மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3
உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
====================================
ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே.
(மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3)
===================
# மந்திர ரகசியங்கள்
===================
(தேரையர் சித்தர் , இந்த பகுதியில் உரைத்த வாக்கில் மந்திரங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற விளக்க பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். அடியவர்கள் அவசியம் இந்த யூடுயுப் பதிவுகளை பார்த்து பயிற்சி செய்யவும்.)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=3h56m48s
தேரையர் சித்தர் :- கண் அறிந்தும் இவைத்தன் நீட்டிக்க, அறிந்தும் இமை, அறிந்தும் பின் இமைப்பது, அறிந்தும் இவைத்தன் தூரே சென்றால், அறிந்தும் இவைத்தன் பின் நோய்கள் வளராது. நோய்கள் வளராது மூச்சை இங்கு கற்பிக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( இது என்ன சொல்றாரு தெரியுங்களா. முதல்ல நீங்க நோய் வராமல் பார்த்துக்கோங்க அப்ப ஒவ்வொரு மந்திரம் நீங்க சொன்னீங்கன்னா மூச்சு வந்து அதிகமாகும். ஏன் புரியுதுங்களா? இந்த வாழ்நாளில் நம்முடைய மூச்சு தான். இந்த மூச்சு காத்து தான். முதல்ல உங்களை நோய் இல்லாமல் பார்த்துக்கணும். அதுக்கு என்ன சொல்றாருன்னா இந்த மந்திரங்கள் தான், முதல்ல மந்திரம் சொன்னா காசு வராது. பாவம் போகாது. என்ன வராது? நோய் வராது. இவர் கண்டுபிடிச்சது தேரையர் சொல்றாரு. அப்ப உங்களோட மூச்சு, ஐயா நமச்சிவாய ன்னு சொல்லுங்க….
— இப்போது சுவடி மைந்தன் அருகில் உள்ள அடியவரை ஓம் நமசிவாய என்று சொல்லச்சொல்லி , அதற்கு எவ்வளவு நேரம் ஆகின்றது என்று குறிக்க சொன்னார்கள்.----
இருக்கு மூலாதாரத்துல இருந்து அப்படியே சகஸ்ராரம் ஏறனும். எத்தனை செகண்ட் வந்தது? ஆறு செகண்ட். அது கண்ணிமைக்கும் நேரம், ஐயா புரியுதுங்களா? இவர் வித்தியாசமா சொல்றாரு )
தேரையர் சித்தர் :- இவைத்தன் உணர்ந்தாலே உயிர் வாழ முடியும்
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( மூச்சு கட்டுப்பாடு: மனிதன் ஒரு நாளில் சராசரியாக சுமார் 24,000 மூச்சுகள் என்று ஒரு கணக்கு. மூச்சை குறைத்தால்: அந்த எண்ணிக்கையை 10,000–15,000 வரை குறைத்தால், வாழ்நாள் அதிகரிக்கும் என்ற கருத்து. நேரம் கணக்கிடுதல்: ஒவ்வொரு மூச்சும் குறைந்தது 6 விநாடிகள் நீளமாக இருக்க வேண்டும்; அதனால் உயிர் பிழைப்பும், ஆரோக்கியமும் மேம்படும். மந்திரம் & மூச்சு: "ஓம் நமச்சிவாய" என்று சொல்லும்போது, நேரம் (seconds) கணக்கிட்டு, மூச்சை நீட்டிக்க வேண்டும். பயிற்சி: இதை டைமர்/கிளாக் வைத்து பழக வேண்டும்; யாரும் இப்படி சொல்ல மாட்டார்கள், ஆனால் பழகினால் பயன் கிடைக்கும் )
==========================================
# ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 9 செகண்ட்ஸ் அளவில் ஜெபிக்க வேண்டும்.
===========================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இவைத்தன் ஒன்பது, ஒன்பது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்.
==========================================
# கிரகங்களை வெல்லும் ரகசியங்கள்
===========================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இவைத்தன் ஒன்பது கண்ணிமைக்கும் நேரத்தில் பின் இவை வரும். இவைத்தன் பின் இப்படி அறிந்தும் செப்பினால் மட்டுமே கிரகங்களை வெல்லலாம்.
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=4h00m00s
==========================================
# ஒரு மந்திரத்தை 9 செகண்ட்ஸ் அளவிற்கு குறைந்து ஜெபிக்க நோய்கள் உண்டாகும்.
===========================================
தேரையர் சித்தர் :- இதற்கு மேலே பின் அறிந்தும், இவைத்தன் விட்டாலே உயிர் வாழ முடியும். பின் அறிந்தும், அதற்கு கீழே நோய்கள்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- (தேரையர் சித்தர் போதனையின் சாரம் என்னவென்றால், மூச்சை ஒன்பது விநாடி தம் கட்டி வைத்தால் கிரகங்களின் தாக்கத்தை வெல்லலாம், நோய்கள் குறையும், ஆரோக்கியம் மேம்படும். "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மூச்சுடன் இணைத்து, ஒன்பது விநாடி வரை உள்ளே வைத்து பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். ஒன்பது விநாடி பயிற்சி நோய்களை குறைக்கும்; 10–11 விநாடி வரை நீட்டித்தால் இன்னும் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும். குறுகிய மூச்சு மந்திரங்கள் (2–3 விநாடி) உடலுக்கு பிரச்சினை தரும். இதை சித்தர் கருணையால் வழங்கப்பட்ட ரகசியம் எனக் கருதி, தொடர்ந்து பயிற்சி செய்தால் நோய் வராமல் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல வாழ்வு கிடைக்கும்.)
தேரையர் சித்தர் :- இதைத்தான் மீண்டும் ஓம் நமசிவாய என்று சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( இப்போது தேரையர் சித்தர் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை அனைவரையும் சொல்ல சொன்னார்கள். அடியவர்கள் நன்கு மூச்சை உள் இழுத்து , அதன்பின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை மெகா மெகா மெதுவாக சத்தமாக சொன்னார்கள். அதாவது மந்திரங்கள் 9 செகண்ட்ஸ் மேலே சொல்ல வேண்டும். அப்போதுதான் கிரகங்களை வெல்லலாம். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் பயத்திக்காரன், நமசிவாய என்று சொல்லி, நமசிவாய என்று சொன்னேனே, ஒண்ணுமே, ஒன்றுமே ஆகவில்லையே என்று பயத்திக்காரன் அலைந்து திரிந்து, ஒன்றுமில்லாமல் சாகின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஒரு செகண்டில் நமசிவாய என்று ஜெபித்தால் பலன் இல்லை. ஒன்பது செகண்ட் மேல தான் சொல்லணும். அப்பதான் உங்களுக்கு மூச்சு பிடிச்சு சொல்ல முடியும். அந்த பயிற்சி நீங்க பண்ணாலே, அதுல பலன் இருக்கும். மிக விரைவாக மந்திரங்கள் சொன்னால் நோய் வந்துவிடும். ஆபரேஷன் ஆகும். எங்கயாவது வந்து உடம்பு சரியில்லாமல் போகும், மாத்திரை எடுத்துக்கணும். இப்படி சொன்னா மட்டுமே ஒன்பது செகண்ட் மேல வரணும், ஐயா. )
தேரையர் சித்தர் :- இவைத்தன் கற்று கற்று குருநாதன் அருளாலே உரைக்கின்றேனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( என் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் , மீனாட்சியம்மை ஆசியால், மதுரையில் , நான் ஆராய்ச்சி செய்தவற்றை உங்களுக்கு உரைக்கிறேன். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் கலியுகத்தில் பிழைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பின் நோய் வந்து பின் உடம்பை அறுக்க நேரிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் கத்துக்கோங்க. அப்படி இல்லைன்னா, ஐயா, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார் ஐயா )
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் திருத்தலங்களுக்கு ஓட, பின் கலியுகத்தில் மருத்துவமனை நாடுவான், திருத்தலம் போல.
தேரையர் சித்தர் :- இவைத்தன் இங்கிருந்து எங்கு செயல்பட, இத்தனை நாமங்கள், பின் நாராயணா, ஓம் நமோ நாராயணா.
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=4h04m14s
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஓம் நமோ நாராயணா மெதுவாக 9 செகண்ட்ஸ் மேல் மெதுவாக சொல்லச் சொல்லி , அங்கு அடியவர் ஓம் நமோ நாராயணா என்று அனைவருக்கும் செய்து கட்டினார்கள் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் எப்படி எப்பா இரண்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஓம் நமசிவாய , ஓம் நமோ நாராயணா இவ் இரண்டு மந்திரங்களும் ஒன்னுதான் - ஒன்பது செகண்ட்ஸ் மேல் கையாள்வதில் ) .
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஓம் நமோ பிரம்மாய நம.
( ஓம் நமோ பிரம்மாய நம என்ற மந்திரத்தை உச்சரித்து அனைவர்க்கும் சொல்ல சொன்னார்கள் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், அனைத்தும் எவை என்று அறிய, சற்று சற்று இதைத்தன் நிச்சயம். பின் இவ்வாறு அறிந்தாலே, அனைத்தும் ஒன்றே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க ஓம் நமோ பிரம்மாய நம என்று சொன்னாலும் ஒன்னுதான். ஓம் நமோ நாராயணா ஒன்னுதான். ஓம் நமசிவாயனால ஒன்னுதான். ஓம் நமசிவாய ஒன்னுதான். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஓம் சரவணபவா என்று
சுவடி ஓதும் மைந்தன் :- ( திருப்பி ஓம் சரவணபவா ன்னு சொல்லுங்க )
தேரையர் சித்தர் :- இவைத்தன் சபரனுக்கு இடு,
சுவடி ஓதும் மைந்தன் :- ( சபரணிக்கு இடு, ஐயா. சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே சரணம் ஐயப்பா. )
தேரையர் சித்தர் :- பின் கணபதிக்கு இடு.
( ஓம் கங் கனபதையே. )
தேரையர் சித்தர் :- இதை யாராவது சிந்தித்தார்களா என்ன? இல்லை, அறிந்தும் இவைத்தன் ஏதோ சொல்கின்றார்கள். நாமும் சொல்லிவிட்டு என்று இதில். உள்ளது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இது யாராவது உணர்ந்தீங்களா? இல்லையப்பா, யாரும் உணரல. ஏதோ சொல்றாங்க. ஓம் முருகா சரணவா, சொல்லிட்டு போயிட்டு இருக்கீங்களேப்பா. எப்படிப்பா நியாயம்? )
தேரையர் சித்தர் :- இவைத்தன் அதிவிரைவாக சொல்லுங்கள். இப்பொழுது,
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( அடியவர்கள் மிக அதிவிரைவாக மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தனர் - ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ. ஓம் கங்கனபதே நம. ஓம் பிரம்மாய நம. —அனைத்தும் 1 அல்லது 2 செகண்ட்ஸ் நேரமே விரைவாக சொன்னார்கள்)
தேரையர் சித்தர் :- பின் இவ்வாறு சொன்றால், பின் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப இது மாதிரி சொன்னீங்கன்னா நோ யூஸ்.)
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து இவர் சொல்வது. வந்து பொய்யனே, அவை இவை இதை என்று சொல்லி ஆனாலும் நடப்பதோ இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை இதை சொல்லலாம், ஆனால் ஒன்னும் நடக்காது.
===================================
# மந்திரங்களை 9 செகண்ட்ஸ் மேலே சொன்னால் நோய்கள் மறையும். அதிர்ஷ்ட வாய்ப்பு கூடி வரும்.
====================================
தேரையர் சித்தர் :- இழுத்திடல் வேண்டும். பின் இழுத்து செப்பினாலே நோய்கள் மறையும். அதிர்ஷ்ட வாய்ப்பு கூடி வரும்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பொக்கிஷமான மகத்தான வாக்கு கிடைத்த சந்தோஷத்தில் - பலத்த கை தட்டல்கள் )
=======================================
# இந்தனை நாள் மனிதர்கள் சொன்ன அனைத்து மந்திரங்களும் வீண்.
=======================================
தேரையர் சித்தர் :- இத்தனை மனிதர்கள் இன்றளவு சொன்னார்களே, அனைத்தும் வீணே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த உலகில் இத்தனை நாள் நீங்க சொன்னீங்க பாருங்க , ஐயா. ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாய. அப்புறம் என்ன சொன்னீங்க, ஐயா? ஓம் சரவணபவா. எல்லாம் சாமியை சரணம் ஐயப்பா. எல்லாம் என்னவாம்? வேஸ்ட். ரெண்டு செகண்ட்ல மந்திரம் சொன்னா உங்களுக்கு என்ன கொடுப்பாங்க? உங்களுக்கு நீங்க எவ்வளவு மூச்சு இழுத்து, அது ஒன்பது எட்டு ஒன்பது செகண்ட் மேல வரணும். அது வந்தா மட்டும்தான் பலன் )
தேரையர் சித்தர் :- கற்றுக்கொள்ளுங்கள், சொல்லுங்கள் இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது அனைவரும் அனைத்து மந்திரங்களையும் 9 செகண்ட்ஸ் மேலே இழுத்து சொல்லச் சொல்லி அனைவருக்கும் வகுப்பு நடந்தது அங்கு )
தேரையர் சித்தர் :- இதைத்தன் பின் என் குருநாதனை, அகத்தினை பாடு.
(அன்பு குருநாதரின் “ஓம் அகத்தீசாய நமஹ” மந்திரத்தை அனைவரும் மூச்சை இழுத்து மெதுவாக சொன்னார்கள்)
=================================
# மந்திரங்கள் விரைவாக சொல்பவர்களை ஏன் நவகிரகம் தாக்குகின்றது?
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் நவகிரகங்களை இப்படி அறிந்தும், பின் சொன்னால் தாக்காது. அறிந்தும் அப்படி இல்லை, இல்லை, இல்லை. எதை என்று புரிந்து கொள்ள தாக்குமடா, மூடர்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பது செகண்ட் மேல தான் நீங்க வந்து சொல்லணும் மந்திரத்தை. அப்படி சொல்லலைன்னா என்ன ஆகும்? நவகிரக தாக்கும்.
=================================
# மந்திரங்கள் 2 வினாடிகள் விரைவாக சொன்னால் - சந்திரனால் பாதிப்படைவீர்கள்
=================================
தேரையர் சித்தர் :- தாக்கினால் என்ன ஆகும்? இரண்டு ( கண் இமைக்கும் நேரங்களில் - 2 வினாடிகள் ) நீங்கள் சொன்னால், அறிந்தும் இவைத்தன் சந்திரனால் பாதிப்படைவீர்கள் நீங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ரெண்டு நிமிஷத்துல நீங்க வந்து சொன்னீங்கன்னா, ரெண்டு செகண்ட், ரெண்டு செகண்ட். ஓம் நமசிவாயன்னு சொன்னா, சந்திரனால் பாதிக்கப்படுவீர்கள். மனக்குழப்பம் வரும்.
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இவை எதை என்று அறிய நிமிடங்கள். யான் சொல்லவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (இங்கு செகண்ட், வினாடி பற்றி மட்டும் சொன்னேன். நிமிடங்கள் பற்றி யான் சொல்லவில்லை.)
தேரையர் சித்தர் :- நிமிடத்திற்கும் யான் எடுத்துரைப்பேன். பொறுத்திரு மகனே,
சுவடி ஓதும் மைந்தன் :- நிமிடத்திற்கும் நான் எடுத்துரைக்கிறேன். பொறுத்திரு மகனே,
=================================
# மந்திரங்கள் 2 வினாடி அளவில் விரைவாக சொன்னால் - பைத்தியம்
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் கண் இமை. கண் இரண்டு சொன்னால், பின் நீயே பைத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ரெண்டு செகண்ட்ல ஓம் நமசிவாய என்று சொல்லி முடித்துவிட்டால் - பைத்தியம் என்று சொல்கின்றார். பைத்தியம் என்றால், மனது தெளிவாக இருக்காது. சிந்திக்க முடியாது.)
=================================
# மந்திரங்கள் 1 வினாடி அளவில் விரைவாக சொன்னால் - சூரியனே பாதிக்கும்
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின், ஒரு பின், கண் இமைக்கும் அறிந்தும், இவைத்தன் சூரியனே பாதிக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒரு செகண்ட்ல ஐயா. ஓம் நமசிவாய, அவ்வளவுதான். ஓம் நமசிவாய. அப்ப யார் மூலம் பாதிக்கப்படுவார்கள்? சூரியன். சூரியனால் என்ன ஆகும்? தெளிவு கிடைக்காது, அறிவு இருக்காது, அப்பா, அம்மா ஆசீர்வாதங்கள் இருக்காது. )
=================================
# மந்திரங்கள் 3 வினாடி அளவில் விரைவாக சொன்னால் - குருவே பாதிக்கும்
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் மூன்று கண் இமைக்கும் எதை என்று புரிந்து கொள்ள, பின் குருவானவனை அறிந்தும்,
சுவடி ஓதும் மைந்தன் :- மூணு செகண்ட்ல நீங்க நமசிவாய ன்னு சொல்லிட்டு என்ன ஆகும்? குரு பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் குரு பாதிச்சா, குரு அருள் இல்லாமல் போகும். )
=================================
# மந்திரங்கள் 4 வினாடி அளவில் விரைவாக சொன்னால் - ராகுவே பாதிக்கும்
=================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் நான்கு, அதே மாதிரி நான்கு,
சுவடி ஓதும் மைந்தன் :- நான்கு செகண்ட்ல இந்த மந்திரத்தை சொன்னீங்க என்றால் , ராகு பாதிப்பு உண்டாகும். ராகு அவர் தாக்குவார்.அவரால் தாக்கப்பட்டிருக்காருன்னு அர்த்தம்)
தேரையர் சித்தர் :- இவைத்தன் ஐந்து, இப்படியே ஆறு அறிந்தும், ஏழு அறிந்தும், பின் எவை என்று கூற, பின் நவ வரையில் அறிந்தும், இழுத்துவிட நன்று
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க அஞ்சு செகண்ட்ல சொன்னால் புதன் மூலம் பிரச்சினை வரும். ஆறு செகண்ட்ல சொன்னால் சுக்கிரன் மூலம் பிரச்சினை வரும். சுக்கிரன் மூலம் காதல் வழியில போக வேண்டியதுதான். அப்புறம் வந்து ஏழு, எல்லாம் கேது. எட்டு சனீஸ்வரனால பாதிக்கும். எனவே மந்திரங்கள் இதை சொல்றப்ப எல்லாம் ஒன்பது செகண்ட்ஸ் மேல போயிடனும். நீங்க ஒன்பது செகண்ட்ஸ் மேல போனா மட்டும்தான் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். நவகிரகத்தை வெல்லலாம். இறைவனை உணர )
தேரையர் சித்தர் :- அப்பா சொல்லுங்கள், அனைத்தும் யான் சொன்னேனே.
( அனைத்து மந்திரங்களையும் அனைவரையும் எடுத்து கூற அங்கு உத்தரவு இட்டார்கள். அதன்படியே அனைவரும் அங்கு பயிற்சி செய்தனர்.)
==================================
# நுரையீரல், இதயம் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஒரு அருமருந்து
==================================
தேரையர் சித்தர் :- இப்படி சொன்னாலே அறிந்தும் நுரை அறிந்தும் இவைத்தன் பிரச்சனைகள் ஏற்படாது. இதயத்திலும் பிரச்சனை ஏற்படாது.
சுவடி ஓதும் மைந்தன் :- (இப்படி சொன்னோம்னா நுரையீரல்ல பிரச்சனை ஏற்படாது. இதயத்திலயும் பிரச்சனை ஏற்படாது.)
தேரையர் சித்தர் :- அதை விட்டுவிட்டு பின் செப்பினால் நிச்சயம் ஏற்படும். பின்பு யான் சொன்னேனே, இவ்வளவு தடவை, லட்சக்கணக்கில் என்று என்ன பிரயோஜனம் அப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப லட்சக்கணக்குல நான் நாமம் சொன்னேன். கோடிக்கணக்குல நாமம் சொன்னேன் என்று சொன்னால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. எந்த ஒரு மந்திரத்தையும் ஒன்பது செகண்ட் மேல நீங்க சொல்லனும். ஒரு ஒரு மந்திரத்தையும் சரியாக ஒன்பது செகண்ட் மேல சொன்னால் , நுரையீரல் பிரச்சனை வராது. ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வராது.அப்படி இல்லைன்னா என்ன ஆகும்? அறுவை சிகிச்சை வந்தே தீரும் என்று சொல்கின்றார். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் இப்படி செப்ப கைகள் இரண்டு மேல் தூக்கி வணங்கிட. இவைத்தன் உறுதியாகும். உங்களுக்கு அறுவை சிகிச்சை கிடையாது.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பொக்கிஷமான மகத்தான வாக்கு கிடைத்த சந்தோஷத்தில் - பலத்த கை தட்டல்கள் )
தேரையர் சித்தர் :- இதைத்தன் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை. இது உங்களுக்கே, அதாவது உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வதற்கே இறைவன் இதை கற்றுக் கொடுத்துள்ளானே தவிர.
தேரையர் சித்தர் :- இன்னும் மூட நம்பிக்கையில் மனிதன் ஒளிந்துள்ளான். இதனால் இவ் மூட நம்பிக்கை அப்படியே சென்றால், இறைவன் இல்லை என்று தான் மனிதன் நிச்சயம் கலியுகத்தில் சொல்லுவானடா.
தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும், இதனால் பின் பரப்புவேன். இறைவனை யாங்களே.
தேரையர் சித்தர் :- இறைவனுக்கு நன்றி செலுத்துவது, நீங்கள் உண்மை புரிந்து கொள்வதே.
================================
# ஒரு காலை மட்டும் கடல் தண்ணீர் மேல் வைத்து, இரு கைகளையும் மேல் நோக்கி தூக்கி , எந்த ஒரு மந்திரத்தையும் 9 வினாடிகளுக்கு மேல் செபிக்க , வயிற்றுப் பகுதியில் பிரச்சனை வளராது.
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் வயிற்றுப் பகுதியில் பிரச்சனைகள். கடல் தண்ணீர் சென்று அறிந்தும், ஒரு காலை மேல் வைத்து, இவை தன் பின் இரு கைகளையும் மேல் நோக்கி, இவ் மந்திரத்தை செப்ப. பின் வயிற்றுப் பகுதியில் பிரச்சனை வளராது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த உரையின் சாரம் என்னவென்றால், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிலர் கடல் நீரில் நின்று, ஒற்றைக் காலில் தவம் செய்து, கைகளை மேலே தூக்கி "ஓம் நமசிவாய" போன்ற மந்திரத்தை ஒன்பது விநாடிகள் அல்லது அதற்கு மேல் சொல்ல வேண்டும். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் தீரும். ஆனால், காலப்போக்கில் பலருக்கு மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், அதற்கான மாற்று வழியாக இந்த மந்திர சாதனை பரிந்துரைக்கப் படுவதாகவும் விளக்கப்படுகிறது. )
================================
# தேரையர் சித்தர் உரைத்தபடி மந்திரங்கள் 9 வினாடிகளுக்கு மேலே செப்ப, இரத்தம் சீராகி, நீரைப் போல பன்மடங்கு ஓடும்.
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் செப்ப செப்ப, பின் உள் இருக்கும் ஆற்றல்கள், இரத்தம். இரத்தம் எதை என்று புரிய? அவை தன் பின் ஓடி, பின் அதிக சீராகி ஓடுமடா. பின் நீரைப் போல பன்மடங்கு.
அடியவர் : - ( இந்த மந்திரங்களை நாம சொல்ல சொல்ல, இரத்தம் இலகுவாகும்.. ஏன் என்றால் , வெப்பம். ஓம் நமசிவாய மந்திரம், அந்த தம் கட்டி சொல்றப்போ, இதயம் சுருங்கி விரியுது. பாருங்க, அந்த இதயம் சுருங்கி விரியுற நேரம் கம்மியாகுறப்போ, அழுத்தம் வந்து ரொம்ப உள்ள அதிகமா கிடைக்குது. இரத்தத்துக்கு உள்ள தேங்கி நிக்கிறப்போ, இரத்தத்தை வெப்பம் அதிகமாயிடுது. )
================================
# மந்திரங்கள் மிக விரைவாக செப்ப இரத்தம் நின்று, நோயாக மாறும்.
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் உடனடியாக சொன்னாலே, பின் இரத்தம், பின் நின்று, இதைத்தன் நோயாக மாறும்.
அடியவர் : - (இப்ப நீங்க திடீர்னு ஓம் நமசிவாய சொன்னா, என்ன ஆகும்? ரத்தம் என்ன ஆகும்? ரத்தம் மெதுவா. அதாவது, இந்த பிளட் பிரஷர் சொல்றாங்களா? அதுதான் சொல்றாங்க பிளட் பிரஷர். பிளட் பிரஷரை சரி பண்ணிக்கலாம். அவ்வளவுதான். அப்ப மெதுவாக சொல்லணும்.)
================================
# உணவு உட்கொள்ளும் சித்த முறை பாடம் ஆரம்பம்
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் மென்று உட்கொள்ள அறிந்தும், இவை தன் கண்ணிமைக்கும் நேரத்திலே மென்று காட்டடா.
( மந்திரத்தை எப்படி மெதுவாக சொல்லுவது என்ற பாடம் முடிந்தபின் உணவை எப்படி மென்று உண்ண வேண்டும் என்று உரைக்க ஆரம்பித்தார்கள். முதலில் 1 செகண்ட் நேரத்தில், 9 செகண்ட் நேரத்தில் மென்று உண்ணு என்று செய்ய சொன்னார்கள். அடியவர் அதன்படியே செய்து காட்டினார். )
================================
# 9 வினாடிகளுக்கு உள் , மிக விரைவாக உணவு உட்கொண்டால் , நோய்கள்
================================
தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் கண்ணிமைக்கும் அறிந்தும், பின் அவர் பின் கீழே நோய்கள் வந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப நீங்க உடனே எடுத்து சாப்பிட்டு , உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் வந்துவிடும். )
தேரையர் சித்தர் :- இவைத்தன் கூட்ட பின் நன்று. இன்னும் இன்னும்
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (ஒன்பது அடுத்து ஒன்பது கூட்டணும். 18. 18 செகண்ட்ல நீங்க மென்னு சாப்பிடணும். ஒரு கவலம் உணவு எடுத்தோம்னா, 18 செகண்டுக்கு மேல மெல்லனும். அப்படி மெல்றப்போ, உமிழ்நீர் அதோட கலக்கும். உமிழ்நீர் தான் செரிமானத்தை அதிகப்படுத்தும். இதுதான் சூட்சுமம் தான் சொல்றாங்க.)
தேரையர் சித்தர் :- இவைத்தன் இன்னும் ஒரு பின் நிச்சயம் நவ.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இன்னும் ஒரு ஒன்பதை கூட்டிக்குவோம். 27 செகண்ட் ஆச்சுன்னா, இன்னும் உனக்கு நல்லது. நோய் வராது. )
தேரையர் சித்தர் :- இவைத்தன் இன்னும் மென்று பின் நவ.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் அதை கூட்டிக்கோ 36.
தேரையர் சித்தர் :- இவைத்தன் எதை இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒன்பது முறைக்கு மேல சாப்பிடணும். ஆனா இது குறைந்தபட்சம், அதிகபட்சம் எவ்வளவு? 36 செகண்ட்)
================================
# உணவு உண்ணும் 10 நிமிடங்களுக்கு முன் வெற்றிலை பாக்கு எடுக்க நன்று.
================================
தேரையர் சித்தர் :- இவை அறிந்தும், பின் உண்ணுவதற்கு. அதாவது, இவைத்தன் மனிதன் உண்ணுவதற்கு, இவைத்தன் பிறப்பெடுத்து அறிந்தும், இவைத்தன் பின். அதாவது, ஒரு பத்து நிமிடம் அறிந்தும் முன்பே, பின் இவை எடுக்க நன்று. அறிந்தும், இவைத்தன் பின் வெற்றிலை பாக்கு.
சுவடி ஓதும் மைந்தன்,அடியவர் :- (இந்த உரையின் சாரம் என்னவென்றால், உணவு சாப்பிடுவதற்கு முன் வெற்றிலை பாக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பாட்டுக்கு பத்து நிமிடம் முன்னதாகவே வெற்றிலை பாக்கு எடுத்தால், செரிமான சக்தி அதிகரிக்கும். இதனால் உடலில் கால்சியம் அதிகரித்து, நோய்கள் வளராமல் தடுக்கும்.)
தேரையர் சித்தர் :- இவைதன் கடைபிடிக்க யார்? எனக்கே, சொன்னேனே நோயை
சுவடி ஓதும் மைந்தன் :- ( இதை யார் ஒருத்தர் கடைபிடிக்கிறாரோ, அவங்களுக்கு நோய் இல்லை. அவங்களுக்கு நோய் இல்லை. )
தேரையர் சித்தர் :- இவைதன் சரியாகவே, பின் உடம்பும் சரியாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை யார் ஒருத்தர் கரெக்டா பயன்படுத்துறாங்களோ, அவங்க என்ன ஆகுமா? உடம்பும் நல்லா இருக்கும், நல்லா ஆகும்.
================================
# மெதுவாக மென்று உண்ண , ரகசியமாக ஈர்க்கும். சில கதிர் இயக்கங்களை
================================
தேரையர் சித்தர் :- மென்று தின்று, மென்று தின்று, இதைத்தன் ரகசியமாக ஈர்க்குமடா சில கதிர் இயக்கங்களை.
சுவடி ஓதும் மைந்தன் :- (இந்த உரையின் சாரம் என்னவென்றால், உணவை மென்று மென்று சாப்பிடும் போது உடலில் சில நல்ல கதிர் இயக்கங்கள் (radiations) உருவாகி ஈர்க்கப்படுகின்றன. அந்த இயக்கங்கள் அசைவுடன் தொடர்புடையவை; அசைவுகள் அதிகரிக்கும் போது நல்ல கதிர்வீச்சும் அதிகரிக்கும் என விளக்கப்படுகிறது.)
தேரையர் சித்தர் :- இதைத்தன் உள்ளே நுழைந்தால், அனைத்தும் சரியாகுமடா. பின் அதாவது, இறைவன் உடம்பை கொடுத்திருக்கின்றான். அதை சரிப்படுத்துவதற்கு திறமையும் கொடுத்திருக்கின்றான். ஆனால் மக்கள் பின் வளர, வளர, பின் அறிந்தும், அவையெல்லாம் மறைத்தனர்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (இந்த உரையின் சாரம் என்னவென்றால், உணவை மென்று சாப்பிடும் போது உமிழ்நீர் அதிகமாக சுரந்து, அது இறையாற்றலை (divine energy) ஈர்க்கும் சக்தி கொண்டது. நீண்ட நேரம் வாயில் வைத்து மென்றால், அந்த உமிழ்நீர் அதிகப்படியான இறையாற்றலை உடலுக்குள் கொண்டு வந்து, ஜீரண சக்தியை பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்; மனிதனுக்கு இறைவன் கொடுத்த உடல் சக்தியை சரியாக பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்தால், அதை முழுமையாகப் பயன் பெற முடியும்).)
தேரையர் சித்தர் :- இவைத்தன் இப்படி இருக்க, கோபங்கள் வளராதடா.
சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்க மெதுவா சாப்பிட்டால் கோபங்கள் வராது, கோபங்கள் வளராது. )
தேரையர் சித்தர் :- பின் அதி விரைவிலே , பின் கோபத்தாலே சொற்கள் விட்டுவிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (நீங்க எவ்வளவு, எவ்வளவு சீக்கிரம் மென்னு உண்கிறார்களோ , கோவம் வந்து அதிக வார்த்தை விட்டுவிடுவார்கள்).
தேரையர் சித்தர் :- இவைத்தன் சாபமாக போய்விடுமடா.
தேரையர் சித்தர் :- இதைத்தன் போய்விடுமடா. பின் என்ன லாபம்?
சுவடி ஓதும் மைந்தன் :- (என்ன சொல்றாங்க. பெரியவங்க, யோசித்து பேசணும். ஐயா, நல்லா யாரெல்லாம் மெதுமெதுவா, வாய்மூடி மெதுவா சாப்பிடுறாங்களோ, அவங்க என்ன பண்ணுவாங்களாம்? வார்த்தையை விடமாட்டாங்க. ஐயா, யாரெல்லாம் வேகமா சாப்பிடுறாங்களோ, அவங்க யோசிக்க மாட்டாங்க. அதி விரைவிலே , பின் கோபத்தாலே சொற்கள் விட்டுவிடுவாங்க. அதனால் என்ன லாபம் என்று கேட்கின்றார் அய்யா)
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete