உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை
====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
====================================
ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே.
(மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9 - நிறைவு பகுதி)
தேரையர் சித்தர் :- அப்பா, அறிந்தும் இதைத்தன் உணர வைத்து, அறிந்தும் பின் மீனாட்சி தாயை அறிந்தும், இவைத்தன் உணர்ந்தும் அழகாக பாடலை பாடுக.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஒரு அம்பாள் பாடல். போற்றி, மீனாட்சி அம்மா, போற்றி, பாடுங்கன்றாரு. ஒரு அம்பாள் பாடல்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அன்னை மீனாட்சி தேவியின் பாடலை பாட ஆரம்பித்தார்கள். )
( அன்னை மீனாட்சி தேவியின் பாடலை பாடி முடித்த பின்னர்…. )
தேரையர் சித்தர் :- இதைத்தன் உருவாக்க, அனைத்தும் மீனாட்சி தேவியின் அருள்கள் பலமாக, சில குறைகள் நீங்கின.
யாம் சொல்லியதை ஏற்று நட.
அறிந்தும் இவைத்தன் அனைத்து சித்தர்களோடு ஆசிகளோடே.
ஆசிகளோடே இன்னும் வலம் வருவார்கள் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க, இவைத்தன் பயன்படுத்த, நிம்மதி வாழ்க்கை, பின் வாழலாம் என்பேன்.
அறிந்தும் இவைத்தன் உணர்ந்த, அறிந்தும் இவைத்தன் உணராத, அறிந்தும் மீனாட்சி தாயே, அறிந்தும் அனைவருக்குமே நலன் தருக.
என்ன எதை என்று அறிய தீங்குகள் நீக்குக.
நன்மைகள் பெருக்க ஓடி அறிந்தும் இவைத்தன் எவ்வாறு பின் எளியோனுக்கு அறிந்தும் இவைத்தன் ஓடோடி பின் இறங்கி இதைத்தன் மீனாட்சியே !!
அறிந்தும் எங்கும் பின் நிறைந்த காமாட்சியே !!
அறிந்தும் இவைத்தன் உலகமெல்லாம் ஆளும் விசாலாட்சியே !!
=================================
# ஓடோடி வந்த கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்கு..
=================================
அனைத்தும் ஒன்றாக இணைந்து பின் இப்பாவப்பட்ட மக்களை அறிந்தும் சில பாவ வினைகள் நீக்குக.
நீக்கிட்டு அறிந்தும், இதைத்தன் உணர்ந்தும், புரியாத வகையில் பின் இருந்தாலும், தவறுகள் செய்தாலும், அறிந்தும் மன்னிப்புகளை இட்டு, அறிந்தும் அருள்வாயே.
அருள்வாயே தேவியே !!
இவை என்று புரிந்து நிலைக்கான, பல நிலைகள் ஏங்கி, ஏங்கி வந்துள்ளார்களே.
அவை பின் அவ்வினைக்கு தகுந்தவாறு பின் கொடுக்க, அறிந்தும் இவ்வினை பின் மாற்ற, பின் பாவத்தை நீக்க, அறிந்தும் இப் புண்ணியத்தை இந்நாளில் பின் அனைவருக்கும் அளித்திடுவாயே.
தேவியே !!
காமாட்சியே !!
அறிந்தும் பின் விசாலாட்சியே !!
அறிந்தும் இவை பின் மீனாட்சியே !!
ஒன்றும் பின் அங்கங்கும் அமைந்திருக்கும் ஈர்த்து, அறிந்தும் இவைத்தன் சக்திகளை ஒன்றாக இணைத்து, இவைத்தன் பின் அறிந்தும் ஈசனாலே உருவாக்க, அறிந்தும் இவைத்தன் புரிந்தும், நிலை நீடி நின்று அறிந்தும் இவைத்தன் நீடோடி வாழ்க.
தன் குடும்பத்திற்கும், தன் குடும்பமாக என்று உன்னை ஓடோடி பின் குறைகளை பின் நீக்குவாய் என்று வந்துள்ளார்களே.
அறிந்தும் இவைத்தன் அதை நீ புரிந்து கொண்டு இடுவாயே !!
எங்களுக்கே கற்பித்தாயே !!
(சித்தர்கள் எங்களிடம்) அறிந்தும் பின் விளையாடினாயே !!
அறிந்தும் எங்களை ஓடோடி அறிந்தும் சித்தர்களுக்கு எதை என்று உன்னிடத்தில் தஞ்சம் கொடுத்து அனைத்தும் பின் உணர வைத்தாயே தேவியே !!
=================================
# பாண்டிய மன்னன் ரகசியங்கள்
=================================
அதேபோல் இருந்தும் இம்மனிதரை பின் மாநகரிலே அறிந்தும் பாண்டியனுக்கும் சாப பாவ விமோச்சனம் கொடுத்து, அனைத்தும் கற்பித்து, அறிந்தும் இன்னும் ஓரிடத்தில் நிலைநின்று, பின் இவ் தேசத்தை ஆளிக் கொண்டிருக்கின்றானே பாண்டியன் !!
=================================
# கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்காக புண்ணியங்கள் தந்து அருள வேண்டுதல்.
=================================
அது போல், நிச்சயம் இவர்கள் பின் உன்னை நம்பி ஓடோடி வர, அப்புண்ணியத்தை பின் சில வகைகளிலும் கூட கொடுத்தருள்வாய்.
கொடுத்தருள்வாய் இன்னும் பின் புண்ணியங்கள் பெருக, இவர்களுக்கு சில தீங்குகள் பின் அழிக்க, பின் புறப்பட்டு அறிந்தும் இன்னும் எதை எதையோ செய்த காலங்கள் பதில் சொல்லும்.
=================================
# புண்ணியங்கள் புகுத்துகின்றோம் யாங்களே சித்தர்கள்
=================================
எவையென்று புண்ணியங்கள் புகுத்துகின்றோம் யாங்களே சித்தர்கள்.
அறிந்தும் கவலைப்பட தேவையில்லை மக்களே.
அறிந்தும் இதை என்று, இன்றும் கூட ஞானங்கள் பெற்ற இன்னும் சித்தர்கள் வழி வழியாக வருவார்கள்.
வந்து உங்களுக்கு, ஆனாலும் அறிந்தும் யான் விட வில்லையே.
அறிந்தும் பின் இன்னும் சித்தர்களை வேண்டி, வேண்டி, யாங்கள் வாக்குகள் தன் மக்களுக்கு ஒரு வாய்ப்பை பின் கொடுத்த பின் மீனாட்சி தேவிக்கே, அறிந்தும் என் குருநாதனுக்கே, எதை என்று கூற நிறுத்தி, யானே சொல்கின்றேன், மக்களுக்காக திருந்துவார்கள் என்று தானே வந்தேனே.
அறிந்தாரும் எவை என்று கூற சில விதிகளை போக்குகின்றேன்.
இன்னும் சிலர், சித்தர் பெருமக்கள் அறிந்தும் பின் ஆசிகளோடு, பின் செப்ப தயாராக.
பாவங்கள் நீக்குக.
புண்ணியங்கள் பெருக்குக.
அறிந்தும் மீனாட்சி தேவி உங்களுக்கு அருள் புரிவாய்.
====================================
# தந்தை சொக்கநாதரிடம் வேண்டுதல்
====================================
அப்பா!!! அறிந்தும் கூட பின் அதாவது சொக்கனே !! சொக்கனே !! அறிந்தும் இவை என்று அறிய பின் எதை என்று கூற பாவ அறிந்தும் எதை என்று கூற அதாவது சட்டையை கிழித்து, பின் எவை என்று உள் புகுந்து அறிந்தும் புண்ணியத்தை பெருக்குக.
அருளிடுக !!
=====================================
# அடுத்த கூட்டுப்பிரார்தனை உத்தரவு
=====================================
ஆசிகள் !!
எம்முடைய ஆசிகள் !!
மற்றொரு அறிந்தும் எதை என்று சித்தர், அறிந்தும் எவை என்று அறிய யானே சொல்கின்றேன். அண்ணாமலையிலே, மீண்டும் 20 அல்லது 25 நாட்களிலே மீண்டும் நடத்துக.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( மகிழ்ச்சி அடைந்து , அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வை உத்தரவு இட்டதால் , பலத்த கை தட்டல்கள் )
தேரையர் சித்தர் :- எண்ணற்ற சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
============================================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் அதே இடத்திலே, சிவன் அடியார்கள் எல்லாம் அழைத்து அன்னம் இடுக
============================================
சிவன் அடியார்கள் எல்லாம் வரவழைத்து அன்னத்தை ஈக.
============================================
# அண்ணாமலையில் சித்தர்கள் மனித ரூபம் எடுத்து கூட்டுப்பிரார்தனைக்கு வாருவர்கள். ஆசிகள் தருவார்கள்.
============================================
அறிந்தும் யாங்கள் வருவோம் !!
யாங்கள் வருவோம் !!
மனித ரூபம் எடுத்து ஆசிகள் தருவோம் !!
ஆசிகள் !!
ஆசிகள் !!
அடியவர் :- தேரையர் பெருமான் திருவடிகள்..
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- போற்றி போற்றி.
அடியவர் :- தேரையர் பெருமான் திருவடிகள்..
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- போற்றி போற்றி.
அடியவர் :- தேரையர் பெருமான் திருவடிகள்..
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- போற்றி போற்றி.
அடியவர் கேள்வி :- அண்ணாமலையில் தீபம் ஏற்றியது போல , திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற ஆசி பெற்ற பொழுது.
தேரையர் சித்தர் :- அப்பா, அங்கு இங்கு அறிந்தும், இவை என்று அறிய மீனாட்சி அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்க, அமைதி காத்திரு. அண்ணாமலையில் உரைப்பேன் இதைப்பற்றி. யாங்கள் பார்த்துக் கொள்வோம் கவலை விடு.
(தேரையர் சித்தர் உரைத்த 07.12.2025 மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது.)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteAgnilingam ayya ku kodana kodi nandrigal...om Arulmigu Agasthiyar ayyan Annai Loba muthra thaai Thiruvadigal potri 🙏
ReplyDelete