கவே ஓடோடி வந்தோம் திருத்துவோம் அவரவர் வேலை அவர்கள் செய்ய 


தேரையர் சித்தர் :-  இப்படி இருந்தாலே பின் வாழ்வார்கள் இல்லையே வீழ்வார்கள் அதனாலே கொண்டு வந்தோமே அறிந்தும். பாடப்பா அறிந்தும் இன்னும் பின் தேசத்திற்காக பாடப்பா. 


( அடியவர்கள் சிவபுராணம் பட ஆரம்பித்தார்கள் )


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment