​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 28 December 2025

சித்தன் அருள் - 2048 - அன்புடன் அகத்தியர் - இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3



இலங்கை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - பகுதி 3 ( நிறைவு பகுதி )

தேதி: 19/12/2025, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 
இடம்:-  கதிர்காமம் கந்தன் திருக்கோவில், முருகன் தெய்வானை  சன்னதி மண்டபம், இலங்கை.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
====================================

ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன். 

அப்பனே, ஆசிகள்! 

அப்பனே, முருகப்பெருமானுடைய ஆசீர்வாதங்கள் என்பேன் அப்பனே. 

கவலைகள் வேண்டாம். அப்பனே, நிச்சயம் நல்லதை அப்பனே பின்பற்றி வந்தாலே, அப்பனே, உங்களுக்கு அப்பனே என்ன தேவை என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் உணர்வோம். 

அப்பனே, அதே போலே செய்வோம் என்போம் அப்பனே. கவலை கொள்ளாமல் இருங்கள் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-  (அப்ப என்ன சொல்றார் தெரியுங்களா? கவலைப்படாதீங்க. நீங்க எல்லாம் நல்லது செய்து வந்திருந்தாலே போதும். மீதி உங்களுக்கு என்ன நன்மை செய்ய வேண்டுமோ, அதை சித்தர்கள் , நாங்களே வந்து, உங்களுக்குத்  தேவையானதை எல்லாம் செய்து தருவோம். அது எங்களுக்கு தெரியும். நீங்க கேட்டுத்தான் வந்து பெற வேண்டியது அவசியம் இல்லை. அதை நாங்களே உங்களுக்கு கொடுத்துடுவோம். )

==============================
# நீங்கள் விரும்பியது நடக்க பின்பற்ற வேண்டிய  மிக எளிய வழி - பிறர் நலம் 
==============================

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறு தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் பிறர் நலம் அப்பனே, பின் நிச்சயம் விரும்ப வேண்டும் என்பேன் அப்பனே. இவ்வாறாக அப்பனே பிறர் நலம் அப்பனே பின் விரும்பிக்கொண்டு வந்தால், அப்பனே, நிச்சயம் தான் விரும்பியது பின் சுலபமாக நடந்துவிடும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-  (பிறர் நலனுக்காக உண்மையான மனதுடன் வேண்டி, அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த நன்மை நமக்கே திரும்பி வந்து நம்முடைய வாழ்க்கை தானாகவே சரியாகிவிடும் என்பதே இந்த உரையின் சாரம். பிறருக்காக நன்மை விரும்பும் மனம் தெய்வீக அருளை ஈர்க்கும்; அந்த அருள் நம்முடைய நிலைமைகளையும் இயல்பாகச் சீர்செய்யும். பிறர் நலம் நம் நலமாக மாறும்)

குருநாதர் :-  அப்பனே, அதை விட்டுவிட்டு, அப்பனே, நிச்சயமாக அப்பனே, பின் மற்ற எவையென்ற தீங்குகளை அப்பனே செய்து கொண்டு வந்தால், தானே அழிவான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, இவை தேவையில்லை என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

==================================
# சுரா கல் சுற்றும் வேகம் குறைந்தால் , ஊருக்குள் தண்ணீர் வந்துவிடும் 
==================================

குருநாதர் :-   அப்பனே, மீண்டும் வருகின்றேன் அப்பனே, எதை என்று புரிய.  அப்பனே, எவ்வாறாக அப்பனே, இதை எதிர்த்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அச் சுரா கல்லானது அப்பனே, பின் பன்மடங்கு அப்பனே, பல கோடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மைல்தன்  (வேகத்தில்) அப்பனே, நிச்சயம் அப்பனே, சுற்றிக் கொண்டே இருக்கின்றது அப்பனே. அதன் வேகம் குறைந்தால், அப்பனே, பின் நீரானது அப்பனே, அப்படியே மீண்டும் ஊருக்குள் புகுந்து விடும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-   (அந்த சுரா கல் நின்று விட்டாலோ அல்லது வேகம் குறைந்தாலோ, அதன் இயக்க சக்தி குறைந்து, நீரானது மீண்டும் ஊருக்குள் புகுந்து விடும்)

குருநாதர் :-  அப்பனே, பின் அவ்வேகம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அதிகரிக்கும் எவை என்று புரிய அப்பனே. ஆனால் குறைவென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சிறிது சிறிதாக வந்து கொண்டே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-   ( வேகம் அதிகரித்திருக்கும் போது எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் அது மெதுவாகச் சுற்றத் தொடங்கினால் அதன் நிலைமை சீர்குலைந்து, கட்டுப்பாட்டை இழந்த இயக்கம் காரணமாக அழிவுகள் தொடர்ச்சியாக உருவாகும் அபாயம் அதிகரிக்கும்)

குருநாதர் :-   அப்பனே, இவை தன் அப்பனே, இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே, இதன் அருகிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஞானிகள் மட்டும் செல்வார்கள். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இதை உணர்ந்தான் அப்பனே ராவணேஸ்வரன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் எதை என்று புரிய. அப்பனே, இதனால் அழிவு வரக்கூடாது என்று அதை தொட்டான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-   ( ராவணேஸ்வரர் அழிவு வரக்கூடாது என்று எண்ணி, அந்த சுரா கல் அதனை , அவர் தொட்டார். )

===============================
# ஸ்ரீ ராம பக்த அனுமான் - சுரா கல்லின் வேகம் குறையாமல், வேகத்தை  அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்.
===============================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே, இன்றும் அப்பனே, அனுமானும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் சீதையின்  அப்பனே, பேச்சை ஏற்றுக்கொண்டு அப்பனே, இவ் தேசத்தை அப்பனே காக்க அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவைதன் அப்பனே, பின் அப்படியே நிறுத்தி எவை என்று அப்பனே, அதாவது அழகாக அப்பனே, வேகத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே. இன்றைய நாளில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவனைப் பற்றி யார் சொல்லவே வேண்டும் இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-  (சீதா தேவியின் உத்தரவினைப் பின்பற்றி, இலங்கை தேசத்தைக் காப்பாற்ற ,  ஸ்ரீ ராம பக்த அனுமான் சுரா கல்லின் வேகத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறார். ஏனெனில், அந்தக் கல்லின் வேகம் குறைந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்படும்)

குருநாதர் :-   அப்பனே, அது மட்டுமில்லாமல், வேகம் குறைந்தாலும், அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் அதாவது மனிதனிடத்தில் எண்ணங்கள் மாறுபடும் என்பேன் அப்பனே. இதனால் மனிதன் மனிதனுக்குள்ளே அடித்துக் கொள்வான் அப்பா, யான் பெரியவன் நீ பெரியவன் என்று. 

================================
# ஸ்ரீ ராம பக்த ஹனுமான் இங்கு “சுரா கல்” அதன்  காவலாளியாக உள்ளார். 
================================

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே. அப்பனே, எதை என்று புரிய அப்பனே. இதனால் அவனும் அப்பனே, பின் காவலாளியாக, காவலாளியாகத்தான் இருக்கின்றான். 

குருநாதர் :-   அப்பனே, மிகப்பெரியவன் யார் என்றெல்லாம்? அப்பனே, போக போக சொல்கின்றேன். 

குருநாதர் :-   அப்பனே, முதல் வகுப்பிலே என்னென்ன சொல்ல வேண்டுமோ, அதை சொன்னால்தான் அப்பனே, பின் புரியும் என்பேன் அப்பனே.  அதை அப்பனே புரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை சொன்னாலும், அப்பனே, பின் அதாவது அப்பனே, நிச்சயம் புரியாது அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, இவை தன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக எதை என்று அப்பனே, நிச்சயம் இன்னும் அப்பனே, பின் ஏன் இதிகாசங்கள்? அப்பனே, எவ்வாறெல்லாம் அப்பனே, நிச்சயம் அதை காக்க. அப்பனே, நிச்சயம் ஓடோடி வந்தார்கள். எவை என்று புரிய அப்பனே. அப்பனே, இவ் தேசத்திற்கு எவை என்று பல ஞானிகள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-   அப்பனே, இறைவனின் திருவிளையாடலில் கூட, அப்பனே. எப்படியோ இங்கு வரவழைக்க. இறைவனே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட காத்தவனே, நிச்சயம் வரட்டும் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-  (இறைவன் தனது திருவிளையாடலால் சிலரை இங்கு வரவழைத்து, ஞானிகள் வேண்டியபடி இந்த இடத்தை காப்பாற்றச் செய்கிறார். அவர்களுக்கு தேவையான சக்தியை அளித்து அனுப்பிய இறைவன், அவர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கிறார்; அந்த அருளால் சிலர் இங்கு வந்து பாதுகாப்பு பணியை நிறைவேற்றுகின்றனர்.)

===============================
# இராவணேஸ்வரன் சுரா கல்லில் இருந்தது சில கற்களை பிடுங்கி, இலங்கை தேசத்தில் அங்கங்கு புதைத்து வைத்துள்ளார்
===============================

குருநாதர் :-  அப்பனே, அறியாமல் இருக்க. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் அது சுற்றில் அப்பனே, பின் அது கல்லானது அப்பனே, சுற்றிக் கொண்டே இருக்கும் அல்லவா? அப்பனே, அதில் பிடுங்கி அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, கற்களை அப்பனே, அழகாக ராவணேஸ்வரன் புதைத்து வைத்துள்ளான்  அப்பா இங்கு. இதனால்தான், அப்பனே, எப்பொழுதோ அழிந்திருக்கக்கூடியது. ஆனாலும், அப்பனே, இங்கு இப்படி இருக்கின்றது என்றால், அப்பனே, அதுவும் காரணம் ராவணேஸ்வரனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (ராவணேஸ்வரன்  என்ன செய்தார் ? சுரா கல்லில் இருந்தது சில கற்களை பிடுங்கி, இலங்கை தேசத்தில் அங்கங்கு புதைத்து வைத்துள்ளார். எப்பொழுதோ இலங்கை அழிந்திருக்கக்கூடியது. இலங்கை இன்னும் அழியாமல் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் ராவணேஸ்வரனே)

குருநாதர் :-  அப்பனே, அதன் சக்தி மிகுந்த சக்தியானது அப்பனே. இதனால், அப்பனே, ஒவ்வொருவனும் ஒவ்வொரு மனிதனும் கூட, அப்பனே, நிச்சயம், பின் அதாவது அழிவு அழிவு வருகின்ற பொழுது, அதை நிச்சயம் மீண்டும், அப்பனே, பின் மீட்டெடுப்பான் அப்பனே, தேசத்தை.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( அழிவு, அழிவு என்று வரும் போல இருக்கும். ஆனால் எப்படியாவது யாரோ ஒருத்தர் வந்து இந்த தேசத்தை காப்பாத்துவாங்க. )

=============================
# பல உருவங்களாக சுற்றிக்கொண்டிருக்கும் - சுரா கல் 
=============================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, எதை என்று புரிய அப்பனே. அறிந்தும் உண்மை நிலை அப்பனே, பல தெரிய வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே, பின் அதாவது அறிந்தும் புரிந்தும் அத்தனை, அப்பனே, உருவங்களாகவும் அக்கல், அப்பனே, சுற்றிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (உலகில் உள்ளன உருவங்கள் பல. அதாவது பல தெய்வங்களின் உருவங்கள்  , பல பொருள்கள் , தங்கம் , வைரம், மலை , நீர் , கடல்  போன்ற எல்லா உருவங்களாகவும் அந்த சுரா கல், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இருக்கின்றது)  

====================================
# இராவணேஸ்வரன் இன்னும் உயிரோடு இருப்பதன் ஜீவ சமாதி ரகசியங்கள் 
====================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, ஒவ்வொன்றும் அங்கு எதை என்று புரிய அப்பனே. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அங்கெல்லாம் எடுத்து வந்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட (சுரா கல்) இவ்விதயத்தில் புதைத்து விட்டான். அப்பனே, நிச்சயம் எப்பொழுதும் என்னை மறக்கவே கூடாது, இறைவா என்றெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ராவணன். இதனால்தான், அப்பா, நிச்சயம் இன்னும் ராவணன் உயிரோடே  இருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இலங்கையின் பல இடங்களில் உள்ளவற்றை எடுத்து வந்து, சுரா கல்லில் அதாவது இவ் இதயத்தில் புதைத்து விட்டார். இறைவா நீ என்னை எப்போதும் மறக்கக்கூடாது என்று வேண்டி. இதனால்தான்  இன்னும் ராவணன் உயிரோடு இருக்கின்றார்.). 

குருநாதர் :-  இறைவா, இறைவா, நீ இருக்கும் வரை, நிச்சயம் யான் மறையக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இராவணேசன் , ஒரு வரம் இறைவனிடம் பெற்றார். இறைவா நீ இருக்கும் வரை ராவணேசன் நான் மறையக்கூடாது. அப்போ இராவணேசன் பற்றி மனிதர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இறைவா உன்னை பற்றி பேசும்போது , இராவணேசன்  என்னையும் பற்றி பேச வேண்டும் என்று வரம்.) 

குருநாதர் :-  ஏன்? எதற்காக என்றால், பின் நான் அழகாக மக்களை பாதுகாத்துக் கொண்டு. இதனால் எதை என்று அறிய நான் ஏன்? 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (இறைவா நீ எப்படி மக்களுக்கு நன்மை செய்கின்றாயோ அதேபோல் இராவணேஸ்வரன் நான் நன்மை செய்து மக்களை பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றேன். அதனால் உன் மனதில் நான் எப்போதும் நிரந்தரமாக இருக்க வேண்டும்). 

================================
# நல்லது செய்து கொண்டே இருந்தால், இறைவன் தன்  இதயத்தில் நிச்சயம் சிறு இடமாவது கொடுப்பார்.
================================

குருநாதர் :-  அப்பா, இதே போலத்தான், அப்பனே, நல்லது செய்து கொண்டே இருந்தால், அப்பனே, இதயத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன், அப்பனே, நிச்சயம் சிறு இடமாவது கொடுப்பான் அப்பா. அவ்வாறு கொடுக்கின்ற பொழுது, நீ வெற்றி காண்பாய் அப்பனே. அதாவது இவன் உடம்பையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வைத்துக்கொண்டு, அப்பனே, இவ் ஆன்மாவையும் வைத்துக்கொண்டு, அப்பனே, நல்லது செய்ய பயன்படுத்த வேண்டுமே தவிர, அப்பனே, பின் நிச்சயம் பிறர் உயிரை துன்பமாக்கினால், அப்பனே, நிச்சயம் உடம்பும், பின் ஆன்மாவும் பாழாகப்  போகும் என்பேன் அப்பனே. உடம்பில், அப்பனே, வியாதிகள் வந்துவிடும் அப்பனே. பின் ஆன்மா, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மீண்டும் பிறப்பெடுத்து விடும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இந்த உடலும் உயிரும் எப்போதும் நன்மை செய்யும் வழியில் நிலைத்திருக்க வேண்டும். ஒருவருக்காவது, ஒரு உயிருக்காவது நன்மை செய்யும் மனப்பான்மை தொடர வேண்டும். நன்மையில் நிலைத்திருந்தால்தான் இறைவனருளில் நாம் நிலை பெற முடியும். அது இல்லையெனில், இறைவன் நம்மை ஒரு இடத்தில் ஓரமாக ஒதுக்கிவிடுவார். மேலும், மீண்டும் பிறவி எடுத்து, உடல் சிதைந்து, பலவித நோய்கள் வந்து துன்பப்படுத்தும் நிலை ஏற்படும். அப்போது அந்த ஆன்மா மீண்டும் பிறப்பெடுத்து விடும். )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏற்கனவே, அப்பனே, பல உரைகளின் தெளிவு, அப்பனே, பின் பெற்றுவிட்டார்கள் எதை என்று புரிய. அப்பனே, இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்பதை எல்லாம் சித்தர்கள் யாங்கள் சொல்லிவிட்டோம் அப்பனே, மாங்கனி, 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (இதற்கு சரியான எடுத்துக்காட்டு மாம்பழம். சுவைக்கப்படும் பழம் — அது உடலைப் போன்றது. ஆனால் அதன் உள்ளிருக்கும் கொட்டை ஆன்மாவைப் போன்றது. அந்த ஆன்மா நன்மை செய்யும் நிலைக்கு வராவிட்டால், அது எவ்வாறு உயர்ச்சி பெறும்? மாம்பழம் அழிந்து போனாலும், அதன் விதை நல்ல நிலத்தில் விழுந்தால் மட்டுமே பயன் தரும். அதுபோல, நாமும் எப்போதும் நன்மை செய்து, பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்.)

==========================
# உங்கள் அனைவருக்கும் இவ்வுலகில் , அதி  உயர், உட்சபட்ச மிகப்பெரிய ஒரே  பரிகாரம்  - இடை விடாமல் நல்லது செய்து கொண்டே இருங்கள்.
=========================

குருநாதர் :-  அப்பனே, சரியாகவே, அப்பனே, பின் நல்லது செய்து கொண்டே இருந்தாலே, அப்பனே, நிச்சயம் இறைவன் இறங்கி வந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வான் அப்பனே. இதுதான், அப்பனே, பின் பரிகாரம் என்பேன் அப்பனே. உயரே  பரிகாரம் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பா, இதை விட்டுவிட்டு எதை செய்தாலும் ஒன்றும் ஆகாது அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( “நாங்கள் எந்த பரிகாரம் செய்ய வேண்டும்?” என்று நீங்கள் கேட்கலாம். உண்மையான பரிகாரம் என்னவென்றால் — பிற உயிர்களுக்கு நன்மை செய்து கொண்டிருப்பதே. குறிப்பாக கலியுகத்தில், இதனை தொடர்ந்து செய்து வந்தால் அதுவே மிகப் பெரிய பரிகாரம். இதுவே உயர்ந்த மிகப் பெரிய பரிகாரம் என்று குருநாதர் உரைக்கின்றார்.நன்மை செய்வதே அனைத்திற்கும் அடிப்படை)

குருநாதர் :-  அப்பனே, ஆனாலும் மனிதன் ஏமாற்றுவான் அப்பா. அதை செய்தால் இவை நடக்கும். இவை செய்தால் அவை நடக்கும் என்று அப்பனே. ஆனாலும் அது வீண் கதை. ஒன்றும் நடக்காது. கடைசியில், பின் ஒன்றுமே நடக்கவில்லையே. அதை செய்தேன், இதை செய்தேன் என்று அப்பனே, பின் இறைவனுக்குத் தான் கெட்ட பெயர் என்பேன் அப்பனே. படைத்தவனுக்கு கெட்ட பெயர். அப்பனே, படைத்தவனுக்கு நல் பெயர் வாங்கித் தாருங்கள். 

குருநாதர் :-  எத்தனை, எத்தனையோ, நிச்சயம் தன்னில் கூட மனிதன் தான் அறிந்தும் புரிந்தும், பின் மனிதனை அழிக்கப் போகின்றான் என்பதை எல்லாம் யாங்கள் உணர்ந்தோம். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் விட்டுவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் பின். 

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மறைமுகமாக இறைவன், அப்பனே, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட இயங்கிக் கொண்டே இருக்கின்றான். 

=====================================
# முருகப்பெருமான் கதிர்காமத்தில் ஏன் தன்னை வெளிக்காட்டவே இல்லை என்ற ரகசியம் 
===================================== 

=====================================
# தன்னை மறைத்தால் புண்ணியம் பெருகும் 
=====================================

குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, எது என்று புரிய. அப்பனே, இதனால் முருகன் இங்கு காவலாளியாக இருப்பதால், அப்பனே, தன்னை வெளிக்காட்டவே இல்லை என்பேன் அப்பனே. இதுதான், அப்பனே, புண்ணியம் அப்பனே. அதனால், மற்றவர்களுக்கு நன்மை, அப்பனே, செய்து கொண்டே இருங்கள் அப்பனே. நிச்சயம், அப்பனே, பின் அவைதன் எவ்வாறு என்பதை எல்லாம் தானாகவே ஒரு நாள், பின் நிச்சயம், அப்பனே, புண்ணியங்கள் தேடிக்கொண்டே, தேடிக்கொண்டே, இதனால், அப்பனே, நன்மைகள் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( அதனால்தான் கதிர்காமத்தில் இங்கு முருகப் பெருமான் என்ன செய்கிறார்? அவர் காவலராக இருப்பவர். இங்கு வேலின் மூலம் உலகைக் காக்கும் பணியில் இருப்பதனால், தன்னை உருவமாக  வெளிப்படுத்தாமல் மறைந்து செயல்படுகிறார்)

========================================
(கதிர்காம ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானையோடு அமர்ந்திருக்கும் திரை சீலைக்கு மட்டுமே பூசை ஆராதனைகள் நடைபெறுகின்றது ரகசிய அறைக்குள் அதாவது கருவறைக்குள் முருகனுடைய வேல் எந்திர தகடு இருப்பது ஏற்கனவே குருநாதர் வாக்கின் மூலம் அறிந்திருக்கின்றோம் கருவறை பூட்டப்பட்டு அதற்கு முன்பாக தொங்க விட்டிருக்கும் திரை சீலைக்கு மட்டுமே பூஜை ஆராதனைகள் நடைபெறுகின்றது முருகன் தன்னை இங்கு வெளி காட்டாமல் காவலாளியாக இருக்கின்றார்)
========================================

குருநாதர் :-  அப்பனே, எப்பொழுது ஒருவன், அப்பனே, பாதுகாவலாக இருக்கின்றானோ, அவன் நிச்சயம் மறைத்து தான் இருப்பான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( ஒருவர் பாதுகாவலராக இருப்பவரானால், அவர் பொதுவாக வெளிப்படையாகத் தோன்ற மாட்டார்; மறைந்து செயல்படுவதே அவரது இயல்பு. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு — ரயில். நாம் ரயிலில் பயணம் செய்கிறோம்; ஆனால் ரயிலை இயக்குபவர் யார் என்பதைப் பெரும்பாலும் அறிய முடியாது. நாம் ஏறி அமர்ந்து பயணம் செய்து இறங்கிவிடுகிறோம்; ஆனால் இயக்குபவரின் முகத்தைக் கூட காண்பதில்லை. சாதாரண பேருந்து ஓட்டுநரையே பல நேரங்களில் நாம் அறிய முடியாது. விமானத்தை இயக்குபவரையும் பயணிகள் நேரடியாகப் பார்க்க முடியாது. அதனால் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் மறைமுகமாகவே செயல்படுவார்கள். இங்கு முருகப் பெருமான் அனைவரையும் மறைமுகமாகக் காத்து வருகிறார். )

குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய அப்பனே.  இதனால்தான், அப்பனே, அறிந்தும் புரிந்தும், அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, ஏன்? எதற்காக? அப்பனே, அனைத்தும் நடக்கின்றது என்பதை எல்லாம் போகப்போக எடுத்துரைப்போம் அப்பனே. அனைத்தும் சொல்லித் தருவோம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

===================================
# சுரா கல்லுடன் உங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்தும் கடலில் நீராடும் வழிமுறை - மாபெரும் ரகசியம்.
===================================

===================================
# மஞ்சள், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த் தூள், வேப்பிலை, துளசி, வில்வ இலை போன்றவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, அதை உடலுக்குத் தேய்த்துக் கடலில் குளித்து , நீராட வேண்டும். அப்போது வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும்.
====================================

குருநாதர் :- அப்பனே, முதலில் எதை என்று புரிய அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம், பின் எவை என்று புரிய அப்பனே, பின் ஏதாவது அப்பனே, பின் கடல் தன்னில்  கூட, அப்பனே, நீராடுகின்ற பொழுது, அப்பனே, தூய மஞ்சளோடு, அப்பனே, பச்சை கற்பூரத்தையும், ஏலக்காயும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, சரியாகவே, பின் வேப்பிலையும் கூட, அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் துளசி இலைகளையும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும், இன்னும், அப்பனே, பின் வில்வ இலைகளையும் கூட, அப்பனே, சாறு பிழிந்து , அப்பனே, முதலில், அப்பனே, உடம்பிற்கு தேய்த்து, அப்பனே, பின் நிச்சயம், பின், அப்பனே, பின் நீராடிக் கொண்டே வந்தாலே, அப்பனே, பின் அக்கல்லுக்கும், இவ் உடம்பிற்கும் தொடர்பு, அப்பனே, பலவகை ஏற்பட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வெற்றிகள் கிட்டுமப்பா. தன்னைத்தான் யார் என்று உணர்தல் சக்தி பிறக்குமப்பா. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ஐயா, பெரிய ரகசியம் சொல்லி இருக்காரு. எழுதி இருக்கேன், இதான் இவ்வளவு நேரம் கேட்டதிலேயே முக்கியமான ரகசியம் சொல்லி இருக்காரு. எழுதி இருக்கேன்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (அய்யா , எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடலில் நீராடும் போது, இறைவனின் இயல்பை உணர்வதற்காக, மஞ்சள், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் தூள், வேப்பிலை, துளசி, வில்வ இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்து, அதை உடலுக்கு தேய்த்து குளித்து , நீராட வேண்டும். அப்போது இறைத் தன்மை மிகுந்த சுரா கல்லுடன் நமக்கு நேரடி தொடர்பு ஏற்படும் அய்யா. அதனால் சக்தி நமக்கு  கிடைக்கும் அய்யா. வெற்றி நமக்கு கிடைக்கும் அய்யா. தன்னைத்தான் யார் என்று நம்மை உணரும்  சக்தி கிடைக்கும். )

குருநாதர் :-   அப்பனே, இவைத்தன், அப்பனே, பின் நிச்சயம் இவ்வாறு நீராடி, அப்பனே, பின் நல்விதமாகவே, அப்பனே, பின் எதை என்று புரிய அப்பனே, அருகம்புல்லை , அப்பனே, நிச்சயம் சாற்றினை , அப்பனே, உட்கொள்ள அப்பனே, இன்னும் ஞானங்கள் பிறக்கும். 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட மாறி மாறி, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் கூட, அப்பனே. 

குருநாதர் :-   அது மட்டுமில்லாமல், இல்லத்திற்கு வந்து, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் அதாவது தேங்காயை, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் அறிந்து கூட, அப்பனே, நல்விதமாகவே, பின் அதாவது பற்களால், பின் நிச்சயம் மென்று தின்ன வேண்டும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் இவ்வாறு கடலில் நீராடி வருவது அவசியம். இவ்வாறு நீராடி வீட்டிற்கு வந்த பின், தேங்காயை நன்றாக மென்று உண்ண வேண்டும்.)

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் இவ்வாறாக, அப்பனே, அன்று இரவே, அப்பனே, பின் ருத்ராட்சையும், அப்பனே, நல்விதமாக, சிறிது, அப்பனே, அப்பனே, பசுஞ்சாணமான விபூதியும் , அப்பனே, நீரில் இட்டு, அப்பனே, பின் அதை மறுநாள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதனுடன், அப்பனே, சிறிது தேனையும், அப்பனே, நல்விதமாக, எலுமிச்சையும் இட்டு, அப்பனே, பின் உட்கொண்டு வந்தாலே, அப்பனே, பல வியாதிகள் தீருமப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (அன்று இரவில் - தூய நீரில் விபூதி மற்றும் ருத்ராட்சத்தை வைத்து விட வேண்டும். மறுநாள் காலை அந்த நீரில் தேனையும், பின்னர் எலுமிச்சை சாறும் கலந்து அருந்தினால், பல உடல் குறைகள் நீங்கும் ) 

========================================
# அமாவாசை  - முன் , அமாவாசை அன்று , பின் மறுநாள் (3 நாட்கள் )
# பௌர்ணமி - முன் , பௌர்ணமி அன்று , பின் மறுநாள் ( 3 நாட்கள் )
========================================

குருநாதர் :- அப்பனே, இவைதன் அமாவாசைக்கு முதல் தினம், முதல் தினம் தொடங்க வேண்டும் அப்பனே. அதாவது முன் தினமே, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின் நடுவில் அமாவாசை, பின்பே, அப்பனே, பின் இதைத்தன், அப்பனே, இப்படியே அமாவாசை, பௌர்ணமி, அமாவாசை, பௌர்ணமி. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( அய்யா அமாவாசை நாளை ஆரம்பமாகின்றது எனில், இந்தச் செயலை அமாவாசைக்கு முன் நாளிலேயே தொடங்க வேண்டும். பின்னர், அமாவாசை நாளும் அதற்குப் பிந்தைய நாளும்—மொத்தம் மூன்று நாட்கள்—இதைப் பின்பற்ற வேண்டும். இதன் வரிசை தெளிவாகப் புரிகிறதா அய்யா ? அமாவாசைக்கு அடுத்த நாளும் இதே முறையில் தொடர வேண்டும். முதல் நாளிலிருந்தே இந்த அனுஷ்டானத்தை முறையாக ஆரம்பிக்க வேண்டும். இதேபோல், பௌர்ணமிக்கும் மூன்று நாட்கள் என மூன்று நாள் முறையைப் பின்பற்ற வேண்டும். )

===========================
# சுரா கல்லின் சக்தி அதனை,  கதிர்காமம் இங்குதான் அதிகமாக ஈர்க்கும் சக்தி உள்ளது இந்த 3 நாட்களும். 
===========================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இவ்வாறு எதை என்று புரிய அப்பனே, இவ் மும் நாள், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் பல, அப்பனே, நீராடுதல், அப்பனே, பின் நிச்சயம் தன்னில்  கூட, பல குளங்களிலும் கூட, ஏரிகளிலும் கூட, அப்பனே, கடல் தன்னில்  கூட, அப்பனே, நிச்சயம். அப்பனே, ஏனென்றால், அப்பனே, அப்பொழுது நிச்சயம் அக்கல்லானது சக்தியானது. அப்ப, நிச்சயம், பின் இங்குதான் அதிகமாக ஈர்க்கும் சக்தி அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அமாவாசை முன் ,  அமாவாசை  அன்று , அமாவாசை  மறுநாள் - மூன்று நாள் , அதேபோல பௌர்ணமி முன் ,  பௌர்ணமி  அன்று , பௌர்ணமி  மறுநாள் - மூன்று நாள்,  நிச்சயமா எங்க குளிக்க வேண்டுமாம்? கடலில், ஏரிகளில், நதிகளில் நீராடவேண்டும்  ஏன் குளிக்க வேண்டுமாம்? சுரக்கல்லின் வைப்ரேஷன் கடலில் இங்கு அதிகமா இருக்கும் அப்ப, குளிச்சோம்னா நமக்கு சில உணரும்  சக்திகள் கிடைக்கும். 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, பின் அவ்வாறாக கடலில் நீராடுகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், நிச்சயம், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் நவ காயத்ரி மந்திரத்தையும் கூற வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அவ்வாறு நீங்கள் ஸ்நானம் செய்யும் போது, நவகிரகங்கள் தொடர்பான காயத்ரி மந்திரங்களைக் கூற வேண்டும்.)

குருநாதர் :-  அப்பனே, ஏன் எதற்கு என்று பின் நான் சொல்கின்றேன் என்றால் அப்பனே, பின் ஒரு நாளில், அப்பனே, பின் அங்குதான், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட கிரக தாக்கம் அதிகமாக இருக்கும் அப்பா. இதனால், அப்பனே, இவ்வாறு பின் மந்திரங்கள் சொல்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், அப்பனே, கிரகத்தால் வரும் கெடுபலன்கள் குறையும் அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இப்போது கூறப்பட்ட வாக்கின் பொருள் தெளிவாகப் புரிந்ததா அய்யா? குருநாதர் அகத்திய மாமுனிவர் அவர் இவ்வாறு உபதேசங்களை எப்போதும் இதே முறையில் வழங்குவார். உலக நலனுக்காகவும், உலகத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் விளக்குவார். அதே நேரத்தில், தனிப்பட்ட நலனையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவார். இதுவே ‘ஜீவநாடி’ எனப்படும் உபதேசத்தின் சாரம். தனிநபரின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும் வழிகாட்டும் போதனைகள். உடல் நோய்களிலிருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைப்பார்.)

===========================
# தேங்காய் அடிக்கடி உட்கொண்டால் அனைத்தும் உணரும் சக்தி கிடைக்கும்.இறைவன் அழகாகக் குடி கொள்வார் 
===========================

குருநாதர் :-  அப்பனே, ஏன் எதற்கு அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, தொண்டை பகுதியில், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அழகாகவே. அப்பனே, பின் அதாவது மூச்சு எதை என்று புரிய.  அப்பனே பின் மூச்சு குழாய்கள், அப்பனே, பக்கத்தின், பின் பக்கத்திலே, அப்பனே, இவைதன், அப்பனே, சரியாகவே. அப்பனே, தேங்காயை உட்கொண்டால், அப்பனே, சரியாக சுவாசமும், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அனைத்தும் உணரும் சக்தியும். அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (தேங்காய் சாப்பிட்டால் என்ன ஆகும்? மூச்சுக்குழாய் எல்லாம் நல்லா சீராகும். எல்லாமே உணரும் சக்தி கிடைக்கும்.) 

குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் பின் உணரும் சக்தி உங்களுக்கு தோன்றும் அப்பா. அப்பனே, பின் உங்கள் உடம்பில் உள்ள சில அழுக்குகள் தீரும் அப்பா. அதை உட்கொண்டு வந்தாலே, அப்பனே, பின் நிச்சயம் தேங்காயை உட்கொண்டு வந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, பல, அப்பனே, பின் நோய்கள், அப்பனே, பல, பல தரித்திரங்கள் நீங்கிட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, உடம்பு, அப்பனே, பரிசுத்தமாகும். பரிசுத்தமாகின்ற பொழுது, இறைவன் அழகாக குடி கொள்வான் அப்பனே. இதனால், அப்பனே, நன்மைகள். அப்பனே உங்களுக்கு புரியுமா அப்பா? 

==============================================
தேங்காய் குறித்த குருநாதர் அளித்த வாக்கு
சித்தன் அருள் - 1066
https://siththanarul.blogspot.com/2022/01/1066.html

அடுத்து தேங்காய் என்று சொல்கின்றார்களே அதற்கு வருகின்றேன். மனிதர்கள் இதை உடைத்து மட்டும் செல்வார்கள் இதன் பயன் யாருக்கும் தெரிவதில்லை என்பேன். பின் நல் முறைகளாக ஈசனிடம் விநாயகப்பெருமான் உடலில் அனைத்து செல்களும் நன்றாக இருக்க நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். ஈசனும் பின் தேங்காயை உண்டால் அனைத்து நோய்களும் போய்விடும் இதில் பல அதிசயங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டான்.
==============================================


குருநாதர் :-  அப்பப்பா, எப்பொழுதுமே, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட அதிகமாக பேசாதிருத்தல் அவசியம். அப்பனே, அதிகமாக மென்று தின்னுதல் வேண்டும். அதாவது, தேங்காயை. 

===================================
# அமாவாசை, பௌர்ணமி - தீய சக்திகள் அதிகமாக வெளிவிடும் ஒரு படலம் 
==================================

குருநாதர் :-   அப்பனே, இன்னும் எதை என்று புரிய அப்பனே, இன்னும் தரித்திரங்கள், அப்பனே, இல்லத்தில் கூட, அப்பனே, பின் ஏனென்றால், அப்பனே, சில சில வழியில் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில்  கூட, அமாவாசை, பின் நிச்சயம் பௌர்ணமி தன்னில்  கூட, அப்பனே, அதிகமாக, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, ஒரு படலம் இருக்கின்றதப்பா. அப்படலம், தீய சக்திகள் அதிகமாக வெளிவிடும் அப்பா. அப்பனே, அவ்வாறு வெளிவிடும் பொழுது, அப்பனே, நிச்சயம் மனிதனுக்கு மனமாற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. அதாவது, எது பொய், எது உண்மை என்று தெரியாது என்பேன் அப்பனே.  குழப்பங்களோடே , அதற்கும் நான் சொல்கின்றேன் இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில், வானில் உள்ள ஒரு படலத்திலிருந்து, சில தீய அதிர்வுகள் வெளிப்படும். அவை வெளிப்படும் போது, மனிதனின் மனதில் குழப்பம் ஏற்படலாம்; மனம் ஒருநிலைப்படாமல் அலைபாயும்.. இதற்கான தீர்வாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் விளக்குகிறேன் என்று சொல்கின்றார்.)

=============================
# பிராணாயாமம் மருந்து - நல்  சக்திகளை கூட உள் புகும். தீய சக்திகள்  வெளியேறும்.  
============================

குருநாதர் :-  அப்பனே, இதற்கு தகுந்தார் போல், அப்பனே, நிச்சயமாக, அப்பனே, அதிகாலையிலே, அப்பனே, நிச்சயம், நிச்சயம் எதை என்று புரிய அப்பனே, பிராணாயாமம் செய்ய வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில்.  வலது நாசியின், அப்பனே, பின் இடது நாசியின், அப்பனே, அடைத்து, அப்பனே, பின் இடது நாசியிலும், வலது நாசியிலும், அப்பனே, இவ்வாறாக இட்டுக்கொண்டே வந்தால், அப்பனே, பலமாக, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, மூச்சை, அப்பனே, பின் அடி வயிறு, அப்பனே, வரை செல்ல வேண்டும் என்பேன் அப்பனே. அவ்வாறு சென்றால் மட்டுமே, அப்பனே, பின் உயர்வுகள் ஏற்படும் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   (பிராணாயாமம்  மூச்சுப் பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். நல்லதாகும். உடம்பில் வியாதிகள் வராது.)

குருநாதர் :-   அப்பனே, இவ்வாறாக, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, பின் நல் சக்திகளை கூட உள்ளிழுக்கலாம் என்பேன் அப்பனே. தீய சக்திகளை, அப்பனே, வெளிக்கொண்டு வந்து.

சுவடி ஓதும் மைந்தன் :- (பிராணாயாமம் நீங்கள் செய்தீர்கள் என்றால்,  நல்ல சக்தியும் உள்ள போகும்.  தீய சக்தி  வெளியேறும். )

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, இவையே, அப்பனே, மருந்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (அய்யா, நல்ல சக்திகளை உடலிலும் மனத்திலும் நிலைநிறுத்த விரும்பினால், அவசியமாக மூச்சுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மனிதனுக்குள் எவ்வாறு சில தீய அதிர்வுகள் உருவாகின்றன என்பது வெளிப்படையாகத் தெரியாது; ஆனால் அவை நீங்குவதற்கான வழி சுவாசத்தைச் சீராக்குவதிலேயே உள்ளது. முறையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல சக்திகள் உடலுக்குள் ஊடுருவி நிலைபெறும்; தீய சக்திகள் வெளியேறி மனமும் உடலும் சுத்தமடைந்து தெளிவடையும்.)

குருநாதர் :-  அப்பனே, இன்னும் பின் உடம்பில் எத்தனை, எத்தனை ஆட்டங்கள், பேயாட்டங்கள் என்பேன் அப்பனே உடம்பு. 


குருநாதர் :-  அப்பனே, எதை என்று புரிய அப்பனே, இவ்வாறாக செய்து கொண்டு வந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, சீர் பெறும் உடம்பு என்பேன் அப்பனே. 

=============================
# உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கும் மந்திரம் 
=============================

குருநாதர் :-  இதைத்தன் உருவாக்க, ஓம், மம், அம், சிம், வம், எம, நம, யசி , வசி, நம, யசி, யசி, கன், கங், நம, பம், நம், எம், வம், சிம். இவைத்தன், அப்பனே, சொல்லிக்கொண்டே வந்தால், உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்கும். அப்பா, அவ்வளவுதான். 

குருநாதர் :-  அப்பனே, அவரவர், அப்பனே, பிடித்தார் போல். அப்பனே, பின், அப்பனே, முன்பே, அப்பனே, பின், இடையிடையே, அப்பனே, பின், அப்பனே, இறைவனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவரவர் கூப்பிடுமாறு.

சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களுக்கு பிடித்த தெய்வங்களின் பெயர்களை இந்த மந்திரத்தின் முன்பு, அல்லது இடையிடையில் உங்கள் விருப்பம் போல இணைத்து மந்திரம் சொல்லலாம்.) 

====================================
# கிராம்பையும் வெற்றிலையும் அவசியம் உட்கொள்ள வேண்டும் 
====================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இவை சொல்லிய பிறகு, அப்பனே, கிராம்பையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், எவை என்று அறிய, அப்பனே, உட்கொள்ள வேண்டியது அவசியம் அப்பனே. வெற்றிலையும், அப்பனே, பின், உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், அப்பனே, ஏனென்றால், அப்பனே, கலியுகத்தில் பல நோய்கள் மனிதனை தாக்குமப்பா. அவன் நோயாலே, அப்பனே, பின், நிச்சயம் அழியுமாம். அப்பா, அப்பனே, சந்தோஷங்களே போய்விடும் என்பேன். அப்பனே, அதனால்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( கலியுகத்தில் நோய்கள் அதிகமா வரும். அப்ப, இதை, மந்திரம் இதை சொல்லிவிட்டு, உடனே என்ன செய்யவேண்டும்? கிராம்பும், வெற்றிலையும், நிச்சயம் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றார். )

குருநாதர் :- அப்பனே, இன்னும், அப்பனே, பல கோடி, அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வாக்குகள் காத்துக் கொண்டிருக்க. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இவை தன், அப்பனே, அனைத்தும் நீங்கள் வெல்வீர்களாக அப்பனே.

குருநாதர் :- அப்பனே, பின், இன்னும் புதுமையான விஷயங்கள் எல்லாம் என்பேன் அப்பனே, நிச்சயம், மனிதன் ஏன் அப்பனே, அதாவது, நீங்கள் எல்லாம் எதற்காக இப்புவிதனுக்கு வந்துள்ளீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்டாலே, வெற்றியாகும் என்பேன் அப்பனே.  பிறப்பின் ரகசியம்  தெரியவில்லையே. 

குருநாதர் :-  அப்பனே, அதற்கும் புண்ணியம் வேண்டும். அதனால்தான், அப்பனே, இப்பொழுதிலிருந்தே சில, அப்பனே, புண்ணியங்கள் செய்து கொண்டே வாருங்கள். 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், மனிதன், அப்பனே, பின் தானாக எதற்காக வருகின்றான் என்பதே தெரிவதில்லை என்பேன் அப்பனே. இறைவன் ஒவ்வொரு வேலைக்காக ஒவ்வொரு மனிதனை இங்கு அனுப்புகின்றான் என்பேன் அப்பனே. அவ்வேலையைச் சரியாகச் செய்து முடிக்கவில்லை என்றால், அப்பனே, கஷ்டங்கள் வந்து, அப்பனே, அழிவுகள் ஏற்பட்டு மீண்டும் பிறக்கின்றான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (“ஒவ்வொரு மனிதனையும், அவரவர் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இறைவன் உலகிற்கு அனுப்புகிறார். அந்த நோக்கத்தை யார் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு வாழ்க்கையில் துன்பம் குறையும்; அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றியை அடைய முடியும். ஆனால் அந்த நோக்கத்தை உணராதவர்கள், அதே செயல்களை மீண்டும் மீண்டும் செய்து, அதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு , மீண்டும் பிறவி எடுப்பார்கள்.)

குருநாதர் :-  அப்பப்பா, இன்னும், அப்பனே, உலக ரகசியங்கள் பலவகை. அப்பனே, யார் சொல்லித் தருவார்கள்? அப்பனே, மனிதன் இல்லை. அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :- (உலகத்தில் இன்னும் பெரிய பெரிய ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றது. ஆனால், யார்  சொல்லித் தருவார்கள்? யாரும் கிடையாது. எந்த மனிதனுக்கும் தெரியாது. )

குருநாதர் :-  அப்பப்பா, இவ் பாதி அழிவு அழிந்துவிட்டதே. அப்பனே, நிச்சயம் அங்கேயே சுவடிகள் மறைத்து அப்பனே. இன்னும், அப்பனே அப்படித்தான் இருக்கின்றது. அதில் உள்ளவை எல்லாம் நாங்கள் சொல்லுவோம். 

குருநாதர் :- அப்பனே, நல்விதமாக மாற்றங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனைவருக்காகவும் மீண்டும், அப்பனே, துதியுங்கள். மறுபடியும் சிவபுராணம்.

( அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள். சிவபுராணம் பாடி முடித்த பின்னர் மீண்டும் வாக்கு ஆரம்பம் ஆனது)

===============================
# உங்களுக்கு வெற்றி கிடைக்கும் தீப ரகசியங்கள் 
===============================

குருநாதர் :- அப்பனே, அம்மையே, அனைவருக்கும் எங்களுடைய ஆசிகள். கவலை இல்லை, அப்பனே நல்விதமாகவே, அப்பனே. 

குருநாதர் :- இன்னும், அப்பனே, பின் வாழ்க்கையில் முன்னேற்றுங்கள் ஏற்பட, அப்பனே. அனுதினமும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இறைவனுக்காக, அப்பனே, முழு மனதோடு, அப்பனே, தீபத்தை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அதுமட்டுமில்லாமல், தீபத்திலே, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, ஏற்கனவே, பின் சொல்லிவிட்டேன். அதையும் உங்களிடத்தில் செப்புகின்றேன். 

குருநாதர் :-  கிராம்பையும், அப்பனே, ஏலக்காயும், அப்பனே, பச்சை கற்பூரத்தையும், அப்பனே, நிச்சயம், சிறிதளவு, அப்பனே, பின் அரிசி தூளையும், அப்பனே, நல்விதமாகவே. அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பச்சை கற்பூரத்தையும், அப்பனே, பின், அதாவது, கற்கண்டையும், அப்பனே, நன்றாக அரைத்து, அப்பனே, சிறிதளவு கோதுமையும் கூட. அப்பனே, நிச்சயம், அதாவது, கோதுமை தூளையும், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் இவையெல்லாம் நல் அரைத்து, அப்பனே, பின் வைத்துக்கொண்டு, அப்பனே, உன் எண்ணங்களை ஈடேற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், பின் உளுந்து, சிறிதளவு, அப்பனே, நிச்சயம். ஏன், எதற்காக? அதுமட்டுமில்லாமல், பச்சை, பின் குன்றின் மணி, அப்பனே, அதாவது, அப்படியே, பச்சை குன்றில் மட்டும், அப்பனே, அப்படியே, அப்பனே, நிச்சயம் மிதக்க விட வேண்டும் எண்ணெயில், என்பேன், அப்பனே. நல்விதமாக. 

குருநாதர் :-  இவ்வாறாக, மற்றவையெல்லாம் அரைத்து, அப்பனே, நல்விதமாக, தீபம்  தன்னிலே , அப்பனே, இட்டு, நல்விதமாகவே, அப்பனே, சில. அப்பனே, பின் உண்மை, அப்பனே, நிறைந்த மனதால், அப்பனே, பின் அழகாக, சில மந்திரங்களை கூட உச்சரித்துக் கொண்டே வந்தாலே, வெற்றி கிடைக்கும், அப்பா. 

==============================================
அன்பு அகத்திய மாமுனிவரின் வாக்கின்  சுருக்கம் : -  “வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில், தினமும் இறைவனை முழு மனதுடன் நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதை நம் குருநாதர்  முன்பும் கூறியுள்ளார்; இப்போது மீண்டும் தெளிவாகச் மீண்டும் உங்களுக்காக சொல்கின்றார்.
தீபத்தில் சேர்க்க வேண்டிய பொருட்கள்: கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம், சிறிதளவு அரிசி மாவு—இவற்றை நன்றாக அரைக்க வேண்டும். மேலும் பச்சை கற்பூரம், கற்கண்டு, சிறிதளவு கோதுமை மாவு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்தச் சேர்மம், மனதில் உள்ள நல்ல எண்ணங்கள் நிறைவேற உதவும்.
அவை மட்டுமல்லாமல், சிறிதளவு உளுந்தும் சேர்க்கப்பட வேண்டும். ஏன் சேர்க்க வேண்டும் என்றால், பச்சை ‘குன்றின் மணி’ எனப்படும் பொருளையும் எண்ணெயில் நன்கு மிதக்கச் செய்து பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து, தீபத்தில் சேர்த்து, உண்மையால் நிறைந்த மனதுடன் சில மந்திரங்களை உச்சரித்தபடி தீபத்தை ஏற்றினால், வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்பது நம் அன்பு அகத்திய மாமுனிவரின் வாக்கு
=======================================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எம்முடைய ஆசிகள். இன்னும் வாக்குகள் உண்டு, என்பேன், அப்பனே, நலங்களாகவே. அம்மையே, அப்பனே, கவலையில் வேண்டாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பல வினைகளும் கூட, யாங்கள் அகற்றுகின்றோம். சித்தர்களுக்கு, பின் அனைத்தும் தெரியும். கவலைகள் வேண்டாம்.

ஆசிகள் !! 

ஆசிகள் !!


சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் உண்டு. உங்களுக்கும் சில கவலைகள் நீங்கவும், சில வெற்றிகள் கிடைக்கவும் அவசியம் உள்ளது. அதற்காக அவர் சில வழிமுறைகளை போதித்துள்ளார். நீங்கள் அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், தினமும் உங்களுக்கு தேவையான நன்மைகளும், நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றிகளும் சிறப்பாகக் கிடைக்கும்.)

================================
#இரவு நேரத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரை அருந்தினால்…..
================================

குருநாதர் :-  அவை மட்டும், அவை மட்டும் இல்லாமல், நல்விதமாகவே, அனுதினமும், நிச்சயம் தன்னில் கூட, பின் நெல்லிக்கனி அறிந்து, எவை என்று புரிய, பின் அதாவது அறிந்து, இவைத்தன், அதாவது, பின் எலுமிச்சை கனியும், நிச்சயம் இன்னும் எதை என்று அறிய, பின் மிளகு, சீரகம், இவையெல்லாம், நிச்சயம் இரவு தனில் பின் ஊற வைத்து, அழகாக, அதாவது, நீரில், பின் இட்டு, பின் அதிகாலையிலே, பின் இவை தன்னிலே, நிச்சயம் தன்னில் கூட, பின் நீராக, பின் அதாவது, இவையே எடுத்துக்கொண்டாலே, நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- (தினமும் இரவு நேரத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரை அருந்தினால், உடலில் தேங்கியுள்ள சில குறைகள் நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். இது போல் தினமும் செய்ய மிக நன்று) 

==============================
# திருத்தலங்களில் உள்ள  விபூதி, பிரசாதத்தின் மூலம் தரித்திரங்கள் நீங்கும் ரகசியங்கள் 
==============================

குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட, மனமாற்றங்கள், சில நோய்கள், சில தொந்தரவுகள் இருக்குமாயின், பின் நிச்சயம் தன்னில் கூட, சில திருத்தலங்களுக்கு சென்று, அங்கு இருக்கும், பின் விபூதி, பின் பிரசாதத்தை, நல்விதமாக, பின் நீரில் இட்டு, அதைத்தன், நிச்சயம், பின் அதிகாலையிலே, சிறிதளவு, நிச்சயம், பின் உட்கொள்ளவும், பின் நிச்சயம், தன்னில் கூட, அதையே, பின் நீரில் இட்டு, பின் அதாவது, உடம்பு முழுவதும், பின் நீராட, சில, பின் தரித்திரங்கள் நீங்கும். இதையும் செய்க. 

==============================================
அன்பு அகத்திய மாமுனிவரின் வாக்கின்  சுருக்கம் : -  ( “மனமாற்றங்கள் , சில நோய்கள் அல்லது தொந்தரவுகள் இருந்தாலும், திருத்தலங்களுக்கு சென்று அங்கு கிடைக்கும் விபூதி மற்றும் பிரசாதத்தை மரியாதையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நீரில் கலந்து, அதிகாலையில் சிறிதளவு உட்கொள்ளலாம். அதே நீரை உடலெங்கும் தெளித்து அல்லது ஸ்நானம் செய்யவும். இவ்வாறு செய்தால், சில துன்பங்களும் தரித்திரங்களும் நீங்கும். இதையும் முறையாகப் பின்பற்றுங்கள்.)
==============================================

=================================
# கந்த சஷ்டியும் ஓதி வர, சிறப்பு தரும். நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
=================================

குருநாதர் :- நல்விதமாக மாற்றங்கள் உண்டாக, இன்னும், பின் ஏராளமான , அது மட்டுமில்லாமல், மாற்றங்கள் உண்டாக, கந்த சஷ்டியும் கூட, ஓதி வர, சிறப்பு தரும். இன்னும் வாக்குகள் செப்புகின்றேன், அழகாக, கவலைகள் வேண்டாம், கவலைகளை வேண்டாம், ஆசிகள், ஆசிகள், மற்றொரு, மற்றொரு, நிச்சயம் தன்னில் கூட, வாக்கிலும் பல விஷயங்கள் யான் தெரிவிப்பேன். இப்பொழுது, பின் யான் சொல்லியதை சரியாக ஏற்று வர, நிச்சயம் குறை இல்லை. குறை இல்லை. ஆசிகள். ஆசிகள். வள்ளி தெய்வானையோடே, முருகன் ஆசீர்வதித்தான் நிச்சயம் தன்னில் கூட. கவலைகள் வேண்டாம். 

ஆசிகள் !! 

ஆசிகள் !!


(அன்புடன் அகத்திய மாமுனிவர்  அருளால், 19.12.2025 அன்று  நடந்த  இலங்கை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்குகள்  நிறைவு பெற்றது. )

(மீண்டும் 21/12/2025, ஞாயிற்றுக்கிழமை அன்று  ஸ்ரீ வரதராஜ விநாயக ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாச்சேனை, கொழும்பு - அங்கு நடந்த கூட்டு பிரார்த்தனை வாக்குகளில் சந்திப்போம். இந்த கூட்டு பிரார்த்தனை வாக்குகளை, சிவபுராணம் படித்து,  அனைவருக்கும் வகுப்பு எடுத்து புரியவைத்து, உலகெங்கும் பரப்புங்கள். மகத்தான உயர் புண்ணியங்கள் உங்களுக்கு உண்டாகும். )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment