3/12/2025 கார்த்திகை தீப திருநாள் அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை - கார்த்திகை மகாதீபம் ஏற்றிய பிறகு உரைத்த வாக்கு.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
அப்பனே, ஈசன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தரிசனம், அதாவது கொடுக்கக்கூடாது என்று நினைத்தானப்பா.
(மலையின் மீது தீபம் ஏற்றும் போது மழை மேகங்களை வைத்து தீபத்தை சரியாக தரிசனம் செய்ய முடியாத நிலை...இதை ஈசனே தன் தரிசனம் கொடுக்க கூடாது என்று)
ஆனாலும், அப்பனே, நல்லோர்கள் சில சில அப்பனே, பின், ஆனாலும், அப்பனே பின் மனம் இறங்கி கொடுத்தானப்பா.
(சில நல்ல ஆத்மாக்களும் அண்ணாமலை தீப தரிசனம் செய்ய வந்ததால் அவர்களுக்கு தரிசனம் காட்ட ஈசன் மனமிரங்கினார்)
இதேபோல், அப்பனே, நிச்சயம் மனிதர்கள் மனம் அப்பனே திருந்தவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே தீபத்தை அப்பனே பின் மறைத்து விடுவான் என்பேன் அப்பனே.
எப்பொழுது தீபம் அப்பனே பின் மறைந்து விடுகின்றதோ, அப்பொழுது இருந்து, அப்பனே, இன்னும் அப்பனே தர்மம் அப்பனே தலைக்கீழாக போய்க்கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.
(எப்பொழுதெல்லாம் தீபம் சரியாக தெரியவில்லை என்றால்.... தர்மங்கள் தலைகீழாக போய்க்கொண்டு உள்ளது என்று அர்த்தம்)
=====================================
# ஈசனின் நெற்றிக்கண்
ரகசியம் !
அதுதான் முதலிலே ஏற்றப்படுகின்ற தீபம்
=====================================
அதனால்தான், அப்பனே, முதலிலே அப்பனே ஏற்றினார்கள் அப்பனே.
ஆனாலும், அப்பனே, அதற்கு என்ன பொருள் என்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்லோருக்காகவே வந்தானப்பா.
அப்பனே, முதலிலே அப்பனே பின் ஏற்றப்படுகின்ற தீபம், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பார்க்க, அதுதான் ஈசனின் நெற்றிக்கண் என்பேன் அப்பனே.
மற்றவையெல்லாம் அப்பனே பின் காலங்கள் கடந்து கடந்து போகுமப்பா.
அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே தர்மத்தை அப்பனே பின் யார் ஒருவன்? நிலை நாட்டுகின்றானோ, அவர்களுக்கு அனைத்தும் யாங்களே கொடுப்போம் என்போம் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே வருங்காலத்தில் இன்னும் இன்னும் அப்பனே நோய்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே மனிதன் அப்பனே பின் அதாவது திருத்தலத்திற்கு அப்பனே பின் செல்ல வேண்டும்.
=====================================
# மருத்துவம் தான் திருத்தலம் ஆகிவிடும் வருங்காலத்தில்
=====================================
அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே, இதனால் மருத்துவம் தான் திருத்தலம் அப்பனே பின் ஆகிவிடும் என்பேன் அப்பனே, வருங்காலத்தில்.
ஏனென்றால் அப்பனே பாவங்கள் அதிக அளவில் மனிதனிடத்தில் சேர்ந்து கொண்டே இருக்கின்றது.
அப்பனே, இதை ஒழிக்கவே பல வகைகளில் கூட அப்பனே பல சித்தர்கள் யாங்கள் செப்பிக்கொண்டே வருகின்றோம் நிச்சயம் தன்னில் கூட.
அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பரிசுத்தமான அப்பனே பின் நீங்கள் எதை என்று புரிய அப்பனே பின் ஆத்மார்தத்தோடு அப்பனே செய்து கொண்டு வந்தாலே போதுமானதப்பா.
மற்றவைகள் எல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே.
=====================================
# ஞானியர்கள் அவர்களுக்காக நெற்றிக் கண்ணை காண்பித்தார்
=====================================
நிச்சயம் அப்பனே பல கோடி அப்பனே ஞானியர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நெற்றிக்கண்ணை அப்பனே பார்க்கத்தான் ஓடோடி வருவார்களப்பா.
பின் நெற்றிக்கண்ணை பார்த்துட்டு அனைத்தும் சென்று வருவார்களப்பா.
ஆனாலும் அப்பனே பின் அதாவது பின் அவர்களுக்காவது எதை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஈசன் பின் நிச்சயம் நெற்றிக் கண்ணை காண்பித்தானப்பா.
முதலில் (நெற்றிக்கண்ணை) காண்பித்து மறைந்துவிட்டானப்பா.
திருவண்ணாமலையில் தீபம் முதலில் ஒரிரு வினாடி துளிகள் தரிசனம் காட்டிவிட்டு மேகம் கொண்டு மறைத்து விட்டார்)
அதுதான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஒரு அப்பனே நிச்சயம் எது என்று கண்ணிமைக்கும் நேரத்தில் வருகின்றதே, அதுதான் நெற்றிக்கண் என்பேன் அப்பனே.
அதை பார்த்துவிட்டால் பல தோஷங்கள் கழியுமப்பா.
அப்பனே நிச்சயம் யாருக்கும் பின் இவ் ரகசியங்கள் தெரியாதப்பா.
இதை பார்க்கவே பின் பல கோடி ஞானிகள் திரு அண்ணாமலைக்கு ஓடோடி வருகின்றார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் ஒவ்வொன்றாக புரிந்து கொள்ள, புரிந்து கொள்ள நன்று.
அப்பனே, இறைவனை வணங்குகின்றார்கள் அனைவருமே.
ஏனப்பா,????? அனைவருமே கஷ்டப்படுகின்றார்கள் அப்பனே?
பின் ஆனாலும் அப்பனே மூலாதாரம் எங்கிருந்து வருவது என்பது தெரிவதே இல்லையப்பா.
மூலாதாரத்தை தெரிந்துவிட்டால், அப்பனே வாழ்க்கையில் அப்பனே பின் ஒளி வீசும் அனைத்தும் வெற்றி கொள்ளலாம் என்பேன் அப்பனே.
அப்பனே, நல் விதமாக அப்பனே முன்னேற்றங்கள் எதை என்று புரிய, அப்பனே பின் நல் விதமாகவே ஆசிகள்,
அப்பனே பல, அப்பனே ஞானியர்கள், அப்பனே (அண்ணாமலையில்) தங்கி எது என்று அறிய, அப்பன் நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தியானம் செய்வார்களப்பா, அண்ணாமலையிலே -
அப்பனே நெற்றிக்கண் திறக்கின்ற பொழுது.
அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே (திருவண்ணாமலையில்) அங்கும் , இங்கும் செல்கின்ற பொழுது, சில அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே கர்மாக்கள் அழியுமப்பா.
ஆனாலும் அப்பனே ஒரு சிலருக்கே அது சாத்தியமாகும் என்பேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனதில், அப்பனே நிச்சயம் பின் “நமச்சிவாயா” என்று நினைத்துக்கொண்டு, அப்பனே சென்று கொண்டிருந்தாலே, அப்பனே அவ் ஞானியருக்கு கேட்குமப்பா.
இதனால் அப்பனே கண் திறந்தது இருந்து பார்ப்பானப்பா.
இதனால்தான் அப்பனே பின் நிச்சயம் பின்( கிரி) வலம் வருகின்ற பொழுதெல்லாம், அப்பனே நமச்சிவாயா!!!!! , நமச்சிவாயா!!!!!! என்று அழைத்துக் கொண்டே வரவேண்டும் என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே இவ்வாறு அழைத்துக் கொண்டு வந்தாலே, அப்பனே நிச்சயம் அவந்தன், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஞானங்கள், அதாவது அப்பனே தியானம் செய்கின்ற பொழுது, அப்பனே பின் யார் இவன்? நமச்சிவாயனை அழைக்கின்றான் என்று, அப்பனே பார்த்து விடுவான் என்பேன் அப்பனே.
அவ்( அப்படி) பார்த்து விட்டாலே போதுமானதப்பா.
பல கர்மங்கள் தொலையுமப்பா.
இதனால்தான் அப்பனே அண்ணாமலையின் சிறப்பு.
(ஈசனின் நெற்றிக்கண் தரிசனம் காண பல கோடி ஞானிகள் வந்து தரிசனம் செய்து திருவண்ணாமலையில் தவம் இருப்பார்கள் சூட்சுமரூபமாக.
அண்ணாமலைக்கு வந்து நல் மனத்தோடு நமச்சிவாய நமச்சிவாயா என மகேசனின் நாமத்தை மட்டும் உச்சரித்துக் கொண்டு கிரிவலம் வருவது அண்ணாமலை சுற்றி அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தவத்தில் இருப்பார்கள் உண்மையான பக்தியோடு நமச்சிவாயா நமச்சிவாயா என நாம் செய்யும் உண்மையான பக்தியை உணர்ந்து ஞானியர்கள் தவத்தில் இருந்து கண்விழித்து நம்மை பார்த்து ஆசிர்வதிப்பார்கள்.. அப்பொழுது நம்மிடம் உள்ள பல கர்மாக்கள் தொலையும்)
அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் பல வகைகளில் கூட உரைக்கின்றேன் என்பேன் அப்பனே.
=====================================
அன்னை பார்வதி தேவி தவம் - கார்த்திகை தீபம் எரியும் வரையில்
=====================================
அவை மட்டுமில்லாமல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே நேர் அண்ணாமலையில் கூட,
(கிரிவலம் வரும் பொழுது அண்ணாமலையார் மலைக்கு சரி பாதியாக பின்புறம் நேர் அண்ணாமலை ஆலயம் உள்ளது இந்த இடத்தில் தான் பார்வதி தேவியார் தவம் புரிவார்)
அப்பன் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவ் எதை என்று அறிய அப்பனே, பின் அதாவது பின் ஈசனை நோக்கி, அப்பனே பார்வதி தேவி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே தவம் எதை என்று கூட இருப்பாளப்பா.
அப்பனே அதாவது பின் இவ் தீபம் எப்பொழுது எரிகின்ற, எவை என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது வரை எரிகின்றதோ, அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட, அப்பொழுது வரை, அப்பனே பின் தவங்கள்.
(தீபங்கள் முன்பெல்லாம் அதிக நாட்கள் நிறைந்தது ஆனால் தற்பொழுது 11 நாட்கள் வரை தீபம் எரிய வைக்கப்படுகின்றது)
ஏன்?, எதற்கு? என்றெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் எது என்று அறிய.
அப்பனே, இவ்வாறாக பின் உலகம், பின் அதாவது கலியுகத்தில், அப்பனே பின் நிச்சயம் இவை தன், பின் நிச்சயம் ஏற்றிக் கொண்டே, ஏற்றிக் கொண்டே!!.
இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் மறைந்துவிட்டான்.
அப்பனே, நிச்சயம் மறைந்து விட்டான் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே பின் நிச்சயம், அப்பனே பின், அதாவது இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு கார்த்திகை திங்களில் எதை என்று புரிய அப்பனே, பின் அதாவது ஏற்றினார்கள்.
(முன்பொரு காலத்தில்)
ஆனாலும், அப்பனே அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மேகங்கள், அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே.
இதனால், அவனே, அப்பனே பின் மறைத்துவிட்டான் என்பேன் அப்பனே.
(எப்பொழுதெல்லாம் தன்னை காண்பிக்காமல் மேகம் கொண்டு தன்னை ஈசன் மறைத்துக் கொள்கின்றாரோ அப்பொழுதெல்லாம் இந்த உலகத்திற்கு அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது)
இதனால், அழிவுகள் பல்மடங்கு, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே உயர்ந்திற்று என்பேன் அப்பனே.
மழைகளும், அப்பனே பூகம்பங்களும் , அப்பனே இன்னும் பின் சுனாமி எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, பின் கடல் சீற்றங்கள் இன்னும் எது என்று புரிய, புதுமையான வடிவங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும். (அந்த காலகட்டத்தில் பல வடிவங்களில் அழிவுகள் வந்தது)
அப்பனே, பின் கடல், அப்பனே, கொந்தளிப்பு, அப்பனே, பின் மேகங்கள் வெடிப்பு, இன்னும், அப்பனே, எரிமலைகள், அப்பனே, வெடிப்பு என்று இதுவெல்லாம் நடந்து நடந்து கொண்டே இருந்தது.
இதனால், அப்பனே, மனிதன் நிலைமை, அப்பனே, எவ்வாறாக என்றெல்லாம்.
(மனிதர்கள் சரியாக இருந்தால் தான் அனைத்தும் சரியாகும்)
அப்பனே, ஆனாலும், அனைத்து தேவர்களும் இந்திரர்களும் கூட, அப்பனே, இவ் மலையை நாடி வந்தார்கள் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
நிச்சயம் ஈசனே !!!!!, ஈசனே !!!!! என்றெல்லாம்,
ஆனாலும், ஈசன் மனம் இரங்கவில்லையப்பா.
இதனால், நிச்சயம் பார்வதி தேவியும், நிச்சயம் தன்னில் கூட, தவம் மேற்கொண்டாள் நிச்சயம் எதை என்று புரிய.
இதனால், பின் அதாவது கடைசி நாள், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எது என்று அறிய. பின் அதாவது மனம், அதாவது நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இரங்கினானப்பா.
=====================================
# அன்னை பார்வதி தேவியின் சபதம்
=====================================
இவ்வாறாக, பின் எது என்று கூட, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று அறிய, நிச்சயம் இவ்வாறாகவே, பின் அதாவது காட்டவில்லை என்றால், யான் நிச்சயம் தவங்கள், பின் எவை என்று கூட, பின் முடித்திட்டு,!!!!!!!!.....
நிச்சயம் """""""என்னையும் யான் முடித்துக் கொள்வேன் என்றெல்லாம்,............ நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பார்வதி தேவி.
(ஈசனின் தரிசனம் அனைவருக்கும் தந்து அழிவிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் என்னையே நான் அழித்துக் கொள்வேன் என்று பார்வதி தேவியார்.... மனித குலத்திற்காக கருணையோடு ஈசனிடம் போராடி ஈசனை மனம் இரங்கச் செய்தார்)
இதனால்தான், அப்பனே, பின் ஆனாலும், காட்சி கொடுத்துவிட்டான் அப்பனே.
=====================================
# கார்த்திகை தீபம் மறைத்து, மறைத்து - அழிவுக்கு காரணம்
=====================================
ஆனாலும், வரப்போகின்ற நேரத்தில், அப்பனே, பின், பின் அதாவது பின் முன் ஒரு ஆண்டும், அப்பனே, (2025) இவ் ஆண்டும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மறைத்து, மறைத்து, அப்பனே, இவையெல்லாம் அழிவுக்கு காரணம் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மீண்டும், அப்பனே,
பின் அடுத்த முறை,!?!?!?!?!
(அடுத்த ஆண்டும்!?!?!)
அப்பனே, பின், பின் வராமல்??!?!?!?!?!
, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இப்பொழுதே, அப்பனே, இவை தன், அப்பனே, மறைந்து, மறைந்து, மறைந்து, மறைந்துத்தான், அப்பனே, பின் காணப்பட்டான் அப்பனே, நிச்சயம்,
(கார்த்திகை தீபம் மழை மேகங்களுக்கு இடையே சிறிதளவு தான் மறைத்து மறைத்து அனைவருக்கும் தீபஜோதி தரிசனம் கிடைத்தது இதற்கு காரணம் ஈசனின் முடிவு)
அதனால், அப்பனே, சில அழிவுகள்,
ஆனாலும், அதற்கு தகுந்தார் போல், மனிதனின், அப்பனே, பின் அழிவுகள், அழிவுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.
ஆனாலும், அதை தடுக்க, யாங்கள் எடுத்துரைப்போம், மனிதனிடத்தில், அப்பனே.
அதை செய்தாலே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,
(அழிவுகள் வராமல் இருப்பதற்கும் ஈசனின் கோபம் தணிவதற்கும் குருநாதர் அகத்தியர் பெருமானும் சித்தர்களும் வாக்குகளில் கூறுவதை மனிதர்கள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் நம்மை காப்பாற்றுவதற்கு வழிகள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்)
பின் எவை என்று புரிய அப்பனே, அனைத்திற்கும், அப்பனே, காரணங்கள் உண்டு.
அப்பனே, நிச்சயம், ஒரு வினை, அப்பனே, பின் அதற்கு, அப்பனே, பின் எது என்று புரிய அப்பனே, அதை அழிக்கவும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உண்டு என்பேன் அப்பனே.
(அழிவினை அழிப்பதற்கும் ஒரு தீர்வு உண்டு)
நிச்சயம், அப்பனே, பின் பரிசுத்தமான ஆற்றல்கள்.
இதனால்தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் விதியின் சக்தியும் கூட, அனைவருக்கும் போகப்போக, யான் கொடுப்பேன் அப்பனே. கவலை இல்லை.
ஒவ்வொரு ஆலயத்திலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில சிறப்புகள் இன்னும், அப்பனே, பின், பின் ஆற்றங்கரை ஓரத்திலும், அப்பனே, பின் கடல் ஓரத்திலும், வாக்குகள் செப்புகின்ற பொழுது, அப்பனே, இன்னும், அப்பனே, பின் எவ்வாறாக, பின் அதாவது எவ்வாறு மந்திரத்தை உச்சரித்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஓடோடி, அப்பனே, பின் அலைகளும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உங்களைச் சாரும்.
அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், பின் நெருப்பு எதை என்று, எரிகின்ற பொழுது, பின் அதனைத் தன், அப்பனே, பின் மந்திரமாக எப்படி, பின் ஜெபித்தால், நிச்சயம், தன்னில் கூட, அதனுடைய சக்தி, பின் உயிருக்குள் அப்பனே, பின் ஓடும்.
அப்பனே, (உடலுகுள்ளே) நிற்கும் என்பவை எல்லாம், அப்பனே, யான் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.
(சித்தர் பெருமக்கள் ஆற்றங்கரையிலும் கடல் கரையிலும் யாகம் வளர்த்து நெருப்பிற்கு அருகிலும் சித்தர்கள் வழிகாட்டி அங்கு எந்தெந்த மந்திரங்கள் உச்சரித்தால் அலைகளின் காற்றின் சக்தி நீர் சக்திகள் மற்றும் நெருப்பில் சக்தி நமக்கு கிடைக்கும் நமக்கு ஆற்றல்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாக்குகளில் உரைக்க போகின்றார்கள்)
இதனால், அப்பனே, படிப்படியாக வரவேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே.
படிப்படியாக அறிவுகள் , பின் வளர வேண்டும். அப்பொழுதுதான் அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே.
அப்படி இல்லை என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்று கூற , பின் ஒன்றை கொடுத்து விட்டால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உங்களால், அப்பனே, அதை பெற்று, அப்பனே, அதை தன், அப்பனே, வாழ வைக்க முடியாதப்பா.
அதனால்தான், அப்பனே, சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
அதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பக்குவங்கள் கொடுத்து, கொடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் விட்டு, விட்டு, சில கஷ்டங்களையும் கொட்டி, கொட்டி, அப்பனே, நிச்சயம், சில துன்ப வகைகளையும் கூட இட்டு, இட்டு , அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, , சந்தேக எண்ணங்களையும் இட்டு, இட்டு, அப்பனே, நிச்சயம், எப்படி, ஏது என்றெல்லாம், அப்பனே, குழப்பங்கள் ஆக்கித்தான் யான் தருவேன் சொல்லிவிட்டேன். அப்பனே,
இவ் அண்ணாமலையிலிருந்தே அப்பனே.
எதை என்று அறிய, அப்பனே, இடைக்காடனும் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, கிரக நிலை மாற்றவே, அப்பனே, எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
நிச்சயம், அனைத்தும் மாற்றித் தருவோம்,
எங்கள் வழியில், பின் வருவதற்கே, அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, எவை என்று கூட, பின் காலங்கள், காலங்களாக, அண்ணாமலையில், அப்பனே, தவம் செய்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அதனால்தான், அப்பனே, நிச்சயம், ஓடி ஓடி, எவை என்று கூட, வருகின்றீர்கள்,
எங்கள் வாக்கையும் கேட்கின்றீர்கள் என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
பின் அண்ணாமலையும் , மிக உயர்ந்தவன் , அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
எதை, எவை என்று பொறுத்து, அப்பனே, பின் அமைவதெல்லாம், நிச்சயம், எதற்காக, பின் அமைந்து, பின் எழுந்து நிற்கின்றது என்பவை எல்லாம், அப்பனே, தெரிவிப்பேன் என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
========================================
# அண்ணாமலையை சுற்றிக் கொண்டே இருக்கும் ஞானி ரகசியம்
========================================
இவ்வாறாக, அப்பனே, ஒரு கிழவன் சுற்றிக் கொண்டே இருக்கின்றானப்பா, நிச்சயம், தன்னில் கூட.
அப்பனே, எதை என்று, அப்பனே, எதை என்று, கைலாய மலையிலிருந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, வந்து, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, அவந்தனக்கு எவை என்று கூட, பின் வருவான் அப்பனே நிச்சயம், தன்னில் கூட.
அப்பனே, மறைந்து விடுவான்.
அதாவது மாயமாகி விடுவான் என்பேன் அப்பனே.
நிச்சயம், அவன் எப்பொழுது வருவான்? என்பதை எல்லாம் உங்களுக்கு பின் தெரிவிக்கின்றேன் என்பேன் அப்பனே.
அதை நீங்கள் தெரிந்து கொண்டு பார்த்து விட்டால், அப்பனே, சுலபமாக வாழ்க்கையில் வெற்றியும் கொள்ளலாம் அப்பனே, மோட்சத்தை அடைந்து விடலாம்.
========================================
# எமலிங்கம் - ஞானி ரகசியம்
========================================
நிச்சயம், தன்னில் கூட, இவன் சரியாகவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் செவ்வாய்க்குரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் எதை என்று புரிய.
(எமலிங்கம் - தெற்கு திசை )
அப்பனே, நிச்சயம், பின் லிங்கத்தில், அப்பனே, பின் வீற்றிருப்பானப்பா, இவன் என்பேன் அப்பனே.
நிச்சயம், அப்பனே, பின் இரவு தன்னில் கூட, அப்பனே, அங்கு உறங்கிக் கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே.
கண்ணுக்கு தெரிய மாட்டான் என்பேன் அப்பனே.
அக் கண்ணுக்கு தெரிவதும் எவை என்று புரிய அப்பனே, சில புண்ணியங்களும் கூட, சில விஷயங்களும் கூட, சில மந்திரங்கள் கூட, யான் வருங்காலத்தில் உபசரிப்பேன் அப்பனே.
செப்பிவிட்டேன் அப்பனே.
புதுமையாக முறையில் ஏற்றிக் கொண்டே செல்கின்றேன் அப்பனே.
கவலைகள் வேண்டாம் அப்பனே.
மனிதனாக பிறந்து விட்டாலே, பின் பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றான்.
சுமந்து கொண்டிருக்கின்றான் என்பதை எல்லாம், அப்பனே, எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.
அப்பாவத்தை எப்படி, பின் அழிக்க முடியும்? அப்பனே,
நெருப்பினாலும், நீரினாலும், அப்பனே, நிச்சயம், அழிக்க முடியும் என்பதை எல்லாம், அப்பனே, யாம் அறிவோம் அப்பனே.
பின் நெருப்பினாலும், அப்பனே, நிச்சயம், தன்னில், நீரினாலும், அப்பனே, நிச்சயம், அங்கு சென்று, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின் அமர்ந்து, நிச்சயம், தன்னில் கூட, எவ்வகை மந்திரங்கள் செப்பினால், அப்பனே, பின் பாவம் தானாக, அப்பனே, பின் எடுத்துச் செல்லும் தூரே, வீசிவிடும் அப்பனே.
புண்ணியங்கள் தானாக, அப்பனே, மனிதனுக்கு உள் புகுந்து , அப்பனே, தானாகவே, அப்பனே, மனிதனின் செயல்கள், அப்பனே, மனிதனின் ஆற்றல்கள் பெருகி, பெருகி, வெற்றி நடை போடுமப்பா.
அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே, அண்ணாமலையில், அப்பனே.
அனைவருக்குமே ஆசிகள் வாங்கி தந்துவிட்டேன் அப்பனே.
எம்முடைய ஆசிகள், கவலைகள் இல்லை.
அப்பனே, லோபா முத்திரையோடு, அப்பனே, இன்னும் பரிசுத்தமான வாக்கெல்லாம் இருக்கின்றதப்பா.
அப்பனே, இதனால் ஒவ்வொரு படியாக செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, அதாவது பின் எவை என்று கூட, தூக்கி எறிந்து விட்டால், அப்பனே, மேலே, அப்பனே, பின் மீண்டும், அப்பனே, கீழே வருவதற்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே.
அதனால்தான், படியிலே ஏறச் சொல்கின்றேன் அப்பனே.
ஏறு, ஏறு என்று, அப்பனே.
அப்படி ஏறி சென்றால் தான், அப்பனே, கஷ்டங்கள் புரியும் என்பேன் அப்பனே.
இல்லை என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் (மேலே)தூக்கி விட்டால், அப்பனே, மீண்டும் இறங்குவதற்கு தெரியாதப்பா.
அப்பனே, எப்படி ஏது என்றால், குழப்பமே உங்களை சாகடித்து விடும் என்பேன் அப்பனே.
எதை என்று புரிய. இதனால்தான், அப்பனே, பின் கவலைகள் கொள்ள வேண்டாம் என்பேன் அப்பனே.
நிச்சயம், அனைத்தும் யான் தருகின்றேன் அப்பனே.
ஒவ்வொன்றாக தருவேன் அப்பனே.
எவை என்று கூட, இன்னும், அப்பனே, பல வகையான மாற்றங்கள் உண்டு.
சொல்லிவிட்டேன் அப்பனே அனைவருக்குமே.
கவலைகள் இல்லை அப்பனே,
எண்ணற்ற கோடிகள், அப்பனே, பின் அண்ணாமலையிலே, அப்பனே, வாசிகள் இன்னும் இருக்கின்றதப்பா.
வாசி யோகத்தை பற்றி யான் அடுத்த வாக்கில் பரிசுத்தமாக தெரிவிப்பேன் அப்பனே.
ஆசிகள், ஆசிகள் !
இப்பொழுது போதுமப்பா !!
ஆசிகள்,!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!



.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
No comments:
Post a Comment